Saturday, March 8, 2014

நட்பா? காதலா? கண்டுபிடிப்பது எப்படி?

நெருங்கிய நட்பில் காதல் மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது?உங்கள் நண்பன் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா? அதைத் தெரிந்துகொள்வது எப்படி? 

அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...

அவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாதபோது அவர் உங்களை `மிஸ்' செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.

எப்போதும் உங்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவார். எப்போதும் உங்களைப் பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.

அவ்வப்போது ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது அனுப்பிவைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு உணர வைக்க முயல்கிறார் என்று அர்த்தம்.

நண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள்பால் ஈர்க்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து போயிருக்கும்போது காரணம் என்னவென்று கேட்டுத் துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பைத் தாண்டி உங்களைப் பார்க்கிறார் என்று புரிந்துகொள்ளுங்கள்.

நட்பிற்கும், காதலுக்கும் நூலிழை தான் வித்தியாசம். அதனால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்குப் போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் பலரும் காதலை விட நட்புக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

No comments:

Post a Comment