Tuesday, September 22, 2015

பில்லி, சூனியம்:

தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் மாந்திரீகம், பில்லி, சூனியம், ஆவிகளின் உலகம், ஏவல், செய்வினை போன்ற விடயங்களும் மக்களால் அதிகம் நம்பப்படுகிறது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று கூற முடியாமல் இருந்தாலும், அது போன்ற வேலைகள் தனி உலகமாகவே பார்க்க முடிகிறது. இந்த வேலைகளை மந்திரவாதி என்பவன் கச்சிதமாக முடித்து கொடுகிறான்.

அதாவது ஆன்மிகவாதி என்பவன் தனக்கு கிடைக்கும் சக்திகளை நல்ல வழிக்கு மட்டும் செலவழிக்கிறான்.

ஆனால் ஆங்கிலத்தில் ‘அக்கல் சயின்டிஸ்டு’ என்று கூறப்படும் மந்திரவாதியோ நன்மை மற்றும் தீய வழிகளுக்கு தனது சக்திகளை செலவழிப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் இத்தகைய வேலைகளை மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற வேலைகளால் மேற்கொள்கின்றனர்.

ஒருவரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தான் நினைத்த காரியங்களை செய்ய வைப்பதையே ‘பில்லி’ என்கிறார்கள்.

அதே போல் ‘சூனியம்’ என்பதும் ஒருவரை அனைத்து வகையிலும் கட்டுப்படுத்தும் செயலாக இருக்கிறது.

இதன் மூலம் ஒருவரை பொருளாதார ரீதியில் ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். மேலும், கை, கால்களை முடக்குவது, சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவரது உடலுக்குள் மருந்தை செலுத்துதல், கருவில் இருக்கும் குழந்தையை அழித்தல், நோய் உண்டாக்குதல் போன்றவை இடம்பெறுகிறது.

ஏவல்’ என்பது தனது கட்டளையை குறிப்பிட்ட நபரை கேட்க வைத்து அவர் மூலம் நினைக்கும் காரியங்களை சாதிப்பதாகும்.

மேலும், சொந்தமாக செயல்படும் ஒருவரை மாந்திரீகம் மூலம் திசை திருப்பி நினைக்கும் விடயங்களை செய்ய வைப்பதை ‘செய்வினை’ என்பர்.

அதே போல ‘வைப்பு’ என்பது மாந்திரீக வழியில் அல்லது மருத்துவ வழியில் ஒரு மருந்தை பிடிக்காதவர்களுக்கு கொடுத்து அவர்களை மன மற்றும் உடல் ரீதியில் முடக்குவதாகும்.

இதற்கு எல்லாம் ஜாதகம், வியர்வை, உடை, முடி, புகைப்படம் இவற்றில் ஏதாவது வேண்டும் என்று கூறுவர்.

இத்தகைய வேலைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பலர் கூறியிருப்பதையும் நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.

மேலும், மற்றவர்களை வேவு பார்ப்பதற்காக ஆவிகளை ஏவி விடுவார்கள் என்று கூறுவதையும் நாம் கேட்டிருப்போம்.

ஆவிகளின் உலகம் ஒன்று உள்ளதா என்றால், மனோதத்துவ மருத்துவர்கள், அது எல்லாம் ஒருவித மனரீதியான உணர்வே என்று மறுத்துள்ளனர்.

படுக்கைக்குப் போகும் முன் !

உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் ஓய்வு. உறங்கும் நேரத்தில் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் இரவில் உறக்கம் வராமல் தவிக்க வேண்டியிருக்கும். எனவே படுக்கைக்கு போகும் முன் என்னென்ன செய்யக்கூடாது என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

உடற்பயிற்சி வேண்டாமே

படுக்கைக்குப் போகும் முன் உடற்பயிற்சி செய்ய வேண்டாமே. ஏனெனில் உடல் சூடாகி வியர்வை சுரக்க ஆரம்பித்துவிடும் இதுவே தூக்கத்தை கெடுத்துவிடும்.

டிவி நெட் நிறுத்துங்க

உறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக டிவி, நெட் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் படுக்கைக்கு போகும் வரை டிவி, இன்டர்நெட் பார்ப்பது ஹார்மோன் பிரச்சினையை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

சுடுநீரில் குளிக்காதீங்க!

உறங்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல சுடுநீரில் ஷவரில், பாத்டப்பில் குளிப்பது கூடாதாம். இதனால் வியர்வை அதிகம் பெருகி டென்சனை ஏற்படுத்திவிடும். அப்புறம் உறக்கத்தை தொலைத்துவிட்டு விடிய விடிய விழித்திருக்க வேண்டியதுதான்.

காபி, ஆல்கஹால் வேண்டாமே

அதிக அளவில் காபின் நிறைந்த காபி, மதுபானங்கள் குடிப்பது ஆபத்து என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் அடிக்கடி பாத்ரூம் போக எழுந்திருக்க வேண்டும். இதனால் உறக்கம் கெடும் என்கின்றனர்.

வேலைக்கு நோ

எந்த வேலையாக இருந்தாலும் இரவில் அதிகநேரம் விழித்திருந்து பார்க்க வேண்டாம். ஏனெனில் மூளையை ஓய்வெடுக்க விடாமல் செய்வதால் அப்புறம் உறக்கம் நிரந்தரமாக தடை பட்டுவிடும். எந்த வேலை என்றாலும் இரவில் நன்றாக தூங்கி பகலில் சீக்கிரம் பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

திகில் கதைகள் படிக்க வேண்டாம்


படுக்கையில் அமர்ந்து கொண்டு பேய், பூதம், கொலை போன்ற திகில் கதைகளை படிக்கவேண்டாம். அப்புறம் பாதியில் விட்டு விட்டால் திடீர் என்று முழிப்பு வந்து கதையை படிக்கத் தொடங்கிவிடுவீர்கள். அப்புறம் தூக்கம் கோவிந்தாதான்.

செல்லப்பிராணிகளை கொஞ்சவேண்டாம்

படுக்கை அறையில் படுக்கப் போகும் முன் செல்லப்பிராணிகளை கொஞ்சுவதை தவிர்க்கவும். ஏனெனில் செல்லப்பிராணிகளின் உடம்பில் இருக்கும் குட்டிப்பூச்சிகள் உடம்பில் ஏறினால் அது இம்சையை ஏற்படுத்திவிடும். எனவே செல்லக்குட்டிகளை பகல்பொழுதுகளில் கொஞ்சுங்கள்.

சீரியஸா பேசாதீங்க

உறங்கும் நேரத்தில் தம்பதியரிடையே சீரியசான பேச்சுக்கள், சண்டைகள் வேண்டாம். எதுவாக இருந்தாலும் படுக்கை அறைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சீரியசான பேச்சும் சண்டையும் தூக்கத்திற்கு வேட்டு வைத்துவிடும்.