Wednesday, May 28, 2014

கருணாநிதியின் நடிப்பு

கருணாநிதி ஒரு நல்ல நடிகர்.

வெறும் நடிப்பு மட்டுமின்றி வேறு திறமைகளும் அவருக்குண்டு.

அவர் ஒரு திறமையான புகைப்படக் கலஞர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நேற்று மிஸ்ஸியம்மா படம் பார்த்தேன்.

அதில் தங்கவேலுவின் உதவியாளராக வருவார் ஏ.கருணாநிதி.
தங்கவேலு சொல்வதையெல்லாம்,குறிப்பெடுக்கும் அவரது பாணி சிரிப்பை வரவழைக்கும்.

வீரபாண்டியக் கட்டபொம்மனில் ஒரு மறக்க முடியாத பாத்திரத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகரான இவருக்குப் படங்களில் ஜோடியாக நகைச்சுவை நடிகைகளே நடிப்பது வழக்கம்.பெரும்பாலும் டி.பி முத்துலக்ஷ்மி அவர்கள் நடிப்பார்.

ஆனால் ஒரு படத்தில் தேவிகா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்!
அந்தப் படம்”மணமகன் தேவை”

என்னால் மறக்க முடியாத ஒரு படம் இவரும் நாகேஷும் சேர்ந்து கலக்கிய “மெட்ராஸ் டு பாண்டிச்சேரி”

இவர் அறுபதுகளில் ஒரு ஓட்டல் நடத்தினார்.

பெயர் “ஓட்டல் மாமியா”-அசைவ ஒட்டல்

மாமியார் வீடு போல் சுவையான சமையல் என்பதால் அப்பெயர்.

புது விதமான உணவு வகைகள் அங்கு கிடைத்தன.

காடை ,கௌதாரி,உள்ளான் இப்படி.

ஒரு மறக்க முடியாத நடிகர் ஏ.கருணாநிதி!

Tuesday, May 27, 2014

உண்மையாக இருங்களேன் பெண்களை கவரலாம்!

பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஞானிகளால் கூட அறிந்து கொள்ள முடியாது என்கின்றனர். எத்தனையோ கவிஞர்களும், அறிஞர்களும் கூட பெண்களின் மனதை கவர முடியாமல் தோற்றுத்தான் போயிருக்கின்றனர்.

ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காகவே சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அனுபவசாலிகள் படியுங்களேன்.

பாதுகாப்பு உணர்வு

பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும் போது தோழனாகவும், மடி சாயும் போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு.

தோற்றத்தில் மாற்றம்

பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில் கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

குணத்தால் கவருங்கள்

பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

அடிக்கடி விசாரியுங்களேன்

எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்ப ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இடமுண்டு.

சரியாக கணியுங்கள்

நாம் விரும்பும் பெண்ணுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது என்று சரியாக கணியுங்கள். இதை சரியாக தெரிந்து வைத்துக்கொண்டால் சொதப்பல்கள் இருக்காது. பிடித்த உணவு, பிடித்த நிறம், பிடித்தவைகளை சரியாக செய்தால் பிடிக்காதவைகள் ஏதாவது ஒரு சில செய்ய நேரிட்டாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

கவனியுங்களேன்

ஆண்கள் கவனிக்கவேண்டும் என்பதற்காகவே நடை, உடை, பாவனைகளை தினம் தினம் புதிது புதிதாக மாற்றிக்கொள்கின்றனர் பெண்கள். அதை சரியாக கவனித்து அவர்களை பாராட்டுங்களேன். இந்த உடை உங்களுக்கு சரியா இருக்கு. இந்த ஹேர் ஸ்டைல் உன்னோட அழகை அதிகரிக்கிறது என்று சும்மா சொல்லி வையுங்களேன். அதற்காகவே கூடுதலாக அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் அவரின் மனதில் நீங்கள் இடம் பிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஜென்டில்மேன் பேச்சு

எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் லாவகமும் கொண்ட ஆண்களை அதிகம் பிடிக்கிறதாம். எப்பொழுதும் ஜென்டில் மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால்தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

சுயத்தை இழக்காதீர்கள்

பெண்களைக் கவருவதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

முயற்சி செய்து பாருங்களேன்.

Saturday, May 24, 2014

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

தெரியுமா உங்களுக்கு ...?

1.வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

2.குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும்,முழுங்கவும் முடியும்..

3.புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

4.ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

5.சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

6.தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

7.கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8. 8மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

9.சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

10.இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

11.திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால்,வெடிக்கும்.

12.கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

13.எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

14.40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

15.சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

16.பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான்,வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

17.வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

18.பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும்10:10, புன்னகையை குறிக்கும்.

19.நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

20.லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

21. 15எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

22.குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

23.எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

24.வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

25.சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

26.கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

Friday, May 23, 2014

இந்தியாவின் இன்றைய தேவை மகாத்மா காந்தியல்ல, ஒரு இரக்கமுள்ள ஹிட்லர்


புதிய பிரதமருக்கு பத்து கட்டளைகள்
1. அவசியத் தேவை நூறு சதவீத கல்வியறிவு.

சுதந்திரம் பெற்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் இந்த தேசம் கல்வியறிவில் முழுமைப் பெறவில்லை என்பது வெட்ககேடான ஒன்று. இந்த ஐந்து ஆண்டுகளிலாவது நூறு சதவீத கல்வியறிவு பெற முழுமையான செயலாக்கம் தேவை.முளைத்து மூன்று இலை விடாத நிலையில் மொபல்போனை எடுத்து ஆராய்ந்து Angry birdவிளையாடுகின்றன கிராமத்து பொடிசுகள். பச்சைக்குழந்தைகள் கூட தொழில்நுட்ப பழகிவரும் நிலையில்,இன்னும் பழமையான பன்னிரெண்டு ஆண்டு கல்வி முறை கதைக்கு உதவாது.இருக்கும் பழமையான கல்வி முறையை முற்றிலும் மாற்றி புதிய கல்வி வயது வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க உடனடி அவசர சட்டம் தேவை. மூன்று முதல் எட்டு வயது வரை அடிப்படை கல்வி. எட்டுமுதல் பதினைந்துவரை தொழில்நுட்ப அறிவுசார் கல்வி. அதற்கு மேல் ஆராய்ச்சிபடிப்பு. படிப்பறிவு இல்லாத முதியோர்கள் குறுகியகாலத்தில் எழுதபடிக்க தெரிந்துகொள்ளும் அளவிற்காவது போர்கால அடிப்படையில் ஒரு செயலாக்கம் தேவை.இந்த ஐந்து ஆண்டு ஆட்சி முடியும் போது உலகில் இந்தியா முழுமையான கல்வியறிவு பெற்ற தேசமாக மாறி இருக்கவேண்டும்.முழுமையான கல்வி அறிவு பெறாத தேசம் வேறு எதில் தன்னிறைவு அடைந்தாலும் அதில் பலனில்லை.

2. அனைவருக்கும் முழுமையான சுகாதர வசதி

ஒவ்வொருவருக்கும் அடிப்படை சுகாதார வசதி உறுதிசெய்யப்படவேண்டும். அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் முழுமையான மருத்துவ வசதி இன்னும் அடிப்படை கிராமத்து மக்களுக்கு கிடைக்கவில்லை. மருத்துவர் பற்றாக்குறை, மருத்துவமனைகளின் தரமற்ற செயல்பாடுகள் தான் இதற்கு காரணமாக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளோடு தனியார் மருத்துவமனைகளையும் சுகாதார செயல்பாட்டில் ஒன்றிணைக்க தீவிர சட்டம் இயற்றவேண்டும்.மருத்துவமனைகள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதர்களிடமும் விழிப்புணர்வை பெருக்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்,வாய்ப்புகளை பெருக்கி அவர்கள் படிப்பு முடிந்து குறைந்தது பத்தாண்டுகளாவது இந்தியாவில் பணிபுரிந்தால்தான் முழுமையான தகுதி சான்று என்று மாற்றியமைக்கப்படவேண்டும்.நவீன மருத்துவம் மட்டுமின்றி பாரம்பரிய இந்திய மருத்துவத்தை ஊக்குவித்து வரும் முன் காக்கும் யுக்திகளை முன்னிறுத்தவேண்டும்.அரசு செலவில் படித்துவிட்டு ஹாயாக வெளிநாடு பறக்கும் மருத்துவசிகாமணிகளை சுளுக்கெடுக்கவேண்டும்.

3. சுகாதாரமான குடிநீர் வசதி.

இந்தியாவின் மிகப்பெரிய சவால் இனி வரும் காலங்களில் சுகாதாரமான குடிநீர்தான்.தண்ணீர் பஞ்சம் என்று பஞ்சப்பாட்டு பாடும் இதே நிலையில் தான் பெப்சிகோவும்,கின்லேயும் மண்ணை உறிஞ்சி பொன்னாக்கி அமெரிக்காவிற்கு டாலர்களாக மாற்றி அனுப்பிகொண்டிருக்கின்றன. உள்ளூர்காரனுக்கு தண்ணீர் பஞ்சமென்றால், வெளிநாட்டு தண்ணீர் கம்பெனிகளும், தனியார் தண்ணீர் நிறுவனங்களும் எப்படி நீரை உற்பத்தி செய்கின்றன. நீர்வளம் என்பது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் சொத்தாக மாற்றப்படவேண்டும். தண்ணீரில் பணம் கொழிக்கும் நிறுவனங்களுக்கு சங்கு ஊதிவிட்டு,இந்தியா முழுவதும் நீரை பொதுவாக்கவேண்டும். முறையான வினியோக முறையை திட்டமிடல் வேண்டும்.

4. நதிகளை இணைத்தல் தேசம் முழுவதும் நீர் பகிர்மானத்தை பொதுவாக்கல்
தண்ணீர் தான் இனி உலகின் சவால். உள்நாட்டுப் நீர் நிர்வாகத்திற்கு நாடு தழுவிய ஒரே நடைமுறை தேவை. தேசம் முழுவதும் வாய்ப்புள்ள நதிகளை ஒன்றிணைத்தல், மிகுபடும் நீரை சேமிக்க முறையான வாய்ப்புகளை உருவாக்குதல். உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை அதிகரித்தல் என உள்நாட்டு நீர் சார்ந்த வலுவான நிர்வாகம் தேவை.இதன்மூலம் உணவு உற்பத்தி, மின் உற்பத்தி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வலுவாகும்

5. வேளாண்மைத்துறைக்கு வலு சேர்க்கவேண்டும்.

இந்தியா ஒரு விவசாயம் சார்ந்த மண். என்ன தான் நவீன தொழில்நுட்பங்களை பற்றி மெச்சிக்கொண்டாலும் இண்டர்நெட்டில் நெல் விளையாது.விளைநிலங்களை பாதுகாக்க வலுவான சட்டம் தேவை. வேளாண் திட்டங்கள் என்பது ஒரு சடங்காக அமையாமல்,உணவு சார்ந்த பொருட்களை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான செயல்திட்டம் தேவை.விளைநிலம் பாதுகாப்பு, நீர்வளங்களை பாதுகாத்தல்,வேளாண்மைத்துறையில்இளைஞர்களை வரவேற்கும் வகையில் உறுதியான திட்டங்கள் தேவை.விவசாயம் உற்பத்தி சிறு தொழிற்கூடங்கள் கிராமம் தோறும் அதிகரிக்கப்படவேண்டும்.இறக்குமதியில் இப்போது பெருமளவு உணவுப்பொருளாக மாறிவருவது இந்தியாவிற்கு அழகல்ல. வேளாண்மைத்துறைக்கு வலுசேர்ப்பதின் மூலம் இறக்குமதியை படிபடியாக குறைக்க முடியும்.

6. இலவசங்களை ஒழித்தல்

இந்தியாவின் சாபக்கேடு இந்த இலவச திட்டங்கள்தான். ஓட்டு பொறுக்கிகளின் உள்நோக்கு திட்டமாகதான் இலவசங்கள் திகழ்கின்றன. ஒரு இலவசத்தை கொடுத்து மக்களை திசைத்திருப்பிஇன்னொன்றில் விலையேற்றி வதைக்கும் விளையாட்டு இனி வேண்டாம். இலவசங்களை முற்றிலும் ஒழித்து விலைவாசியை கட்டுப்படுத்தினால் போதும். மக்கள் உழைக்க தயாராகவே உள்ளனர்.

7. கட்டாய ராணுவப் பயிற்சி

முப்பது கோடி முகமுடையால் என்ற நிலையில் இருந்து நூற்றி இருபது கோடி முகமுடையாளாக மாறியிருக்கிறாள் பாரத தாய்.மக்கள் தொகை என்பது சுமையல்ல அது பலம் அத்தனை மனிதவளமும் ஆக்கபூர்வமாக மாறும் போது. இந்த இளைஞர் சக்தி துரதிஷ்டமாக இனம், மொழி என பிரிந்து கிடக்கிறது. இவற்றை ஒருங்கிணைத்து வலுவூட்ட ஒரு கடுமையான செயல்திட்டம் தேவை. அதற்கு கட்டாய ராணுவப்பயிற்சி மட்டுமே வழியாக இருக்கும். பதினாறு வயது முதல் இருபத்தி ஐந்துவரை ஒருவர் ராணுவத்தில் பணியாற்றும் போது தேசப்பற்று, செயல்திறன், உறுதிப்பாடு வலுப்பெறும்.அடுத்து பல்வேறு மாநிலத்தினர் இளமையிலேயே ஒரே குழுவாக ஒரிடத்தில் பணிபுரியும் போது இனம்,மொழி சார்ந்த எண்ணங்கள் பின்னோக்கி தள்ளபட்டு ஒரே எண்ணம் உருவாகும்.இந்த குறைந்தபட்ச பணிகாலத்தில் இவர்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் இயங்கும்போது தேசம் பற்றிய வலுவான ஒரு பற்று உருவாகும்.இந்த காலக்கட்டத்தில் அவரவர் விரும்பும் கல்வியையும் பயிற்சியையும் பெற உறதிப்பாடுகள் செய்யப்படவேண்டும்.

8. கிராமங்கள் சார்ந்த தொழிற்கட்டமைப்பை அதிகப்படுத்துவது

அயல்நாட்டு முதலீடுகளை கிராமங்களை நோக்கி திருப்பவதின் மூலம் கிராமத்தின் உட்கட்டமைப்புகளை உருவாக்கமுடியும். முன்னேறிய நகரங்களில் நோக்கியே முன்னனி நிறுவனங்கள் அணிவகுப்பதை நெறிப்படுத்தி கிராமப்பகுதிகளை நோக்கி அவர்களின் பார்வையைதிருப்ப வேண்டும். ஒரே இடத்தில் இவை அனைத்தும் குவியாமல் பரவலாக பின் தங்கிய பகுதிகளில் அமைக்கபடுவதின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பு,தேசம் முழுவதும் சீரான வளர்ச்சிக்கு உறுதி செய்யமுடியும்.கிராமப்புறங்களில் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களை அமைப்பதின் மூலம், வேலைவாய்ப்பு, சுய உற்பத்தியில் தன்னிறைவு சுலபமாக அடையலாம். தொடந்து இறக்குமதியை படிபடியாக குறைத்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை பெருக்கலாம்.

9. சிறுவர்களுக்கு மட்டுமே விளையாட்டு
விளையாட்டு என்பது உள்ளம், உடல் வலிமைக்கு உரிய பயிற்சி என்ற நிலை மாறி இப்போது கேளிக்கையாகவும், பொழுதுபோக்காகவும் மாறிவருகிறது. இளைஞர்களை பலவீனப்படுத்தி அவர்களை கேளிக்கை பார்வையாளராக,சூதாடிகளாகவும் மாற்றி வருகின்றன இன்றைய விளையாட்டு கொள்கைகள். அதிகபட்சம் பதினான்கு வயதுள்ளவர்களுக்கு மட்டுமே விளையாட்டு என்ற நிலையை உருவாக்கவேண்டும்.

10. பொதுவான தெய்வ நீதி நெறி வகுத்தல்.

உலகின் இன்றைய சண்டைகளுக்கு எல்லாம் காரணம் கடவுள் சார்ந்த கொள்கைதான். ஏன் இந்தியாவிற்கும் இதுதான் பெரிய தலைவலி. இயற்கைதான் இறைவன் என்பதை உலகிற்கு முதன்முதலில் சொன்ன மண் நமது தேசம். இந்திய வாழ்வியல் முறை, புத்தம், இசுலாம், கிறித்துவம், சீக்கியம் என்று எதுவாக இருந்தாலும் எல்லாம் சொல்வது இறைவன் ஒன்றே என்பதுதான். அந்த ஒன்று என்ன என்பதை குறித்த மெய்யறிவை தெளிபடுத்தவேண்டும்.உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர்.இறைத்தன்மை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதுதான் உண்மை.இதனை சார்ந்தே எண்ணற்ற சித்தர்களும், இறைத்தூதர்களும் சொல்லிவந்தனர்.அந்த இறைவன் இயற்கை என்பதை நெற்றியில் அடித்தது போல் பட்டென்று உரக்க பதிவு செய்யவேண்டும். உலகம் முழுவதும் ஒரே தெய்வநீதியை வகுப்பதின் மூலம் மட்டுமே உலகின் எல்லா வன்முறைகளுக்கு முடிவுகொண்டுவர முடியும் என்பதை வலியுறுத்தினார் அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி. அதற்கு முதல் முன்னெடுப்பாக 2000 ஆம் ஆண்டில் உலக அளவிலான பல்வேறு மத தலைவர்களின் முன்னிலையில் ஒரு கருத்தரங்கையும் நடத்தினார். வேதாத்ரி மகரிஷியின் மறைவுக்கு பின்னர் அந்த முன்மொழிவு காற்றில் கரைந்த பெருங்காயமாக மாறிவிட்டது. இனிவரும் காலங்களில் மனிதவளத்தின் ஒற்றுமைக்காவும், உலகின் நலனுக்காகவும் இதுகுறித்த கருத்துரைகளை முன்வைத்து ஒரு தீர்வை உருவாக்கவேண்டும்.

ஜனநாயகப்பாதை என்ற போர்வையில் அறுபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த காலகட்டத்தில் நல்ல மாற்றங்களும் நடந்துள்ளன, மிகப்பெரிய பின்னடைவுகளும் இந்தியா சந்தித்துள்ளது.இந்தியா உலகின் வலுவான தேசமாக மாறவேண்டும் எனில் இனி கொஞ்சம் கடுமையான நடைமுறை அவசியம். அதற்கு இந்தியாவின் இன்றைய தேவை மகாத்மா காந்தியல்ல, ஒரு இரக்கமுள்ள ஹிட்லர்.

எழும்பூர் அருங்காட்சியகம் - பிரமிப்பூட்டும் அரிய பொக்கிஷம்


ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் கலை, நாகரிகம், பண்பாடு முக்கிய பங்காற்றுகிறது. தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கலை, நாகரிகம், பண்பாட்டை நம் கண் முன்னே நிறுத்துவதில் வரலாறு முக்கிய பங்காற்றுகிறது. அத்தகைய பெருமை கொண்ட வரலாறு நீண்ட நெடிய ஆண்டுகளாக மக்கள் மனதில் நிலைத்திருப்பதற்கு அருங்காட்சியகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. எழில்மிகு சென்னையின் பல பொக்கிஷங்களை சுமந்தபடி எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக, எழும்பூரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தை பற்றித்தான் இன்றைய சுற்றுலா பகுதியில் காண போகிறோம்...

எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் 1851ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது 16.25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிக்கெட்டை பெற்றுக்கொண்டு வளாகத்திற்குள் நுழைந்தவுடன் தலைமை கட்டிடம், முன் கட்டிடம், படிம கூடம், சிறுவர் அருங்காட்சியகம், தேசிய ஓவியக் காட்சிக்கூடம், வளர்கலை கூடம் என ஆறு கட்டிடங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
வழியெங்கும் உள்ள மரங்கள் தலைமை கட்டிடத்திற்குள் நாம் செல்வதற்கு தலையசைத்து வரவேற்பளிக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன், சோழன், பல்லவன் காலங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர், நந்தியுடன் காட்சியளிக்கும் சிவன், உயிரின் தோற்றத்தை விளக்கும் சிற்பங்கள் என பல சிற்பங்கள் கீழ்தளத்தை அழகுபடுத்துகின்றன.

இதை பார்த்த பிரமிப்புடன் படிக்கட்டுகள் ஏறி மேல் தளத்திற்கு செல்லும் நமக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருக்கிறது. அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள், பவளப்பாறைகள் என மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எழுத்துகளுக்கு வேராக விளங்கும் பிராமி எழுத்துகள் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துகள் வடிவம் பெற்ற விதங்கள் விளக்கியுள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நம்மையே மறந்து இவற்றை தொட போகும்போது தொட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழிகாட்டும் பலகை விலங்கியல் பகுதிக்கு கொண்டு சென்று விடுகிறது. மனித குரங்கின் எலும்பு கூடு சிரித்தபடி வரவேற்கிறது. இதை பார்த்த திகிலுடன் நாம் நகர்ந்து செல்கிறோம். அப்போது நம்முடைய தலைக்கு மேல் சுமார் 20 அடி அளவு கொண்ட ராட்சத திமிங்கல எலும்புக்கூடு தொங்க விடப்பட்டுள்ளது.

அடுத்து அதிர்ச்சியாக ஆக்ரோஷமான டைனோசர் சத்தம் கேட்கிறது. சற்று நகர்ந்து பார்க்கும்போது சுமார் 10 அடி உயரத்தில் கோபமான கண்களுடன் டைனோசர் ஒன்று திமிறி கொண்டிருக்கிறது. அச்சத்தில் ஓட எத்தனிக்கும் நம்மை சமாதானப்படுத்தும் பணியாளர்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பொம்மை என்று விளக்கம் அளிக்கின்றனர். அங்கிருந்து திகில் அனுபவத்துடன் வெளியேறும் நாம் முன் கட்டிடத்திற்கு மெதுவாக நகர்ந்து செல்கின்றோம். அங்கு வரலாற்றுக்கு முந்தைய காலம், நிகழ்காலத்தில் இருக்கும் நம்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்துள்ளதை போன்று தோன்ற வைக்கிறது. மானிடவியல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள படை கலங்கள் தமிழர்களின் வீரத்தை பறை சாற்றுகிறது. இக்கட்டிடத்தில் வீரத்தை மட்டும் உணரும்படி இல்லாமல் கலைகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் பழங்கால இசை கருவிகள், நாட்டார் கலைகளுக்கான காட்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நம் முன்னோர்களின் வீரத்தை பற்றி உணர்ந்த நாமும் அங்கிருந்து வீரமாக நடைபோடுகிறோம். நூற்றாண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சியளிக்கும் அருங்காட்சியக கட்டிடத்தின் உள் கட்டமைப்புகள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது. இப்போது நாம் அங்கிருந்து அடைந்துள்ளது படிம கூடம். இக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வெண்கல சிற்பங்கள் நம்முடைய சிற்பிகளின் திறமைகளை மெய் மறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வேதி காப்பு ஆகிய பிரிவுகளில் வைணவ, சைவ, புத்த, பவுத்த, சமண மதங்களை ஓரளவுக்கு அறிந்து கொள்ள பேருதவியாக உள்ளது. கி.பி 9ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான சிலைகள் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களும் காணலாம்.

அவற்றில் குதிரை, யானை, எருது என பொறிக்கப்பட்ட உருவங்கள் வரலாற்றின் பின்னணியை நாமும் சற்று ஆராய்ந்தால் என்ன என்றுகூட தோன்றுகிறது.
இப்படி சிந்தித்து கொண்டே நடந்து சென்று நாம் நிற்கும் இடம் சிறுவர் அருங்காட்சியகம். இங்கு சிறுவர்களை மகிழ்விக்க பல்வேறு ஆடைகளுடன் கூடிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து அவர்கள் குதூகலத்தில் குதிக்கின்றனர். இப்படிப்பட்ட சிறுவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தின் சிறப்புகளையும் இந்த பகுதிகளில் சொல்ல மறக்கவில்லை. குறிப்பாக, 22 அறிவியல் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் ரசித்த பிறகு அடுத்து பல வகையான வண்ணங்களுடன் மகிழ்ச்சியாக வரவேற்கும் கட்டிடம் தேசிய ஓவிய காட்சி கூட கட்டிடம்.

இக்கட்டிடத்திக்குள் நுழையும் போதே மெய் சிலிர்க்கிறது. இந்திய சிற்றோவியங்கள், பிற இந்திய மரபு ஓவியங்கள் என சிந்திக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழகத்தை சேர்ந்த ஓவியங்கள் இல்லையே என்று நாம் ஏங்கி பார்க்கும் நேரத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் கண்களை சொக்கவைக்கிறது. இந்திய ஓவியர்களின் திறமைகளை பற்றி நாம் விவாதித்து கொண்டு கடைசியாக வந்து சேரும் கட்டிடம்தான் வளர் கலை கூடம். பழங்கால ஓவிய கலையை பற்றி அறிந்த நமக்கு தற்போதைய ஓவிய கலையை சுவைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த கட்டிடம். பிரிந்தானிய ஓவியங்களும், தற்காலிக ஓவியங்களுக்கான காட்சி கூடங்கள் என்று வரலாற்று பாதையிலிருந்து நிகழ்காலத்தில் கொண்டு வந்து விடுகிறது இந்த கூடம்.

வேறொரு உலகத்தில் பயணித்த அனுபவத்துடன் வெளியில் வரும் நமக்கு ஆவின் பால் நிலையம் வரவேற்பளிக்கிறது. ரூ.10க்கு ஐஸ் கிரீம், பாதம் பால் என பல வகைகள் கிடைக்கிறது. அதை மகிழ்ச்சியாக உண்ணும் நாம் வரலாற்றுக்கு வணக்கம் செலுத்திவிட்டு விடைபெற்று கொள்கிறோம். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. வெள்ளிதோறும் விடுமுறை என்பதால் அன்றைய தினத்தை தவிர்த்து எஞ்சியுள்ள தினங்களில் இங்கு குடும்பத்துடன் வருபவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி காத்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 கட்டணம் என்றாலும், நிழற்படம் எடுக்க ரூ.200, வீடியோ படம் எடுக்க ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

வடபழனிலிருந்து எழும்பூர் வர 17டி, கோயம்பேட்டியிலிருந்து எழும்பூர் வர 27பி, திருமங்கலத்திலிருந்து எழும்பூர் வர 40ஏ, பெசன்ட் நகரிலிருந்து எழும்பூர் வர 23சி என பஸ் வசதி தாராளமாக உள்ளது. எனவே, கோடை கொண்டாட்டத்தை தொடங்க இப்பவே குழந்தைகளுடன் தயாராகுங்க...

Thursday, May 22, 2014

5 வகை நிலங்களும் அவற்றில் கிடைக்கும் உணவுகளும்

ஐவகை நிலங்களும் அவற்றில் கிடைக்கும் உணவுகளும் – தமிழர்களின் அறிவியல்..!

உணவு..!

‘உணவு மனிதனுக்கு அவசியமானது. அது உடல் வலிமை பெற வளர்ச்சியுற இன்றியமையாதது. அதனால்தான் புறநானூறு என்ற பழந்தமிழ் நூலில்,

‘‘நீரின்றி யமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புற-18; 17-20)

எனச் சொல்லப்பட்டது. உண்டி கொடுத்தோரை

(உணவு) உயிர் கொடுத்தவர் என்பதே அப்பாடல்.

குறிஞ்சி நிலம்:

தேன், தினைமா, கிழங்கு, பறவைக ள், ஊன் வேட்டையில் கிடைத் த உணவுகள்.

முல்லை நிலம்:

சோளம், கேழ் வரகு, நெய், தயிர், வெண்ணெய், மோர், அவரை, துவரை

மருத நிலம் :

பல்வகைச் சோறு, காய்கறிகள்

நெய்தல் நிலம்:

மீன், நண்டு, இறால், கணவாய், காய் ந்த மீன் (கருவாடு), நெய் கலந் த ஊன், வறுத்த ஊன், சுட்டமான், பால்சோறு, நெய்சோறு என அறு சுவை உணவையு ம் உண்டனர்.

பாலை நிலம்:
இதுபோக ஈழத்துணவும் வந்ததாகப் பட்டினப்பாலை பகர்கிறது.

இதிலிருந்து இரு செய்திகள் தெரிகி ன்றன. ஒன்று உணவு வகைகள் சங்க காலத்தில் இறக்குமதியாகி இ ருக்கின்றன. இன்னொன்று ஈழத்தி லிருந்து தமிழர்களே தமிழர்களுக்கு உணவு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.

Monday, May 19, 2014

அதிமுகவின் மாபெரும் வெற்றி வெறும் 200 ரூபாய் தான் காரணமா?

நாடு முழுதும் வீசிய மோடி அலையை தமிழ்நாட்டில் மட்டும் வீசாமல் அதிமுக அலை வீசியுள்ளது, அதிமுக தனித்து தேர்தலை சந்தித்தாலும் 37 தொகுதிகளில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது, இதற்கு அதிமுகவினர் தேர்தலுக்கு கடைசி நான்கு நாட்களில் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தது தான் காரணமா என்று அலசினால் அது மட்டும் காரணமல்ல என்று தெரிகிறது. 

1) அதிமுகவினர் கச்சிதமாக ஓராண்டுகளுக்கும் மேலாக தேர்தல் பணி செய்தனர், ஓராண்டுக்கு முன்பே 40 தொகுதிகளிலும் நிற்கிறோம் வேலையை ஆரம்பியுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

2) அதிமுக தலைமை மீது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு மரியாதை கலந்த பயம் உண்டு, தேர்தலில் தோற்றால் பதவி தப்பாது என்பதும் அரசியல் வாழ்க்கை இறங்கு முகம் என்பதும் தெரிந்ததால் துடிப்பாக வேலை செய்தனர், ஆனால் திமுகவில் மாவட்ட பெரும் தலைகள் பலரும் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியில் இருந்ததால் தேர்தல் வேலை செய்யவில்லை 

3) மின்வெட்டு விலைவாசி ஏற்றம் என்றெல்லாம் சிக்கல்கள் இருந்தாலும் மக்களுக்கு இன்னும் திமுக மீதான கோபம் மாறவில்லை 

4) அதிமுக வேட்பாளார்கள் தேர்வில் பெரும்பாலானோர் புதுமுகங்களாகவும் இளைஞர்களாகவும் இருந்தனர், திமுகவிலோ மாவட்ட செயலாளார்கள் விருப்பத்தினால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வயதானவர்களாகவும் கட்சியில் செல்வாக்கில்லாதவர்களாகவும் இருந்தனர், திமுக மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்தில் கட்சியில் தங்கள் பிடியை தளரவிடாமல் இருக்க இப்படி சொத்தை வேட்பாளர்களை தேர்வு செய்தனர் 

5) பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக இணைந்து உருவாக்கிய மூன்றாம் அணியில் கூட்டனிகட்சியின் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பில் இருந்த மக்களுக்கு அதிமுக மட்டுமே மாற்றாக தெரிந்தது.

 6) ஆரம்பித்தில் இருந்தே ஊடகங்கள் அதிமுகவே அனைத்து இடங்களிலும் வெல்லும் என்று கணிப்புகளை வெளியிட்டபடி இருந்தனர், அதிமுகவினரும் முதல்வர் ஜெயலலிதாவும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் நாற்பதும் நமதே என்று வலம் வந்தனர், இந்த நம்பிக்கை அப்படியே வாக்காளர்களுக்கும் சென்று சேர்ந்தது எனவே ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று அதிமுகவினருக்கு வாக்களித்துவிட்டனர் 

7) மோடிக்காக ஓட்டு போடலாம் என்றிருந்தவர்கள் கூட பாஜக போட்டியிட்ட இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் அதிமுகவிற்கே அதிக அளவில் வாக்களித்திருப்பதை 7 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பாஜக வாங்கியுள்ள 5.2% வாக்குகள் தெரிவிக்கின்றன. 

8) புதிய வாக்காளர்களை திமுக எந்தவிதத்திலும் கவரவில்லை, திமுகவின் மீது புதிய வாக்காளர்களுக்கும் மத்திய வர்கத்திற்கும் இருக்கும் கோபம் குறையவில்லை. 

9) அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு கட்சிக்காரர்களால் எந்த தொந்தரவும் இல்லாதது அந்த கட்சியின் மீது பொதுமக்களுக்கு எந்த அதிருப்தியையும் ஏற்படுத்தவில்லை.

மாட்டின் கொம்பை பிடித்துப் போராடுவதை விடுத்து.......!

உணவுக்காக மாடுகளை வளர்க்கும் தொழிலை அங்கீகரித்திருந்த புத்தமத அசோகர் ஆண்ட நாடு இது. மிருகங்களை வதைக்கக்கூடாது என்ற போர்வையில் ஆடு, மாடு, கோழிகளை உண்ணக்கூடாது என்ற விஷம பிரச்சாரம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகிறது.

அதேசமயம், உச்சநீதிமன்றம் இதுபோன்ற ஒருமுரட்டுத்தனமான – அறிவுக்கு வேலையற்ற ஒரு விளையாட்டைத் தடைசெய்ததை, தமிழர்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவரும் மனமாரப் பாராட்டி வரவேற்க வேண்டும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு திணைவழிப்பட்ட பண்பாட்டுக் காலத்தில் காடும், காடு சார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்துத் தமிழர்களின் பொருளாதாரம் ஆடு, மாடுகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டங்களில் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏறுதழுவுதல் அவசியமாக இருந்திருக்கிறது. ஆடு,மாடுகளை வைத்துப் பிழைக்க வேண்டியவர்களுக்கு அவற்றை அடக்கும் தெம்பு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த முறை இருந்திருக்கலாம். 21 ஆம் நூற்றாண்டில் – வாழ்வதற்கு உடல் பலத்தைவிட மூளை பலமே முக்கியம் என்ற இந்த யுகத்திலும் கற்கால விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பது தேவையற்றது.

ஜல்லிக்கட்டு என்பது தொன்மையான விளையாட்டு – சங்க இலக்கியங்களிலேயே இதற்கு சான்றுகள் உள்ளன - தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றெல்லாம் இணைய தளங்களிலும், முகநூல்களிலும் வாதங்கள் அனல் பறக்கின்றன. எனவே அந்தச் சங்க இலக்கியங்களில் இந்த ஜல்லிக்கட்டைப் பற்றி அப்படி என்னதான் இருக்கின்றது என்று பார்க்கும்போதுதான் ஒரு ஜாதிக்குள் அல்லது ஒரு குலத்துக்குள் திருமணம் முடிக்கும் முறையோடு பிண்ணிப் பிணைந்ததே இந்த ஏறுதழுவல் என்பதைக் காணமுடிந்தது.

தொல்காப்பியத்திற்கும் முந்தையது என்ற ஒரு முற்றுப்பெறாத விவாதத்தில் உள்ள சங்க இலக்கியம் கலித்தொகை. அதில் முல்லைக்கலி என்ற பகுதியில் 103 வது பாடல் இதோ...

கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு:
குரவை தழீ, யாம், மரபுளி பாடி!

தான் காதலிக்கும் பெண்ணின் மார்பகங்களைப் போலக்கருதி ஆர்வமுடன் காளையைத் தழுவி, அணைத்து, அடக்கும் ஆயர் இளைஞரே, தம் மகளுக்குத் துணையாக வர வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள். கொம்புகளுக்கு அஞ்சி, உயிருக்குப் பயந்து காளையை அடக்கும் போட்டியில் இறங்காத ஆய இளைஞரை ஆய மகள் விரும்பமாட்டாள்.

என்கிறது இந்தப்பாடல்.

டிவிட்டரில் இன்றைய சூடான செய்தி


டிவிட்டர் என்ன நினைக்கிறதோ அதை தான் உலகம் நினைக்கிறது என்று சொல்லலாம்.இதையே ,உலகம் என்ன நினைக்கிற‌தோ அதையே டிவிட்டர் நினைப்பதாகவும் சொல்லலாம்.

உலகம் எதை பற்றி பேடிக்கொண்டிருக்கிறதோ அதை பற்றி தான் டிவிட்டரும் பேசுகிறது.அதாவது டிவிட்டரில் குறும்பதிவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.இப்படி எந்த தலைப்பின் கீழ் அதிக குறும்பதிவுகள் வெளியாகின்றனவே அந்த தலைப்பு கவனத்தை ஈர்த்து உலகை பேச வைத்து விடுகின்றன‌.

இப்படி டிவிட்டரில் முன்னிலை பெறும் தலைப்புகள் திடிரென பரப‌ரப்பை ஏற்படுத்தி மேலும் கவனத்தை ஈர்க்கும்.அதன் பிறகு பார்த்தால் எங்கும் அந்த தலைப்பு பற்றி தான் பேச்சாக இருக்கும்.டிவிட்டர் மொழியில் இவை டிரென்டிங் டாபிக் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரே தலைப்பு பற்றி பலரும் குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்ளத்துவங்கும் போது அவை தானாக மேலெழுத்து வந்துவிடுகின்ற‌ன.

இவ்வாறு டிவிட்டரில் மேலெழும் தலைப்புகளை கோட்டை விடாமல் இருக்க விரும்பினால் ‘வாட் த டிரென்ட்’ இணையதளம் அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இதோ இந்த நிமிடத்தில் டிவிட்டரில் எந்த தலைப்பு மேலெழுகிறதோ அந்த தலைப்புகளை எல்லாம் தொகுத்தளித்து நம் பார்வைக்கு வைக்கிறது.அதனால் தான் உடனடி வலையின் முகப்பு பக்கம் என்றும் பெருமைபட்டு கொள்கிற‌து.

நாளிதழ் உலகில் சுடச்சுட செய்திகள் என்று சொல்வது போல டிவிட்டர் உலகில் அந்த நிமிடத்தில் பரிமாறப்படும் தகவல்கள் ரியல் டைம் என்று சொல்லப்படுகின்றன.இந்த உடனடி செய்திகளில் கவனிக்க வேண்டியவை எவை என்பதை தான் இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.

செய்தி தளங்களில் எப்படி முக்கிய செய்திகள் பட்டியலிடப்பட்டிருக்குமோ அதே போல இந்த தள‌த்தில் டிவிட்டரில் இப்போது எந்த தலைப்பு முக்கியமாக இருக்கின்றனவோ அவை எல்லாம் வரிசையாக பட்டியலிடப்படுகின்ற‌ன.

குறிப்பிட்ட தலைப்பை கிளிக் செய்தால் அந்த தலைப்பில் வெளியான குறும்பதிவுகளை எல்லாம் படிக்கலாம்.முதல் பத்து தலைப்புகள் வரிசையாகவும் அதற்கு மேலே மற்ற தலைப்புகள் குறிச்சொற்களாகவும் இடம் பெறுகின்றன.

இவை உலகலாவிய போக்குகள் .அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டில் எநத தலைப்பு டாப்பில் இருக்கின்றன என்பதையும் தனியே தெரிந்து கொள்ளலாம்.வலது பக்கத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட நாட்டு டிவிட்டர் போக்குகளை தெரிந்து கொள்ளலாம்.அதே போல முக்கிய நகரங்களுக்கான டிவிட்டர் போக்குகளையும் அந்த அந்த நகரங்களை கிளிக் செய்து பார்க்கலாம்.

அது மட்டும் அல்ல,ஒவ்வொரு தலைப்புடனும் அந்த தலைப்பு டிவிட்டரில் பிரபலமானதற்கு என்ன காரணம் என்பதற்கான சுருக்கமான விளக்கமும் இடம் பெறுகிறது.இந்த விளக்கத்தை உறுப்பினரகளே சமர்பிக்கலாம் என்பது தான் விசேஷம்.அப்படியே டிவிட்டரில் முன்னிலை பெறும் தலைப்புகளையும் சமர்பிக்க‌லாம்.குறும்பதிவுகளை அப்படியே ரீடிவீட் செய்ய‌லாம் என்பதை சொல்லவே வேண்டாம்.

ஆக டிவிட்டரும் உலகமும் என்ன நினைக்கிறது என அறிய விரும்பும் போதெலாம இந்த தளத்திற்கு விஜயம் செய்யலாம் .இல்லை இந்த தளத்தை டிவிட்டரில் பின் தொடர்ந்தால் டிவிட்டரையே பின் தொடர்வது போல பிரபலமான தலைப்புகளை எல்லாம் உடனே உடனே தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி; http://www.whatthetrend.com/

பின்குறிப்பு; இப்போது இந்தியாவை பொருத்தவரை சச்சின் 100 வது சத்ததை அடிப்பதற்கு முன் என்ன விஷயம் எல்லாம் நடக்கும் என்பது தொடர்பான குறும் பதிவுகளே முன்னணியில் உள்ளன.a

Wednesday, May 14, 2014

சிவப்பு என்பது அழகல்ல!


திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே, இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி. ஏழாம் அறிவு படத்தில் தோன்றிய ஸ்ருதி ஹாசனா இது என்று ஆச்சரியப்படும் பொலிவுடன் வலம் வர ஆரம்பித்திருக்கும் இவர் தற்போது தாய்மொழியான தமிழிலும் தனிக் கவனத்துடன் படங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் போட்டோ ஷூட்டுக்காகச் சென்னை வந்திருந்த ஸ்ருதியுடன் பேசியதிலிருந்து.....

தெலுங்குத் வலுவான திரைப்படக் குடும்பப் பின்னணியில் இருந்து இன்று முன்னணிக் கதாநாயகியாக வளர்ந்து நிற்கிறீர்கள். இந்த இடத்திலிருந்து உங்களது திரைப்பயணத்தை எப்படி எடுத்துச் செல்லத் திட்டம்?

நான் கமல் ஹாசன், சரிகா பெண்ணாக வாய்ப்பு தேடியதில்லை. எனது திறமைக்காக நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. எனது படங்களில் எனக்காக எனது அப்பா அம்மா வந்து நடிக்கவில்லை. நான் நடிக்கும் படங்கள் ஆடியன்ஸூக்குப் பிடித்தால் மட்டுமே நான் முன்னேறிப் போக முடியும். இந்தியில் ‘ஹை புரஃபைல் லாஞ்ச்சிங் பேட்’ என்ற பரபரப்புடன்தான் நான் ‘லக்’ படத்தில் அறிமுகமானேன். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. முதல் படத்திலேயே நான் தோல்வியை ருசித்தேன். அது மிகவும் கசப்பானது. அதிலிருந்துதான் என்னைப் பற்றியே நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் இருபது வருடங்கள் கழித்து நான் நடித்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால் நான் அதில் என்ன செய்திருக்கிறேன் என்பதை டிவி, டிவிடி எல்லாவற்றிலும் பார்ப்பார்கள். அதனால் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்காமல் என் பயணத்தை இயல்பாகக் கடக்க விரும்புகிறேன்.

உங்களது அறிமுகப் படத்தில் தொடங்கி கிளாமராக நடிக்க நீங்கள் தயங்கியதில்லை. ஆனால் தெலுங்குப் படங்களில் கொஞ்சம் அதிகமான கிளாமரில் நடிக்கிறீர்கள்? ரசிகர்கள் ஏன் இந்தப் பாகுபாடு என்று கேட்கிறார்கள்?

அது எனது கையில் இல்லை. நான் டைரக்டரின் ஆக்டர். டைரக்டர் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்போது அதை நான் தட்டுவதில்லை. ஒரு கதாபாத்திரம் நமக்குப் பிடித்துப் போய்விட்டால், அதைச் சிறப்பாகச் சித்திரித்துக் காட்ட இயக்குநர் விரும்பும் விதத்தில் நாம் நடித்துக் கொடுக்க வேண்டும். இந்த கிளாமர் வேறுபாடு என்பது கதையும், என் கதாபாத்திரமும் சம்பந்தப்பட்டது. ஏழாம் அறிவு படத்தில் வந்த சுபா சீனிவாசனுக்கோ, ‘கப்பர் சிங்’ படத்தில் வந்த பாக்கியலட்சுமிக்கோ கிளாமர் தேவைப்பட வில்லை. காரணம் அந்தக் கதாபாத்திரங்கள் அப்படி. ஆனால் ‘ரேஸ் குரம்’ ஸ்பந்தனா கிளாமராக இருந்தால்தானே சரி.

தவிர நான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று ரசிகர்களைப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. என்னளவில் அவர்கள் இந்திய ரசிகர்கள். ரசனையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் மெல்லிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இமயமலை அளவுக்கு இல்லை.

திரையில் அறிமுகமானபோது இருந்ததை விட இப்போது பேரழகுடன் இருப்பதாக டிவிட்டரில் உங்களது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களே?

அழகென்றில்லை; உடல், பணம், வீடு என எதுவாக இருந்தாலும், நமக்குக் கிடைத்ததைக் கொண்டாடும் மனநிலை நமக்கு இருக்க வேண்டும். நான் அழகாக இருக்க வேண்டும் என்று அதிலேயே கவனத்தைக் குவித்துக் கொண்டிருப்பதால் அழகு கூடவோ குறையவோ செய்யாது. அழகு என்பதே இயல்புதான். கடவுள் கொடுத்திருப்பதைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் அழகாக இருக்க வேண்டும் என்று பெரிதாக மெனக்கிடுவதில்லை. அழகான அம்மா, அப்பா, தங்கையுடன் வளர்ந்ததுகூட எனது இந்த அணுகு முறைக்குக் காரணமாக இருக்கலாம்.

அழகைப் பராமரிப்பதற்காகப் பல கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் பெண்களைப் பற்றி?

நிறைய பேர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் மனதுக்குப் பிடித்த உணவு, நிம்மதியான உறக்கம் இரண்டுமே உங்கள் அழகைப் பாதுகாத்துக்கொள்ள மிக முக்கியம். 4 மணிநேரம் தூங்கினாலும் அது நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் எல்லோருக்கும் வரலாம். ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்குமே தீர்வு உண்டு என்பதைப் பற்றி நம்மில் பலரும் நினைப்பதில்லை. அப்படி நினைத்துவிட்டாலே பாதி குற்றங்கள் குறைந்துவிடும்.

நீங்கள் சைவ உணவு விரும்பியா?

இல்லை. நான்-வெஜிட்டேரியன் சாப்பிடுவேன். ஆனால் பீப் சாப்பிட மாட்டேன். தென்னிந்திய உணவு வகைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். பட்டினி கிடப்பது, குறைவாகச் சாப்பிடுவது அப்படியெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் என்னிடம் கிடையாது. எவ்வளவு அதிகமாகச் சாப்பிட்டாலும் அதற்கு ஏற்ப ‘ஒர்க் அவுட்’ செய்துவிடுவேன்.

ஸ்ருதியின் சிங்கிள் இசை ஆல்பம் கடந்த ஆண்டே வெளியாகும் என்றார்களே?

இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்களில் நடிப்பதால் இசையமைப்பாளர் ஸ்ருதி அவ்வப்போது பாடுவதோடு சரி. படப்பிடிப் பில் இசைக்கோப்பு செய்து, மற்றவர்களின் நேரத்தை நான் திருட விரும்பவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் எனது சிங்கிள் வெளியாகும் என்று உறுதியாகச் சொல்வேன்.

திரையுலகில் உங்கள் தோழன் யார்?

இசைதான் என் தோழன். காலைமுதல் மாலைவரை அவன் என்னுடனே பயணிக்கிறான். என் காதுகளுக்கு அருகிலேயே பாடிக்கொண்டிருக்கிறான். எனக்குத் திரைப்படங்களின் பின்னணி இசைக் கோவையைக் கேட்பது மிகவும் பிடிக்கும். திரையிசைக்கு வெளியே நிறைய புதுமுகங்கள் ஃபிரெஷ்ஷான திறமைகளுடன் வந்துகொண்டே இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் அனிருத்தின் இசை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

யார் மீதும் காதல் வரவில்லையா?

இல்லை. காதல் சுயநலமற்றதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது நம் வாழ்க்கையைக் கெடுத்து விடும். தற்போது நிஜ வாழ்க்கையில் காதலிப்பது பற்றிச் சிந்திக்கச் சுத்தமாக நேரமில்லை.

தனியாக வசிப்பது பிடித்திருக்கிறதா?

தனியாக வசிப்பதில்தான் பொறுப்புகள் இன்னும் அதிகம் என்று சொல்வேன். அம்மா, அப்பா இருவரது வீட்டின் கதவுகளும் திறந்தே இருக்கின்றன. ஆனால் நான் வீட்டில் மாதம் ஐந்து நாள் தனியாக இருந்தாலே ஆச்சரியம். மற்ற எல்லா நாட்களும் பல்வேறு நகரங்களின் படப்பிடிப்புகளில் இருக்கிறேன்.

உங்கள் அப்பா வணிக விளம்பரங்களில் நடிப்பதை அறவே தவிர்த்தவர். ஆனால் நீங்கள் விளம்பரத் தூதுவராக ஆர்வம் காட்டுகிறீர்களே?

அப்பாவின் முடிவு அவரது தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் நான் தயாரிப்பின் தரத்தைப் பார்க்கிறேன். நான் விளம்பரத் தூதுவராக ஒப்புக்கொள்ளும் தயாரிப்பை முதலில் நான் பயன்படுத்துவேனா என்பதைப் பார்த்தே ஒப்புக்கொள்கிறேன். அழகு சாதன க்ரீம் விளம்பரங்களை நான் அடியோடு தவிர்த்து வருகிறேன். பணத்தைக் கொட்டித் தருகிறோம் என்றார்கள். நான் மறுத்து விட்டேன். சிவப்பு நிறமாக மாறுவதுதான் அழகு என்று வரையறுப்பது எத்தனை முட்டாள்தனம்? நிறத்துக்கும் அழகாக இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அடிப்படையே தவறாக இருக்கும்போது எப்படி என்னால் ஒப்புக் கொள்ள முடியும்?

கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்

யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.

வழிகாட்டும் ஒளி

ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்கலாம்.

நோட்டின் முன்பக்கத்தின் மையத்தில் அச்சிடப்பட்டுள்ள எண், இருவேறு கோணங்களில் பார்க்கும்போது இருவேறு வண்ணங்களில் தெரியும் வகை யில் விசேஷ மை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

நோட்டைக் கிடை மட்டத்தில் வைத்துக்கொண்டால் இந்த எண் பச்சை நிறத்திலும் சாய்த்தால், நீல நிறத்திலும் இருக்கும். நோட்டின் கீழ்ப்புறத் திலும் வலது ஓரத்திலும் இருக்கும் எண் கட்டங்களின் மீது வெளிச்சத் தைப் பாய்ச்சினால் அது ஒளிரும்.

நோட்டின் முன்புறத்தில் ஒரு நேர்க்கோடு விட்டுவிட்டுச் செல்லும். அதில் பாரத் (இந்தி), ஆர்.பி.ஐ. என்ற எழுத்துகளும் ரூபாய் நோட்டின் எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டைச் சாய்க்கும்போது நூலின் நிறமும் பச்சையிலிருந்து நீலமாக மாறும். வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பார்க்கும்போது நூல் அறுபடாமல் முழுதாகத் தெரியும்.

நல்ல நோட்டுகளில் பின்புற முள்ள பூ வேலைப்பாடும் ஊடு ருவிப் பார்க்கும் வகையில் இருக் கும். முதல் பக்கமுள்ள பூ வேலைப் பாட்டுடன் அது பொருந்தும். வெளிச்சத்துக்கு நேராக நோட்டை வைத்துப்பார்க்கும்போது ரூபாய் நோட்டின் எண், கண்ணாடிக்கு நேராகக் காட்டினால் தெரிவதைப் போன்ற பிம்பத்தில் இருக்கும்.

புடைப்பான மை

நல்ல நோட்டுகளில் எண்கள் கைகளால் தொட்டு உணரப்படும் வகையில் இன்டாக்ளியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும். பார்வையற்றவர்களும் கைகளால் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஏற்பாடு. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று மேலேயும் ரூபாய் நோட்டின் மதிப்பு நடுவில் இந்தியிலும் மகாத்மா காந்தியின் உருவமும் இப்படி இன்டாக்ளியோ முறையில் புடைப்பாக இடம்பெற்றிருக்கும். மகாத்மா காந்தியின் படத்துக்கு வலதுபுறத்தில் ஆர்.பி.ஐ. என்ற எழுத்தும் ரூபாய் எண்களும் சிறிய வடிவிலான எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும். உருப் பெருக்கிக் கண்ணாடி உதவியுடன் இவற்றைப் பார்க்கலாம்.

இடதுபுறத்தில் அசோகர் ஸ்தூபி சின்னத்துக்கு மேலே அடையாளக் குறியொன்று உயர்த்தப்பட்ட வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும். வெவ்வேறு வகையிலான முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப இது மாறும். பார்வையற்றவர்கள் இதைத் தடவிப் பார்த்து ரூபாய் நோட்டின் மதிப்பை அறிவார்கள்.

ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 2005- ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டில் இது இருக்காது. பழைய நோட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறைவு என்பதால்தான் அவற்றைப் புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ள ஆர்.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது.

சோதித்துப் பாருங்கள்

1,000 ரூபாய் நோட்டில் மட்டுமே ரூபாய் நோட்டின் எண், பாதுகாப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளில் ரூபாயின் எண், நிறம் மாறும் மையில் அச்சிடப்படவில்லை. எனவே இவற்றைச் சாய்த்துப் பார்த்தாலும் எண்ணின் நிறம் அப்படியே இருக்கும். 10 ரூபாய் நோட்டில், பார்வையாளர்கள் தடவிப் பார்த்து அறியும் வகையி லான மையில் எண் அச்சிடப்பட வில்லை. செங்குத்தான கோட்டில் மறைக்கப்பட்ட படமும் இல்லை.

கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகு அவற்றைக் கொண்டு எதையும் வாங்க முயற்சிக்காதீர்கள். (நீண்ட நாள் கடனையும் அடைத்துவிடா தீர்கள்!). தெரிந்தோ தெரியா மலோ நீங்கள் கள்ளநோட்டைக் கொடுத்தால், அதை வைத்திருந் ததற்காகவே உங்களைக் கைது செய்யலாம். எங்கிருந்து உங்கள் கைக்கு வந்தது, யார் கொடுத்தார்கள் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் போலீஸ் நிலையத்தில் கொடுத்துவிடுங்கள்.

இது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது, விவரங்கள் தேவை என்று கருதினால் பின்வரும் இணையதள முகவரி யைத் தொடர்பு கொள்ளவும்: www.paisabolthai.rbi.org.in

Thursday, May 8, 2014

பிரபலங்களின் வாழ்வில் ......


சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தைஅடைந்தவர்கள் யாருமில்லை.சரித்திரம் படைத்தஒவ்வொருவருக்குப் பின்னாலும்பல சோதனைக் கதைகள்இருக்கின்றன. வெற்றியைவிரும்பும் இளைஞர்கள்எத்தகைய சவால்களையும்சந்திக்கும் மனப்பக்குவத்தைவளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்கு இல்லாமல் யாரும்பயணிப்பதில்லை. ஆனால்பள்ளங்களை கடக்காமல் யாரும்மேட்டுக்கு செல்ல முடியாது. உயரம் எவ்வளவு அதிகமோ அதே அளவு பள்ளம்உயரத்தின் இருபுறமும் இருக்கிறது. உயரத்துக்கு செல்லவும் சவால்களைச்சந்திக்க வேண்டும். அதே உயரத்தை நிலைநிறுத்தவும் சோதனைகளைஎதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயரத்தில் இருந்து அதலபாதாளத்தில்விழ நேரிடும். எனவே எப்போதும் சவால்களுடன் போராடுவதே வாழ்க்கை.

இங்கு ஒரு கதை மூலம் விளக்குவது சரியாக இருக்கும்.

விவசாயி ஒருவர் வான்கோழி வளர்த்து வந்தார். அவரது மகளும்வான்கோழியிடம் பாசமாயிருந்தார். தானியங்கள் மற்றும் உணவை அளித்துசெல்லமாக கவனித்துக் கொண்டனர்.

மூன்று ஆண்டுகளில் அந்த வான்கோழி கொழுகொழுவென வளர்ந்துவிட்டது.இதனால் வான் கோழியின் மனதில் இருந்து பயம் போய்விட்டது. நமதுஎதிர்காலம் முதலாளியால் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்றுவான்கோழி நினைத்தது. உண்மையிலேயே அவ்வளவு செல்லமாகவேவான்கோழியை விவசாயியின் குடும்பத்தினர் பராமரித்து வந்தனர்.

அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு விசித்திர வழக்கம். அதாவது ஏதாவது ஒருகுடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மற்ற அனைத்து குடும்பத்தினருக்கும்விருந்து அளிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்தமுறை வான்கோழியைவளர்த்த விவசாயி குடும்பத்தார், பிறருக்கு விருந்தளிக்க வேண்டிய நிலை. வேறுவழியின்றி விவசாயி தான் வளர்த்த வான்கோழியை விருந்தாக்க முடிவுசெய்தார்.

கதையில் வரும் வான்கோழியின் எண்ணத்தில் வாழ்பவர்கள் பலர்இருக்கிறார்கள். வாழ்க்கையின் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதெரியாமல் தங்களை யாராவது பாதுகாப்பார்கள் என்று கருதி இருந்தால் முடிவுஎதிர்மறையாகவே அமைந்துவிடும். சமீபத்தில் ஏற்பட்ட உலக பொருளாதாரமந்தநிலை இதற்கு சரியான உதாரணம்.

அமெரிக்க பொருளாதாரம் சற்றும் எதிர்பாராத வேளையில் திடீரெனமந்தநிலைக்குச் சென்றது. உலக அளவிலும், அமெரிக்காவில் வாழ்பவர்கள்மத்தியிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் எதிர்காலம்என்பது எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று அவர்கள் நம்பியதுதான்.

பலரால் இந்த மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை.பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலில் பயணித்தவர்களுக்கு எதிர்பாராத சவால்களைஎதிர்கொள்வது எளிதில் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

மாணவர்களாக இருக்கும்போதும் சரி, வேலை உலகில் காலடி எடுத்துவைக்கும்போதும் சரி ஒவ்வொருவரும் சவால்களை எதிர்கொள்ள தங்களைபழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்கள் குறித்த பாடங்களை ஆசிரியர்கள்கருத்தாக கூறுவதோடு மட்டுமல்லாமல் அனுபவ ரீதியாகவும் அறிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.

சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்ட சிலரைப் பற்றி கூறுவது நிச்சயமாகஇளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமையும். வாழ்க்கை என்பதுசவால்கள் நிறைந்ததாக ஆகும்போது சவால்களே வாழ்க்கை ஆகி விடுவதைகாணலாம். பிரச்சினைகள் தான் சிலரை சிறப்பாக செயல்பட வைக்கிறது.இவ்வாறு சிறப்பாக செயல்படுபவர்கள் தங்களது தனித்திறமையாலோ, உடல்வலிமையாலோ இத்தகைய சிறப்பை வெளிப்படுத்த முடியாது. அவர்களதுமனோபாவமும், அணுகு முறையுமே இத்தகைய தயார் நிலையைஉருவாக்குகிறது.

நேருவின் வாழ்க்கையில்...

நேரு சுதந்திர போராட்ட காலத்தில்சுமார் பதிமூன்று ஆண்டுகள்சிறைவாசம் செய்தார். பல்வேறுகுற்றங்கள் புரிந்து சிறைவாசம்இருந்தவர்களுடன் அவர்தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலைஏற்பட்டது. விஷ ஜந்துக்களானதேள், பாம்பு போன்றவையும் அந்தச்சிறையில் இருந்ததாககூறப்படுகிறது. ஒருமுறைசிறைக்கூடம் நிரம்பி வழிந்தபோதுகால்நடைகளை பராமரிக்கும் கூடம்சிறையாக பயன்படுத்தப்பட்டது.அதிலும் நேரு தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்தெரிகிறது.

வசதியான குடும்பச் சூழலில் வளர்ந்த நேரு இவற்றையெல்லாம் பெரிதாககருதவில்லை. அதற்கு மாறாக சிறைவாசத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திபுத்தகங்களை எழுதினார். அவரது மனோபாவமும், எதிர்காலத்தைஎதிர்கொண்ட திறனுமே அவருக்கு ஏற்பட்ட பல்வேறு இடர்களை சமாளிக்கும்ஆற்றலை அளித்தது. இத்தகைய தலைமைப் பண்பு என்பது அவரவருக்குள்இருந்தே வெளிப்பட வேண்டும்.

வறுமை வார்த்த தொழில் அதிபர்
இதேபோல் ஜப்பானைச் சேர்ந்தவர்கொனசுகே மட்சுசிதா. மிகவும்எளிமையான குடும்பத்தைச்சேர்ந்தவர். 8 பேருடன் பிறந்த அவர்உடல் ஆரோக்கியம்குன்றியவராகவும் இருந்தார்.அவருடன் பிறந்தவர்களில்ஐந்துபேர் பரிதாபமாகஇறந்துபோனார்கள். குடும்பச்சூழல்காரணமாக மட்சுசிதா தனதுஒன்பதாவது வயதில் படிப்பைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மரத்துண்டுகளைசேகரித்து விற்பனை செய்தார்.பின்னர் இரு சக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் பணியாற்றினார்.நாளடைவில் அங்கிருந்துவெளியேறி எலக்ட்ரீசியன் பணிமேற்கொண்டார். தனது ஓயாதஉழைப்பின் காரணமாக தனதுவீட்டிலேயே எலக்ட்ரிக்ஜாக்கெட்டை உருவாக்கினார். தனது மனைவிக்கு சொந்தமான பொருட்களைஅடகு வைத்து இந்த தொழிலை அபிவிருத்தி செய்தார்.

பின்னாளில் சுமார் 30 மணி நேரம் செயல்படும் வகையிலான இருசக்கர வாகனவிளக்கை கண்டுபிடித்தார். மட்சுசிதா என்ற பெயரில் இவர் நடத்தி வந்தஎலக்ட்ரிக் தொழில் நிறுவனம் பின்னர் உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமாகவளர்ந்தது. ஆசியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட அவர் பானாசோனிக்,நேஷனல் போன்ற நிறுவனங்களின் உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகித்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் சிறந்தநாவலாசிரியர். தனதுஒன்பதாவது வயதில் பள்ளியில்சேர்ந்து ஒரு சில ஆண்டுகள்தான் பயின்றார். அவரது அப்பாகடன் தொல்லை காரணமாகசிறை செல்ல நேர்ந்ததால்,குடும்ப பொறுப்பு அவரதுதலையில் விழுந்ததே இதற்குகாரணம். இதனால்பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டும்வேலையைச் செய்தார்.

பின்னர் ஒரு வக்கீலிடம்குமாஸ்தாவாக சேர்ந்தார்.ஆர்வம் காரணமாக தானாகவே சுருக்கெழுத்து பயின்றார். இது அவருக்குநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தந்தது. அப்போது அவர் சந்தித்தமனிதர்களை கதாபாத்திரங்களாக சித்தரித்து நாவல் எழுதும் முயற்சியில்ஈடுபட்டார்.

தனது அதீத தன்னம்பிக்கையால் இருபத்து நான்காவது வயதில் துணிச்சலாகமுடிவெடுத்து முழுநேர எழுத்தாளராக மாறினார். பின்னர் அவர்உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியராக புகழ்பெற்றார். இடர்பாடுகளையும்,வறுமையையும் சவாலாக எடுத்துக் கொண்டு துணிச்சலாக செயல்பட்டதேஅவரது இந்த வெற்றிக்கு காரணம். முதன்முதலில் பத்திரிகைகளில்தொடர்கதையை எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்தவரும் இவர்தான்.அவரது நாவல்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை இன்றும் விரும்பிவாசிக்கப்பட்டு வருகிறது.

துவண்டு விடாத மனமே துணை

பால் விட்ஜென்ஸ்டெய்ன்என்பவர் பியானோ வாசிப்பதில்ஆர்வம் உடையவர். முதல்உலகப்போரில் தனது வலதுகையை இழந்தார். சாதாரணமாகஒருவிரலில் காயம் ஏற்பட்டால்கூட இசைக்கருவியைகையாளுவது கடினம். ஆனால்அவர் வலது கையை இழந்தபின்பும் மனம் தளராமல், எஞ்சிஉள்ள இடது கையால் எவ்வாறுஇசைப்பது என்பதை கற்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிரபலமான பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் இதுதொடர்பாக கேட்டார்.அப்போதைய பிரபல இசை அமைப்பாளரான ரோவெல் அவருக்கு உதவினார்.அவர் இசை ஆர்வம் கொண்ட பால் விட்ஜென்ஸ்டெய்னுக்கு ஏற்றவாறு இசைஅமைத்துக் கொடுத்தார். பின்னாட்களில் பிறர் தனது குறையை அறியாவண்ணம் இசைத்து கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார் பால்விட்ஜென்ஸ்டெய்ன். இது அவரது மன உறுதியையும், சவால்களைஎதிர்கொள்ளும் ஆற்றலையும் நமக்கு உணர்த்துகிறது.

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன்ஹாக்கின்ஸ் என்பவரும் பல சவால்களைஎதிர்கொண்டவர்தான். பேசுவது, நடப்பது,சுவாசிப்பது என அனைத்திற்கும் அவர்எந்திரங்களின் உதவியையே நாடவேண்டியஅளவிற்கு உடல்திறன் குன்றி இருந்தார்.இதை அவர் தனது சாதனைக்கு தடையாகஒருபோதும் கருதியது இல்லை. அவரதுஅறிவியல் கொள்கைகள் இன்று விஞ்ஞானஉலகில் அனைவரின் கவனத்தையும்கவர்ந்துள்ளது.

பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்து அவர் எழுதிய"காலத்தை பற்றிய வரலாறு'' என்ற நூல்மிகவும் பிரசித்திபெற்ற புத்தகம் ஆகும்.பல்வேறு விருதுகளை பெற்ற அவர்கூறும்போது, "ஒவ்வொருவரும் எந்தச்சூழ்நிலையிலும் தங்களால் முடிந்த அளவிற்குமுயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவே வெற்றிப்பாதைக்கு அவர்களைஅழைத்துச் செல்லும்'' என்கிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சூழ்நிலைகளையும், இடர்பாடுகளையும்குறை கூறுவதில்லை. தங்களது சுயமுயற்சியால் எவ்வாறு தடைகளைஎதிர்கொள்வது என்ற சிந்தனையிலேயே செயல்படுவார்கள். தங்கள் மேல்நம்பிக்கை இல்லாதவர்களே வெவ்வேறு காரணங்களை கூறி தங்களதுதோல்விக்கு நியாயம் கற்பிக்க முயல்வார்கள். ஆகவே இளைஞர்களே,எப்போதும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். சமாளிக்கும்திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். சாதனைகள் எல்லாமே உங்கள்தோள்களைத் தழுவி நிற்கும்.

Thursday, May 1, 2014

போலி சாமியார்கள்

எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்தலும்  சாமியார் வாயில் இருந்து லிங்கம் எடுத்தால் போதும் நாம் போய் வரிசையில் நின்றுஎனக்கும் ஒரு லிங்கம் எடுத்து தாருங்கள் என்று கேட்போம் போலி சாமியார்கள் பல வகை அவர்களை பற்றிதான் பார்க்க போகிறோம்சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா சாமி கும்பிட சென்றார் அங்கு அவர் சாமி கும்பிடு கொண்டு இருந்தார் ஷில்பா, அப்போது ஒரு பூசாரி வந்து அவரது கன்னத்தில் முத்தம் இட்டார். கோவில் பூஜை தான் நடக்கும் இது என்ன வகை பூஜை தெரியவில்லை.

இங்கோ சிதம்பரம் கோவில் உள்ளே தேவாரம் திருவாசகம் பாட கூடாதுன்னு சொல்லுவார்கள் ஆன்னால் இவர்கள் மட்டும் அங்கு காம லீலை நடத்துவர்கள்.இந்த சாமியாரை பார்த்தால் உங்களுக்கு மிகவும் கோபம் வரும் இந்த சாமியார்க்கு காலில் அதிகம் சக்தி இருக்கிறதாம், இவர் கால் நாம் மீது பட்டால் நமக்கு எல்லாம் நோயும் குணம் அடைந்து விடுமாம் இதுதான் முட நம்பிகையின் உச்சம்

அதற்காக இப்படி கை குழந்தை மீது ஏறி நிற்பது?
இந்த சம்பவம் நடந்தது,பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில்.அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள்.


இப்பொழுது ஒரு பெண் சாமியார் இவர் திருவண்ணாமலையில் இவர் இருக்கிறார், இவரிடம் குறி கேட்கவேண்டும் என்றால் ஒரு புல் பாட்டில் தரவேண்டும் இவர் குறி சொல்லும் போது கஞ்ச அடித்து கொண்டுதான் குறி சொல்லுவர்.ஏன் இப்படி குடித்து விட்டு குறி சொல்லுகிறிகள் என்று கேட்டதற்கு அது நான் இல்லை என் மீது கருப்ப சாமி வருவர் என்கிறார்.

அஜித்தின் அசத்தலான 10 திரைப்படம்

ஆசை இது அஜித்தின் நான்காவது படம் இந்த திரை படம் 2oo நாள் வெற்றிகரமாக ஓடியது.அஜித் நடிப்பும் பிரகாஷ்ராஜ் நடிப்பும் மிகவும் நன்றாக இருந்தது. இந்த படத்தின் மூலம் அஜித் என்ற நடிகர் இருப்பது தமிழ் மக்களுக்கு தெரிந்தது.

இசை : தேவா.
தயாரிப்பாளர்: மணிரத்னம்.
இயக்கம்: வசந்த்.


காதல் கோட்டை :1996 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரை படம் மாபெரும் வெற்றி பெற்றது.300 நாட்களை கடந்து ஓடியது இந்த திரை படம் மத்திய அரசின் பொழுது போக்கு திரைப்படம் என்ற விருது பெற்றது.

இசை :தேவா
தயாரிப்பாளர் : சிவா சக்தி பாண்டியன்
இயக்கம் : அகத்தியன்

வாலி 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் முறையாக இரண்டு வேடத்தில் நடித்தார் அதில் ஒரு அஜித் காது கேட்காதவராகவும் வாய் பேச முடியாதவராக நடித்தார். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை நடிப்பில் அசத்திய திரைப்படம். இது தமிழ் மற்றும் கன்னடத்திலும் வெற்றி பெற்றது இந்த திரைபடம் 200 நாட்களை கடந்து ஓடியது .
அஜித்திற்கு வாலி திரை படம் முதல் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது.இசை: தேவா
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம் :s.j. சூர்யா
அமர்க்களம் : திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படத்தில் அஜித்,ஷாலினி ரகுவரன்,நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது 125 நாட்கள் கடந்து ஓடியது. அஜித் மாஸ் அந்தஸ்து பெற்றார். அஜித் ஷாலினியைக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது


இசை: பரத்வாஜ்

தயாரிப்பாளர்: வெங்கடேஷ்வராலயம்

இயக்கம்: சரண்


முகவரி 2000ஆம் ஆண்டு வெளி வந்தது. இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முகவரி திரைப்படம் இவருக்கு மேலும் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. 100 நாட்களை கடந்து ஓடியது. முகவரி திரை படத்திற்கு சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் பெற்று தந்தது


இசை: தேவா
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம் :துரை

தீனா :திரை படம் 2001 ஆண்டு வெளி வந்தது பெரிய ரசிகர் பட்டாளம் பெற்று தந்தது. இந்த தீனா படத்திற்கு பிறகுதான் அஜீத் “தல” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார் .இந்த திரை படம் 150 நாட்களை கடந்து ஓடியது.


இசை: யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர்: விஜயம் சினி கம்பினேஷ்
இயக்கம் : எ.ஆர்.முருகதாஸ்
சிட்டிசன் திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்தது, இந்த சிட்டிசனில் முதல் முறை 9 விதமான கெடப்களில் நடித்தார், 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரை படம்.
இந்த திரை படம் 100 நாட்கள் ஓடியது. அஜித்தின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.

இசை :தேவா
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம் : சரவணா சுப்பையாவில்லன் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் வெளிவந்தது மீண்டும் இரட்டை வேடத்தில் இவர் நடித்த வில்லன் திரைப்படம் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது.100 நாட்களை கடந்து ஓடியது. சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார் நடிகர் அஜித்


இசை :வித்தியசாகர்
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி

இயக்கம்: கே எஸ் .ரவிக்குமார்
வரலாறு திரை படம் 2006 ஆம் ஆண்டு வெளி வந்தது இதில் மூன்று வேடத்தில் நடித்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இரண்டாவது படமான வரலாறு ஒரு மாபெரும் வெற்றியை தந்தது. 100 நாட்களை கடந்து ஓடியது. அப்பா வேடத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது.


இசை : A.R.ரஹ்மான்
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம்: கே எஸ் .ரவிக்குமார்
பில்லா; திரை படம் 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. 1980ல் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரை படம் ரீமேக் செய்யப்பட்டது. ரஜினி சாயல் இல்லாமல் அஜித் நடித்து இருப்பார் இதில் விஷ்னுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்றது. வசூல் சாதனை செய்தது.


இசை: யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர்: சுரேஸ் பாலாஜி

இயக்கம்: விஷ்னுவர்தன்