Saturday, December 31, 2016

புற்றுநோய்.. நாதியற்று செத்துப் போன..காந்திமதி..!!

நாதியற்று செத்துப் போன..காந்திமதி..!!

மனோரமா ஆட்சி திரையுலகில் அசத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நடிகை காந்திமதியும் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். இருவருமே நாடக மேடையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்.

மனோரமா ஆட்சி, சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி என்று பரபரப்பாக இருந்தபோது, முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் போன்ற ஹீரோக்கள் படத்தில் திகு திகுவென நடித்து கொண்டிருந்தார் காந்திமதி.

1980 காலகட்டத்தில் சுருளிராஜன் எனும் நகைச்சுவை பிரளயம் ஒன்று வந்து திரை ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தது. கதாநாயகன் ரேஞ்சுக்கு உயர்ந்தார் சுருளிராஜன். அவருக்கு ஜோடியாக காந்திமதி வெளுத்து கட்டினார்.

மாந்தோப்புக் கிளியே படம் சுருளி, காந்திமதி ஜோடிக்காகவே வெள்ளிவிழா ஓடிய படம். தொடர்ந்து சுருளி&காந்திமதி ஜோடி பட்டையை கிளப்பியது. சுருளிராஜன் காந்திமதி இல்லாத படங்களே இல்லை.

காந்திமதி பணம், புகழ் கொட்டியது. இங்குதான் அவரது சோக வாழ்க்கையும் துவங்கியது. திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவினர்களை நம்பினார்.

அவர்கள் கடைசிவரை துணை இருப்பார்கள் என்று நம்பிவிட்டார் காந்திமதி. இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி, வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை காலமானார்.

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் மயிலின் அம்மாவாக தோன்றி.. எப்படி பொசுக்கென்று செத்துப் போவாரோ, அப்படித்தான் இவரது வாழ்க்கையும் ஆனது.

வயது ஆக… நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார். உதவிக்கு உறவினர்கள் சிலர் வந்து போய் இருந்தாலும்… உரிமையுடன் பார்த்து கொள்ள ஒரு பிள்ளை வேண்டுமல்லவா?

இங்கு தான் சிக்கல். நிறைய நடிகைகள் தனக்கென்று ஒரு குடும்பம், வாழ்க்கை என்றும் அமைத்துக் கொள்ளாமல், உறவினர் வீட்டு குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்து அவர்கள் வளர்ந்து.. சொந்த தாய் தகப்பனோடு தனி வாழ்க்கையோடு போய் விடுகிறார்கள்.

நம்பிய நடிகைகள் இறுதி காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் தர ஆள் இல்லாமல், பணவசதியும் இல்லாமல் அனாதையாக செத்து போய் விடுகிறார்கள்.

காந்திமதி அம்மாவுக்கும் அதுதான் நிலைமை… வாழ்க்கை பூராவும் சிரிக்க வைத்த காந்திமதி அம்மா.. அழுது அழுது செத்துப் போனது கொடுமையிலும் கொடுமை…!

Wednesday, December 28, 2016

உங்கள் 'பிறந்த தேதி'க்கு இதுதான் சரியான 'தொழில்'..!

உங்கள் 'பிறந்த தேதி'க்கு இதுதான் சரியான 'தொழில்'..!

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம்.


நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம். இந்த எண் கணிதத்தை பின்பற்றி உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம்.

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் 1 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு உரிய கோள் சூரியன். இவர்கள் பிறவியிலேயே ஆளப் பிறந்தவர்கள். ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள் அதே நேரத்தில் சரியான முடிவு எடுப்பதிலும் தேர்ந்த நபர்கள். திருபாய் அம்பானி, ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் ஆகியோர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிசினஸ் தான் சரியான தொழில். இவர்கள் எந்த பிசினஸை செய்தாலும் வெற்றி பெறுவார்கள்

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் சந்திரன். படைப்புகளிலும், புதியதாக உருவாக்குவதிலும் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த ராஜதந்திரிகளாகவும் இருப்பார்கள். கலை, நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் தொழில் செய்தால் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் பெரிய ஆளாக வருவார்கள். ஷாருக்கான், அமிதாப் பச்ச்சன், லியார்னடா டி கேப்ரியோ ஆகியோர் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் வியாழன். இயற்கையிலேயே வலிமை உள்ளவர்களாக இருக்கும் இவர்கள் நல்ல மனதுடன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வங்கி, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் இவர்கள் இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மேலும் இவர்களுக்குச் சில்லறை வணிகம் செய்யும் தொழிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இவ்வகை தொழிலை இவர்கள் தேர்வு செய்வது நலம்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் வழக்கத்திற்குச் சற்று வேறுபட்டவர்களாகவும், தனிப்பட்ட தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள். ஆனால் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுத்து ஆபத்தையோ பிரச்சனையையோ விலை கொடுத்து வாங்கும் தன்மை உடையவர்கள் ஊக வணிகம் என்று கூறப்படும் பங்கு வர்த்தகம் மற்றும் சூதாட்டம் ஆகியவை இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்குச் சரியான தொழிலாக இருக்கும். மேலும் கலை, நடிப்பு ஆகிய துறைகளிலும் இவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உண்டு.

5,14,23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த முடிவைச் சரியான நேரத்தில் எடுக்கும் தன்மை கொண்டவர்கள். தகவல் தொடர்பு திறன் அதிகம் உள்ள இவர்களுக்குப் பங்கு வர்த்தம் மிகச் சரியான தொழிலாக இருக்கும். மற்றவர்களைத் தனது வழிக்குக் கொண்டு வருவதில் வல்லவர்கள். ஒரே விதமான வேலை இவர்களுக்குச் சலிப்பை தரும். ரிஸ்க் எடுத்து தினந்தோறும் பரபரப்பாக இருப்பது இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. டெக்னாலஜி, விளையாட்டு, மார்க்கெட்டிங், சேல்ஸ் ஆகிய துறைகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் வீனஸ் கிரகத்தைச் சார்ந்த இந்த எண் உடையவர்கள் இயற்கையாகவே பெர்சனாலிட்டியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஓட்டல், ரெஸ்டாரெண்ட், ஆடம்பரமான அல்லது பொழுதுபோக்கு துறைகளில் நாட்டம் அதிகம் இருக்கும். புகழ் இவர்களுக்குத் தானாகவே வந்து குவியும்.

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் ஆவதற்கு வாய்ப்பு அதிகம். புதியதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்களுடைய கண்டுபிடிப்புக்கு உலகமே தலை வணங்கும் அளவுக்கு இவர்களுக்குப் புகழ், பணம் பெருகும். ஆராய்ச்சி, விஞ்ஞானம்தான் இவர்களுக்குரிய சரியான தொழில்.

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் சனி கிரகத்திற்குரிய இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்படுவார்கள் அதாவது சுமார் 35 வயது வரை இவர்களுக்குச் சொல்லி கொள்ளும் வகையில் முன்னேற்றம் இருக்காது. எளிமையாகவும் அதே நேரத்தில் கண்டிப்பு உடையவர்களாகவும் இருப்பார்கள். கடின உழைப்பு இருக்கும் இவர்களுக்குச் சற்று தாமதமாகத்தான் வெற்றி கிடைக்கும். அரசியல், இரும்பு, உலோகங்கள், ரியல் எஸ்டேட், ஃபைனாஸ் ஆகிய தொழில்கள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

9,18,27
ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் செவ்வாய் கிரகத்திற்கு உரிய இந்த நபர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவார்கள். உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத் துறை, கெமிக்கல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளும் இந்த எண்களுக்கு உரியவர்களின் துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 

டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டோனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். ஆம், இது உன்மை தான், இதைப் பார்க்கும் போது உலக தலைவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். சம்பளம் மட்டும் இல்லாமல் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர். இங்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் 2015 ஆம் ஆண்டின் தரவின் படு வழங்கப்படிகிறது. இந்திய பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? பராக் ஒபாமா 2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தன்னுடைய சம்பளமாக 4,00,000 டாலர்களைப் பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 2.72 கோடியாகும்.
ஜஸ்டின் ட்ரூடியோ கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ 2015 ஆம் ஆண்டு வரை 2,60,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.77 கோடி ரூபாய் ஆகும்.


அங்கேலா மேர்க்கெல் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 2,34,400 டாலர்கள் சம்பளமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பில் 1.59 கோடி ரூபாய் ஆகும். 


ஜேக்கப் ஜுமா தென் ஆப்ரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா 2015 ஆம் ஆண்டு வரை 2,23,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார் அதாவது இந்திய மதிப்பில் 1.51 கோடி ரூபாயாகும். ஷின்சோ அபே ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே 2,03,000 டாலர்களை சம்பளமாக 2015 ஆண்டு வரை பெற்றுவந்துள்ளார் அதாவது இந்தியமதிப்பில் 1.38 கோடி ரூபாயாகும். 


ரிசிப் தயிப் எர்டோகன் துருக்கியின் ஜனாதிபதி ரிசிப் தயிப் எர்டோகன் 2015 ஆம் ஆண்டு வரை 1,97,000 கோடி சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய பதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும். 
பிரான்சுவா ஹாலண்ட் பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் 2015 ஆம் ஆண்டு வரை 1,94,000 டாலர் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும்.


தெரேசா மே பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மேவின் சம்பளம் 1,78,250 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.2 கோடி ரூபாய். விளாடிமிர் புட்டின் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 1,36,000 டாலர் சம்பளமாக பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 92 லட்சம் ரூபாய் ஆகும். 

மடியோ ரென்சியும் இத்தாலியின் பிரதம மந்திரி மடியோ ரென்சியும் 1,24,600 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 லட்சம் சம்பளமாக பெறுகிறார். 

நரேந்திர மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 30,300 டாலர் சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில் 20.63 லட்சம் ஆகும். 


ஜி ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 22,000 டாலர் சம்பளம் பெற்று வருகிறார் அதாவது இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாயாகும்.