Sunday, July 20, 2014

மும்மதத்தினர் முக்கிய கவனத்திற்கு…!

நமது பாரத தேசத்தின் தொன்மையான மதம் இந்து மதம். இன்றைய பாரதத்தில் பெரும்பான்மையினர் மதமும் இந்து மதமே. இதற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பின்பற்றும் மதங்களாக கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்கள் உள்ளன. தவிர இன்னும் பல மதத்தினர் நம் தேசத்தில் ஆனந்தமாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரிப்பதற்கு முன் இருந்த இந்திய ஆன்மிக நிலை வேறு. அவர் அவதரித்த பின் உள்ள இந்திய ஆன்மிக நிலை வேறு. பாரதத்தில் முன்னர் இருந்த மதக் காழ்ப்புகள், வெறுப்புகள் அனைத்தையும் தம் ஆழ்ந்த மெய்ஞ்ஞானத்தால் முற்றிலுமாய்த் துடைக்க முனைந்தார் பரமஹம்சர். ராமகிருஷ்ணர் காலத்தில் ஆன்மிக அன்பர்களுக்கு எது உண்மையான ஆன்மிகம் என்பது பரமஹம்சரால் விளக்கப்பட்டு விட்டது. “எல்லா மதங்களும் கடவுள் என்கிற கடலில் சென்று சேரும் நதிகள் போன்றவையே. எல்லா மத நெறிகளும் அதனதன் அளவில் முக்கியமானவையே. சம அந்தஸ்து உள்ளவையே. எல்லா மத நெறிகளாலும் இறைவனை அடையலாம்’ என்பது ராமகிருஷ்ணரின் சித்தாந்தம். இந்தப் பேருண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப் புரிந்துகொள்ளும் போது ஒரு மதத்தை விட இன்னொன்று உயர்வானதோ தாழ்வானதோ இல்லை என்பது உறுதிப்படும். அப்போது தேவையற்ற மதச் சச்சரவுகள் மறைந்துவிடும். இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து ஏற்பது மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும். இத்தகைய சிந்தனையை பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வது நல்லது. இளம் வயதிலேயே மத நல்லிணக்கத்தைச் சிறார் மனத்தில் விதைக்க வேண்டியது அவசியம்.

இந்து, கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் சம அந்தஸ்து உடையவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நடைமுறையில் இந்த மூன்று மதங்களை அனுசரிப்பவர்கள் இடையே ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே ஒரு பலமும் உண்டு. ஒரு பலவீனமும் உண்டு. இந்து மதத்தின் பலம் என்பது எதையும் பரந்த கண்ணோட்டத்தில் ஏற்கும் அதன் விசாலத் தன்மை.

கடவுளை உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று நிலைகளிலும், விரும்புகிறவர் விரும்புகிறபடி ஆராதிக்க வழி தருவது இந்து மதம். இப்படிப்பட்ட பெரிய பலம் அதற்கிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய பலவீனமும் அந்த மதத்தில் இருக்கிறது. அந்த பலவீனம், இன்றும் அதை அனுசரிக்கும் சிலரிடையே தென்படும் தீண்டாமை உணர்வு. மகாத்மா பிறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னாலும் இந்துக்கள் சிலரின் உள்ளத்தில் வேரோடியிருக்கும் தீண்டாமை உணர்வைப் பற்றி என்ன சொல்ல?

தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எடுத்து எறிந்தாலன்றி இந்து மதம் தழைக்காது. எனவே தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை இந்துக்கள் இன்னும் கூடுதலாக வலிமைப்படுத்த வேண்டும்.÷ கிறிஸ்துவ மதத்தின் பலம் என்பது சமூகம் சார்ந்த அதன் சிந்தனை. பல கல்வி நிறுவனங்களையும் பல மருத்துவமனைகளையும் நடத்தி அவற்றின் மூலம் உயர்ந்த சமூகப் பணியாற்றுவது கிறிஸ்துவ மதத்தின் வலிமை.
என்றாலும் இன்றைய காலகட்டத்தில், கிறிஸ்துவ மதத்தினரில் பலரிடையே ஒரு பெரிய பலவீனமும் இருக்கிறது. அந்த பலவீனம், கிறிஸ்துவர்களில் சிலர் மத மாற்ற உணர்வோடு இயங்குகிறார்கள் என்ற யதார்த்த நிலை தான். கிறிஸ்துவர்களின் உயர்ந்த சேவைகள் பலவற்றிற்கும் பின்னால் மத மாற்ற உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் பரவலாகத் தோன்றத் தொடங்கிவிட்டது. இதனால் கிறிஸ்துவ நிறுவனங்கள் செய்துவரும் அபாரமான சமூக சேவை கொச்சைப்படுத்தப் படும் நிலை உருவாகியுள்ளது.
கிறிஸ்துவர்கள் மத மாற்றத்திற்கு எதிரானவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றுவதே நல்லது என்றும் மதமாற்றம் தங்கள் நோக்கம் அல்லவே அல்ல என்றும் கிறிஸ்துவர்கள் அறிவிக்க வேண்டும். எல்லா மதங்களும் சம அந்தஸ்து உடையவை என்னும்போது, ஒரு மதத்தில் பிறந்த ஒருவன் இன்னொரு மதத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ளத் தேவை என்ன?

இஸ்லாம் மதத்தைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்கள் தங்கள் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் காட்டும் சிரத்தையே அதன் பெரிய பலம். ரயிலில் பயணம் செய்யும்போது கூட அவர்கள் தொழுகை செய்வதை மறப்பதில்லை. இஸ்லாம் மதத்தினர் தங்கள் மத நெறிகளை எவ்வளவு நம்பிக்கையோடு பின்பற்றுகிறார்களோ அந்த அளவு மற்ற மதத்தினர் தங்கள் மத நெறிகளை கவனமாகப் பின்பற்றுவதில்லை என்று கூடச் சொல்லலாம். . (காஞ்சி மடத்தின் அருகேயுள்ள மசூதியில் ஒலிக்கும் பாங்கு ஒலியை நிறுத்தவேண்டாம், நான் ஜபதபம் செய்யும் காலங்களை அது எனக்கு உணர்த்துகிறது என்று
பரமாச்சாரியார் கூறினார்.) என்றாலும் இஸ்லாம் மதத்திலும் இன்றைய கண்ணோட்டத்தில் ஒரு பெரிய பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனம், இன்று அதை அனுசரிப்பவர்கள் சிலரிடையே தென்படும் தீவரவாதப் போக்கும் வன்முறைக் கலாசாரமும்.

தீவிரவாதிகளில் பலர் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. அன்பும் கருணையும் கொண்ட இஸ்லாமியர்களால் தமிழ் இலக்கியம் தொடங்கி எத்தனையோ துறைகள் செழித்துள்ளன. எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் தாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்றும் அகிம்சையே தங்கள் நெறி என்றும் கம்பீரமாக அறிவிக்க வேண்டும். அகிம்சையின் பெருமையைத் தொடர்ந்து அவர்கள் அறைகூவ வேண்டும்.

இந்துக்கள் சிலரிடையே தென்படும் தீண்டாமை, கிறிஸ்துவர்கள் சிலரிடையே தென்படும் மதமாற்றப் போக்கு, இஸ்லாமியர்கள் சிலரிடையே தென்படும் தீவிரவாதம் – இந்த மூன்றில் முதலில் அழிக்கப்பட வேண்டியது எது? தீண்டாமை என்கிற கொடுமை முழுமையாக அழிக்கப்பட்டு விட்டால், கணிசமான அளவு மத மாற்றமும் கூடக் குறைந்துவிடும்.

ஒரே கல்லில் மூன்று மாங்காயை வீழ்த்துவது கடினம். ஆனால் முயற்சி செய்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தி விடலாம். தீண்டாமையை எதிர்த்துக் கல்லெறிந்தால் மதமாற்றப் போக்கும் தானே உதிர்ந்துவிடும் அல்லது குறையத் தொடங்கும். மூன்று மதத்தினரும் தங்களின் பலங்களைப் பற்றிப் பெருமைப்படுவதோடு கூட, பலவீனங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது.

சிந்திப்போம். செயல்படுவோம்.

திருப்பூர் கிருஷ்ணன் ,ஆசிரியர் – “அமுதசுரபி’ மாத இதழ்.

ஒரு சம்பவம் வரலாறாகிய வெள்ளிவிழா ஆண்டு!

சென்னையில் 11 மாடி கட்ட்டம் இடிந்து விழுந்து 60 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அடுத்த நாள் ஒரு குடோன் சுவர் சரிந்து 11 பேர் இறந்துள்ளனர். இரண்டும் கவலைக்குரிய சம்பவங்கள். ஆகவே சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகின்றன. சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்கின்றன.சபாநாயகர் அனுமதி தரவில்லை. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சபையில் விவாதிக்க விதிகளில் இடமில்லை என்கிறார். கோஷம் போட்டுக் கொண்டு தேமுதிகவும் திமுகவும் வெளியேறுகின்றன. ஓடுகாலிகள் வெளியே போய்விட்டார்கள் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவிக்கிறார்.

மறுநாள் சபைக்கு வந்த தேமுதிக + திமுக உறுப்பினர்கள், ’அமைச்சர் சொன்ன ஓடுகாலி என்ற வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என கோருகின்றனர். ’அந்த வார்த்தை அப்படியொன்றும் சபையில் பேசக்கூடாத வார்த்தை அல்ல’ என்கிறார் சபாநாயகர். திமுகவினர் கேட்பதாக இல்லை. கோஷம் போடுகின்றனர். சபாநாயகர் ஆணைப்படி அவர்களை காவலர்கள் வெளியேற்றுகின்றனர். தேமுதிகவினர் பின் தொடர்ந்து செல்கிறார்கள்.

வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது துரைமுருகன் கண் கலங்குகிறார்:

‘வெளிநடப்பு செய்வது ஜனநாயக மரபு. அதை பின்பற்றிய எங்களை ஓடுகாலி என்கிறார் அமைச்சர். இது அமைச்சருக்கு அழகல்ல. இந்த சபையின் மரபுக்கு உகந்தது அல்ல. உறுப்பினர்களுக்கு மாண்பு மரியாதை இருக்கிறது. அதை பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. ஆனால், அதை சுட்டிக் காட்டியதற்காக எங்களை வெளியேற்றி விட்டார்’.

துரைமுருகன் நீண்டகால உறுப்பினர். அனுபவம் மிகுந்த முன்னாள் அமைச்சர். அவர் கூறுவது உண்மை. ஓடுகாலி என்ற சொல்லை அமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் முறையிட்டதும் சபாநாயகரும் அதை குறிப்பில் இருந்து நீக்கி இருக்கலாம். இதனால் ஆளும் கட்சிக்கு தோல்வி என்றோ திமுகவுக்கு வெற்றி என்றோ எவரும் கருதப் போவதில்லை.

ஆனால் துரைமுருகன் இந்த சபையின் மரபு பற்றியும் உறுப்பினர்களின் மாண்பு பற்றியும் ஆதங்கத்துடன் பேசும்போது வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் இதே சபையில் நடந்த சம்பவம். வரலாறு காணாத அமளி ஏற்பட்டு கலைந்த தலைமுடி, கிழிந்த முந்தானை, வழியும் கண்ணீருடன் ஒரு பெண்மணி சபைக்கு வெளியே ஓடிவருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம்.

முதலமைச்சர் கருணாநிதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். பதவியில் நீடிப்பதற்கான தார்மிக உரிமையை இழந்துவிட்ட கருணாநிதிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் அருகதை கிடையாது என்று எதிர்க்குரல் எழுப்புகிறார் ஜெயலலிதா. சபையின் எதிர்க்கட்சி தலைவர் அவர். அவருக்கு பின்னால் 26 எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். ஆளும் திமுக வரிசையில் 150 பேர் அமர்ந்திருக்கிறார்கள். பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கருணாநிதியை தடுத்து நிறுத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முயல்கிறார்கள். கைநீட்டும் தூரத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் மூழ்கும்போது, இரு தரப்பிலும் கோஷங்களின் தரம் குறைய தொடங்குகிறது. உறுப்பினர்கள் மேஜையை தாண்டி குதித்து முன்வரிசைக்கு பாய்கின்றனர். கருணாநிதியின் கண்ணாடி விழுந்து உடைகிறது. ஜெயலலிதா இருக்கையில் தள்ளப்படுகிறார். அவரை நோக்கி பாய்ந்தவர்களில் ஒருவர் புடவையை பிடித்து இழுக்கிறார். மோசமான சூழ்நிலையில் சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, பாப்பா சுந்தரம் ஆகியோர் ஜெயலலிதாவை பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டு வெளியே அழைத்து செல்கின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் வருகிறது. கருணாநிதியை துரியோதனாகவும், துரைமுருகனை துச்சாதனாகவும் சித்தரித்து திரவுபதி பாணியில் மக்களிடம் ஜெயலலிதா நீதி கேட்கிறார். திமுகவோ ஜெயல்லிதாவை ஒரு பொருட்டாகவே கருத வேண்டாம் என்ற முடிவுடன் அவர் பெயரைக்கூட உச்சரிக்காமல் பிரசாரம் செய்கிறது. அதிமுக அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக சட்டசபைக்குள் நுழைகிறார் ஜெயலலிதா.

ஒரு சம்பவம் வரலாறாக மாறுகிறது. இது அந்த திருப்புமுனையின் வெள்ளிவிழா ஆண்டு.


இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அந்த தேர்தலின்போது ராமச்சந்திரனும் திருநாவுக்கரசும் அதிமுகவிலேயே இல்லை. கடும் சோதனையில் உடன் நின்றவர்களை குறுகிய காலத்தில் ஜெயலலிதா ஒதுக்கி வைக்க என்ன காரணம் என்பது சொல்லப்படவில்லை. ஆனால், கட்சியில் ஜெயலலிதாவின் பெயரால் ஆதிக்கம் செலுத்த அவர்கள் திட்டமிட்ட்தாக அன்று பேச்சு உலா வந்தது. அவர்களுக்கு அவகாசம் அளிக்காமல் வெளியேற்றியதன் மூலம், கட்சியில் அணிகள் உருவாகாமல் பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

எதிர்ப்பாளர்கள், அதிகார ஆசை கொண்டவர்களை முளையிலேயே கிள்ளி எறிவது என்ற கொள்கையை இன்றுவரை விடாப்பிடியாக பின்பற்றுகிறார் அவர். கட்சியில் எந்த நிர்வாகியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றுகிறார். எவ்வளவு முக்கிய பொறுப்பு வகிப்பவராக இருந்தாலும் அடிப்படை உறுப்பினர் தகுதியைக்கூட ஒரே அடியில் பறிக்கிறார். அவ்வளவு ஏன்? மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றபோது அவருடன் அமைச்சர்களான 33 பேரில் இதுவரை 27 பேர் பதவியை பறி கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அதிரடியாக அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

பதவி பறிப்புகள் நடக்கும்போது எந்த சலசலப்பும் ஏற்படுவதில்லை என்பது இன்னும் அதிசயம். ’அம்மா கொடுத்தார்; அவரே எடுத்துக் கொண்டார்; இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?’ என்று பதவி இழந்தவர்கள் சோகத்தை மறைக்க முயன்று புன்னகையுடன் பேட்டி கொடுப்பதை வேறு எந்த கட்சியிலாவது எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கருணாநிதி முதல்வராக இருந்தபோது இருள் படிந்த பின்னர் கடற்கரை காந்தி சிலைக்கு பின்னால் மணலில் அமர்ந்து நம்பிக்கைக்குரிய அமைச்சர்களோடு அரட்டையடிக்கும் வேளையில் பலமுறை இது பற்றி சிலாகித்து இருக்கிறாராம். ’கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்ட ஓர் ஒன்றிய செயலாளர் மீது கைவைக்கவே நான் பலமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்தம்மா கண்ணை மூடிக் கொண்டு பந்தாடுவதை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது’ என்பாராம்.

காரணம் இல்லாமல் ஜெயலலிதா யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது முக்கிய காரணம். வெளிப்படையாக சொல்வது இல்லையே தவிர, சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் தெரியும். தலைமைக்கு நெருக்கமானவர், நம்பர் 2 நம்பர் 3 என்று சொல்லத்தக்க தூரத்தில் எவரையும் அனுமதிப்பதில்லை என்பதால் பாரபட்சம் காட்டுவதாக கட்சிக்காரர்கள் குற்றம் சாட்ட முடியாது. பதவி பறிக்கப்பட்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசியாக நடந்து கடுமையாக உழைத்தால் மீண்டும் பொறுப்புகள் தேடிவரும் என்ற நம்பிக்கையையும் தொண்டர்கள் மனதில் ஜெயலலிதா விதைத்துள்ளார். நீக்கப்பட்ட அமைச்சர்கள் சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதவி ஏற்பதை பார்க்கிறோம். அரசு அதிகாரிகள் நிலைமையும் அதுதான்.

முதல் ஆட்சியில் பல தவறுகள் நடந்தன. ரத்த சொந்தங்களுடன் தொடர்பை தவிர்த்த முதல்வர், இடையில் வந்த தோழமையின் ஆதிக்கத்துக்கு எப்படி இடம் கொடுத்தார் என்ற ஆச்சரியம் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டது. தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி மக்களின் நல்லெண்ணத்தையும் இழந்ததால் அடுத்த தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது. மோசமான நெருக்கடிகளை முதல் முறையாக எதிர்கொள்ள நேர்ந்தது. அதில் பல பாடங்களை அவர் கற்றுக் கொண்டார் என்பது 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் புலப்பட்டது.

கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் ஜெயலலிதா கொண்டிருக்கும் இரும்புப்பிடி அசாதாரணமானது. சுசேதா கிருபளானி, நந்தினி சத்பதி தொடங்கி இன்றைய மம்தா, மாயாவதி, வசுந்தரா ராஜி வரை இந்த நாடு சந்தித்த எந்த பெண் முதல்வரும் கற்பனை செய்யாத – ஆண் முதல்வர்களும் எட்ட முடியாத – ஆதிக்க நிலை அது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் முணுமுணுப்புகூட இல்லை. பழைய தவறுகளின் விளைவாக அவர் சந்திக்கும் வழக்குகளும் அவர் விரும்பும் முடிவை நோக்கி விரைவதாகவே தோன்றுகிறது.

இந்த சூழலில் தமிழக அரசியலை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டிய பொறுப்பை ஜெயலலிதா ஏற்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு தாராளமாக இடம் கொடுங்கள்; எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். நல்ல விஷயங்கள் தென்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லவை என்றால் மறந்து விடுங்கள். வீணான சிந்தனைகள் தாமாகவே விரைவில் காலாவதி ஆகும். எடுத்து போட்டு புரட்டி அடிக்க தேவையே இல்லை. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது அறிவியல் மேதையின் மூன்றாவது விதி. அரசியலும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பது தமிழகத்தின் தலைவிதி அல்ல.

’லெஸ் லக்கேஜ்; மோர் கம்ஃபர்ட்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பெட்டிகளில் சிறு எழுத்துக்களில் ஒரு வாசகம் எழுதப்பட்டு இருக்கும். சுமைகளை குறைத்துக் கொண்டே போனால் எத்தனை நெடிய பயணமும் சுகமாக அமையும் என்று அர்த்தம். ரயில் பயணத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கை பயணத்துக்கும் அது சாலப் பொருந்தும். பழைய நினைவுகள், பழைய எதிரிகள், பழைய கணக்குகள் என்றும் சுமைதான். அழித்துவிட்டு புது சிலேட்டில் எழுத ஆரம்பிக்க வேண்டும். மக்கள் நம் பக்கம் இருக்கும்வரை யாரை பற்றியும் நாம் கவலைப்பட தேவையில்லை என்ற நம்பிக்கை ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கட்டும்.

(இழு தள்ளு 44/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 20.07.2014)

ஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனடி நிவாரணம் …!

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு :

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, July 18, 2014

பாண்டவர்கள் - திரௌபதி பற்றி தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

மகாபாரதம் என்பது இந்து சமய இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். மகாபாரத காப்பியத்தை பற்றி தெரியாத இந்துக்கள் இருக்கவே முடியாது. இந்த காப்பியத்தை எழுதியவர் வேத வியாசர். சாஸ்திரத்தில் இதனை ஐந்தாவது வேதமாக குறிப்பிட்டுள்ளனர்.

மகாபாரததத்தில் எண்ணிலடங்கா சுவாரஸ்யமான தகவல்களும் போதனைகளும் அடங்கியுள்ளது. மகாபாரதத்தில் மறைந்துள்ள தகவல்கள் பல உள்ளது. அவைகளைப் பற்றி உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட சில ரகசியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்:திரௌபதியின் பிறப்பு

குரு துரோணாச்சாரியர் தன் நண்பன் துருபதனை பழி வாங்க நினைத்து, தன் மாணவர்களை வைத்து வீழ்த்தினார். இதனால் அந்நாட்டில் உள்ள ரிஷிகளின் உதவியோடு ஹோமகுண்டத்தை நடத்தினார் துருபதன். அதன் விளைவாக திவ்ய குமாரன் பிறந்தான். அதன் பின் ஹோமம் மூலமாக யாக்யா தேவி பிறந்தாள். அவளுக்கு திரௌபதி என பெயரும் சூட்டப்பட்டது. துரோணாச்சாரியரை கொல்வதற்காகவே திவ்ய குமாரன் பிறந்தான் என்றும், ரிஷிகளுக்கு பயனளிக்கவே திரௌபதி பிறந்தாள் என்றும் அசரிரி உள்ளது.


ஐவரை மணக்க காரணம்

தன் முன் ஜென்மத்தில் திருமண யோகம் இல்லாததால், தவமிருக்க தொடங்கினாள் திரௌபதி. அந்த தவத்தினால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான், அவள் மனம் விரும்பிய வரத்தை அளிக்க, அவள் முன் தோன்றினார். அனைத்து பண்புகள் நிறைந்தவர் தனக்கு கணவனாக வர வேண்டும் என கோரி அந்த வரத்தை ஐந்து முறை கேட்டாராம். அதனால் தான் தன் அடுத்த ஜென்மத்தில் அவர் ஐவரை மணக்க வேண்டி வந்தது.


பாண்டவர்களின் விதிமுறை

குறிப்பிட்ட காலத்தின் படி, ஒவ்வொரு பாண்டவர்களுடன் திரௌபதி வசிப்பார் என பாண்டவர்கள் ஒரு விதிமுறையை போட்டனர். அதில் ஒரு பாண்டவனுடன் இருக்கும் போது, மற்ற பாண்டவர்கள் யாரும் அவர் அருகில் வரக்கூடாது. யாராவது இந்த விதிமுறையை மீறினால், ஒரு பிரம்மச்சாரியாக 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டும்.


விதிமுறையை மீறிய அர்ஜூனன்

யுதிஷ்டரின் அரண்மனையில் பிராமணர் ஒருவரின் பசு களவு போனது. அந்த பிராமணரோ அர்ஜுனனின் உதவியை நாடினார். ஆனால் அர்ஜுனின் ஆயுதங்கள் யுதிஷ்டரின் அரண்மனையில் இருந்தது. அங்கே அவர் திரௌபதியுடன் இருந்தார். அங்கே சென்றால் விதிமுறையை மீறும் செயலாகி விடும். ஆனால் பசுவை காக்காமல் போவது மதத்திற்கு எதிரானது என்ற ஒரு கன எண்ணம் அவரை அங்கே செல்ல வைத்தது. அதனால் தன் 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டி இருந்தது.


யுதிஷ்டரின் மற்றொரு மனைவி

ஒவ்வொரு பாண்டவர்களின் மூலமாக திரௌபதிக்கு ஒரு மகன் உள்ளான். யுதிஷ்டருக்கு தேவிகா என்ற மற்றொரு மனைவியும் உண்டு.


வாழ்க்கை வெறுத்த பாண்டவர்கள்

கிருஷ்ணர் சித்திப்பெற்ற செய்தியை கேள்விப்பட்ட பாண்டவர்கள், இந்த உலகத்தின் மீதுள்ள ஈடுபாட்டை இழந்தனர். அதனால் திரௌபதி மற்றும் நாயுடன் சொர்க்கத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். போகும் வழியில் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வந்தனர். கடைசியில் யுதிஷ்டரும் நாயும் மட்டுமே உயிருடன் இருந்தனர். தன் நேர்மையின் காரணமாக, உயிருடன் இருக்கும் போதே, சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே மனிதராக யுதிஷ்டர் விளங்கினார்.


சொர்க்கத்தில் துரியோதனன்

சொர்க்கத்தில் துரியோதனன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார் யுதிஷ்டர். ஆனால் பின் தான் தெரிய வந்தது, அவர் எப்போதும் பயத்தை காட்டாமல் இருந்ததோடு, சமண்ட்பஞ்சகா என்ற புனிதமான இடத்தில் வீர மரணம் அடைந்த காரணத்தினால் தான் அவருக்கு சொர்க்கத்தில் அனுமதி கிடைத்தது.

Tuesday, July 15, 2014

பேஸ்புக்கில் இருந்து நிரந்திரமாக அக்கவுன்டை அழிக்க இதோ வழி…!

இன்றைக்கு பலரும் சமூகவலைத்தளங்களை மிகவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் எனலாம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை போல ஆக்கப்பூர்வமாக அதை நாம் பயன்படுத்துவதைவிட இன்று அதற்கு அடிமையாகத்தான் இருந்து கொண்டு இங்கு இருக்கிறோம்.

இதோ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுன்டை நிரந்திரமாக மூட ஒரு வழி இருக்கின்றது இதோ. பேஸ்புக்கில் அக்கவுன்டை தற்காலிமாகDeactivate செய்வதற்கும் நிரந்திரமாக அழிப்பதற்கும் இரண்டுஆப்ஷன்ஸ் உள்ளது இதோ அந்த ஆப்ஷன்கள்.

பேஸ்புக் Logout பட்டன் இருக்கும் இடத்தில் உள்ள Settings ஓப்பன் செய்து கொள்ளுங்கள் முதலில் இது Settings பக்கத்தினைத் திறக்கும். இங்கு “Deactivate Account” என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

“Why are you deactivating:” என்ற பிரிவில், உங்க ளுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account” என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
அடுத்து உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக நீக்கிட இதோ இந்த வழியை பின்பற்றுங்கள் இதன் மூலம் அக்கவுன்டை அழித்த பிறகு மீண்டும் பேஸ்புக்கில் லான் இன்(Login) செய்தாலும் உங்களது அக்கவுன்ட் ஓப்பன் ஆகாது.
http://www.facebook.com/help/contact.php? show_form=delete_account என்ற இந்த லிங்கை காப்பி செய்து மேலே அட்ரஸ் பாரில் காப்பி செய்யுங்கள், பின்பு எளிதாக உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக அழியுங்கள் அவ்வளவுதான்.

அடுத்து ட்விட்டர் பற்றி பார்ப்போம் ட்விட்டர் இணைய தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இது Account Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இந்தப் பக்கத்தின் இறுதியில் உள்ள “Deactivate my account” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
அல்லது நேரடியாக http://twitter.com/settings/accounts/confirm_delete என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டினை நீக்கலாம். இங்கு உறுதிப்படுத்துவதற்காக உங்கள் முடிவினைக் கேட்கையில் “Okay, fine, deactivate my account” என்பதில் கிளிக் செய்து கணக்கினை நாம் முடிக்கலாம்.

Friday, July 11, 2014

ஹிட்லரின் மரணத்தில் இருந்த மர்மம்

ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ்வளவு கோபம் வந்துவிடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கின்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான்.

தான் 'உயிருடன் இல்லை' என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியி ருக்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் வாழ்ந்திருக் கிறான். அவன் ஒரு சாதாரண மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன்.

உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள் இந்த வரலாற்று மர்மத்தின் பக்கங்களாக நிரப்பப்பட்டு இருக்கின்றது.

சிலரின் மரணங்களில் மர்மங்கள் இருந்தன. சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லர் ஆகியோர் உண்மையில் இறந்தார்களா என்பதே மர்மங்களாக இருப்பதாக வரலாறு பதிந்து கொண்டது.

அந்த நபர் யாரென்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் நானே சொல்கிறேன். உலக வரலாற்றில் தன் பெயரை அழிக்க முடியாத கறையுடன், ஆழமாக 'அடால்ஃப் ஹிட்லர்' (Adolf Hitler) என்று எழுதியவன்.

1945 இல் உலக வரலாற்றையே தலை கீழாகத் திருப்பிப் போட்டவன் இந்த அடாலஃப் ஹிட்லர் (Adolf Hitler) இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஹிட்லரும், அவனது மனை வியான ஏஃபா பிரெளனும் தற்கொலை செய்து இறந்தது மட்டுமல்லாமல், அவர்கள் உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக் கூடாது என்பதால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட் டார்கள் என்பதுதான் நாம் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் வரலாறு.

ஹிட்லரின் இறப்பு இப்படித்தான் நடந்தது என்று ஒரு வடிவம் நம்மால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஹிட்லர் இறக்கவில்லை, அவன் தன் மனைவியுடன் தப்பிச் சென்று விட்டான் என்னும்செய்தி 66 வரு டங்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த உலகையும் தனி நப ராக ஏமாற்றிவிட்டு, தனக்குள்ளே சிரி த்துக் கொண்டு மனைவி ஏஃபாவுடன் எங்கோ மறைந்திருக்கிறான் ஹிட்லர்.

"என்ன ஹிட்லர் சாகவில்லையா' என வாய் பிளந்தபடி கேள்வி கேட் பதை உங்களால் தவிர்க்கவே முடி யாது. அவன் உயிருடன் இருந்தான் என்பது தாங்க முடியாத ஒரு உணர்வையே நமக்குக் கொடுக்கும். நீங்கள் இதை மறுக்கும் பட்சத்தில், இதை ஏன் நம்ப வேண்டும் என்பதற்குரிய தெளிவான விளக்கத்தை நான் கொடுக்க வேண்டும். எனவே நாம் 30.04.1945 அன்று ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் (Berlin) நகருக்குச் செல்வோமா...

ஹிட்லரின் மரணம் என்னும் சம்ப வத்தை அடிப்படையாக வைத்து இதுதான் நடந்தது என்று உலகமே நம்பும் விடயங்களை முதலில் பார்ப்போம்.

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ஜெர்மனியின் ஆக்ரோசமான சக்தியைத் தனித்தனியாக எதிர்கொள்ள முடியாத நாடுகள், 'நேச நாடுகள்' என்னும் பெயரில் ஒன்று சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கின.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்பன ஒரு பக்கத்தில் அணி சேர்ந்து தாக்க மறுபக்கத்தில் சோவியத் ரஷ்யா தாக்கத் தொடங்கியது. இந்த நான்கு நாடுகளின் ஒன்று சேர்ந்த தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 30.04.1945 இல் ஜெர்மனி தனது தோல்வியைத் தழுவிக் கொண்டது. இறுதிக் கட்டப் போரின் போது ஹிட்லர் பெர்லின் நகரில் அமைந்த அரசுத் தலைவரின் கட்டடத் துக்கு கீழே இருந்த ஒரு நிலக்கீழ் சுரங்கத்திலேயே இருந்தார். எதிரி நாடுகளின் குறிப்பாக ரஷ்யாவின் விமான குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ள அங்கேயே பதுங்கியி ருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுவே அவனின் இறப்புக்கான கடைசி இடமாகவும் மாறியது என்றும் சொல்லப்பட்டது.

ஹிட்லரின் இறுதி நாளில் என்ன செய்தான், எப்படி இறந்தான் என்பதை உலகிற்கே வெளிக்கொண்டு வந்தவர், 95 வயதாகியும் இன்றும் உயிருடன் இருக்கும் ஹிட்லரின் மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த 'ரோஹுஸ் மிஷ்' (Rochus Misch) என்பவர்தான். இந்த ரோஹுஸ் மிஷ் பிறந்தது 29.07.1917 ஆம் ஆண்டு. தனது 28 வது வயதில் அவர் ஹிட் லருடன் கடைசியாக இருந்திருக்கிறார். அவர் ஹிட்லரின் இறுதி நாள் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.....!

"ஏப்ரல் 30" திகதி பங்கரில் உள்ள அனைவரையும் ஹிட்லர் அழைத்து எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம். தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளட்டும். இப்படி அவர் சொன்னதால் அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனா னேன். ஹிட்லரும், ஏஃபாவும் தற் கொலை செய்வது என்னும் முடிவும் அப்போது எடுக்கப்பட்டது. புரொபசர் ஹாஸெ (ளிr. தீலீrnலீr சிassலீ) ஹிட்லரிடம் சொன்னார்.

'முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது நல்லதும்' இதைக் கேட்ட பின்னர் ஹிட்லரும், ஏஃபாவும் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். நெடு நேரம் எந்த அசைவுகளும் இல்லை. அப்புறம் ஹிட்லரின் அறையைத் திறப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

திறந்த போது நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். நான் கண்ட காட்சி, ஹிட்லர் பெரிய சோபாவில் இரத்தக் கறையுடன் இறந்து கிடக்க, அருகில் இருந்த சிறிய சோபாவில் ஏஃபா பிரெளன் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார். பின்னர் சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்".

ஹிட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையக் கொடுத்த ஒரே நபரும், ஹிட்லருடன் இருந்து தப்பி ஒரே நபருமாக இருந்தவர் இந்த ரோஹுஸ் மிஷ்தான். ஹிட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களின் முன்னர்தான் ஹிட்லரின் நண்பரும், இத்தாலியின் தலைவருமான முஸோலினியும் (Dr. Werner Hasse) அவரது மனைவியும் கொல்லப்பட்டு, ஒரு பெட்ரோல் நிலையத்தில் அவர் களது உடல்கள் தலை கீழாகத் தொங்க விடப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருந்ததை ஹிட்லர் அறிந்திருந்தார். அதனால்தான் எதிரிகளிடம் தனதும், ஏஃபாவுடையதும் உடல்கள் அகப்படக் கூடாது என்று ஹிட்லர் முடிவு செய்து, அதனால் எரிக்கப்பட்டது என்றும் ஒரு கதை சொல்லப்பட்டது.

மே 1 ஆம் திகதி ஜெர்மனிய வானொலி, 'ஹிட்லர் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அறிவித்தது. அதற்கு அடுத்த தினம் அதாவது 02.05.1945 இல் ஹிட்லர் இருந்ததாகச் சொன்ன பங்கரை ரஷ்யா கைப்பற்றியது.

அத் தோடு ஹிட்லர் சம்பந்தமாகத் தங்க ளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை என்று அறிக்கையும் கொடு த்தது. ஆனால் சில மணி நேரங்களில் அவர்களுக்கு ஹிட்லரின் முழுமையான உடல் கிடைத்ததாகச் சொல்லி, அந்த உடலுடன் நின்று படங்களை எடுத்து ரஷ்யா வெளியிட்டது.

ஆனால் அடுத்த நாட்களிலேயே அது ஹிட்லரின் உடலல்ல என்றும், ஹிட்லர் தனக்னெ வைத்திருந்த 'டூப்' என்றும் அறிவித்தது ரஷ்யா. அந்த ஹிட்லரின் டூப்பாக இருந்த நபர், எதிரிகளின் இராணுவத்தை, ஹிட்லர் இறந்துவிட்டார் என்று நம்ப வைப்பதற்காக ஹிட்லரின், பாதுகாப்புப் படையினராலேயே கொல்லப்பட்டு அங்கு போடப்பட்டிருந்தார்.

ஹிட்லர் தனக்கென ஒரு டூப்பை எதற்காக வைத்திருந்தார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஹிட்லரைக் கொல்வதற்கு ஜெர்மனியிலேயே சிலரால் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட் டது. அந்த சதித்திட்டத்தில் ஜுலை மாதம் 1944 இல் ஹிட்லர் சாலையில் ஊர்வலமாக வரும்போது கொல்லப்பட வேண்டும் என முடிவாகியது. அதற்கு 'ஒபெரேசன் வால்கிரீ' என்று பெயரும் இடப்பட்டிருந்தது.

ஆனால் அது படுதோல்வியில் முடிவடைந்தது. அந்தச் சதியில் ஈடுபட்டார்கள் என்று 300க்கும் அதிகமானவர்கள் சரமாரியாகக் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து ஹிட்லர் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தனக்கென ஒரு டூப்பை அனுப்பி வைப்பார். அப்படி மொத் தமாக ஹிட்லருக்கு ஆறு டூப்புகள் இருந்ததாகச் சொல்வார்கள். அதில் ஒருவன்தான் இறந்து காணப்பட்டான்.

இதன் பின்னர் ஹிட்லரும் ஏஃபாவும் தற்கொலை செய்து அவர்கள் இருவரது உடல்களும் எரிந்த நிலையில் கண்டெ டுக்கப்பட்டது என்று ரஷ்யாவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. உலகமும் அதை ஏற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. ஹிட்லரின் உடல் கிடைத்ததோ இல்லையோ, அவன் இறந்தது என்று செய்தியே நமக்குப் போதும் என்று மகிழ்ச்சியுடன் இருந்தது.

ரஷ்யா விட்ட அறிக்கைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை.

இறுதியாக 1993 இல் ஹிட்லரின் இறப்புடன் சம்பந்தமான கடைசி அறிக்கையையும் ரஷ்யா வெளியிட்டது.

அந்த அறிக்கை இதுதான். 'ஹிட்லர் இறந்தபோது, எந்த சோபாவில் இருந்து கொண்டு தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்தாரோ, அந்த இரத்தம் தோய்ந்த சோபாவையும் ஹிட்லர் இறந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தில் எரிந்த நிலையில் துப்பாக்கிக் குண்டு ஒன்று துளைத்த அடையாளத் துடன் கூடிய அவரின் மண்டையோட் டையும் மட்டும் எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்' என்று இருந்தது.

ஹிட்லரின் மரணம் சம்பந்தமாக உலகமே நம்பியிருக்கும் சம்பவங்கள் இவைதான். இவையெல்லாவற்றிலும் இறுதியாக எஞ்சும் முடிவுகள் என்னவோ ஹிட்லரும் ஏஃபாவும் இறந்து விட்டார்கள் என்பதுதான். ஆனால் இவையெல்லாமே பொய் யென்று நிரூபணமாகி, ஹிட்லரும் ஏஃபாவும் உயிருடன் தப்பினார்கள் என்னும் செய்தி இப்போது நம்மை அதிர வைக்கிறது.

ஹிட்லர் இறந்து விட்டான் என்று உலகமே சொல்லிக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் திட்டவட்டமாக ஹிட்லர் தப்பிவிட்டான் என்று ஜுலை 1945லேயே சொன்னார். சொன்னவர் சாதாரணமானவர் என்றால் யாரும் அதைக் கவனத்தில் எடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அப்படிச் சென்னவர் மிகப் பெரியவர். அவர் வேறு யாருமல்லை. அந்தக் காலத்தில் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவரும், சோவியத் ரஷ்யாவின் அதிபருமான ஜோசப் ஸ்டாலினேதான்.

அதுவும் முக்கிய தலைவர்களான ட்ரூமன், சர்ச்சில் ஆகியோரைச் சந்தித்த ஒரு விழாவில் பகிரங்கமாக "ஹிட்லர் சாகவில்லை. ஸ்பெயினுக்கோ, அர்ஜென்டீனாவுக்கோ நீர்மூழ்கிக் கப்பலில் தப்பிவிட்டார்" என்று கூறினார். அது மட்டுமில்லாமல், ஹிட்லரின் இறப்பு சம்பந்தமாக ரஷ்யா தயாரித்த கோப்பை 'ஒபெரேசன் மித்' என்று பெயரிட்டு அதை ஆராயும்படி கட்டளையும் இட்டிருந்தார் ஸ்டாலின். ஹிட்லர் இறக்கவில்லை என்னும் சந்தேகத் துளி இங்கிருந்துதான் முதலில் தூவப்பட்டது.

உலகிலேயே மிகவும் பலமான உளவுப்படை என்று அழைக்கப்படுவது ரஷ்யாவின் உளவுப்படையான றிமிகி (Konmitet Gesudarstvennoy Bezopasnosti).அப்படி ஒரு படையையே வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், ஹிட்லர் இறந்ததற்கான சாட்சியங்களை எல்லாம் தன்னுடனே வைத்திருக்கும் போது, எதற்கு ஹிட்லர் தப்பிவிட்டார் என்று சொல்ல வேண்டும்? ஹிட்லர் சார்ந்த கோப்பிற்கு ஏன் ணிyth என்று பெயர் வைக்க வேண்டும்? ஹிட்லர் நீர்மூழ்கிக் கப்பலில்தான் தப்பினார் என்று எப்படி அவர் அடித்துச் சொன்னார்? ஸ்டாலின் அப்போதே எதையோ அறிந்திருக்க வேண்டும். அதற்கான சாட்சியங்களை இல்லாததால் அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருந்திருக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக நடந்த பல சம்பவங்கள் ஹிட்லர் ஆர்ஜென்டீனாவுக்கு நீர் மூழ்கிக் கப்பலின் மூலம் தப்பிவிட்டார் என்பதைப் பலமாக உறுதி செய்தன. இறுதியில் அமெரிக்காவின் பிகியி ஹிட்லர் தப்பியது உண்மைதான் என்பதை உறுதி செய்தது. அதை அடிப்படையாக வைத்து, ஆதாரங்களுடன் 700 பக்க அறிக்கையை பிகியி வெளியிட்டது. நடந்தது இதுதான் (என்று சொல்லப்படுகிறது).

30.04.1945 அன்று ஹிட்லரும் ஏஃபாவும் இறந்தது போல இரண்டு பிணங்கள் தயார் செய்யப்பட்டுக் கொளுத்தப்பட்டன. ஆனால் ஹிட்லரும், மனைவியும் அவர்கள் மறைந்திருந்த பங்கரின் இன்னுமொரு இரகசிய வழியாக வெளியே வந்து அப்படியே நோர்வே நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

நோர்வேயில் ஹிட்லருக்காகவே காத்திருந்த நீர்மூழ்கிக் கப்பலில் அர்ஜென்டீனா நோக்கிப் பிரயாணம் செய்திருக்கிறார்கள். 2ம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் ஹிட்லரின் படையில் இருந்த, மிக முக்கியமான, போர்க் கைதிகள் என வர்ணிக்கப்படும், பல நாஸித் (NAZI) தலைவர்கள் ஏற்கனவே ஆர்ஜென்டீனாவுக்குச் சென்றிருந்தார்கள்.

அவர்களில் மிக மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள், ஜோசப் மெங்கெலே (Josef Mengele) அடோல்ஃப் ஜக்மான்(Adolf Eichmann),, பிரான்ஸ் ஸ்டாங்கிள் (Franz Stangl) எரிக் பிரீப்கே (Erich Priebke) க்ளெளஸ் பார்பீ(Klaus Barbie) என்பவர்களாவார்கள். இவர்கள் எல்லாரும் நாஸிப் படையில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள். அர்ஜென்டீனாவில் 30000க்கும் அதிகமான நாஸிப் படையினர் தப்பியோடி வாழ்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜுலை 10ம் திகதி 1945 இல் அர்ஜென்டீனாவை ஸி530 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் அடைந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனிக்குச் சொந்தமானது. அது பற்றிய விபரங்களை அமெரிக்கா கேட்ட போது, அதில் வெறும் கப்பல் மாலுமிகள் மட்டுமே இருந்தார்கள் எனக் கூறி, அவர்களை அமெரிக்கா விசாரிக்க அர்ஜெட்டீனா ஒத்துழைத்தது. அதில் யார் யார் வந்தார்கள் என்ற விபரமே இல்லை. வெறும் மாலுமிகள் மட்டும்தான். அதற்கு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் ஸி977 என்னும் ஜெர்மனிக்குச் சொந்தமான இன்னுமொரு நீர் மூழ்கிக் கப்பல் தெற்கு அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. இதற்கும்அதே கதைதான் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டது.

ஆனால் ஹிட்லர் இறந்தார் என்று ஜெர்மனி அறிவித்த அன்றுவரை அதாவது மே மாதம் 2ம் திகதி வரை நோர்வே துறைமுகத்தில்தான்ஸி977 என்ற நீர் மூழ்கிக் கப்பல் நின்று கொண்டிருந்தது. ஆனால் மே 2ம் திகதி திடீரென நோர்வே துறைமுகத்தில் இருந்து மாயமாக மறைந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல் அதற்கு அப்புறம் பல நாட்களாக அது காணப்படவே இல்லை. ஆனால் ஜெர்மனி தோற்றிருந்த வேளையில் அனைவரும் சரணடைந்து கொண்டிருந்த நேரமது.

மொத்தமாக 102 நாட்கள் கடலினடியிலேயே பிரயாணம் செய்த ஸி977 பின்னர் அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. அதில் யார் வந்தார்கள்? சரணடையும் சாத்தியம் இருந்தும், இவ்வளவு ஆபத்தான நீண்ட நாள் கடலடிப் பிரயாணத்தை அது ஏன் மேற்கொண்டது என்ற கேள்விகளுக்கு ஆர்ஜென்டீனா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. பல தலைவர்களுடனும், அளவுக்கு மிஞ்சிய பணத்துடனும், சொத்துக்களுடனும் அர்ஜெடீனாவை வந்தடைந்தான் ஹிட்லர் என்று சொல்கிறார்கள்.

அதன் பின்னர் அர்ஜென்டீனாவின் பல இடங்களிலிருந்து இரகசியமா, மிகவும் நம்பகத்தன்மை உடையவர்களிடமிருந்து, ஹிட்லரைக் கண்டதாகச் செய்திகள்பிகியிஐ வசம் வந்தடைந்தது. ஹிட்லருக்கு இரண்டு பெண்கள் பிறந்ததாகவும், அவர்கள் அங்கேயே வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்களைச் சந்தித்த பலர் சாட்சிகளாகவும் இருந்திருக்கின்றனர். ஏஃபா ஜெர்மனியில் இருந்து தப்பும்போதே கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.

'கிரே வோல்ஃவ்' (Gray Wolf) என்னும் புத்தகத்தை எழுதிய இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையாளர் ஜெரார்ட் வில்லியம்ஸ் (Gerrard Williams) Sky News க்குக் கொடுத்த பேட்டியின்படி நாம் தற்போது ஹிட்லர் இறந்ததாக நம்பும் ஆண்டுக்கு 17 ஆண்டுகள் கழித்து 1962 இல் ஆர்ஜென்டீனாவில் ஹிட்லர் இறந்தான் என்று தெரிய வருகிறது. அதாவது வயது போன நிலையில் இயற்கையாக இறந்தான் ஹிட்லர்.

Thursday, July 10, 2014

18 வயதை தொட்ட பெண்கள் செய்ய வேண்டியகள்

தற்போதுள்ள வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை.

இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை நிரந்தர தீர்வாகும்.

பெண்களுக்கு எலும்பு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும் போது, வைட்டமின் டி பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என்கிறார் எலும்பு மருத்துவ நிபுணர். ஏனெனில் இது இளம் பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனையாகும்.

80 முதல் 90 சதவீத இளம் பெண்களின் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. எனவே, அனைத்து பெண்களும் அந்தந்த பருவத்தில் வைட்டமின் டி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முதுமைப் பருவத்தில் உள்ள பெண்களைத் தாக்கும் எலும்புப்புரை நோய் (Osteoporosis) அல்ல இது.

மார்பகங்களில் கட்டிகள் வருவதும் மற்றும் ஒழுங்கற்ற தன்மை இருப்பதும் தான் பிரச்சனைக்கான முதல் அறிகுறி. சுயமாக பரிசோதனை செய்யும் போது கட்டிகள் இருப்பது தெரிய வந்தால், மாம்மோகிராம்ஸ் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இளம் பெண்களால், பெரும்பாலும் தவிர்க்கப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ஒன்றாக மார்பகங்களை பரிசோதனை உள்ளது. ஒரு பெண் 25 வயதை அடைந்து விட்டாலேயே இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். சுயமாக பரிசோதனை செய்து கொள்ளுதல். கட்டிகள், வீக்கங்கள் அல்லது மார்பகங்களில் அசாதாரண வளர்ச்சி ஆகியவை உள்ளதா என பரிசோதித்து பார்த்தல்.

தொடர்ந்து தாகமாக இருத்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல், திடீரென்று அதிகமாக பசி எடுத்தல், தாங்க முடியாத களைப்பு, மயக்க உணர்வு, பார்வை மங்குதல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும் போது சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டும்.

இன்றைய இளம் பெண்கள் தங்களுடைய எடையைக் குறைக்கவும் மற்றும் வயிற்றின் தொப்பையைக் குறைக்கவும் போராடி வருகின்றனர். இந்த இரண்டு காரணங்களுக்காகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் அதை விட வயது குறைந்த பெண்கள் என அனைவரும் சர்க்கரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

எடை அதிகரித்தல், சோம்பல், மாதவிடாய் தவறி வருதல் மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இந்த தைராய்டு பரிசோதனையை செய்ய வேண்டும். தைராய்டின் அளவு அதிகமாக இருப்பதையோ (Hyperthyroidism) அல்லது குறைவாக இருப்பதையோ (Hypothyroidism) பரிசோதிக்கவே இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த இரண்டு வகை பிரச்சனைகளுமே நமது நகரங்களில் பரவலாக காணப்படுகின்றன. 18 வயதை அடைந்த இளம் பெண்கள் அனைவருமே இந்த சீர்கேட்டிற்கான பரிசோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

யதார்த்தம் பேசிய புத்தர்

புத்தரின் யதார்த்தமான அணுகுமுறை நவீனமானது. அவர் வார்த்தை ஜாலத்தால் பெரும் தத்துவத்தையோ, சமய விளக்கத்தையோ தரவில்லை. அவர் பிறந்த சாக்கிய குலத்தைச் சேர்ந்த போர் வீரனைப் போல, சாதாரண மக்களிடம் யதார்த்த மாக வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

ஒரு முறை மாலுன்கியாவின் மகன் என்ற சீடர் ஒருவர் சிரஸ்வதி நகரில் புத்தரிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"இந்த உலகம் நிலையானதா, இல்லையா? இந்த உலகம் எல்லைகளுக்கு உட்பட்டதா, இல்லையா? வாழ்வு, உடல் சம்பந்தப்பட்டது மட்டும்தானா? புத்தர் சாவைக் கடந்தவரா...? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல், எதற்காகப் புத்தரின் சீடர்கள் அவர் வலியுறுத்தும் வழியைப் பின்பற்ற வேண்டும்?” என்று அவர் கேட்டார்.

எது முதன்மை?

இந்தக் கேள்விகளுக்கு நேரடி யாகப் பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, நீதிக் கதை ஒன்றை கௌதம புத்தர் பதிலாக முன்வைத்தார்.

"மாலுன்கியாவின் மகனே, என் சீடரே. ஒரு முறை நச்சு தடவிய அம்பு ஒன்று ஒரு மனிதனின் உடலைத் துளைத்துவிட்டது. அவனது உறவினர் உடனடியாக மருத்துவரை நாடிச் சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட அந்த மனிதன், தன் உடலைத் துளைத்த அம்பை வெளியே எடுப்பதற்கு முன் தனக்குச் சில விஷயங்கள் முதலில் தெரிய வேண்டும் எனச் சொல்வதாக வைத்துக்கொள்வோம்.

"அம்பு எய்தவரின் பெயர் என்ன? அவனது சுற்றம் என்ன? அவன் பயன்படுத்திய வில், அந்த வில்லின் நாண், அம்பின் அமைப்பு, அம்பின் நுனியில் இருந்தது கன்றின் பற்களா அல்லது கத்தியின் கூர்தீட்டப்பட்ட நுனியா அல்லது கம்பி முடிச்சா என்பது போன்ற விஷயங்களை முதலில் தெரிந்துகொண்ட பின்னர்தான் மருத்துவர் தன்னைப் பரிசோதிக்கலாம்" என்று பாதிக்கப்பட்ட அந்த நபர் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

அப்போது என்ன நடக்கும்? இந்த விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, பாதிக்கப்பட்ட அந்த நபர் காலதாமதத்தால் இறந்து போகலாம். அது போலவே நன்கு வாழ்வதற்குத் தேவையான விஷயங்களைத் தவிர, மற்ற விஷயங்களில் நமக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால், இந்த வாழ்விலுள்ள கஷ்டங்களும் அவற்றைப் போக்கும் நெறி முறைகளும் மட்டுமே" என்றார் புத்தர்.

நல மருத்துவர்

நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவமனையுடன் புத்தர் தன்னை ஒப்பிட்டுக்கொள்வது வழக்கம். மனிதர்களது தவறுகளையும் கஷ்டங்களையும் அவர் நோய்களுடன் ஒப்பிட்டார். ராஜகிரஹா பூங்காவில்அணில் களுக்கு உணவூட்டும் இடத்தில் இருந்தபோதும் புத்தர் அப்படித் தான் கூறியிருக்கிறார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவன், புத்தரைச் சந்தித்துக் குணம் பெற வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்த போது, புத்தர் இப்படிக் கூறினார்: "நான் கூறும் போதனையை உணர்ந்து, அதைப் பின்பற்று வதே புத்திசாலித்தனம். வருந்தும் நோயாளி ஒருவர் தன் கஷ்டத் தைப் போக்கிக்கொள்வதற்கு என்னை நாட நினைப்பது நிச்சயம் புத்திசாலித்தனமல்ல" என்றார்.