Friday, February 28, 2014

செக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா?- சிவகுமார் பதில்!

சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம். புயல் காற்று அடிப்பது போன்ற காட்சியாம் அது. படுத்துக்கொண்டிருக்கும் சிவகுமாருக்கடியில் தண்ணீர் ஓடுகிறது. அதில் மனிதக் கழிவுகளும் கலந்திருந்த துர்நாற்றம் வீசுகிறது. ஆனாலும் அவர் சில மணி நேரங்கள் அப்படியே படுத்த நிலையில் அந்த துர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுக்கிறார். அதற்கு அவர் ஒரு காரணம் சொன்னார். அது சகலரையும் மிகவும் கவர்ந்ததிருக்கும்.அதாவது மனித மலத்தை மனிதர்களையே அள்ளச் சொல்லும் பழக்கம் நமக்கிருக்கிருந்தது. அந்தக் கொடுமைக்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் பொறுப்புதான். அதற்கு தண்டனையாக அதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அவர் சொன்னார். இதே வார்த்தைகளில் அல்ல. இந்த அர்த்தத்தில். அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதை அது நமக்கு காட்டுகிறது அல்ல்வா?இப்படி பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொல்கிறார்.

அது பற்றிய கேள்வியும் பதிலும்;

கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல்வதில்லையே..நீங்களாவது விளக்குவீர்களா?
ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமியிலேயே பேரின்பம். காமக்கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப்பிய பாரதத்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம். குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டோமென்று கருதமுடியாது.ஆணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு. ஆண் செயல்படுபவன்; பெண் அதை பெற்றுக்கொள்பவள்.

எத்தனை நதி பெருக்கடுத்தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக்கட்டைகளைப் போட்டாலும் வேள்வி நெருப்பு அணையாது. அவ்வளவு வீரியமானது பெண்களுடைய செக்ஸ் உணர்வு.சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று ஆகாயத்திலும் அடுக்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன் ஜாலம் செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க முடியாது.

மனதாலும் உடலாலும் ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.ராமாயணத்தில் கௌதம முனிவன் மனைவி அகலிகையிடம் தேவேந்திரன் மாறுவேடத்தில் வந்து கூடுவான். தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில நொடிகளில் இதுவேறு ஆடவன் என்று புரிந்துவிடுகிறது. இருந்தாலும் போகட்டும் என்று அனுமதித்துவிட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்துவிட்டான் என்று கதை போகும்.

டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகையின் உணர்வை உறுதிப்படுத்துகிறார். எவ்வளவுதான் ஒரு பெண் மனதளவிலும் உடல்வழியாகவும் முரண்டுபிடித்தாலும், ஒரு காமுகனின் பலாத்காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு ஏற்றுக்கொள்கிறது. மனதை உணர்ச்சி தற்காலிகமாக வென்றுவிடுகிறது. சில கணம் உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை வெல்லும்போது நடந்துவிட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை என்கிறார்.

மனித உடம்பை இரண்டாகப்பிரித்து மேல்பகுதி சுத்தமானது, கீழ்ப்பகுதி அசுத்தமானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று பிள்ளைகளிடம் சொல்லித்தராதீர்கள் என்கிறான் ஓஷோ. உடல் முழுமையானது. வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவேண்டுமென்றால் ஆசனவாய் சுத்தமாக இருக்கவேண்டும். ஆசனவாயில் அடைப்பு ஏற்பட்டால் துர்நாற்றம் மேலே கிளம்பி சிறுகுடல், இரைப்பை, உணவுக்குழாய் வழி வாயிலே புகுந்து வெளியேறும்.

ஆசனவாய் சிறுநீர்த்தாரை இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சிறுவனோ சிறுமியோ சிறுநீர்க் கழித்தபின் அதிலே தேங்கும் உப்பின் காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது விரலால் சொறியவே செய்யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந்தைகளை அதட்டாதீர்கள், மிரட்டாதீர்கள்.

சிறுநீர் மற்றும் மலம் கழித்தபின் அந்தப்பகுதிகளைச் சுத்தமாகக் கழுவப் பழக்கிவிடுங்கள். அதைவிடுத்து, வீண் மிரட்டல் விடுப்பதால் தன் உடம்பில் உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று-தீண்டத்தகாதது என்று அந்தச் சிறுவன் அல்லது சிறுமி மனதிலே எண்ணம் படிய, அவர்கள் வளர்ந்து திருமணம் செய்து முதலிரவில் சந்திக்கும்போது ஏதோ கெட்ட காரியம் செய்கிறோம்-பாவ காரியம் செய்கிறோம் என்று பயந்தே கூடுகிறார்கள். அதனால் பிறக்கும் குழந்தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது.

ஒரு வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்தவுடன் செக்ஸ் பற்றிய விஷயத்தையும், பிறப்பு உறுப்புக்களின் பயன்பாட்டையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்கிறான் ஓஷோ.
‘மனிதனுக்கு இயற்கையில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று கீழ்வயிற்றுப்பசி. இரண்டு பசிக்கும் முறையாகத் தீனி போடாவிட்டால் அடங்காது’ என்கிறார் கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு நாட்கள் அவளுடன் கூடிக்குலவி ருசி பழக்கிவிட்டு துபாய்க்கு நீ வேலைப்பார்க்கப் போய்விட்டால் அவள் கதி என்ன ஆகும்?

ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறுமையாக இருக்கும்?

இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் வணக்கத்திற்குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண்டியே திருமணம் செய்துகொண்டார். சாரதா தேவிக்கும் அவருக்கும் இருபத்தியிரண்டு வயது வித்தியாசம். தன் மனைவியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர் பார்த்தார். அவரது பக்தியை சாரதா அம்மையாரும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.அவர்கள் தெய்வீகத்தம்பதிகள்.

இன்று ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை மணந்து, செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன ஆகும் ? யோசியுங்கள்!

பூப்படைந்து ஆறு ஆண்டுகளில் செக்ஸ் உணர்ச்சிப்பொங்கிப் பிரவாகமெடுக்கும் வயதில் அவளை நீ ‘அம்பாள் வடிவம் நெருங்காதே’ என்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனையோடு, இருபது ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக்கூடாது.

‘அதே சமயம் இனவிருத்திக்காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை நெருங்கக் கூடாது’ என்கிற காந்திஜி தத்துவத்தைக் கடைப்பிடித்து, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும் உறவு தவிர்த்து வாழ்வதும் அவசியமில்லை.

முழுமையான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒருமித்து திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ளவர்கள், ஆண்மை இழந்தவர்கள் கூட, ஒரு பெண்ணுக்கு மனதளவில் செக்ஸ் இன்பம் அனுபவித்த திருப்தியைக் கொடுக்கமுடியும்.

விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ்ஸில் அழைத்துப் போங்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும்போது குளிரில் பற்கள் தடதடக்கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவிக்குப் போட்டுவிடுங்கள்.

அதிகாலை ஆள்மறைக்கும் மேகமண்டலத்தில், மயிர்க்கூச்செரியும் குளிரில், தொட்டபெட்டா சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி சூடான வேர்க்கடலைக் கொரியுங்கள். நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து ‘பெடல் போட்டில்’ ஐஸ்கிரீம் சாப்பிட்டவாறு ஒரு மணிநேரம் சவாரி செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் வரிசையாக மட்டக்குதிரைகள் நிற்கும். ஒரு குதிரையில் மனைவியை ஏற்றிவிட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். பகல் விருந்துக்குப்பின் மேட்னி காட்சி. இரவு கதகதக்கும் ஹோட்டல் அறையில், நடுங்கிக்கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து படுத்துக்கொள்ளுங்கள். எழுபத்தைந்து விகித சந்தோஷத்தை அவள் அனுபவித்திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம்தான்.

ஆணைப்பொறுத்தவரை செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக்காரன்தான். அடுப்பை மூட்டாமலேயே, தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றிவிடுகிற புத்திசாலி இவன். சில சமயம் தோசைக்கல், 50 தோசைகளை வேக வைக்கும் அளவு சூடாக இருக்கும்போது இவன் அரைக்கரண்டி மாவை மட்டும் ஊற்றுவான்.

பெண்களை நெருங்காமலேயே இருந்துவிடுவது உத்தமம். அவர்களை ஆட்டத்திற்குத் தயாராக்கிவிட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இயற்கையிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு.

அதிக செக்ஸ் பசி உள்ள மனைவிக்கு கையாலாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போதுதான் ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ கதை நிகழும்.

50 ஆண்டுகள் மணமொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் நிலையில், உச்சம் தொட்ட இன்பத்தை- ஐந்து அல்லது ஆறு முறை அனுபவித்திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.

ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கிவிடுவான்
அல்லது அவள் உச்சம் தொடும்போது இவன் ஓய்ந்திருப்பான்!

உடல் பலத்தைப் பயன்படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதைவிட, சாதுர்யத்தைக் கடைப்பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ்விப்பது எளிது.

பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைவதே. அது தெய்வ நிலை.

உலகை மறந்த அற்புதக் கணம்!

அந்தக் கணங்களில்தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக் கணவனும் தன் மனைவியிடம் இன்று நீ சந்தோஷமாய் இருந்தாயா என்று கேட்பதில்லை. பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவுகளில், மயக்க நிலை முனகல்களில் வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.
இந்த லட்சணத்தில் விலைமாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கிவந்து வீட்டிலிருக்கும் மனைவிக்கும் அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் அந்த எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணியவான்களும் உண்டு.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்றுதான் பெண்கள் திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போடவேண்டும். ஆண் சனிக்கிழமை குளிக்கவேண்டும் என்று வகுத்து வைத்தனர்.

தலையில் குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம்பெல்லாம் பூசிவிடும்போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப்பகுதிக்கு வந்துவிடுகிறது. அன்று மனைவியைக் கூடும்போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவதால் மறுநாள் உடல் அசதி கூடுதலாக இருக்கும்.

குடித்துவிட்டு உறவுவைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். மது, ‘உடல் இன்ப வேட்கையை அதிகப்படுத்திவிட்டு, செயல்பாட்டைக் குறைத்துவிடும்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று படித்தவர்கள்கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க்கின்றனர். காலையில் எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்றுண்டி தயாரித்து, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, ஊட்டிவிட்டு யூனிஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு, கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணாதிக்கம் மிக்க மேனேஜரிடம் அநியாயமாகத் திட்டுவாங்கி, மாலைவரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து, பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கையில் சாய்பவள்-

உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சியளிக்க வேண்டும்- தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?

ஓய்ந்து களைத்து உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.
இன்றைய வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. இருவரும் வேலைப் பார்க்கிறார்கள். பெரும்பகுதி அலுவலகத்திலும் பஸ் பயணத்திலுமே கழிந்துவிடுகின்றன. மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று பற்றாக்குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷனாகவே இருக்கிறோம்.

கணவன் மனைவி வாரத்தில் கடைசி ஒருநாளாவது வீட்டைவிட்டு எங்காவது வெளியில் சென்றுவர வேண்டும். வசதி இல்லாதவர்களுக்கு சென்னையில் கடற்கரை இருக்கிறது. பாம்புப் பண்ணை, மிருகக் காட்சி சாலை இருக்கின்றன. வெளியூர் தம்பதிக்கு இருக்கவே இருக்கிறது சினிமா. அதைவிட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயில். இப்படி அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு நாளையாவது ஒதுக்குங்கள்.

கணவன் மனைவியரிடையே விரிசல் ஏற்பட புறக்காரணங்களைவிட, உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தியே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து வாழவேண்டும்

போகப்பொருளாக- துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண்களை நினைப்பதை நாம் மறந்து, அவளும் நம்மைப்போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு, ஆசாபாசம் அவளுக்கும் உண்டு. அவளில்லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக்கிவிட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள் பெண். நம் வெற்றிக்குத் துணை நிற்பவள் பெண். நம் வயோதிகக் காலத்தில் பாசத்தைப் பொழிபவள் பெண்….என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

Free Internet Service ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!!

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்போது இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

ன்றைய உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவைகள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் மார்க் பேசுகையில்,”அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்றும், இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 வருஷத்துக்கு உங்கள் ஆயுள் கெட்டியா?

உயிரினங்களின் வாழ்வில் மரணம் எப்போது வரும்? என்பது இப்போதுவரை மர்மமாக உள்ளது. ஆனால், அதையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதாவது மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முனைகளில் ‘டெலோ மர்ஸ்’ என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது ‘டெலோ மர்ஸ்’சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.இதையடுத்து
இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் நவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பேராசியர் தெரிவித்துள்ளார்..

பின்லாந்தின் யுலு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் புது வகையான ரத்த பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து அவர் ”ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும். அந்த வகையில், பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில், அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.

இதேபோல் பிற நோயால் தாக்கப் பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம். நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. இதை கண்டறியும் நவீன சோதனைக்கு, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியும்:. என்று மைகா தெரிவித்துள்ளார்.

பத்திரிகைத்துறை ஒரு பார்வை

அன்றாடம் மக்களின் அசைவுகள் நகரத் தொடங்குவதே பத்திரிகைகளிலிருந்துதான். ஒரு சாதாரண இந்திய குடிமகனிலிருந்து (Citizen), நாட்டின் தலைவர் (President) வரைக்கும் பத்திரிகை இல்லாமல், அன்று அவர்களுடைய வாழ்க்கை தொடங்காது.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட, நம்முடைய அதிகாலை வேளையில் நாம் கேட்கக்கூடிய குரல் இதுவாகத்தான் இருக்கும்: “சார்! பேப்பர்.” அன்று பத்திரிகை வந்தவுடன், சிறுவர்கள் தங்களுடைய கல்வி தொடர்பாக தேடுவார்கள். இளைஞர்கள் தங்களுடைய வேலை தொடர்பான விஷயங்களை தேடுவார்கள். பெண்கள் தங்களுக்கு தேவையான நகைகள், புடவைகள் போன்ற பொருட்கள் மற்றும் சமையல் குறிப்புகள் தொடர்பானவைகளை தேடுவார்கள். இப்படி, ஒரு வீட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த நபர்களுக்கும் தேவையான அனைத்து விஷயங்களையும், செய்திகளையும் ஒரே நாளிதழில் பெற்றுக் கொள்ளும் ஒரு வலிமையான காகிதமே பத்திரிகையாகும்.

பத்திரிகையை பொறுத்தவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அல்லாமல், ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் இருந்து, இந்தியாவில் ஒரு கிராமத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் வரை செய்தியாக போய் மக்களிடம் கிடைக்கிறது. இதை, செய்தி (News) என்பார்கள். நார்த் (North), ஈஸ்ட் (East), வெஸ்ட் (West), சவுத் (South) என்றதன் சுருக்கமே News எனப்படும்.

அதாவது, நான்கு திசைகளிலும் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை தொகுப்பாக்கி மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதுதான் “நியூஸ்” எனப்படும். நியூஸ் என்பதைப் பல வகையாக பிரிக்கலாம். அன்றாடம் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டு நடப்புகளை எடுத்துரைப்பதன் நோக்கமே இதன் பொருள் ஆகும்.

சரி! நாம் இப்பொழுது செய்திகளின் வகைகளைப் பற்றிப் பாப்போம். செய்தி என்பது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும், அது வரக்கூடிய இடத்தைப் பொருத்து மாறுபடும் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

செய்திகள் ஐந்து வகைப்படும்: 1. உள்ளூர் செய்திகள் (Local News) 2. வட்டாரச் செய்திகள் (Regional News) 3. மாநிலச் செய்திகள் (State News) 4. தேசியச் செய்திகள் (National News) 5. உலகச் செய்திகள் (International News) என்று செய்திகள் பிரிக்கப்படுகின்றன.

நாளிதழ்களிலும், தனித்தனித் தலைப்புகளிலேயே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் இலகுவாக செய்திகளை பிரித்து தெரிந்து கொள்ள முடியும். இது பத்திரிகைத்துறையின் வளர்ச்சி என்றால், அது மிகையாகாது. அதே, வழிமுறையைத்தான், புத்தகங்கள் உட்பட அனைத்து விதமான செய்தித்தாள்களும் பயன்படுத்துகின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

1. உள்ளூர் செய்திகள்
நாளிதழ் வெளிவரும் பகுதியில் உள்ள, நாம் இருக்கக்கூடிய பகுதியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள், சம்பவங்கள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் பற்றிய ஒரு சுருக்கமான தகவலை தருவது உள்ளூர் செய்திகள் ஆகும்.

இந்தச் செய்திகளுக்கு என்று தனியான நிருபர்கள் அந்தந்தப் பகுதிகளில் செயல்படுவார்கள். இவர்கள், அந்தப் பகுதி மக்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பார்கள். ஏதாவது, நிகழ்ச்சிகள் இருந்தால் இவர்களுக்கு தொடர்பு கொண்டு செய்திகளை கொடுத்து விடுவார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.

2. வட்டாரச் செய்திகள்
வட்டாரச் செய்திகள் என்பது நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளை கருத்தில் கொண்டு வெளியிடப்படும். இந்தச் செய்திகள் நம்முடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும். இதற்கு, மக்களிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஏனென்றால், நாம் ஒரு வேலையை கருத்தில் கொண்டு செல்வதற்குமுன், நாளிதழ்களைப் பார்த்து தெரிந்து கொண்டு போகலாம். இதற்கு, தனியாக நிருபர்கள் இருந்தாலும், பெரும்பாலான நாளிதழ்களில் உள்ளூர் செய்திகளை சேகரிப்பவரே பார்த்துக் கொள்வர்.

3. மாநிலச் செய்திகள்

நாம் தமிழ்நாட்டில் இருக்கின்றோம். நம்முடைய மொத்த மாவட்டங்கள் 32 ஆகும். நம் மாநிலத்திற்குட்பட்டு நடைபறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வெளியிடப்படும் செய்திகளே மாநிலச் செய்திகள். உதாரணமாக நாம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்றோம் எனில், நம்முடைய மாவட்டங்கள் அல்லாத, மற்ற மாவட்டங்களின் செய்திகள் அனைத்தும் வெளியிடப்படும். இதற்கு மாநிலச் செய்திகள் எனப்படும்.

4. தேசியச் செய்திகள்


நம் இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மொழிகள் பேசி வரும் சூழ்நிலையில், மற்ற மாநிலங்களில் நடைபெறக்கூடிய செய்திகளை எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்? அதற்குத்தான், தேசிய செய்திகள் பயன்படுகின்றன. மற்ற மாநிலங்களில் நடைபெறக்கூடிய செய்திகளை வெளியிடுவதையே தேசிய செய்திகள் என்கிறோம்.

5. உலகச் செய்திகள்

அமெரிக்க அதிபர் ஒபாமா கலிஃபோர்னியாவுக்கு சென்றார். இது இன்றைய தினத்தந்தியில் வெளிவந்த செய்தி. தினத்தந்தியில் ஏன் அமெரிக்காவைப் பற்றி செய்தி வர வேண்டும்? காலாத்திற்கேற்றவாறு, மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால், நாட்டு நடப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே ‘உலக செய்திகள்’ முக்கிய இடம் வகிக்கின்றன.

இதுவே செய்திகளின் உட்பிரிவுகளாகும். இதுவெல்லாம், நம்முடைய தூரத்தை கணக்கிட்டு பிரித்தவை. இதுவல்லாமல், துறை சார்ந்த செய்திகள் என்று இருக்கின்றன. அவைகள், விளையாட்டுத் துறையில் இருந்து, தொல்லியல் துறை வரை பல வகைப்படும். இந்தத் பத்திரிகைத்துறையை “இதழியல்” (Journalism) என்று அழைப்பார்கள்.

இதற்கு ஓர் எல்லை என்பது கிடையாது. இதனுடைய முக்கிய பணி என்னவென்றால், “ஒரு செய்தியை பெறுவதும், மற்றவர்களுக்கு தருவதும்” ஆகிய பணியே இதழியல் எனப்படும். The art of collection and dissemination of current news and events என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதுதான் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பத்திரிகைகள் இன்று பல வகைப்படுகின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு வெளிவருகின்றன. எல்லாமே பயன் தரும் வகையில் இருக்கின்றது. இதன் மூலம் மக்களின் செய்திப் பரிமாற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தப் பத்திரிகைகள் தினசரிகள், வார இதழ்கள், வாரம் இருமுறை, மாத இதழ்கள், மாதமிருமுறை என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவரக்கூடிய அனைத்து பத்திரிகைகளுமே பயன்பெறும் வகையில் தான் இருக்கின்றன.

தினசரி பத்திரிகைகள் வாரத்திற்கு ஒரு முறை ஆன்மீக மலர், இளைஞர் மலர், குடும்ப மலர் என்று வெளியிட்டு வருகின்றன. இதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றார்கள். குழந்தைகள் மலரில் குழந்தைகள் விரும்பக்கூடிய சிறுகதைகள், கட்டுரைகள், படங்கள் வரைதல் என்று சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கும். குழந்தைகளும் பங்கேற்கும் விதமாக போட்டிகளும் வரும். இவர்களின் அறிவுக்கான பயிற்சியாக இது அமையும்.

அடுத்ததாக, பத்திரிகைத்துறையில் வேலை செய்பவர்களை பத்திரிகையாளர் (Journalist) என்று அழைப்பார்கள். விடுமுறையில்லாமல் உழைக்கக்கூடிய ஒரே துறை பத்திரிகைத் துறைதான். பத்திரிகையாளர்களுக்கு விடுமுறை நாட்கள் என்பது கிடையாது.

Shift என்ற முறைதான் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம், காலை ஷிஃப்ட், மாலை ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட் என்று பிரித்துக் கொள்வார்கள். இதன் மூலம் மாறி மாறி விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இதுதான் இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

பத்திரிகைத்துறை சேவையை அடிப்படையாக கொண்டது. ஆனால், அதற்கு நேர்மாற்றமாக சில பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்றன. யாருக்கும் அடிபணியாமல் சுயமாக இயங்க வேண்டும். தாங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை தைரியமாக எடுத்துரைக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே இந்தத் துறை நாட்டின் நான்காவது தூணாக கருதப்படுகிறது.

நம் நாடு நான்கு முக்கிய துறைகளைக் அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. அவையாவன: 1. சட்டத்துறை (Legislative Department) 2. நிர்வாகத்துறை (Administrative Department) 3. நீதித்துறை (Justice Department) 4. பத்திரிகைத்துறை (Journalism Department)

நாட்டின் வளங்களாக குடிமக்கள் இருக்கின்றார்கள். இந்தக் குடிமக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய அநியாயங்களையும், அக்கிரமங்களையும் பத்திரிகைத்துறை சுட்டிக்காட்டி, மக்களின் சார்பாக கேள்விகள் கேட்க வேண்டும். இதுதான் பத்திரிகைத்துறையின் தலையாய பணியாகும்.

சட்டத்துறை நாட்டில் மக்களின் நலன் கருதி சட்டங்களை வகுக்க வேண்டும். இந்தச் சட்டங்கள் மக்களின் விருப்பப்படியே அமல்படுத்தப்பட வேண்டும். ஒரு வேளை இந்தச் சட்டங்கள் மக்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் விதமாக இருந்தால் (தடா, பொடா, யு.ஏ.பி.ஏ. போன்ற கருப்புச் சட்டங்கள் போன்று) அதற்கெதிரான மக்களின் நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் சார்பாக, மக்களின் நியாயமான கேள்விகளை சட்டத்துறைக்கு எதிராக எழுப்ப வேண்டும்.

பத்திரிகைத்துறை நாட்டில் நடைபெறக்கூடிய அநியாயங்களையும், சட்டமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து நீதியின் சார்பில் நிற்க வேண்டும்.

பத்திரிகையைப் பற்றி ஜவஹர்லால் நேரு அவர்கள் இவ்வாறு கூறினார்:

“பத்திரிகைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருப்பதை விட, சுய கட்டுப்பாட்டில் இயங்குவதே சிறப்புடையது.”

Wednesday, February 26, 2014

கோவை சரளா வாழ்க்கை வரலாறு


நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ வென்றுள்ள அவர், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் வளம் வருகிறார். அவரது ’என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற நகைச்சுவைக் காட்சிகளை எப்போது பார்த்தாலும் அனைவருக்கும் சிரிப்பு வரும். அத்தகைய திறமைமிக்க நகைச்சுவையாளினியாக விளங்கும் நடிகை கோவை சரளா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 7, 1962

பிறப்பிடம்: கோயம்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா

பணி: நகைச்சுவை நடிகை, பாடகி, தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிதொகுப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு


கோவை சரளா அவர்கள், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். அவரது இயற்பெயர் சரளா. மேலும், தான் பிறந்த கொங்கு நாடான ‘கோவை’ என்ற சொல்லைத் தனது பெயரின் முன்னர் சேர்த்துக் கொண்டார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

தனது பள்ளிப்படிப்பைக் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை வாய்ந்தவராக விளங்கிய கோவை சரளா அவர்கள், ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை சென்ற போது, அவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய திறமைகளைப் பற்றியறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார். அந்த உதவித் தொகையின் உதவியில படிச்ச அவர், எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு, வளர்ந்த பின்னர், ‘நாமும் பிறருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைத்’ தானாகவே வளர்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து வளர்ந்த அவருக்கு, அவரைப் போலவே மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டுமென்று எண்ணம் தோன்றியது. அவர், தனது பள்ளிப்படிப்பை முடித்தப் பின்னர், திரையுலகில் கால்பதிக்க எண்ணினார், அவரது இந்த எண்ணத்திற்கு அவரது தந்தையும், அக்காவும் துணை நின்றதால், அவர் திரையுலகில் நுழைந்தார்.

திரையுலக வாழ்க்கை

திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த சேர்ந்த அவர், வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போது, பாக்யராஜை சந்திக்க நேர்ந்ததால், அவரை சந்தித்துத் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவரது பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ் அவர்கள், அவர் திரைக்கதை எழுதி, நடித்த படமான 1983ல் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் அவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அப்படமே, தமிழ்த் திரையுலகில் கோவை சரளாவின் முதல் படமாகும். அப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்குப் பெருமளவு வரவேற்பு கிடைத்ததால், அடுத்த ஆண்டே ‘வைதேகி காத்திருந்தாள்’ (1984), ‘தம்பிக்கு எந்த ஊரு’ (1984)போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, ‘உயர்ந்த உள்ளம்’ (1985), ‘சின்ன வீடு’ (1985), ‘லக்ஷ்மி வந்தாச்சு’ (1985), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ (1985), ‘வசந்த ராகம்’ (1986), ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), ‘தங்கமான புருஷன்’ (1989), ‘பாண்டிநாட்டுத் தங்கம்’ (1989), ‘சோலைக் குயில்’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989), ‘மை டியர் மார்த்தாண்டன்’ (1990), ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1990), ‘சின்னவர்’ (1992), ‘திருமதி பழனிச்சாமி’ (1992), ‘எங்களுக்கும் காலம் வரும்’ (1992), ‘மகளிர்க்காக’ (1994), ‘காதலா காதலா’ (1998), ‘பாட்டாளி’ (1999), ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ (1999), ‘பட்ஜெட் பத்மநாபன்’ (2000), ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ (2000), ‘ஷாஜஹான்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ (2001), ‘என்னமா கண்ணு’ (2002), ‘கோவை பிரதர்ஸ்’ (2006), ‘உளியின் ஓசை’ (2007), எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும்’ காஞ்சனா’ (2011) திரைப்படம் மூலம் தனது இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கிய அவர், ‘வானவராயன் வல்லவராயன்’ (2013), ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ (2012), ‘பாகன்’ (2012), ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ (2012), ‘தில்லு முல்லு’ (2013), ‘ரகளைப்புரம்’ (2013)போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ்ப் படங்களைத் தவிர, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

பிரபலமான அவரின் சில டையலாக்குகள்
’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’ – கரகாட்டக்காரன்
‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ – கரகாட்டக்காரன்
’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ – ஷாஜஹான்
‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ – ஷாஜஹான்

தொலைக்காட்சி வாழ்க்கை

1983ல் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய கோவை சரளா அவர்களுக்கு, 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர், திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், தொலைக்காட்சியின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். அவர், சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’, கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார். இப்போது, கலைஞர் டிவியில் ‘பாசப் பறவைகள்’ என்ற குடும்ப விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கோவை சரளா அவர்கள், இன்றுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இறக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.

விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதுகளையும்’ வென்றுள்ளார்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா அவர்கள், தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது.

Tuesday, February 18, 2014

அறுசுவை உணவு...!


காரம்:
உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு:
உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு:
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு:
இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு:
இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு:
ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

வாழ்க்கையில் வெற்றி பெற சில உளவியல் ஆலோசனைகள்...!!!


1. பொருட்படுத்தாதீர்கள் (Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்...!

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் (Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்...!

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள் (Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை...!

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள் (Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்...!

எனவே, நாம் வாழ்க்கையில் வெற்றி பெற....

முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே...! இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!!!

தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !


உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

Friday, February 14, 2014

இதில் யோகாசனத்தின் பங்கு என்ன ?குழந்தைப் பேறு இல்லாதவர்களுடைய மனதில் உள்ள வலிகளை வர்ணித்து சொல்லி விட முடியாது. இதை நான் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்பதை விட அனுபவித்தவன் என்கிற வகையில் சொல்கிறேன். எங்கு சென்றாலும் அதன் தாக்கம் நிழல் போல் துரத்திக் கொண்டே வரும். ஏனென்றால் சமுதாயத்தில் முதல் கேள்வியே திருமணம் ஆகிவிட்டதா ? குழந்தைகள் எத்தனை ? இந்த இரண்டில் ஒன்றுதான். இல்லை என்றால் அதோடு விடுவார்களா ? என்றால், அது தான் இல்லை. அந்த கோவிலுக்கு போனீர்களா ? அந்த டாக்டரைப் பார்த்தீர்களா ? என்கிற நீதியில் ஆளாளுக்கு ஒரு வழிமுறைகளையும், உபதேஷங்களையும் சொல்லி குழப்பி விடுவார்கள்.

என் உறவினர், தம்பி முறை தன் குழந்தையைத் தொடக் கூட விடமாட்டார். சில இடங்களில் வந்து போன பிறகு குழந்தைக்கு மிளகாய் சுற்றி நெருப்பில் போடுவதுண்டு. நண்பர்கள் முதல் எதிரிகள் வரை ஆண்மையில்லாதவன், மலடு என்றெல்லாம் பேசுவார்கள். இதையெல்லாம் கடந்து அந்த செல்வத்தை அடைந்த போது பெற்ற மகிழ்ச்சியில் அந்த காயங்கள் எல்லாம் மறைந்து போய்விட்டன. ஆனால் வடுக்கள் மறையவில்லை. இதனால்தான் வள்ளுவர் தீயினால் சுட்டால் புண் என்றும், நாவினால் சுட்டால் அது வடு என்றும் சொல்லியிருக்கிறார் போலும். இன்னும் சில பேர் மலடு என்பது ஆணுக்கு மட்டுமே, பெண்ணுக்குக் கிடையாது என்றும், வேறு சிலர் ஆதிகாலம் தொட்டே பெண்களைத்தான் மலடி என்று சொல்லியிருக்கிறார்கள் என்றும் பலவாறு பேசிக் கொள்வார்கள். இவர்களுக்கு மத்தியில் நாம் தேமே என்று உட்கார்ந்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இரு பாலினருக்கும் குறைபாடுகள் இருக்கும். ஒரு சில குறிப்பிட்ட குறைகளைத் தவிர மற்ற எல்லாக் குறைபாடுகளும் சரி செய்யக் கூடியவையே. விஞ்ஞான முறைப்படி இரவல் கருப்பை, இரவல் விந்தணு, சோதனைக் குழாய் குழந்தை என்றெல்லாம் முன்னேற்றமடைந்து விட்ட போதிலும், எல்லோரும் நவீன விஞ்ஞான மருத்துவத்தை நெருங்கி விட முடியாது. அப்படிப் பட்டவர்களுக்கு ப்ராணாயாமமும், யோகாசனமும் வரப்பிரசாதம் ஆகும். நான் சொன்னதைக் கேட்டு பலன் பெற்றவர்கள் என் கண்ணெதிரிலேயே இருக்கிறார்கள். நான் மனவளக் கலையில் சேர்ந்து பலனடைந்தேன்.

ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக்களில் உயிர்ப்பு உள்ள அணுக்கள் குறைவு, நரம்புத் தளர்ச்சி, வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன. பெண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் காரணங்கள் என்னவெல்லாம் என்று பார்த்தால், 1. பாலுறுப்புகளில் இருந்து தகவல்கள் மூளைக்குச் செல்லாமை. 2. மூளையிலிருந்து கட்டளை அவ்வுறுப்புகளுக்கு வராமை. 3. பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்குத் தேவையான புரத உற்பத்தி நோதிகள் பிட்யூட்டரி, அட்ரினல், கருவகங்களில் இருந்து சுரக்காமை, அல்லது அதற்கான கட்டளைகள் மூளையிலிருந்து வராமை. 4. சரியான உணவுப் பழக்கமின்மை. 5. ஆக்சிஜன் பற்றாக் குறை. 6. பாலின உறுப்புகளில் கழிவுகள் நீங்காமை போன்றவற்றைச் சொல்லலாம். மற்றபடி பெண்களுக்கு மலடு ஏற்படவே வழியே இல்லை. கர்பப்பை இல்லாவிட்டாலோ, வயதுக்கு வராவிட்டாலோ வேண்டுமானால் குழந்தை பிறக்காதே தவிர மற்ற எல்லா குறைபாடுகளும் சரி செய்யக் கூடியவையே. இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே பல்லாயிரக் கணக்கான கருமுட்டைகளுடனேயே பிறக்கிறாள்.

இதில் யோகாசனத்தின் பங்கு என்ன ? நமது உடலில் காலில் இருந்து இரத்த அழுத்தம் படிப்படியாக அதிகரித்து தலையில் அதிக அழுத்தமாக இருக்கிறது. அது ஏன் ? என்றால் காலில் புவி ஈர்ப்பு விசையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரத்தம் மெதுவாகச் செல்கிறது. மேலே போகப் போக அதன் ஈர்ப்பு விசை குறைவதால் அழுத்தம் அதிகமாகிறது. யோகப் பயிற்சியின் மூலம் இந்த அழுத்தத்தை சமன் செய்யும் போது எல்லா உறுப்புகளுக்கும் நல்ல இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் எல்லாம் கிடைப்பதால் அவ்வவ் உறுப்புகள் சீரான இயக்கத்தைப் பெறுகின்றன. மேலும் ப்ராணாயாமம் செய்வதால் உடலில் ப்ராண சக்தி அதிகரித்து, நாடி நரம்புகளெல்லாம் சுத்தியடைந்து நன்றாக இயங்குகின்றன. வளர் சிதை மாற்றங்கள் சரிவர நடைபெறுகின்றன.

யோகப் பயிற்சியால் நுரையீரல்களுக்கு ஓய்வு அளிக்கும் போது கார்பன் டை ஆக்சைடு அதிக அமிலத் தன்மையை உடலில் ஏற்படுத்தி அமிலகார இடைவெளியை அதிகப்படுத்துகிறது. அதைப் போல திசுக்களுக்கும், இரத்த தந்துகிகளுக்கும் அதிக அமிலகார இடைவெளி இருந்த போதிலும் பிளாஸ்மா நிலையில் ஊடகம் போதிய அளவில் இல்லாத போது வாயுப் பரிமாற்றம் போதிய அளவில் நடைபெறுவதில்லை. அதற்குக் காரணம் திசுக்களிடையே கடினத் தன்மை அதிகரித்திருப்பதேயாகும். யோகப் பயிற்சியின் மூலம் அந்தக் கடினத்தன்மை நீங்கி சதை மென்மையாகி விடுகிறது. மென்மையாக்கப்பட்ட உடல் அதிக இரத்தத்தினால் சூழப்பட்டு பிளாஸ்மா ஊடுருவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இரத்தக் குழாய்களுக்கும் இடையே அமிலகாரத்தன்மை வேறுபாடு அதிகரித்து உடனடியாக வாயுப் பரிமாற்றம் நடை பெறுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையால் ஆக்சிஜன் எளிதாகக் கவரப்படுகிறது. இன்னும் பல்வேறு நன்மையான காரணங்களினால் யோகாசனங்கள், ப்ராணாயாமப் பயிற்சியின் மூலம் குழந்தை பாக்கியத் தடை முற்றிலும் நீங்கி கரு உருவாக ஏதுவாகிறது.

எல்லா யோகாசனங்களையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சில குறிப்பிட்ட யோகாசனங்களைக் கற்று செய்து வந்தால் போதுமானது. அதோடு ப்ராணாயாமமும் செய்து வருவீர்களானால் பலன் வெகு விரைவில் கிட்டும்.
இப்போது பெண்கள் கற்று செய்து வர வேண்டிய யோகாசனப் பயிற்சிகளைத் தருகிறேன்.
1. சலபாசனம் - 3 முறை - 4-10 விநாடிகள்.
2. தனுராசனம் - 3 முறை - 4-10 விநாடிகள்.
3.பஸ்சிமோத்தானாசனம் - 4-8 முறை - 4-15 விநாடிகள். 4. ஹலாசனம் - 4-8 முறை - 4-15 விநாடிகள்.
5. சர்வாங்காசனம் - 2 முறை - 4-15விநாடிகள்.
6. மத்ஸியாசனம் - 3 முறை - 1/4-1 நிமிடம்.
7. சிரசாசனம் - 2 முறை - 1/2-8 நிமிடம்.
8. யோக முத்திரா - 4-6 முறைகள் - 4-10 விநாடிகள்.
9. பத்மாசனம் - 1 முறை - 2 நிமிடங்கள்.
10. உட்டியாணாம் - 6 முறை - 4-10 விநாடிகள்.
11. நௌலி - 4-6 முறை - 4-10 விநாடிகள்.
12. சவாசனம் - 1 முறை - 4-6 நிமிடங்கள்.
13. நாடி சுத்தி 3-7 நிமிடங்கள்.

இந்த அட்டவணையில் காணும் தனுராசனமும், யோக முத்திரையும் ஆண்கள் செய்ய வேண்டியதில்லை. யோக முத்திராவுக்குப் பதிலாக அர்த்தமத்ச்யேந்திராசனம் 3 முறை 4-10 விநாடிகள் ஆண்கள் செய்ய வேண்டும்.

உட்டியாணா ஜாலந்திர மூலபந்தங்களுடன் கும்பகப் பிராணாயாமத்தின் கும்பகக் காலம் 6 முதல் 15 விநாடிகள் இருக்குமாறு நான்கு முதல் இருபது முறைகள் செய்ய வேண்டும். பெண்ணின் குறைபாடுகளை யோகா, ப்ராணாயாமம் மூலம் பாலுறுப்பு ஒருங்கிணைப்பை உருவாக்கி குணமாக்க முடிகிறது. இந்த அடிப்படையில் நாடிசுத்தி செய்யும் போது அதிக காற்றை வெளியே விடுகின்ற போது அதிக காற்றை உள்ளிழுக்கிறோம். இதனால் நுரையீரலில் உள்ள காற்றறைகளில் காற்றின் வெப்ப நிலை வேறுபாடு அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தின் வெப்பம் குறைந்து இதன் செயல்பாடு கூட்டுப் பொருள்களின் தன் இயக்கச் செயலில் இருந்து ஓய்வு கொள்ள முடிகிறது. இது பிளாஸ்மா நிலையில் உள்ள எல்லா கூட்டுப் பொருள்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள எல்லா அயனிகளும், கூட்டுப் பொருள்களும் ஓர் ஒருங்கிணைப்பை பெறுகின்றன. எனவே யோகா மற்றும் பிராணாயாமத்தை முறைப்படி கற்று பயனடையும் படி கேட்டுக் கொள்வதோடு இறையாற்றலோடு பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.

Monday, February 10, 2014

Facebook நிறுவனம் வழங்கும் Online Paper ‘ஆப்’ஸ்!


ஆன்லைன் செய்தித்தாளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது. தற்போது அது உண்மையாகியுள்ளது. ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தில், ஆன்லைன் செய்தித்தாளுக்கான ‘ஆப்’-ஐ பேஸ்புக் வெளியிட்டுள்ளது.உறுத்தாத லே-அவுட் முறையில் மிகவும் அழகானதாக இந்த அப்ளிகேஷன் இருக்கும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்த செய்தியையும் இதில் இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐ-போன் வாடிக்கையாளர்கள் வரும் 3-ம் தேதி முதல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியுமாம்.பல்வேறு விதமான செய்திகளிலிருந்து, வாடிக்கையாளர் தமக்குத் தேவையான குறிப்பிட்ட ரக செய்திகளை மட்டுமே பின் தொடரும் வசதி இதில் உள்ளது. உணவு, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் செய்திகளைப் படிக்கலாம். பிரசித்த பெற்ற பல்வேறு வெளியீட்டாளர்களின் செய்தி, கட்டுரைகளையும் இதில் காண முடியும்.

இதில் எந்தெந்த நிறுவனங்கள் கூட்டாளியாக இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆயினும், இது தொடர்பான வீடியோ விளம்பரத்தில் நியூயார்க் டைம்ஸ், டைம், யுஎஸ்ஏ டுடே, ஹபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தாள்களின் செய்திகள் வாசிக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது.பேஸ்புக் சமூக இணையதளத்தின் நியூஸ் பீட் பகுதியிலிருந்தும் தகவல்கள் பெறப்படுகின்றன. இத்தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்தின் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Solar உபகரணங்களை வாங்க விருப்பமா?

முதல்வரின் சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 10 ஆயிரம் வீடுகளில் சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவுவதற்கு தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது.எனவே இத்திட்டத்தின் கீழ் மேலும் 9,700 பேர் விண்ணப்பிக்கலாம் என்பதும் இதற்க்காக தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரமும், மத்திய அரசின் சார்பில் மொத்தத் தொகையில் 30 சதவீதமும் இந்தத் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சூரியசக்தி உபகரணம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பொதுவாக வீடுகளில் 1 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவ தோராயமாக ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிகிறது.இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ வாட் மின்சாரத்தில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டிவி அல்லது கம்ப்யூட்டரை இயக்க முடியும்.மத்திய, மாநில அரசுகளின் மானியத்தைத் தொடர்ந்து ரூ.50 ஆயிரம் செலவு செய்தாலே வீடுகளில் இந்த சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவலாம்.ஒரு கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் ஆண்டுக்கு 1,600 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.9,200 வரை சேமிக்கலாம்.

இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ், சூரியசக்தி உபகரணங்கள் அமைக்கும் நிறுவனங்களை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் தகுதியான நிறுவனங்களை எரிசக்தி முகமை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.மொத்தம் எட்டு விதமான பிரிவுகளில் இந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு கிலோவாட், இரண்டு கிலோவாட், ஐந்து கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் ஆகியவற்றுக்கான உபகரணங்களை ஐந்து வருட வாரண்டி மற்றும் ஐந்தாண்டு பராமரிப்புடன் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை, www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.

Saturday, February 8, 2014

DMKவில் இருந்து MGR நீக்கம் ஏன்? - கண்ணதாசன் சொன்ன உண்மைகள்!


திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் இப்போதும் சுவாரஸ்யத்தை தருகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

நன்றி:கவிஞர் கண்ணதாசனின் நான் பார்த்த அரசியல்

வாரம் ஒன்றை கற்போம்


இந்த வாரம் ஒன்றை கற்போம் -வரிசையில் இன்று மெமரி கார்டின் ஸ்பீடை கண்டுபிடிப்பது / லாக் செய்யவும்
மற்றும் அழித்த டேட்டாவை மீட்டு எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோமா?.

1. மெமரி கார்ட் வைத்திருக்காதவர்களே இப்போது இல்லை என்ற காலத்தில் நிறைய குழப்பங்கள் வருகின்றது. நாலு ஜிபி 150 ரூவாய்க்கு வாங்கினேன் மச்சி ஆனா நீங்க மட்டும் ஏன் 250 அதே 4 ஜிபியை வாங்கினீங்கன்னு கேட்டா பல பேரிடம் அது வந்து…வந்துனு தான் பதில் இருக்கும். இது ஏன் தெரியுமா. ஒவ்வொரு கார்டிலும் நாம் பார்ப்பது இரண்டே தான். முதல் விலை இரண்டாவது என்ன பிராண்டு என்று. இதை தவிர நீங்கள் முக்கியமாய் பார்க்க வேண்டிய்து கிளாஸ் எனப்படும் மூன்றாவது முக்கிய விஷயம் 1 – முதல் 10 வரை இருக்கும் இன்னொரு விஷயம். இது என்ன? 4 ஜிபி வாங்கினாலும் அதில் 2 கிளாஸ் என்று குறிப்பிட்டிருந்தால் அது 2 மெகாபிட்ஸ் ஸ்பீட்ல தான் டேட்டாவை டிரான்ஸ்ஃபர் செய்யும். அதே சமயம் 4 ஜிபியில் 10 கிளாஸாக இருந்தால் முன்பு சொன்ன 4 ஜிபியை விட 2 1/2 மடங்கு வேகம் அதிகம். அதனால் நல்ல அதிக கிளாஸை பார்த்து வாங்கவும்.

2. டேட்டாவை மெமரி கார்ட்டில் அழித்துவிட்டால் அதை திரும்ப பெறுவது எப்படி. அதை கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுத்தால் அவன் கொஞ்சம் உங்க டேட்டாவை எடுத்து கொள்வான் அல்லது பரப்பிவிடுவான். அதனால் பாதி பேருக்கு அழித்த விஷயங்களை எடுக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தினால் அழித்த டேட்டாவை எடுக்கலாம். லின்க் – http://www.pandorarecovery.com/ இது ஹார்டு டிஸ்க்குக்கூட பொருந்தும்.

3. எல்லா மெமரி கார்டிலும் லாக் ஸ்விட்ச் இருப்பதால் சேஃப்டிக்கு அதை யூஸ் பண்ணுங்க இதனால் முதல்லேயே டேட்டா அழிவதை தடுக்க இயலும் – இது தெரியாத மக்களுக்கு ( சைடில் இருக்கும்).

Friday, February 7, 2014

நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!


தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

Tuesday, February 4, 2014

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?


ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்? இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.

மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல,

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

Monday, February 3, 2014

“வாலிப ராஜா” - மன நல மருத்துவராக சந்தானம்

இந்த படத்தில் சந்தானம் தான் ‘வாலிப ராஜா’. பலரின் பிரச்சனைகளைப் புரிஞ்சுகிட்டு தீர்வு சொல்ற மனநல மருத்துவர். சினிமாக்காரங்க படத்தோட ஒன்லைன் கேட்கிற மாதிரி, டாக்டர் சந்தானம் தன் பேஷன்ட்ஸ்கிட்ட அவங்க பிரச்சனைகளின் ஒன்லைன் கேட்பார். பிடிச்சிருந்தா, ட்ரீட்மென்ட் கொடுப்பார். அப்படி சேதுவின் இந்த ‘டபுள் ட்ராக்’ ஒன்லைன், சந்தானத்துக்கு ரொம்ப பிடிச்சுப் போகும். அவருக்கு உதவுவார். லோக்கல் காமெடியோட, புத்திசாலித்தனமான காமெடிகளையும் இதில் சந்தானம் பண்ணியிருக்காராம்.

இது பற்றி இயக்குநரிடம் கேட்ட போது,”ஒரு துணி கடைக்கு போறீங்க… பச்சை கலர் சட்டையும் பிடிச்சுருக்கு. நீலக் கலர் சட்டையும் பிடிச்சுருக்கு. ஏதாவது ஒண்ணுதான் எடுக்க முடியும். மனசை தேத்திக்கிட்டு, ஏதோ ஒண்ணை செலெக்ட் பண்ணிடுவீங்க. தியேட்டருக்கு போறீங்க. அஜித், விஜய் படம் ரிலீஸ் ஆகிருக்கு. ஒரு படம்தான் பார்க்க முடியும். உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி ஒண்ணை செலெக்ட் பண்ணி படம் பார்ப்பீங்க. நீங்க வாங்காத சட்டைக்கோ, பார்க்காத படத்துக்கோ இதனால் பெருசாப் பாதிப்பு வந்துடாது. இந்த இடத்துல உங்க விருப்பம் ரெண்டு பொண்ணுங்களா இருந்து, அவங்களுக்கும் உங்களைப் பிடிச்சுருந்தா யாரைத் தேர்ந்தெடுப்பீங்க? குழப்பமா இருக்கும்ல! அந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா… கதை கலகலன்னு இருக்கும்ல… அதுதான் படம்.

இந்த படத்தில் சந்தானத்தின் பஞ்சுக்கும் பஞ்சமில்லை. “உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர்அடிக்காம பாத்துக்கும்”, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’, ‘ மாடு முன்னாடி போனா முட்டும்… ஃபிகர் பின்னாடி போனா திட்டும். ஆனா ரெண்டயுமே மேய்க்கிறது ரொம்ப கஷ்டம்’, படத்துல சிச்சுவேஷனோட பார்க்கும்போது, இன்னும் பல காமெடி அள்ளும்.”என்கிறார்

இதில் கண்ணா லட்டு திண்ண ஆசையா சேது, விசாகா, நுஷ்ரத், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, விடிவிகணேஷ், நீலிமா, மீரா கிருஷ்ணன், சித்ராலட்சுமணன், கனல் கண்ணன், சந்தான பாரதி, பஞ்சு சுப்பு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெறுகிறது.கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். வாங்ஸ் விஷன் ஒன் இப்படத்தை தயாரிக்கிறது.

பட்டதாரிகள்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

பட்டதாரிகளில் 34 சதவீதத்தினர் மட்டுமே பணியில் அமர்த்த தகுதி படைத்தவர்களாக உள்ளனர் என்பது அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் மாணவ–மாணவியரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆண்களை விட பெண்கள் அதிக தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்லைன் மதிப்பீட்டு நிறுவனமான வீபாக்ஸ், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாணவ–மாணவிகளிடம் கணித–ஆங்கில அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் இணையதள அறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவர்களுடைய பணியில் அமரும் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திர பிரதேசம், அரியானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பட்டதாரிகள் வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.

ராஜஸ்தான், ஆந்திரா, அரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் கல்வியைப் பொறுத்தவரை அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்களை அதிகம் கொண்ட மாநிலங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒன்றாக உள்ளது.

Saturday, February 1, 2014

பெண்களுக்கு உதவும் ‘i-Safe’ அப்ளிக்கேஷன் கண்டுபிடிப்பு!

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன்.இந்த அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது.
மேலும் உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளை அவர் இப்போது செய்து வருகின்றார்.

இளம் வயதான எஸ் அர்ஜுன், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவர். கடந்த ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் போட்டியில் இவர் உருவாக்கிய Ez ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் என்ற அப்ளிக்கேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது. ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி பேருந்தின் இடத்தை கண்காணிக்கவும் மற்றும் வாகனம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பற்றி கணக்கிட உதவுகிறது.

அதேபோல், அடிப்படை போன்களிலும் இந்த அப்ளிக்கேஷனை எஸ்எம்எஸ் மூலமாகவும் பயன்படுத்த முடியும். முன்னதாக, எம்ஐடியில் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் இன்வென்டர் பக் ஃப்பைன்டிங் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.
அவருடைய பெரிய கனவு ‘Lateralogics என்று அழைக்கப்படும் சொந்த நிறுவனத்தை உருவாக்க வேண்டும், இதில் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஏதாவது செய்ய வேண்டும்’ என்று, அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புரோகிராமிங் லேங்குவேஜ்-ஐ கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று அர்ஜுன் தந்தை, சந்தோஷ் குமார் கூறியுள்ளனர். மேலும், அவருடைய பள்ளியில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்றும், அவரது ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகள் ரோபாட்டிக்ஸ், செஸ் மற்றும் பேட்மின்டன் உள்ளிட்டவை என்றும் அர்ஜுன் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் வக்கீலை மணக்கும் ஆயுள் கைதி

தன் உறவினரான ஆயுள் தண்டனை கைதியுடன் நடக்கும் திருமணத்துக்காக 10 நாள் பரோலில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பெண் வழக்கறிஞரை நாளை அவர் திருமணம் செய்து கொள்வதையடுத்து மீடியாமேன்கள் வழக்கம் போல் வரவேற்பு வளையத்தை தயார் செய்து வருகிறார்கள் .

வழக்கறிஞர் அருணா என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், “என்னுடைய மாமா சோமசுந்தரம் என்ற சோமு, ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனக்கும், அவருக்கும் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வியாசர்பாடியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.இதற்காக ஒரு மாதம் விடுமுறை கேட்டு சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த கண்காணிப்பாளர், திருமணம் நடைபெறும் பிப்ரவரி 2ஆம் தேதி மட்டும், அதாவது ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கியுள்ளார். திருமணத்துக்கு ஒரு நாள் விடுமுறை போதாவது. எனவே, ஒரு மாதம் விடுமுறை வழங்க கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஷ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, “ஆயுள் தண்டனை கைதி சோமசுந்தரம் சிறையில் ஒழுக்கமாக உள்ளதாகவும், அவர் தன்னுடைய நேரத்தை கல்வி கற்பதில் செலவு செய்வதாகவும், யோக, தியானம் உள்ளிட்ட வகுப்பிலும் தவறாமல் கலந்து கொள்வதாகவும், 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் மீது எந்த ஒரு புகாரும் வரவில்லை என்றும் கண்காணிப்பாளர சான்றிதழ் அளித்துள்ளார். அப்படிப்பட்ட கைதியின் திருமணத்துக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்குவது போதாது என்று நாங்கள் முடிவு செய்கிறோம். எனவே, சோமசுந்தரத்துக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்குகிறோம்.அதாவது, பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 4 மணி முதல் 10ஆம் தேதி மாலை 4 மணி வரை அவருக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இதுகுறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 10 நாட்கள் விடுமுறையில் இருக்கும் சோமசுந்தரத்துக்கு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.