Wednesday, March 18, 2015

அரிதிலும் அரிதான கொலை வழக்கு

காமக்கொடூரன் செந்தில் மீது கருணை காட்ட வழியே இல்லை என நீதிபதி தீர்ப்புகோவை நகரிலுள்ள சத்தியமன்கலம் ரோடு, ராமகிருஷ்ணாபுரம், ரங்கநாதன் வீதியைச் சேர்ந்தவர் மருதமாணிக்கம்(வயது-30) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய இவரது மனைவி வத்சலா தேவி (வயது-27) இந்த தம்பதிக்கு முகிலன்(வயது- 6) என்ற மகனும், பிரனீத் என்ற 11 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

மருதமாணிக்கத்தின் வீட்டில், ஒர்க் ஷாப் தொழிலாளி செந்தில்(வயது-32) தனது மனைவி லீலாவதியுடன், வாடகைக்கு குடியிருந்தார். இவர், சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்தவர். கனவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, லீலாவதி, கணவனை பிரிந்து சென்றார்.

அதே வீட்டில் தனியாக வசித்த செந்திலின் பார்வை, வீட்டு உரிமையாளரான வத்சலாதேவி மீது விழுந்தது. தவறான எண்ணத்துடன் அவர் வச்சலாதேவியிடம் பழகியுள்ளார். இதை அறிந்த வச்சலாதேவி உடனடியாக செந்தில் வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளார்.

அவர் கொடுத்திருந்த முன்பணம், 8,000 ரூபாயில், வீடு காலி செய்யும் போது 5,300 ரூபாயை திருப்பிக் கொடுத்தனர். மீதி பணத்தை வாங்குவதற்காக,2014, ஜூன் 1-ல் காலை, வத்சலா தேவி வீட்டிற்கு செந்தில் சென்றார். அப்போது, வத்சலாதேவியின் தாயார் கோவிந்தம்மாள், வேறு ஆட்கள் வாடகைக்கு வந்தபின், அட்வான்ஸ் பணத்தில் மீதியை வாங்கி தருவதாக கூறி செந்திலை திருப்பி அனுப்பிவிட்டார்.

அன்று மாலை 5.30 மணிக்கு, வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட செந்தில் வச்சலாதேவியின் வீட்டுக்கு வந்துள்ளார். தனியாக இருந்த வத்சலா தேவியிடம், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

வத்சலாதேவி கூச்சலிட்டதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த செந்தில், வத்சலாதேவியின் வாயைப் பொத்தி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தான். இதை பார்த்த ஆறு வயது மகன் முகிலன் அழவே, அவனையும் குத்தி கொன்றான். அப்போதும், ஆத்திரம் தீராதவனாய், தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, 11 மாத குழந்தை பிரனீத்தையும் குத்தி கொன்றான். வத்சலாதேவி கழுத்தில் கிடந்த, நான்கு பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

இதுகுறித்து விசாரணை மர்கொண்ட சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார், செந்திலை கைது செய்து, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அத்துமீறி நுழைதல், மூன்று பேரை கொலை செய்தல், கொள்ளையடித்தல் பிரிவுகளின் கீழ், குற்றச்சாட்டு பதிவானது; குற்றத்தை மெய்பிக்க 15-முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும், 24 சான்று ஆவணங்கள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பரபரப்பான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், செந்தில் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி, அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.
மேலும், வத்சலாதேவியை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், கருணையே இல்லாமல் முகிலனை கொலை செய்த குற்றத்துக்கு மரண தண்டனையும், எதுவுமரியாமல் தொட்டிலில் தூன்ன்கிக்கொண்டு இருந்த பிஞ்சு குழந்தையை பிரனீத்தை கொலை செய்த குற்றத்துக்கு மரண தண்டனையும் விதித்தார்.

மேலும், கொள்ளையடித்த குற்றத்துக்கு, ஏழு ஆண்டுசிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இத்தண்டனைகளை அவர் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு தரப்புக்கு உதவியாக, சிறப்பு வக்கீல்கள் ஞானபாரதி, பாண்டியராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

நீதிபதி சுப்பிரமணியன் அளித்த தீர்ப்பு முழு விவரம்: வத்சலாதேவியை அடைய வேண்டும் என்ற, காமவெறியுடன், இந்த குற்றவாளி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் உடன்படாததால், 'வெளியே சொல்லி விடுவாரோ' என்ற அச்சத்தில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஆறு வயது சிறுவன் முகிலனையும், தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, 11 மாத கைக்குழந்தையையும் கொடூரமாக குத்தி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததை நேரில் பார்த்த சாட்சிகள், தங்களது சாட்சியத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். 'வத்சலாதேவியின் மஞ்சள் தாலிக்கயிற்றில் படிந்திருந்த ரத்தமும், குற்றவாளி விரலில் இருந்த காயத்தின் ரத்தமும் ஒன்று தான் என, மருத்துவ மற்றும் கைரேகை நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாவமும் அறியாத இரு குழந்தைகளை கொன்ற இவ்வழக்கு, அரிதிலும் அரிதானது. மூன்று பேரின் உடலில், 54 இடங்களில், கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 'உலகம் என்னவென்று அறிந்திராத, ஒரு பாவமும் அறியாத, தங்களை பாதுகாத்து கொள்ள முடியாத சூல்நிலையில் இருந்த இரு குழந்தைகள் மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ, எதேச்சையாகவோ நடந்த கொலை அல்ல. சம்பவத்தை வெளியே சொல்லி விடுவார்கள் என்ற எண்ணத்தில், தன்னை பாதுகாத்து கொள்ள நடத்தப்பட்ட கொலை.

இந்தியாவில், கடந்த 2001 முதல் 2011 வரை, 1455 வழக்கில், மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக, தேசிய குற்ற ஆவண பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2014-வரை, 4201 மரண தண்டனைகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளன. அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட கோர்ட்டுகளில் அரிதான வழக்குகளில் மரண தண்டனை கொடுத்தாலும், நீதிமன்ற முடிவுக்கு பிறகு, நிர்வாகம் கருணை காட்டினால், மரண தண்டனை, ஆயுளாக குறைக்கப்படுகிறது.

எந்தெந்த சூழ்நிலையில், ஒரு வழக்கை, அரிதிலும் அரிதான வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டிகளை எடுத்துக்காட்டியுள்ளது. அதன்படி, இவ்வழக்கில், குற்றவாளி மீது கருணை காட்ட வழியே இல்லை. அரிதிலும் அரிதான இவ்வழக்கில் குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி சுப்பிரமணியன், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment