Wednesday, November 25, 2015

பாண்டிச்சேரி அரிய தகவல்!


இந்த பக்கத்துல சென்னை மழையில காலி அந்த பக்கம் கடலூர் காலி ஆனா பாண்டிச்சேரி பத்தி தகவலோ அதிக சேதாரமோ இல்லையே ?

இந்த பாண்டியை எத்தனை பேர் நன்கு பார்த்திருப்பீர்கள் என தெரியாது – ஆனால் பாண்டியின் வடிவமைப்பு 1674ல் இருந்து 1962 வரை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசின் கட்டுமான பணி ஆச்சர்யமான ஒன்று. என்னாது 1962 ஆம் ஆண்டா? இந்தியாதான் 1947ல் சுதந்திரம் அடைந்ததே அப்புறம் எப்படி 1962னு கேட்பவர்களுக்கு முதலில் பதில் கூறிவிடுகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தான் நாம் விடுதலை பெற்றோமே தவிர பாண்டி பிரஞ்சு அரசாங்கத்தின் கண்ட்ரோலில் தான் இருந்தது 1962 வரை. 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் இந்த நாட்டை இந்தியாவுக்கு விட்டு கொடுத்த போது அங்கிருந்த அனைவரிடமும் கேட்கபட்ட ஒரே கேள்வி – பிரெஞ்சு நாட்டினராய் பிரெஞ்சு பாஸ்போர்ட்டுடன் இருக்க வேண்டுமா அல்லது இந்திய பாஸ்போர்ட் வேண்டுமா என்று அதனால் தான் இன்று வரை பல பாண்டி நண்பர்கள் பிரெஞ்சு குடியுரிமையில் இருக்கின்றனர்.

1954ல் நாட்டை விட்டு கொடுத்தாலும் இந்தியாவின் கான்ஸ்டிடியூஷனுக்கு வந்தது என்னமோ 1962 ஆம் ஆண்டு தான். அவர்களின் குடியரசு தினம் 16 ஆகஸ்ட் – சுதந்திர‌ தினம் நவம்பர் 1 என்பதாகும். இதுக்கிடையில் பல கோணங்களில் யோசித்து அருமையாக வடிவமைக்கபட்ட பாண்டியில் பல தெருக்கள் ஏன் பீச் முனை கூட நேர் வகிடு எடுத்து வாரினால் போல் ஒரே நேர் கோட்டில் தான் இருக்கும். முதல் வீட்டில் இருந்து பார்த்தால் கடைசி வீடு கரெக்டாய் கோடு கிழித்த மாதிரி இருக்கும் அனேக தெருக்கள்.

ஒரு வீடு கூட ஆக்கிரமிப்பில் கொஞ்சம் முன்னாடி ரோட்டை ஆக்ரமிச்சி அல்லது கொல்லை புறத்தை ஆக்ரமிச்சி கட்டினது இல்லை. அவர்களின் ட்ட்ரெயினேஜ் என்னும் கழிவு நீர் வெளியேற்றம் இன்னும் பர்ஃபெக்ட்டாய் கடலில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு உள்ளது. ஆக்ரமிப்பு அலட்சியம் என்ற ஒன்றே புது பாண்டி குடியிருப்புகளில் மற்றும் தமிழக நகரங்களில் வெள்ளத்தை உண்டு பண்ணிய உண்மை காரணம். இப்ப தெரியுதா யார் தப்புனு?

Tuesday, November 24, 2015

மைக்ரோசாப்ட் (“The History of Microsoft”)

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் வெளியிட்டு வரும் விண்டோஸ் இயங்குதள மென்பொருளுக்கு அண்மையிதான் 30 வயதானது. Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே! இப்போது Channel 9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம் .மைக்ரோசாப்ட் நிறுவனம் இது வரையில் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும், தாண்டி வந்த தடைகளைப் பற்றியும் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Bill Gates மற்றும் Paul Allen ஆகிய இருவரும் சேர்ந்து எப்படியெல்லாம் வெற்றிநடை போட்டனர் என்பதை இந்தப் படம் விவரிக்கும்.இது வரை வேறு எங்கும் காண இயலாத மைக்ரோசாப்ட் பற்றிய பல புகைப் படங்களைக் காணவிருக்கிறீர்கள்.1975ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுகளாக விவரிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 75 சதவீத கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்குதளம் இயங்கி வருகிறது. முதன்முறையாக 1983-ம் ஆண்டு உலகின் மிகப்பிரபலமான ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் அறிமுகமானது. அப்போது வெளியிடப்பட்ட அந்த மென்பொருளுக்கு விண்டோஸ் 1.0 என பெயரிடப்பட்டது.

பிறகு, மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் அந்த விண்டோஸ் ஓ.எஸ்-க்கு இண்டர்பேஸ் மேனேஜரை இணைத்தார். அதற்கு பிறகு, பெயிண்ட், கால்குலேட்டர், கார்டுபைல், நோட்பேட், வேர்டுபேர்டு உள்ளிட்ட அப்ளிகேஷன்களுடன் மேம்படுத்தப்பட்டது. 64 பிட் கலர் இண்டர் பேஸூடன் 1 எம்.பிக்கும் குறைவான சைஸில், 256 கிலோ பைட்ஸ் குறைந்தபட்ச இருப்பு தேவையுடன் டபுள் சைடு பிளாப்பி டிஸ்க் டிரைவ் மற்றும் கிராபிக்ஸ் அடாப்டர் கார்டுடன் வெளிவந்தது.

பிறகு, விண்டோஸ் வாஷர் மற்றும் துணியுடன் முதல்முறையாக பிரஸ் கிட்டுடன் விண்டோஸ் 1.0 வெளிவர ஆரம்பித்தது. 1988-களில் உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ரோசாப்ட் உருவெடுத்தது. அதன்பிறகு, அமோக விற்பனையை அடுத்து முதல்முறையாக 32 பிட் வெர்ஷனில் பிஸினஸ் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு விண்டோஸ் என்.டி., 3.1 ஆகியவை வெளியானது. பிறகு, ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், மினிமைஸ், மேக்ஸிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்களுடன் வெளிவர துவங்கியது.

தனது 14 வருட வரலாற்றில் முதல்முறையாக 1996-ல் பிளைட் சிமுலேட்டர் வசதியுடன் முதல்முறையாக விண்டோஸ் 95 வெளியானது. பிறகு, 1998-ல் முதல்முறையாக வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வகையில் எம்.எஸ். டாஸூடன் விண்டோஸ் வெளியானது.

பிறகு, 2001-ல் மைக்ரோசாப்ட்டின் வெற்றிகரமான இயங்குதளமாக விண்டோஸ் எக்ஸ்.பி. வெளிவந்தது. அதிக மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷன் மற்றும் மெமரியுடன் எக்ஸ்.பி. வெளிவந்தது. அதற்கடுத்ததாக, 3 முக்கிய விண்டோஸ் இயங்குதள பதிப்புகள் வெளியிடப்படாமலேயே இருந்தது. விண்டோஸ் நேஷ்வைல், விண்டோஸ் கெய்ரோ, விண்டோஸ் நெப்டியூன் ஆகியவை வெளிவரவே இல்லை.

பிறகு, விண்டோஸ் விஸ்டா வெளிவந்தது. அதிலிருந்து சற்று இண்டர்பேஸ் மற்றும் கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் வெளிவந்தது விண்டோஸ் 7. உலகம் முழுவதும் 8 மில்லியன் கம்ப்யூட்டர்களை இந்த மென்பொருள் கவர்ந்திழுத்தது. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதில் ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த மென்பொருளே. 2009-ல் இதன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

பிறகு, விண்டோஸ் 8, 8.1, 10 என அதன் தொடர் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்றளவும் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது விண்டோஸ் இயங்குதளம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 6, 2015

தத்துவ கண்ணதாசன்

துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் .......

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை !

பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது

கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.

சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது? ---

கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது.மழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்கக் கூடாது: அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.

எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.

உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.

ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான் , ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?

அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

சந்தோசம் - உலக அறிஞர்கள் கருத்துக்கள்

சந்தோசம் குறித்து உலக அறிஞர்கள் சொன்ன உன்னதக் கருத்துக்கள்…

01. ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித்து தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால் தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.

02. எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.


03. சந்தோசமாக இருப்பவனை கூர்ந்து அவதானியுங்கள் அவன் ஒரு நாளின் 24 மணி நேரமும் எதையோ செய்து கொண்டிருப்பான். தொலைந்துவிட்ட சட்டைப் பட்டனை தேடுவதுபோல சந்தோசத்தை எங்கோ தேடிக்கொண்டிருக்கமாட்டான்.

04. சந்தோசத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைகிறான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட நீடித்திருக்கும் இன்பங்கள் மனதில் இருந்து எழுபவையே.

05. யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயற்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.

06. தன் சக மனிதர்களுக்கான சேவையில் தன் அகந்தையை அர்ப்பணிக்காதவரை யாருமே வாழ்வின் அர்த்தத்தைக் கற்பதில்லை.

07. நல்ல வாழ்விற்கு செயற்பூர்வமான மனித நேயம் என்ற நற்குணம் தேவை. இதுதான் வாழ்விற்கான தங்கமயமான வழி. இதுதான் திருப்திகரமான வாழ்வு, மனிதராய் பிறந்தவர் சந்தோஷமாய் இருக்க இதுதான் வழி.

08. அடுத்தவர்களுக்காக நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.

09. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ இல்லை தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

10. சந்தோஷம் என்பது நறுமணம் தரும் திரவியம் போன்றது. உங்கள் மீது அதனுடைய சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது.

11. சந்தோத்தை வாங்க முடியாது, உண்மையில் பணத்திற்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை.

12. வாழும்சூழல், ஊதிய உயர்வு, பொருளாதாரம், அரசாங்கத்தை மாற்றுவது போன்றவற்றிலேயே மனிதர்கள் கவனமாக இருக்கிறார்கள். தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வதில் அவர்கள் கவனமெடுப்பதில்லை.

13. சந்தோஷம் உள்ளிருந்து வருகிறது. எளிய நல்ல குணம் தெளிவான சிந்தனையால் வருகிறது. மதம் அதற்கு தேவையில்லை, ஆனால் எங்கிருந்தாலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத ஒருவரிடம் அது வந்ததாக சரித்திரம் இல்லை.

14. சுயநலம் சந்தோஷத்தின் எதிரி, அடுத்தவரை சந்தோஷமாக்குவதே தன்னைத்தானே சந்தோஷப்படுத்தும் வழியாகும்.

15. சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.

16. ஒரு மனிதனிடம் என்னென்ன சொத்து இருக்கிறது என்பது சந்தோஷமல்ல அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷமாகும்.

17. பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.

18. ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்துள்ளார்.

19. சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

20. இல்லாத ஒன்றாக தாங்கள் ஆக முயற்சித்து தங்களால் முடியாத ஒன்றை செய்ய முயற்சிப்பவர்கள்தான் அதிருப்தியோடு இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்பதை அறிந்து செய்வதுதான் முக்கியம். வாழ்வின் முழுமைக்கு நம்மை நாமே அர்ப்பணித்து, வாழ்வு நம்மூடே செல்ல அனுமதிக்க வேண்டும்.

21. வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே, தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமுமாகும்.

22. வாழ்க்கையை எதிர் காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும் பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.

23. வாழ்வு வாழ்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளின் மணி நேரத்தின் சதையில் இருக்கிறது என்பதை காலம் கடந்தே அறிகிறோம்.

24. வாழ்வதை ஒத்திப் போடுவதுதான் நமக்குள்ள கெட்ட பழக்கம். தொடுவானத்திற்கு அப்பால் உள்ள மந்திர மாய ரோஜாத் தோட்டத்தைப்பற்றி நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். இன்று நம் ஜன்னலுக்கு வெளியே இருக்கும் ரோஜாக்களை அறிவதில்லை.

25. பணத்தையும் வெற்றியையும் பேராசையுடன் தேடுவதால் துன்பமே மிஞ்சும். காரணம் இப்படிப்பட்ட வாழ்வு தங்களுக்கு வெளியே உள்ள பேராசைக்காரரோடு சம்பத்தப்படுவதால் இறுதியில் துன்பமான முடிவோடு நிற்கிறது.

26. பணத்தைச் சேர்ப்பது, அதிகாரத்தைச் சேர்ப்பது இவைகளால் வாழ்வுக்கு பயனில்லை. வாழ்வு இவை எல்லாவற்றையும் விட மேலானது.

27. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன். வெறுமையான மனமே சந்தோஷத்தை அற்ப சுகங்களில் தேடுகிறது.

28. சந்தோஷத்தின் அடிப்படை நேர்மையின் அடிப்படையைப் போன்றதுதான். அது பொருட்களை சார்ந்ததல்ல அது ஒருவருடைய ஆளுமையைச் சார்ந்தது.

29. உங்களை சந்தோஷப்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பதைவிட காலம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது.

30. வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ, நாம் இறந்த பின்போ வருவதில்லை.

எறும்பு - கற்க வேண்டிய பாடங்கள்!

மனிதர்களைப் போலவே எறும்புகளும் தங்களுடைய வாழ்வை முறையாக அமைத்துக் கொள்கின்றன என்பதை உணர வேண்டும். எறும்பைப் பற்றிய சிறு வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

உலகிலேயே நீதான் மிகப் பெரிய உளவாளி – சர்க்கரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வருகின்றாய்!

உலகிலேயே நீதான் மிகப் பெரிய புத்திசாலி – அடுத்த பருவத்திற்கு உரிய உணவை முன்னதாகவே சேமிக்கின்றாய்!

உலகிலேயே நீதான் மிகப் பெரிய பலசாலி – உன்னை விட ஐம்பது மடங்கு எடையைச் சுமக்கிறாய்

உலகிலேயே நீதான் மிகப் பெரிய துரதிஷ்டசாலி – கடித்த உடன் உனக்கு சாவு உறுதி!

எறும்புகளிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன. அதனுடைய வேலைப் பங்கீடு, நிர்வாகத் திறமை, கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை, பலம் என்று எவ்வளவோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எறும்பில் ராஜா, ராணி, பணியாளர், வீரர் என்று பல்வேறு வகைகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு வகை எறும்பும், ஒவ்வொரு காலகட்டம் வாழ்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மனிதர்ககள் சில விஷயங்களில் தடைகளைக் கண்டு பின்வாங்குவார்கள். அதற்கு மாற்று வழி தேடாமல் தடுமாறுவார்கள். இலகுவான விஷயங்களுக்குக் கூட மனம் தளர்ந்து விடுவார்கள்.

ஆனால், எறும்புகள் மனம் தளறுவதில்லை. எதையும் முடிக்கும் ஆற்றல் கொண்டவை. இதற்கு உதாரணமாக சிறுகதை ஒன்றைப் பார்க்கலாம்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு நம்பிக்கை சம்பந்தமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது மாணவர்களுக்கு சிறு கதை ஒன்றை சொன்னார். ஒரு எறும்புக் கூட்டம் உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்தது. அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

இப்பொழுது எறும்புகள் என்ன செய்திருக்கும் என்று மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். ஆனால், யாருமே சரியான பதிலைச் சொல்லவில்லை.

ஆசிரியரே பதிலைச் சொன்னார். எறும்புகள் தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருளையே பள்ளத்திற்கு நடுவில் வைத்து, அதையே பாதையாக மாற்றி விட்டன என்றார். மாணவர்கள் வியப்புற்றனர்.

இதுதான் எறும்பின் குணம். எதையும் சாதுர்யமாக நிறைவேற்றும் திறமை, பின்வாங்காத மனஉறுதி என்று அதனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. எறும்பிடம் உள்ள நிர்வாகத் திறமை நம்மை வியப்பிலாழ்த்தும். அது வலுவான கட்டமைப்புடன் இயங்கக்கூடியது.

எறும்புகளின் நிர்வாகத் திறமையிலிருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் பயில வேண்டும். இந்தத் திறமையை நமக்கேற்றவாறு அமைத்துக் கொண்டால், நிறைய சாதிக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.

- See more at: http://www.thoothuonline.com/archives/50052#sthash.TcS0MUUg.dpuf