Wednesday, January 29, 2014

பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்

சித்தர்களின் அறிவியலின்படி மானிடர் அனைவருள்ளேயும் விநாயகம் எனும் கட்டற்ற, முதன்மையான சக்தி ஒன்றுண்டு. இதை ஒருவர் உள்நோக்கி (தியானித்து) தட்டி எழுப்ப வல்லவராயின் அவர் தன்னை(பிள்ளை) யார் என்று அறியும் இறைநிலையை அடைகிறார். தானாகிய பிள்ளையை யார் என்று அறிந்த சித்தர்கள் அனைவரும் பிள்ளையார்களே. நாமனைவரும் பிள்ளையாராகும்(தன்னையறியும் / சிவநிலை / இறைநிலை யடையும்) வாய்ப்பு அரிய பிறப்பான மானிடர் அனைவருக்கும் இயற்கையாவே உண்டு.

தனது குற்றங்களையும் பாவங்களையும் இறைவனிடம் ஒப்புக் கொடுத்து மன்னிப்புப் பெறும் ஒரு உபாசனையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது. வினைகளை வேரறுக்கும்; கடவுளான விநாயக வழிபாட்டில் தோப்புக்கரணம் முக்கிய இடம் வகித்துவருகிறது. பாடசாலைகளிலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் குற்றங்களுக்கு வழங்கப்படும் ஒரு தண்டனையாகவும் தோப்புக் கரணம் கொள்ளப்பட்டுவந்திருக்கிறது. இந்த வகையில் கீழைத்தேய மக்களுக்கு இத் தோப்புக்கரணம் நன்கு அறிமுகமிக்க ஒன்றாகும்.

செய்யும் முறை

பாதங்களை ஒருங்கு குவித்தபடி நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

மேலைத்தேய மருத்தவ ஆராய்ச்சிகளும் சிபார்சுகளும்
லொஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளை எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல புள்ளிகளைப் பெற்றதாகக் காட்டுகிறார்.
யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் ( Dr.Eugenius Aug) அங் இடது கையால் வலத காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விடயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

காணொளி: பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

Bar Code இரகசியங்கள்!

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .


மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

கனவில் மட்டுமே....!!!

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை.....

ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்........

ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்.....!!!

கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்......!!!!

தேசம்.....!!!!

Tuesday, January 28, 2014

நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறது பாம்பன் பாலம் !


வரலாற்றுப் பெருமையும்,பாரம்பரியமும் மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று துவக்கி வைக்கிறார். நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கட்டுமான பணி 1913ம் ஆண்டு டிசம்பரில் முடிந்தது.

1914ம் ஆண்டு ஜனவரியில் பாம்பன் பாலத்தில் ரயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. பிப். 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி, முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. பின்னர் டிசம்பரில் சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி 2014 பிப். 24ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இந்திய ரயில்வே துறையால் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதன் துவக்க விழா பாம்பனில் இன்று நடைபெறுகிறது. நிறைவு விழா பிப். 24ம் தேதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாக்ஜலசந்தி கடலையும், மன்னார் வளைகுடா கடலையும் இணைக்கிறது பாம்பன் கடல். இதன் நடுவில் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் அமைந்துள்ளது. பாம்பனில் இயற்கையாக கால்வாய் அமைந்துள்ளது. இதன் வழியாக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் இருந்து உள்நாட்டு துறைமுகங்கள் மற்றும் இலங்கைக்கு போக்குவரத்து நடந்தது. ஆங்கிலேயர்களால் 1854ல் 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர்க் கப்பல்கள் சென்று வந்தன.

கடந்த 1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். பாம்பன் கடலிலும், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர். இதற்காக ஜெனரல் மன்றோ என்பவரால் ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் ஆய்வு நிலையிலே கைவிடப்பட்டது. சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் ”டுவின்ஸ் ரயில் பெர்க்கி சர்வீஸ்” என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.

அப்போது 229 லட்சம் செலவில் திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிகத்தொகை என்பதால் இத்திட்டமும் கைவிடப்பட்டது.
இறுதியாக கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ல் ”டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்” பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்கு பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதற்காக ஸீ70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்கியது.

கடந்த 1902 முதல் பாலம் கட்டுவதற்கான அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. குஜராத்தை சேர்ந்த கட்ஜ்கரோலி குடும்பத்தினர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இவர்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளை கடந்து கடலுக்குள் 144 தூண்களுடன் பாம்பன் பாலம் 1913ல் கட்டி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த ”ஜெர்ஷர் லேடிங் கம்பெனி” பொறியாளர் ஜெர்ஷர் என்பவரின் தலைமையில் 1913 ஜூலை மாதம் கப்பல் செல்லும் கால்வாயில் 124 அடி ஆழத்திற்கு இரண்டு தூண்கள் கட்டப்பட்டன. இதன் மேல் இரும்பினாலான இரண்டு லீப்கள் பொருத்தி தூக்கு பாலம் கட்டும் பணி டிசம்பரில் முடிக்கப்பட்டது. 1914 பிப்ரவரி 24ல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடி தலைமன்னார் கப்பல் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. அன்று முதல் சென்னையிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் நேராக தனுஷ்கோடி சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று வரத்துவங்கினர்.

சரக்கு போக்குவரத்தும் இவ்வழியாகவே நடந்தது. இதன் மூலம் தனுஷ்கோடி மிகப்பெரும் துறைமுக நகராக உருவெடுத்தது. கடந்த 1964 டிசம்பர் 23ம் தேதி தனுஷ்கோடி புயலில் பாம்பன் பாலம் பலத்த சேதமடைந்தது. இதில் கப்பல் செல்வதற்கு வழிவிடும் ஜெர்ஷர் பாலத்திற்கு மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. புயலுக்குப்பின் தென்னக ரயில்வே பாலங்கள் பராமரிப்புத்துறை இன்ஜினியர் ஸ்ரீதரன் தலைமையில் பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. மீண்டும் 1965 மார்ச் 1 ல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.

2006ம் ஆண்டு ஜூலையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே முதன்மை இன்ஜினியர் ஏ.கே.சின்ஹா தலைமையில் அகல ரயில் செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2007 ஆகஸ்டு 12ல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. நடுக்கடலில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் பாம்பன் பாலம் 99 ஆண்டுகளை முழுதாக கடந்தும் தனது சேவையை கம்பீரமாக தொடர்கிறது.

பிப்ரவரி 24ம் தேதி நூறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் பாம்பன் பாலத்தை மத்திய அரசு இந்திய புராதான சின்னமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் நூற்றாண்டு விழாவை கொண்டாடவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட உள்ள சம்பவங்களில் பாம்பன் பாலமும் இடம்பெறும் என்பது மட்டும் உறுதி.

* 1645 மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், ராமநாதபுரத்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சடையக்கத்தேவர் மீது போர் தொடுத்தார். அப்போது ராமேஸ்வரம் தீவில் சேதுபதியும், அவரது தளபதிகளும் தஞ்சமடைந்தனர். அவர்களை சிறைபிடிக்க நாயக்கர் மன்னரின் தளபதி தளவாய் ராமப்பையன் முதன் முதலாக பாம்பன் கடலில் கற்பாறைகளால் பாலம் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

* கடலுக்குள் 146 தூண்களுக்கு மேல் அமைந்துள்ள பாலத்தை கட்டுவதற்கு 4 ஆயிரம் டன் சிமென்ட், 1 லட்சத்து 36 ஆயிரம் கனசதுர அடி களிமண், 18 ஆயிரம் கனசதுர அடி கற்கள், 1 லட்சத்து 3 ஆயிரம் கனசதுர அடி மணல், 80 ஆயிரம் கனசதுர அடி பெரிய பாறைகள், 2,200 டன் எஃகு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

* கப்பல் செல்லுவதற்கு பாம்பன் துறைமுக அலுவலர், மண்டபம், பாம்பன் ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து இசைவு தெரிவித்தால் பாலம் திறக்கப்படும். 58 கி.மீ வேகத்திற்கு மேல் காற்றடித்தால் தானியங்கி சிக்னல் செயல்பட்டு பாலத்தில் ரயில் செல்வதற்கான அனுமதி கிடைக்காது.

* அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளில் இந்திய ரயில்வே இன்ஜினியர்கள் 50 பேர் உட்பட 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். கப்பல் செல்லும் ஜெர்ஷர் பாலத்திற்கு மட்டும் வலுகூட்டுவதற்காக புதிதாக 700 கிலோ எடை 10 மீட்டர் நீளமுள்ள 95 இரும்பு பிளேட்டுகள், 32 ஆயிரம் ரிவிட்டுகள் பயன்படுத்தப்பட்டது. அகல ரயில் செல்லும் பாலமாக மாற்றுவதற்கு மொத்த செலவு ஸி50 கோடி.

* 1964ல் பாம்பன் பாலங்கள் பராமரிப்பு செக்ஷன் இன்ஜினியராக பணியாற்றிய குமார சாமி புயல் அடித்தநாளில் தனுஷ்கோடிக்கு சென்ற ரயிலுக்கு பைலட்டாக சென்றார். அப்போது புயலில் சிக்கி ரயிலுடன் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு பலியானார். தற்போது பாலங்கள் பராமரிப்பு பணியில் பொறியாளர்கள் உட்பட 20 பேர் பணியாற்றி வருகின்றனர். பால பராமரிப்பு செலவு ஆண்டிற்கு ஸி2 கோடி ஆகிறது.

Monday, January 27, 2014

“தான் பார்த்த மரணங்கள்!”


மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில்,” சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை.

வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின் , தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம். மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினிவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார். அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர்.

இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.”என்பது போன்ற இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

உலகின் மிகச்சிறிய ஆண்ட்ராய்டு டேப்லெட்


சோனி நிறுவனம் 7 இன்ச் விட சிறிய திரை கொண்டுள்ள உலகின் முதல் டேப்லெட் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி எக்ஸ்பெரிய இசட் அல்ட்ரா என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் இந்த வாரம் ஜப்பான் மட்டும் தொடங்கி 52,000 யுவான் விலையில் கிடைக்கும்.

மாடல் முக்கிய அம்சங்கள் ஸ்டைலஸ் ஆதரவுடன் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கோர் 2.2GHz ஸ்னாப்ட்ராகன் 800 சிப்செட், 6.5mm திக் ப்ரோஃபைல், வாட்டர்ப்ரூஃப் மற்றும் கீறல் எதிர்ப்பு க்ளாஸ் பாடி மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்) ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

எக்ஸ் பெரிய இசட் அல்ட்ரா டேப்லெட்டின் மற்ற குறிப்புகள் 16GB ஆண்போர்டு சேமிப்பு, 2GB ரேம், 64GB வரை microSD அட்டை ஆதரவு, NFC, microUSB 2.0, ப்ளூடூத் 4.0 மற்றும் 3,050 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை அடங்கும். சோனியின் புதிய டேப்லெட்ல் 8MP கேமரா தக்க வைத்து கொண்டுள்ளது, இந்த மாடலில் இருந்து எல்இடி ப்ளாஷ் நீக்கப்பட்டது.

பெருமளவில் உற்பத்தி செய்யும் 7 இன்ச் திரை அளவு கீழ் உருவாக்கியுள்ளது இதுவே முதல் முறையாகும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் டேப்லெட்டில் 7 மற்றும் 8 இன்ச் திரை அளவுகள் தேர்ந்தெடுக்கின்றனர். நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்க்கான உலகின் முதல் யுஎஸ்பி டிரைவ்களை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, January 24, 2014

டச் ஸ்கிரீன் குறித்து நாம் அறியாத சில அபூர்வ தகவல்கள்

இன்று பார்க்கும் நாம் டிஜிட்டல் தொழில்நிட்பம், டச் ஸ்கிரின் மற்றும் மொபைல் பிக்ஸல் கிளாரிட்டி என எல்லாமே டெக்னாலஜி வளர்ந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. மொபைல் போன், டேப்ளட் பிசி, தொலைக்காட்சிப் பெட்டிகள் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர்கள் என எதனைத் தயாரித்து விற்பனை செய்பவராக இருந்தாலும், தங்களுடைய காட்சித் திரைகள் தான் மற்றவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான திரைகள் என விளம்பரப்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதனைக் கூறுகையில், சில வழக்கமான சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அவை -- Super AMOLED, LED, IPS, SuperIPS எனப் பலவகைப்படுகின்றன. இவற்றில் சில தொழில் நுட்பங்களின் உண்மையான பெயர்கள். சிலவோ, விளம்பர நோக்கில் அமைக்கப்பட்ட மற்றும் சின்ன சின்ன மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட சொற்களாகும். இங்கு இந்த சொற்கள் காட்டும் தொழில் நுட்பங்கள் என்னவென்றும் அவை எதனைக் குறிக்கின்றன என்றும் காண்போம்.

அடிப்படையில் இவை எல்லாம் நாம் எண்ணுவதைக் காட்டிலும் மிக எளிமையாகத் தெரிந்து கொள்ளக் கூடியவை தான். இந்தக் காட்சித் திரைகளைப் பெரிய அளவில் பார்த்தால், மூன்று வகைகளில் பிரித்திடலாம். அவை -- LCD, OLED, மற்றும் plasma ஆகும். மிக எளிமையான முறையில் இவற்றை இங்கு காணலாம்.

பிளாஸ்மா
இப்போதெல்லாம், பிளாஸ்மா காட்சித் திரைகள், மிகப் பெரிய ஹை டெபனிஷன் டிவிக்களிலும், டிஜிட்டல் சைன் போர்டுகளிலுமே பயன் படுத்தப்படுகின்றன. மாறுபட்ட ஒளிக் காட்சியைக் காட்ட இதனைப் பயன்படுத்து கின்றனர். இவற்றில் வண்ணங்கள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன.
எந்த ஒரு கோணத்தில், காட்சித் திரையிலிருந்து விலகி இருந்து பார்த்தாலும், வண்ணங்கள் இடம் மாறாது. எனவே தான், பொது இடங்களில் விளையாட்டு நிகழ்வுகளைக் காட்ட பெரும்பாலும் இது பயன்படுகிறது. ஒரு வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் நேரம் (response time)இந்த வகைத் திரையில் மிக மிகக் குறைவு.


இதனால், ஒரு வண்ணத்தில் இருந்து இன்னொரு வண்ணத்திற்கு எந்த பிசிறலும் இல்லாமல் உடனடியாக மாறக் கூடியவை பிளாஸ்மா திரைகளாகும். ஆனால், பிளாஸ்மா திரைகள் இயங்க அதிக மின் சக்தி தேவை; திரையின் தடிமனும் அதிகமாகவும் கனமாகவும் இருக்கும். எனவே இவற்றை மொபைல் போன்களிலும், டேப்ளட் பிசிக்களிலும் பயன்படுத்தவே முடியாது.
ஓ.எல்.இ.டி. (OLED Organic Light Emitting Diode)

டிஜிட்டல் டிஸ்பிளே தொழில் நுட்பத்தில், அண்மைக் காலத்தில் மார்க்கட்டைக் கலக்கும் தொழில் நுட்பம் இது. சில விளம்பரங்களில் இதனை AMOLED Active Matrix Organic Light Emitting Diode எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த முதல் இரண்டு இணைப்பு சொற்களும், இதில் பிக்ஸெல்கள் எப்படி அடுக்கப்பட்டு இயங்குகின்றன என்று விளக்குகின்றன.


இங்கு ஓர் ஒளிக்கற்றையைக் கொண்டு வர கேஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதில் உள்ள எலக்ட்ரோடுகள், ஒளியை வெளிப்படுத்தும் ஓர் ஆர்கானிக் பாலிமரைக் கொண்டு வருகின்றன. இங்கு பாலிமர் என்பது, திரும்பத் திரும்ப வரும் மிகச் சிறிய மாலிக்யூல்கள் கொண்ட பெரியதொரு மாலிக்யூல்கள் ஆகும்.


இதன் ஒரே பிரச்னை இதன் தயாரிப்பு செலவு தான். எல்.சி.டி. அல்லது பிளாஸ்மா வகைத் திரையைக் காட்டிலும், இதனைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும். தற்போது Super AMOLED Plus என சில வகைத் திரைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. OLED தொழில் நுட்பத்தில், ஆங்காங்கே மிகச் சிறிய வேறுபாடுகளைக் கையாண்டு இவை வெளிவரு கின்றன. ஆனால், செயல்பாட்டின் அடிப்படையில் இவை AMOLED தொழில் நுட்பம் கொண்ட வையே.
எல்.சி.டி. (LCD–Liquid Crystal Display)

மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் காட்சித் திரை இதுதான். ஹை டெபனிஷன் டிவி, டெஸ்க்டாப், லேப்டாப் மானிட்டர் கள், டேப்ளட் பிசிக்கள் மற்றும் மொபைல் போன் திரைகள் என எங்கும் இது பயன் பாட்டில் உள்ளது. இதன் வகைகள் எனப் பல பேசப்பட்டாலும், அடிப்படையில் மூன்று வகைகள் பிரபலமானவை. அவை -- twisted nematic, InPlane Switching, and patterned vertical alignment. எல்.சி.டி. ட்விஸ்டட் நெமாடிக் (டி.என். அல்லது டி.என்.பிலிம் TN or TNFilm): இவ்வகைத் திரைகளின் பேனல்கள் மிக மலிவானவை. எனவே அதிக எண்ணிக்கையில் எளிதாகத் தயாரிக்க முடியும். வண்ணத்தைத் திரைக்குக் கொண்டு வரும் response time இதில் மிக மிகக் குறைவாகும். 2 மில்லி செகண்ட் கூட ஆகாது. ஆனால், மொத்த காட்சி வெளிப்பாட்டில் இவை சில குறைகளைக் கொண்டுள்ளன.

எல்.சி.டி. இன் - பிளேன் ஸ்விட்சிங் (IPS)மேலே டி.என்.பிலிம் வகை எல்.சி.டி. திரைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கும் வகையில், ஹிடாச்சி நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்தது. மற்ற எல்லா வகைகளிலும் இது உயர்ந்து இருந்தாலும், இதன் ரெப்ரெஷ் ரேட் தேவையான அளவு இல்லாததால், அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை.
எல்.சி.டி. வெர்டிகலி அலைன்டு (VA Vertically Aligned)மேலே கூறப்பட்ட இரண்டு வகைகளுக்கும் இடையேயான தன்மையைக் கொண்டது. ஐ.பி.எஸ். தொழில் நுட்பம், சற்று தாமதமாகவும், மந்த ஒளிக் காட்சியாகவும் திரையில் செயல்பட்டது. டி.என். வகை வேகமாகவும், நல்ல வெளிச்சக் காட்சியாகவும் இருந்தாலும், மொத்தத்தில் காட்சி தன்மையில் குறை வாகவே இருந்தது. இவற்றிற்கு இடையே வெர்டிகலி அலைன்டு தொழில் நுட்பம் உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் இந்த வகை தொழில் நுட்பத்தினைச் சிறப்பாகத் தருவதாகக் கூறி வருகின்றன.
எல்.இ.டி. (LED)மேலே கூறப்பட்ட வற்றில் இருந்து சற்றே சில மாறுதல் களுடன் எல்.இ.டி. (LED (lightemitting diode) மற்றும் டி.எப்.டி. காட்சித் திரைகள் தற்போது பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொலைக் காட்சிப் பெட்டிகளில் இவை பயன்படுத்தப்படுகையில், பெரிய அளவில் வண்ணங்கள் கிடைக்கின்றன. மிகவும் குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் இவை அதிக நாட்கள் உழைக்கக் கூடியவையும் ஆகும்.
டி.எப்.டி (TFT:ThinFilm Transistor)

இந்த தொழில் நுட்பம் மேலே கூறப்பட்ட அனைத்து activematrix திரைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பு செலவு குறைவான வகைகளில் இது இடம் பெறுகிறது. மொபைல் போன்களில் பெரும் பாலும் இது பயன்படுத்தப்படுகிறது

அடுப்பு பத்த வைப்பது எப்படி??

"சீறி வந்த புலியதனை முறத்தினாலே - அடித்து
சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே!"

தன்னோட "ஹபி"க்காக ரைஸ் கொஞ்சம் எடுத்து முறத்தால் புடைத்து கொண்டு இருக்குறேச்சே, பிக் டைகர் வந்து வீட்டுக்கு வெளியில் இவள் வைத்த அடுப்பினருகில் வந்து காலை தூக்க எத்தனித்து இருக்கிறது..

புலி சூச்சு போயிடுமோன்னு ஒரு பயத்தில ஆண்டி என்னா பண்ணாங்கன்னா?? அரிசி போனால் போகட்டும், அடுப்பே முக்கியம் என்று தான் வைத்து இருந்த சுளகினால் அடித்து விரட்டி இருக்கிறார்..

கலா மாஸ்டர் - ஹெட்ஸ் ஆப் மறத்தி.. சும்மா கிழி கிழி கிழி ச்சு இருக்கீங்க சுளக..

அடி வாங்கிய பதட்டத்தில் காட்டுக்குள் ஓடி போன அந்த புலி, ஜங்கிள் புக் மவுக்லியிடம் கூறிய விடயம் தான் நாம் அறியா வரலாற்று ரகசியம் "ஒரு விசப்பூச்சி அடுப்புக்கு அருகில் இருந்திச்சா, அதை நசிச்சுடலாம்னு காலை தூக்கினேனா, ஆனா அதுக்குள்ளே அங்க இருந்த ஒரு பிகர் பொங்கிடிச்சு" என்று கம்பலையும், கண்ணீருமாய் சொல்லி இருக்கிறது.


பின்னர் அந்த மறத்தியின் குடும்பம் விசப்பூச்சி விஷம் உண்டு இறந்தது எல்லாம் வரலாறு அறியாதது..

இருந்தாலும் அந்த பெண்ணையும் வணங்கி..

எல்லாவற்றிக்கும் மேலாக

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்திலேயே உலகம் போற்றும் உன்னத உணவுகளை தயாரித்த "பரவை" முனியையும் வணங்கி பதிவிற்குள் போலாம்..

அடுப்பு பத்த வைப்பது எப்படி??

முதலில் மூன்று செங்கல்களை எடுத்து கொள்ளுங்கள். அப்படியே நடராஜ் பாக்ஸில் இருந்து ஒரு பாகை மானியினை வெளியில் எடுத்து கொள்ளுங்கள். சரியாக 120 பாகை இடைவெளியினை அளந்து கொண்டு செங்கல்லை ஏற்றார் போல செட் பண்ணி கொள்ளுங்கள். காரணம் சட்டியை வைப்பதற்கும், கொள்ளியை செருகுவதற்க்குமே..

அப்படியே செட் பண்ணிய அடுப்பினை மூன்று பேர் மூன்று முனையில் இருந்து அலேக்காகவும், மெதுவாகவும் தூக்கி கொள்ளுங்கள். தூக்கிய கோணத்திலும், சரியான வேகத்திலும் உங்கள் கால்களால் நடந்துநடந்து செல்ல வேண்டும்.

முடிந்தளவு அடுப்பினை கிட்டிய தூரத்தில் இருக்கும் பெட்ரோல் செட்டுக்கே கொண்டு செல்லுங்கள். அதிக தூரம் நடக்க வேண்டாம். கால் நோ எடுக்கும்.

செட்டுக்கு கொண்டு வந்து விட்டீர்களா?? இப்போது செய்முறையை ஆரம்பிக்கலாம். போன வேகத்திலேயே பெட்ரோல் ஹெண்ட் ஷவரை அடுப்பிற்கு மேலாக பிசிறி அடியுங்கள்.. நன்றாக அடியுங்கள்.. இன்னும் நன்றாக..

அடித்து கொஞ்ச நேரத்தில் செங்கலின் உள்ளார ஊற தொடங்கியதும் கையில் நெருப்பெட்டியை எடுத்து கொள்ளுங்கள். அப்புறம்மென்ன, நெருப்பை கொளுத்தி விடுங்கள். அடுப்பு குபு குபு என கொழுந்து விட்டு எரிவதை பார்த்து கைகளை தட்டி மகிந்து கொள்ளுங்கள்..

அப்படியே 10 நிமிடத்தில் உங்கள் கைகளில் சாம்பல் ரெடி..

அப்புறம் என்ன நீங்களும் கலக்குங்க..

பேஸ்புக் கடும் வீழ்ச்சி அடையும்?

உலகத்தில் முன்றாவது மக்கள் தொகை கொண்ட நாடு பேஸ்புக் தான்! ஏற குறையே 80 கோடிகள் கொண்ட ஒரே இணைய தளம் பேஸ்புக் தான்! இன்று கூகுளேயே சீண்டி பார்க்கும் நிறுவனம் இது தான்!…மேலும் மொபைல் போன் இல்லாதவன் கூட பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கும் அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்துள்ள பேஸ்புக் வலைத்தளமானது மக்களிடையே ஒரு தொற்று போல வேகமாக பரவி வருகிறது. ஆன்னல் சமீபகால்மாக பேஸ்புக் மீதான ஆர்வத்தை மக்கள் மெதுவாக கை விட ஆரம்பித்திருக்கும் நிலையில், 2017ஆம் ஆண்டில் அது தன் பயனர்களை பெரும் அளவில் இழக்கும் என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றைய சமுக வலைத்தளங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியுடன் பேஸ்புக் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்த்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொள்ளை நோயைப் போல் பேஸ்புக் சமூக வலைத்தளமும் முடிவுக்கு வரும் என்று வாதிடுகின்றனர்.

பிப்ரவரி 4-ஆம் தேதி தனது 10-வது பிறந்த நாளை கொண்டாடும் பேஸ்புக் சமூக வலைத்தளமானது, மற்ற சமூக வலைதளங்களை விட அதிக நாட்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த வளர்ச்சியானது குறையத் தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தனது 80 சதவீத பயனர்களை பேஸ்புக் இழக்கும் நிலை வரும் என்று பிரின்ஸ்டன் ஆராய்சியாளர்கள் கணித்துள்ளனர்.

Thursday, January 23, 2014

வெங்காயம் – உரிக்காமலே வெளிவரும் உண்மைகள்!


காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். அது மட்டுமின்றி திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.மேலும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம்.அதே போல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.அதிலும் உண்மையில்லையாம்.

இவைகளையெல்லாம் விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம்தான் என்பதை மடடும் உறுதி படுத்தி இருக்கிறார்கள். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளதால் தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது;.

நமமை மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.

எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப் பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.
முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி!


அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை

இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.

இதையடுத்து பேசிய சுவர்ணல்ட்சுமி”ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள்” என்கிறார்.இப்படி உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த மாணவி சுவர்ண லட்சுமியை நீங்களும் வாழ்த்துங்களேன்!!

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது!


2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அச்சிடப்பட்டஆண்டு எண் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் ஏப்ரல் 1–ந்தேதி முதல் வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டு களை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது. அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் எளிதாக நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று வங்கி அறிவித்துள்ளது.மேலும் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடி ஆகும் என்றும் இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும்.

2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.

வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு 10க்கும் அதிகமான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றுபவர்கள், தங்களது அடை யாள சான்று, இருப்பிடச்சான்றுடன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.”என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இவ்வாறு புழக்கத்தில் உள்ள பணத்தை மாற்றுவதும், வடிவத்தை மாற்றி அமைப்பதும் புதிதல்ல. 2011ம் ஆண்டு 25 பைசா நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறைப்பாக 25 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பின்றி போய்விட்டது.சில கடைக்காரர்களும் அதை வாங்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்க்து.

Wednesday, January 22, 2014

80-களின் நட்சத்திர கெட் டூ கெதர் ஆல்பம்!


1980-களில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் அனைவருமே இப்போது சினிமாவையும் தாண்டி வெவ்வேறு பணிகள் பிஸியாக இருந்து வருகிறார்கள். தங்களது பணியைப் பொருட்படுத்தாது வருடத்திற்கு ஒருமுறை கூடி பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்தபடி தங்கள் நட்பை மெருக்கூட்டி வருகிறார்கள்.இதற்கிடையில் தொலைபேசி வாயிலாக நீண்ட நேரம் அனைவருமே பேச முடியாத அளவிற்கு பிஸியாக இருப்பதால், கூகுள் குரூப் ஒன்றை தயார் செய்து அதன் மூலம் தொடர்ச்சியாக நட்பில் இருந்து வருகிறார்கள்.போன வாரம் 5வது வருடமாக இந்த நட்சத்திரங்கள் கூடி “நாங்களெல்லாம் பிர்ண்ட்ஸ்” என்று மேலும் ஒரு முறை உரக்க கூறியிருக்கிறார்கள். இவர்களது இணைபிரியாத நட்பு, இப்போதுள்ள நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருந்தால் சரிதான்!

இதற்கிடையில் இந்த வருடத்தில் இவர்களது சந்திப்பில் நடைபெற்ற சில சுவாரசியமான துளிகள் :

* 5ம் ஆண்டிற்கான ஏற்பாட்டை மோகன்லால் ஏற்றுக் கொண்டார். அவரது ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீட்டில் சனிக்கிழமை மாலை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

* ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், அர்ஜுன், ரேவதி, ராதிகா, சுஹாசினி, குஷ்பு உள்ளிட்ட 32 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

* 1980ல் அனைவருக்கும் பரிச்சயமான புகைப்படக்காரர் ஸ்டில்ஸ் ரவி இந்தாண்டு புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்று, புகைப்படங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

* ஒவ்வொரு ஆண்டு திட்டமிடலின் போதும், நாங்களும் கலந்து கொள்கிறோம் என்று பலரும் ஆர்வம் காட்டி பங்கேற்று வருகிறார்கள். இதனால் வருடந்தோறும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* முதல் இரண்டு ஆண்டும் லிசி பிரியதர்ஷன், சுஹாசினி ஆகியோர் விழா ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள். மூன்றாம் ஆண்டு சிரஞ்சீவி, நான்காம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரிஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்தாண்டு மோகன்லால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

* விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் அனைவருமே மோகன்லாலின் விழா ஏற்பாட்டை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

* நடிகர், நடிகைகள் அனைவருக்கும் அவர்களது உருவப்படத்தை, மோகன்லால் மற்றும் ஸ்ரீதர் இருவருமே இணைந்து வரைந்த ஒவியத்தை தனது கையொப்பமிட்டு கொடுத்து அசத்தியிருக்கிறார் மோகன்லால்.

* அனைவரது முன்னிலையிலும் மோகன்லால் ஒரு மணி நேர மேஜிக் ஷோ ஒன்றை நடத்தி காட்டியிருக்கிறார். மியூசிக் அகாடமியில் கூட நாங்கள் இந்தளவிற்கு மேஜிக் பார்த்ததில்லை என்று வியந்து பேசியிருக்கிறார்கள்.

* ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தீமில் உடைகள் அணிந்து வரவேண்டும். இந்தாண்டு நடிகர், நடிகைகள் அனைவருமே ஹவாய் தீவு தீமில் உடைகள் அணிந்து கலந்து கொண்டார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இதே பாணியில் உடைகள் அணிந்து கலந்து கொண்டார்கள்.

* ஒவ்வொரு ஆண்டு கூட்டம் முடிவடையும் போது, அடுத்தாண்டு நான் தான் ஏற்பாடுகள் பண்ணுவேன் என்று கடுமையாக போட்டியிடுவார்கள். அடுத்தாண்டு யார் ஏற்பாடு என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

* 30 நிமிடம் மியூசிக் கான்சர்ட் நடைபெற்று இருக்கிறது. மோகன்லால், சுஹாசினி, ஜெயராம் உள்ளிட்ட பாடத் தெரிந்த நடிகர், நடிகைகள் அனைவருமே பாடியிருக்கிறார்கள்.

* அனைவருக்குமே என்ன செய்ய வேண்டும் என்று வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதனை அவர்கள் வீட்டில் ரிகர்சல் செய்து, நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையிலும் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

* தொலைபேசி வாயிலாக நீண்ட நேரம் அனைவருமே பேசமுடியாத அளவிற்கு பிஸியாக இருப்பதால், கூகுள் குரூப் ஒன்றை தயார் செய்து அதன் மூலம் தொடர்ச்சியாக நட்பில் இருந்து வருகிறார்கள்.

* ‘Illusion in dance’ பாணியில் நடனநிகழ்ச்சி ஒன்று நடைபெற்று இருக்கிறது. 4 பேர் இணைந்து நடனமாடினால் 8 பேர் நடனமாடுவது போன்று தெரியும். அந்த வகை நடனத்தினை பூர்ணிமா, சுஹாசினி ஆகியோ நடனமாடியது ஹைலைட்டாக இருந்து இருக்கிறது. மாஸ்க் போட்டுக் கொண்டு நடனமாடுவது யார் என்று தெரியாததால் யார் ஆடுவது என்று சஸ்பென்ஸுடன் பார்த்தார்களாம்.

* ஸ்டில்ஸ் ரவி சுமார் 45 நிமிடங்கள் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அனைவருமே ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நான் தான் இங்கே உட்காருவேன், இந்த முறை நான் என்று போட்டியிட்டு புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

* இந்நிகழ்ச்சிக்கு பிரபு 9 மணிக்கு தான் வந்திருக்கிறார். 7:45 மணிக்கு எல்லாம் புகைப்படம் எடுப்பது முடிவடைந்து விட்டதால், “அய்யோ.. மிஸ் பண்ணிட்டேனே” என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.

*இந்நிகழ்ச்சியில் ஷாருக்கான், அனீல்கபூர், ஆமிர்கான் மூவரும் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்களாம். அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சந்திப்பில் இவர்களும் இணையக் கூடும்

* அடுத்த சந்திப்பில் ஒரு நாள் முழுவதும் பங்கேற்கலாம் என்று யோசனை கூறியிருக்கிறார் ரஜினி. யோகா, மெடிடேஷன் போன்ற விஷயங்களை சேர்க்கலாம் என்று ஆலோசனையும் கூறியிருக்கிறார்.

* ‘ஆர்டிஸ்ட் வில்லேஜ்’ ஒன்றை ஈ.சி.ஆர் சாலையில் உருவாக்கி அங்கே 80களின் நடிகர், நடிகைகள் பொழுதுபோக்கும் இடமாக்க திட்டம் ஒன்றை போட்டிருக்கிறார்கள். இதற்கான இடம் தருவதாக நடிகை ஷோபனா சொன்னாராம். அந்த இடத்தில் கட்டிட வேலைகளை தான் முன் நின்று கட்டித்தருவதாக உத்தரவாதம் தந்திருக்கிறார், நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் ராஜ்குமார்.

* அமிதாப் பச்சன் தலைமையில் அடுத்த ஆண்டு மும்பையில் இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தில் அமிதாப், கமல், ஆமிர்கான், மோகன்லால் போன்ற முக்கிய நடிகர்களின் ‘வொர்க்‌ஷாப்’ நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்காக டினா அம்பானி தன்னுடைய ஆடிட்டோரியத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறாராம்.

* ஒவ்வொரு வருடமும் தவறாமல் கலந்து கொள்ளும் சரத்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது விமானம் தாமதமானதால் கலந்து கொள்ளவில்லை. கார்த்திக் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை என்று வருத்தியிருக்கிறார்கள்.

* கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று விட்டதால், கமல் இம்முறை வரவில்லை. அடுத்தாண்டு கண்டிப்பாக வருவேன் என்று உறுதியளித்து இருக்கிறார்.

* ஆடல், பாடல், மேஜிக் என களைகட்டிய நிகழ்ச்சிகளில் குவிஸ் போட்டியும் இடம்பெற்றிருக்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் கையொப்பம் இட்ட புகைப்படம் இருக்கிறது. 4 ஆண்டுகளாக கலந்து கொண்ட அனைவருமே கையொப்பமிட்ட புகைப்படத்தை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள்.

தெருகூத்தை முடித்துக் கொண்டார் டெல்லி முதல்வர்!

டெல்லியில் வீதிகளில் டெல்லி முதல்மைச்சர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த தர்ணா கூத்தை நேற்று முடித்து கொண்டார். காவலர் இருவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை நிலைய ஆளுநர் நஜிம்ஜங் சம்மதம் அளித்ததை அடுத்து அரவிந்த் கெஜரிவால் தர்ணா போராட்டத்தை முடித்து கொண்டாராம். இந்த தர்ணா போராட்டத்தின் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும் போராட்டம் காரணமாக டில்லி மெட்ரோ ரயில் மூடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பிற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

டெல்லியில் நடைபெறும் போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்படும் உகாண்டா நாட்டு பெண்ணை உள்ளடக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைது செய்யும்படியும் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த காவல்துறை அதிகாரிகள் மறுத்ததையடுத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதல் அங்கு தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார்.நாடு குடியரசு தின விழாவை எதிர்நோக்கியுள்ள சூழலில் மத்திய டெல்லியில் கெஜ்ரிவால் நடத்தி வரும் போராட்டம் அவ்விழாவிற்கு பெரும் இடையூறாக இருக்கும் என கருதப்படுகிறது.

முன்னதாக அவரது போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி நகர முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரண்பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது பணிகளில் இருந்து விலகி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமானால் அந்த அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.டெல்லி மாநில போலீசாரும் ஆம் ஆத்மி கட்சியிடம் புதன்கிழமைக்குள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் அல்லது போராட்ட இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சற்று முன் கேட்டுக்கொண்ட நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங்கின் வேண்டுகோளை ஏற்று தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புகாருக்குள்ளான காவல்துறை அதிகாரிகளை விடுப்பில் செல்ல ஆளுநர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து தனது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், இது டெல்லி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். விடுப்பில் சென்ற காவல்துறை அதிகாரிகள் மீது நீதித்துறை விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 21, 2014

லாப நஷ்டக் கணக்கு - ஜில்லா & வீரம்

சும்மா இருப்பதே சுகம் … அதிலும் நான் மற்றும் என்னை போன்ற சில விவரம் தெரிந்த சினிமா மனிதர்கள் யாரையும் பகைத்துகொள்ள வேண்டாம் என நினைக்கும் சில பத்திரிகை நண்பர்களும் சும்மா இருப்பதே சுகம் …. யாருக்கு என கேட்கிறீர்களா … யாருக்கோ .. யார் யாருக்கோ…. விதி நான் இன்று சும்மா இருப்பதாக இல்லை … ready start … joote…

1…. ஜில்லா திரைப்படம் யார் யாருக்கு லாபம் … யார் யாருக்கு நஷ்டம் …

2. வீரம் திரைப்படம் யார் யாருக்கு லாபம் யார் யாருக்கு நஷ்டம் ….

3. ஏன் உண்மைகள் வெளி வருவதில்லை ..

4. என்று மாறும் இந்த நிலை

இதுதான் இன்றைய கருத்துகள். உண்மை என்பதால் சிலருக்கு சுடும் .. சிலருக்கு சுகம்.
…….
ஜில்லா கல்லா கட்டவில்லை .. மினிமம் காரண்டீ (minimum guarnatee) முறையில் திரையிட்ட அனைவருக்கும் நஷ்டம் … நிச்சயம் …பல வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டம்.(இதே கதை வீரத்துக்கும் பொருந்தும் .. ஆனால் விலை சற்றே குறைவு என்பதால் நஷ்டமும் குறைவு. ..)

அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரி முழுமையாக வரவில்லை .. வரி ஏய்ப்பில் நிறைய திரை அரங்குகளுக்கு பங்கு உண்டு .. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வரவுக்கு வாய்ப்பு உண்டு.

லாபம் யாருக்கு என கேட்டால் … ஜில்லா படத்தில் தயரிப்பாளருக்கு நல்ல லாபம். நடிகர் விஜய் முதல் அனைத்து நடிகர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் லாபம் . சில திரை அரங்கு தவிர பல திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் … விளம்பர நிறுவனங்களுக்கும் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் லாபம் . படம் முழு திருப்தி தராததால் 300 500 என காசு கொடுத்து வாங்கிய ரசிகர்களுக்கு நஷ்டமோ நஷ்டம்….
….
வீரம் திரைப்படத்தில் தயரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லை … வினியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை .. ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் இல்லை …ஆனால் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் .
வரி ஏய்ப்பு செய்வதில் ஜில்லாவுக்கு இணையாக வீரமும் உண்டு ..

ஏதோ இரு படங்களுக்கும் வரி உண்டு என முடிவு செய்ததால் அரசாங்கத்துக்கு கொஞ்சமாவது வருமானம் வந்தது..
…..
சரி இதெல்லாம் உண்மையாக இருக்குமானால் … ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை

சிறு பத்திரிகைகளை சிறிய விலைக்கும் பெரிய பத்திரிகைகளை பெரிய விலைக்கும் யாராவது வாங்கி விடுகிறார்களா… யாமரியேன் பராபரமே..
….
என்று மாறும் இந்த நிலை …

மக்கள் அதிக விலைக்கு டிக்கட் வாங்க மாட்டோம் என முடிவு எடுத்தால்…

திரை அரங்கு உரிமையாளர்கள் கருணை வைத்தால் …(not all but most)

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் அரசாங்கம் தியேட்டரிலும் கண் வைத்தால் ..

பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால்…

ஊடகங்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால்…

நல்ல திரைப்படங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ..

Monday, January 20, 2014

மதுரை என்றால் நினைவில் கொள்ளவ்ண்டியது

1. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம்,

2.சிவபெரு மான் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்த இடம், 

3. மதுரைக் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், ஆலவாய் இறைவன் சொக்கநாதரின் கட்டளைப்படி சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக, சங்கப்பலகை தாங்கியிருந்தது.

4.நக்கீரரின் திரு முருகாற்றுப்படை தோன்றிய இடம்,
5.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்,
6. முருக னின் ஆறுபடை வீடுகளில் மற்றொன்றான பழமுதிர்சோலை, 

7.வைஷ்ணவ திவ்ய தேசங்கள் 108இல் ஒன்றான அழகர் கோயில் உள்ள இடம்;

8. திருக்குறள் அரங்கேறிய இடம், 

9. மணிமேகலை காப்பியம் தோன்றிய இடம்,
10. திருவாசகம் தந்த மணிவாசகர் வாழ்ந்த இடம்,
11.சைவ சமயத்தின் பெருமையைத் திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய இடம்,
12.சைவத் திருமுறைகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இடம்,
13.பெரியாழ்வார் "பல்லாண்டு பாசுரம்' பாடிய இடம்,

14. பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் நான்கு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1. மங்கையர்க்கரசியார், 2.நின்றசீர் நெடுமாறன், 3.குலச்சிறையார், 4. மூர்த்தி நாயனார்; 

15.திருவிளையாடல் புராணம் பிறந்த இடம்,
16. குமரகுருபரர் "மீனாட்சி பிள்ளைத் தமிழ்' பாடிய இடம்,
17. சைவ சமய ஆச்சாரியரான குருஞானசம்பந்தர் "சொக்கநாத வெண்பா' பாடிய இடம்,
18. மீனாட்சி சந்நதி பிராகாரத்தில் "கூடல் குமரன்' முருகன் எழுந்தருளியுள்ளார். இவரைப் பற்றிய பாடல் அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம் பெற்றிருக்கிறது. இவ்விதம், தமிழ் இலக்கியங்களில் முதலிடம் பெற்ற இடம் மாமதுரை மூதூர். "மூதூர்' என்ற சொல்லுக்கு, "பழைய ஊர்' என்றுதான் பொருள். ஆனால் தமிழ் இலக்கியங்களில், "மூதூர்' என்றால் அது மதுரைத் திருத்தலத்தை மட்டும்தான் குறிக்கும்.

இந்த சிறுமியை யாருக்காவது தெரியுமா ?

இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர்.

மலாலாவை போலத்தான் ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது. காரணம் மலாலாவின் குற்றசாட்டுக்கள் அனைத்தும் அமெரிக்க எதிரியான தாலிபான்களை பற்றியது. அதில் கூட பல சர்சைகள் உள்ளன இருந்தும் அதை பற்றி எந்த ஒரு ஊடகமும் கண்டுகொள்வதில்லை ஆனால் இவரின் குற்றசாட்டுக்கள் அமெரிக்காவின் கோரமான தாக்குதலால் கொல்லப்பட்ட அமெரிக்காவுக்கு எதிரான செய்திகள்.

அக்டோபர் 2012 ஆம் ஆண்டு ஊடகங்களில் வெளிவந்த செய்தி அமெரிக்காவின் ஆளில்லா விமாங்கள் மூலம் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது. ஆனால் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள். இதில் இவரது குடும்பத்தினரும் அடக்கம்.. வழக்கம் போல எந்த ஒரு ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவே இல்லை.. ஊடகங்கள் என்றைக்கும் அவர்களின் எஜமானனுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் தான் வெளியிடும்.. இது தான் இன்று நடந்து வருகிறது.

உலகின் பெருமான்மை ஊடகங்களை கட்டுப்படுத்துவது அமேரிக்கா தான்.. அப்படி இருக்கும் போது எப்படி இந்த ஊடகங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செய்திகளை மக்கள் மன்றத்தில் வெளியிடும்..இதனால் தான் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் தலிபான்களை பென்னடிமைவாதிகள், தீவிராவதிகள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் வெளியிட்டுவருகிரார்கள்.. அப்பொழுது தானே மக்களும் தலிபான்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலைக்கு வருவார்கள்..அங்கு கொல்லப்பட்ட இலட்சக்கணகான பெண்கள் குழந்தைகளை பற்றி கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டார்கள்..இது தான் இன்று நடந்து வரும் எதார்த்த உண்மையும் கூட.. இதை பற்றியெல்லாம் நாம் என்றைக்காவது சிந்தித்து இருப்போமா? இல்லை என்பதே உண்மை..ஊடகங்கள் நம்மை சிந்திக்கவும் விடப்போவதில்லை என்பதே உண்மையும் கூட. உலகின் மிகப்பெரிய முட்டாள் யார் என்றால் ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே எந்த வித சிந்தனையும் இல்லாமல் நம்புபவன் தான்.

எம்ஜியாரை அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர். எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே…

கலிபோர்னியாவில் திரைப்படத்துறையை பற்றிய படிப்பு படிக்கும்போது, கல்லூரியில் டங்கனுடன் மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். அவர் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் போது அவருக்கு துணையாக டங்கன் அவருக்கு துணையாக இருந்தார், அவர் முதன்முதலில் பணிபுரிந்த திரைப்படம் நந்தனார், இப்படத்தில் சில காட்சிகளை இவர் இயக்கினார். கல்கத்தாவில் படப்பிடிப்பின்போது டாண்டனை ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை இயக்கித்தரும்படி கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் தனது அமெரிக்க நண்பரான எல்லிஸ் ஆர்.டங்கன் அவர்களை இயக்குனராக்கிக்கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.

இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்ப்பட இயக்குனரானார். இப்படத்தில் தான் எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்புகள் கிட்டின. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் இனைந்து பணியாற்ற முடிந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களின் கொள்கைகளை பரப்பும் சில படங்களையும் இயக்கினார். எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை இந்தியிலும் இயக்கினார்.

நெருக்கமான காதல் காட்சிகள் இவரை அமெரிக்க கலாச்சாரத்தை தமிழகத்தில் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக்கியது. ஆனால் புதிய ஓளியுத்தி, நவீன ஒப்பனை முறைகளையையும் இவரே தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. இந்தப் படத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை, தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத சில படங்களில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. டங்கன் 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பினார்.

இவர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்

 சதிலீலாவதி (1936)

 சீமந்தினி (1936)

 இரு சகோதரர்கள் (1936)

 அம்பிகாபதி (1937)

 சூர்யபுத்ரி (1940)

 சகுந்தலா (1940)

 காளமேகம் (1940)

 தாசிப்பெண் (1943)

 வால்மீகி (1945)

 மீரா (1945)

 பொன்முடி (1950)

 மந்திரிகுமாரி (1950)

இது தவிர ஆங்கிலேயர்களின் கொள்கைகளை பரப்பும் சில படங்களையும், நந்தனாரில் சில காட்சிகளையும் இவர் இயக்கி இருக்கிறார். டங்கன் அமெரிக்காவில் மீண்டும் குடியேறிய பிறகு எல்லிஸ் டங்கன் ப்ரொடக்சன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப்படங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும் ட்யூக் கோல்ட்பர்க் என்ற தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். மீண்டும் இவர் தமிழகம் வந்த போது தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டங்கன் டிசம்பர் 1, 2001 இல் இயற்கை எய்தினார். டங்கன் தனது திரையுலக அனுபவங்களை எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.

Saturday, January 18, 2014

கூச்ச சுபாவம் உள்ளவரா?

கூச்ச சுபாவத்தில் இருந்து வெளியில் வர

உங்களைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், அபிலாசைகளைக் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் கூச்சப்படும், அல்லது பதட்டப்படும் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள். அந்த இடத்தில் நீங்கள் ஒரு தன்னம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இருப்பவராகக் கற்பனை செய்து அந்தக் காட்சியை உங்கள் மூடிய கண்களுக்குள் கொண்டு வாருங்கள். இதை செய்யும் போது வசதியாக சாய்ந்து அமர்ந்தவாறு கண்களை மூடிக் கொண்டு அந்தக் காட்சியைக் காணுங்கள். அந்தக் காட்சியின் போது நீங்கள் அடையும் உணர்வுகள், காட்சிக்கேற்ற ஒலிகள், நறுமணம், உங்கள் நகர்வு என எல்லா வகையான உணர்வுகளையும் கற்பனையில் கொண்டு வந்து, அந்தக் காட்சியை உண்மையான காட்சியாக உணருங்கள்.இதையும் அடிக்கடி செய்யுங்கள். இது கொஞ்சம் முட்டாள் தனம் போலத்தோன்றினாலும் இது ஒரு மிகவும் வலிமையான பயிற்சி.மனதின் எண்ணங்களே எம்மை வலுப்படுத்துகின்றன.

மேற்கூறிய பயிற்சி போலவே இதுவும், உங்களுக்குள் நீங்களே தட்டிக் கொடுத்துப் பேசிக் கொள்வது. அல்லது ஒரு கூச்சமான,மற்றும் பதட்டமான மன நிலையை மறுத்து அதற்கு எதிரான வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறுதல். உதாரணமாக,நாளைக் காலையில் பாடசாலைக்குச் செல்லும் போது “இன்றைக்கு நான் யாருக்கும் பயப்படப்போவதில்லை. யார் என்னைப் பார்த்து சிரித்தாலும் கவலைப்படப்போவதில்லை. நான் கற்பதற்காகவே செல்கிறேன். அதனால் பிழை விட்டு படிப்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை” போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள். இப்படிச் சொல்வதன் மூலம் உங்கள் ஆழ்மனதை மாற்றிவிட முடியும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முரண்டுபிடிக்கும் உங்கள் மனத்தையே நீங்கள் ஏமாற்றிவிடலாம். எனவே இந்தப் பயிற்சியை எல்லா சூழலுக்கும் ஏற்ப நீங்கள் பயிற்சி செய்யலாம்.

அசௌகரியமான சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் போது அந்த இடத்தை விட்டு வெளியே போய்விடத் தோன்றும். ஆனால்,போகாதீர்கள். சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள். அப்பொழுது தான் அந்தச் சூழ்நிலைகளை நீங்கள் பழக்கப் படுத்திக் கொள்ள முடியும்.இத்தகைய சூழ்நிலையை உங்கள் ஆராய்ச்சிக்கேற்ற இடமாக மாற்றிவிடுங்கள். உங்களை நீங்கள் நிதானித்து ஆராயுங்கள்.இப்பொழுது எனக்கு இந்த சூழ்நிலை ஏன் அசௌகரியமாக இருக்கிறது? எது என்னை வெளியே போகச் சொல்கிறது? நான் ஏன் வெளியே செல்ல வேண்டும்? என உங்களுக்குள் ஆராய்ந்து கொள்ளுங்கள். இதனால், உங்களை ஆராய்வது மட்டுமன்றி சூழ்நிலை அவதானியாகவும் செயற்படுகிறீர்கள்.

மறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு கற்றலின் போது தவறுகள் ஏற்படுவது இயல்பு. எனவே சுட்டிக் காட்ட பட்ட தவறு தனிப்பட்ட உங்களைத் தாக்குவதற்காக அல்ல. மறுப்புக்கள் வருவது வாழ்க்கையில்/கல்வியில் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு சுயபச்சாத்தாபம்(சுயபரிதாபம்) ஏற்பட்டால் அதனை உடனேயே இனம்கண்டுகொண்டு அதனை நீக்கி விடுங்கள். சுயபரிதாபம் உடையவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

எப்போதும் நாம் எம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு நோக்கக் கூடாது. நாம் இயல்பாக காரணமேயின்றி பிரபலமானவர்களை எம்முடன் ஒப்பிட்டு நோக்குவதுண்டு. ஆனால் நாம் அவர்களைப்போல் இருக்க முடியாது. நமக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனித்தனி அச்சுக்களில் வார்க்கப்பட்ட பொம்மைகளைப் பாருங்கள். ஒரு பொம்மைக்குரிய அச்சில் வேறு அச்சில் வார்க்கப்பட்ட பொம்மையைப் பொருத்த முடியாது. அப்படித்தான் நாமும். எனக்கு உங்க்ளைப்போல் பேசத் தெரியாது, எனக்கு அவனைப்போல் பாட வராது, எனக்கு அவர்களைப்போல் சிரிக்கத் தெரியாது என்றெல்லாம் மற்றவர்களோடு ஒப்பிடுவதை விடுத்து, நான் மற்றவர்களை விட வித்தியாசமானவன். என்னிடம் இருக்கும் பல விடயங்கள் மற்றவர்களிடம் இல்லை. அதனால் நான் தனித்துவமானவன் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த எண்ணம் வலுப்படும் போது நீங்கள் மற்றவர்கள் முன்னிலையில் அடையும் கூச்சமும் பதட்டமும் இல்லாமல் போயிருக்கும்.

இதுவும் மேலே குறிப்பிட்டது போல் தான். உங்களை நீங்களே எதிர்மறையாக முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள். நான் கூச்ச சுபாவமுடையவன், எனக்குப் பயம், நான் பேச மாட்டேன், நான் சிரிக்க மாட்டேன், நான் எழுத மாட்டேன் என்று நீங்களே உங்களைச் சொல்லிக் கொள்வதால் அது ஆழ்மனதில் பதிந்து விடுகிறது.நீங்கள் நீங்கள் தான். ‘உங்களுக்கென்று சில இயல்புகள் உண்டு’ என்ற சிந்தனையோடு நிறுத்திவிடலாம் அல்லவா? மேலதிக சிந்தனை எல்லாம் எதற்கு?

பதட்டம் ஏற்படும் சூழ்நிலைகளில் உங்களுக்குள் மந்திரம் போல மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருங்கள். இப்படிக் கேட்டுக் கொண்டிருப்பது, அந்த சூழ்நிலையில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும்.

நான் சீராக மூச்சு விடுகிறேனா?

நான் இயல்பாக இருக்கிறேனா?

இன்னமும் இயல்பாகச் செயற்படுகிறேனா?

நம்மால் முடியாது அல்லது தோல்வியடைந்து விடுவோம் என நினைக்கும் விடயங்களில் தலையிடுங்கள். இது உங்கள் கூச்சத்தை அல்லது பயத்தை நீங்கள் போக்க உதவும். இந்தக் காரியத்தில் நீங்கள் வெற்றியடையா விட்டாலும், நீங்கள் நினைத்த அளவுக்கு அது ஒன்றும் பூதாகாரமான பிரச்சனை இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஒருவேளை முதலில் உங்கள் ஈகோ இதற்கு இடம் கொடுக்காது. ஆனால் பின்னர் அதை வெகு விரைவிலேயே விளையாட்டாய் எடுத்துக் கொண்டு சந்தோசமாய் இருக்க முடியும்.

எந்த நேரமும் நல்ல இருக்கை நிலையைத் தெரிவு செய்யுங்கள்.பலர் இருக்கும் இடத்தில் நிமிர்ந்து இருத்தல், கைகளை விரித்து வைத்திருத்தல் போன்ற இருக்கை நிலைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். நிற்கும்போதும் வளைந்து நிற்காமல் நிமிர்ந்து நில்லுங்கள். யாருடனாவது பேசும் போது கையில் எதையும் வைத்து நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

கூச்ச சுபாவம் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் இருந்து நீங்கள் வெளியில் வரும்போது பல வெற்றிகளை அடைந்திருப்பீர்கள். நீங்கள் எங்கெல்லாம் வெற்றியடைந்தீர்கள் என்பதைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிகளை மீண்டும் படிக்கும் பொழுது உங்கள் தன்னம்பிக்கை வளர்வது மட்டுமன்றி, உங்களுக்கு பயன் கிடைக்கக் கூடிய விடயங்களை நோக்கி உங்கள் கவனத்தை நகர்த்தும்

ஸ்ஸப்பா… எனக்கே முடியல… இவ்வளவு விசயம் செய்யணுமா…ஆனால் இவ்வளவையும் செய்தால் உங்களைப் போல ஒரு தன்னம்பிக்கையாளனை எங்கும் பார்க்க முடியாது.

“அற்புதம் கொடுங்கள்... அல்லது அதிசயம் கொடுங்கள்”

அவள் ஒரு எட்டு வயதுக் குழந்தை. அவளுக்கு ஒரு சின்னத்தம்பி. தம்பிக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்பது மட்டுமே அவளுக்குப் புரிந்து கொள்ளும் வயது. என்ன நோய்? எப்ப்டிச் சரியாகும் என்பதெல்லாம் புரியமுடியாத பருவம்.

திடீரென்று அவள் குடியிருந்த வீட்டை விட்டு அம்மாவும் அப்பாவும் மிகச் சிறிய வீட்டுக்கு மாறினார்கள். தம்பியின் மருத்துவச் செலவு, மருந்துச் செலவு, உணவுச் செலவு இவற்றைச் சரிகட்ட பெற்றோர் வீடு மாற வேண்டியிருந்தது. அந்தச் சின்னப் பையனைத் தக்க வைக்க ஆயிரம் ஆயிரமாய்க் கரைந்து கொண்டிருந்தது. இந்தக் கஷ்டம் அந்த எட்டு வயதுக் குழந்தைக்குத் தெரிய வேண்டாம் என்று பெற்றோர் நினைத்தனர்.

ஒருநாள் பெற்றோர் தங்களுக்குள் பேசிகொண்டிருந்த போது, “ஏதாவது அதிசயம் அல்லது அற்புதம்தான் இந்தச் சின்னப்பையனைக் காப்பாற்ற வேண்டும்” என்று அழுதனர். அடுத்த விநாடி அந்தச்சிறுமி தன் நெடுநாள் சேமிப்பு உண்டியலைக் கவிழ்த்தாள். ஒரு டாலர் ஏழு செண்ட் வரை சில்லறைக் காசு கிடைத்தது. அவசரமாக அதை அள்ளிக் கொண்டு வீட்டுப் பின் வாசல் வழியாக ஓடினாள். அடுத்த தெருவில் இருந்த மருந்துக் கடைக்குப் போய்ச் சில்லறையை மேசையில் கொட்டி, “அற்புதம் கொடுங்கள்... அல்லது அதிசயம் கொடுங்கள்” என்றாள்.

மருந்துக் கடைக்காரர் புரியாமல் விழித்தார். கடையில் ஏதோ வாங்க வந்திருந்த கணவான் ஒருவர் ஆச்சரியமாய் அந்தச் சிறுமியைக் கவனித்தார். முகம் வாடிப் போனவளைத் தேற்றி விபரம் கேட்டறிந்தார். உலகப்புகழ் பெற்ற நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்ட்லன் ஆர்ம்ஸ்ட்ராங் அவர், தனது காரில் அந்தச் சிறுமியை ஏற்றிக் கொண்டு சிறுமியின் வீட்டுக்கு வந்தார். சிறுமியின் தம்பிக்கு நிகழ்த்த வேண்டிய அறுவைச் சிகிச்சையை உணர்ந்தார். அந்தச் சிறுமியிடம் ஒரு டாலர் ஏழு செண்ட் பெற்றுக் கொண்டு அந்த அறுவைச் சிகிச்சையைத் தமது மருத்துவமனையில் இலவசமாக நடத்தினார்.
அந்தச் சிறுமியின் தம்பி பிழைத்தான்.

இது ஒரு உண்மைச் சம்பவம்!

பிரபலங்கள் வாழ்வில் நடந்தது

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டமாக இருந்த காலம் அது. இந்திய விடுதலை வீரர்களையும், தலைவர்களையும் துல்லியமாக ஆங்கில அரசு வேவு பார்த்துக் கொண்டிருந்தது. பாலகங்காதர திலகர் அப்போது விடுதலைப் போரின் பெருந்தளபதி. 

ஆறு மாத காலமாக அவர் வீட்டில் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் தாம் வேலையில் இருந்து நிற்க விரும்புவதாக சொன்னார். திலகர் “ஏன்?” என்றார்.

“நீங்கள் தரும் சம்பளம் ஆறு ரூபாய்...... அது போதவில்லை” என்றார்.
“அது சரி... சமைப்பதற்கு நான் தரும் சம்பளம் ஆறு ரூபாய்........ ஆனால் என் நடவடிக்கைகளை வேவு பார்க்க உனக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தருவதோ இருபத்து நாலு ரூபாய் ஆக முப்பது ரூபாய் சம்பாதிக்கிறாய். 

அப்படி இருந்துமா உனக்குச் சம்பளம் போதவில்லை!” என்று சொல்லிவிட்டு இடி இடி என்று சிரித்தார் திலகர். உண்மையில் அந்த சமையல் காரர் பிரிட்டிஷ் அரசு அனுப்பிய ஒற்றர். ஆறு மாதத்திற்கு முன்பே இது திலகருக்குத் தெரியும். ஆனால் தெரிந்ததாக திலகர் காட்டிக்கொள்ளவே இல்லை.

பிரிட்டிஷ் அரசு அந்த ஒற்றரை நம்பி ஏமாந்து போனது. அவர் ஒற்றர் என்பதால் திலகர் ஜாக்கிரதையாக இருந்தார்.

மேன் மக்கள் மேன் மக்களே!!!!

Sunday, January 12, 2014

வேலைக்காரியிடம் குழந்தை - அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

பெண்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்துக்கொண்ட காலம் மாறி, இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சாமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் பெண்களும் வேலைக்குச் செல்வது ஒரு தேவையாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

இவ்வாறாக வேலைக்குப்போய் பழகிய பெண்கள், குழந்தை பிறந்து வெகுசில மாதங்களிலேயே தங்கள் குழந்தையை DAY CARE CENTRE அல்லது வேலைக்காரியிடம் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி சில மாதங்களே நிறைவு பெற்ற தன் குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற ஒரு பெண்ணால், அவள் குழந்தைக்கு நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் உங்கள் முன் நிறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். வாருங்கள் பார்ப்போம்.

நடந்தது என்ன ..?

நான் ஹைதராபாத்தில் வேலைபார்த்து வருவது எனது வலைப்பூவை படித்துவரும் பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சம்பவம் நடந்த இடமும் ஹைதராபாத் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னோடு வேலைபார்க்கும் ஒரு பெண் எனது தோழி. அவளது தோழியே அந்த குழந்தையின் தாய்.

அந்த பெண், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். காலை அலுவலகம் செல்லும்முன் குழந்தையை வேலைக்காரியிடம் தங்கள் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் தொலைபேசியில் வேலைக்காரியிடம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வருவதாக சொல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

ஒருநாள் அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், அலுவலகத்தில் இருந்து வெகு சீக்கிரம் கிளம்பி இருக்கிறாள். இந்தமுறை வீட்டிற்கு வரும்முன் வேலைக்காரிக்கு தகவல் சொல்லப்படவில்லை. அதனால் அந்த பெண் வருவதை வேலைக்காரியும் அறிந்திருக்கவில்லை. அவள் வீட்டை அடைந்தாள். வீடு திறக்கப்பட்டது. வேலைகாரி மிகுந்த பயத்துடன் நிதானம் இழந்தவளாய் தெரிகிறாள்.

வீட்டில் வேலைக்காரி மட்டுமே இருக்கிறாள். குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியுற்ற தாய், வேலைக்காரியிடம் குழந்தை எங்கே என்று பதற்றத்துடன் கேட்கிறாள். அவளோ பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருக்கிறாள். அந்த தாயிக்கு பயத்துடன் சேர்ந்து சந்தேகமும் வலுக்கவே, வேலைக்காரியை வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தனது கணவருக்கு தகவல் சொல்கிறாள். கணவனும் வீட்டை அடைகிறார். அவரிடமும் வேலைக்காரி சொல்ல மறுக்கிறாள். காவல் துறைக்கு தகவல் பறக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் வந்து அவளை மிரட்டிக்கேட்டபின் இவ்வாறு சொல்கிறாள். "குழந்தையை தின வாடகைக்காக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டேன். தினமும் குழந்தையின் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற பிறகு பிச்சைக்காக வாடகைக்கு வாக்குவோர் வந்து குழந்தையை எடுத்துச் செல்வார்கள். பிறகு, மாலை அவர்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்முன் குழந்தையை வந்து விட்டுச் செல்வார்கள் என்று கூரியுள்ளாள். மிகுந்த அதிர்சிக்குபிறகு குழந்தை மீட்கப்படுகிறது.

இருபோன்ற போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்ன ..?
1. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சில பெண்களை குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குபோக நிர்பந்திக்கிறது.

2. சில குடும்பங்களில், தங்கள் பொருளாதார நிலையைக் காப்பாற்றிக்கொள்ள கணவன்மார்களே மனைவியை வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை மிக மிக சொற்பமாகவே இருக்கும்.

3. தனியார் துறையில் வேலைபார்க்கும் சில பெண்கள் அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அது வருவது திடீரென நின்றதும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தனது குழந்தையின் சூழ்நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல் உடனடியாக வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.

4. அரசு துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு சில மதங்களே பிரசவ விடுப்பு இருப்பதால், அது முடிந்தபின் வேறு வழியின்றி வேலையை விட மனமில்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள்.

5. இன்றைய கால சூழ்நிலையில், எவ்வளவு அன்பாக கணவன் மனைவி இருந்தாலும், கணவனின் சம்பாத்யத்தில் தனக்கு பொருட்களை வாங்கிக் கொள்வதை ஒரு அடிமைத்தனமாகவோ அல்லது தனது தேவைகளுக்காக எப்போதும் மற்றவரை சார்ந்து வாழும் சூழலிலே உள்ளதாகவோ பல பெண்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தின் விளைவாக அவர்கள் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குச் சென்று தங்களது தேவைகளை யாரையும் சாராமல் பூர்த்தி செய்துகொள்ள முற்படுகிறார்கள்.

6. தனது சொந்தம் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் சில பெண்கள் கைநிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முன், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதை பல பெண்கள் மரியாதை குறைவாக கருதுகிறார்கள். அதன் விளைவாக வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

7. அதீத ஆசை, கணவன் மனைவிக்கிடையேயான பொறாமை குணங்கள் என்பன ஒரு சில காரணியாகவும் விளங்குகின்றன.

பெண்களின் பார்வைக்கு

பெண் - உலகின் மிக உன்னதமான படைப்பு. தாய்மை - ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பட்டம், வெகுமதி, பிறவிப்பலன். ஆனால் இத்தனை அழகான உணர்வுகளையும் வெகுமதியையும் இன்று அனைத்துப் பெண்களும் உணர்கிறார்களா என்றால், பதில் அழிப்பது சற்று கடினம் தான்.

இந்த கட்டுரையில் சொன்ன அனுபவத்தில் எனக்கு சற்றும் புரியாத விடயம் ஒன்று உள்ளது. அந்த குழந்தையை தினமும் வேலைக்காரி பிச்சை எடுக்க அனுப்பி இருக்கிறாள். பிச்சை ஏ.சி அறையில் எடுக்கப்போவதில்லை. அவர்கள் சரியான உணவு கொடுக்கப்போவதில்லை. இப்படியான சூழலில், குழந்தையின் உடல் நிலை கண்டிப்பாக நலிந்திருக்கும், மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதை, பெற்ற தாயால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியாமல் போகும் என்பதை கடும் கோபம் கலந்த கேள்வியாக வைக்கிறேன்.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குப்போகும் பெண்களை எதற்காக இவ்வளவு விரைவில் வேலைக்குப் போகிறீர்கள் என்றுகேட்டால், "என் குழந்தைக்கு வேண்டியைதை வாங்கித்தந்து நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்" என்பதே பெரும்பாலான பெண்களின் பதிலாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு அடிப்படையை மறந்து விடுகிறார்கள். நீங்கள் விலையேதும் கொடுக்காமல் தரும் தாய்ப்பால், உங்கள் உடலின் சூட்டோடு அரவணைத்துக் கொள்ளும் அன்பை விட, ஓடி ஓடி சேர்க்கும் பணம் அவர்களை ஒரு விதத்திலும் உயர்த்தி விடப்போவதில்லை.

ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பாலே குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உன்னத மருந்து என்பதை அறியாமல், குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் அழகை பாதுகாக்க தாய்ப்பால் தரமறுப்பது அபத்தம் (அதற்கு திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுக்காமலே, அழகை பாதுகாத்துக் கொள்ளலாமே !).

இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் சிந்திப்பது, குழந்தையை நாங்கள் மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா .? ஏன் ஆண்கள் பார்த்துக்கொள்ளக் கூடாதா ..? என்ற கோணத்தில். இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால், ஆம் ஆண்களால் முடியாது. விடியவிடிய கண்விழித்து விழுந்து விழுந்து கவனித்து அன்பைக்கொட்டினாலும், ஒரு தகப்பனால் ஒரு தாயின் இடத்தை பூர்த்தி செய்வது அத்தனை எளிதன்று.

பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று போராட்டங்கள் மூலம் பலர் நிரூபிக்க முற்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். ஆனால், சில விடயங்கள் பெண்களால் மட்டுமே செய்யமுடியும். சில விடயங்கள் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். இது இயற்கையின் நியதி. அப்படி செய்வதே அழகு.

ஆகையால் எந்த ஒரு சமாளிக்க இயலாத பிரச்னையாக இருந்தாலும், ஒரு சில வருடங்களாவது உங்கள் அரவணைப்பின் வளர்வதே குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நலம்.

இந்த சம்பவம் தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என நம்புகிறேன்.

Saturday, January 11, 2014

தெரியுமா உங்களுக்கு ??

கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்பார்கள் . சில விஷயங்கள் நமக்கு தெரிந்து இருக்கலாம் . தெரியாத பல விஷயங்கள் உலகில் உள்ளது . கிழே உள்ளவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் ?

மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.

200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.

நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.

மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.

நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.

பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.


அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23

வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்

செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்

சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்

பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்

தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்

பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்

கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்

மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை

பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்

ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை

பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்

தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை

Friday, January 10, 2014

பெண்களின் நட்சத்திர பலன்கள்

ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.

1.அசுவினி: கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை, கடவுள் பக்தி அதிகமிருக்கும்.

2.பரணி: சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.

3.கிருத்திகை: கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.

4.ரோகிணி: செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.

5.மிருகசிரிடம்: சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.

6.திருவாதிரை: குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.

7.புனர்பூசம்: பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.

8.பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.

9 ஆயில்யம்: அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.

10.பூரம்: சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.

11.உத்திரம்: சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.

12.அஸ்தம்: சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.

13.சித்திரை: வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.

14.சுவாதி: ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.

15.விசாகம்: சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.

16.அனுஷம்: தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.

17.கேட்டை: சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.

18.மூலம்: குரோதமானவர்கள். வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.

19.பூராடம்: குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.

20.உத்திராடம்: பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.

21.திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.

22.அவிட்டம்: சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். பெருந் தன்மையானவர்கள். கருணை மிக்கவர்கள். நேர்மையானவர்கள்.

23.சதயம்: பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப் பாக இருப்பவர்கள்.

24.பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.

25.உத்திரட்டாதி: பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.

26.ரேவதி: சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.

27.மகம்: ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். பாசம் மிக்கவர்கள்.

சிரிக்க சிந்திக்க : என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...?

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு(கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

1) உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )

2) சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )

3) ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )

4) அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்...

முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும்,சாதாரண முறையில் முதலில் பரீட்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார். அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் “ ஒரு மணி நேரத்திற்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்“ என்று எழுதியிருந்தது, முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம்.அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையைவிட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவுதான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம்.அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம்,கடைசியாக?அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் நார்ப்பத்திரண்டாவது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது, முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை, தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500X500 அடி பரப்பளவு இருக்கும், அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! " நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் “ என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

Saturday, January 4, 2014

முள்ளு (காமெடி கதை)

ஒரு சின்ன முள்ளால என் வாழ்க்கையே தடம் மாறிப் போச்சு... பாஸ்..! எப்படியா..? அடுத்தவன் உருப்படாம போனதை தெரிஞ்சுக்கறதுல என்ன ஒரு ஆர்வம்..?!

சரி, சொல்றேன்.. அதுக்கு முன்னாடி..

எப்பவாச்சும் கால்ல முள்ளு குத்தியிருக்கா உங்களுக்கு..? குத்தின முள்ளை எடுக்கற சுகம் இருக்கே.. ஹய்ய்ய்யோ.. அதை அனுபவிச்சு பாத்தா தான் தெரியும்!

பெரிய முள்ளு குத்தினா எடுக்கறது ஈஸி.. ஆனா, சின்ன முள்ளு குத்தி, அதை எடுக்கறது இருக்கே.. அதுதான் சேலஞ்ச்.. என்ன சொல்றீங்க..?

சின்ன முள்ளு தானேன்னு நீங்க சாதாரணமா அதை வெளில எடுத்துட முடியாது.. அது தொகுதில செல்வாக்குள்ள சுயேட்சை எம்.எல்.ஏ மாதிரி. காரியம் முடியற வரைக்கும் அதுக்கு குடுக்க வேண்டிய மரியாதைய குடுத்தே ஆகணும்.

முள்ளு குத்தின நேரத்துல அது பெரிசா வலிக்காது. ராத்திரி நேரம் ஆக ஆக, லைட்டா யாரோ கால்ல குண்டூசியால குத்தற மாதிரி இருக்கும். மறுநாள் காலைல 'இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க' நாம நடக்கும்போது தான் சின்ன முள் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்கும்.

மொதல் காரியமா முள்ளு குத்தின பாதத்தை நல்லா கழுவிட்டு, வாகான இடமா பாத்து உக்காந்து கால் மேல காலை மடக்கி போட்டுக்கிட்டு தயார் ஆவோம்.. முள்ளு குத்தினதால வலிக்குமே தவிர, கரெக்ட்டா இங்க தான் முள்ளு குத்தியிருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது.

முள்ளு குத்தின இடத்தோட சுத்து வட்டாரத்து மேல விரலால அமுக்கி, வலிக்குதான்னு பாப்போம்.. அதை செய்யும் போது, ஒரு ராக்கெட்டை தயார் பண்ற விஞ்ஞானி ரேஞ்சுக்கு நம்ம முகத்துல ஒரு சீரியஸ்னஸ் தெரியும்.

ஒரு ரெண்டு நிமிஷ போராட்டத்துக்குப் பிறகு, குத்துமதிப்பா முள்ளு இருக்க இடம் பிடிபடும். முள்ளு மேல சதை மூடியிருக்கும்.. முள்ளு எப்படி அவ்ளோ உள்ளே போச்சுன்னு யோசிக்கறதே ஒரு சந்தோஷ புதிரா இருக்கும்.

ஒரு குண்டூசியையோ, சேஃப்டி பின்னையோ வெச்சு முள்ளு குத்தின இடத்தை சுத்தி மெதுவா குத்துவோம். கால்ல கிணறு வெட்ற மாதிரி முள்ளை சுத்தி தோண்ட ஆரம்பிப்போம். ஒரு சிசேரியன் பண்ற நினைப்போட, முனைப்போட அந்த வேலையை செய்வோம்.

ஒரு கட்டத்துல முள்ளு லேசா தெரிய ஆரம்பிக்கும். ஆஹா.. நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. வெள்ளை பாதத்துல அந்த சின்ன கருப்பு முள்ளு.. குகையின் மறுமுனையில் சிறிது வெளிச்சம்..!

இப்ப குண்டூசிக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, கட்டை விரலுக்கு வேலை குடுப்போம்.

முள்ளை சுத்தி கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தினாலும், சின்ன முள் லேசுல வெளிய வராது. எவ்ளோ அவமானப்படுத்தினாலும் ராஜினாமா பண்ணாத அரசியல்வாதி மாதிரி இடத்தை விட்டு நகராம அங்கேயே கம்முன்னு இருக்கும்.

நாமளும் விடாம தம் கட்டி அமுக்குவோம். ம்ஹூம்.. வராது. அமுக்கினதால ரத்தம் பாய்ஞ்சு முள்ளு ஏரியாவுல பாதம் சிவந்து இருக்கும்.

அந்த நேரம் பாத்து அம்மாவோ, அக்காவோ வந்து "முள்ளா..? நான் எடுக்கறேன்.."-ன்னு பக்கத்துல உக்காந்துக்குவாங்க.. வேண்டாம் வேண்டாம்னு நாம சொல்ல சொல்ல கேக்காம, நம்ம கைல இருக்க குண்டூசிய வாங்கி, ஜாக்கிரதையா குறி பாத்து, கரெக்ட்டா தப்பா முள்ளு மேலயே குத்திடுவாங்க.. "ஐயோ.."-ன்னு கத்திகிட்டே நாம ஒத்த கால்ல பரதநாட்டியம் ஆட ஆரம்பிச்சுடுவோம்.

"சாரி.. சாரி.. முள்ளு மேல பட்டுடுச்சாச்சா"ன்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. "உக்காரு.. ரெண்டே நிமிஷத்துல முள்ளை எடுத்துடறேன்.."

'வள்'ளுனு அவங்களை திட்டி அனுப்பிட்டு, நாம நம்ம அகழ்வாராய்ச்சியை தொடர்வோம். கண்ல தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச முள்ளும் இப்ப நல்லா உள்ளே போயிருக்கும். இப்ப முள்ளு குத்தின இடத்தை தொட்டுப் பாத்தா, அதுக்கு ஜுரம் வந்தா மாதிரி லைட்டா சூடா இருக்கும்.

வெய்யில் காலத்துல ரோட்ல தண்ணி லாரி பக்கத்துல டூவீலர்ல போற நம்ம மேல தண்ணி தெரிக்கும் போது, ஜில்லுனு இதமா இருக்கும் இல்லை.. அதை மாதிரி இந்த முள்ளு குத்தின பாதம் சூடா இதமா இருக்கும்.

மறுபடியும் கட்டை விரலால அழுத்து அழுத்துன்னு அழுத்தி, முள்ளு வெளிய வர வசதியா குண்டூசியால குத்தி வழி பண்ணி.. ஒருவழியா அந்த முள்ளை எடுப்போம். அது ரொம்ப குட்டியா, பொறந்த குழந்தை மாதிரி இருக்கும். அதை விரல்ல வெச்சு கொஞ்ச நேரம் பாத்துட்டு, கை காலை கழுவிட்டு வரும்போது என்னவோ பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரி ஒரு பெருமிதம் நம்ம முகத்துல தெரியும்.

முள்ளு கதைய விடுங்க.. நம்ம மேட்டருக்கு வருவோம்..

நான் ப்ளஸ் டூ படிக்கும்போது எனக்கு டியூஷன் எடுத்தவர் ஜெயராமன் சார். என்னை மாதிரி மக்குப் பசங்களை கூட நல்லா படிக்க வெச்சு பாஸ் பண்ண வெச்சுடுவார். க்ளாஸ்ல என்னை அப்பப்ப பொண்ணுங்க எதிரே அவர் திட்டுவார். இருந்தாலும், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் ஜெயராமன் சார் விந்தி விந்தி நடந்து வந்தார். அதைப் பாத்து காயத்ரி, பூஜா, கவிதா மூணுபேரும் தங்களுக்குள்ள ஏதோ கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருந்தாங்க. எனக்கு கடுப்பாயிடுச்சு.

நேரா ஜெயராமன் சார்கிட்ட போனேன்.

"கால் என்ன சார் ஆச்சு..?"

"ஒரு சின்ன முள்ளு குத்திடுச்சு.. நேத்து அதை எடுத்தப்ப முள்ளு உடைஞ்சு பாதி இன்னும் உள்ளேயே இருக்கு போலருக்குடா.."

"சார்.. அதை வெளிய எடுக்க ஈசியான வழி இருக்கு.. இதோ வர்றேன் சார்..."

எங்க ஸ்கூல் பக்கத்துல நிறைய எருக்கஞ்செடி இருக்கு. அதுலேந்து ஒரு நாலஞ்சு இலைய பறிச்சுகிட்டு வந்தேன். ஜெயராமன் சார் கால்ல, முள்ளு இருந்த இடத்துல இலைலேந்து நாலு சொட்டு பாலை விட்டேன்.

"இன்னும் 5 நிமிஷத்துல முள்ளு தானா வெளில வந்துடும் பாருங்க சார்.." நமக்கு கொஞ்சம் கைவைத்தியமும் தெரியும்ல..!

5 நிமிஷம் ஆச்சு, 10 நிமிஷம் ஆச்சு.. கரெக்ட்டா 12-வது நிமிஷம் வந்துடுச்சு.. முள்ளு இல்லை, ஜெயராமன் சாருக்கு கோவம்..! பின்ன கோவப்படாம என்ன பண்ணுவாரு.. கால்ல பாலை சொட்டினதுல பாதம் சூடாகி, எரிச்சல் அதிகமாயிடுச்சு. சூடு தாங்க முடியாம தண்ணி பக்கெட்ல காலை விட்டுட்டாரு. எனக்கு செம திட்டு.!

கோவமா மாடிப்படி ஏறிட்டிருந்தார். அவர் பின்னாடியே போனேன். "சார்.. காலை காட்டுங்க சார்.. இப்பவே முள்ளை எடுத்துக் காட்டறேன்.."

அரை மனசோட படிக்கட்டுல உக்காந்தார். குண்டூசியை வெச்சு, அவர் பாதத்துல உத்து பாத்து குத்தினேன். கொஞ்ச நேரத்துல முள்ளு கண்ல தென்பட்டது. ஜெயராமன் சார் முகத்துல லேசா ஒரு வெளிச்சம் தெரிஞ்சது.

கவனமா முள்ளுக்கு பக்கத்துல குண்டூசியால குத்தும்போது தானா எனக்கு தும்மல் வந்து தொலைக்கணும்..?! குண்டூசிய குத்திகிட்டே தும்மினதுல... குண்டூசி முழுசா அவர் பாதத்துக்குள்ள போயிடுச்சு பாஸ்..! அவர் கத்திகிட்டே குனிய, நான் நிமிர, ஜெயராமன் சாரோட முன்வரிசை பல்லு ரெண்டு பணால் ஆயிடுச்சு..! அதுல ஒரு பல்லு என் தலைமுடியில போய் ஒளிஞ்சுகிச்சு.

நான் பதட்டப்பட்டு "சாரி சார்.. சாரி சார்"ன்னு சொல்லிகிட்டே அவரை பாக்கறேன்.. பல்லில்லாத ஜெயராமன் சாரை பாத்து சிரிப்பு சிரிப்பா வருது.. அதை அடக்க முடியாம, வாயை பொத்துகிட்டு ரிவர்ஸ்லயே படியிறங்கிட்டேன்.. 'முள்ளால வந்தது பல்லோட போச்சு'ன்னு பெரிய மனசு பண்ணி விட்டுடாம, அவர் என்னை அடிக்க அவசரமா படியிறங்க, கால் வழுக்கி... படிக்கட்டுல உருட்டி விட்ட சூட்கேஸ் மாதிரி தடக் தடக் தடக்கு உக்காந்த வாக்குலயே வழுக்கி கடைசி படிக்கட்டு வரைக்கும் வந்துட்டார்.

பயத்தோட அவர்கிட்ட போய்.. " சார்.. சாரி சார்.. அந்த முள்ளை எடுக்..."

பல்லு போனதால, அவர் என்னை மழலைல திட்ட ஆரம்பிச்சுட்டார்.. ஜெயராமன் சாருக்கு கெட்ட வார்த்தை எல்லாம் கூட தெரியுங்கறது அன்னிக்கு தான் எனக்கு தெரிஞ்சுது.

"சார்.. முள்ளை எடுத்துடறேன் சார்.. உள்ள இருந்தா ஆபத்து.."

"தேய்.. வேண்தாம்தா.. முள்ளு உள்ளயே இருக்கத்தும்.. எனக்கு சுகர் இருக்கு, bp இருக்கு.. அது மாதிரி இதுவும் இருந்துட்டு போகத்தும்.. என் முன்னாதி நிக்காத.. போ.. போதா.!".

ஜெயராமன் சார் ஒரு கைல தன்னோட உடைஞ்ச பல்லை கைல வெச்சிருந்தார்.. இடுப்பை பிடிச்சுகிட்டு பிள்ளைத்தாச்சி மாதிரி நடந்தபடி இன்னொரு பல்லை தேடிகிட்டே போனாரு.

மறுநாள் அவரை பாக்கலாம்னு போனேன்.

அப்பறம் எனக்கென்ன ஆச்சா..?

நான் ப்ளஸ் டூ முடிக்க ஒரு 2 வருஷம் ஆயிடுச்சு பாஸ்..!