Monday, May 15, 2017

தாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!


நீங்கள் அதிகம் கேள்விப் படாத மர்ம நிகழ்வுகள் தாஜ்மஹாலில் உள்ளன. அவற்றை கண்டறிய பலர் முயற்சித்தும் பலனின்றி அந்த முயற்சியை கைவிட்டுவிட்டனர். இந்திய அரசு நினைத்திருந்தால் தாஜ்மஹாலின் கான்ட்ரோவெர்சி என்னவென்பதை தீர்த்திருக்க முடியும், இருந்தும் அதைப் பற்றி அரசு எந்த தகவலும் தெரிவிக்க மறுப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும். அரசு தாஜ்மஹாலின் மர்ம அறைகளை திறக்காததற்கான காரணங்கள் இதுவாகக் கூட இருக்கலாம். 

அல்லாவின் 99 பெயர்கள்

தாஜ்மஹாலின் சுவர்களில் ஆங்காங்கே பலவித வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டது போன்று இருப்பவை எல்லாம் எழுத்துக்கள் ஆகும். அவை, அல்லாவின் 99 பெயர்கள் என சொல்லப்படுகிறது. முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது இஸ்லாத்தில் கடவுளுக்கு பெயர் இல்லை என்பதுதான்.

கருப்பு தாஜ்மஹால்

இப்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலைப் போல கருப்பு தாஜ்மஹாலும் இருந்தது. வெள்ளை கற்களைக் கொண்டு கட்டப்பட்ட தாஜ்மஹாலின் பிரதிபலிப்பாக கருப்பு நிற கற்களைக் கொண்டு மாபெரும் மஹாலை கட்ட நினைத்தார் ஷா ஜகான்.

மகனே சிறை வைத்த கொடுமை

அந்த கருப்பு தாஜ்மஹாலை கட்ட திட்டமிடுவதற்குள் தன் சொந்த மகனிடமே சிறைக் கைதியானார் ஷாஜகான். அவ்ரங்கசீப் தன் தந்தையான ஷா ஜகானை சிறைவைத்தார். அதுவும் தாஜ்மஹாலின் அருகிலேயே என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.

கட்டடத்தின் மதிப்பு தெரிந்தால் வாயைப் பிளந்துவிடுவீர்கள்

300 வருடங்களுக்கு முன்னரே இந்த கட்டத்தின் மதிப்பு 32 பில்லியன் இந்திய ரூபாயாம். தற்போதைய மதிப்பு 65 பில்லியன் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்பப்பா.. அந்த காலத்திலேயே எவ்வளவு செலவில் கட்டப்பட்டுள்ளது இந்த தாஜ்மஹால்.
எந்தவொரு கட்டிடம் கட்டினாலும் அதில் சில பிழைகள் இருக்கவாய்ப்புண்டு. அது பெரியதாக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் தாஜ்மஹாலில் ஒரு சிறு பிழை கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கட்டிடம் மிக நேர்த்தியாக இருக்கவேண்டுமென்று உறுதியாக இருந்துள்ளார் ஷாஜகான்.
தாஜ்மஹாலில் வரையப்பட்டுள்ள வண்ண வண்ண டிசைன்கள் அனைத்தும் கீழிருந்து மேலாக ஒரே மாதிரியான அளவில் இருப்பதுபோல் இருக்கும் ஆனால் அது அப்படி இருப்பதில்லை. கீழிருந்து பார்க்கும் போது அத்தனை உயரத்திலும் ஒரே மாதிரியான வடிவ உருவத்தில் இருப்பதற்காக சிறப்பு கணிதவியலாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமச்சீரான கட்டடம்

உலகின் மிக மிக அரிதான சமச்சீர் கட்டடங்களுள் ஒன்று தாஜ்மஹால். எங்கிருந்து நோக்கினும் ஒரே மாதிரியான நூறு சதவிகிதம் சமச்சீரான கட்டடம் இதுவாகும். இந்தியாவில் இந்த அளவுக்கு நேர்த்தியான கட்டடம் எதுவும் இல்லை.
இந்த கட்டடத்தை கட்ட 22 வருடங்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. 1631ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்டடம், 1953ல் கட்டி முடிக்கப்பட்டது.

விரல்களை வெட்டியது உண்மையா

ஷாஜகான் இது போன்று இன்னொரு அழகிய கட்டிடம் அமைந்துவிடக் கூடாது என்றெண்ணி இதன் கட்டட வடிவமைப்பாளர்களின் கை விரல்கள் அனைத்தையும் வெட்டிவிட்டதாக ஒரு கதை நிலவுகிறது. சிலர் விரல்கள் மட்டுமல்ல கை முட்டியையும் வெட்டிவிட்டார் என்கின்றனர்.

அப்படியெல்லாம் ஷாஜகான் செய்யவில்லை. தாஜ்மஹால் கட்டி முடிந்த பின்பு அதன் முதன்மை பொறியாளரான உஸ்தாத் அகமத் லாஹரி வேறு சில கட்டடங்களை கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும் மற்ற வேலையாட்கள் தாஜ்மஹாலுக்கு பின்பும் வேலை செய்து கையொப்பமிட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

கட்டிட வடிவமைப்பாளர்கள் வைத்த டுவிஸ்ட் என்ன தெரியுமா?

கட்டிடம் முடிந்ததும் பணியாளர்களை வெட்டிவிட ஷாஜகான் எடுத்துள்ள முடிவு கட்டிட வடிவமைப்பாளர்களின் காதுக்கு எட்டியது. அப்போதுதான் அவர்கள் திட்டமிட்டு ஒரு செயலை செய்தனர். அதுதான் ட்விஸ்ட்டாக அமைந்ததது ஷாஜகானுக்கு.

கட்டிடத்தின் வெளியே யமுனை நதி ஓடுவது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் கட்டித்தின் உள்ளும் ஒரு நதி ஓடுகிறது. அது அவ்வளவு பெரிய நதி இல்லை சிறு ஓடையை விட சிறியதுதான்.

அச்சு அசலாக மற்றொரு தாஜ்மஹால்

இந்த கட்டிடத்தைப் போலவே அச்சாக ஒரு தாஜ்மஹால் கட்ட நினைத்த ஷாஜகானுக்கு பேரிடியாக அமைந்தது இதுதான். அந்த சிறிய ஓடை தொடங்கும் இடம் எதுவென்றே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது கட்டிட வடிவமைப்பாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பொறியாளரின் சாமர்த்தியமான செயலாக இது பார்க்கப்படுகிறது.

தாஜ்மஹாலினுள் கேட்கும் அழுகுரல்

தாஜ்மஹாலின் உள்ளே பெண் ஒருவர் அழும் குரல் அடிக்கடி கேட்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும், அது ஷாஜகானின் மனைவிகளில் ஒருவரின் குரல் என்கிறார்கள் சிலர்.

சிவன் கோயில்

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்கான சாட்சிகள் பலவற்றை எடுத்து முன்வைக்கின்றனர் இதை சிவன் கோயில் என்பவர்கள்.

மறைக்கப்பட்ட வரலாறு

மறைக்கப்பட்ட மர்ம அறைகளில் சிவ பெருமாளின் சிலைகள் இருக்கிறது. அதில் சிவ தலங்களுக்கான அத்தனை அம்சங்களும் உள்ளது என்கின்றனர். திட்டமிட்டே இந்த உண்மை மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தாஜ்மஹால் ஷாஜகான் கட்டியதா கைப்பற்றியதா
இந்த தாஜ்மஹால் உண்மையில் தேஜே மஹாலயாவாக இருந்தால் அது முகலாயர்களின் படையெடுப்புக்கு முன்னதாகவே இருந்திருக்கும். அதை வெள்ளைக் கற்களால் அழகு படுத்தியவர்தான் ஷாஜகான். தேஜோ மஹாலயாவை கைப்பற்றி தாஜ் மஹாலை அமைத்தார் ஷாஜகான் என்றும் கருத்துக்கள் உள்ளன.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்....!!!?

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து கொள்ளவுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து எனக்கு நடந்தது, ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என்னுடைய ரசிகர்களும், வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களும் முழு ஆதரவை கொடுத்து அந்த கூட்டணியை ஜெயிக்க வைத்தார்கள்.

அப்போதிலிருந்தே அரசியலில் என் பெயர் அடிபட ஆரம்பித்துவிட்டது, என்னுடைய ரசிகர்களில் சில பேர் அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை பயன்படுத்த தொடங்கிவிட்டனர், பணமும் சம்பாதித்து விட்டனர்.

பூனை ருசி கண்ட மாதிரி அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதையே செய்யத் தொடங்கினர், இதன் காரணமாகவே நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என கூறவேண்டிய கட்டாய சூழல் உருவானது.

ஆண்டவன் இயக்கும் கருவி தான் நான், என்ன பொறுப்பு கொடுத்தாலும் நியாயமாக, சத்தியமாக செயல்படுவேன்.

சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தாலும் பணத்துக்காக சேரும் கூட்டத்தை என்னுடன் சேர்த்து கொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

விரல்களில் உள்ள ரகசியங்கள் தெரியுமா?

நம் கையில் மொத்தம் உள்ள விரல்களின் பெயர்கள் என்னவென்றால் பெரு விரல் , ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல். இந்த ஒவ்வொரு விரலும் நம் ஆளுமையைப் பற்றி ஏதோ ஒன்றை சொல்லும் என்பது ஒரு அறிவியல் ஓடையாக உள்ளது என கைரேகை நிபுணர்கள் நம்புகின்றனர்.

கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை பெருவிரல் வகிக்கிறது. அதேப்போல் நம் மூளையிலும் கூட அது மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது. கட்டை விரல் எனப்படும் பெருவிரல் இல்லாமல் நம் ஆளுமை முழுமையடையாது. பெருவிரல் என்பது ஒரு நபரில் இருக்கும் மன உறுதி மற்றும் சுய கட்டுப்பாட்டை குறிக்கும்.

பெரு விரல்

நம் கைகளில் உள்ள இரண்டு பெருவிரல்களும் நம் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிப்பதோடு, குறிப்பிட்ட ஒரு பங்கையும் வகிக்கிறது. பெருவிரல் என்பது உள்ளங்கைக்கு மிக அருகில் உள்ளது.

தர்க்கரீதியாக சிந்திக்கும் தனிப்பட்ட திறனை அது குறிக்கிறது. அது நம் மன உறுதியையும் குறிக்கும். அதன் அளவில் உள்ள வேறுபாடுகள், எப்படி ஒருவர் சுற்றுச்சூழல் மற்றும் முடிவெடுக்கும் திறனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை தீர்மானிக்கும்.

ஆள்காட்டி விரல்

ஆள்காட்டி விரலை வியாழன் விரல் என்றும் அழைப்பர். ஒருவரின் குறிக்கோள் மற்றும் வழிகாட்டலை இது குறிக்கும். நம் வாழ்க்கை எத்திசையை நோக்கி செல்லும் என்பதையும், நோக்க உணர்வையும் இது குறிக்கும்.

ஆள்காட்டி விரல் கட்டையாக இருந்தால் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடிக்க அவர்களால் முடியாமல் போகும். அத்தகைய தனிப்பட்ட நபர்களுக்கு சமூக அமைப்புகளோடு ஒன்றிட கடினமாக இருக்கும். மாறாக, ஒருவரின் ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால், அவர் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பார். அதே போல் சமுதாயத்திலும் முக்கியமானவராக இருப்பார்.

நடு விரல்


நடு விரலை சனி விரல் என்றும் அழைப்பர். மற்ற நான்கு விரல்களை விட இது தான் புத்திசாலியான விரலாகும். நம் திறன்களை இவ்விரல் தான் கேள்வி கேட்கும். அதேப்போல் நம் முடிவுகளை பற்றி மீண்டும் ஆலோசிக்க வைக்கும்.

உள்ளங்கையின் அகலத்தை விட நம் நடு விரல் கட்டையாக இருந்தால், விரைவாக புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். உணர்வற்றவர்களாக உள்ள இவர்கள் தவறான விஷயங்களை தான் பொதுவாக செய்து விடுவார்கள். மாறாக, நடு விரல் நீளமாக இருக்கும் நபர்கள் தன்னிச்சையாக செயல்பட மாட்டார்கள். அதே போல் மிகவும் கடுமையானவர்களாக இருப்பார்கள்.

மோதிர விரல்

மோதிர விரலை சூரிய விரல் என்றும் கூறுவார். கூட்டத்திற்கு மத்தியில் தனியாக தெரிய உதவும் கலகலப்பான குணத்தை இந்த விரல் குறிக்கும். தைரியம், கவர்ச்சி மற்றும் பேரார்வத்தை இது குறிக்கும். இவ்விரல் கட்டையாக இருந்தால், அந்த நபர் தைரியமற்றவராக, பேரார்வமற்றவராக, எந்த ஒரு சுற்றுச்சூழலிலும் பாதுகாப்பின்மையோடு உணர்வார்கள்.

இவர்கள் இயற்கையாகவே சாதுவானவர்களாக இருப்பார்கள். மோதிர விரல் நீளமாக இருந்தால், அந்த நபர் கவனத்தை கோருபவராக இருப்பார். அதேப்போல் மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் செயல்படுவார்கள்.

சுண்டு விரல்

சுண்டு விரல் அல்லது புதன் விரலை, பிங்கி என்றும் அழைப்பார்கள். சுண்டு விரல் மிகவும் சிறியதாக இருந்தால், அந்த நபர் புத்தி கெட்டவராக அல்லது அப்பாவியாக இருப்பார். அதேப்போல் தங்களின் சுற்றுச்சூழலின் மீதோ அல்லது அதனை புரிந்து கொள்ளவோ விருப்பம் காட்ட மாட்டார்கள்.

சுண்டு விரல் நீளமாக இருந்தால், அந்த நபர் சிறந்த தொடர்பாற்றலை கொண்டிருப்பார். ஆனால் அதிகமாக மிகைப்படுத்தி, பொய் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.

Tuesday, May 9, 2017

Sachin Tendulkar's Luxurious House! சச்சின் டெண்டுல்கரின் ஆடம்பரமான வீடு!சச்சின் என்றாலே சாதனை என்று தான் கிரிக்கெட்டில் குறிப்பிட வேண்டும். அந்த அளவுக்கு மாபெரும் வீரராக திகழ்ந்தவர்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின், சொர்க்கத்தைப் போல மும்பையில் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்.
சீ ஷெல் (Seashell) என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சிப்பியை போல வெளித்தோற்றம் அளிக்கும் இந்த வீட்டை மும்பையில் கட்டியிருக்கிறார் சச்சின். புகைப்படத்தில் காணும் போதே கண்களை பறிக்கிறது அந்த வீடு.

மிகவும் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது சிப்பி அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீடு, காண்போர் உள்ளத்தை கவர்ந்திழுக்கும். இனி, அந்த வீட்டின் அமைப்பை பற்றி பார்க்கலாம்.
பண்டார (Bandara) சச்சினின் இந்த அழகிய வீடு மும்பையில் உள்ள பண்டார பகுதியில் இருக்கின்றது.
சிப்பி போன்று கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு 35 கோடி ரூபாயாம்!!இந்த வீட்டின் உள்ளே இருக்கும் போது, கடலுக்கு அடியே இருப்பது போல கட்டமைக்கப்பட்டுள்ளது. உள் வீட்டு அலங்காரங்களும் அதற்கு ஏற்ப தான் செய்யப்பட்டிருக்கிறது.


மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த ஓர் கட்டிட கலைஞரின் கைவண்ணத்தில், இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் “சிப்பி” வீட்டின் (Shell House) லிவிங் ரூம் இது தான்.
வீட்டின் உள் பகுதியில் சிறிய அழகான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.மிகவும் நுட்பமாகவும், அழகிய கலை வேலைபாடுகளுடன் கட்டமைக்கபட்டிருக்கும் குளியலறை.


தோட்டத்திற்கு நடுவே அமர்வதை போல வரவேற்ப்பு அறையில் சோபா அமைக்கபட்டிருக்கிறது.


மிகவும் அழகான நுட்பமான வேலைபாடுகள் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது.

ஹாலிற்கு பின்புறம் அமைக்கபட்டிருக்கும் டைனிங் டேபிள்.


உண்மையிலேயே ஏதோ கனவு உலகில் இருப்பது போல இரவில் காட்சியளிக்கிறது சச்சினின் சிப்பி வீடு

Friday, May 5, 2017

வங்கி துறையை கடித்துள்ள ஆட்டோமேஷன்..!

அன்று முதல் இன்று வரை மிகவும் பாதுகாப்பான வேலை, எல்லோராலும் மதிக்கப்படும் வேலைகளில் ஒன்றாக இருக்கிறது வங்கித் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள். இன்று இன்ஜினியரிங் பட்டதாரிகள் கூட வங்கித் துறை வேலை மற்றும் அதில் இருக்கும் பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகளவில் ஈர்க்கப்பட்ட இத்துறையில் சேர ஆர்வமாய் இருக்கிறார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.

வங்கித் துறை 

வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற சேவை வழங்க வேண்டும் என்ற வங்கியின் கண்ணோட்டம் வங்கிகளில் உயரிய பதவியாகப் பார்க்கப்படும் டெல்லர் பணி இனி தேவையற்றதாக மாறி வருகிறது. இதுமட்டுமா என்றால் இன்னும் ஏராளமாக

இந்திய சந்தை 

கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் ஐடித் துறைக்கு அடுத்தாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ஒரு துறை என்றால் அது வங்கித்துறை தான். ஆனால் வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, இத்துறையில் பல பணியிடங்கள் தேவையற்றதாக மாறியுள்ளது. இதனால் அளவிற்கு அதிகமாகவும், தேவையற்ற ஊழியர்களை வங்கிகள் தற்போது வெளியேற்றி வருகிறது.

சில முக்கியப் பணிகள் 

வங்கிகளில் பாஸ்புக் அப்டேட் செய்வது, KYC படிவத்தை வாங்குவது, சம்பளம் போடுவது என அனைத்து பணிகளும் வங்கித்துறையில் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை முன்னணி பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளித்தல், முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்தல் ஆகியவற்றையும் இணையத்தின் வாயிலாகவே செய்கிறது. இதன் மூலம் வங்கிகளில் இப்பணிகளைச் செய்து வரும் ஊழியர்கள் நிர்வாகத்திற்குத் தற்போது தேவையில்லை.

75 சதவீத பணிகள் 

இன்றைய நிலையில் தனியார் வங்கிகளில் சுமார் 75 சதவீத வங்கி சார்ந்த பணிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இணையத்தின் வாயிலாகச் செய்து முடிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் இதன் அளவில் மாறுபாடு இருக்கும். ஆயினும் முக்கியமான பணிகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் தற்போது மக்கள் செய்து வருகின்றனர்.

ஆக்சிஸ் வங்கி 

இதுகுறித்து ஆக்சிஸ் வங்கி உயர் அதிகாரியான ராஜிவ் அனந்த கூறுகையில், தற்போது வங்கிகள் வாரியாக அல்லாமல் வங்கி கிளைகள் வாரியாக ஆட்டோமேஷன் பணிகள் அதிகரித்துள்ளது. தற்போது ஆக்சிஸ் வங்கி கிளைகளில் சுமார் 1500 பண வைப்பு செய்யும் இயந்திரம் உள்ள நிலையில் இங்கு டெல்லர் பணியிடம் தேவையற்ற ஒன்றாக உள்ளது.

இயந்திர வெளிநாட்டு வங்கிகள் இயந்திரங்கள் வாயிலான வர்த்தக முறையை மிகவும் வேகமாக அமல்படுத்தி வரும் நிலையில் இந்தியாலில் இதன் வேகம் மிகவமு் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் அடுத்தச் சில வருடங்களில் இது கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வளர்ந்து நிற்கும்.

எச்டிஎப்சி வங்கி 

சமீபத்தில் நாட்டின் முக்கிய வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி ஆட்டோமேஷனை அதிகளவில் கையில் எடுத்தக் காரணமாகச் சுமார் சதவீத வங்கி ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதேபணியை ஐசிஐசிஐ வங்கி 1 வருடத்திற்கு முன்பாகவே படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து.

இதுவே மாற்றம் தற்போதைய நிலையில் தனியார் வங்கிகளில் பணியில் சேரும் 50 சதவீதம் பேர் மேலாளர் பதவியில் அமர்த்தப்படுகின்றன. ஆனால் இவர்கள் வங்கிகளில் கேஷியர் பணி முதல் அனைத்தையும் செய்து வருகின்றனர். அடுத்தச் சில வருடங்களில் மேலாளர் பதவியில் இருக்கும் ஊழியர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் பணி மட்டுமே இவர்களுக்கு இருக்கும் இதர பணிகள் அனைத்தும் ஆட்டோமேஷன் செய்யப்படும்.

புதிய வங்கிகள் 

மேலும் இந்தியாவில் தற்போது பேமெண்ட் வங்கிகள், வேலெட் சேவைகள் அனைத்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வங்கிகளை மட்டுமே நம்பியிருக்கும் அவசியம் மிகப்பெரிய அளவில் குறையும். ஆகவே வங்கிகளும் இதற்கான பணிகளைச் செய்ய வேண்டும், இதன் முதல் படியே தற்போது கையில் எடுத்திருக்கும் ஆட்டோமேஷன்.

ஆட்டோமேஷன் 

வங்கித்துறையில் தற்போது ஆட்டோமேஷன் என்ற சொல்லின் கீழ் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றும் இதில் அடங்குகிறது. ஆதலால் ஊழியர்கள் தேவை வங்கி நிர்வாகத்திற்குக் குறைந்துகொண்டே தான் இருக்கும்.

ஐடி துறை 

இந்தியாவில் தற்போது ஐடி துறை சந்திக்கும் பிரச்சனையை அடுத்தச் சில வருடத்தில் வங்கித்துறை சந்திக்கும்.

என்னதான் தீர்வு..? 

ஐடி துறையில் தான் ஆட்குறைப்பு, பணிநீக்கம், என்று இருந்தால் தற்போது வங்கித்துறையிலும் பிரச்சனை வெடித்துள்ளது. இதற்கு உண்மையான தீர்வு, எந்தத் துறையாக இருந்தாலும் நீங்கள், உங்களுடைய திறனை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால் நிறுவனத்திற்குப் பிரச்சனை, வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற நிலைக்கு நீங்கள் உயர்ந்துவிட்டால் பணிநீக்கம் குறித்து எந்தக் கவலையும் பட வேண்டாம்.

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள்

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

விளைநிலங்களை வீட்டுமனைகள் ஆக்குவதாகத் தொடரப்பட்ட வழக்கில், புதிய வரைவு விதிகளுடன் கூடிய அரசாணைகளை தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வீட்டு மனைகளாக்க அனுமதி இல்லாத நிலங்கள், விவசாய நிலங்கள், ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அரசு நிலம், கோயில் இடம், வக்பு வாரிய நிலம், உரிமம் இல்லாத காலி நிலம் ஆகியவற்றை வீட்டு மனைகளாகப் பதிவு செய்ய அனுமதி இல்லை.

தொடர்ந்து வேளாண்மை செய்யத் தகுதியான நிலத்தை, வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது.

வீட்டு மனையாக்க விண்ணப்பிக்கப்படும் இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண்துறை இணை இயக்குநரிடம் அறிக்கை பெற வேண்டும்.

புதிய கட்டணம்

மாநகராட்சிகளில் பத்திரப் பதிவு மேற்கொள்ள ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 கட்டணம். நகராட்சிகளுக்கு ரூ.60-ம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு ரூ.30-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 4, 2017

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு

தேவையான பொருட்கள்

அரிசி – 1 /2 கிலோ
சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ
கொத்தமல்லி – 1 /2 கட்டு
புதினா – 1 கட்டு
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 250 கிராம்
தக்காளி – 250 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்
தயிர் – 1 /2 ஆழாக்கு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
ஏலக்காய் – 2
கடற்பாசி – 1 /2 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


செய்முறை
ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள கரம்

மசாலா பொருட்களை(பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ,ஏலக்காய்,கடற்பாசி) சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேண்டுமெனில் இந்த மசாலாப் பொருட்களை பொடி செய்தும் உபயோகிக்கலாம்.
பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக அதன் நிறம் மாறும் வரை கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.

சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, பச்சைமிளகாயைச் சேர்க்கவும். திக்கான மசாலா கலவையுடன் சிக்கன் இருக்கும் போது, கழுவி வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.

ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.முக்கால் பதம் வெந்த நிலையில், மூடியத் திறந்து தயிரைச் சேர்த்து கிளறவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு முக்கால் பதம் வெந்த நிலையில் உள்ள பிரியாணியை பாத்திரத்துடன் அதன் மீது வைத்து நன்கு மூடி விடவும். அந்த மூடியின் மேல் தண்ணீருடன் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
பத்து நிமிடம் கழித்து மூடியத் திறந்து புதினா, கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.

பரிமாறும் போது பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி பரிமாறவும்.


குறிப்பு

சிக்கனைச் சிறிது சிறிதாக கோடு போட்டோ, அல்லது கீறியோ விட்டு செய்தால் மசாலா நன்கு உட்புறம் சார்ந்து சுவையாக இருக்கும்.
தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்.