Sunday, March 30, 2014

பேய்களை நம்பாதே!

பேய்களுக்குப் பயப்படாதவர்கள் என்று இந்த உலகில் யாராவது உண்டா? ஏன் நான் இருக்கிறேனே என்று உங்களில் பலர் துள்ளியெழுவது புரிகிறது. ஆனால் நீங்களும் உங்கள் வயதின் எந்தக் கட்டத்திலாவது பேய்களுக்குப் பயந்துதானே இருப்பீர்கள்? ஆம் என்பதுதான் உண்மை. இல்லை என்று உங்களால் கூறவே முடியாது.

சிலருக்கு பேய்கள் பற்றிய சிறுவயதுப் பயமெல்லாம் தாற்காலிகமாக நீங்கியிருக்கும். சிலருக்கு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். பலருக்கு பேய்களைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. ஆனால் எங்காவது தனியாக இருளில் ஆளில்லா சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் போது உடனடியாகத் துணைக்கு ஓடிவருவது நமது மூளையின் சிந்தனை மையத்தின் சேமிப்பிலிருக்கும் பேய்கள் பற்றிய எண்ணங்கள்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலபேர்தான் பேய்களைப் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். அவர்களைப் பற்றி பிறகு சாவகாசமாகப் பார்க்கலாம்.

இப்போது பயப்படுபவர்கள்…

உங்களுக்குத் தெரியுமா பேய்களுக்குப் பயப்படுபவர்களைவிட தாங்கள் பயப்படுவதைக் காட்டிக்கொள்ளாமல் நடிப்பவர்கள்தான் அதிகம். ஒரு நம்பகமான புள்ளிவிபரம் இதைக் கூறுகின்றது. சரி, புள்ளிவிபரம் இருக்கட்டும் ஒருபக்கம். நாம் இந்தப் பேய்கள் எப்படி உருவாயின அல்லது உருவாக்கப்பட்டன என்றும் ஏன் இந்தப் பேய்கள் பற்றிய பயம் மட்டும் கடைசிவரை எல்லோரையும் இப்படிப் பிடித்தாட்டுகின்றது என்றும் சிறிது அலசுவோம்.

சிறுவயதிலே உங்கள் அம்மா அல்லது பாட்டி, பாட்டன்கள் கதைகள் சொல்லி உணவு ஊட்டியிருப்பார்கள் அல்லது தூங்க வைத்திருப்பார்கள். கொஞ்சம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் உங்களை மிரட்டி வழிக்குக் கொண்டுவர தங்களுக்குத் தெரிந்த பல வித்தைகளை அவர்கள் முயன்றிருப்பார்கள். அவற்றிலே சுலபமானதும் உடனடிப் பலன் தருவதுமான வித்தை பேய்கள் பற்றிய கதைகளும் பயமுறுத்தல்களும்தான் போலிருக்கின்றது.

தொட்டிலில் ஆட்டிக்கொண்டே தாலாட்டுப் பாடும் தாய் அடங்காமல் அழும் தன் குழந்தைக்கு, “அந்தா பேய் வருது…உன்னைப் பார்த்து பல்லைக் காட்டுது… பேசாமல் தூங்கு!” என்று மிரட்டுவதோடு தானும் பயந்தது போல பாசாங்கு செய்வாள். இந்த நிகழ்ச்சி அந்தத் தாயைப் பொறுத்தவரையில் தனது குழந்தையைத் தூங்கச் செய்யும் வெகு சாதாரண உத்தி அல்லது சிறு ஏமாற்று அவ்வளவுதான். ஆனால் அந்தச் சிறுகுழந்தைக்கோ அதன் மனவளர்ச்சியையும் எதிர்கால ஆளுமையையும் பாதிக்கப்போகும் ஒரு முக்கியமான கல்வெட்டுச் செதுக்கல்!

ஆம், ஒரு குழந்தைக்கு தனது தாயின் வார்த்தைகளின் அர்த்தம் முழுமையாகப் புரியாது போகலாம். ஆனால் அவளது ஒவ்வொரு சிறு அசைவும்கூட உடல்மொழிக்குரிய உணர்வுகளாக அந்தக் குழந்தையினால் மிகவும் கவனமாக உள்வாங்கப்படுகின்றது. ஒரு பூனையையோ நாயையோ குழந்தைக்குக் காண்பித்து அந்தத் தாய் பயமுறுத்துவாளாக இருந்தால் அந்தப் பயத்தின் எல்லை மிகவும் குறுகியதாகவே இருக்கும். குழந்தை சிறிது பெரியவானகியதும் ’ஓ! நாயும் பூனையும் இவ்வளவுதானா?’ என்று தெரிந்து பயம் துறந்து விடுவான். மாறாக, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பித்து அவன் பயமுறுத்தப்படுவதால் வாழ்க்கை முழுவதும் காணமுடியாத ஏதோ ஒன்றுக்கு பயந்தபடியேதான் இருக்கப்போகின்றான்.

இந்த எண்ணப்பாங்கு அவனது வாழ்வின் இளமைப்பருவத்திலே சிலையில் எழுத்தாகப் பதிந்து விடுவதால், பின்பு எவ்வளவுதான் அறிவியல் தாக்கங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டாலும் மூளையின் எங்கோ ஒரு ஆழமான புள்ளியில் “அந்தப் பயம்” மட்டும் இருந்து கொண்டேதான் இருக்கும். இதனால்தான் அறிவியல் ரீதியாக அமானுஷ்ய சக்திகளுக்கு வாய்ப்பில்லையென்று நன்கறிந்த விஞ்ஞானிகளுக்குக்கூட லேசான பேய்ப்பயம் இருக்கின்றது.

அடுத்து…

ஆதிகால மக்களிடம் பேய்கள் பற்றிய பயம் எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும் என்று சற்றுப் பார்ப்போம். வேட்டையாடி நாடோடியாக வாழ்ந்த காலத்தில் மழை, இடி, மின்னல், புயல், நிலநடுக்கம், கடற்கோள், கானல்நீர், வானவில், ஆலங்கட்டி மழை, காட்டுத்தீ, கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள், தொற்றுநோய்கள் போன்ற இயற்கையின் நிகழ்வுகளுக்குரிய சரியான விளக்கம் மனிதனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இதனால் காடுமேடுகளில் அலைந்து திரிந்தபோது அவன் கண்ணுற்ற இயற்கையின் பல நிகழ்வுகளுக்கு தான் அறிந்திராத சில சக்திகள்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று கருதினான். அவற்றில் தனக்கு உவப்பான இயற்கை நிகழ்வுகளுக்கு நல்ல சக்திகளும் அழிவு அல்லது அச்சம் தரும் நிகழ்வுகளுக்கு தீய சக்திகளும் காரணம் என அவன் எண்ணியதில் வியப்பேதுமில்லைதானே. பின்பு அவற்றுக்கு முறையே கடவுள்கள் என்றும் பேய்கள் என்றும் பெயரிட்டிருப்பான்.

ஆரம்பத்தில் எளிமையாக இருந்த மனிதனின் வாழ்க்கை காலப்போக்கில் படிப்படியாக சிக்கலடைந்தது. மனிதனின் அறிவியல் வளர்ச்சியும் வாழக்கைத்தரமும் துரிதமாக வளர்ந்த போது ஆதியில் அவனை மிரட்சிக்குள்ளாக்கிய பல இயற்கையின் விளைவுகளுக்குரிய காரணங்களை கண்டறிந்து தெளிவடைந்தான். எனினும் மனித வாழ்வின் சமூக அமைப்புகளிலும் அதன் போக்கினில் ஏற்பட்ட சிக்கலான மாற்றங்களின் காரணமாக அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொள்வதிலும் அதுபற்றிய கருத்தாக்கங்களிலும் வேறுபாடுகள் உண்டாயின.

இதை இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் காட்டு விலங்குகளில் ஒன்றாக வாழந்திருந்த மனிதன் படிப்படியாக நாகரிகமடைந்து தனது சூழலையும் அவற்றில் நிகழும் மாற்றங்களையும் அவதானித்து ஆய்வுகள் பல புரிய ஆரம்பித்தவுடன் இயற்கையின் மாயத்திரைகள் பல விலகத் தொடங்கின. அவற்றின் விளைவாக பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாகின.

ஆரம்பத்தில் மனிதனால் கண்டறியப்பட்ட சகல உண்மைகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கிலே அங்ஙனம் அவன் கண்டறிந்த அறிவியல் உண்மைகள் பலவற்றை-அவை எவ்வளவுதான் ஐயம் திரிபற உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் கூட- ஏற்றுக் கொள்ள முடியாதளவு மனிதனே உருவாக்கி வளர்த்த சில நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் மக்களைத் தடுத்து வைத்தன.

உதாரணமாக ஒருகாலத்தில் நாம் வாழும் பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதப்பட்டது. சகல கோள்களும் சூரியனும் நமது பூமியையே சுற்றி வருவதாகக் கருதப்பட்டு வந்தது. இந்தக் கருத்தை ஏற்றுப் பல மத நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் உருவாகி வலுப்பட்டிருந்தபோது “பூமியல்ல சூரியன்தான் ஞாயிற்றுத் தொகுதியின் மையம்” என்பதை அறிஞர்கள் பலர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார்கள். ஆனால் இந்தப் புதிய கண்டுபிடிப்பை அன்றைய செல்வாக்கிலுள்ள மத நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் அத்தகைய புதிய உண்மைகளை ஆய்ந்தறிந்து கூறும் அறிவியலாளர்களுக்கு மரணதண்டணை உட்பட பல தண்டனைகளையும் வழங்கியது.
இது போலத்தான் அமானுஷ்ய சக்திகள் பற்றிய பயமும் நம்பிக்கைகளும். இத்தகைய நம்பிக்கைகள் அறிவியலாளர்களால் நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும்கூட அவற்றை வைத்துக் காசு பார்க்கும் அல்லது தங்களது ஆதிக்க அடக்குமுறை நலன்களுக்குப் பயன்படுத்தி வருகின்ற ஒரு சரரார் விடுவதாக இல்லை.

மின்சார வசதிகள் இல்லாத மன்னர்களின் ஆட்சிமுறை இருந்த நாள்களில் திருடர்களும் வழிப்பறிக் கொள்ளையர்களும் ஓர் உத்தியைக் கையாள்வதுண்டு. நீண்ட காலமாக திருடிச் சேர்த்த சொத்துகளை எங்காவது பாழடைந்த வீடுகளிலும் கட்டடங்களிலும் பதுக்கி வைத்திருப்பர். இதனால் குறிப்பிட்ட அந்தப் பிரதேசத்திலே மக்கள் சுதந்தரமாக உலாவுவதை அவர்கள் விரும்புவதில்லை. இதற்காக அந்தத் திருடர்கள் பகலிலே நன்றாகத் தூங்கி பின்னிரவில் எழுந்து கறுப்புப் போர்வையால் தங்களை மூடிக் கொண்டு அந்தக் கட்டடங்களைச் சுற்றிலும் அவலக்குரல் எழுப்பியபடி உலாவுவார்கள். அப்படிச் செய்வதனால் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக ஊருக்குள் கதை பரவும். அதனால் அந்தப் பகுதிக்கு பகலிலும் கூட பொது மக்கள் வரத்துணிய மாட்டார்கள். இதனால் பதுக்கிய பொருளும் திருட்டு பற்றிய ரகசியமும் பிறருக்குத் தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான் அவர்களது பயமுறுத்தலின் பின்னாலுள்ள செய்தி.

மேலே நான் கூறிய விடயத்தை பேய்கள் பற்றிய பயத்துக்கு மட்டுமன்றி, இந்த சமூகத்திலே உலாவும் அவசியமற்ற விடயங்களான மூடநம்பிக்கைகள் மற்றும் அறிவியலின் வளர்ச்சியோடு இயல்பாக அழிந்து விடுவதிலிருந்து வேண்டுமென்றே கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்கூட அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.

திருடர்களுக்கு தமது திருட்டுச் சொத்துகளைப் பாதுகாக்க பேய்கள் எனும் கருத்தாக்கம் எவ்வாறு பயன்படுகின்றதோ அவ்வாறுதான் நமது சமூகத்தில் வாழும் மக்களின் விழிப்புணர்ச்சியை மழுப்புவதற்கு பல மூடநம்பிக்கைகள் உதவுகின்றன. பல்வேறு தெய்வங்கள், சூனியம், பேய், பிசாசு, ஆவிகளிடம் பேசுவது, மந்திர தந்திரங்களால் நோய்களைக் குணப்படுத்த நினைப்பது, சாமியார்களிடம் நம்பிக்கை வைத்து ஏமாறுவது போன்ற விடயங்களின் பின்னால் இருப்பதெல்லாம் வெறும் ஏமாற்றுப் பித்தலாட்டங்களன்றி வேறு எதுவும் கிடையாது.

இவ்வாறு மக்களின் அறியாமையைப் பயன்படுத்தியும் தூண்டியும் வயிறு வளர்ப்பவர்களின் கதைகள் தற்போது அம்பலமாகிக்க கொண்டிருப்பதை பத்திரிகைகளிலும் வேறு ஊடகங்களிலும் பார்த்திருப்பீர்கள். இவற்றை நிருபிக்க அண்மைக்காலமாக மிகவும் பிரபலமான சாமியார்களின் ஆசிரமங்களிலே நடந்த மற்றும் நடந்துவரும் சம்பவங்களே போதும்.

கலிகாலமடா சாமீ!

“எங்க காலத்துல குழவியத்தான் சுத்துவோம். இப்ப என்னடான்னா உரலும் சேர்ந்து சுத்தறதே….! உரல் ஒரு பக்கம்; குழவி ஒரு பக்கம் சுத்தற கூத்த இப்பத்தான் பாக்கறேன். கலி காலங்கறது சரியாத்தான் இருக்குடீம்மா!”

தானியங்கி அரவை இயந்திரம் வந்தவுடன் ஒரு பாட்டி இப்படி சொல்லி மோவாக்கட்டையில இடிச்சுடுண்டு போனாளாம்.

ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும் போகப்போக பழகிவிட்டது.

துணி துவைக்கற இயந்திரம் முதன்முதலில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது வாராவாரம் இந்த இயந்திரம் தயாரிக்கிற நிறுவனத்திலிருந்து ஒருவர் வந்து இயந்திரத்தின் வேலை திருப்திகரமாக இருக்கிறதா, துணிகளை நன்றாக அலசுகிறதா? நன்றாக பிழிகிறதா? இன்னும் என்னவெல்லாம் அந்த இயந்திரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுப்பார். பாவம், அவர் தொழில் கேள்வி கேட்பது.

ஒருமுறை என் கணவர் பதில் சொன்னார்: ‘துணி துவைத்து, உலர்த்தி, இஸ்திரியும் பண்ணி வெளியே வந்தால் நன்றாக இருக்கும். அதுவும் ‘அப்பா துணிகளை (என் கணவரின்) முதலில் வெளியே தள்ளு’ என்று ப்ரோக்ராம் செய்யும்படி இருந்தால் நன்றாக இருக்கும்’

என் அம்மா சொல்வாள்: ‘உங்காத்துக்கு துணி மடிக்கற மெஷின் தான் வேணும்ன்னு.’ எங்க வீட்டுக்கு வந்தால் அம்மாவோட வேலை துணி மடிக்கறது! அவரவர்கள் கஷ்டம் அவரவர்களுக்கு!

சரி இப்போ எதுக்கு பழங்கதை என்கிறீர்களா? சொல்லுகிறேன் என் சோகக்கதையை.

இப்ப வந்திருக்கிற தானியங்கி இயந்திரங்களில் என்னை ரொம்பவும் பயமுறுத்துவது நகரும் படிக்கட்டுகள் அதாங்க, எஸ்கலேட்டர்!

அதென்னமோ அதைப் பார்த்தாலே நானும் (அது மேல ஏறாமலேயே) நகருவது போல பிரமை! முதலில் தட்டையாக வெளி (எங்கிருந்து?) வந்து பிறகு மடிந்து மடிந்து மேலே போவது பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும்.

எத்தனை மாடிகள், எத்தனை படிக்கட்டுகள் இருந்தாலும் பரவாயில்லை ஏறிடுவேன். இந்த நகரும் படிக்கட்டுல ஏற ரொம்ப பயம். அதனாலேயே பிள்ளையோ, பெண்ணோ ‘மால்’ போலாமான்னா வேண்டாம்ன்னு சொல்லிடறேன். கட்டாயம் போகவேண்டும் என்கிற அவசியம் ஏற்பட்டால் படிக்கட்டுகளைத் தேடிப் பிடித்து ஏறுவேன்! சின்னஞ்சிறுசுகள் எஸ்கலேட்டர்ல போகும் போது, ‘நான் எத்தனை ‘fit’ பாருங்கள், படி ஏறுகிறேன்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு படி ஏறுவேன். வேறு என்ன செய்ய?

இன்னொன்றும் சொல்லவேண்டும். எனக்கும் மாடிப் படிகளுக்கும் அப்படி ஒரு ராசி. நான் எங்கு போனாலும் எங்கள் வீடு மாடியில்தான். இப்போது இருக்கும் வீட்டுக்கு வருமுன் நாங்கள் இருந்த வீடு இரண்டாவது மாடியில். நான் ஆங்கில வகுப்புகள் எடுத்தது 3 மாடியில். சில மையங்களில் 2வது மாடியில் வகுப்புகள் இருக்கும்.

யார் வீட்டுக்காவது போனேன் என்றால் அவர்கள் மாடியில் இருப்பார்கள். ‘நாங்க கீழ தான் இருந்தோம். இப்போதான் மாடிக்கு குடி பெயர்ந்தோம்’ என்பார்கள், என்னைப் பார்த்தவுடன்!

ஆறு மாதங்களாக யோகா வகுப்புகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் – 3 வது மாடியில். தினமும் நான் ஏறி இறங்குவது மொத்தம் 150 படிகள்!

இவ்வளவு இருந்தும் எஸ்கலேட்டர் என்றால் பயம் தான்!

எல்லோரும் எஸ்கலேட்டர்-ல ஏறி ஆடாம அசையாம மேல போறத பார்க்கும் போது ‘ச்சே! எனக்கு மட்டும் என்ன பயம்?’ ன்னு தோணும். சில வீரதீரப் புலிகள் நகரும் அதன் மேல் நடந்து போவார்கள்.

மனதை ரொம்பவும் தயார் பண்ணிப்பேன். அடுத்தமுறை பயப்படாமல் ஏறிடணும் என்று. ‘ஒண்ணுமேயில்லை. நீ ஒரு காலைத் தூக்கி வை. அதுவே நகர ஆரம்பிச்சுடும்!’ என்று என்னுடன் வருபவர்கள் சொல்லுவார்கள். அதுதான், அது நகருவதுதான் எனக்கு அலர்ஜி!

சென்னை சென்ட்ரல் மாலில் என் அக்கா அனாயாசமாக அதில் ஏறிப்போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நான் கீழேயே நின்று விட்டேன். அவள் பாவம், நான் பக்கத்தில் வருவதாக நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு போனவள் திரும்பிப் பார்த்தால், நான் கீழேயே நகரும் படிக்கட்டை பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டே நிற்கிறேன்!

அக்கா மேலிருந்து (சத்தமாக) சொன்னாள்: ‘ஒரு காலை தூக்கி வை. அவ்வளவுதான்.’ அதுதானே வரவில்லை எனக்கு! நானும் என் காலுக்கு கட்டளை இடுகிறேன். அது இருந்த இடத்திலேயே ஆணி அடித்தாற்போல நின்று கொண்டிருக்கிறது!

சரி இவ்வளவு சொல்லுகிறார்களே, எஸ்கலேட்டரின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு முயற்சி செய்யலாம் என்று கையை அதன் மேல் வைத்தேன். ஐயையோ! என் கைமட்டும் மேலே மேலே…கால்கள் நான் நின்ற இடத்திலேயே!

அடச்சே! கைப்பிடியாவது ஒரே இடத்தில் நிலை நிற்காதோ? என்ன கலிகாலமாடா சாமீ! உரலும், குழவியும் தான் நினைவுக்கு வந்தன!

போனவாரம் ஒரு மால் போனோம். முதலிலேயே என் மகளிடம் சொன்னேன்: ‘மாப்பிள்ளையும் வருகிறார். எஸ்கலேட்டர் அருகில் போய் ஒரு ‘சீன்’ போட வேண்டாம். மாடிப்படியில் ஏறி வருகிறேன்’ என்று. அவள் கேட்கவில்லை. இன்று ‘உன்னை எஸ்கலேட்டரில் ஏற்றிவிட்டு விட்டு மறுவேலை’ என்றாள்.

வழக்கம்போல எஸ்கலேட்டர் அருகில் போய் அதையே உற்றுப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

‘காலை எடுத்து வைம்மா!’

எங்கள் பின்னால் சிலர் வந்தனர்.

‘இரு, இரு, அவர்கள் போகட்டும்’ – தைரியம் வர எனக்கு கொஞ்ச நேரம் வேண்டுமே!

‘அவர்கள் போயாச்சு! அப்பா, என் கணவர் இருவரும் போயாச்சு. வா நீ!’

ஏ! காலே! நீ எங்கிருக்கிறாய்?

எத்தனை உசுப்பினாலும் என் கால்களில் அசைவே இல்லை.

திடீரென்று என் அருகில் ஒரு பெண்மணி. என் வலதுகையை சுற்றி தனது இடது கையால் கெட்டி (ஆ! வலிக்குது!) யாகப் பிடித்துக் கொண்டார்.

‘கால எடுத்து வையுங்க!’ என்றார்.

அவர் மிரட்டிய மிரட்டலில் காலை எடுத்து வைத்தேன். எஸ்கலேட்டர் என்னை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டது! நடந்ததை உணர கொஞ்ச நேரம் ஆயிற்று எனக்கு.

அட! நான் எஸ்கலேட்டரில் போய்க் கொண்டிருக்கிறேன்! கடைசி படி வந்தவுடன், ’உம், இப்போ காலை வெளியே வையுங்க!’ இன்னொரு மிரட்டல்!

‘தேங்க்ஸ், நன்றி, தன்யவாத…’ எல்லா மொழிகளிலும் நான் சொல்ல, அவர் கடமையே கண்ணாக அடுத்திருந்த எஸ்கலேட்டரில் இறங்கிப் போய் விட்டார்.

அப்பாடி! நாங்கள் தேடி வந்த கடை எங்கே? என் மாப்பிள்ளை சொன்னார்: ‘இன்னும் ஒரு மாடி ஏறவேண்டும்!’

‘கடவுளே…!’

இந்தமுறை என் பெண் ஒரு பக்கம், என் கணவர் மறுபக்கம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த ‘bouncer’ பெண்மணி இருக்கிறாரா என்று.

‘ஏறுங்க! அவர் குரல் காதில் ஒலிக்க ஏறிவிட்டேன்.

‘அம்மா ஏறியவுடன், எஸ்கலேட்டர் வேகம் குறைந்து விட்டது பாரு!’ என் கணவரின் ஜோக் கூட என்னை சிரிக்க வைக்கவில்லை. அத்தனை சீரியஸ்ஸாக தலையைக் குனிந்துகொண்டே வந்தேன்!

அடுத்த மாடியும் எஸ்கலேட்டரிலேயே!

ஒருவழியாக ஷாப்பிங் முடிந்தது. கீழே போக வேண்டுமே! எனது பயம் மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. என் கை மூலம் என் பயத்தை உணர்ந்த என் பெண், ‘இப்போ லிப்ட்டில இறங்கலாம், கவலைப் படாதே!’ என்றாள். இன்னிக்கு எஸ்கலேட்டர் ஏற்றம் கத்துக்கோ. அடுத்தமுறை இறக்கம் சொல்லித் தரேன்…!’ என்று பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள். நானும் எஸ்கலேட்டர் பயம் தெளிந்து அவளது சிரிப்பில் கலந்து கொண்டேன்.

Monday, March 24, 2014

பெண்கள் அழுதால் ஆண்கள் வெறுப்பது ஏன்?

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது.அந்த அளவுக்கு கணவன், மனைவி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக்கைச் சிந்தாத மனைவிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது. மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது.

சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம். ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண்கள் வெறுக்கிறார்களாம். அழுதே காரியத்தை சாதித்து விடுகிறார்கள் என்றும் எரிச்சல்படுகிறார்களாம்.

மேலும் தங்களுக்கு ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், கர்ச்சீப்பும் கையுமாக கிளம்பி விடுகிறார்கள் பெண்கள் என்பது ஆண்களின் புலம்பலாக உள்ளது. பெண்கள் அழும்போது ஆண்கள் சந்திக்கும் அவஸ்தைகளாக இதைக் கூறுகிறார்கள்…

ஒரு பெண் அழத் தொடங்கி விட்டால்,ஆண்களுக்கு கையும் ஓடுவதில்லையாம், காலும் ஓடுவதில்லையாம். எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறதாம். சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடுமாம்,

அவர்கள் கோருவதை நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறைகிறதாம். இது சமயத்தில் ஆண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறதாம். பொது இடங்களுக்கு, கடை போன்றவற்றுக்குச் செல்லும்போது தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் ஆண்களிடம், காரியம் சாதிக்க பல பெண்கள் பொது இடம் என்றும் பாராமல் கண்களை கசக்குகிறார்களாம்.
அப்போது ஆண்களுக்கு பெரும் தர்மசங்கடமாகி விடுகிறதாம். பொது இடத்தில் தான் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவானாம். எனவே இதைப் பயன்படுத்தி பல பெண்கள் கண்களை கசக்கியோ அல்லது கசக்குவது போல நடித்தோ காரியத்தை சாதித்துக் கொள்கிறார்களாம். இதுபோன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு செம டென்ஷனாகி விடுகிறதாம்.

இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, சரி சரி அழாதே, வாங்கித் தர்றேன் என்று பல்லைக் கடித்தபடி கூறி அமைதிப்படுத்துகிறார்களாம். சாதாரண பிரச்சினைகளைக் கூட பெரிய ரேஞ்சுக்கு பில்டப் செய்து சீன் கிரியேட் செய்கிறார்கள் பெண்கள் என்பது பல ஆண்களின் புகாராக உள்ளதாம்.

ஒண்ணுமே இல்லாத பிரச்சினையைப் பெரிதாக்கி கண்ணீர் வடிக்கிறாங்க என்கிறார்கள் அவர்கள். அதாவது சும்மா கேட்டால் கிடைக்காது என்று கருதும் விஷயத்தை கண்ணீர் கலந்து கேட்கிறார்களாம் பெண்கள். இதையும் பல ஆண்கள் விரும்புவதில்லையாம்.

நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்களாம். உங்க கேஸ் எப்படி…?

பெண்களின் ஆபாச வீடியோ : மூலகர்த்தா..!


பெண்களின் ஒவ்வொரு செயலும் படம்பிடிக்கப்படுகின்றன. அவர்கள் குளிப்பது, உடை மாற்றுவது மட்டுமில்லை. குனிந்து தரையை துடைப்பது, துணி துவைப்பது, குழந்தைக்கு பால் கொடுப்பது.. போன்ற ஒவ்வொன்றும் படமாக்கப்படுகிறது. ஓட்டல் அறைகளில், துணிக்கடையில் உடையை அணிந்து சரிபார்க்கும் அறையில், ஓட்டல் கழிப்பிடங்களில், பெண்கள் கூடும் இடங்களில் எல்லாம் அதற்காக ரகசிய குட்டி கேமிராக்களை பொருத்திவைத்திருக்கிறார்கள்.
அவைகள் படம்பிடிக்கும் அந்தரங்க காட்சிகளை இணையதளத்தில் போட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் நீங்களே இணையதளங்களில் பார்த்தால், உங்களுக்கு நெருக்கமான தோழிகள் படமோ, ஏன் உங்கள் படமோகூட இருக்கலாம். இந்திய பெண்கள் சமூகத்தில் இது ஒரு புதிய கலாசார சிக்கலை தோற்றிவித்திருக்கிறது.

முன்பெல்லாம் பாதுகாப்பு நலன் கருதி வங்கிகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் ரகசிய கேமிராக்களை வைத்திருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இதை பெண்களின் அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

அங்கே பதிவு செய்யப்படும் காட்சிகளில் பெண்களின் அந்தரங்கம் தொடர்புடையவைகளை மட்டும் அடுத்த நாளே யூடீப் போன்ற ‘வீடியோ ஷேரிங் சைட்’களில் போட்டுவிடுகிறார்கள். அதை உலகம் முழுவதும் உள்ள ‘செக்ஸ் ஊனம்கொண்ட ஆண்கள்’ பார்க்கிறார்கள். சிலர் பார்த்து ரசித்த வீடியோக்களை பேஸ் புக்கிலோ, கூகுள் பிளஸ்சிலோ பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஆபாச நீலப் படங்களை பார்த்து ரசித்து அலுத்துப்போன பல செக்ஸ் ஊன மனிதர்கள் இப்போது, இத்தகைய யதார்த்த அரைகுறை காட்சிகளை பார்ப்பதிலே அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். அவைகளை பார்த்துவிட்டு, ‘யதார்த்த காட்சிகள்’ என்று மெய்சிலிர்த்து பேசுகிறார்கள். அந்தரங்கங்களை படம்பிடிக்க இப்போது குட்டிக்குட்டி கேமிராக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

அதனை சுவர்கடிகாரம், வாட்ச், பேனா, டை போன்றவைகளில் எல்லாம் பொருத்திக்கொள்கிறார்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோ பிரேம், குளிர்பான பாட்டில்கள், கண்ணாடி, சூயிங்கம் பாக்கெட் போன்றவைகளில்கூட அந்த குட்டி கேமிராக்களை ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.
அவை 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை. அதில் பதிவாகும் காட்சிகளை ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் திரைகளில் ‘லைவ்’ ஆக பார்க்கவும், மெமரி கார்டில் சேமித்து வைக்கவும் முடியும். இத்தகைய குட்டிக் கேமிராக்கள் இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும் விற்பனையாகின்றன.

விற்பனையை அதிகரிக்க அடிக்கடி விளம்பரமும் செய்கிறார்கள்.யார், என்ன தேவைக்காக இந்த கேமிராக்களை வாங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு விற்பனையாளர் ஒருவர் பதிலளிக்கையில், “தங்கள் வியாபார நிறுவனத்திற்கு தேவைப்படுவதாகக்கூறி பலரும் வாங்கிச் செல்கிறார்கள். திருட்டை ரகசியமாக கண்காணிக்கவும், பெருமளவு பணம் கொடுக்கும்போது ஆதாரத்தை உருவாக்கவும் கேமிராக்களை பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்.
வீட்டில் உள்ளவர்களை கண்காணிக்கவும் சிலர் வாங்கி பொருத்துகிறார்கள்’’ என்கிறார்கள். முன்பெல்லாம் இத்தகைய கேமிராக்கள் வாங்குவது சிரமமாக இருந்தது. விலையும் மிக அதிகமாக இருந்தது. இப்போது சீன கேமிராக்களின் வருகையால் விலை குறைந்ததோடு, பட்டிதொட்டி எல்லாம் இத்தகைய கேமிராக்கள் கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது.

இங்க் அடைத்து எழுதப் பயன்படும் மை பேனா போன்ற தோற்றத்தில் இருக்கும் குட்டி கேமிரா முன்பு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது அது போன்றவை 1500 ரூபாய்க்கே கிடைக்கிறதாம். இந்த கேமிராக்களை குழந்தைகள்கூட எளிதாக கையாளலாம். நேரடியாக சென்று வாங்க தயங்குபவர்கள், இணையதளம் மூலமாகவே ஆர்டர் செய்து, பார்சல் மூலம் பெற்றுவிடுகிறார்கள்.

பார்சல் கைக்கு கிடைத்த பின்பு பணத்தை கொடுத்தால் போதும் என்ற அளவுக்கு இந்த வியாபாரம் மலிவாகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இத்தகைய கேமிராக்கள் தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவைகளை வாங்குவது யார் என்று ஓரளவு அடையாளம் தெரிந்தாலும் அவர்கள் எதற்காக அவைகளை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் அறிய முடிவதில்லை.


ஓட்டல் ஒன்றின் கழிவறையில் இந்த வகை கேமிரா ஒன்று இருந்ததை, கழிவறைக்கு சென்ற பெண் பார்த்துவிட்டார். புகார் செய்தார். விசாரணையில் அந்த கேமிராவை வைத்த ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக நடந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரே போலீசாரால் தாக்கப்பட்டார்.

கேமிராவில் அந்தரங்க காட்சிகளில் சிக்கிக்கொள்ளும் பெண் தனக்கு தெரிந்தவராக இருந்தால் அவரை பணத்திற்காகவோ, உடல் தேவைக்காகவோ கட்டாயப்படுத்தி ‘பிளாக் மெயில்’ செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பிரபலமான தீம் பார்க் ஒன்றில் ஏராளமான பெண்கள் குளிக்கிறார்கள். அதை அப்படியே படமாக்கி இணையதளத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

அங்கிருக்கும் பாதுகாப்பை மீறி, பொதுவாக அப்படிப்பட்ட வெகுநீள காட்சியை செல்போன் கேமிராவால் படம் பிடித்திருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் தன் சட்டை பாக்கெட்டில் குத்தியிருக்கும் பேனா கேமிரா மூலமோ, தன் தொப்பியில் ரகசிய கேமிராவை ஒட்டிவைத்துக்கொண்டோ அந்த காட்சிகளை படமாக்கி இருக்கலாம்.
இப்படிப்பட்ட காட்சிகளை இணையதளம் மூலம் விற்பனை செய்வதும் இப்போது அமோ கமாக நடக்கிறது. பெண்கள் குளிப்பதை, எண்ணை தேய்ப்பதை எல்லாம் படமாக்கிவைத்திருக்கும் அவர்கள், முதலில் ஒருசில கிளுகிளு காட்சிகளை காட்டிவிட்டு, ‘இவை எல்லாம் யதார்த்தமானவை. தொடர்ந்து இதை விட ‘சிறந்ததை’ பார்க்கவேண்டும் என்றால், உங்கள் கிரடிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்’ என்கிறார்கள்.

வளைகுடா நாடுகளில் இருந்து பலர் இவைகளை பணம் கொடுத்து பார்த்துவிட்டு, தங்கள் ‘அனுபவங்களையும்’ பதிவு செய்துவைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி நடக்கும் அசிங்கங்களை எல்லாம் தெரிந்துகொண்டு உள்ளபடியே பெண்கள் ரொம்ப பயந்துபோய்தான் இருக்கிறார்கள்.

கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தும் ஆசிரியை, “கரும் பலகையில் கையை தூக்கி எழுதும்போதே ரொம்ப கவனிக்கவேண்டியதிருக்கிறது. அப்போது புடவை சற்று இடம் பெயர்ந்தால்கூட காட்சியாக்கி விடுகிறார்கள். யாரையும் நம்ப முடியவில்லை. கல்லூரியில் சில மாணவர்கள் கையில்கூட இத்தகைய கேமிராக்கள் இருப்பதாக ஒரு சில மாணவிகள் கூறியிருக்கிறார்கள்.ஆனால் கையும் களவுமாக யாரையும் பிடிக்கவில்லை. அந்த அளவுக்கு தீவிரம் காட்டினால், கல்லூரி நிர்வாகம் என்ன சொல்லும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது’’ என்கிறார், அவர். பெருநகர் ஒன்றின் பேஷன் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் கழிவறையில் ரகசிய கேமிரா ஒன்றை மாணவி ஒருவர் கண்டுபிடித்தார்.

அதை ஆராய்ந்தபோது காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பதால் அது வழக்காகவில்லை. இன்னொரு பொது கழிப்பிடம் ஒன்றில் கேமிரா இருந்ததை கண்டறிந்த பின்பு அந்த கழிப்பறையையே மூடிவிட்டார்கள். துணிக்கடை ஒன்றில் துணியை உடுத்தி பார்க்கும் அறையில் கேமிரா இருந்ததை கண்டறிந்த மாணவி அதை தன் செல்போனில் படம்பிடித்து போலீசில் கொடுத்தார்.


மக்களுக்கும் அந்த தகவல் பரவ அந்த துணிக்கடை துவம்சம் செய்யப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்ஸ்கள் குளித்து உடை மாற்றும் அறையில் கீ செயின் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. இரவு பணி முடிந்து அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டிருந்த நர்ஸ் கண்களில் அது பட, அப்படியே அதை எடுத்துக்கொண்டு போய் நிர்வாக தலைமையிடம் கொடுத்தார்.

அவர் அதை பரிசோதித்தபோது கேமிரா அதில் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தது. விசாரணையில் ஆஸ்பத்திரி டெக்னிக்கல் மேனேஜர் அந்த கேமிராவை பொருத்தினார் என்பதை கண்டுபிடித்தார்கள். என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றின் பெண்கள் ஹாஸ்டல் குளியல் அறையில் இருந்து கேமிரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்த மாணவியை கண்டுபிடித்தார்கள்.


முதல் கட்ட விசாரணையில் அந்த பெண், சும்மா விளையாட்டுக்காக அதை பொருத்தினேன் என்றார். போலீசார் அதில் தலையிட்ட பின்பு வழக்கின் கோணமே மாறியது. தனது காதலன் ஒருவனின் விருப்பத்தின் பேரில், அதை பொருத்தியதாக மாணவி கூறினார். விசாரணை விஸ்வரூபம் எடுத்தபோது இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

தற்போது குட்டி கேமிராக்களின் விற்பனை அதிகரித்து வருவதால், இது போன்ற பிரச்சினைகள் எல்லைமீறும் என்றே தெரிகிறது. பெண்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முடியும்.

அச்சச்சோ…வடை போச்சே..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.

ஏறக்குறைய மூன்று வருடங்களை நெருங்கிவிட்டநிலையிலும் ஆளும்கட்சியிடமிருந்து வடிவேலுவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கவில்லை.

அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மதுரை ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தனிப்பட்டமுறையில் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட கடந்த சில வருடங்களாகவே முயற்சி செய்தார் வடிவேலு.

அவரது இந்த முயற்சி நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போக, எப்படியும் ஜெயலலிதாவை சந்திக்க வைத்துவிடுவதாக அமைச்சர்கள் வடிவேலுவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர்.

அவர்கள் சொன்னதை நம்பித்தான், ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலேயே நடிக்க முடிவு செய்தார் வடிவேலு.

தற்போது ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் இசைவெளியீட்டுவிழா நடைபெறவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கிவிட்ட நிலையிலும் கூட ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கவில்லை.

எனவே, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஆளும்கட்சி டி.வி.க்கு இலவசமாகக் கொடுக்கவும் தயாரானார்கள். அப்படி கொடுப்பதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்தைக் குறைத்து, அவரின் குட் புக்கில் வடிவேலு இடம் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர்.

இந்த டீலுக்கு சேனல் தரப்பிலிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வரவில்லை. எனவே மேலும் காத்திருப்பது வீண் வேலை என்று முடிவுக்கு வந்து, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை நான்கரை கோடிக்கு வேறு ஒரு டி.வி.க்கு விற்றுவிட்டனர்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆளும்கட்சி தரப்பு வடிவேலு மீது கூடுதல் கடுப்பில் இருக்கிறதாம்.

அச்சச்சோ…வடை போச்சே..!

Sunday, March 23, 2014

உங்களுடன் பேஸ்புக்கில் சாட் செய்வது ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது எப்படி..?

நமது நண்பர்கள் பலர் பேஸ்புக்ல ஃபேக் ஐ.டி க்களை கண்டுபிடிக்க ஏதாவது ஐடியா சொல்லுங்கன்னு கேட்டு இருந்தாங்க. இதோ அவங்க ஆசையை நிறைவேற்ற ஃபேக் ஐ.டி க்களை கண்டுபிடிக்க சில டிப்ஸ்கள்.

இத வச்சி இனி நீங்க கரெக்டா உங்க நண்பர்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவங்ககிட்ட மட்டும் சாட் செய்யலாம். நம்ம பசங்க யாராவது பொண்ணங்க ஐ.டி ல இருந்து உங்கள கலாய்ச்சா ஈஸியா கண்டுபிடிச்சரலாம். இதோ அந்த தகவல் களஞ்சியம்…..

பெண்களின் பெயரில் வரும் பேக் ஐடிக்கள் பெரும்பாலும் தமன்னா,அசின்,த்ரிஷா, ஹன்சிகாவின் புகைப்படங்கள் அல்லது ஏதாவது பூ,இயற்கைக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களை புரோபைலில் வைத்திருப்பார்கள் அது தான் நம் முதல் குளூ.

பெண்களின் பெயர்களில் வருபவர்கள் ஆண்களுக்கே அதிகம் பிரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் தருவார்கள். நம்மகிட்ட அதிகமா விளையாட்டு காட்டுவாங்க பாஸ் நம்பிராதிங்க. எப்போதும் தங்களை மற்றவர்கள் நம்பவேண்டு மென்பதற்காக பெண்கள் போலவே பாவனை செய்வார்கள்.

ச்சோ ச்வீட், என்றோ ச்சோ க்யூட்,என்றோ கமெண்ட் போடுவார்கள். பேக் ஐடிக்கள் எதையும் யோசித்து பதிவு எழுதாது. குட்மார்னிங் என்றோ குட் ஈவினிங் என்றோ ஸ்ட்டேடஸ் போடும்.பெண்களின் பெயரில் வரும் பேக்ஐடிக்களுக்கு எப்படி ஐந்து நிமிடத்தில் ஐநூறு லைக் வாங்க வேண்டுமென்று நன்கு தெரியும் அந்த ஜாம்பவான்களுக்கு.

நான் நேற்று ரசம் வைத்தேன் என்று ஒரு பதிவு போடுவார்கள். உடனே ஐநூறு லைக் விழும்.அவங்க விஷம் வச்சா கூட ஆயிரம் பேர் லைக் போடுவார்கள் என்பது வேறு விசயம் சாட்டிங் செய்தால் அவர்களை மிகச்சுலபமாக கண்டுப்பிடித்துவிடலாம் .ஹாய் என்று தயங்கி தயங்கி டைப் செய்வார்கள்.
பதிலுக்கு ஹாய் சொன்னால் ஐந்து நிமிடம் எதையோ யோசித்து யோசித்து மீண்டும் ஹை என்றுடைப் செய்து விட்டு பிறகு கொஞ்சநேரம் கழித்து ஆப்லைன் சென்றுவிட்டு வருவார்கள். ஏனேன்றால் அவர்கள் ஃபேக் ஐ.டி க்களை உருவாக்கியதே பெண்களிடம் பேசத்தான் அதிக ரெக்வஸ்டும் பெண்களுக்கு தான் தருவார்கள்.

பேஸ்புக்கில் வரும் பெண் பேக் ஐடிக்கள் மறந்தும் அரசியல் பதிவுகளை எழுத மாட்டார்கள். அப்படியே எழுதினாலும் கேப்டன் நேற்று இரவு தண்ணி அடித்தார். காலையில நிருபர்களைஅடித்தார் என்ற ரீதியில் மொக்கையாக எதையாவது சொல்லி விட்டு போவார்கள்

எங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்குறாங்க. பேஸ்புக்கில் யாராவது நல்லவன் இருந்தா சொல்லுங்க என்பது போன்றோ அல்லது என்னை கல்யாணம்செய்யுறவன் செத்தான் என்பது போன்றோ பதிவுகளை அடிக்கடி போட்டால் அது கன்பார்மாக பேஸ்புக்கில் பெண்களின் பெயரில் உலவும் பேக் ஐடியே தான் அடிக்கடி எனக்கு சமையல் தெரியாது. துணி துவைக்க தெரியாது அதெல்லாம் போர் என்று பதிவு போடும். நாமும் கன்பார்மாக அது பெண்ணேதான் என்று ஜொள்ளு விட்டுக்கொண்டு லைக் போடுவோம். இனி அந்த தவறை செய்யாதிங்க.

போட்டோஸ்ல பாத்திங்கனாளே தெரிஞ்சிரும் பாஸ் அதுல அந்த பொண்ணோட போட்டோஸ் நிறைய இருந்தா ஓ.கே, அதே ஒரே ஒரு போட்டோ மட்டும் அல்லது சமந்தா, நஸ்ரியான்னு நிறைய போட்டோ இருந்தா அது நம்ம பயபுள்ள தாங்க யாரோ.

பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் ப்ரெண்ட் ரேக்வஸ்ட ஏத்துக்கமாட்டாங்க, நீங்க ரேக்வஸ்ட அனுப்பி உடனே ஏத்துக்கிட்ட அது ஃபேக் ஐ.டி யே தான். இனிமேலாவது கேள்ஸ் க்கு ரெக்வஸ்ட் கொடுக்கும் போது செக் பண்ணிகிங்க….!

மனித மூளையில் காதல் வங்கி – ஆச்சரிய கண்டுபிடிப்பு

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு அதிசயம்! அந்த மனிதனுக்குள் இருந்து அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதோ மூளை! இந்த மூளையைப் பற்றி உயிரியல் விஞ்ஞானிகள் தங்கள் மூளையை கசக்கி… ஏராளமான ஆராய்ச்சிகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் அதில் ஒளிந்து கிடக்கும் அதிசயங்கள் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன. அந்த வகையில் விஞ்ஞானிகளின் சமீபத்தைய மூளை ஆராய்ச்சியில் சிக்கி இருப்பது காதல் வங்கி!மேலும் இந்த வங்கியின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டுபிடித்து நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் விஞ்ஞானிகள் என்கிறார் சென்னையின் பிரபல செக்சாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ்.
அவர் மேலும் கூறும்போது, ´இது நாள் வரை மனிதர்களிடம் காதல் உணர்வு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது மூளையின் எந்த பகுதியில் இருந்து செயல்படுகிறது? அது எப்படி செயல்படுகிறது! காதல் உணர்வு மனிதனுக்குள் பாயும்போது மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றியெல்லாம் பெரும் புதிராகத்தான் இருந்து வந்தன.
இந்த புதிரை லண்டன் பல்லைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி செமிர் ஜெகி தனது நீண்ட கால ஆராய்ச்சி மூலம் முறியடித்துள்ளார். மனித மூளையில் ´காதல் வங்கி´ (லவ் பேங்க்) என்ற ஒன்று அதிவேகமாகச் செயல்படுகிறது. மனிதனுக்குள் காதல் உணர்வை ஏற்படுத்துவது சில ரசாயன கலவைகள்தான். ஒரு ஆண் இன்னொரு பெண்ணை மோகத்துடன் பார்க்கத் தூண்டுவது இந்த ரசாயனம்தான்.
சில ஆண்கள் ஒரு பெண்ணை பார்த்ததும் முதல் பார்வையிலேயே மனதை பறி கொடுத்துவிட்டேன் என்று சொல்லி புலம்புவார்கள். காரணம் முதல் பார்வையிலேயே அவர்களது மூளையில் உள்ள காதல் வங்கியில் அந்த அழகு தேவதையின் முகம் ´டெபாசிட்´ ஆகிவிடுவதுதான். இப்படி ஒரு ஆணின் காதல் வங்கியில் ஒரு பெண் முகம் ´டெபாசிட்´ செய்யப்பட்டு விட்டால் எளிதில் அந்த வங்கியில் ஏற்பட்ட ரசாயன மாற்றம் மாறாது.
அந்த ரசாயனம் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அப்படி பார்க்கும்போது அந்த காதல் வங்கியின் செயல்பாடு முன்பைவிட பல மடங்கு வேகத்தில் செயல்படும். அப்போது காதல் எண்ணங்களை தவிர வேறு எதையும் அது நாடாது. இதே போல்தான் பெண்களின் மூளையில் உள்ள காதல் வங்கியும் செயல்படுகிறது. இருவரின் மனதிலும் ஒரே மாதிரியான எண்ணங்கள், ஆசைகள்,லட்சியம் இருக்கும்போது காதல் உணர்வுகள்´காற்று´ வேகத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து அவரவர் காதல் வங்கிகளில் ´டெபாசிட்´ ஆகிவிடுகிறது.
அதன் பிறகு அந்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போதும்,பார்க்கும்போதும், காதல் வங்கிகள் அசுர வேகத்தில் செயல்பட்டு இன்ப கிளர்ச்சிகளை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த மாதிரியான காதலர்கள் கடைசி வரை பிரியமாட்டார்கள் என்பது விசேஷமான ஒன்று.
அது சரி மூளையில் காதல் வங்கி எங்கே இருக்கிறது என்கிறீர்களா?
மூளையில் உள்ள புட்டமன், இன்சுலா ஆகிய பகுதிகள்தான் காதல் வங்கி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் ஆண்-பெண் ஜோடிகளை காதல் வானில் சிறகடித்து பறக்க வைக்கிறது. காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது, பாராட்டும் போது, பரிசு கொடுத்து வாழ்த்தும் சமயங்களில்… காதல் வங்கியில் சேமிப்பு பல மடங்கு அதிகமாகிறது. இந்த சேமிப்பு அதிகரித்தால் வாழ்க்கை சொர்க்கம் போல் மாறும்.
அதே சமயத்தில் காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் போதும்,திட்டிக்கொண்டிருக்கும்போதும், சந்தேகப்படும் சமயங்களிலும் காதல் வங்கியில் சேமிப்பு மெல்ல மெல்ல குறைந்து விடும். இந்த சேமிப்பு முற்றிலும் குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டும்போது… காதல் வங்கியானது வெறுப்பு வங்கியாக மாறி விடுகிறது.
இந்த´வெறுப்பு வங்கி´ ஒரு மனிதனிடம் இருக்கும்போதுதான் அவன் எந்நேரமுத் ஆவ்… ஊவ்… வென சத்தம் போடுவது… யாரை கண்டாலும் வெறுப்பை உமிழ்வது,எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவது, சண்டை போடுவது,… என்று ஒரு வித கீழ்த்தரமான நிலைக்கு சென்று விடுகிறான். வெறுப்பு வங்கி மனித மூளையில் செயல்படும்போதுதான் அவனுக்கு ஒருவித பயம், நடுக்கம், கவலை, படபடப்பு போன்றவை ஏற்படுகிறது. வெறுப்பு வங்கி ஒரு மனிதனிடம் தொடர்ந்து செயல்பட்டால் மனநிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும். பேராபத்து உள்ளது என்று எச்சரிக்கிறார் டாக்டர் காமராஜ்.
அவர் மேலும் கூறும்போது, ´காதல் வங்கி ஒரு அற்புதமான விஷயம். காதலர்களோ,தம்பதியரோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சகிப்புத்தன்மையுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் காதல் வங்கி கலக்கலாக செயல்படும். காதல் வங்கி செயல்பாட்டில் டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்களின் செயல்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்வுகளை காதல் வங்கியில் டெபாசிட் செய்ய இவை பெருமளவில் உதவி செய்கிறது.
காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கை வெற்றி நடைபோடுகிறது. காதல் வங்கியில் ´பூஜ்ஜியம்´ இருப்பு உள்ளவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. கடைசியில் விவகாரத்தில் போய் முடிகிறது.
இந்த காதல் வங்கி பற்றி அறியாத தம்பதியர்தான் பொறாமை, வெறுப்பு,போட்டி மனப்பான்மையை வளர்த்து சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். இதனால்தான் மனித மூளையில் உள்ள இந்த அதிசய காதல் வங்கியின் மகத்துவம் பற்றி இளம் பெண்கள், இளைஞர்கள் இளம் தம்பதியருக்கு கற்றுத் தருவது தற்போது அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது.
திருமண ஆலோசனை வழங்கும்போது வெறுமனே நல்ல விஷயங்களை செல்லித் தருவதோடு விட்டு விடாமல் காதல் வங்கி பற்றிய உண் மைகளை அழகாக எடுத்துச் சொன்னால் நம் நாட்டில் விவகாரத்துகள் குறையும். காதல் தோல்வி என்ற பேச்சுக்கும் இடம் இருக்காது.
காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருந்தால் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். படபடப்பு, டென்ஷன், கவலைகள் மாயமாகும். வாழ்க்கையில் எத்தகைய தோல்விகள் வந்தாலும் அதை தைரியமுடன் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து தடைகளை அடித்து நொறுக்கும் அனாயச துணிச்சல் கிடைக்கும்.

உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம்!


அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள். அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.
ஆம், இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை.
ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை உள்ள சுற்றுலாப் பயணிகளே இந்த ஆபத்தான இடத்தை நோக்கி போகலாம்.
தற்செயலாக கால் இடறி விழுந்தால் 1,982 அடி அதலபாதாளத்தில் விழ வேண்டும்.
நோர்வேயில் அமைந்துள்ள Pulpit Rock என்று அழைக்கப்படும் குறித்த பிரதேசம் வருடாந்தம் ஆயிரக்கணக்கான த்ரில்லான சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றது.
அபாயகரமான பாறையின் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை அங்கு வரும் த்ரில்லான சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்.
விளிம்பில் தலை வைத்துப் படுத்து எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று உதார் விடுபவர்களும் அங்கு வருகிறார்களாம்…
எங்கே நீங்களும் அந்த காட்சியைப் பார்க்கப் போகின்றீர்களா? கவனம், தலையைப் பிடித்துக் கொண்டு பாருங்கள்.

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..


கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.

எறும்புகள் தூங்குவதே இல்லை.

நாய்களால் மனிதனின் முகத்தை பார்த்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்ள முடியும்.

நெருப்புகோழியால் குதிரையை விட வேகமாக ஓடமுடியும். ஆண் நெருப்புகோழியால் ஒரு சிங்கத்தை போல குரல் எழுப்பமுடியும்

அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள்

புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள் 

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு 

எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள் 

மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ 

மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு 

எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்


எறும்புகள் தூங்குவதே இல்லை 

மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.

கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்

பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும் 

ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும் 

பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது 

உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.

பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் 

பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை 

முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது


ஈக்கள் சக்கரையை அதன் கால்களை கொண்டு கண்டறிகின்றன.

எறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்ககூடியவை.

கரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்டபின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும். பின்னர் அது பசியால் இறந்துவிடும்.

butterfly -ன் உண்மையான பெயர் 'flutterby'.

Saturday, March 22, 2014

மரணப் படுக்கையிலிருந்த துப்புரவு தொழிலாளியை முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி!

புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.

நெதர்லாந்து நாட்டின் இரண்டாவது பெருநகரமான ரோட்டர்டாமில் டியெர்கார்டே ப்லிஜ்டார்ப் வன விலங்கு காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் விலங்குகளை அடைத்து வைத்திருக்கும் கூண்டில் உள்ள அசுத்தங்களை கழுவி சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் மரியோ(54) என்பவர் தனது இளமைக் காலம் முதல் ஈடுபட்டு வந்தார்.சமீபத்தில் தீவிர புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளான அவர், லேசான மன நோய் பாதிப்புக்கும் ஆளாகியுள்ளார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மரியோ, தனது இறுதிக்காலம் நெருங்குவதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டார்.

உயிர் பிரிவதற்கு முன்னதாக தான் பணியாற்றி வந்த வன விலங்கு காப்பகத்துக்கு சென்று ஆசையாய் பராமரித்து வந்த பாச விலங்குகளை எல்லாம் இறுதியாக பார்வையிட விரும்பிய அவர், தனது பேராவலை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார்.மரணத்தை எதிர்நோக்கியுள்ள அந்த நோயாளியின் கடைசி ஆசையை நிராசையாகி விடாமல் நிறைவேற்ற விரும்பிய டாக்டர்கள், ஒரு ஆம்புலன்சில் மரியோவை ஏற்றி வன விலங்கு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். சக்கர கட்டிலில் படுத்தபடி, ஒவ்வொரு விலங்கின் கூட்டுக்குள்ளும் சென்ற மரியோ, பாச விலங்குகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.

அவற்றில், மரியோவை நீண்ட நாட்களாக பிரிந்திருந்த ஒரு ஒட்டகச் சிவிங்கி மட்டும் அவரது கட்டிலை நெருங்கி அவரது முகத்தை நுகர்ந்து பார்த்து பிரியாவிடை அளிக்கும் பாணியில் கன்னத்தை நக்கி, முத்தமிட்டது. எதிர்பாராத இந்த பாசப்பிணைப்பால் புல்லரித்துப் போன மரியோவின் சோர்ந்திருந்த முகம் திடீரென பிரகாசம் அடைந்தது.இந்த காட்சி இண்டர்நெட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து, உலகம் முழுவது இதனை கண்ட லட்சக்கணக்கான மக்கள், பழகிய மனிதர்களின் மீது விலங்கினங்கள் வைத்திருக்கும் அன்பினைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்துப் போய் உள்ளனர்.

Tuesday, March 18, 2014

அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது…!

இந்தக் கடிதத்தை வாசிக்க உனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் இதனை வாசிக்கும் மனநிலையில் நீ இருக்க மாட்டாய் என்பதும் எனக்குத்தெரியும். ஆனால் உன் பற்றிய இக்கடிதம் உனக்கல்ல மகளே!
தமது இரும்புக் கரம் கொண்டு மனித உயிர்களை நரித்த இந்த அரசாங்கத்திற்கு உன்னைப்போன்ற பாலகர்கள் ஒரு பொருட்டல்ல என்று உனக்கும் எனக்கும் இன்னும் மனித உணர்வுள்ள அனைவருக்கும் தெரியும். மனித நேயமற்ற மகிந்த ,கோத்தாபய அரசாங்கத்திற்கு உன்னையும் உன் அம்மா போன்ற அப்பாவிகளையும் மோசமான சதிவலைக்குள் விழுத்தி காட்டுமிராண்டித்தனமான சட்டங்களின் பிடியில் சிக்க வைத்து அலைக்களித்து அழிப்பது இன்பம் தரும் விளையாட்டு மகளே!

கேட்பாரில்லாக்காலத்தில் நிற்கிறோம் விபூசிகா பெண்ணே!

அன்று யாழ்ப்பாணத்தில் நீ உன் அம்மாவுடனும், உன் அம்மாவைப் போன்ற நூற்றுக்கணக்கான அம்மாக்கள், அப்பாக்கள் மற்றும் சகோதரர்களுடன் வீதியில் இறங்கிக் காணாமல் போனவர்களுக்காகப் போராடிய போது லண்டனில் இருந்து அழைத்த என் குரலுக்கு ஓடிவந்து உன் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தாயே!

லண்டன் றேடியோவில் இருந்து ஒரு மாமா கதைக்கிறார் கதையுங்கோ என்று உன்னுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சகோதரி உன்னிடம் கைப்பேசியைத் தர நீ குமுறிய குரல் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது மகளே!

மாமா இங்க வாங்கோ எங்களை எல்லாம் பாருங்கோ என உன் இயலாமையின் உச்சத்தில் நீ அழைத்த அழைப்பும் உன் அழுகைச் சத்தமும் என் மனச்சாட்சியை உலுப்புதடி.

புலம்பெயர் தேசத்தில் என்போன்ற மாமாக்கள் இருப்பதனால் அவர்கள் எதையாவது சாதித்து விடுவார்கள், மலையை மத்தாக்கி இலங்கைப் படைகளை மோராக கடைந்து எடுப்பார்கள் உன் அண்ணாவை மீட்டுத்தருவார்கள் என்று நீ நினைத்திருப்பாய். கடந்த 15ஆம் திகதி படையினர் சுற்றி வளைத்த போது கூட எங்களுக்கு ஏதோ நடக்கப் போகிறது வாருங்கள் என்று பதைபதைத்தாய்.

ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடித்துச் சூரியரும் சந்திரரும் தேவர்களும் மீண்டெழுவார்கள் அவர்கள் தனித் தமிழீழத்தை எடுத்து கையில் தருவார்கள் என்று இப்போதும் கதை எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள்.

இப்படிக் கற்பனைக் கதைகள், எத்தனை விபூசிகாக்களையும், எத்தனை ஜெயக்குமாரிகளையும் தழுவிச் சென்றனவோ எனக்கு தெரியாது.

ஆனால் உண்மையில் எதையுமே செய்ய முடியாத கையாலாகாத மாமாக்களாகவே நாம் இங்கு வாழ்கிறோம் காலத்தைக் கழிக்கிறோம். இணையத்தில் எழுதுகிறோம் உன்னைப்போன்றவர்களின் கைதுகளைத், தடுத்து வைப்புக்களைப் பதிவு செய்கிறோம். அவற்றை உலகறியச் செய்கிறோம், குருடர்கள் வாசிக்கிறார்கள்.

வானொலியில் உங்கள் சோகங்களைப் பேசுகிறோம், உங்கள் அவலக் குரல்களைப் பதிவு செய்கிறோம். செவிடர்கள் கேட்கிறார்கள். உங்கள் துயர் சூழ்ந்த வாழ்வு கூட இங்கு சிலருக்கு வியாபாரமாகிப் போனதை உன் கள்ளமில்லா இதயம் அறியாதடி.

விபூசிகாவு நீ உன் அம்மாவுடன் 15ஆம் திகதி கடத்தப்பட்டாய். அருகில் உள்ள முகாமில் உன்னையும் உன் அம்மாவையும் மறைத்து வைத்திருந்தார்கள். ஆனால் உன் வீட்டைச் சுற்றி இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் குவிந்த போழுதே செய்திகள் பரவி ஊடகவியலாளர்களும் அயலவர்களும், விழித்துக் கொண்டதால் உங்களைக் கடத்தியதை மறைத்து, கோத்தபாய கும்பல் இப்போது அதனைச் சட்டபூர்வமான கைதாக மாற்றி இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு நான் கடத்தப்பட்ட சம்பவத்தை நினைத்துப்பார்க்கிறேன். என்னைச் தூக்கிச் சென்ற அதிகாலைப்பொழுதில் ஊடகவியலாளர்களும் என்னை அறிந்த அரசியல்வாதிகளும் இராசதந்திரிகளும் விழித்துக்கொண்டது மட்டுமல்லாது எனது விடுதலைக்காக கோட்டை புகையிரத முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்ததுடன் அதிகாரத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கவும் செய்த்தனர். அதனால் நான் மீண்டேன். இன்னும் பணபலம் உள்ளவர்களும் செல்வாக்குள்ளவர்களும் இப்படியான சூழ்நிலைகளில் இருந்து மீளவே செய்கின்றனர்.

திருகோணமலையில் எங்கோ ஒரு மூலையிற் பிறந்து, வன்னியில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த சிறுமி தானே நீ. ஏழைக் குடும்பத்தில் பிறந்த நீ சிறு பராயத்திலேயே இரண்டு சகோதரர்களைப் பறிகொடுத்துன் தந்தையையும் இழந்து தாயுடன் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தாய். இன்று உன்னோடிருந்த உன்னம்மாவையும் பறித்துப் பூசாவுள் வீசி விட்டார்கள். என்னடி செய்வாய் நீ?

உன்னைச் சுற்றி வளைத்த போது அயலவர்கள் சிலர் கூடினார்கள். ஊடகவியலாளர் சிலர் கூடினார்கள். மறுநாள் சில அரசியல்வாதிகள் வந்தார்கள். வழமைபோல் ஊடகவியலாளர்கள் ஊடகங்களில் உங்கள் நிலையை அறிக்கையிட்டார்கள். அரசியல்வாதிகள் தமது படத்துடன் கூடிய கண்டிப்பு அறிக்கையை வெளியிட்டார்கள். அத்துடன் எல்லாமும் முடிந்து விட்டதெடி.


நீ நம்பிய மாமாக்களோ தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து நின்று பூர்விகாவினதும் அம்மாவினதும் கைதை நாமே முதலில் வெளிக்கொணர்ந்தோம் என வீரப்பிரதாபம் பேசுகிறார்கள்.

உங்கிருக்கும் தானைத் தலைவர்களால் கண்டிக்கிறோம்-

வன்மையாகக் கண்டிக்கிறோம்- மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற அறிக்கைகளுக்கு அப்பாற் செல்ல முடியாது உள்ளது. உனதும் உன்போன்ற சிறுவர்களதும் உன் அம்மாவினதும் அவர் போன்ற ஆயிரக்கணக்கான அம்மாக்களினதும் போராட்டங்களால் புளகாங்கிதம் அடைந்தவர்களால், அதனை வைத்து அரசியல் நடத்துபவர்களால் உங்களை சுற்றி வளைத்த இடத்தில் ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடத்த முடியவில்லையே விபூசிகா….

மகாகாணசபைத் தேர்தல் காலத்தில் தேசியம், சுயநிர்ணயம், எனக் கோசமிட்டார்களே! மாவீரர்களின் துயிலும் இல்லங்களை மீளகட்டி எழுப்புவோம் என்று சொன்னார்களே! காணாமல் போனவர்கள் சிறையில் இருப்பவர்கள் புனர்வாழ்வுக்கு உட்பட்டவர்கள் எல்லோருக்காகவும் குரல் கொடுப்போம் என்றார்களே! ஆனால் அவர்களே இன்று உன்னைச் சுற்றி வளைத்த இடத்தில் சப்பாணி கட்டி இருந்து சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடத்தினால் தமது வேட்டியிற் சிகப்பு மண் அல்லது அழுக்கு மண் பிடித்துவிடும் என்கிறார்களே என்ன செய்ய?

வடக்கிலும் கிழக்கிலும் உள்ளுராட்சிசபைகள், மாகாண சபைகள், பாராளுமன்றம் ஆகியவற்றில் அங்கத்துவம் வகிப்பவர்களைச் சேர்ந்தாலே 200க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து விடுவார்கள். இவர்கள்தான் தமிழ் மக்களின் விடிவுக்காய் தாங்கள் தூங்காமல் இருப்பதாக ஊடகங்களில் தவறாமல் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விபூசிகா ஒரு நாள் ஒரே ஒரு நாள் உனக்காகவும் உன்னைப் போன்ற ஏராளமானவர்களுக்காகவும் இந்த வெள்ளை வேட்டிக்காரரும், கோட்சூட் போட்டவர்களும் ஒன்றிணைந்து ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியாது இருக்கிறார்களே!

வெளிநாடுகளில் புலம்பும் அமைப்புக்களைப்பற்றி உனக்கு தெரியாது பிள்ளை. அவர்கள் தங்கள் கட்சியை, தங்கள் கொடிகளை, தங்கள் சின்னங்களையெல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியாக ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியாதபடிக்கு மாற்ற முடியாத குழுநிலை வாதங்களுக்குள் சிக்குண்டு தவிக்கிறார்கள்.

சர்வதேசம் கூட உன்னைக் கண்டு கொள்ளவில்லையே!! பாக்கிஸ்தானின் மலலாவைத் தெரிந்து கொண்ட உலகின் கண்களுக்கு உன்னைத் தெரிந்து கொள்ள முடியாது போய்விட்டது. இதுவும் புதிதில்லை சிரியாவையும் லிபியாவையும் கண்டுகொள்ள முடிகிற உலகத்துக்கு முள்ளிவாய்க்காலைக் கண்டு கொள்ள முடியாமல் போனதை நாங்கள் அறிவோம் நீ அறியாய்.

நீயும் மலலாவைப் போன்ற ஒரு சிறுமி தானே. அவள் எப்படித் தன்னுடைய நாட்டின் சமூகத்தின் அடிப்படைவாதங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க- அடிப்படை உரிமைகளுக்காகப் போராடத் துணிந்தாளோ அப்படித்தானே மகளே நீயும் துணிந்தாய்!

உன் அண்ணாவைத்தேடும் உன் குரல், அதன் பின்னால் உள்ள எத்தனை அண்ணன்மார் அக்காமாரின் காணாமல் போதலைத் தேடுகிறது? உன் சகோதரனைத் தேடி நீ எழுப்பிய குரல் எத்தனை அதிர்வுகளை ஏற்படுத்தியது?

ஆனால் உன்னை அமெரிக்காவுக்கும் மேலைத் தேசத்திற்கும், ஐநாவுக்கும் தெரியவில்லையே?

நீ தான் அமெரிக்காவாலும் அதனைச் சார்ந்தவர்களாலும் இலக்கு வைக்கப்படும் இஸ்லாத்திற்கு எதிராக போராடவில்லையே!

நீ பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ அல்லது ஈராக்கிலோ பிறந்திருந்தால் இஸ்லாமுக் கெதிராகப் போராடவேண்டும். நீ சிரியாவில் பிறந்திருந்தால் அசாத்துக்கெதிராகப் போராடவேண்டும். நீ சிம்பாவேயில் பிறந்திருந்தால் முகாபேக்கு எதிராகப்போராடவேண்டும். நீ கியூபாவிலோ வெனிசு வெலாவிலோ சீனாவிலோ ருஸ்சியாவிலோ வடகொரியாவிலோ பிறந்திருந்தால் அந்தந்த அரசுகளுக்கு எதிராகப் போராட வேண்டும் ஆனால் இலங்கையில் பிறந்தால் எதற்கெதிராகவும் போராடக் கூடாதென்றறியாச் சிறுமியாகிப் போனாயே பெண்ணே?

நீ உன் அண்ணாவைத் தேடினால் பயங்கரவாதம்.

நீ உன் அப்பாவைத் தேடினால் பயங்கரவாதம்

நீ உன் அம்மாவை அரவணைத்துக்கொள்வது பயங்கரவாதம்…

நீ உன் மண்ணின் மேலமர்ந்து உனது உரிமைகளுக்காகப் போராடினால் அது பயங்கரவாதம்.

பின் எதடி இங்கே சனநாயகம்?

உன் அண்ணாவையும் உன் அம்மாவையும் ஒன்று சேரக்காண உனக்கு கொடுத்து வைக்க வேண்டுமடி மகளே… மகளே…

நன்றி : globaltamilnews.net/

Friday, March 14, 2014

“உத்தம வில்லன்’ படத்தில் கே.பாலசந்தர் நடிக்கிறார்!

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞராக கமல் நடிக்க அவரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்க ‘உத்தம வில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. கமல் கதை, திரைக்கதை அமைத்த இப்படத்தில் விஸ்வரூபத்தில் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோரே ஜோடி சேருகிறார்கள். மேலும் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றமாக இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார்கள்.

மேலும் இப்படத்தைப் பற்றி வந்துள்ள அதிகாரப் பூர்வமான தகவலின் படி,” உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குனராக கே.பாலச்சந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாறாக திரு.கே.விஸ்வநாத்தும் நடிக்கின்றனர். 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ஆம் நூற்றாண்டுக் கமலின் காதலியாக ஆண்ட்ரியா ஜெரெமியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கொல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கொக்கு செட்டியார் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க கமல்ஹாசன் மற்றும் விவேகா பாடல்களை எழுதுகின்றனர்.” என்று தெரிய வருகிறது

ஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- ஒரிஜினல் தமிழில்!’

உலக அளவில், இளம்பெண்களிடம் புகழ் பெற்ற, மில்ஸ் அண்டு பூன் பதிப்பக நாவல்கள், முதன் முறையாக, தமிழ் கதாபாத்திரங்களுடன், தமிழில் வெளிவர உள்ளது. ஆபாசம் இல்லாமல், காமரசம் ததும்பும் வகையில், எழுதப்படும் மில்ஸ் அண்டு பூன் நாவல்கள், தமிழில் வெளிவருவது, இளம்பெண்கள் மத்தியில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொழுதுபோக்கு என்றாலே மகிழ்வூட்டல், இன்பக் கிளுகிளுப்பைப் பெருகச் செய்தல் என்ற இரண்டு முக்கியக் கடமைகள் உண்டு.கலை மற்றும் இலக்கியத் துறையில் இன்று வரை, உலகம் முழுவதும் இந்த ‘ஃபார்முலா’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகில் இந்த ‘ஃபார்முலா’ சில ஆண்டுகள் ‘ஒர்க் அவுட்’ ஆனது. ஆனால் தமிழ்ப் பதிப்பகத் துறையில் இந்த ‘கிளுகிளுப்பூட்டி – மகிழ்ச்சியூட்டும்’ வியாபார தந்திரத்தை ஒருவரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ‘இது மாதிரி’ விஷயங்களை எழுதியவர்களின் ‘எழுத்து ஆயுட்காலம்’ மிக மிகக் குறுகிய காலமாகவே இங்கு இருந்து வந்துள்ளது.ஆனால் ஆங்கிலப் பதிப்பக உலகத்தைப் பொறுத்தவரை விஷயமே வேறு. அவர்களுக்குப் பொழுது போக்கிற்காகவே புத்தகத் தயாரிப்புத் தொழிலை நடத்த வேண்டிய தேவையும் அவசியமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போயிற்று. ஆங்கிலத்தில் புத்தகம் படிப்போரில் பெரும்பாலானவர்களுக்கு, ரயில் – பஸ் பயணங்களில் கையடக்கப் புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம்.

இந்நிலையில் ஆண் – பெண் – காதல் – காமம் – படுக்கையறை சாகசங்கள் என அந்தப் புத்தகங்களில் விஷயங்கள். எளிமையான ஆங்கிலத்தில் சிருங்கார ரஸம். பச்சையான எழுத்து எனக் கொச்சைப்படுத்த முடியாத வகையில் வார்த்தைப் பிரயோகம். நீலப்படம் என்று அடித்துக் கூற முடியாமல், போர்வை போர்த்திய சரச விளையாடல்கள், நமது பண்பாட்டுக்கு மரபு மீறல். ஆனால் ஆங்கில மரபு வழியில் சாகசம், துணிச்சல். இளம் உள்ளங்களில் ஏதோ ஒரு வகையில் ‘திருப்தி’யை வழங்கும் விஷயங்கள் நிறைந்த இப்புத்தகங்களை, வாலிப வயதினர், அதிகளவில், விரும்பி வாசிப்பர். “மில்ஸ் அண்டு பூன்’ பதிப்பகத்திலிருந்து வெளிவரும் புத்தகங்களை, பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர்.அலுக்காமல், சலிக்காமல் கடந்த நூறு வருஷங்களாக ‘இப்பதிப்பகம் மேலே கூறிய வகைப் புத்தகங்களைப் பதிப்பித்து வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருகிறது.

1908ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பதிக்கம், தற்சமயம் இந்தியாவில் சென்னையில் தனது கிளையைத் தொடங்கியுள்ளது. இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதும் திறன் உள்ள எழுத்தாளர்களுக்கு வலை வீசியுள்ளது.கடந்த ஆண்டில், தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அயல்நாட்டு கதாபாத்திரங்கள், பெயர்கள், இடங்கள் என, அனைத்திலும் அந்நியத்தன்மை இருந்ததால், உலக நாடுகளில் கிடைத்த வரவேற்பு, நம் நாட்டில் கிடைக்கவில்லை.உள்ளூர் மொழிகளில் : இதனால், நேரடியாக உள்ளூர் மொழிகளில், நாவலை வெளியிட முன் வந்துள்ளது, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகம். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம், தமிழ் நாவலை வாங்கி, பதிப்பிக்க உள்ளது. இது குறித்து, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகத்தின், இந்தியாவுக்கான படைப்பாக்க தலைவர், மணீஷ் சிங் கூறியதாவது: கடந்த ஆண்டே, இந்தி, மராத்தி, மலையாளம், தமிழ் ஆகிய உள்ளூர் மொழிகளில், நாவல்களை வெளி யிட்டோம். அதற்கு, நல்ல வரவேற்பு இருந்தது. இருந்தாலும், உள்ளூர் கதாபாத்திரங்கள், தெரிந்த இடங்கள், பெயர்கள் இருந்தால், வாசகர்களுக்கு இன்னும், நெருக்கமாக இருக்கும் என, நினைத்தோம். அதனால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து, நாவல் பெற்று, பதிப்பிக்க உள்ளோம். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில், தமிழில், மில்ஸ் அண்டு பூன் நாவல்களை, படிக்கலாம்.”என்று அவர் கூறினார்.

இதனிடையே மில்ஸ் அண்ட் பூன் முதலில் ‘செக்ஸி’ நாவல்களைப் பதிப்பிக்க முடிவு செய்தபோது எழுத்தாளர்களை நோக்கித் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு விளம்பரம் வாயிலாக வேண்டுகோள் விட்டது. ஆயிரக்கணக்கில் நாவல்கள் வந்தன. நூற்றுக்கணக்கான இளம் – ஆண் – பெண் நடுவர்கள் நாவல்களைப் படித்தனர். ‘விஷயங்கனத்’துடன் ஆறு நாவல்கள் மட்டுமே தேறின. போட்டியில் கலந்து கொண்டவர்களில் 75 சதவிகிதத்தினர் பெண்கள். இந்த மாதிரி விஷயங்களை எழுதும் ஆசை, அந்த நாள்களிலேயே பெண்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. இங்கிலாந்தில்! ‘சோபியா கோலி’ என்ற பெண்மணி எழுதிய ‘இருளிலிருந்து அம்புகள் (Arrows from the Dark) முதல் தகுதி பெற்று பிரசுரமாயிற்று. ‘காமரசம் சொட்டுகிறது, ஆனால் ஆபாசம் என துளிக்கூட இல்லை’ என்ற விமர்சனத்துடன் வாசகர்களால் வரவேற்கப்பட்டது.

இதையடுத்து திறமையான எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். தினுசு தினுசாக, புதுசு புதுசாக இந்த ரஸனுபவத்தைப் பிழிந்து தர, எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்தார்கள். டாக்டர்கள், நர்ஸ்கள், விமானப் பணிப் பெண்கள், வீட்டு வேலைக்காரர்கள், இராணுவ வீரர்கள், வியாபாரிகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் கதை மாந்தராகி, தங்கள் உள்ளக்கிடக்கைகளை, வேட்கைகளை, மோகதாபங்களை அச்செழுத்தில் வெளிப்படுத்தினார்கள். லிலியன் வாரன் என்ற எழுத்தாளர் மூன்று வெவ்வேறு பெயர்களில் எழுதிக் குவித்தார். வயலெட் என்ற பெண்மணி சினிமா ஸ்டூடியோக்களை வலம் வந்து தகவல் சேகரித்து கனவுலக சில்மிஷங்களுக்கு நாவல் வடிவம் தந்தார். கதாநாயகி என்பவள் கணவனிடம் திருப்தி காணாதவளாக, வேலிதாண்டி ‘வித்தை’ கற்பதாக ஆணின் ஆதிக்கத்தை இந்த ‘யுத்தி’ மூலம் அடித்து நொறுக்குவதாகக் கதைகள். எல்லாக் கதைகளிலும் தங்களின் வாழ்க்கைச் சாயல் நிழல் இருப்பது போன்ற பிரமையை வாசகர்களிடம் ஏற்படுத்தும் ரஸவாதம் நிறைந்த எழுத்துகள் நிறைந்த மில்ஸ் அண்ட் பூன் நாவல்கள் இனி நம் மண்ணின் கேரக்டர்களில் எப்படிதான் வரவேற்பைப் பெறும் என்று பார்க்கத்தானே போகிறோம்!

நலம் பல தரும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை மறக்கலாமா?

இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுக்கப் போவது தண்ணீர் பிரச்னை தான் என்பது தெரிந்த விஷ்யம்தான்.இந்த தண்ணீர் பிரச்னையை சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பலராலும் பேசப்பட்டுதான் வருகிறது. இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டிற்கு 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 56 கோடி ரூபாயில் திட்டம் அமைக்கலாமா என்ற தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அடுத்த பத்தாண்டுகளில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. நதிநீர் இணைப்பு திட்டத்தில் 30 நதிகள் முதல் இரண்டு ஆண்டுகளில் இணைக்கப்படும். ஆயிரம் கி.மீ., நீளத்திற்கு கால்வாய்கள் அமைத்து 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுக்க 11 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்காக 400 புதிய நீர் நிலைகள் கட்டப் படும். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த எந்த இடத்தின் வழியாக கால்வாய் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது அறியப்பட வேண்டும். அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் மற்றும் குறைவான நீர் கிடைக்கும் இடங்கள் ஆகியவை குறித்து அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், அடையாளம் காணப்பட்ட அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் குறித்து ஒருமுகப்போக்கு இல்லை. உதாரணமாக, மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் அளவுக்கு அதிகமான நீர் உள்ளது என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் மாநில அரசுகளான ஒரிசா, ஆந்திரா ஆகியவை குறைவான நீர் தான் செல்கிறது என்று கூறி வருகின்றன. இது குறித்து வல்லுனர்களிடையே இன்றும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால் நதிநீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து முறையான ஒப்பந்தங்கள் இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. இதே கதைதான் மற்ற மாநிலங்களுக்கு இடையேயும் நடக்கிறது.

மத்திய அரசு பணியிலிருந்த இன்ஜினியர் கே.எல்.ராவ் என்பவர் தான் கடந்த 1972ம் ஆண்டு, முதன்முதலில் நதிநீர் இணைப்பு குறித்த யோசனையை வெளியிட்டார். இதன்படி, கங்கை – காவிரி இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டால் பாட்னா அருகே வெள்ளமாக பாயும் 60 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தென் மாநிலங் களின் 150 நாள் நீர் தேவையை சமாளிக்க உதவும் என்று கூறினார். ராவ் கூறிய கங்கை -காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு இணையான “கேர்லேண்ட் கெனால்ஸ்’ என்ற திட்டத்தை கேப்டன் டாஸ்டர் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு பரிந்துரைத்தார். இதன்படி இமயமலையில் பிறக்கும் நதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பிறக்கும் நதிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு தேசிய குழு அமைக்கப்பட்டு கேப்டன் டாஸ்டர் கூறிய நதிநீர் இணைப்பு கால்வாய் அமைப்பதிலுள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.ஆனால் இந்த திட்டம் சாத்தியமற்றது என்று பின்னர் நிராகரிக்கப்பட்டது.

மழைக்காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது.இதை தடுக்க கால் வாய் அமைப்பதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாய்க்கும் வழி ஏற்படும். தொடர்ச்சியாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்காவிட்டால் அதனால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகமாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்க தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதனால், இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளின் நீர் தேவையை எளிதாக சமாளிக்க முடியும். திட்டங்களை அமலாக்கும் போது தேவையான நிதி பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பக்கத்து மாநிலங்களுக்கு நீர் அளிக்க வழி கிடைக்கும்.விவசாய பயன்பாடு அதிகமுள்ள குறிப்பாக டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு நிலத்தடி நீர் பெருமளவில் உதவுகிறது.

பாசனத்திற்கு தேவைப்படும் நீர், குழாய் கிணறு மூலம் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடிநீர் வளம் கிருஷ்ணராஜசாகர் அணையில் கொள்ளளவை விட அதிகம் என்று யூ.என்.டி.பி.,
மதிப்பிட்டுள்ளது.ஆற்று சமவெளி பகுதியிலிருந்து அதிக தொலைவிலுள்ள இடங்களில், நிலத் தடி நீர்வளமே குடிநீர் ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவதால் 10 முதல் 100 மீ வரை நீர் மட்டம் குறைந்து விடுகிறது. இதனால் இப்பகுதிகளில் 300 மீ ஆழம் வரை தண்ணீருக்காக கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது.

நகர் புறங்களில் தண்ணீர் மட்டம் குறைய குறைய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவுடன் குழாய் கிணறு தோண்டப் படுவதால் நிலத்தடிநீர் மட்டம் அதாள பாதாளத்திற்கு செல்வதை தடுக்க முடிவதில்லை. இந்த செயல் தொடரும் போது நிலத்தடி நீர் கிடைக்காமல் அந்த பகுதியே பாதிக்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில்தான் நதிநீர் இணைப்பு மூலம் நீர் பற்றாக்குறையுள்ள இடங்களில் நல்ல நீர் வளம் ஏற்படும். பாசன வசதி அதிகமாவதால் விவசாய நிலங்கள் செழிப்படையும். குடிநீர் பற்றாக்குறை என்பது எங்குமே இருக்காது. நிலத்தடி நீர் மட்டமும் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். பல்வேறு பயன்களை தரும் திட்டம் என்று அனைத்து மட்டத்திலும் அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்த தொடர்ந்து தயக்கம்
காட்டப்பட்டு வருகிறது என்பது தான் உண்மையான நிலை. தேசிய அளவிலும், தென்னிந்திய அளவிலும் நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் மத்திய அரசு இதுவரை அந்த கோரிக்கையை கண்டு கொள்வதாக இல்லை.

இந்நிலையில் தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது இப்போதைக்கு சாத்தியமல்ல என்பதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, தமிழகத்திலுள்ள நதிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மேட்டூர் அணையின் கீழ் பகுதியில், கட்டளை அணை அருகில் தடுப்பணை அமைத்து அங்கிருந்து கால்வாய்கள் மூலம் வைகை, குண்டாறு, வைப்பாறு உள்ளிட்ட பல நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி, ஸ்ரீரங்கம்; புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆவுடையார் கோவில்; சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, இளையங்குடி, மானாமதுரை; ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவடானை, பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர்; விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, கரியாப்பட்டி, அருப்புக்கோட்டை; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திக் குளம் ஆகிய பகுதிகள் பயன் அடையும். தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தினால், மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெற முடியும். மாநிலத்தை வறட்சியின் கோரப்பிடியிலிருந்து காக்க வேறு வழியில்லாமல் தமிழக அரசு இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், வற்றாத ஜீவ நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென்னிந்திய நதிகளை தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குன்றாமல் கிடைக்கும். நீர் வழிச் சாலை திட்டம்: மதுரையைச் சேர்ந்த பொறியாளர் காமராஜ் மற்றும் அவரின் குழுவினர் பல ஆண்டு ஆய்வுக்கு பின்னர் “கங்கை – குமரி தேசிய நீர் வழிச்சாலை திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம், தென் மாநிலங்கள் கூடுதல் நீர் பெறுவதுடன் நீர் வழிப் போக்குவரத்தையும் பெற முடியும்.

திட்டத்தின் விவரம்: மூன்று நீர்வழிகளை கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு பிறகு ஒன்றாக இணைக்கப் படும்.

இமயமலை நீர்வழி: இது நான்காயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை -பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.

மத்திய நீர்வழி: இது ஐந்தாயிரத்து 750 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை, மகாநதி மற்றும் தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.

தென்னக நீர்வழி: இது நான்காயிரத்து 650 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும். இந்த நீர்வழிகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருக்கும். இந்த மூன்று நீர்வழிகளும் உரிய வழியில் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்படும். நீர் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் நீரை பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பணிகளை இந்த நீர்வழி செய்யும். இதன் ஆண்டு கொள்ளளவு, 15 ஆயிரம் டி.எம்.சி., ஆகும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பெரிய நதிகளை இத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் கிளை நதிகளை இணைத்தாலே போதும். இயற்கையான புவியமைப்பு பயன்படுத்தி, இந்த திட்டம் நிறைவேற்றப்படும். கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் மட்டுமே நீர்வழியில் கொண்டு வரப்படும். இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்.

நலம் பல தரும் நதி நீர் இணைப்பு

வெள்ளத்தடுப்பு: மழைக் காலங்களில் ஏற்படும் கட்டுப் படுத்த முடியாத வெள்ளத்தை, இந்த திட்டத்தின் மூலம் கட்டுப் படுத்தலாம். நீர் குறைவாக உள்ள பகுதியை நோக்கி வெள்ளத்தை திருப்பி விடலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவை குறைக்கலாம். வெள்ளத் தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, வெள்ள நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாக குறையும்.

குடிநீர்: அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங் களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.

விவசாயம்: 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். இதனால் ஆண்டுக்கு, 50 கோடி டன் உணவு உற்பத்தியை பெற முடியும். ஏற்றுமதி பெருகி அன்னிய செலாவணி ஈட்ட முடியும்.

மின்சாரம்: நீர் வழிகளில் நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதனால் இந்திய தொழில் உற்பத்தியை 15 மடங்கு உயர்த்த முடியும். அனைத்து நீர்வழிகளிலும் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் இடமாற்றத்திற்கான மின் இழப்பு குறையும்.

வேலை வாய்ப்பு: இத்திட்டத் திற்கான கட்டுமான பணியின் மூலம், வேலை வாய்ப்பு பெருகும். மேலும், கப்பல் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் விவசாயத்துறை ஆகியவை மூலம் வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.

தெலுங்கு கங்கை திட்டம் சிறந்த உதாரணம்: அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத் தில், ஒரு மலையில் ஓடும் நதியிலிருந்து, 720 கி.மீ., தொலைவி லுள்ள சமவெளிக்கு கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, விவசாயம் செய்யப்படுகிறது. துருக்கி நாட்டிலிருந்து சவுதி அரேபியாவிற்கு, கிட்டத்தட்ட 3 ஆயிரம் கி.மீ., தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் எடுத்து வரப்படுகிறது. இத் திட்டத்தால் தங்கள் நாட்டிற்கு பெரும் பாதிப்பு என்ற போதிலும் இஸ்ரேல், ஈராக் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தை அனுமதித்துள்ளன. இந்தியாவில், ஆந்திர அரசு செயல்படுத்தியுள்ள தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஓடும் கிருஷ்ணா நதியை தென்பகுதியிலுள்ள வடபெண்ணை ஆற்றுடன் இணைக்கும் வகையில் கால் வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் வழிநெடுக ஒவ்வொன்றும் 10 முதல் 12 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட மூன்று செயற்கை ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குண்டூர், நெல்லூர் மற்றும் கடப்பா மாவட்டங்கள் நல்ல பாசன வசதியை பெற்றுள்ளன. மேலும், இத் திட்டத்தின் கீழ் சென்னை நகருக்கும் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தேசிய நதிகளை இணைத்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்பதற்கு தெலுங்கு கங்கை திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.

இன்றைய நிலையில் நாட்டின் பல கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சராசரியாக 2 லிட்டர் குடிநீர் கூட கிடைப்பதில்லை. ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கும் நபருக்கு சராசரியாக தினசரி 5,910 லிட்டர் நீர் கிடைக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் நீர்வளம் அவ்வளவு மோசமானதாக இல்லை. சர்வதேச அளவில் சமவெளி பகுதிகளில் சராசரியாக 70 செ.மீ., மழை பெய்கிறது. அதேவேளையில், இந்தியாவில் 117 செ.மீ., மழைபொழிவு உள்ளது. இந்த வகையில் ஆண்டுக்கு கிடைக்கும் 37 கோடி எக்டேர் மீட்டர் மழைநீர் நாட்டின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானது. ஆனால், போதுமான நீர்வள மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தினால் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்து நாட்டில் நீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மழைநீரில் பெரும் பகுதியை பயன் படுத்த முடியும்.

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1982ம் ஆண்டு, தேசிய நீர்வள நிறுவனம் துவக்கப்பட்டது. நதி நீர் இணைப்புக்கான திட்டங்களையும், வரைமுறைகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இந்த அமைப்பின் செயல்பாடு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மத்திய அரசு முழு அளவிலான நிதி உதவியை அளித்து வருகிறது. இந்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் தான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இதுநாள் வரை யார், யார் இதில் இடம் பெற்றுள்ளனர்; அவர்களின் பெயர் மற்றும் தகுதி குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும், மற்ற துறைகளை சார்ந்தவர்களோ, பொதுமக்களின் பிரதிநிதிகளோ யாரும் இந்த அமைப்பில் இதுவரை இடம் பெறவில்லை. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை. குறிப்பாக நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து தொழில் நுட்ப அறிக்கை தர வேண்டிய இந்த நிறுவனம் இதுவரை அது சம்பந்தமாக ஒரு அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் உணவு பற்றாக் குறை அதிகமாக இருந்தது. விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காக, பல கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையும் விவசாய நிலமும் கொண்ட நாடுகளுக்கு அணைகள் ஒத்துவராது. நதிகளை இணைப்பதே சிறந்த முறையாகும் என்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றும் கருதப்படுகிறது. பொதுவாக அணைகள் கட்டுவதால் புவியியல் ரீதியில் பெரும் பாதிப்புக்கள் உண்டாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு தான் ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அணைகள் கட்ட,சட்ட ரீதியான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அணைகளை கட்டுவதை காட்டிலும் வட மாநில நதிகளை தென் இந்திய நதிகளோடு இணைப்பது ஒன்றே இந்தியாவின் விவசாய மேம்பாட்டிற்கும் வெள்ள சேத தடுப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும் என்று நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞான உலகத்தையே வியக்க வைத்தவர்! - ஐன்ஸ்டீன்

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொண்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்.

1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்:விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.

1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.

அதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டீன்.

அணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல் ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.

’அம்மா’ – மறைக்கமுடியாது! – தேர்தல் ஆணையம்

அம்மா’ என்ற சொல் பொதுவானது என்பதால் அந்த சொல் மறைக்கப்படாது.மேலும், இரட்டை இலையுடன் கூடிய எம்.ஜி.ஆர். சமாதி நுழைவு வாயில் தேர்தலுக்கு முன்பே கட்டப்பட்டதால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரத்தில், அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சென்னை ஹைகோர்ட்டில் தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் அம்மா குடிநீர் பாட்டில் மற்றும் அரசு சிறிய பஸ்களில் வரையப் பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு உத்தரவிடக் கோரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.தனது மனுவில் அவ்ர்,”தமிழக அரசின் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுக-வின் கட்சி சின்னமான இரட்டை இலை முத்திரைகளை அகற்றக் கோரிய வழக்கு ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.மக்களவைத் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசு சொத்துக்களில் அதிமுகவின் சின்னம் மற்றும் முதல்வரின் உருவப்படங்கள் இருப்பதால் அது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.இதனால், அரசு சிறிய பஸ், குடிநீர் பாட்டில்களில் உள்ள இரட்டை இலை மற்றும் முதல்வர் புகைப்படத்தை அகற்ற உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் இரண்டு முறை புகார் அளித்துள்ளேன். எனவே, அரசு தண்ணீர் பாட்டில் மற்றும் அரசு சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனறு கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் இதற்கு பதிலளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதையடுத்து தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு அளித்துள்ளது.அதில்,”சென்னையில் உள்ள சிற்றுந்துகளில் இடம் பெற்றுள்ள இலைகள் படத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டிலில் உள்ள முதல்வரிடம் படம் மறைக்கப்படும். ஆனால்’அம்மா’ என்ற சொல் பொதுவானது என்பதால் அந்த சொல் மறைக்கப்படாது.மேலும், இரட்டை இலையுடன் கூடிய எம்.ஜி.ஆர். சமாதி நுழைவு வாயில் தேர்தலுக்கு முன்பே கட்டப்பட்டதால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. விலையில்லா மிக்ஸி மற்றும் கிரைண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கில் இறுதி விசாரணை வரும் திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது

முத்தம் பசியின்மை நோயை விரட்டும்!

முத்தம் என்பது உறவிற்கான திறவுகோல். அதற்காக படுக்கை அறையை மட்டுமே நினைத்துக்கொண்டு முத்தம் கொடுக்கக் கூடாது. ஏனெனில் முத்தம் என்பது அன்பின் மொழி. நம் காதலை புரியவைக்கும் உச்ச பாஷை… கடைசி ஆயுதமும் அதுதான். மேலும் சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுக்கப்படும் முத்தம் தியானத்திற்கு ஒப்பானது. இது மனஅழுத்தம் போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறது என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் பிரிட்டிஷ் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் முத்தம் பசியின்மை நோயை போக்குவதாக கண்டறிந்து உள்ளனர். இது குறித்து அவர்கள் 31 பசியின்மை நோயாளிகளிடம் சோதனை செய்த போது இது போன்ற அரிய கண்டுபிடிப்பை உறுதிப் படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாகவும் அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டிருந்தது. அதிலும் இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்பதுடன் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஹார்மோன்கள் சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும். பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.என்று நிரூபித்துள்ளார்கள்.

நாம் ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது. இதனால் எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். அது மட்டுமின்றி ஒரு முறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்றும் குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுவதால் தொப்பை குறைவதாகவும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது

மேலும்,”இது போன்ற ரசாயனங்களை வைத்து உணவை சரியாத உட்கொள்ளாத நோயாளிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பக்காவாகக் குணப்படுத்தி விடலாம். இது போன்ற அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது என்று அடுத்தடுத்து உறுதிப் படுத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையில் பிரிட்டிஷ் மற்றும் தென் கொரிய விஞ்ஞானிகள் உடல் உறவின் போதும், மற்றும் பிரவசத்தின் போதும் இந்த ஆக்சிடோசின் சோதனை மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது என்று கூறினர்.அன்பு முத்ததால் கோபம் மறைகிறது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்றும் வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் கண்டுபிடித்துள்ளனர். இதையெல்லாம் விட பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும்” என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Wednesday, March 12, 2014

சுல்தான் தி வாரியர்.., ராணா.., கோச்சடையான் ஆன அனிமேஷன் சோக கதை!!!


கோச்சடையான்…

இதோ படம் முடிந்து ரிலீசுக்காக பரபரப்பாய் காத்திருக்கின்றது. சினிமா ரசிகர்களும் பரபரப்பாய் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம் சூப்பர் ஸ்டார் நடித்து கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் ஆறாயிரம் தியேட்டர்கள் ரிலீஸ்!.தும்.. சூப்பர் ஸ்டாரின் வாரிசுகளுக்கு பிசினஸ் செய்ய கற்றுத்தரவா வேண்டும்? மிகப் பெரிய பிராண்ட் ஓசியில் வீட்டிலேயே இருக்கும் போது பின் எதற்க்கு பயம். போட்ட முதலைவிட பல நூறு மடங்கு லாபத்தை முதல் மூன்று நாள் படம் ஓடினாலே எடுத்துவிட முடியும். ஒரு பத்து நாள் அவுஸ்புல்லாக ஓடினால் படத்தின் பிசினஸை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.அது சரி…கோச்சடையானுக்குப் பின்பக்கம் சென்னையில் இன்னொரு துறையின் சோகமுகம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் ஒரு இளைஞர் பட்டாளம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது. பல கோடிகள் சம்பளம் பாக்கி, திடீரென்று வேலை காலி…என இந்தியாவின் அனிமேஷனில் முதுகெலும்பாய் இருந்த சென்னை இன்று வாடி வதங்கி நொந்துப்போய் இருக்கின்றது. எனக்குத்தெரிந்து கிட்டத்தட்ட சுமார் 600 பேர் வேலை யில்லாமல் தவிக்கிறார்கள் அல்லது இந்த மாதிரி படங்களில் வேலைப்பார்த்துவிட்டு சம்பளம் கிடைக்காமல் பலர் இந்த துறையைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள் அல்லது ஓடிப் போகவைத்தார்கள்.

ஓவியர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு மிகப்பெரிய மைனஸ் பாய்ண்ட் உண்டு…அது அவர்களின் துறையைத் தவிர மற்றத் துறைகளைப்பற்றி கொஞ்சமும் நாலேட்ஜ் இல்லாமல் இருப்பார்கள் அது பல நேரங்களில் அவர்களுக்கு தெரிந்த துறையில் பாதிப்பு ஏற்பட்டால் வேறெதுவும் செய்யமுடியாமல் வீணாய் போய்விடுவார்கள்.

அப்படித்தான் கோச்கடையானின் கதையும்…அந்த மாவீரனை உருவாக்க சவுந்தர்யாவின் பிசினஸ் மூளையும், அதிகார பலமும் பல அனிமேட்டர்களை தவிக்க வைத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை…!!!

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்…

2006 ல் தனது புதிதாய் தொடங்கி கொஞ்ச காலமே ஆன “ஆக்கர் ஸ்டூடியோ” வில் ரஜினியை வைத்து அனிமேஷன் படம் தயாரிக்க முடிவு செய்து முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாயின. சவுந்தர்யா வெளிநாடு சென்று கொஞ்சம் அனிமேஷன் நாலெட்ஜும் நிறைய பிசினஸ் ஐடியாவும் கற்று வந்ததால் அப்பாவும் பச்சைக் கொடிக் காட்ட சுமார் 350 பேர் வரை ஆட்கள் எடுத்து வார்னர் பிரதர்ஸ் உடன் இணைந்து பிரமாண்ட சுல்தான் தி வாரியர் தொடங்கப்பட்டது.

3டி அனிமேஷனும், மோஷன் கிராபிக்ஸ் முறையில் படமும் வளர்ந்தது. ஆனால் சவுந்தர்யாவிடம் இருந்த கூட்டுக் களவாணிகளால் மோஷன் கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக வரவில்லை (அதாவது லைவ் ஆக நடிக்கும் நடிகரின் உடம்பில் இருக்கும் முக்கிய ஜாயிண்ட் (மூட்டுகள்) மார்ரூம் முக்கிய பாகங்கள் கம்ப்யூட்டர் முறையில் தயாரிக்கப்பட்ட 3டி உருவாக்க மாடல்களுடன் சேர்த்தல்). அதாவது லைவ் காட்சிகளை 3டி மாடல்களுடன் இணைக்கும்போது அந்த மாடலின் ஆக்ஷன்கள் கன்னா பின்னாவென்று மாற ஒரு சொதப்பலான படமே அவுட்புட்டாய் வந்தது. அதற்குள் பல நூறு கோடிகள் தண்டமானது. இதனால் முதல் முறையாக படம் கைவிடப்பட்டு தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில்…

ஆக்கர் நிறுனத்தில் சம்பளம் கொடுக்க முடியாமல் பலர் வேலையிலிருந்து தூக்கப்பட்டனர். பல மாத பாக்கிக்காக அவர்கள் போராட அதில் கோபமாய் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் செட்டில்மெண்ட் கொடுக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ரஜினியே வந்து கெஞ்சியதால் வேலை செய்தவர்கள் கலைந்துப்போனார்கள். இல்லையெனில் ரஜினியின் மகளால் ரஜினிக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும்.

இதைக் கண்டு ஓட்டமெடுத்த வார்னர் பிரதர்ஸ்…திரும்பிக்கூட பார்க்கவில்லை. படம் டிராப் ஆகும் வேளையில் சவுந்தர்யாகு கோவா படத்தை தயாரிக்க தொடங்கினார். இன்னொரு புறம் ரிலையன்சை வளைத்த சவுந்தர்யா சுல்தானை ராணா வாக்கி கொஞ்சம் எடுத்த அனிமேஷனையும் கொஞ்சம் லைவ் ரஜினியையும் சேர்த்து படமாக்க நினைத்து பூஜைப்போட அந்தோ பரிதாபம் ரஜினிக்கு உடம்பு சரியில்லாமல் சிங்கப்பூர் போக வேண்டியதாகிவிட்டது. கோவாவும் ஊத்திக் கொள்ள இன்னும் சுமை… !!!

பின்னர் ரிலையன்சும் பிய்த்துக் கொண்டுப் போக பல கோடிகள் செலவழித்ததை எப்படி திருப்பி எடுப்பது என நினைக்கையில் சுல்தானையும், ராணாவையும் மிக்ஸ் செய்து அரைத்த மாவே இந்த கோச்சடையான்.

இதன் பின்னர் ஈரோஸ் மற்றும் மீடியாஒன் னும் சேர்ந்து கோச்சடையான் தயாராக தொடங்கியது.மீடியா ஒன் கோச்சடையான் படத்தை பிரீலான்ஸ் முறையில் சென்னை மற்றும் இந்தியாவில் இருக்கும் பல அனிமேஷன், விஎஃபெக்ஸ் ஸ்டூடியோக்களில் ஒப்பந்த முறையில் அடிமாட்டு விலைக்கு பேச சின்ன சின்ன துக்கடா ஸ்டூடியோக்களில் மிகப் பெரிய கோச்சடையான் வளர்ந்தது. இதனாலேயே படத்தின் குவாலிட்டி படு மோசமானதாகத்தான் இருக்கும்.

இடையில் கே எஸ் ரவிக்குமாரின் விலகல், பணப்பிரச்சனை என கிட்டதட்ட 7 முதல் 8 வருடம் கழித்து படம் திரைக்கு வருகின்றது.இதனால் ஒன்றும் இந்திய அனிமேஷன் சந்தை மாறப்போவதில்லை…பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கப் போவதில்லை….படம் சுமாராக ஓடி இன்னும் சில அனிமேஷன் ஸ்டூடியோக்கள் முளைத்தால் எனக்கு சந்தோஷமே.

ஆனால்…சவுந்தர்யாவின் தவறான அணுகுமுறையும், தவறான திட்டமிடதலும், திறமையான வேலையாட்களை சரியான இடத்தில் வைக்காததுமே இந்த மோசமான அனிமேஷன் குவாலிட்டிக்கு காரணம்.

உடனே இந்திய அனிமேஷன் துறையின் மதிப்பை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்…காரணம் லார்ட் ஆஃப் ரிங்ஸ், ஹாரி போர்ட்டர், ஸ்பைடர்மேன், நார்னியா மற்றும் லைஃப் ஆப் பை என அத்தனை சூப்பர் டூப்பர் படங்களில் வேலைசெய்தவர்கள் சென்னை, மும்பையில் இருக்கும் அனிமேஷன் மற்றும் விஎஃபெக்ஸ் திறமையாளர்கள்தான்.

புகழும் பணமும் நிறைந்த அப்பாவுக்கு மகளாய் பிறந்து ஒரு துறையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாகவே ரஜினிகாந்த் சவுந்தர்யா அஸ்வின் இருந்ததில் எனக்கு வருத்தமே. சரியான திட்டமிடலில் சவுந்தர்யா ஈடுப்பட்டிருந்தால் இந்திய அனிமேஷன் உலகமும், ரஜினி ரசிகர்களும் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

வெறும் டிரைலரை மட்டுமே பார்த்து அதன் குவாலிட்டியை எப்படி தீர்மானிக்கலாம் என நீங்கள் கேட்டால்….பொதுவாக படத்தின் பல காட்சிகளை பார்த்தவன் என்கிற உரிமையிலும், படத்தில் வேலை செய்த தொண்ணூறு சதவீத அனிமேஷன் துறையினர் என்னுடன் வேலைப்பார்த்தவர்கள் அல்லது என் நண்பர்கள்.

இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் நான் சொன்னது உண்மையா பொய்யா என்று.

இந்த கட்டுரை எழுத தூண்டுதலாய் இருந்த Shan Karuppusamy க்கும் நன்றிகள். தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்…தவறிருப்பின் திருத்திக்கொள்கிறேன்.

ரஜினி ரசிகர்கள் இதை ரஜினிக்கான விமர்சனக்கட்டுரையாக எண்ணாமல் படத்தின் மறுப்பக்க விமர்சனமாக இதை கருதவேண்டும். ரஜினியின் டை ஹார்ட் ரசிகனாக இந்தப்படம் வெற்றிப்பெற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் 15 வருடமாக அனிமேஷன் துறை சார்ந்தவனாக இருப்பதால்… இந்தப்படம் மிகப்பேரிய வெற்றியடையவேண்டும் எனவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

- Thanks to Aanthai