Thursday, May 12, 2016

மலாலாஇங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கடந்த 30-ம் தேதி பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்தது.இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.இது தவிர, ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கும் சிறப்பு மிக்க ‘சகாரோவ் மனித உரிமை பரிசு’க்கு தேர்வு செய்யப்பட்ட இறுதிபட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.இதற்கிடையில் நோபல் பரிசுக்கான தேர்வாளர்களின் பெயர்கள் வரும் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு மலாலாவுக்கே கிடைக்கலாம் என 80 சதவீதம் மக்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது.

இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 5 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.

உடல்நலம் தேறிய மலாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.மேலும் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார். அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள ‘வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்’ என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.அன்னா பொலிட்கோவ்ஸ்கியாவை போல் தீரமாக செயல்பட்டதற்காக மலாலாவுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக தேர்வு கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.வரும் திங்கட்கிழமை நடைபெறும் விழாவில் இந்த விருதை மலாலா பெற்றுக் கொள்கிறார்.

விஜயகாந்த் ரொம்ப நல்லவரு

விஜயகாந்த் மீது குறைகள் என்று கூறப்படும் 3 விஷயங்கள் : -

1. சரியாக பேசுவதில்லை – செந்தமிழ்”லயே பேசி பேசி ஆட்சிய பிடிச்சு ரெண்டு கட்சிகளும் என்ன பண்ணிட்டாங்க நமக்கு ????

நாட்டை எப்படி வச்சுருக்காங்க ?????விஜயகாந்த் 1 1/2 வருடங்களுக்கு முன்னால வரைக்கும் நல்லா பேசிக்கிட்டு தானே இருந்தார். You Tube”ல போய் பாருங்க. சட்டசபைல எதிர் கட்சியா பேசினப்போ கூட நல்லா தான் பேசுவாரு… இப்போ உடல்நிலை காரணமா கொஞ்சம் முன்ன போல பேசுரதில்ல. நமக்கெல்லாம் உடல் நிலை எப்பவும் இப்படியே இருக்கும் இல்ல..???அவருக்கும் சரியாகும்.எப்படி பேசுராங்க”ங்கறத விட, என்ன செய்வாங்க, என்ன செஞ்சாங்க என்ன செய்யப் போறாங்க”ங்கறது முக்கியம்.

2. நாட்டை ஆள நிர்வாகத்திறமை வேணும் -

ஆமா…கலைஞரும், ஜெயலலிதாவும் லண்டன்”ல பொலிட்டிகல் சயின்ஸ் & மேனேஜ்மென்ட் பத்தியெல்லாம் படிச்சுட்டு அதுக்கப்புரம் பல விசயங்களை நிர்வாகம் பண்ணிட்டு அனுபவத்தோடதான் அரசியலுக்குள்ள வந்திருக்காங்க…!!! அடப் போங்கப்பா.. அண்ணா இறந்ததால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். MGR இறந்ததால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இரண்டு பேருமே அந்த கட்சியை உருவாக்கியவர்கள் இல்லை. எந்த நிர்வாகத்திறமையை கண்டு அவ்ர்களை நாம் ஆதரித்தோம். ??????

ஆனால் விஜயகாந்த், தான் சார்ந்த திரைத்துறையில் நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதற்கு முன்பு பலர் தலைவராக இருந்த போதும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கடனை அவர் தலைவராக நிர்வகித்த காலத்தில். அந்த கடனை முழுவதுமாக அடைத்தார். நிர்வாகம் செய்யத்தெரியாத ஒரு மனிதர் ஒரு அமைப்பின் கடனை தீர்க்க முடியுமா ???

கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவைப்போல் விஜயகாந்த் கட்சியில் நுழைந்தவர் இல்லை. தன் சொந்த முயற்சியில் கட்சியை உருவாக்கி, 2005″ல் கட்சி ஆரம்பித்து 2006″ல் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 11% சதவீத வாக்குகளை பெற்று ஒரு சட்டமன்ற தொகுதியிலும் ஜெயித்தவர். 5 ஆண்டுகளில் அடுத்த 2011 தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவராகவும் வளர்ச்சி கண்டவர்.

தற்போது 2016 தேர்தலுக்காக பணத்திற்காக எந்த பக்கமும் போகாமல் தி.மு.க , அ.தி.மு.க அல்லாத 6 முக்கிய கட்சிகள் கொண்ட ஒரு பலமான கூட்டணியை உருவாக்கி தி.மு.க”வுக்கும் அ.தி.மு.க”வுக்கும் பெரிய நெருக்கடியை கொடுத்திருக்கிறார்.

இவரை எப்படி நிர்வாகத் திறமை இல்லாதர் என்று சொல்ல முடியும் ????

3. கோபப்படுகிறார் -

உள்ளுக்குள்ள வஞ்சத்த வச்சு வெளிய சிரிச்சுகிட்டு ஓட்டுக்காக நடிக்கத் தெரியாத மனுஷன். அதே விஜயகாந்த் சில இடங்கள்ள கண்ணீர் விட்டு அழுதிருக்காரே…!!! மேடை நாகரீகம்”ங்கற பேர்ல அவருக்கு அதையும் மறைக்கத் தெரியல….!!! பாவம் இந்த ஜனங்களுக்கு அது தான் பிடிக்கும்னு அவருக்கு தெரியல போல…!!! கோபமோ, அழுகையோ வெளிப்படையா காட்டிடுறார்.நேருக்கு நேரா கோபப்படுறவன நம்பலாம்..!!! சிரிச்சு சிரிச்சு வஞ்சத்தயெல்லாம் உள்ள வச்சுட்டுருக்குறவனத்தான் நம்ப முடியாது…!!!

இதை தவிர தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையிலும் நடிகர் சங்கத்திலோ ஏதாவது ஊழல் குற்றச்சாட்டுகளோ அல்லது லஞ்ச குற்றச்சாட்டுகளோ இருக்கிறதா அவர் மேல்…..????இல்லை…இவன் குடும்பத்தை அழித்தான், அவன் குடியை கெடுத்தான் என்ற குற்றச்சாடுகள் இருக்கிறதா….????

மாறாக நடிகனாய் இருந்த போதிருந்தே பல பேருக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்திருக்கிறார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். கட்சியின் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யும்பொது கூட, “நான் இவ்ளோ தான் இதுக்கு பணம் கொடுத்திருக்கேன். மீதியெல்லாம் கட்சி உறுப்பினர்கள் கொடுத்த பணம்” என்று வெளிப்படையாக சொல்கிறார்.

ஆனால் இங்கு அரசாங்க உதவிகள் வெள்ள அவசரத்திற்கு செய்யப்படும்போது கூட அவருடைய ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கிறார்கள். தானாக கொடுப்பவர்களிடமும் கட்டாயப்படுத்தி ஒட்டச் சொல்கிறார்கள்.

  • வெள்ளத்துல, களத்துலேயே வேட்டிய மடிச்சு கட்டிட்டு வெறும் கால்ல இறங்கி மக்கள சந்திச்ச விஜயகாந்த் அதை பெருசா விளம்பரப்படுத்திக்கல. ஊடகங்களும் அதை காமிக்கவே இல்ல.
  • அதுக்கு அப்புறமும் கூட அத நான் அதைப் பண்ணினேன்”னு எங்கேயும் அவர் சொல்லிக்காட்டி தனக்கோ தன் கட்சிக்கோ விளம்பரம் தேடலை.
  •  வெள்ளத்துலே அவர் கொடுத்த நிவாரணப் பைகள்”ல கூட அவர் கட்சி பெயரோ, அவர் பெயரோ, படமோ எதுவுமே இல்ல.
  • தன்னோட மாநாடு நடக்குற அன்னிக்கு தவிர வேற ஒரு நாள் கூட தன்னோட கேப்டன் டிவி”ய அவர் கட்சி விளம்பரத்துக்காவும் தனக்காவும் பெருசா பயன்படுத்திக்கிறது இல்ல.

ஆனா….!!! நாம அவரைத் தான் எப்போவும் கிண்டலும் கேலியும் பண்றோம்….!!! தொடர்ந்து செய்வோம்….!!!உண்மையாய் உதவி செய்ய வருபவர்களை பைத்தியக்காரர்களாய் சித்தரிப்பதே நாம் காலம் காலமாக செய்து வரும் விஷயம்…!!!காமராஜரையே தோற்கடித்தவர்கள் அல்லவா நாம் !!!

வழக்கம்போல் அ.தி.மு.க அல்லது தி.மு.க வுக்கே ஓட்டளிப்போம்.பி.எஸ் வீரப்பா”வின் திரைப்பட வசனம் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” நம்மை யாரும் அழிக்கத்தேவை இல்லை. நாமே போதும். நமக்கு நாமே….!!

ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்

கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்…

இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களா?

ஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.

உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது?
ஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது.எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங் கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.

நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை. கோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்றுவிட்டார்.

குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையா?
நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல. குழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ்,”குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்…) ஒரு நாள்… மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்கைகளில் குழந்தைகள் படுத்திருந்தார்கள். அவர்கள் படுக்கை அருகே மெல்லிய கயிறு இருக்கும். ஏதாவது தேவை என்றால் அதை இழுத்தாலே போதும். அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களை வாழவிட்டிருக்க வேண்டும். (குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு கோயபல்ஸ் தம்பதிகள் 1945, மே 1ல் தற்கொலை செய்து கொண்டனர்.)

கோயபல்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் அவரை வெறுக்கிறேன். யாருமே அவரை விரும்ப மாட்டார்கள். அவரை சுற்றி உறவினர் உட்பட சிலர் இருந்து கொண்டே இருப்பார் கள். பதவிக்காகத்தான் அவர் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்களும் அவரிடம் நிறையப் பேர் இருந்தார்கள். எங்களை விட அந்த பெண்களுக்கு அதிக சலுகைகள் இருந்தன.

காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்த வுடனே, எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களே?
ஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.

கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதே?
பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார். அவ்வளவுதான். அவரைப் பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.

நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்த பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?
ஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன் னார்கள். என்னை பெரிதும் அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்த கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள். ஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார்.

பதுங்கு குழியில் கடைசி நிமிடங்களைப் பற்றி சொல்ல முடியுமா?
ஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமே?
அன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார். ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்த சத்தத்தை (தன் னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா… போக வேண்டுமா என்று குழப்பம். எதும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரியும். அதன் பின்னர், பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை. அது தோட்டப்பகுதிக்கு எடுத்து செல்லபட்டது.

அடுத்து என்ன நடந்தது?
உலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.

பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களா?
நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.

ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்?

ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள். நுழைவாயிலில் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள். நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம். ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். நான் அடுத்த பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.

போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் பேசினார்களே?
ஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார் கள். எனக்கு விருந்தளித்தார் கள். தொடர்ந்து அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள். இருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.

கடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை?
1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்த போது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா உயிரோடு இருக் கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.

ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான “டவுன்பால்’ எனும் படத்தை பார்த்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாக இருந்தது. அவர்களுக்கு கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள். ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.

நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர் களா? அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா?
இதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா தவறா என்று கூற முடியாது. ஆனால் பொதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.