Saturday, December 31, 2016

புற்றுநோய்.. நாதியற்று செத்துப் போன..காந்திமதி..!!

நாதியற்று செத்துப் போன..காந்திமதி..!!

மனோரமா ஆட்சி திரையுலகில் அசத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நடிகை காந்திமதியும் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். இருவருமே நாடக மேடையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்.

மனோரமா ஆட்சி, சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி என்று பரபரப்பாக இருந்தபோது, முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் போன்ற ஹீரோக்கள் படத்தில் திகு திகுவென நடித்து கொண்டிருந்தார் காந்திமதி.

1980 காலகட்டத்தில் சுருளிராஜன் எனும் நகைச்சுவை பிரளயம் ஒன்று வந்து திரை ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தது. கதாநாயகன் ரேஞ்சுக்கு உயர்ந்தார் சுருளிராஜன். அவருக்கு ஜோடியாக காந்திமதி வெளுத்து கட்டினார்.

மாந்தோப்புக் கிளியே படம் சுருளி, காந்திமதி ஜோடிக்காகவே வெள்ளிவிழா ஓடிய படம். தொடர்ந்து சுருளி&காந்திமதி ஜோடி பட்டையை கிளப்பியது. சுருளிராஜன் காந்திமதி இல்லாத படங்களே இல்லை.

காந்திமதி பணம், புகழ் கொட்டியது. இங்குதான் அவரது சோக வாழ்க்கையும் துவங்கியது. திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவினர்களை நம்பினார்.

அவர்கள் கடைசிவரை துணை இருப்பார்கள் என்று நம்பிவிட்டார் காந்திமதி. இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி, வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை காலமானார்.

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் மயிலின் அம்மாவாக தோன்றி.. எப்படி பொசுக்கென்று செத்துப் போவாரோ, அப்படித்தான் இவரது வாழ்க்கையும் ஆனது.

வயது ஆக… நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார். உதவிக்கு உறவினர்கள் சிலர் வந்து போய் இருந்தாலும்… உரிமையுடன் பார்த்து கொள்ள ஒரு பிள்ளை வேண்டுமல்லவா?

இங்கு தான் சிக்கல். நிறைய நடிகைகள் தனக்கென்று ஒரு குடும்பம், வாழ்க்கை என்றும் அமைத்துக் கொள்ளாமல், உறவினர் வீட்டு குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்து அவர்கள் வளர்ந்து.. சொந்த தாய் தகப்பனோடு தனி வாழ்க்கையோடு போய் விடுகிறார்கள்.

நம்பிய நடிகைகள் இறுதி காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் தர ஆள் இல்லாமல், பணவசதியும் இல்லாமல் அனாதையாக செத்து போய் விடுகிறார்கள்.

காந்திமதி அம்மாவுக்கும் அதுதான் நிலைமை… வாழ்க்கை பூராவும் சிரிக்க வைத்த காந்திமதி அம்மா.. அழுது அழுது செத்துப் போனது கொடுமையிலும் கொடுமை…!

Wednesday, December 28, 2016

உங்கள் 'பிறந்த தேதி'க்கு இதுதான் சரியான 'தொழில்'..!

உங்கள் 'பிறந்த தேதி'க்கு இதுதான் சரியான 'தொழில்'..!

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம்.


நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம். இந்த எண் கணிதத்தை பின்பற்றி உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம்.

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் 1 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு உரிய கோள் சூரியன். இவர்கள் பிறவியிலேயே ஆளப் பிறந்தவர்கள். ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள் அதே நேரத்தில் சரியான முடிவு எடுப்பதிலும் தேர்ந்த நபர்கள். திருபாய் அம்பானி, ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் ஆகியோர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிசினஸ் தான் சரியான தொழில். இவர்கள் எந்த பிசினஸை செய்தாலும் வெற்றி பெறுவார்கள்

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் சந்திரன். படைப்புகளிலும், புதியதாக உருவாக்குவதிலும் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த ராஜதந்திரிகளாகவும் இருப்பார்கள். கலை, நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் தொழில் செய்தால் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் பெரிய ஆளாக வருவார்கள். ஷாருக்கான், அமிதாப் பச்ச்சன், லியார்னடா டி கேப்ரியோ ஆகியோர் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் வியாழன். இயற்கையிலேயே வலிமை உள்ளவர்களாக இருக்கும் இவர்கள் நல்ல மனதுடன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வங்கி, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் இவர்கள் இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மேலும் இவர்களுக்குச் சில்லறை வணிகம் செய்யும் தொழிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இவ்வகை தொழிலை இவர்கள் தேர்வு செய்வது நலம்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் வழக்கத்திற்குச் சற்று வேறுபட்டவர்களாகவும், தனிப்பட்ட தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள். ஆனால் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுத்து ஆபத்தையோ பிரச்சனையையோ விலை கொடுத்து வாங்கும் தன்மை உடையவர்கள் ஊக வணிகம் என்று கூறப்படும் பங்கு வர்த்தகம் மற்றும் சூதாட்டம் ஆகியவை இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்குச் சரியான தொழிலாக இருக்கும். மேலும் கலை, நடிப்பு ஆகிய துறைகளிலும் இவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உண்டு.

5,14,23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த முடிவைச் சரியான நேரத்தில் எடுக்கும் தன்மை கொண்டவர்கள். தகவல் தொடர்பு திறன் அதிகம் உள்ள இவர்களுக்குப் பங்கு வர்த்தம் மிகச் சரியான தொழிலாக இருக்கும். மற்றவர்களைத் தனது வழிக்குக் கொண்டு வருவதில் வல்லவர்கள். ஒரே விதமான வேலை இவர்களுக்குச் சலிப்பை தரும். ரிஸ்க் எடுத்து தினந்தோறும் பரபரப்பாக இருப்பது இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. டெக்னாலஜி, விளையாட்டு, மார்க்கெட்டிங், சேல்ஸ் ஆகிய துறைகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் வீனஸ் கிரகத்தைச் சார்ந்த இந்த எண் உடையவர்கள் இயற்கையாகவே பெர்சனாலிட்டியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஓட்டல், ரெஸ்டாரெண்ட், ஆடம்பரமான அல்லது பொழுதுபோக்கு துறைகளில் நாட்டம் அதிகம் இருக்கும். புகழ் இவர்களுக்குத் தானாகவே வந்து குவியும்.

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் ஆவதற்கு வாய்ப்பு அதிகம். புதியதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்களுடைய கண்டுபிடிப்புக்கு உலகமே தலை வணங்கும் அளவுக்கு இவர்களுக்குப் புகழ், பணம் பெருகும். ஆராய்ச்சி, விஞ்ஞானம்தான் இவர்களுக்குரிய சரியான தொழில்.

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் சனி கிரகத்திற்குரிய இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்படுவார்கள் அதாவது சுமார் 35 வயது வரை இவர்களுக்குச் சொல்லி கொள்ளும் வகையில் முன்னேற்றம் இருக்காது. எளிமையாகவும் அதே நேரத்தில் கண்டிப்பு உடையவர்களாகவும் இருப்பார்கள். கடின உழைப்பு இருக்கும் இவர்களுக்குச் சற்று தாமதமாகத்தான் வெற்றி கிடைக்கும். அரசியல், இரும்பு, உலோகங்கள், ரியல் எஸ்டேட், ஃபைனாஸ் ஆகிய தொழில்கள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

9,18,27
ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் செவ்வாய் கிரகத்திற்கு உரிய இந்த நபர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவார்கள். உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத் துறை, கெமிக்கல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளும் இந்த எண்களுக்கு உரியவர்களின் துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 

டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டோனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். ஆம், இது உன்மை தான், இதைப் பார்க்கும் போது உலக தலைவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். சம்பளம் மட்டும் இல்லாமல் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர். இங்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் 2015 ஆம் ஆண்டின் தரவின் படு வழங்கப்படிகிறது. இந்திய பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? பராக் ஒபாமா 2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தன்னுடைய சம்பளமாக 4,00,000 டாலர்களைப் பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 2.72 கோடியாகும்.
ஜஸ்டின் ட்ரூடியோ கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ 2015 ஆம் ஆண்டு வரை 2,60,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.77 கோடி ரூபாய் ஆகும்.


அங்கேலா மேர்க்கெல் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 2,34,400 டாலர்கள் சம்பளமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பில் 1.59 கோடி ரூபாய் ஆகும். 


ஜேக்கப் ஜுமா தென் ஆப்ரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா 2015 ஆம் ஆண்டு வரை 2,23,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார் அதாவது இந்திய மதிப்பில் 1.51 கோடி ரூபாயாகும். ஷின்சோ அபே ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே 2,03,000 டாலர்களை சம்பளமாக 2015 ஆண்டு வரை பெற்றுவந்துள்ளார் அதாவது இந்தியமதிப்பில் 1.38 கோடி ரூபாயாகும். 


ரிசிப் தயிப் எர்டோகன் துருக்கியின் ஜனாதிபதி ரிசிப் தயிப் எர்டோகன் 2015 ஆம் ஆண்டு வரை 1,97,000 கோடி சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய பதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும். 
பிரான்சுவா ஹாலண்ட் பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் 2015 ஆம் ஆண்டு வரை 1,94,000 டாலர் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும்.


தெரேசா மே பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மேவின் சம்பளம் 1,78,250 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.2 கோடி ரூபாய். விளாடிமிர் புட்டின் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 1,36,000 டாலர் சம்பளமாக பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 92 லட்சம் ரூபாய் ஆகும். 

மடியோ ரென்சியும் இத்தாலியின் பிரதம மந்திரி மடியோ ரென்சியும் 1,24,600 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 லட்சம் சம்பளமாக பெறுகிறார். 

நரேந்திர மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 30,300 டாலர் சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில் 20.63 லட்சம் ஆகும். 


ஜி ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 22,000 டாலர் சம்பளம் பெற்று வருகிறார் அதாவது இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாயாகும்.

Friday, September 16, 2016

கடல் எப்படி உருவானது - ஏன் உப்பு கரிக்கிறது?

கடல் எப்படி உருவானது?

ஆதி காலத்தில் பூமி உருவான போது, நிலப்பரப்புகள் மிகுந்த வெப்பத்தால் சூடாக காணப்பட்டது. அந்த நேரத்தில் நீராவிப்படலமானது பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சூழ்ந்திருந்தது.

பூமியானது எப்போது குளிர்ச்சி தன்மை அடைகிறதோ அப்பொழுதெல்லம் அங்குள்ள நீராவியும் குளிர்ந்து, பெரும் மழை பொழிவுகள் பூமியில் உண்டானது. இந்த மழைப் பொழிவுகள் காரணமாக பெரிய பள்ளங்கள் மற்றும் நீர்கள் நிறைந்தது. நாளடைவில் இது பெரிய அளவில் உருவாகி கடலாக தோற்றமளித்தது.

கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது?

நீர் சுழற்சி காரணமாக நதிகளில் உள்ள நீர்கள் கடலில் வந்து மோதுவதால், பாறைகள் நொறுங்கப்பட்டு அதிலுள்ள உப்புகள் கடல் நீரில் கலக்கின்றன. பல வருடங்களாக இதே போன்றான நீர் சுழற்சி நடப்பதால், கடலில் உப்பின் தன்மை அதிகமாக காணப்படுகிறது.

மேலும் கடலில் இருந்து நீர் வெளியில் செல்வதற்கான ஒரே வழி, சூரிய வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் தான். இவ்வாறு நடைபெறும் போது கடலில் உள்ள நீர்கள் மட்டும் தான் ஆவியாகி மேலே செல்கின்றன. நீரில் உள்ள உப்புகள் மட்டும் கடலிலே தங்கி விடுகின்றன. எனவே கடலில் உப்பின் தன்மை மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. உலகின் அனைத்து கடல்களிலும் உப்பின் தன்மை ஒரே அளவில் இருக்காது.

Tuesday, July 5, 2016

மூன்று பதிலை வைத்து, காதலா? காமமா என அறியலாம்!

இன்றைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் உடல் உரசிக்கொள்ள மட்டுமே பழகுகின்றனர். காமம் தான் அவர்களது வேட்கை என சந்து பொந்துகளில் இருந்து, மேடைகள் வரை பல பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம். முக்கியமாக திரைப்படங்களில். இதை முழுமையாக மறுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது. ஏனெனில், 50:50 என சரிபாதி அளவிற்கு நமது சமூகத்தில் நாம் இதை கண்கூட பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். உண்மை என்னவெனில், தாங்கள் உண்மையாகவே காதலிக்கிறோமா? இல்லையா? என்று தெரியாமலேயே பதின் பருவத்தில் பலரும் ஒன்றாக சுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், பள்ளி பருவத்தில் இருந்து உண்மையாக காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். உண்மையில், இருவர் மத்தியில் இருப்பது காதலா? காமமா? என்பதை இந்த மூன்று கேள்விக்கான பதில்களை வைத்து அறிந்துக் கொள்ளலாம்..

கேள்வி #1

தொடர்பு! காதல்! உங்கள் வாழ்க்கையை பற்றி முழுவதுமாக, வெளிப்படையாக பேசுவீர்கள் பகிர்ந்துக் கொள்வீர்கள். அவர்களுடன் உங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது. எப்படிப்பட்ட சண்டை வந்தாலும், அதை மீண்டும் பேசி கடைசியில் ஓர் தீர்வுக்கு வந்துவிடுவீர்கள். சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் எந்தவிதத்திலும், உங்களது உறவை பாதிக்காது. உங்கள் இருவருக்குள்ளும் ஓர் நேர்மை இருக்கும்.

காமம்! மேம்போக்கான கருத்துக்கள் மட்டுமே பகிர்ந்துக் கொள்வீர்கள். பெருமை, தம்பட்டம் அடிக்கும் விஷயங்கள் மட்டுமே அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படும். தங்களை உயர்வாக மட்டுமே எடுத்துக் கூறுவார்கள். ஆழ்மனத்தில் இருக்கும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விருப்பம் இருக்காது. சண்டை, சச்சரவுகள் வந்தால், உடனே பிரிந்துவிடலாம் என்ற தான் முதலில் பிறக்கும்.

கேள்வி #2
அன்பு! காதல்! பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் கூட அது உறவில் இருக்கும் அன்பு குறைய காரணியாக இருக்காது. ஒருவரின் மகிழ்ச்சிக்காக மற்றொருவர் விட்டுக்கொடுத்து போவது சர்வசாதாரணமாக நிகழும். ஒருவர் பற்றிய இரகசியத்தை எக்காரணம் கொண்டும் மற்றவரிடம் கூற மாட்டார்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் குரியது.

காமம்! மன ரீதியான நெருக்கம் பெரிதாக தான் இருக்கும். கண்களை பார்த்து பேசுவது குறைவாக தான் இருக்கும். உண்மையை மறைக்க, பொய்களை கடத்தி செல்ல மேலும் மேலும், பொய்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். மன ரீதியான நெருக்கத்தை காட்டிலும், உடல் ரீதியான நெருக்கம் தான் அதிகமாக இருக்கும். உங்கள் அந்தரங்கள் விஷயங்களை நண்பர்களுடன் கேலியாக பேசி பகிர்ந்துக் கொள்வார்கள்.

கேள்வி #3
மதிப்பு! காதல்! உங்கள் துணையின் குறைகள் தெரிந்தும் கூட அவரை நேசிப்பீர்கள். அவர் மேலும், வெற்றியடைய, அடுத்த கட்டத்திற்கு செல்ல ஊக்கமளிப்பார்கள். ஒருவர் மற்றொருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு அளிப்பார்கள். கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

காமம்! ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். ஒருவர் மற்றவரது சுதந்திரத்தை தட்டி பறிக்க, தன்னிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள நினைப்பார்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதே கடினமாக இருக்கும். மன்னிக்க மனம் வராது.

திருமணமாக போகும் பெண்களிடம் அச்ச உணர்வுகள்!

திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிரைக் கண்டால் சிலர் பாசக்கயிற் வீசுவது போல எகிறிக் குதித்து ஓடுவார்கள். இதற்கு காரணம் கல்யாணம் மட்டும் பண்ணிடாத மச்சி, உன் சந்தோஷமே போயிடும் என்பார்கள். ஆனால், இப்படி கூறும் அனைவருமே திருமணம் ஆனவர்கள் தான். நம்மிடம் எப்போதுமே ஒரு தீய குணம் இருக்கிறது. நம் வாழ்க்கையில் 90% சந்தோசமாக இருந்தாலும், மீதமுள்ள 10% துன்பத்தை எண்ணியே மகிழ்ச்சியை இழந்துவிடுவோம். திருமண வாழ்விலும் அப்படி தான். பொண்டாட்டி பற்றி குற்றங்குறை கூறியே அவர்கள் பற்றிய நல்ல விஷயங்களை மரித்துவிடுவோம். இப்படி ஒருப்பக்கம் இருக்கையில், திருமணம் நெருங்க, நெருங்க பெண்கள் மத்தியில் ஏற்படும் அச்சங்கள் ஒருபுறம் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்...

கணவன் வீட்டு உறவுகள்!
மாமனார். மாமியார், நாத்தனார் என கணவன் வீட்டு உறவுகள் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் எல்லா பெண்களுக்குமே திருமணத்திற்கு முன்பு ஏற்படுகிறது.

கணவன், மனைவி உறவு!
இதுநாள் வரை தான், தன் வாழ்க்கை என்று இருந்த ஓர் சுழற்சியில் இன்று நாம், நம் வாழ்க்கை என்ற மாற்றம் நிகழ போகிறது. தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

சுதந்திரம் இருக்குமா?
தோழிகள், நண்பர்கள், வேலை, உடன் பணிபுரிவோர் என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற பயம் பெண்களுக்குள் வலுவாக இருக்கிறது. ஏனெனில், கணவனுக்கு பணிமாற்றம் ஆனால், தானும் பனி மாற்றம் வாங்கி செல்ல வேண்டும், அல்லது வேலையே விட்டு செல்ல வேண்டும் என்ற ஒருதலைப்பட்சமான நிபந்தனை நமது சமூகத்தில் நிகழந்து வருகிறது.

நினைத்தது எல்லாம் கூற முடியுமா?

நாம் நினைத்த காரியங்களை செய்ய, கூற முடியுமா? குறைந்தபட்சம் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் கூறிய பிறகு தான் செய்ய முடியும். ஒருவேளை அவர்கள் மறுப்பு கூறினால்? என்ற பல கேள்விகள் பெண்களின் மனதில் ஓடுகிறது.

குடும்ப பொறுப்புகள்!
இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றியும் பெண்கள் மத்தியில் ஓர் அச்சம் நிலவுகிறது.

நேரம் மற்றும் வேலை மேலாண்மை!
எல்லா வேலைகளையும் உடனக்குடன் செய்ய வேண்டும். காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, தான் வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என நேரம் மற்றும் வேலை மேலாண்மை தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கிறது.

எதிர்காலம்!
வீடு, நிலம், வாகனம் வாகுவது, சேமிப்பு, என எதிர்கால திட்டங்கள் அவர்களின் மனதில் குழப்பமாக எழும். ஆரம்பத்தில் எல்லா பெண்கள் மத்தியிலும் இதுபோன்ற சில தடுமாற்றங்கள் எழுவது இயல்பு தான்.

குழந்தைகள்!
தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொல்வதுண்டு. இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என பொதுவாக அவர்கள் கருதுவது தான்.

இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?
திருமணம், நெருங்க, நெருங்க, "இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?" என்ற கேள்வியும் சில பெண்கள் மத்தியில் அச்சம் காரணமாக எழுகிறது. இவை எல்லாம் திருமணம் ஆகும் வரை தான்.

Wednesday, June 8, 2016

ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது?

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!!
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்....
நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
அதனால் ' fair & lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை.

[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!] ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.

மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.

சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட்.

இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம்.

சிகை அலங்காரம்:

லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.
அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும்.

உடல் தோற்றம்;

ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.
மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.

ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ perosnal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!

முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??]

மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

ஆறும் அது ஆழமில்ல

அது சேரும் கடலும் ஆழமில்ல

ஆழம் எது ஐயா ?- அது

பொம்பள மனசுதான்யா!!!

Thursday, May 12, 2016

மலாலாஇங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கடந்த 30-ம் தேதி பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்தது.இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.இது தவிர, ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கும் சிறப்பு மிக்க ‘சகாரோவ் மனித உரிமை பரிசு’க்கு தேர்வு செய்யப்பட்ட இறுதிபட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.இதற்கிடையில் நோபல் பரிசுக்கான தேர்வாளர்களின் பெயர்கள் வரும் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு மலாலாவுக்கே கிடைக்கலாம் என 80 சதவீதம் மக்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது.

இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 5 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.

உடல்நலம் தேறிய மலாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.மேலும் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார். அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள ‘வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்’ என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.அன்னா பொலிட்கோவ்ஸ்கியாவை போல் தீரமாக செயல்பட்டதற்காக மலாலாவுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக தேர்வு கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.வரும் திங்கட்கிழமை நடைபெறும் விழாவில் இந்த விருதை மலாலா பெற்றுக் கொள்கிறார்.

விஜயகாந்த் ரொம்ப நல்லவரு

விஜயகாந்த் மீது குறைகள் என்று கூறப்படும் 3 விஷயங்கள் : -

1. சரியாக பேசுவதில்லை – செந்தமிழ்”லயே பேசி பேசி ஆட்சிய பிடிச்சு ரெண்டு கட்சிகளும் என்ன பண்ணிட்டாங்க நமக்கு ????

நாட்டை எப்படி வச்சுருக்காங்க ?????விஜயகாந்த் 1 1/2 வருடங்களுக்கு முன்னால வரைக்கும் நல்லா பேசிக்கிட்டு தானே இருந்தார். You Tube”ல போய் பாருங்க. சட்டசபைல எதிர் கட்சியா பேசினப்போ கூட நல்லா தான் பேசுவாரு… இப்போ உடல்நிலை காரணமா கொஞ்சம் முன்ன போல பேசுரதில்ல. நமக்கெல்லாம் உடல் நிலை எப்பவும் இப்படியே இருக்கும் இல்ல..???அவருக்கும் சரியாகும்.எப்படி பேசுராங்க”ங்கறத விட, என்ன செய்வாங்க, என்ன செஞ்சாங்க என்ன செய்யப் போறாங்க”ங்கறது முக்கியம்.

2. நாட்டை ஆள நிர்வாகத்திறமை வேணும் -

ஆமா…கலைஞரும், ஜெயலலிதாவும் லண்டன்”ல பொலிட்டிகல் சயின்ஸ் & மேனேஜ்மென்ட் பத்தியெல்லாம் படிச்சுட்டு அதுக்கப்புரம் பல விசயங்களை நிர்வாகம் பண்ணிட்டு அனுபவத்தோடதான் அரசியலுக்குள்ள வந்திருக்காங்க…!!! அடப் போங்கப்பா.. அண்ணா இறந்ததால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். MGR இறந்ததால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இரண்டு பேருமே அந்த கட்சியை உருவாக்கியவர்கள் இல்லை. எந்த நிர்வாகத்திறமையை கண்டு அவ்ர்களை நாம் ஆதரித்தோம். ??????

ஆனால் விஜயகாந்த், தான் சார்ந்த திரைத்துறையில் நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதற்கு முன்பு பலர் தலைவராக இருந்த போதும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கடனை அவர் தலைவராக நிர்வகித்த காலத்தில். அந்த கடனை முழுவதுமாக அடைத்தார். நிர்வாகம் செய்யத்தெரியாத ஒரு மனிதர் ஒரு அமைப்பின் கடனை தீர்க்க முடியுமா ???

கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவைப்போல் விஜயகாந்த் கட்சியில் நுழைந்தவர் இல்லை. தன் சொந்த முயற்சியில் கட்சியை உருவாக்கி, 2005″ல் கட்சி ஆரம்பித்து 2006″ல் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 11% சதவீத வாக்குகளை பெற்று ஒரு சட்டமன்ற தொகுதியிலும் ஜெயித்தவர். 5 ஆண்டுகளில் அடுத்த 2011 தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவராகவும் வளர்ச்சி கண்டவர்.

தற்போது 2016 தேர்தலுக்காக பணத்திற்காக எந்த பக்கமும் போகாமல் தி.மு.க , அ.தி.மு.க அல்லாத 6 முக்கிய கட்சிகள் கொண்ட ஒரு பலமான கூட்டணியை உருவாக்கி தி.மு.க”வுக்கும் அ.தி.மு.க”வுக்கும் பெரிய நெருக்கடியை கொடுத்திருக்கிறார்.

இவரை எப்படி நிர்வாகத் திறமை இல்லாதர் என்று சொல்ல முடியும் ????

3. கோபப்படுகிறார் -

உள்ளுக்குள்ள வஞ்சத்த வச்சு வெளிய சிரிச்சுகிட்டு ஓட்டுக்காக நடிக்கத் தெரியாத மனுஷன். அதே விஜயகாந்த் சில இடங்கள்ள கண்ணீர் விட்டு அழுதிருக்காரே…!!! மேடை நாகரீகம்”ங்கற பேர்ல அவருக்கு அதையும் மறைக்கத் தெரியல….!!! பாவம் இந்த ஜனங்களுக்கு அது தான் பிடிக்கும்னு அவருக்கு தெரியல போல…!!! கோபமோ, அழுகையோ வெளிப்படையா காட்டிடுறார்.நேருக்கு நேரா கோபப்படுறவன நம்பலாம்..!!! சிரிச்சு சிரிச்சு வஞ்சத்தயெல்லாம் உள்ள வச்சுட்டுருக்குறவனத்தான் நம்ப முடியாது…!!!

இதை தவிர தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையிலும் நடிகர் சங்கத்திலோ ஏதாவது ஊழல் குற்றச்சாட்டுகளோ அல்லது லஞ்ச குற்றச்சாட்டுகளோ இருக்கிறதா அவர் மேல்…..????இல்லை…இவன் குடும்பத்தை அழித்தான், அவன் குடியை கெடுத்தான் என்ற குற்றச்சாடுகள் இருக்கிறதா….????

மாறாக நடிகனாய் இருந்த போதிருந்தே பல பேருக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்திருக்கிறார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். கட்சியின் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யும்பொது கூட, “நான் இவ்ளோ தான் இதுக்கு பணம் கொடுத்திருக்கேன். மீதியெல்லாம் கட்சி உறுப்பினர்கள் கொடுத்த பணம்” என்று வெளிப்படையாக சொல்கிறார்.

ஆனால் இங்கு அரசாங்க உதவிகள் வெள்ள அவசரத்திற்கு செய்யப்படும்போது கூட அவருடைய ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கிறார்கள். தானாக கொடுப்பவர்களிடமும் கட்டாயப்படுத்தி ஒட்டச் சொல்கிறார்கள்.

  • வெள்ளத்துல, களத்துலேயே வேட்டிய மடிச்சு கட்டிட்டு வெறும் கால்ல இறங்கி மக்கள சந்திச்ச விஜயகாந்த் அதை பெருசா விளம்பரப்படுத்திக்கல. ஊடகங்களும் அதை காமிக்கவே இல்ல.
  • அதுக்கு அப்புறமும் கூட அத நான் அதைப் பண்ணினேன்”னு எங்கேயும் அவர் சொல்லிக்காட்டி தனக்கோ தன் கட்சிக்கோ விளம்பரம் தேடலை.
  •  வெள்ளத்துலே அவர் கொடுத்த நிவாரணப் பைகள்”ல கூட அவர் கட்சி பெயரோ, அவர் பெயரோ, படமோ எதுவுமே இல்ல.
  • தன்னோட மாநாடு நடக்குற அன்னிக்கு தவிர வேற ஒரு நாள் கூட தன்னோட கேப்டன் டிவி”ய அவர் கட்சி விளம்பரத்துக்காவும் தனக்காவும் பெருசா பயன்படுத்திக்கிறது இல்ல.

ஆனா….!!! நாம அவரைத் தான் எப்போவும் கிண்டலும் கேலியும் பண்றோம்….!!! தொடர்ந்து செய்வோம்….!!!உண்மையாய் உதவி செய்ய வருபவர்களை பைத்தியக்காரர்களாய் சித்தரிப்பதே நாம் காலம் காலமாக செய்து வரும் விஷயம்…!!!காமராஜரையே தோற்கடித்தவர்கள் அல்லவா நாம் !!!

வழக்கம்போல் அ.தி.மு.க அல்லது தி.மு.க வுக்கே ஓட்டளிப்போம்.பி.எஸ் வீரப்பா”வின் திரைப்பட வசனம் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” நம்மை யாரும் அழிக்கத்தேவை இல்லை. நாமே போதும். நமக்கு நாமே….!!

ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்

கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்…

இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களா?

ஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.

உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது?
ஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது.எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங் கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.

நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை. கோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்றுவிட்டார்.

குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையா?
நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல. குழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ்,”குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்…) ஒரு நாள்… மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்கைகளில் குழந்தைகள் படுத்திருந்தார்கள். அவர்கள் படுக்கை அருகே மெல்லிய கயிறு இருக்கும். ஏதாவது தேவை என்றால் அதை இழுத்தாலே போதும். அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களை வாழவிட்டிருக்க வேண்டும். (குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு கோயபல்ஸ் தம்பதிகள் 1945, மே 1ல் தற்கொலை செய்து கொண்டனர்.)

கோயபல்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் அவரை வெறுக்கிறேன். யாருமே அவரை விரும்ப மாட்டார்கள். அவரை சுற்றி உறவினர் உட்பட சிலர் இருந்து கொண்டே இருப்பார் கள். பதவிக்காகத்தான் அவர் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்களும் அவரிடம் நிறையப் பேர் இருந்தார்கள். எங்களை விட அந்த பெண்களுக்கு அதிக சலுகைகள் இருந்தன.

காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்த வுடனே, எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களே?
ஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.

கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதே?
பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார். அவ்வளவுதான். அவரைப் பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.

நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்த பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?
ஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன் னார்கள். என்னை பெரிதும் அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்த கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள். ஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார்.

பதுங்கு குழியில் கடைசி நிமிடங்களைப் பற்றி சொல்ல முடியுமா?
ஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமே?
அன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார். ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்த சத்தத்தை (தன் னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா… போக வேண்டுமா என்று குழப்பம். எதும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரியும். அதன் பின்னர், பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை. அது தோட்டப்பகுதிக்கு எடுத்து செல்லபட்டது.

அடுத்து என்ன நடந்தது?
உலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.

பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களா?
நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.

ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்?

ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள். நுழைவாயிலில் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள். நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம். ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். நான் அடுத்த பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.

போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் பேசினார்களே?
ஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார் கள். எனக்கு விருந்தளித்தார் கள். தொடர்ந்து அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள். இருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.

கடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை?
1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்த போது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா உயிரோடு இருக் கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.

ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான “டவுன்பால்’ எனும் படத்தை பார்த்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாக இருந்தது. அவர்களுக்கு கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள். ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.

நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர் களா? அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா?
இதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா தவறா என்று கூற முடியாது. ஆனால் பொதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.

Wednesday, March 16, 2016

கோவேறு கழுதை; கழுதை!

கழுதைகளையும், கோவேறு கழுதைகளையும் (Mule) பார்த்திருக்கிறீர்களா? இரண்டு விலங்கு களிடமும் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியாது. உற்றுப் பார்த்தால் உருவம் சார்ந்தும், குணம் சார்ந்தும் இரண்டும் வெவ்வேறு விலங்குகள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

# கழுதை வீட்டுப் பிராணியாகும். பாதத்தில் பிளவுபடாத குழம்புகளைக் கொண்ட பாலூட்டி. குதிரை போன்ற உடலைமைப்பைக் கொண்டது. ஆனால், குதிரையைவிட கழுதை உடல் அளவில் சிறியது. குதிரையின் வாலில் இருக்கும் அளவுக்குக் கழுதையின் வாலில் ரோமம் இருக்காது. பிடரி மயிரும் கழுதைக்குக் கொஞ்சமாகவே இருக்கும்.

# ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினப் பிராணியே கோவேறு கழுதை.

# கழுதைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டி போடும். கோவேறு கழுதைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

# கோவேறு கழுதைகள் வேலைக்குச் சிறந்தவை. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் அதிக எடையைத் தாங்குபவை. அதிக எடையை ஏற்றினால் கழுதை மிகவும் கஷ்டப்படும்.

# கோவேறு கழுதைகளால் சில அடி உயரத்துக்குக் குதிக்க முடியும். கழுதையால் குதிக்க முடியாது. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் புத்திசாலிகள்.

# கோவேறு கழுதைகளின் காதுகள், கழுதைகளின் காதுகளைவிடச் சிறியதாக இருக்கும். ஆனால் உருவமோ குதிரை போல இருக்கும். தலை, ஒல்லியான கால்கள், பிடரி மயிர் ஆகியவை கழுதைகளுக்கு இருப்பது போலக் கோவேறு கழுதைகளுக்கு இருக்கும்.

# கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் உயரமாக இருக்கும். கழுத்து, பற்களும்கூட கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

# குதிரையின் வாலைப் போலவே கோவேறு கழுதையின் வால் அடர்த்தியானது. ஆனால், கழுதையின் வாலோ பசுவின் வாலைப் போல இருக்கும்.

# கழுதையின் கத்தலையும் கோவேறு கழுதை வெளிப்படுத்தும் சத்தத்தையும் கேட்கும் ஒருவர் எளிதாக அதை அடையாளம் காண முடியும். கோவேறு கழுதை குதிரையைப் போலக் கனைக்கும்.

புனிதர் அன்னை தெரசா!

அன்னை தெரசா இறந்து போன நிலையிலும் இரண்டாவது அற்புதத்தை செய்ததை அங்கீகரித்த போப் இரண்டாம் பிரான்சிஸ் தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கினார். ஆனால் புனிதர் பட்டம் வழங்கும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை. இந் நிலையில், செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் விழாவில் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று அறிவித்துள்ளார். ஆனால் விழா இந்தியாவில் நடைபெறுமா அல்லது ரோமில் நடக்குமா என்பது அறிவிக்கப்படவில்லை.

அல்பேனியா நாட்டில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி ஏழை குடும்பத்தில் பிறந்தவர் அன்னை தெரசா. அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா போஜாஸ்யூ. இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட்ட அவர் 1929-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். இங்கு லோரட்டோ மடத்தின் கொல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்தவர், தொழு நோயாளிகளுக்காக ப்ரேம் நிவாஸ் இல்லத்தை பிரத்யேகமாக தொடங்கினார். 1979-ல் அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் அன்னைக்கு 1980-ல் பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவித்தது மத்திய அரசு. இப்படி.ஏழைகளுக்கான சேவையின் அடையாளமாக திகழ்ந்த அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி காலமானார்.

இந்நிலையில் ரோமன் கத்தோலிக்கர்களில் ஒருவர் இறந்தால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் அதிகாரம் வாடிகன் கத்தோலிக்க திருச்சபைக்கு உள்ளது.அதற்கு முன்னர் அவர் அருளாளர் என அங்கீகரிக்கப்பட வேண்டும். புனிதர் பட்டம் பெறுவதற்கு கத்தோலிக்க கிறித்துவர்களின் நம்பிக்கையின்படியான 2 அற்புதங்களை நிகழ்த்தி இருக்க வேண்டும். அதனப்டி மேற்குவங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண் வயிற்றில் புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்தார். அவர் தெரசா உருவம் பதித்த சங்கிலியை அணிந்து பிரார்த்தனை செய்ததால் புற்றுநோய் குணமானதாகவும் கூறப்படுகிறது. அதாவது அன்னை தெரசாவின் தூய ஆவிதான் அவரை குணப்படுத்தியதாக வாடிகன் சபையிடம் தெரிவிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த பின் கடந்த 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இது புனிதர் பட்டத்துக்கு முந்தைய நிலையாகும்.

இதனைத் தொடர்ந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்ய அவர் முழு நலமடைந்தார். இதற்கும் அன்னை தெரசாவின் தூய ஆவிதான் காரணம் என வாடிகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 2 அற்புதங்களை நிகழ்த்தியதால் அன்னை தெரசாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்திருந்தார். இதைத் தொடந்து வரும் செப்டம்பர் 4-ம் தேதி அன்னை தெரசாவை புனிதராக போப் பிரான்சிஸ் அறிவிப்பார் என இன்று வாடிகன் அறிவித்துள்ளது. அதே சமயம் செப்டம்பர் 5-ந் தேதி அன்னை தெரசாவின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, February 5, 2016

3 நாட்களில் பாஸ்போர்ட்!

பொதுமக்களுக்கு துரிதமாக ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பொதுவாக பாஸ்போர்ட் பெறும் விண்ணப்பதாரர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு சென்று விசாரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறையை துரிதப்படுத்தும் வகையில் போலீசார் கையில் விரைவில் ‘டேப்’ கொடுக்கப்படும். அவர் அந்த ‘டேப்’ கொண்டு ஆன்லைன் மூலம் உடனுக்குடன் விண்ணப்பதாரர் ஆவணங்களை சரிபார்த்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்புவார்.இதன் மூலம் உடனே பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர், “பொதுமக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாஸ் போர்ட் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10 லட்சத்து 800 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா உலக அளவில் பாஸ்போர்ட் வழங்குவதில் 3–வது இடத்தில் உள்ளது. இதுபோல் பாஸ்போர்ட் பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு இ–சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் எடுத்து வருகிறது.

இந்த முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலுக்கான நாள் உடனே குறிக்கப்படுகிறது. அவர்களுக்கு 21 நாட்களுக்குள், பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. குறிப்பாக 1989–ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தட்கல் முறையில் அதாவது 3 நாட்களில் பாஸ்போர்ட் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையில் அரசால் அங்கீகரிக்கப் பட்ட 16 சான்றிதழ்களில் இடம் பெற்றுள்ள கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் கொண்டு பாஸ் போர்ட் பெறலாம். ஆனால் இந்த முறையில் பாஸ்போர்ட் பெற கூடுதலாக ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.இதனை கருத்தில் கொண்டு ஒரு புதிய முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதாவது 3 நாட்களில், அதுவும் கூடுதல் கட்டணம் ரூ.2 ஆயிரம் இல்லாமல் பாஸ்போர்ட் பெற புது வழி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு கொண்டு 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கட்டணம் ரூ.1,500 மட்டும் வசூலிக்கப்படுகிறது. பொது வாக பாஸ்போர்ட் பெறும் விண்ணப்பதாரர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு சென்று விசாரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறையை துரிதப்படுத்தும் வகையில் போலீசார் கையில் விரைவில் ‘டேப்’ கொடுக்கப்படும். அவர் அந்த ‘டேப்’ கொண்டு ஆன் லைன் மூலம் உடனுக்குடன் விண்ணப்பதாரர் ஆவணங்களை சரிபார்த்து பாஸ்போர்ட் அலுவலகத் துக்கு அனுப்புவார்.இதன் மூலம் உடனே பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. பாஸ்போர்ட் பெற விரும்பும் விண்ணப்பதாரரை நேர்காணல் செய்ய ஒரு குறிப்பிட்ட நாள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. புதிய முறையின் படி 5 வேலை நாட்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் நாளில் நேர்காணலுக்கு சென்று தகவல்களை அளிக்கலாம்”இவ்வாறு அவர் கூறினார்.

Monday, January 11, 2016

நேதாஜி உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சி

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை சந்தித்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயணங்கள் பற்றிய ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

அந்த ஆவணத்தில் உள்ளதாவது, “கடந்த 70 ஆண்டுகளாக விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புடைய உறுதியான தவிர்க்க முடியாத 4 தனித்தனி அறிக்கைகள் உள்ளன. 1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜி-வுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில் ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 4-ம் தேதி நேதாஜியின் இந்த விமான பயணத்திற்கு முந்தைய நாள்(17-08-1945) நிகழ்வுகள் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வருகின்ற ஜனவரி 16-ம் தேதியன்று நேதாஜியின் விமான விபத்தை தொடர்ந்து 18-8-1945 அன்று இரவு நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதள வெளியிட உள்ளது.

பெண்களிடம் இருந்து ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம்

இன்றைக்கும் ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியால் வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குடும்ப வன்முறை என்பது கனவன் மனைவிமீது செய்வது மட்டும்தான் என்று D.V.Act வரையறுத்துள்ளது. அந்த D.V. Act படி கணவன் தலையைத் திருப்பிக் கொண்டால் கூட அது வன்முறை; உடனே மனைவி புகார் கொடுத்து கனவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே விரட்டி அடித்து, அதற்காக மனைவிக்கு கப்பம் கட்ட வைக்கலாம். ஆனால் மனைவி கணவனை ஆண்மையற்றவன், ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று இன்னொரு ஆணுடன் ஒப்பிட்டு திட்டினாலும், ஏன் அடித்தால் கூட அது குற்றம் கிடையாது! இதுபோன்ற சட்டங்கள் மாற்றப்படாவிட்டால் விபரிதமான விளைவுகள் ஏற்படும் என்று சில ஆண்டுகளாக வலியுறுத்தப் பட்டு வந்தது. மேலும் இத்தகைய முடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதாரணமாக பெண்கள்தான் அதிக அளவு தற்கொலை செய்து கொள்வதாக ஒரு தவறான பொய்த் தோற்றம் மக்கள் மனத்தில் உள்ளது. ஆனால் அந்த மாயத்தோற்றம் உண்மையல்ல. ஆண்களின் தற்கொலை பெண்களுடையதை விட இரண்டு பங்கு என்பதே உண்மை!

இந்நிலையில் பொய்யான பலாத்கார வழக்கு ஒன்றில் வழக்குரைஞர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்குரைஞரிடம் பணியாற்றிய பெண், அவர் மீது பொய்ப் புகார் கூறியிருந்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில், நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞர், இந்த பொய் வழக்கால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும், தன்னை ஒரு குற்றவாளியைப் போலவே இந்த சமுதாயம் கருதுவதாகக் கூறி தில்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் நீதிமன்றம் வழக்குரைஞர் நிவேதிதா அனில் ஷர்மா, மனுதாரர் குறிப்பிடும் விஷயத்தை எளிதாக விட்டுவிட முடியாது. மன அழுத்தத்தால், சமுதாயத்தால் அவர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பார். அவர் குற்றம்சாட்டப்பட்ட போது அனைவருக்கும் அது தெரிந்திருக்கும். ஆனால், அவர் விடுதலை செய்யப்பட்டதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். அவர் தொடர்ந்து குற்றவாளி என்ற பார்வையிலேயே பார்க்கப்படுவார். அவரது மதிப்பு, மரியாதையை மீண்டும் கொண்டு வருவது இயலாதக் காரியம். அதற்காக அவருக்கு இழப்பீடு கொடுத்தாலும் அது சரியாக இருக்காது. எனவே, இந்த நீதிமன்றம், ஆண்களை, பொய் வழக்குகளில் இருந்து காப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆண்களின் மரியாதை, கௌரவம் ஆகியவற்றை காப்பாற்ற ஒருவரும் போராடுவதில்லை, அனைவருமே பெண்களின் கௌரவம், மரியாதையைக் காப்பாற்றுவது பற்றியே பேசி வருகிறோம். பெண்களைக் காப்பாற்ற ஏராளமான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், பொய் வழக்குப் போட்டு ஒரு ஆணை குற்றவாளியாக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம் கூட இல்லை. எனவே, ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.