Monday, March 10, 2014

விண்வெளி பயணத்துக்கு வெறும் 3999 ரூபாய்கள் மட்டுமே!

கொஞ்ச நாளா­கவே ’டீ குடிக்­கலாம் வாங்க…’ என்­ற ரேஞ்சில் சில நிறு­வ­னங்­கள் ”விண்­வெ­ளிக்குப் போகலாம் வாங்க…” என மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்­பித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏற்கெ­னவே மார்ஸ் ஒன் எனும் இலாப நோக்­கற்ற (?) டச்சு நிறு­வனம் ஒன்று உல­க­ளவில் செவ்­வாயில் ப்ர்மனென்ட்டாக குடி­யேற ஆட்­களை குலுக்கலில் ஆட்களை செல்க்ட் பண்ணிக் ­கொண்­டி­ருக்­கி­றது. அதே­ போல அமெ­ரிக்க தனியார் நிறு­வ­ன­மொன்றும் நில­வுக்கு சுற்­றுலா செல்ல ஆயத்­த­மாகி வரு­கி­றது.மேலும் சில நிறு­வ­னங்­களும் 2020ஆம் ஆண்­டினைக் குறி­ வைத்து செவ்வாய், நிலா என விண்­வெ­ளி சுற்­று­லா­வுக்கு தயா­ரா­கி­வ­ரு­கி­றது.இப்படி விண்வெளி பயணத்துக்கு இப்போதெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வரர்கள் நடுவில் நீங்களும் இங்கிருந்தே விண்வெளி பயணம் செய்யத் தயாரா?- அதுவும் வர்ட்ச்சுவல் முறையாக பயணிக்க வெறும் 3999 ரூபாய்கள் அல்லது 67 அமெரிக்க டாலர்கள் தான். சர்ரே பல்கலைக்கழகமும் – ஆக்குலஸ் ரிஃப்டும் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் சிறப்பு விமானத்தில் இந்த பேலோடு குன்டம் செல்லும் அதனுள் 3டி கேமரா வழியாய் பேனாராமிக் முறையில் படங்கள் மற்றும் வான் வெளி விஷயத்தை அனுப்விக்க முடியும். இது ஜூலை 2014 முதல் தொடங்க இருக்கிறது. யார் யார் மேலே போக டிக்கட் வாங்க ரெடி?

No comments:

Post a Comment