Wednesday, November 25, 2015

பாண்டிச்சேரி அரிய தகவல்!


இந்த பக்கத்துல சென்னை மழையில காலி அந்த பக்கம் கடலூர் காலி ஆனா பாண்டிச்சேரி பத்தி தகவலோ அதிக சேதாரமோ இல்லையே ?

இந்த பாண்டியை எத்தனை பேர் நன்கு பார்த்திருப்பீர்கள் என தெரியாது – ஆனால் பாண்டியின் வடிவமைப்பு 1674ல் இருந்து 1962 வரை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசின் கட்டுமான பணி ஆச்சர்யமான ஒன்று. என்னாது 1962 ஆம் ஆண்டா? இந்தியாதான் 1947ல் சுதந்திரம் அடைந்ததே அப்புறம் எப்படி 1962னு கேட்பவர்களுக்கு முதலில் பதில் கூறிவிடுகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தான் நாம் விடுதலை பெற்றோமே தவிர பாண்டி பிரஞ்சு அரசாங்கத்தின் கண்ட்ரோலில் தான் இருந்தது 1962 வரை. 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் இந்த நாட்டை இந்தியாவுக்கு விட்டு கொடுத்த போது அங்கிருந்த அனைவரிடமும் கேட்கபட்ட ஒரே கேள்வி – பிரெஞ்சு நாட்டினராய் பிரெஞ்சு பாஸ்போர்ட்டுடன் இருக்க வேண்டுமா அல்லது இந்திய பாஸ்போர்ட் வேண்டுமா என்று அதனால் தான் இன்று வரை பல பாண்டி நண்பர்கள் பிரெஞ்சு குடியுரிமையில் இருக்கின்றனர்.

1954ல் நாட்டை விட்டு கொடுத்தாலும் இந்தியாவின் கான்ஸ்டிடியூஷனுக்கு வந்தது என்னமோ 1962 ஆம் ஆண்டு தான். அவர்களின் குடியரசு தினம் 16 ஆகஸ்ட் – சுதந்திர‌ தினம் நவம்பர் 1 என்பதாகும். இதுக்கிடையில் பல கோணங்களில் யோசித்து அருமையாக வடிவமைக்கபட்ட பாண்டியில் பல தெருக்கள் ஏன் பீச் முனை கூட நேர் வகிடு எடுத்து வாரினால் போல் ஒரே நேர் கோட்டில் தான் இருக்கும். முதல் வீட்டில் இருந்து பார்த்தால் கடைசி வீடு கரெக்டாய் கோடு கிழித்த மாதிரி இருக்கும் அனேக தெருக்கள்.

ஒரு வீடு கூட ஆக்கிரமிப்பில் கொஞ்சம் முன்னாடி ரோட்டை ஆக்ரமிச்சி அல்லது கொல்லை புறத்தை ஆக்ரமிச்சி கட்டினது இல்லை. அவர்களின் ட்ட்ரெயினேஜ் என்னும் கழிவு நீர் வெளியேற்றம் இன்னும் பர்ஃபெக்ட்டாய் கடலில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு உள்ளது. ஆக்ரமிப்பு அலட்சியம் என்ற ஒன்றே புது பாண்டி குடியிருப்புகளில் மற்றும் தமிழக நகரங்களில் வெள்ளத்தை உண்டு பண்ணிய உண்மை காரணம். இப்ப தெரியுதா யார் தப்புனு?

Tuesday, November 24, 2015

மைக்ரோசாப்ட் (“The History of Microsoft”)

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் வெளியிட்டு வரும் விண்டோஸ் இயங்குதள மென்பொருளுக்கு அண்மையிதான் 30 வயதானது. Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே! இப்போது Channel 9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம் .மைக்ரோசாப்ட் நிறுவனம் இது வரையில் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும், தாண்டி வந்த தடைகளைப் பற்றியும் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Bill Gates மற்றும் Paul Allen ஆகிய இருவரும் சேர்ந்து எப்படியெல்லாம் வெற்றிநடை போட்டனர் என்பதை இந்தப் படம் விவரிக்கும்.இது வரை வேறு எங்கும் காண இயலாத மைக்ரோசாப்ட் பற்றிய பல புகைப் படங்களைக் காணவிருக்கிறீர்கள்.1975ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுகளாக விவரிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 75 சதவீத கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்குதளம் இயங்கி வருகிறது. முதன்முறையாக 1983-ம் ஆண்டு உலகின் மிகப்பிரபலமான ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் அறிமுகமானது. அப்போது வெளியிடப்பட்ட அந்த மென்பொருளுக்கு விண்டோஸ் 1.0 என பெயரிடப்பட்டது.

பிறகு, மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் அந்த விண்டோஸ் ஓ.எஸ்-க்கு இண்டர்பேஸ் மேனேஜரை இணைத்தார். அதற்கு பிறகு, பெயிண்ட், கால்குலேட்டர், கார்டுபைல், நோட்பேட், வேர்டுபேர்டு உள்ளிட்ட அப்ளிகேஷன்களுடன் மேம்படுத்தப்பட்டது. 64 பிட் கலர் இண்டர் பேஸூடன் 1 எம்.பிக்கும் குறைவான சைஸில், 256 கிலோ பைட்ஸ் குறைந்தபட்ச இருப்பு தேவையுடன் டபுள் சைடு பிளாப்பி டிஸ்க் டிரைவ் மற்றும் கிராபிக்ஸ் அடாப்டர் கார்டுடன் வெளிவந்தது.

பிறகு, விண்டோஸ் வாஷர் மற்றும் துணியுடன் முதல்முறையாக பிரஸ் கிட்டுடன் விண்டோஸ் 1.0 வெளிவர ஆரம்பித்தது. 1988-களில் உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ரோசாப்ட் உருவெடுத்தது. அதன்பிறகு, அமோக விற்பனையை அடுத்து முதல்முறையாக 32 பிட் வெர்ஷனில் பிஸினஸ் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு விண்டோஸ் என்.டி., 3.1 ஆகியவை வெளியானது. பிறகு, ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், மினிமைஸ், மேக்ஸிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்களுடன் வெளிவர துவங்கியது.

தனது 14 வருட வரலாற்றில் முதல்முறையாக 1996-ல் பிளைட் சிமுலேட்டர் வசதியுடன் முதல்முறையாக விண்டோஸ் 95 வெளியானது. பிறகு, 1998-ல் முதல்முறையாக வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வகையில் எம்.எஸ். டாஸூடன் விண்டோஸ் வெளியானது.

பிறகு, 2001-ல் மைக்ரோசாப்ட்டின் வெற்றிகரமான இயங்குதளமாக விண்டோஸ் எக்ஸ்.பி. வெளிவந்தது. அதிக மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷன் மற்றும் மெமரியுடன் எக்ஸ்.பி. வெளிவந்தது. அதற்கடுத்ததாக, 3 முக்கிய விண்டோஸ் இயங்குதள பதிப்புகள் வெளியிடப்படாமலேயே இருந்தது. விண்டோஸ் நேஷ்வைல், விண்டோஸ் கெய்ரோ, விண்டோஸ் நெப்டியூன் ஆகியவை வெளிவரவே இல்லை.

பிறகு, விண்டோஸ் விஸ்டா வெளிவந்தது. அதிலிருந்து சற்று இண்டர்பேஸ் மற்றும் கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் வெளிவந்தது விண்டோஸ் 7. உலகம் முழுவதும் 8 மில்லியன் கம்ப்யூட்டர்களை இந்த மென்பொருள் கவர்ந்திழுத்தது. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதில் ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த மென்பொருளே. 2009-ல் இதன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

பிறகு, விண்டோஸ் 8, 8.1, 10 என அதன் தொடர் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்றளவும் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது விண்டோஸ் இயங்குதளம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 6, 2015

தத்துவ கண்ணதாசன்

துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் .......

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை !

பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது

கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.

சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது? ---

கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது.மழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்கக் கூடாது: அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.

எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.

உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.

ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான் , ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?

அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

சந்தோசம் - உலக அறிஞர்கள் கருத்துக்கள்

சந்தோசம் குறித்து உலக அறிஞர்கள் சொன்ன உன்னதக் கருத்துக்கள்…

01. ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித்து தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால் தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.

02. எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.


03. சந்தோசமாக இருப்பவனை கூர்ந்து அவதானியுங்கள் அவன் ஒரு நாளின் 24 மணி நேரமும் எதையோ செய்து கொண்டிருப்பான். தொலைந்துவிட்ட சட்டைப் பட்டனை தேடுவதுபோல சந்தோசத்தை எங்கோ தேடிக்கொண்டிருக்கமாட்டான்.

04. சந்தோசத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைகிறான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட நீடித்திருக்கும் இன்பங்கள் மனதில் இருந்து எழுபவையே.

05. யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயற்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.

06. தன் சக மனிதர்களுக்கான சேவையில் தன் அகந்தையை அர்ப்பணிக்காதவரை யாருமே வாழ்வின் அர்த்தத்தைக் கற்பதில்லை.

07. நல்ல வாழ்விற்கு செயற்பூர்வமான மனித நேயம் என்ற நற்குணம் தேவை. இதுதான் வாழ்விற்கான தங்கமயமான வழி. இதுதான் திருப்திகரமான வாழ்வு, மனிதராய் பிறந்தவர் சந்தோஷமாய் இருக்க இதுதான் வழி.

08. அடுத்தவர்களுக்காக நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.

09. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ இல்லை தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

10. சந்தோஷம் என்பது நறுமணம் தரும் திரவியம் போன்றது. உங்கள் மீது அதனுடைய சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது.

11. சந்தோத்தை வாங்க முடியாது, உண்மையில் பணத்திற்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை.

12. வாழும்சூழல், ஊதிய உயர்வு, பொருளாதாரம், அரசாங்கத்தை மாற்றுவது போன்றவற்றிலேயே மனிதர்கள் கவனமாக இருக்கிறார்கள். தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வதில் அவர்கள் கவனமெடுப்பதில்லை.

13. சந்தோஷம் உள்ளிருந்து வருகிறது. எளிய நல்ல குணம் தெளிவான சிந்தனையால் வருகிறது. மதம் அதற்கு தேவையில்லை, ஆனால் எங்கிருந்தாலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத ஒருவரிடம் அது வந்ததாக சரித்திரம் இல்லை.

14. சுயநலம் சந்தோஷத்தின் எதிரி, அடுத்தவரை சந்தோஷமாக்குவதே தன்னைத்தானே சந்தோஷப்படுத்தும் வழியாகும்.

15. சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.

16. ஒரு மனிதனிடம் என்னென்ன சொத்து இருக்கிறது என்பது சந்தோஷமல்ல அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷமாகும்.

17. பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.

18. ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்துள்ளார்.

19. சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

20. இல்லாத ஒன்றாக தாங்கள் ஆக முயற்சித்து தங்களால் முடியாத ஒன்றை செய்ய முயற்சிப்பவர்கள்தான் அதிருப்தியோடு இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்பதை அறிந்து செய்வதுதான் முக்கியம். வாழ்வின் முழுமைக்கு நம்மை நாமே அர்ப்பணித்து, வாழ்வு நம்மூடே செல்ல அனுமதிக்க வேண்டும்.

21. வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே, தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமுமாகும்.

22. வாழ்க்கையை எதிர் காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும் பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.

23. வாழ்வு வாழ்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளின் மணி நேரத்தின் சதையில் இருக்கிறது என்பதை காலம் கடந்தே அறிகிறோம்.

24. வாழ்வதை ஒத்திப் போடுவதுதான் நமக்குள்ள கெட்ட பழக்கம். தொடுவானத்திற்கு அப்பால் உள்ள மந்திர மாய ரோஜாத் தோட்டத்தைப்பற்றி நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். இன்று நம் ஜன்னலுக்கு வெளியே இருக்கும் ரோஜாக்களை அறிவதில்லை.

25. பணத்தையும் வெற்றியையும் பேராசையுடன் தேடுவதால் துன்பமே மிஞ்சும். காரணம் இப்படிப்பட்ட வாழ்வு தங்களுக்கு வெளியே உள்ள பேராசைக்காரரோடு சம்பத்தப்படுவதால் இறுதியில் துன்பமான முடிவோடு நிற்கிறது.

26. பணத்தைச் சேர்ப்பது, அதிகாரத்தைச் சேர்ப்பது இவைகளால் வாழ்வுக்கு பயனில்லை. வாழ்வு இவை எல்லாவற்றையும் விட மேலானது.

27. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன். வெறுமையான மனமே சந்தோஷத்தை அற்ப சுகங்களில் தேடுகிறது.

28. சந்தோஷத்தின் அடிப்படை நேர்மையின் அடிப்படையைப் போன்றதுதான். அது பொருட்களை சார்ந்ததல்ல அது ஒருவருடைய ஆளுமையைச் சார்ந்தது.

29. உங்களை சந்தோஷப்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பதைவிட காலம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது.

30. வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ, நாம் இறந்த பின்போ வருவதில்லை.

எறும்பு - கற்க வேண்டிய பாடங்கள்!

மனிதர்களைப் போலவே எறும்புகளும் தங்களுடைய வாழ்வை முறையாக அமைத்துக் கொள்கின்றன என்பதை உணர வேண்டும். எறும்பைப் பற்றிய சிறு வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

உலகிலேயே நீதான் மிகப் பெரிய உளவாளி – சர்க்கரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வருகின்றாய்!

உலகிலேயே நீதான் மிகப் பெரிய புத்திசாலி – அடுத்த பருவத்திற்கு உரிய உணவை முன்னதாகவே சேமிக்கின்றாய்!

உலகிலேயே நீதான் மிகப் பெரிய பலசாலி – உன்னை விட ஐம்பது மடங்கு எடையைச் சுமக்கிறாய்

உலகிலேயே நீதான் மிகப் பெரிய துரதிஷ்டசாலி – கடித்த உடன் உனக்கு சாவு உறுதி!

எறும்புகளிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன. அதனுடைய வேலைப் பங்கீடு, நிர்வாகத் திறமை, கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை, பலம் என்று எவ்வளவோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எறும்பில் ராஜா, ராணி, பணியாளர், வீரர் என்று பல்வேறு வகைகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு வகை எறும்பும், ஒவ்வொரு காலகட்டம் வாழ்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மனிதர்ககள் சில விஷயங்களில் தடைகளைக் கண்டு பின்வாங்குவார்கள். அதற்கு மாற்று வழி தேடாமல் தடுமாறுவார்கள். இலகுவான விஷயங்களுக்குக் கூட மனம் தளர்ந்து விடுவார்கள்.

ஆனால், எறும்புகள் மனம் தளறுவதில்லை. எதையும் முடிக்கும் ஆற்றல் கொண்டவை. இதற்கு உதாரணமாக சிறுகதை ஒன்றைப் பார்க்கலாம்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு நம்பிக்கை சம்பந்தமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது மாணவர்களுக்கு சிறு கதை ஒன்றை சொன்னார். ஒரு எறும்புக் கூட்டம் உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்தது. அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

இப்பொழுது எறும்புகள் என்ன செய்திருக்கும் என்று மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். ஆனால், யாருமே சரியான பதிலைச் சொல்லவில்லை.

ஆசிரியரே பதிலைச் சொன்னார். எறும்புகள் தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருளையே பள்ளத்திற்கு நடுவில் வைத்து, அதையே பாதையாக மாற்றி விட்டன என்றார். மாணவர்கள் வியப்புற்றனர்.

இதுதான் எறும்பின் குணம். எதையும் சாதுர்யமாக நிறைவேற்றும் திறமை, பின்வாங்காத மனஉறுதி என்று அதனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. எறும்பிடம் உள்ள நிர்வாகத் திறமை நம்மை வியப்பிலாழ்த்தும். அது வலுவான கட்டமைப்புடன் இயங்கக்கூடியது.

எறும்புகளின் நிர்வாகத் திறமையிலிருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் பயில வேண்டும். இந்தத் திறமையை நமக்கேற்றவாறு அமைத்துக் கொண்டால், நிறைய சாதிக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.

- See more at: http://www.thoothuonline.com/archives/50052#sthash.TcS0MUUg.dpuf

Monday, October 19, 2015

தென்னிந்திய நடிகர் சங்க வரலாறு தெரியுமா?

நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் நடித்து வந்தவர் சோமசுந்தரம்.  இவர் நடிகர்களுக்காக ஒரு சங்கம் அமைத்து நாடக நடிகர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.சக்தி நாடக சபாவில் நடித்து வந்த கே.ஆர். ராமசாமி, எஸ்.வி. சுப்பையா, நம்பியார், சிவாஜிகணேசன் உட்பட பலர் அந்த அமைப்பில் உறுப்பினர் ஆனார் கள். மயிலாப்பூர் ஜம்மி பில்டிங் எதிரில் ஒரு அறையில் சக்தி நாடக சபா குழுவினர் ஒத்திகைப் பார்ப்பார்கள். அங்குள்ள ஒரு சிறு அறையில் நடிகர் சங்க அலுவலகம் செயல்படத் துவங்கியது.

பிற்காலத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இடம் பெற்ற இந்த நடிகர் சங்கம் முதலில் ஒரு சாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்டது என்பது முக்கியமான விஷயம்.ஆரம்பத்தின் அதன் நிதி இருப்பு பூஜ்ஜியம்தான். உறுப்பினர் கார்டு அச்சிட இருபது ரூபாய் கூட இல்லாமலிருந்ததாம்.சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோக் கள் சேலம். கோவை. போன்ற இடங்களில்தான் இருந்தன. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கோவை பட்சிராஜா ஸ்டுடியோ, என சில ஸ்டுடியோக்கள் பிரபலமாக விளங்கின. அங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அங்கேயே போய்த் தங்கி நடிப்பார்கள் நடிகர்கள்.

ஸ்டுடியோக்கள் சென்னை வந்த பிறகுதான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிக்கும் நடிகர், நடிகைகள் சென்னையில் தங்கினார்கள். திரைப்படக் கலைஞர் களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் எடுத்த முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது.

கே.சுப்ரமணியம் அவர்களைத் தொடர்ந்து, டி.வி.சுந்தரம், சித்தூர் வி.நாகைய்யா, என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., அஞ்சலிதேவி, ஆர்.நாகேந்திரராவ், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.வி. சாமிநாதன், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் என புகழ் பெற்ற பல கலைஞர்கள் தலைவர்களாக இருந்து வழி நடத்திய இந்த சங்கத்திற்கு இப்போது தலைவராக தேர்வாகி இருக்கிறார் நாசர். இதுவரை பதினான்கு தலைவர்களை சந்தித்துள்ள நடிகர் சங்கத்திற்கு பதினைந்தாவது தலைவராக நாசர் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே இப்போது திரைப்படத்தையும், அது சார்ந்த சங்கத்தையும் கிழி கிழி என்ரு கிழிக்கும் போக்கு நிலவுகிறது.ஆனால் தமிழ் சினிமாவை அதன் ஆரம்ப வருடங்களில் எந்தன் பத்திரிகை களும் கண்டு கொள்ளவே இல்லை. 1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ். கே. வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான இதழ். (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935 இல் தான் முதல் தமிழ் திரைப்பட இதழ் சினிமா உலகம் பி. எஸ். செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் “சில்வர் ஸ்கிரீன்” என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : பாலன் ஜர்னலிஸ்ட்.

Tuesday, September 22, 2015

பில்லி, சூனியம்:

தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் மாந்திரீகம், பில்லி, சூனியம், ஆவிகளின் உலகம், ஏவல், செய்வினை போன்ற விடயங்களும் மக்களால் அதிகம் நம்பப்படுகிறது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று கூற முடியாமல் இருந்தாலும், அது போன்ற வேலைகள் தனி உலகமாகவே பார்க்க முடிகிறது. இந்த வேலைகளை மந்திரவாதி என்பவன் கச்சிதமாக முடித்து கொடுகிறான்.

அதாவது ஆன்மிகவாதி என்பவன் தனக்கு கிடைக்கும் சக்திகளை நல்ல வழிக்கு மட்டும் செலவழிக்கிறான்.

ஆனால் ஆங்கிலத்தில் ‘அக்கல் சயின்டிஸ்டு’ என்று கூறப்படும் மந்திரவாதியோ நன்மை மற்றும் தீய வழிகளுக்கு தனது சக்திகளை செலவழிப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் இத்தகைய வேலைகளை மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற வேலைகளால் மேற்கொள்கின்றனர்.

ஒருவரை உடல் ரீதியிலும், மனரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தான் நினைத்த காரியங்களை செய்ய வைப்பதையே ‘பில்லி’ என்கிறார்கள்.

அதே போல் ‘சூனியம்’ என்பதும் ஒருவரை அனைத்து வகையிலும் கட்டுப்படுத்தும் செயலாக இருக்கிறது.

இதன் மூலம் ஒருவரை பொருளாதார ரீதியில் ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். மேலும், கை, கால்களை முடக்குவது, சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவரது உடலுக்குள் மருந்தை செலுத்துதல், கருவில் இருக்கும் குழந்தையை அழித்தல், நோய் உண்டாக்குதல் போன்றவை இடம்பெறுகிறது.

ஏவல்’ என்பது தனது கட்டளையை குறிப்பிட்ட நபரை கேட்க வைத்து அவர் மூலம் நினைக்கும் காரியங்களை சாதிப்பதாகும்.

மேலும், சொந்தமாக செயல்படும் ஒருவரை மாந்திரீகம் மூலம் திசை திருப்பி நினைக்கும் விடயங்களை செய்ய வைப்பதை ‘செய்வினை’ என்பர்.

அதே போல ‘வைப்பு’ என்பது மாந்திரீக வழியில் அல்லது மருத்துவ வழியில் ஒரு மருந்தை பிடிக்காதவர்களுக்கு கொடுத்து அவர்களை மன மற்றும் உடல் ரீதியில் முடக்குவதாகும்.

இதற்கு எல்லாம் ஜாதகம், வியர்வை, உடை, முடி, புகைப்படம் இவற்றில் ஏதாவது வேண்டும் என்று கூறுவர்.

இத்தகைய வேலைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பலர் கூறியிருப்பதையும் நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.

மேலும், மற்றவர்களை வேவு பார்ப்பதற்காக ஆவிகளை ஏவி விடுவார்கள் என்று கூறுவதையும் நாம் கேட்டிருப்போம்.

ஆவிகளின் உலகம் ஒன்று உள்ளதா என்றால், மனோதத்துவ மருத்துவர்கள், அது எல்லாம் ஒருவித மனரீதியான உணர்வே என்று மறுத்துள்ளனர்.

படுக்கைக்குப் போகும் முன் !

உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் ஓய்வு. உறங்கும் நேரத்தில் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் இரவில் உறக்கம் வராமல் தவிக்க வேண்டியிருக்கும். எனவே படுக்கைக்கு போகும் முன் என்னென்ன செய்யக்கூடாது என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

உடற்பயிற்சி வேண்டாமே

படுக்கைக்குப் போகும் முன் உடற்பயிற்சி செய்ய வேண்டாமே. ஏனெனில் உடல் சூடாகி வியர்வை சுரக்க ஆரம்பித்துவிடும் இதுவே தூக்கத்தை கெடுத்துவிடும்.

டிவி நெட் நிறுத்துங்க

உறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக டிவி, நெட் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் படுக்கைக்கு போகும் வரை டிவி, இன்டர்நெட் பார்ப்பது ஹார்மோன் பிரச்சினையை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

சுடுநீரில் குளிக்காதீங்க!

உறங்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல சுடுநீரில் ஷவரில், பாத்டப்பில் குளிப்பது கூடாதாம். இதனால் வியர்வை அதிகம் பெருகி டென்சனை ஏற்படுத்திவிடும். அப்புறம் உறக்கத்தை தொலைத்துவிட்டு விடிய விடிய விழித்திருக்க வேண்டியதுதான்.

காபி, ஆல்கஹால் வேண்டாமே

அதிக அளவில் காபின் நிறைந்த காபி, மதுபானங்கள் குடிப்பது ஆபத்து என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் அடிக்கடி பாத்ரூம் போக எழுந்திருக்க வேண்டும். இதனால் உறக்கம் கெடும் என்கின்றனர்.

வேலைக்கு நோ

எந்த வேலையாக இருந்தாலும் இரவில் அதிகநேரம் விழித்திருந்து பார்க்க வேண்டாம். ஏனெனில் மூளையை ஓய்வெடுக்க விடாமல் செய்வதால் அப்புறம் உறக்கம் நிரந்தரமாக தடை பட்டுவிடும். எந்த வேலை என்றாலும் இரவில் நன்றாக தூங்கி பகலில் சீக்கிரம் பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

திகில் கதைகள் படிக்க வேண்டாம்


படுக்கையில் அமர்ந்து கொண்டு பேய், பூதம், கொலை போன்ற திகில் கதைகளை படிக்கவேண்டாம். அப்புறம் பாதியில் விட்டு விட்டால் திடீர் என்று முழிப்பு வந்து கதையை படிக்கத் தொடங்கிவிடுவீர்கள். அப்புறம் தூக்கம் கோவிந்தாதான்.

செல்லப்பிராணிகளை கொஞ்சவேண்டாம்

படுக்கை அறையில் படுக்கப் போகும் முன் செல்லப்பிராணிகளை கொஞ்சுவதை தவிர்க்கவும். ஏனெனில் செல்லப்பிராணிகளின் உடம்பில் இருக்கும் குட்டிப்பூச்சிகள் உடம்பில் ஏறினால் அது இம்சையை ஏற்படுத்திவிடும். எனவே செல்லக்குட்டிகளை பகல்பொழுதுகளில் கொஞ்சுங்கள்.

சீரியஸா பேசாதீங்க

உறங்கும் நேரத்தில் தம்பதியரிடையே சீரியசான பேச்சுக்கள், சண்டைகள் வேண்டாம். எதுவாக இருந்தாலும் படுக்கை அறைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சீரியசான பேச்சும் சண்டையும் தூக்கத்திற்கு வேட்டு வைத்துவிடும்.

Tuesday, July 14, 2015

ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி வாட்ஸ்‬ அப்பில் வந்தது....!


“உடல் நலக்குறைவு என்று இப்போது ஜெயலலிதா ஆடி வரும் இந்த நாடகம், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் சதித் திட்டமேயன்றி வேறு இல்லை. கடந்த வருடம் செப்டம்பர் 27ல் தண்டிக்கப்பட்டபோது இருந்த அனுதாப அலை, இப்போது இல்லை என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார். ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் போன்ற விவாதங்கள் அனைத்தும், உடல் நிலை சரியில்லை என்றால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும் என்பது ஜெயலலிதா நன்றாக அறிந்ததே. 1984ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் சென்று, மருத்துவமனையில் இருந்தபடியே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு முறை அதே போன்ற வெற்றியை ஈட்டலாம் என்ற திட்டமே தற்போது நடந்து வருவது.

மிக மிக கவனமாக திட்டமிட்டே இந்த நாடகத்தை ஜெயலலிதா நடத்தி வருகிறார். மே 11 தீர்ப்பு வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், இந்த மேடை நாடகத்தின் காட்சிகளே. பதவியேற்பு விழாவை சுருக்கமாக முடித்தது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் காணொலி காட்சிகளுக்கு பத்திரிக்கையாளர்களை அழைக்காமல் விட்டது, சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்தாமல் இருப்பது, பார்வையாளர்கள் யாரையும் சந்திக்காமல் இருப்பது, இப்தார் விருந்தை ரத்து செய்தது உள்ளிட்ட அனைத்தும், ஓரங்க நாடகங்களே. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதை வெளிப்படையாக கூறும் நபர் அல்ல ஜெயலலிதா.

இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லத் தவறிய ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை நாம் கவனமாக பார்க்க வேண்டும். “அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் வழக்கம் போல் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனினும், திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், எனது உரையை இந்த விழாவில் படிக்குமாறு நான் பணித்துள்ளேன்.”

“விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன” என்பது போன்ற நாடகத்தனமாக வசனங்களையெல்லாம் பேசும் நபர் அல்ல ஜெயலலிதா. மேலும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால், அதற்காக மெனக்கெட்டு செய்தி அனுப்பும் வழக்கமும் ஜெயலலிதாவிடம் கிடையாது. முதன் முறையாக “திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால்” என்ற வாசகத்தை நாம் கவனமாக பார்க்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில், கவனமாக தலைமுடிக்கு கருப்புச் சாயம் பூசி, உதட்டுச் சாயத்தோடு பங்கேற்கும் ஜெயலலிதா, தன்னுடைய உடல் நலன் குறித்து இப்படியெல்லாம் வெளிப்படையாக கூறும் நபர் அல்ல. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய வாசந்தி என்ற எழுத்தாளருக்கு எதிராக தடையுத்தரவு பெற்று, அந்த புத்தகத்தையே வெளிவராமல் செய்த நபர்தான் இந்த ஜெயலலிதா. தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு கூட, பார்வையாளர்கள் யாரும் இல்லாமலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெயலலிதாவா தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவார் ?

ஜெயலலிதா சிறுநீரகம் அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை என்ற பெயரில் ஒரு மாதம் ஓய்வெடுத்து விட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகையில், இந்த உடல்நிலையை காரணம் காட்டி, தண்டனை குறைவு அல்லது, விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா ?

தன்னுடைய நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஜெயலலிதா தன் உடல்நிலை குறித்த தகவல்கள் மிக மிக கவனமாக பரப்பப்படுகிறார். போயஸ் தோட்டத்துக்கு உள்ளே சென்று வரக்கூடியவர்களில் பலர், தங்களுக்குத் தெரிந்த பத்திரிக்கையாளர்களை அழைத்து, இந்த செய்திகளை தெரிவிக்கின்றனர். மாநில உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், இந்த பொய்யை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

கடந்த ஏழாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், பேசிய கலைஞரும் ஜெயலலிதாவின் நாடகத்துக்கு பலியாகி வெளிப்படையாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசினார். அதன் பிறகு, இன்று வெளிப்படையாக விவாதங்கள் தொடங்கி உள்ளன. இந்த வியாதியா, அந்த வியாதியா என்று பரபரப்பாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா நினைத்தால் ஒரே ஒரு அறிக்கை மூலமோ, பத்திரிக்கை செய்தி மூலமோ இந்த விவாதங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் இந்த விவாதங்களை மிக மிக ஆனந்தமாக ஜெயலலிதா ரசித்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் அவரது உடல்நிலைக்கு என்ன என்று பேசிக்கொண்டிருக்கையில், மீண்டும் முதல்வராக நினைக்கும் தனது மாஸ்டர் ப்ளானை நினைத்து அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் இந்த நாடகம், 1984 எம்ஜிஆர் வென்றதைப் போன்று, தேர்தலிலும், வழக்கிலும் வெற்றிக் கனியை ஈட்டித்தருமா அல்லது, திரை மூடப்பட்டு, நாடகம் கடும் தோல்வியை அடையுமா என்பதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும்.

Tuesday, April 21, 2015

தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி!


ரிமோட்டில் சானல்களை திருப்பிக் கொண்டே சென்றபோது ஜீ டிவியில் ஒளிபரப் பாகிற ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி’ -ய கொஞ்ச நேரம் பாத்து தொலைக்க வேண்டிய தாப்போச்சு. பொதுவா இந்நிகழ்ச்சியை எங்கள் வீட்டில் பார்க்க தடை உண்டு. என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று சிறிது நேரம் பார்த்தால் ஒரு இளம் பெண்ணை நிகழ்ச்சி தொகுப்பாளினி ‘உண்மையைச்சொல் உண்மையைச் சொல்’ -ன்னு கட்டாயப்படுத் திக் கொண்டு இருந்தார். அந்தப் பெண் மிகுந்த சங்கடத்தில் நெளிவதைப் பார்க்க முடிந்தது.

விஷயம் இது தான். அந்த இளம் வயதுப் பெண் திருமணத்திற்கு முன்னாலேயே கர்ப்பமடைந் தது எப்படி என்பது பற்றி அந்தப் பெண்ணிடம் ஸ்கேனிங் ரிப்போர்ட்டுகளை காண்பித்து ‘உண்மையச் சொல்லு’, ‘உண்மையச்சொல்லு’ ன்னு கேட்டு ‘உண்மையச் சொன்னாத்தான் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்’- னு சொல்லி கடைசியில அந்தப் பொண்ணு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி கிட்ட ‘உங்க கிட்ட தனியாப் பேசனும்’ னு சொல்ல ஸ்டுடியோவினை விட்டு உள்ளே அழைத்துப் போய் ‘இப்ப சொல்லும்மா’ ன்னு சொல்லி அந்தப் பொண்ணு சொன்னத முகத்தை மட்டும் காட்டாம ஆடியோவை மக்கள் கேக்கிற மாதிரி ஒளிபரப்பி அந்த பொண்ணோட மொத்த மானத்தையும் வாங்கிட்டாங்க.

தன்னுடைய விஷயம் அந்த தொகுப் பாளினிக்கு மட்டுமேதெரியும் என்ற நம்பிக் கையோடு அந்த பெண் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் இவர்கள் அதனை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.. உண்மை வெளிச் சத்திற்கு வந்த பிறகு தாலி கட்டிய கணவன் இனி எனக்கும் அவளுக்குமான உறவு இல்லை என்று சொல்லிவிட்டு டைவர்ஸ் வேண்டும் என்று கணவன் கேட்க அந்த பெண்ணிடம் தொகுப்பாளினி சம்மதம் கேட்க அதற்கு சம்மதம் தெரிவிக்க அவர் கிளம்பிவிட்டார்.

அந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான பின்னர் தான் தான், தான் இரகசியமாக சொல்லியது இலட்சோப இலட்சம் பேருக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றது என்று அந்தப் பெண் அறிந்திருப்பாள்.. ஏதோ ஒரு சில சூழ்நிலை யில் தவறு செய்துவிட்ட அந்தப் பெண் இனி எங்கு சென்றாலும் அடையாளம் காணப்படு வாள். தான் திருமணத்திற்கு முன்னாள் கற்பிழந்தவள் என்று எல்லோருக்கும் தெரிய வரும். வெளியில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. இவ்வளவு ஏன் அவமானம் தாங்க முடியாமல் வேறு விதமான விபரீத முடிவு களைக்கூட எடுக்க நேரிடும். அப்படி ஒரு விபரீத முடிவினை அந்தப் பெண்ணும் குடும்பமும் எடுத்தால் அதற்கு ஜீடிவி எந்த வகையில் பொறுப்பேற்கும்?

இந்த கேவலமான செயலைத்தான் ஒரு தொலைக்காட்சி நாகரீகமாக கருதுகின்றதா? இந்த நிகழ்ச்சிக்குTRP ரேட்டிங் எங்கோ போய் நிற்கின்றதாம்.. ஏன் இருக்காது? அடுத்தவங்க ளோட வீக்னசை இப்படி அம்பலப்படுத்தி அதுல வர்ற வருமானத்துல குளிர்காயறத விட நாலு தெரு போய் பிச்சை எடுத்து பிழைக் கலாம்.. இப்படியான நிகழ்ச்சிகளுக்கு சென்றால் தனக்கு உதவி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து போனவர்கள்தான் ஏராளம். பிரச்சனைகளை தீர்த்து வைக்க காவல் நிலையம் இருக்கு, நீதிமன்றங்கள் இருக்கு..இவர்களுக்கு யார் இப்படி எல்லாம் கட்டப் பஞ்சாயத்து செய்ய உரிமை கொடுத்தது?

சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூட இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க மாட்டார். மிரட்ட மாட்டார். ‘எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு. நீயா சொல்றியா இல்லே எங்க கிட்ட இருக்கிற ஆதாரங்களை காண்பிக்கவா’? என்று மிரட்டல் விடுத்தே உண்மைகளை வரவழைக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்களை நம்பி மாட்டிக்கொள்வது அப்பாவி ஏழைகளே!

பெண்ணியவாதிகள் இங்கே வந்து சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பொங்கு பொங்குன்னு பொங்கறாங்களே! இப்படி ஒரு தனியார் தொலைக்காட்சி பெண்களோட அந்தரங்க விஷயங்களை பகிரங்கமா நாள்தோறும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அசிங்கப்படுத்திகிட்டு இருக்கே!! இதை எல்லாம் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்த மாட்டாங்களா? சமூக ஆர்வலர்கள் தன்னார்வ அமைப்புகள் வழக்கறிஞர்கள் என்று யாருமே இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி போராட்டமோ அல்லது இதனை எதிர்த்து வழக்குகளையோ இதுவரை போடவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.

இது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி

அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து போராடினால் இந் நிகழ்ச்சியை தடை செய்ய முடியும்….

‘பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவது’ என்ற கோணத்தில் தான் சென்று கொண்டிருக்கின்றது நமது சமூகம்..

Friday, April 3, 2015

ஒரிஜினல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்


மெட்ராஸ் டூ சென்னை!

நீங்கள் மெட்ராஸ்காரரா, சென்னைக்காரரா என யாராவது கேட்டால் அவர்களை ஏற இறங்கத்தான் பார்க்கத் தோன்றும். ஆனால் மெட்ராஸ், சென்னை ஆகியவை இரண்டு தனித்தனிப் பகுதிகள் என்பதுதான் உண்மை.இந்த இரண்டின் பெயருக்குப் பின்னாலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.இதே மெட்ராசை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள்.


1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் ‘சுருக்’ வரலாறு.

அப்போது பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். காதலிக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை இந்நகருக்கு சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1909இல் மெட்ராஸ் வரைபடம்

எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்ததாகவும், அதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆக, மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

இவை தவிர வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லில் இருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து.

ஆரம்ப நாட்களில் ஜார்ஜ் கோட்டைக்குள்தான் காளிகாம்பாள் கோயில் இருந்தது. பின்னர்தான் தம்பு செட்டித் தெருவிற்கு அம்மன் இடம் மாறினாள். ஏற்கனவே, கோட்டைப் பகுதிக்குள் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அவளுக்கு உண்டு. இந்த காளிகாம்பாளுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், ‘சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை ‘செம் அன்னை’ என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாகவும் கூறப்படுகிறது.

சென்னைப் பகுதியில் சென்னக் கேசவப் பெருமாள் கோயில் எனும் பெயரில் ஒரு கோயில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தின் முதன்முகப்பில் இருந்ததால், இக்கோயில் இருந்த நகரத்திற்கு சென்னை என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். சென்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா, சின்னக் கேசவப் பெருமாள் என்பது சரியா எனத் தெரியவில்லை. ‘சின்ன’ என்ற சொல் ‘சென்ன’ என்று மாறிப் போனதாகவும் செய்திகள் உள்ளன.

இப்படி தனது பெயருக்கு பின்னால் ஏராளமான மர்மங்களை ஒளித்து வைத்தபடி, ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம், இனி அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்கப்படும் என 1996ஆல் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது.

* மசூலிப்பட்டணத்து ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு சூரத்திற்கு எழுதிய கடிதத்தில் ‘மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட் தோமுக்கு அருகில் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

* அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில் ‘மெட்ராஸ்’ என்று ஒரு ஊர் இருக்கிறது. நமது மெட்ராசில் இருந்து அங்கு சென்ற துணிகளில் அச்சடிக்கப்பட்டிருந்த சொல்லில் இருந்துதான், 1903இல் அந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது

Saturday, March 28, 2015

யோகா x சிவகுமார்

16 வயதில் சென்னை வந்தபோது இளம் தொப்பை இருந்தது. அதைக் கரைக்க, கன்னிமாரா நூலகத்தில் ரூ.3/- கட்டி உறுப்பினராகி, யோகா பற்றி பெங்களூர் சுந்தரம் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்த்துப் பயிற்சி செய்தேன்.

6 மாதங்களில் 38 ஆசனங்கள் கற்றுக்கொண்ட கொண்டேன். ஆசனவாய் வழியாக காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் ‘பஸ்தி’ கைவரப்பெற்றேன்.காபி,டீ, புகை,மது, ‘டீன் ஏஜ்’ காதல் அப்போதே தவிர்த்தது, மனதை ஒருமுகப்படுத்தி யோகா செய்ய வசதியாக இருந்தது.

1988- ஜனவரி 1-ந்தேதி முதல் அசைவம் நிறுத்தி விட்டேன். முட்டை மட்டும் சாப்பிடுகிறேன்.

இளம் வயதில் அழகான உடல் கட்டு பெற ‘ஜிம்’ பயிற்சி நல்லதுதான். ஆனால் 90 வயதிலும் யோகா பயிற்சி செய்யமுடியும்.

65 வயதுக்கு மேல் சிரசாசனம் தவிர்க்கச் சொல்கிறார் டாக்டர்.

தற்போது 12 முக்கிய ஆசனங்கள் மட்டும் செய்கிறேன். மன அமைதி, உடல் சுறு சுறுப்புக்கு யோகா என்றும் உதவும்.

இப்பொழுது எனக்கு 70 வயது. கொஞ்சம் தொப்பை இருக்கிறது. ரெட்டை நாடி உடம்புக்காரர்களுக்கு சில சமயம் இது தவிர்க்க முடியாது.

50 வயது தாண்டியும் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி அண்டாமல் பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய விஷயம்.”

Wednesday, March 18, 2015

அரிதிலும் அரிதான கொலை வழக்கு

காமக்கொடூரன் செந்தில் மீது கருணை காட்ட வழியே இல்லை என நீதிபதி தீர்ப்புகோவை நகரிலுள்ள சத்தியமன்கலம் ரோடு, ராமகிருஷ்ணாபுரம், ரங்கநாதன் வீதியைச் சேர்ந்தவர் மருதமாணிக்கம்(வயது-30) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய இவரது மனைவி வத்சலா தேவி (வயது-27) இந்த தம்பதிக்கு முகிலன்(வயது- 6) என்ற மகனும், பிரனீத் என்ற 11 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

மருதமாணிக்கத்தின் வீட்டில், ஒர்க் ஷாப் தொழிலாளி செந்தில்(வயது-32) தனது மனைவி லீலாவதியுடன், வாடகைக்கு குடியிருந்தார். இவர், சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்தவர். கனவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, லீலாவதி, கணவனை பிரிந்து சென்றார்.

அதே வீட்டில் தனியாக வசித்த செந்திலின் பார்வை, வீட்டு உரிமையாளரான வத்சலாதேவி மீது விழுந்தது. தவறான எண்ணத்துடன் அவர் வச்சலாதேவியிடம் பழகியுள்ளார். இதை அறிந்த வச்சலாதேவி உடனடியாக செந்தில் வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளார்.

அவர் கொடுத்திருந்த முன்பணம், 8,000 ரூபாயில், வீடு காலி செய்யும் போது 5,300 ரூபாயை திருப்பிக் கொடுத்தனர். மீதி பணத்தை வாங்குவதற்காக,2014, ஜூன் 1-ல் காலை, வத்சலா தேவி வீட்டிற்கு செந்தில் சென்றார். அப்போது, வத்சலாதேவியின் தாயார் கோவிந்தம்மாள், வேறு ஆட்கள் வாடகைக்கு வந்தபின், அட்வான்ஸ் பணத்தில் மீதியை வாங்கி தருவதாக கூறி செந்திலை திருப்பி அனுப்பிவிட்டார்.

அன்று மாலை 5.30 மணிக்கு, வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட செந்தில் வச்சலாதேவியின் வீட்டுக்கு வந்துள்ளார். தனியாக இருந்த வத்சலா தேவியிடம், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

வத்சலாதேவி கூச்சலிட்டதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த செந்தில், வத்சலாதேவியின் வாயைப் பொத்தி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தான். இதை பார்த்த ஆறு வயது மகன் முகிலன் அழவே, அவனையும் குத்தி கொன்றான். அப்போதும், ஆத்திரம் தீராதவனாய், தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, 11 மாத குழந்தை பிரனீத்தையும் குத்தி கொன்றான். வத்சலாதேவி கழுத்தில் கிடந்த, நான்கு பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

இதுகுறித்து விசாரணை மர்கொண்ட சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார், செந்திலை கைது செய்து, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அத்துமீறி நுழைதல், மூன்று பேரை கொலை செய்தல், கொள்ளையடித்தல் பிரிவுகளின் கீழ், குற்றச்சாட்டு பதிவானது; குற்றத்தை மெய்பிக்க 15-முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும், 24 சான்று ஆவணங்கள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பரபரப்பான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், செந்தில் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி, அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.
மேலும், வத்சலாதேவியை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், கருணையே இல்லாமல் முகிலனை கொலை செய்த குற்றத்துக்கு மரண தண்டனையும், எதுவுமரியாமல் தொட்டிலில் தூன்ன்கிக்கொண்டு இருந்த பிஞ்சு குழந்தையை பிரனீத்தை கொலை செய்த குற்றத்துக்கு மரண தண்டனையும் விதித்தார்.

மேலும், கொள்ளையடித்த குற்றத்துக்கு, ஏழு ஆண்டுசிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இத்தண்டனைகளை அவர் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு தரப்புக்கு உதவியாக, சிறப்பு வக்கீல்கள் ஞானபாரதி, பாண்டியராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

நீதிபதி சுப்பிரமணியன் அளித்த தீர்ப்பு முழு விவரம்: வத்சலாதேவியை அடைய வேண்டும் என்ற, காமவெறியுடன், இந்த குற்றவாளி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் உடன்படாததால், 'வெளியே சொல்லி விடுவாரோ' என்ற அச்சத்தில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஆறு வயது சிறுவன் முகிலனையும், தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, 11 மாத கைக்குழந்தையையும் கொடூரமாக குத்தி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததை நேரில் பார்த்த சாட்சிகள், தங்களது சாட்சியத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். 'வத்சலாதேவியின் மஞ்சள் தாலிக்கயிற்றில் படிந்திருந்த ரத்தமும், குற்றவாளி விரலில் இருந்த காயத்தின் ரத்தமும் ஒன்று தான் என, மருத்துவ மற்றும் கைரேகை நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாவமும் அறியாத இரு குழந்தைகளை கொன்ற இவ்வழக்கு, அரிதிலும் அரிதானது. மூன்று பேரின் உடலில், 54 இடங்களில், கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 'உலகம் என்னவென்று அறிந்திராத, ஒரு பாவமும் அறியாத, தங்களை பாதுகாத்து கொள்ள முடியாத சூல்நிலையில் இருந்த இரு குழந்தைகள் மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ, எதேச்சையாகவோ நடந்த கொலை அல்ல. சம்பவத்தை வெளியே சொல்லி விடுவார்கள் என்ற எண்ணத்தில், தன்னை பாதுகாத்து கொள்ள நடத்தப்பட்ட கொலை.

இந்தியாவில், கடந்த 2001 முதல் 2011 வரை, 1455 வழக்கில், மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக, தேசிய குற்ற ஆவண பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2014-வரை, 4201 மரண தண்டனைகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளன. அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட கோர்ட்டுகளில் அரிதான வழக்குகளில் மரண தண்டனை கொடுத்தாலும், நீதிமன்ற முடிவுக்கு பிறகு, நிர்வாகம் கருணை காட்டினால், மரண தண்டனை, ஆயுளாக குறைக்கப்படுகிறது.

எந்தெந்த சூழ்நிலையில், ஒரு வழக்கை, அரிதிலும் அரிதான வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டிகளை எடுத்துக்காட்டியுள்ளது. அதன்படி, இவ்வழக்கில், குற்றவாளி மீது கருணை காட்ட வழியே இல்லை. அரிதிலும் அரிதான இவ்வழக்கில் குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி சுப்பிரமணியன், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, February 18, 2015

வாட்ஸப்பையும் நம்பாதீங்க!

ஃபேஸ்புக் பாதுகாப்பு இல்லைனு பல பேர் வாட்ஸப்பிடம் தஞ்சம் அடைந்தாலும் இது எம்புட்டு டேஞ்ர்னு சமீபத்திய சாஃப்ட்வேர் மூலம் நான் நானே கண்டு கொண்டேன் இதன் பெயர் ‘WhatsSpy Public’ – இதன் மூலம் நீங்கள் எந்த ஒரு வாட்ஸப் உபயோகிப்பாளரின் உண்மையான உபயோகத்தை நீங்கள் அவர்களுக்கு தெரியாமல் அறிய முடியும். எத்தனை மணிக்கு வந்தாங்க / எத்தனை தடவை புரஃபைல் பிக்சர் மாத்தினாங்க / எத்தனை மணி நேரம் தினமும் இதுலா இருக்காங்க / எத்தனை நிமிஷம் ஒவ்வொரு லாகினிலும்னு புட்டு புட்டு வச்சிடுமாம் அத்தனை தகவல்களும்.

இதை நான் உபயோகப்படுத்தி பார்த்த வகையில் அனைத்தும் உண்மை தான். இது வாட்ஸப்பின் மென்பொருள் குறைப்பாடு இதை கண்டறிந்து வாட்ஸப் தடுத்தாலும் பப்ளில் டொமைனில் எப்படி செக்யூரிட்டு செட்டிங்க்ள் செஞ்சாலும் இதை ஒன்னும் பண்ண முடியாதாம்………..

இதுனாலே பிரைவசி விரும்புருவங்க பார்த்து இருந்துக்குங்க அவ்வளவு தான் சொல்லிபுட்டேன். லாஸ்ட் ஸீன் எடுத்திட்டேன்னு பீத்திகாதிங்க என் ஸ்க்ரீன் ஷாட்ல இருக்கு பாருங்க என்ன மாத்தினாலும் கண்டுபிடிப்பது எளிது.