Tuesday, July 5, 2016

மூன்று பதிலை வைத்து, காதலா? காமமா என அறியலாம்!

இன்றைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் உடல் உரசிக்கொள்ள மட்டுமே பழகுகின்றனர். காமம் தான் அவர்களது வேட்கை என சந்து பொந்துகளில் இருந்து, மேடைகள் வரை பல பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம். முக்கியமாக திரைப்படங்களில். இதை முழுமையாக மறுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது. ஏனெனில், 50:50 என சரிபாதி அளவிற்கு நமது சமூகத்தில் நாம் இதை கண்கூட பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். உண்மை என்னவெனில், தாங்கள் உண்மையாகவே காதலிக்கிறோமா? இல்லையா? என்று தெரியாமலேயே பதின் பருவத்தில் பலரும் ஒன்றாக சுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், பள்ளி பருவத்தில் இருந்து உண்மையாக காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். உண்மையில், இருவர் மத்தியில் இருப்பது காதலா? காமமா? என்பதை இந்த மூன்று கேள்விக்கான பதில்களை வைத்து அறிந்துக் கொள்ளலாம்..

கேள்வி #1

தொடர்பு! காதல்! உங்கள் வாழ்க்கையை பற்றி முழுவதுமாக, வெளிப்படையாக பேசுவீர்கள் பகிர்ந்துக் கொள்வீர்கள். அவர்களுடன் உங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது. எப்படிப்பட்ட சண்டை வந்தாலும், அதை மீண்டும் பேசி கடைசியில் ஓர் தீர்வுக்கு வந்துவிடுவீர்கள். சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் எந்தவிதத்திலும், உங்களது உறவை பாதிக்காது. உங்கள் இருவருக்குள்ளும் ஓர் நேர்மை இருக்கும்.

காமம்! மேம்போக்கான கருத்துக்கள் மட்டுமே பகிர்ந்துக் கொள்வீர்கள். பெருமை, தம்பட்டம் அடிக்கும் விஷயங்கள் மட்டுமே அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படும். தங்களை உயர்வாக மட்டுமே எடுத்துக் கூறுவார்கள். ஆழ்மனத்தில் இருக்கும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விருப்பம் இருக்காது. சண்டை, சச்சரவுகள் வந்தால், உடனே பிரிந்துவிடலாம் என்ற தான் முதலில் பிறக்கும்.

கேள்வி #2
அன்பு! காதல்! பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் கூட அது உறவில் இருக்கும் அன்பு குறைய காரணியாக இருக்காது. ஒருவரின் மகிழ்ச்சிக்காக மற்றொருவர் விட்டுக்கொடுத்து போவது சர்வசாதாரணமாக நிகழும். ஒருவர் பற்றிய இரகசியத்தை எக்காரணம் கொண்டும் மற்றவரிடம் கூற மாட்டார்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் குரியது.

காமம்! மன ரீதியான நெருக்கம் பெரிதாக தான் இருக்கும். கண்களை பார்த்து பேசுவது குறைவாக தான் இருக்கும். உண்மையை மறைக்க, பொய்களை கடத்தி செல்ல மேலும் மேலும், பொய்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். மன ரீதியான நெருக்கத்தை காட்டிலும், உடல் ரீதியான நெருக்கம் தான் அதிகமாக இருக்கும். உங்கள் அந்தரங்கள் விஷயங்களை நண்பர்களுடன் கேலியாக பேசி பகிர்ந்துக் கொள்வார்கள்.

கேள்வி #3
மதிப்பு! காதல்! உங்கள் துணையின் குறைகள் தெரிந்தும் கூட அவரை நேசிப்பீர்கள். அவர் மேலும், வெற்றியடைய, அடுத்த கட்டத்திற்கு செல்ல ஊக்கமளிப்பார்கள். ஒருவர் மற்றொருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு அளிப்பார்கள். கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

காமம்! ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். ஒருவர் மற்றவரது சுதந்திரத்தை தட்டி பறிக்க, தன்னிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள நினைப்பார்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதே கடினமாக இருக்கும். மன்னிக்க மனம் வராது.

திருமணமாக போகும் பெண்களிடம் அச்ச உணர்வுகள்!

திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிரைக் கண்டால் சிலர் பாசக்கயிற் வீசுவது போல எகிறிக் குதித்து ஓடுவார்கள். இதற்கு காரணம் கல்யாணம் மட்டும் பண்ணிடாத மச்சி, உன் சந்தோஷமே போயிடும் என்பார்கள். ஆனால், இப்படி கூறும் அனைவருமே திருமணம் ஆனவர்கள் தான். நம்மிடம் எப்போதுமே ஒரு தீய குணம் இருக்கிறது. நம் வாழ்க்கையில் 90% சந்தோசமாக இருந்தாலும், மீதமுள்ள 10% துன்பத்தை எண்ணியே மகிழ்ச்சியை இழந்துவிடுவோம். திருமண வாழ்விலும் அப்படி தான். பொண்டாட்டி பற்றி குற்றங்குறை கூறியே அவர்கள் பற்றிய நல்ல விஷயங்களை மரித்துவிடுவோம். இப்படி ஒருப்பக்கம் இருக்கையில், திருமணம் நெருங்க, நெருங்க பெண்கள் மத்தியில் ஏற்படும் அச்சங்கள் ஒருபுறம் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்...

கணவன் வீட்டு உறவுகள்!
மாமனார். மாமியார், நாத்தனார் என கணவன் வீட்டு உறவுகள் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் எல்லா பெண்களுக்குமே திருமணத்திற்கு முன்பு ஏற்படுகிறது.

கணவன், மனைவி உறவு!
இதுநாள் வரை தான், தன் வாழ்க்கை என்று இருந்த ஓர் சுழற்சியில் இன்று நாம், நம் வாழ்க்கை என்ற மாற்றம் நிகழ போகிறது. தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

சுதந்திரம் இருக்குமா?
தோழிகள், நண்பர்கள், வேலை, உடன் பணிபுரிவோர் என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற பயம் பெண்களுக்குள் வலுவாக இருக்கிறது. ஏனெனில், கணவனுக்கு பணிமாற்றம் ஆனால், தானும் பனி மாற்றம் வாங்கி செல்ல வேண்டும், அல்லது வேலையே விட்டு செல்ல வேண்டும் என்ற ஒருதலைப்பட்சமான நிபந்தனை நமது சமூகத்தில் நிகழந்து வருகிறது.

நினைத்தது எல்லாம் கூற முடியுமா?

நாம் நினைத்த காரியங்களை செய்ய, கூற முடியுமா? குறைந்தபட்சம் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் கூறிய பிறகு தான் செய்ய முடியும். ஒருவேளை அவர்கள் மறுப்பு கூறினால்? என்ற பல கேள்விகள் பெண்களின் மனதில் ஓடுகிறது.

குடும்ப பொறுப்புகள்!
இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றியும் பெண்கள் மத்தியில் ஓர் அச்சம் நிலவுகிறது.

நேரம் மற்றும் வேலை மேலாண்மை!
எல்லா வேலைகளையும் உடனக்குடன் செய்ய வேண்டும். காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, தான் வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என நேரம் மற்றும் வேலை மேலாண்மை தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கிறது.

எதிர்காலம்!
வீடு, நிலம், வாகனம் வாகுவது, சேமிப்பு, என எதிர்கால திட்டங்கள் அவர்களின் மனதில் குழப்பமாக எழும். ஆரம்பத்தில் எல்லா பெண்கள் மத்தியிலும் இதுபோன்ற சில தடுமாற்றங்கள் எழுவது இயல்பு தான்.

குழந்தைகள்!
தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொல்வதுண்டு. இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என பொதுவாக அவர்கள் கருதுவது தான்.

இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?
திருமணம், நெருங்க, நெருங்க, "இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?" என்ற கேள்வியும் சில பெண்கள் மத்தியில் அச்சம் காரணமாக எழுகிறது. இவை எல்லாம் திருமணம் ஆகும் வரை தான்.