Sunday, November 3, 2013

‘டாஸ்மாக்’ ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அதற்காக் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும்.ஆகவே கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். இதற்கிடையில் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள்.இதற்கு காரணம் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகி விடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. காரணம் – ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.அப்பேர்பட்ட இந்த ஐஸ்கிரீம் பலவித சுவைகளில் கிடைக்கிறது. என்றாலும் அமெரிக்காவில் நியூயார்க் நகரை சேர்ந்த நிறுவனமோ டாஸ்மாக் (பீர்) கலந்து புதுமையான ஐஸ்கிரீம் ஒன்றை ஏழு வித்தியாசமான சுவைகளில் அறிமுகம் செய்துள்ளது.

மது, கோகைன் போதை பொருள் போல ஐஸ்கிரீமும் உங்களை அடிமையாக்குகிற ஆபத்து இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில் தயாராகி விறபனையில் சக்கபோடும் இதற்கு புரோசன் பின்ட்ஸ் என பெயர் சூட்டியிருக்கிறார்கள். 454 மில்லி லிட்டர் அளவு கொண்ட பிளாஸ்டிக் குப்பியில் அடைத்து விற்கப்படும். அதில் 3.2 சதவீதம் ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளது. விலை 4.33 டாலர் (சுமார் ரூ.260) ஆகும்.

இதற்கிடையில் இது உருவாகியது எப்படி? என்பது பற்றி தயாரிப்பாளர் அரி புலேஸ்லரிடம் கேட்ட போது, “இந்த எண்ணம் தோன்றியதே ஒரு விபத்து எனலாம். விருந்து நிகழ்ச்சிக்கு நண்பர் ஒருவர் தனது வீட்டில் தயாரித்த ஐஸ்கிரீம் கொண்டு வந்தார். அதை ருசி பார்த்த மற்றொரு நண்பர் இன்னும் சுவையூட்டுகிறேன் என கூறி அருகில் இருந்த பீர் பாட்டிலை திறந்து நிரப்பினார். அது வித்தியாசமான சுவையாக இருந்தது. அதை பின்பற்றியே இதை உருவாக்கினேன்” என்கிறார். எனினும் குறைந்தபட்ச அளவிலேயே ஆல்கஹால் சேர்ந்திருப்பதால் உடனே போதை ஏறிவிடாது என்றும் சொல்கிறார்.

No comments:

Post a Comment