Friday, November 29, 2013

Good Touch & Bad Touch! - குழந்தைகளுக்கு தெரிய வேண்டியவை.


கொஞ்ச மாதங்களுக்கு முன்பு என்பையனின் பள்ளியில் நடந்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி குழந்தைகளுக்கான குட் டச்,பேட் டச் பற்றியதாக இருந்தது

அதிலிருந்து சில துளிகளை உங்களது பார்வைக்கு வைக்கிறேன்

இன்றைய காலகட்டத்தில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இந்த விழிப்புணர்வு ஆலோசனைகளானது மிக மிக அவசியமானது . ஏனெனில் பாலியல் சார்ந்த வன்முறை ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.

1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்..அவர்களின் பள்ளிக்கும் சொல்லுங்கள்.

2.உடல் எனபது தனிப்பட்டவரின் உடமை..அதில் அத்து மீற யாருக்கும் உரிமை இல்லை.தாய்,தந்தையின் உரிமை கூட கூட சில வயது வரைதான்

3.எந்த உறுப்பையும் அதன் பெயர் சொல்லி விளக்க வேண்டும்.

4.உள்ளாடை அணியும் பகுதிகள் யாராலும் தொடப்பட்டக் கூடாது.அங்கு யாரவது கை வைத்தால் உடனே “No “சொல்ல கற்றுக் கொடுக்கவேண்டும்.உடனே உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.

5.நம்பிக்கையான நபர்கள் என்று தாய் அல்லது தந்தை இல்லையெனில் குடும்பத்தில் நெருக்கமான நபர்களை அறிமுகம் செய்துவைத்து அவர்களிடம் உடனே விஷயத்தைக் கூற சொல்லிக் கொடுக்க வேண்டும்.

6.நம்பிக்கையான நபர் குடும்பத்தின் வெளியிலும் ஒருவர் இருக்க வேண்டும்.சில விஷயங்களை குழந்தைகள் குடும்பத்தில் சொல்ல தயக்கப்படும்..அல்லது வெளியில் நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்லலாம்.அவர் பள்ளி ஆசிரியை அல்லது நெருக்கமான நண்பர் என்று இருக்கலாம்..

7.குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் (pedophile ) குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்கமுடியாதபடி செயல்படுவார்கள்.பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள்,அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,வேலை செய்பவர்கள்….எனவே குழந்தைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.

8.முதலில் குழந்தைக்கு பரிசுகள் வாங்கி தன் வசப்படுத்த முயற்சிப்பார்கள்.எனவே குழந்தைக்கு பரிசு வாங்கிக் கொடுபவர்கள் எல்லாம் மிக அனபுடையவர்கள் என்று நாம் போதிக்கக் கூடாது.அது ஆழமாக தவறான புரிதலாக மாறும்.

9.குழந்தையை யாருக்கும் முத்தம் கொடுக்கச் சொல்லியோ,
கட்டி பிடிக்கச் சொல்லியோ வற்புறுத்தக் கூடாது.அது சரி என்று வாதம் செய்யக் கூடாது.மாமா எத்தனை ஆசையா இருக்கார்..போய் முத்தம் கொடு என்று கூறக்கூடாது.

10.அவர்களுக்கு ரகசியத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் ..யாரிடம் சொல்லவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

11.டிரைவர் போன்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.

12.யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து கூறும் இனிமையான சூழல் வீட்டில் இருக்கவேண்டும்.பயம் இருக்க கூடாது.நேருக்கு நேர் பேச..மனதைத் திறந்து பேசும் சூழல் வேண்டும்.

13.தனது உடலில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரியவும்,அப்படி யாரவது செய்தால் எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.

14.அவர்கள் குழந்தைகளை மிரட்டுவார்கள்..அம்மா ,அப்பாவை கொன்றுவிடுவேன்..உன் தவறுகளை சொல்லிவிடுவேன் என்று…யார் மிரட்டினாலும் உண்மைகளை கூற இன்னொரு நம்பிக்கையான நபர் ஒருவர் குடும்பத்தை தவிர தேவை.

15.குழந்தைகள் இதைப் போன்ற விஷயங்களைக் கூறினால் உடனே கோபப்படுவதோ இல்லை அழுவதோ கூடாது.அம்மாவை வருத்தப்படுவார்கள் என்று விஷயங்களை மறைக்க முயற்சி செய்யலாம்.

16.நான் கொடுத்த படத்தில் வெள்ளை பகுதிகள் பாதுகாப்பு பகுதியாகவும்..மஞ்சள் பகுதிகள் அடுத்த வகையுலும் சிவப்பு பகுதிகள் யாராலும் தொடக்கூடாத பகுதிகளாக படத்தை காட்டி விளக்கினால் எளிதாக புரியும்.

17.ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுக்கவேண்டும்.அதே சமயம் மிகச் சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் மறந்து விடுவார்கள்.

18.இந்த வீடியோ உங்கள் பள்ளியுள்ளும்,வீட்டிலும் போட்டு காட்டலாம்.ஷேர் செய்யலாம்.http://www.youtube.com/watch?v=yA_Oe5JWf4k

19.குறிப்பிட்ட இந்த லிங்க்கை படித்து கற்பிக்கலாம் .ஆழ்ந்து படிக்கவும்.

http://www.underwearrule.org/howto_en.asp

http://www.underwearrule.org/source/text_en.pdf

20.குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும்,மற்றோரும் உணர வேண்டும்.அந்த பொறுப்புடன் நடந்து கற்பிக்க வேண்டும்.

ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்

“குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை.

*எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை.

*குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும்.

*தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும்.

*உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். இப்படி எதை வேண்டுமானாலும் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யுடியூப் வலைதளங்களை பயன்படுத்தி போலியாக செயற்கையாக மோசடித்தனமாக கருத்துக்களை பரப்புவது, வீடியோக்களை வெளியிடுவது என்பது ஒரு பிசினசாகவே நடக்கிறது. இப்படி அவதூறுகளை, வதந்திகளை பரப்பியும், ‘லைக்’ மற்றும் எதிரான கருத்துக்களை லட்சக்கணக்கில் வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே சில ஐடி கம்பெனிகள் உள்ளன. இவர்களால் போலியாக லட்சக்கணக்கில் வெறும் ‘லைக்’ போடுவது மட்டுமல்ல, எதிரான கருத்துகளை வெளியிடுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தவும், குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவருக்கு செல்வாக்கை அழிக்கவும் முடியும். இதை ஒரு பிசினசாகவே இந்தியாவில் செய்வது யார் தெரியுமா? ஏதோ தாதாக்கள், மாபியாக்கள் என்று எண்ணி விட வேண்டாம். சில ஐடி கம்பெனிகள் தான். இந்த பெரும் சதி பிசினசை கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் ஏற்கனவே பல மோசடிகள், தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது இது. டெல்லியில் ஆரம்பித்து பெங்களூர் வரை 24 ஐடி கம்பெனிகளை கண்டுபிடித்து அவர்களின் இந்த கேவலமான ‘சதி’ பிசினசை இந்த வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக கோப்ரா போஸ்ட் வெப்சைட்டின் இணை ஆசிரியர் சையது மஸ்ரூர் அசன் என்பவர் தான் இந்த மோசடி ஐடி கம்பெனிகளை அணுகி பேசியுள்ளார்.

‘என் பாஸ் நேதாஜி வரும் சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு அதிக ‘லைக்’ போட வேண்டும். அவர் வெற்றி பெற்றபின் லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும். அதன் பின் அமைச்சராக வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் என்று அனைத்திலும் கருத்துக்களை பரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லா கம்பெனிகளும் நம்பி பேரம் பேசியுள்ளன. இந்த கம்பெனிகளின் பெயர்களுடன் அவர்களுடன் நடத்திய பேரத்தை வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோப்ரா போஸ்ட் வெளியிட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஐடி நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது பற்றி வெப்சைட் வெளியிட்ட தகவல்கள் உண்மை தான் என்பது போல குறிப்பிட்டார். ‘சமீபத்தில் உளவுத்துறை கூட்டத்தில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டேன். எனது கவலை இப்போது நிரூபணமாகி விட்டது. இன்னும் தகவல்கள் முழுமையாக வரட்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ரு தெரிவித்தார்.

அதில் சில கம்பெனிகள் மற்றும் அவர்கள் நடத்திய பேரம் பற்றிய வீடியோ லிங்க் இதோ::

https://www.youtube.com/watch?v=_GfFB9-u2Uk

குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

“நமது நாட்டில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் தற்போது அதிகரித்து வருகிறது. பாலியல் பலாத்காரம் என்பது ஒரு குழந்தையை சொற்களாலோ, பார்வையாலோ, உடலில் தொட்டோ, பாலியல் செயல்களில் ஈடுபட்டோ கேடு விளைவிப்பதாகும். தமிழகத்தில் 3ல் 1 பெண் குழந்தைகளும், 5ல் ஒரு ஆண் குழந்தையும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற செயல்கள் வீடுகளிலும், பள்ளிக் கூடங்களிலும் அதிகமாக நடக்கிறது. பெற்றோர்கள் இதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.”என பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரேணுகா தெரிவித்தார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான பத்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் மீதான வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் இம் மையத்தின் இயக்குநர் ரேணுகா பேசும் போது,”பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவீத குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

இந்த கணக்கெடுப்பு வெளியானதும் குறிப்பிட்ட ஒரு குடிசைவாழ் பகுதியில் உள்ள பத்து வயதுக்குள்பட்ட 25 குழந்தைகளை வரவழைத்தோம். அவர்களுக்கு நல்ல தொடுதல் என்றால் என்ன, கெட்ட தொடுதல் என்றால் என்ன என்று விளக்கினோம். பின்பு அவர்களை தனியாக அழைத்து பேசியதில் 25-ல் 19 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து குடிசைப்பகுதிகளில் உள்ள தாய்மார்கள், குழந்தைகள், பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதுகுறித்து தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். ஒவ்வொரு தரப்பினரையும் சந்திக்கும்போது பல்வேறு வகையான வன்கொடுமைகள் குறித்து தெரிய வருகிறது.

குறிப்பாக கணவனை இழந்த பெண்களின் குழந்தைகளுக்கு அதிக பாலியல் வன்கொடுமை ஏற்படுவது தெரியவந்தது. மற்ற இடங்களை விட நகரங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகமாக உள்ளது.

குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தல் செய்ய விழைந்தால் அவர்களை 7 முறை தொடர்ந்து சத்தமிட கற்றுக்கொடுக்கிறோம். முதல் இரண்டு முறை குழந்தை சத்தமிடும்போது ஏதோ சத்திமிடுகிறது என்று அண்டை வீட்டில் உள்ளவர்கள் நினைப்பார்கள்.

மூன்றாம் முறை ஏதோ பிரச்னை என்று சுதாரிப்பார்கள். நான்காம் முறை அங்கு ஏதோ அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்பதை அருகில் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். ஐந்தாம் முறை சத்தமிடும்போது குழந்தைகளை துன்புறுத்துபவனும் குழந்தையை விட்டு விலக முயற்சிப்பான். ஆறாம் முறை சத்திமிடும்போது அருகில் இருப்பவர்கள் தங்கள் இடத்தைவிட்டு குழந்தை இருக்கும் இடத்தை நோக்கி நகர்வார்கள்.

ஏழாம் முறை குழந்தை சத்தமிடும்போது அவர்கள் குழந்தையிடம் சென்றுவிடுவார்கள் என்ற கருத்தில் இவ்வாறு கற்றுக்கொடுத்து வருகிறோம்” என்றார் அவர்.

Tuesday, November 26, 2013

முதலிடம் பெற்ற தஞ்சை கோவில் (கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டி)



உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.

கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது. விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம். இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் மேலும் பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என கொஞ்சம் பார்க்கலாம்.

1. விக்சனரி:

நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ் சொற்களுக்கே சரியான பொருள் தெரியாத நிலையில் உள்ளோம். நம்மை போன்றவர்களுக்கு பயன்படும் நோக்கில் ஆரம்பிக்கப்பட் சேவை தான் இந்த விக்சனரி. விக்கி + டிக்சனரி என்பதன் சுருக்கமே விக்சனரி.

இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு பொருள் அறிய விரும்பும் பெயரை டைப் செய்து என்டர் கொடுத்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் மற்றும் அந்த வார்த்தையை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்கள் இதில் கிடைக்கிறது.
இந்த தளத்திற்கு செல்ல –http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

2. விக்கியினங்கள்

விலங்கினம், தாவரஇனம், பூஞ்சையினம், பாக்டீரியங்கள், ஆர்க்கீயா, புரோடிஸ்டா போன்றவைகளை பற்றி விரிவாகவும் அழகு தமிழிலும் அறிய ஏற்ப்படுதப்பட்ட சேவை இந்த விக்கியினங்கள் என்ற சேவை. மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இப்பொழுது தமிழில் கட்டுரைகள் காணப்படவில்லை கூடிய விரைவில் பகிரப்படும்.

ஆனால் உயிரினங்களை பற்றி ஆங்கிலத்தில் 3 லட்சம் கட்டுரைகள் உள்ளன.இந்த தளத்திற்கு செல்ல -http://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


nov 27 wikipedia.

3. விக்கி நூல்கள்

விக்கிபீடியாவில் உள்ள மற்றொரு பயனுள்ள சேவை விக்கி நூல்கள். தமிழ் நூல்கள் குறைந்த அளவே உள்ளன. இருந்தாலும் வாசகர்களிடமும், ஆஸ்ரியர்களிடமும், மாணவர்களிடமும் நூல்களை பதிவேற்ற உதவி கோருகிறது விக்கிபீடியா. அனைவரும் கைகொடுத்தால் எண்ணற்ற தமிழ் நூல்களை இங்கு காண முடியும். அனைவரும் உதவினால் தமிழ் நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.

தேவை என்றால் புத்தகங்களை PDF கோப்பில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல –http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

4. விக்கிமேற்கோள் (Quotes)

அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரபல நபர்கள் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றதை சுருக்கமாக கூறுவது தான் மேற்கோள்கள். இந்த மேற்கோள்களை அழகு தமிழில் வழங்கியவர் பெயருடன் அளிப்பது தான் விக்கிமேற்கோள் சேவை.இதற்கான தளத்திற்கு செல்ல :http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இதற்கிடையில்தான் “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டி ஒன்றையும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில், கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கு ஆயுள் தண்டனை : ஆருஷி கொலை

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008ம் ஆண்டு பல டாக்டர் தம்பதியான டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான பதினான்கு வயது ஆருஷி வீட்டில் அவரது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மறுநாள் ஹேமராஜ் பிணமும் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தியா தலைநகரில் நடந்த இந்த இரட்டைக் கொலை வழக்கில் முதல் கட்ட விசாரணையில் துப்பு கிடைக்காமல் தொய்வு ஏற்பட்ட நிலையில் வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்து விசாரித்து வந்தது. அதில் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி அருண்குமார் உட்பட 14 சாட்சிகளை விசாரிக்க ராஜேஸ் மற்றும் நுபுர் தல்வார் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடந்த சி.பி.ஐ விசாரணையில் ஆருஷியையும் ஹேம்ராஜையும் கொன்றது,பல் மருத்துவர்களான ஆருஷியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர்தான் என்று முடிவுக்கு வந்து அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

2012-ம் ஆண்டு மே மாதம், ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் சதித்திட்டம் தீட்டி இந்த கொலைகளை செய்து அதன் சாட்சியங்களை அழித்துள்ளனர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.மேலும் 2013 ஏப்ரல் மாதம், ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் இருவரும் படுக்கை அறையில் தகாத முறையில் காணப்பட்டதையடுத்து அவர்கள் இருவரையும் தல்வார் ஜோடி கொன்றனர் என்று சி.பி.ஐ. உறுதிபடக் கூறியது.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், ஆருஷியின் பெற்றோர் தான் குற்றவாளிகள் என்று காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி நேற்று அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி தண்டனை குறித்து அறிவிப்பது தொடர்பான வாதம் இன்று காலை நடைபெற்றது. அப்போது கொடூரமாக இரண்டு கொலைகளைச் செய்த ஆருஷியின் பெற்றோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஆருஷியின் பெற்றோர் மேல் முறையீடு செய்ய உள்ளனராம்.

நடிகை ஏஞ்சலீனா ஜோலி காதலனுக்கு பரிசளிக்கும் 120 கோடி!!

காதலனுக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி 120 கோடி மதிப்புள்ள தீவு ஒன்றை பரிசளிக்கிறார். பிரபல ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (38). ஆஸ்கார் விருது பெற்றவர். இவரது காதலன் நடிகர் பிராட் பிட். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர். 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பிராட் பிட் தனது 50வது பிறந்த நாளை வருகிற டிசம்பர் 18ம் திகதி கொண்டாட உள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு தனது காதல் பரிசாக ஏஞ்சலினா ஜோலி இருதய வடிவிலான ஒரு சிறிய தீவை பரிசளிக்க உள்ளார். அது

அமெரிக்காவின் பெட்ரா போஸ்ட்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு பிராட் பிட்டுக்கு மிகவும் பிடித்தமான கட்டிட கலை நிபுணர் பிராங்க் லியோட் ரைட் வடிவமைத்த 2 பிரமாண்ட பங்களாக்களையும் கட்டியுள்ளார்.

இவற்றின் மதிப்பு 120 கோடியாகும். பெட்ரா போஸ்ட்ஸ் பகுதிக்கு மேன்ஹட்டன் நகரில் இருந்து 15 நிமிடத்தில் செல்ல முடியும். இப்பகுதி இயற்கை எழில் நிறைந்தது.

என்னிடம் வேலை கேட்டு வரவில்லை : சுருதிஹாசன்!!

நடிகை சுருதிஹாசனை வீடு புகுந்து தாக்கியவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவன் பெயர் அசோக் சந்தர் திருமுக்கே (45). போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக இருக்கிறான். அசோக் சந்தர் மீது தாக்குதல், மானபங்கம், அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சுருதிஹாசனை தாக்குவதற்கு அவர் வீட்டிற்கு போகவில்லை என்று அசோக் சந்தர் கூறியுள்ளான். இதுகுறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுருதிஹாசனுக்கு உதவியாளர் தேவை என்று கேள்விப்பட்டேன். எனது தம்பி வேலையின்றி இருக்கிறான். இதனால் அந்த வேலையை அவனுக்கு வாங்கி கொடுக்க முயற்சி செய்தேன். இதற்காகவே சுருதிஹாசனை நேரில் சந்திக்க சென்றேன்.

படப்பிடிப்பு நடந்த இடங்களில் அவரிடம் பேச முயன்றேன். முடியவில்லை. எனவே, அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பற்றி தெரிந்து கொண்டு அங்கு போய் சந்திக்க முயன்றேன். சுருதிஹாசனை நான் தாக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அசோக் சந்தர், சகோதரி ஷாலினியும் வேலை கேட்டு போனதாகவே கூறியுள்ளார். இதை சுருதிஹாசன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..

என் வீட்டில் அத்து மீறி நுழைந்தவர் வேலை கேட்டு வந்ததாக சொல்வது பொய். அந்த நபர் பல இடங்களில் என்னை பார்த்துள்ளார். படப்பிடிப்பு நடந்த இடங்களிளெல்லாம் இருந்து இருக்கிறார். அப்போது வேலை கேட்டு என்னை அணுகவே இல்லை. என் உதவியாளர்களிடமும் அதுகுறித்து அவர் பேசவில்லை. அவர் வேலை கேட்டு அணுகி இருந்தால் முடிந்ததை செய்து இருப்பேன்.

நான் ஒரு பெண். மும்பையில் தனியாக வசிக்கிறேன். எனது வீட்டில் கதவை திறந்து உள்ளே ஒருவன் நுழைய முயன்றதை பெரிய குற்றமாகவே கருதுகிறேன். மும்பை போலீசார் இப்பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று சுருதிஹாசன் கூறியுள்ளார்.

நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை.சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி,விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் 

நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண்நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி,இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர்திட்டம், என்ன கணக்கு



இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பிதூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே.இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில்கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம்வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு.அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்குவசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள்உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கிஉபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா.கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண்சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம்ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கைவழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம்படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்குஎவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன,பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்குஎத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய்,நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள்இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள்பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி.இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன்பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.
சிறந்த சிவபக்தன் மன்னன் ராஜா ராஜா சோழன்

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா.வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை.இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்றுவடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு,கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ்.காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமானகலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம்.இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாகஇருக்கிறது.


திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிறநார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர்.எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெருவண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும்,யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறுகூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான,சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம்வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக்கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட,வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டுயானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள்,மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில்அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது,கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய்இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும்.ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய்குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்றுசொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம்.கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமேகிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம்போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று.சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனைமனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம்,மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும்,மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டானகைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்டபோரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள்போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள்போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே,எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும்ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்கவிதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை,அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக்கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்லஎக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்ககாய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல்செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது.கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண்உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்கவேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒருகலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்றவாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்தஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள்இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு.மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர்உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன.துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய்,குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச்சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள்சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டைசெய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடிஇருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில்விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்குஅபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவாபேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடுஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய்வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்குஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்றுபல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன்இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம்குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள்பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்குயார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரியதொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில்வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள்கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும்இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்குஇல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரியவருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள்,பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும்அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடுமாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம்கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம்கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை.உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத்தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியதுஎது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்றதிருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ளசுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார்,பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயரபதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடிகுழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராணகாட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். 

கோபுரங்கள்சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும்நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான்சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒருசிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம்சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெருஉடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். 

கைலாயம்போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார்பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயாகடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழுஅடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்புவாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்புசுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம்என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்றுகை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலானஅடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவேபிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்

1000 ஆண்டை முன்னிட்டு மத்திய அரசு தமிழகத்திற்க்கு பெருமை சேர்க்கும்வகையில் தஞ்சை கோயில் ராஜா ராஜா சோழன் பொறித்த 1000 ரூபாய்காயின் வெளியிட்டது குறிப்பிடத்தகக்து ஆகும்.....

Sunday, November 24, 2013

மாமியார் குறுக்கீடு – ஐஸ்வர்யா ராய் தனிகுடித்தனம்!

கடந்த சில ஆண்டுகளாக மாமியார் ஜெயா பச்சனின் குறுக்கீடு அதிகரித்துள்ளதால் தனிக் குடித்தனம் செல்ல முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஜெயாவுபச்சனுக்கு ஐஸ்வர்யாவை அபிஷேக் திருமணம் செய்ததே பிடிக்கவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.

உலக அசாகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யாராய்.பிக்பாஸ் அமிதாப்பின் வாரிசான அபிஷேக் பச்சனை கடந்த 2007 -ல் மணமுடித்த பிறகு அவருடன் மும்பையில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார் இந்நிலையில் கொஞ்ச காலமாக ஐஸ்வர்யாவின் ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார் ஜெயா பச்சன் தலையிடுவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் பிக் பாஸ் மாமனார் அமிதாப்பச்சன் தன் வேலை உண்டு, பேத்தி உண்டு என்று எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர் மீது ஐஸ்வர்யாவுக்கு வருத்தம் எதுவும் இல்லையாம். இதறகிடையில் விழா ஒன்றுக்கு மாமியார் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மீடியாக்காரர்கள் ஐஸ்வர்யாவை படம் பிடிக்க போட்டி போட்டனர். அப்போது வேகமாக சென்ற ஐஸ்வர்யாவை போஸ் கொடுக்க சொல்வதற்காக, ‘ஐஸ்வர்யா… ஐஸ்வர்யா.. என்று மீடியாக்காரர்கள் குரல் கொடுத்தனர். இதை கேட்டு ஜெயா பச்சன் டென்ஷன் ஆகி ‘ஐஸ்வர்யா என்ன உங்க கிளாஸ்மேட்டா என்று மீடியா நபர்களை கடிந்துகொண்டார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லையாம்.

மேலும் புதுப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோதும் அதை ஏற்காமல் தவிர்த்து வருகிறார் ஐஸ். இதற்கும் மாமியார் தலையீடுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கணவருடன் சீக்கிரமே ஐஸ்வர்யா தனிகுடித்தனம் செல்வார் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் கட்டுப்பாடுடன் குடும்பத்தை நடத்த விரும்பும் ஜெயாவுக்கு ஐஸ்வர்யாவை அபிஷேக் திருமணம் செய்ததே பிடிக்கவில்லை என்பது

நினைவு கூறத்தக்கது.

கஞ்சா! – ஒரு அலசல்


நாம் கஞ்சா என்று அழைக்கும் போதை மருந்து ஒவ்வொரு நாtட்டிலும், பகுதியிலும் விதவித பெயர்களில் அழைக்கபடுகிறது .Marijuana,herb,weed போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது .அது உலக அளவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து.ஆனால் அதன் இறப்பு விகிதம் பற்றி யாருக்காவது தெரியுமா ? ஆச்சர்யமூட்டும் உண்மை கஞ்சாவால் யாரும் இறந்ததே இல்லை..

ஆனால் கஞ்சா உலக அளவில் ஏன் தடை செய்யப்பட்டது ?

இந்தியாவில் ஹிமாலய யோகிகள் நூறு வருடங்கள் மேல் வாழ்ந்தவர்களுக்கு கேன்சர் வந்தது இல்லை..அதில் பெரும்பாலானவர்கள் கஞ்சாவை உபயோகித்து சிவலோகத்தை தரிசித்தவர்கள்..இன்றும் உபயோகிப்பவர்கள் உள்ளனர்.

அப்புறம் ஏன் இது தடை செய்யப்பட்ட போதை மருந்தாக ஆனது?

பத்தொன்பாவது நூற்றாண்டில் இது அமெரிக்காவில் கஞ்சா விளைச்சல் அடிப்படையில் அமைந்த பொருளாதாரம் ஏற்றம் பெற்றிருந்த காலம்..கயிறு,பைகள்,உடைகள் ,பேப்பர் என்று பொருளாதார கட்டமைப்பே அதன் மூலம் கட்டப்பட்டு இருந்தது.

ஆனால் அமெரிக்காவில் counter culture movement 1970 களில் நடந்தது.இந்த இயக்கம் நடந்து கொண்டிருந்தபொழுது கலாச்சார புரட்சியாக ஹிப்பி சமூகம் உருவாகியது.இவர்கள் கஞ்சாவை அதிக அளவில் உட்கொண்டு ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த துணிந்தது.அங்கு நேரடி பொருளாதராம்(materialistic) வாழ்வை மேற்கொண்டிருந்த பலர் சிந்தனையலில் (ideology ) அடிப்படையில் வாழ்க்கை முறையை மாற்றி கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் இந்திய யோகிகள்,சாமியார்கள் புகழ் அமெரிக்காவில் வேகமாக பரவியது.

அதே சமயத்தில் அமெரிக்கா வியட்நாமுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டு இருந்தது.ஆனால் இந்த ஹிப்பி இயக்கங்கள் போரை வெறுத்து அன்பின் அடிப்படையில் வாழ முனைந்ததால் போரை வலுவாக எதிர்த்தனர்.அப்போது உள்நாட்டில் அமைதியும் ,போருக்கு ஆதரவையும் திரட்ட ஹிப்பி இயக்கத்தை முடக்க அல்லது வலுவிழக்க முடிவு செய்தார்கள்.அதே சமயத்தில் போதை மருந்து ஹிப்பிகள் நடுவில் அதிக அளவில் புழங்கியது.அதனால் போதை மருந்தை முழுக்க தடை செய்ய முடிவு செய்தார்கள்.இதான் கஞ்சா தடை செய்யப்பட காரணம்.

ஆனால் அதற்க்கு அமெரிக்கா அளித்த காரணம்

1.கஞ்சா என்பது (stepping drug ) முதல் படி போதை ..இதை உபயோகித்தவர்கள் அடுத்தபடியாக ஹெரோயின்,கோகைன் போன்றவைகளை உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.ஆனால் ஆல்கஹால் ,புகையிலை உபயோகிப்பவர்களும் அடுத்தபடி போதை மருந்துகளை தேடுகிறார்கள்.அதுவும் நிஜம்.

2.கஞ்சாவை தடை செய்ய ஊடகங்களை பெரிய அளவில் உபயோகித்தனர். அப்போது ஒரு ஆராய்ச்சி செய்தனர்..குரங்குகள் தினமும் கஞ்சாவை புகைக்க வைத்து நடத்திய ஆராய்ச்சியில் நிறைய குரங்குகள் இறந்து போயின..அதை ஊடகங்கள் மூலம் பரப்பி மக்களுக்கு ஒரு பீதியை உருவாக்கியது அரசாங்கம்…ஆனால் உண்மை என்னவென்றால் கஞ்சாவை அதிக அளவில் வாரத்தில் ஒரே நாளில் புகைக்க வைத்து மூச்சு திணறி நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு குரங்குகள் இறந்து போயின..தினமும் புகைக்க வைக்க படவில்லை..அந்த உண்மைகள் வெளியில் வராமல் அரசாங்கத்தால் பாதுகாக்க பட்டது.

3. மருத்துவத்தில் அதற்கு என்று எந்த உபயோகமும் கண்டுபிடிக்கவில்லை..அதே சமயத்தில் ஆல்கஹால் .புகையிலைக்கும் எந்த உபயோகமும் இல்லை.

ஆனால் சில கனடா ஆராய்ச்சியாளர்கள் கஞ்சா கேன்சர் செல்களை அழிக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

Federal Drug Enforcement Agency (FDEA) அமைப்பு அமெரிக்காவில் கஞ்சாவை தடை செய்ததாக அறிவித்தது.அந்த ஆராய்ச்சிகள் அடிப்படையில் உலகம் முழுவதும் கஞ்சா தடை செய்யப்பட்ட போதை மருந்தாக அறிவிக்கப்பட்டது.இந்தியாவில் எத்தனையோ நூற்றாண்டுகளாக உபயோகத்தில் இருந்து வந்தாலும் இந்த தடை அமலுக்கு வந்தது.

1930 to 1933 அமெரிக்காவில் ஆல்கஹால் தடை செய்யப்பட்டபோது மிகப்பெரிய ப்ளாக் மார்க்கட் உருவாகி ஆல்கபோன் போன்ற புகழடைந்த,துணிவுடன் செயல்படும் மாபியாக்கள் தோன்றியது.அதனால் அரசாங்கம் திரும்ப ஆல்கஹாலை புழக்கத்துக்கு கொண்டு வந்து ப்ளாக் மார்க்கட் கொட்டங்களை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்தது.

ஒரு அரசாங்கத்தால் ஒன்றுக்கும் ஆபத்து இல்லாத கஞ்சாவையே தடை செய்த பொழுது..வருடத்திற்கு இருவது லக்ஷம் பெயர்களை காவு கொள்ளும் புகையிலையை ஏன் தடை செய்ய முனையவில்லை .

Friday, November 22, 2013

என்ன தப்பு? கேட்கிறார் ஹன்சிகா

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுடன் அவரது முன்னாள் காதலியான நயன்தாரா இணைந்து நடிக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட
உறுதியாகிவிட்ட நிலையில் சிம்பு – ஹன்சிகா பிரிவினைப் பற்றி வதந்திகள் ரேகைக் கட்டி பறந்தன். 

இந்நிலையில் இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் , தனக்கும் சிம்புவுக்கும் இப்போதும் கூட இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும் இதிலொன்றும் தப்பேயில்லை.என்றுஹன்சிகா சொன்னதாகவும் செய்திகள் கசிகின்றன. தற்போது இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் , தனக்கும் சிம்புவுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும், ஒரு படத்திற்குத் தேவையான கதாநாயகியாக யார் பொருத்தமுள்ளவராக இருப்பார் என்று தேர்ந்தெடுப்பது இயக்குனரின் விருப்பமென்றும், இதனால் தங்களுக்குள் பிரிவு ஏற்படாது என்றும் கூறியிருப்பதாகச் செய்திகள் கசிந்து வருகின்றன.

அத்துடன் இது குறித்து ஹன்சிகா ,”யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க வந்தபிறகு சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட வேண்டும். பிடிக்காதவர்களாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கேற்ப பிடித்தது போல் நடிக்க வேண்டும். தொழிலை மதிப்பவர்கள் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். அதிலொன்றும் தப்பேயில்லை.அதனால் நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பதை ஒரு நடிகையாய் நான் வரவேற்கிறேன். இதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும இல்லை. என்கிறாராம்.

விமர்சனத்திற்குரிய விருது(கள்)


பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு, பணம் எதுவும் கிடையாது. பட்டம் மாதிரி இவற்றை பெயரோடு சேர்த்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான விழா நடத்தி அரசு இவ்விருதை வழங்குகிறது. இந்திய அரசின் அங்கீகாரம் என்பதால் அதனை அடைய ஒவ்வொருவரும் அரும்பாடுபடுகிறார்கள். யார் யாரையோ பிடித்து பரிந்துரை செய்ய வைக்கிறார்கள். செல்வாக்கு பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்கள். மாநில அரசுகளும் சிபாரிசு செய்வதுண்டு. இறுதி முடிவை மத்திய அரசின் உள்துறை எடுக்கிறது.

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை சிவிலியன் விருதுகள். அரசியல் சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

2013ஆம் ஆண்டில் 1,300 பேர், பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். அதில் 108 பேர் விருது பெற்றார்கள். யாரெல்லாம் யார்யாரால் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்கள் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சினிமா பின்னணி பாடகியும் பாரத் ரத்னா விருதுபெற்றவருமான லதா மங்கேஷ்கர், தன் சகோதரி உஷா மங்கேஷ்கர், பாடகர் சுரேஷ் வடேகர், கலை ஆர்வலர் ராஜ்மல் பரேக் ஆகிய மூவருக்கும் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், அவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை. சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி அமர் சிங், நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயபிரதாவின் பெயரைப் பரிந்துரைத்தார். பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள சரோட் வாத்தியக் கலைஞர் அம்ஜத் அலிகான், தன் இரு மகன்களோடு மேலும் நான்கு பேருக்கு விருது கொடுக்க பரிந்துரை செய்தார். மோதிலால் வோரா என்ற காங்கிரஸ் தலைவர் இருபத்தைந்து பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். பல மத்திய அமைச்சர்கள், பலருக்குப் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்கிறவர்கள் சொல்லும் ஒரே காரணம், நாங்கள் மக்கள் தொண்டர்கள். தகுதி வாய்ந்தவர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம். எங்கள் சேவையில் அது ஓர் அம்சம். எனவே குறை சொல்ல முடியாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.

ஆள்பிடித்து விருது வாங்கிக் கொண்டு பெரிய விழா நடத்திக் கொள்கிற கூட்டத்தில் சேராமல், அதனை நிராகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள். சினிமா பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பத்மவிபூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார். தனக்கு வெகு தாமதமாக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பாரத் ரத்னா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார். அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்த்து வைத்துவிட்டது. விருது அறிவிப்பதோடு அரசு வேலை முடிந்துவிட்டது.

2,577 பேர் இதுவரை பத்ம விருதுகள் பெற்றிருக்கிறார்கள். 1957-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ பெற்ற முதல் தமிழர், எஸ்.ஆர். ரங்கநாதன் என்று அறியப்பட்ட சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன். நூலகத்தில் இடம்பெறும் புத்தகங்களை வகைப்படுத்த, “கோலன்’ என்னும் குறியீட்டு முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான். அம்முறை உலகளாவிய முறையில் இன்றும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு பத்மஸ்ரீ பெற்றவர்களில் ஒருவர் – ஜப்பானியரான கரோஷிமா. இவர் தமிழ்த் தொல்லியல், இலக்கிய ஆய்வாளர்.

இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னா, 1954ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் தொடங்கப்பட்டது. பணம் கிடையாது. அரச இலை வடிவிலான மெடல். அதன் ஒரு பக்கத்தில் “பாரத் ரத்னா’ என்பது தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது; மறுபுறம் மூன்று முகசிங்கம். முதன்முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர்கள் சர்.சி.வி. ராமன், ராஜாஜி, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். இரண்டாவது ஆண்டில் விருது பெற்றவர் பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு.

உயிரோடு இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் பாரத ரத்னா என்று முதலில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் மரணமுற்ற மகத்தான மனிதர்களுக்கும் பாரத் ரத்னா கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மரணமென்றால் எங்கிருந்து தொடங்குவது என்ற சிக்கல் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை ஓர் எல்லையாக வைத்துக்கொண்டு வல்லபபாய் படேல், அம்பேத்கர், விநோபா பாவே, காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி உள்பட பலருக்கு பாரத ரத்னா கொடுத்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸூக்கு 1992-ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பிந்தைய பாரத ரத்னா கொடுத்தார்கள். அவர் மரணம் உறுதி செய்யப்படவில்லை, எனவே மரணமுற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பது முறையல்ல என்று வழக்குத் தொடரப்பட்டது. எனவே அரசு அவ்விருதை திருப்பிப் பெற்றுக் கொண்டது.

பாரத ரத்னா விருது எந்தத் துறையினருக்கும் கொடுக்கலாம் என்று இருந்தாலும் அதில் விளையாட்டுத்துறை சேர்க்கப்படவில்லை. இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட்டுதான். அது கேளிக்கையின் உச்சமாகிவிட்டது. நாள் முழுவதும் ஆடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அதனைக் காட்டுகிறார்கள். கிரிக்கெட்டில் புகழ் மிக்கவராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். விதிமுறையில்லையென்றால் புது விதி உண்டாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன் வைத்தார்கள். மத்தியில் ஆளும் கட்சி ஏதோ காரணத்திற்காக அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து விட்டது. உடனே ஊடகங்களில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வர ஆரம்பித்துவிட்டன. எதிர்ப்பவர்கள் ஹாக்கி வீரர் ஒருவருக்குதான் தந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்கள் வாதத்தில் தவறில்லை. ஹாக்கிதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு. அது ஒலிம்பிக்கில் ஆடப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஆடி நாம் தங்க மெடல் பெற்றிருக்கிறோம். கிரிக்கெட் ஒலிம்பிக்கில் கிடையாது.
நான்காயிரம் ஆண்டுகளாக செஸ் எனப்படும் சதுரங்கம் இந்தியாவில் ஆடப்பட்டு வருகிறது. அது இந்தியாவில் பிறந்தது. இன்று உலகம் முழுவதும் ஆடப்பட்டு வருகிறது. அறிவாளிகள் ஆட்டமாக அது அங்கீகாரம் பெற்றிருக்கிறது. செஸ் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஓர் இந்தியர். அவருக்குத்தான் முதன்முதலாக பாரத் ரத்னா தரவேண்டும் என்று சிலர் பேசவும் எழுத ஆரம்பித்தார்கள்.

உயர்ந்த விருது என்றால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்றும், தனக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பலர் விரும்புகிறார்கள். அதில் அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சமூக சேவகர்கள், நடிகை நடிகர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் போன்ற பலரும் இருக்கிறார்கள்.

அவர்களில் தகுதியானவர்களும் தகுதியற்றவர்களும் கலந்தே இருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு ஆண்டுதோறும் பெரும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த பிரச்னை முற்றியதால் 2008ஆம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது கொடுப்பதை அரசு நிறுத்தி வைத்தது.

உலகம் முழுவதிலும் உயர்ந்த விருதுகள் கொடுக்கப்பட்டபோதெல்லாம், இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்றும் இவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதுபோது, மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படாதது பற்றி பேசப்பட்டது. சிலருக்கு விருதுகள் அறிவிக்கும்போது எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதற்கு உதாரணம், இவ்வாண்டு விஞ்ஞானி சி.எஸ்.ஆர்.ராவுக்கு அறிவிக்கப்பட்டது. அதுவே பரிசு, விருது என்பவற்றை அர்த்தம் பெற வைக்கிறது.

இந்தியாவில் இதுவரையில் நாற்பத்து மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் உயிரோடு இருந்து விருது பெற்றவர்களும், மரணத்திற்குப் பிறகு விருது அறிவிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். 

Thursday, November 21, 2013

எகிறும் சைபர் கிரைம்! - பகீர்

“ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளது.”என்று இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் லேரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்..

இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இணையதள குற்றங்கள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு, இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் லேரி கிளிண்டன் தலைமை வகித்தார். கூட்டமைப்பு நிர்வாகி ராமமூர்த்தி, சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அந்த கருத்தரங்கில் லேரி கிளிண்டன் பேசும்போது “உலக அளவில் இணைய தள குற்றங்கள் பெருகி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு எடுத்த புள்ளி விபரங்களின் படி, ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 சதவீதம் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளது. விரும்பத்தகாத மெயில் (ஸ்பேம்) உருவாக்கி அனுப்புவதில் உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நம் நாடுகளில் இணைய தள குற்றங்கள் ஏற்படும்போது, அதுகுறித்து ஆராய்ந்து அந்த குற்றத்துக்கான நடவடிக்கை எடுப்பதோடு நிறுத்தி கொள்ளும் போக்கு இன்னும் இருந்து வருகிறது. அதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் இணையதள குற்றங்களை தடுக்க இந்தியாவில் 600 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் சீனாவில் 1.2 லட்சமும், அமெரிக்காவில் ஒரு லட்சம் நிபுணர்களும் உள்ளனர். விஐபிக்கள் மற்றும் முக்கிய இணைய தளங்களை முடக்கும் செயல்களை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் அதிக நிதிகளை ஒதுக்கியுள்ளது. தனிப்பட்டவர்களின் இணைய தளங்களை பாதுகாக்க அதிக விலையிலான சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டும். குறைந்த முதலீட்டில் கிடைக்கும் சாப்ட்வேர்களை பயன்படுத்தினால் பிரச்னைதான் வரும். இணைய தள குற்றங்களை தடுக்க உலக அளவிலான எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை”என்று லேரி கிளிண்டன் கூறினார்.

Tuesday, November 19, 2013

ATM-ல் பெண் அதிகாரிக்கு நேர்ந்த கதி - Video

நேற்று பெந்க்களூரிலுள்ள ஏ.டி.எம். மையம ஒன்றில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சி அலையை உண்டாகியுள்ளது.

பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய் (வயது 37). இவர் ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார்.ஏ.டி.எம். மையம் அமைந்துள்ள சாலை, ஆட்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும். உல்சூர் கேட் போலீஸ் நிலையமும் அருகிலேயே உள்ளது.

அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்ம நபர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம நபர், துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். திடீரென்று ஜோதியை தலையில் அரிவாளால் வெட்டினார். இதில், ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

பின்னர் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் ஷட்டரை திறந்து வெளியே வந்து, மீண்டும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து, அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். வாசலில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து உடனடியாக எஸ்.ஜே. பார்க் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது ஜோதி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் ஜோதியை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜோதி மீது தாக்குதல் நடந்த ஏ.டி.எம். மையத்தின் தரையில் ரத்தம் உறைந்து கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

ஜோதி அணிந்திருந்த நகைகள் கொள்ளை போகவில்லை. அவரது பையில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போனை மர்ம நபர் எடுத்துச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஏ.டி.எம். காவலாளி அங்கு இல்லை.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதோ அந்த வீடியோ:::http://www.youtube.com/watch?v=CSlzcrfaztI

சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி!

இப்போதெல்லாம் ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள்.இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். என்பவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது என்பது விசேஷ் தகவல்.

அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால் பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது.அன்று இரவு தூக்கத்திலிருந்து திடுமென விழித்த ஜோர்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் ஜோர்ஜ், அவரது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார்.

இதையடுத்து அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜோர்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேசவைத்தார். காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து 2 மணிநேரம் ஜோர்ஜ் உடன் பேசினார்.

இதுகுறித்து டாக்டர் மரியோ கூறும்போது,”மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும். இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

இதன் மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள். இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்”என்று அவர் தெரிவித்தார்.

Sunday, November 17, 2013

எலக்ட்ரிக் பைக் !

ஒவ்வொரு முறையும் எலக்ட்ரிக் கார் வரும்போதெல்லாம் பைக் வச்சிருக்கவங்க நமக்கும இது மாதிரி ஒண்ணு வந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பாங்க. அதை மோப்பம் பிடிச்ச யமஹா இப்ப அவங்களுக்காகவே முழுமையான எலக்ட்ரிக் பைக்கை லான்ச் பண்ண போகுது.

இது 100 கிலோ வெயிட் – ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஒரு முழு சார்ஜ்ல 155 – 260 கிலோமீட்டர் வரை போகலாம். அதிகபட்ச வேகம் 160 கிலோமீட்டர் வேற – இது வந்தா இது கிலோமீட்டருக்கு 20 காசு தான் செலவு மற்றும் ஆயில் / ஸ்பார்க் பிளக் லொட்டு லொசுக்கு செலவும் கிடையாது அது போக சுத்தமான எனர்ஜி வண்டியாக்கும் இது.

சென்னையில் சேல்ஸ்! : சர்வதேச ரோமிங் சிம் கார்ட்


ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது என்பதுடன் முன் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதும விசேஷ தகவல்.

இந்த சர்வதேச சிம் கார்டில் வாடிக்கையாளர்கள் செலுத்திவரும் கட்டணத்தைவிட 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியும்.வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள் அந்த நாட்டிலிருந்து ஒரு ரூபாய் செலவில் இந்தியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும். அலுவலக விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது. முன் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, போலந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், அயர்லாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 13 நாடுகளில் இந்த சிம் கார்டு மூலம் தொடர்பு கொள்ளலாம். இங்கிலாந்தின் செல்பேசி எண்ணைக் கொண்டிருக்கும் இந்த சிம் கார்டு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

சிறு, குறு, நடு த்தரத் தொழில்முனைவோர், வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள், உயர் கல்விபெறச் செல்லும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் குறைந்த கட்டணத்தில் வேகமான இணைப்புத் திறனுடன் கூடிய இந்த சிம்கார்ட் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று சிம்கார்டை அறிமுகப்படுத்தியுள்ள லைகா டெலிகாம் நிறுவன தலைமை செயல் அதிகாரி மிலிந்த் காங்லே தெரிவித்தார்.

சர்வதேச ரோமிங் கார்ட் அனைத்து விசா பரிசீலனை மையங்கள், சர்வதேச விமான நிலையங்கள், சென்ட்ரம் போரக்ஸ் எக்ஸ்சேஞ்சின் 700 கிளைகள் மற்றும் ஆக்சிஸ், யெஸ் வங்கிகளில் கிடைக்கும். இது தவிர 1800 103 6699 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சிம் கார்ட் அளிக்கப்படும் என்று நிறுவனத்தின் சி.ஓ.ஓ. பிரேமானந்தன் சிவசாமி தெரிவித்தார்.

மருத்துவ செலவுக்கு ஸ்ரீவித்யாவின் பணத்தை தர மறுத்த அறக்கட்டளை!

கடந்த 2006-ல் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யா தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றி இருந்தார்.பின்னர் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை கேட்டபோது அதைத் தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ஸ்ரீவித்யாவின் டாக்டர்.

தனது இறுதி நாட்களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள கேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அப்போது அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி தர மறுத்த ஸ்ரீவித்யா, தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த கமலை மட்டும் நேரில் சந்திக்க அனுமதி தந்தார்.

இதற்கிடையில் தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றி எழுதினார் ஸ்ரீவித்யா. தொடந்து அவரது சிகிச்சை செலவுக்கு அறக்கட்டளையிடம் பணம் கேட்டபோது தர மறுத்துவிட்டனராம்.

இதுபற்றி ஸ்ரீவித்யாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணன் நாயர் கூறும்போது, ‘ஸ்ரீவித்யாவுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார். தனது சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் ஸ்ரீவித்யா. அவர்களிடம் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்டபோது தர இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். மருந்து நிறுவனம் ஒன்றுதான் சலுகை விலையில் ஸ்ரீவித்யாவுக்கு மருந்துகளை வழங்கியது” என்றார்.

கூலிங் கிளாஸ் + ஐ போனிற்கு = சார்ஜ்

உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், பலரும் பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள்.ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது.இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பகல் பொழுதில் படும் சூரியக்கதிர்கள் மூலம் கூலிங்கிளாசில் விசேசமாக பொருத்தப்பட்டுள்ள சோலார் பிரேமில் பட்டு ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சார்ஜ் செய்யும் முறையை Sayalee Kaluskar என்ர அமெரிக்க வாழ இந்தியரால் வடிவமைக்கப்பட்ட இந்த சன்கிளாஸினை பயன்படுத்திதான் ஐபோன்களை சார்ச் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ லிங்க்::http://www.youtube.com/watch?v=6vwOQSWoTSU

Friday, November 15, 2013

காதலிக்குப் பிடித்த கலர் பச்சையா..?

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன். 

சந்தோஷம் தரும் மஞ்சள் 

மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள். 

நினைத்ததை முடிக்கும் சிவப்பு

சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள். 

காதல் மன்னன் பிங்க் 

பிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள். 

காதலில் திளைக்கும் பச்சை

பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள். 

புதுமையை விரும்பும் நீலநிறம் 

நீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும். 

சுயநலவாதியான பர்பிள் 

பர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநலவாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் டன் கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். 

தத்துவம் பேசும் ஆரஞ்ச் 

ஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள். 

மன அழுத்தம் தரும் கறுப்பு 

கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். 

காதலை வெறுக்கும் வெள்ளை 

வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் காதலாவது கத்தரிக்காயாவது..' என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும் ரூ.300....!

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.

அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது.

இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த ரிமோட் சண்டை பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி. சீரியல்ல நல்ல நடிக்காத ஆட்களை அறைய முடியுமே – ஐ ஜாலி ஆனா ஃபேஷன் டிவி ஓடும் போது கை கவனம்

Thursday, November 14, 2013

கூகுள் முகப்பில் இடம் பெற்ற இந்திய மாணவியின் ஓவியம்

இணைய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள கூகுள் நிறுவனம் விசேஷ நாட்களில் வெளியிட்டு வரும் Doodle-கள் தொடர்பாக ஆண்டுதோறும் சில போட்டிகளை நடத்தி வருகின்றது.குறிப்பாக சிறுவர்களுக்காக நடைபெற்று வரும் Doodle என்ற போட்டியானது இந்த முறை நடைபெறுவது 4-வது முறையாகும். இதில் இதில் GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்படும் Doodle – னை தனது சர்ச் தளத்தின் முகப்பு பக்கத்தில் பிரசுரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கூகுள் 30,000 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக வழங்குவதுடன்.வெற்றி பெறுபவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்கு சுமார் 50,000 டாலர்கள் மதிப்புள்ள தொழில்நுட்ப வசதிகளையும் குகூள் நிறுவனம் ஏற்படுத்தித் தர போவதாகவும் அறிவித்து இருந்தது இந்நிலையில் இப்போட்டியில் புனாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்த சித்திரம்தான் இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த சித்திரத்துக்கு “Sky’s the limit for Indian women”- இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார் காயத்ரி கேதாராமன்.GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்துள்ள காயத்ரி, அதன் அர்த்தங்களையும் விளக்கியுள்ளார். பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் சித்திரத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் நடத்திய போட்டியில், நாடு முழுவதும் இருந்து 12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர் என்பது அடிசினல் தகவல்.

பொங்கல் ரிலீஸ்- ‘கோச்சடையான்’

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிற ந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.அதே தினங்களில்தான் விஜய்யின் ‘ஜில்லா’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ‘எங்கே போகுதோ வானம்’ என்று எஸ்.பி.பி பாடிய பாடல், படத்தின் டீஸர் ஆகியவை வெளியாகி விட்டன. வெளியான டீஸரின் முடிவில் இசை வெளியீடு அக்டோபர் 2013 என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால், அக்டோபர் மாதம் படத்தின் இசை வெளியீடு நடக்கவில்லை. இதனால் பட வெளியீடு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான 12-12-2013 அன்று வெளியாகும் என்றும், படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10, 2014ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து ரஜினி ரசிகர்களை உற்சாகபடுத்தி இருக்கிறார்கள்

Wednesday, November 13, 2013

கிரிக்கெட்டின் கடவுள் - சச்சின் தெண்டுல்கருக்கு கோயில்


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.இது சச்சினுக்கு 200-வது டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டியுடன் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். தங்களுள் ஒன்றாகக் கலந்து விட்ட சச்சினை, இப்போட்டியுடன் ஆடுகளங்களில் இனி காண முடியாது என்தே ரசிகர்கள் இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டனர்.இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரான மனோஜ் திவாரி என்பவர் பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள அட்டர்வாலியா கிராமத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகில் சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள, இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இன்று தன்னுடைய கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறார். இத்துடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

சச்சினுக்கு சிறு குழந்தைகள் முதல், வயதான தாத்தாக்கள் வரையில் பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. சினிமா நட்சத்திரங்கள், மிகப்பெரிய வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வி.வி.ஐ.பி.க்கள் இதில் உள்ளனர். அவரது ஒவ்வொரு ஆட்டத்தையும் இவர்கள் ரசித்து பார்த்துள்ளனர்.

1989ம் ஆண்டில் முதல் தர போட்டியில் களம் இறங்கிய சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளார். இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பிராட்மேனுக்கு நிகரான ஒரு ஜாம்பவானின் கடைசி ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் முதல் இதுபற்றி கேள்விப்பட்ட சாதாரண மக்கள் வரையில் ஆர்வமாக உள்ளனர்.

இதன் காரணமாக, வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. டிக்கெட்டுகளை விற்ற இணையதளமே முடங்கிப்போகும் அளவுக்கு ரசிகர்கள் அதில் குவிந்தது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெற வான்கடே மைதானத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் சச்சினை வாழ்த்தும் போஸ்டர்களையும், பேனர்களையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இப்பகுதியே சச்சின் என்ற தனிநபருக்காக விழாக்கோலம் பூண்டுள்ளது என்றால், அது மிகையாகாது.

இன்றைய போட்டியை காண்பதற்காக நண்பர்கள், உறவினர்களை அழைத்து வருவதற்காக சச்சினுக்கு மட்டும் பிரத்யேகமாக 200 டிக்கெட்டுகள் தரப்பட்டுள்ளன. சச்சினின் போட்டியை காண வரும் முக்கியமான விஐபி அவரது தாய் ரஜ்னி. அவரால் நடக்க முடியாது என்பதால், வீல்சேரில் அழைத்து வர சச்சின் ஏற்பாடு செய்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிராட்மேன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது, கடைசி போட்டியில் டக் அவுட் ஆனார். அதனால் அவரை வாழ்த்தக்கூட யாரும் அப்போது இல்லை. கலங்கிய கண்களுடன் அவர் மைதானத்தைவிட்டு வெளியேறினார். ஆனால், இப்போது காட்சிகள் மாறிவிட்டது. சச்சினுக்கு பிரியாவிடை கொடுப்பதற்காகவே, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்து. மேலும், அவர் தன்னுடைய சொந்த மண்ணில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவர் 10 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும், இன்று தொடங்க உள்ள தன்னுடைய கடைசி போட்டியில் அவர் கவனத்துடன் விளையாடி சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுபோன்று, 2வது டெஸ்டிலும் மாபெரும் வெற்றியை பெற்று அதை சச்சினுக்கு அர்ப்பணிக்க இந்திய அணி வீரர்கள் தயாராகி உள்ளனர். கடந்த 2 நாட்களாக வலைப் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். இதில் சச்சினுடன், அவரது மகன் அர்ஜுனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியை பொருத்தவரையில் இன்றையப் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்கள்தான் இதிலும் விளையாட உள்ளனர். ஆனால், முதல் போட்டியில் தங்களை மோசமாக தோற்கடித்ததற்கு பழிக்குப்பழியாக 2வது டெஸ்டில் வெற்றி பெறும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரான மனோஜ் திவாரி என்பவர் பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள அட்டர்வாலியா கிராமத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார் என்பதும அதில் கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் கோபுரத்தின் உச்சி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே கையில் கிரிக்கெட் மட்டையுடன் சச்சின், தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் முழு உயர பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் வரும் ஜனவரி மாதம் இந்த கோயிலை திறக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ராவண தேசம்’ டிரைலர்

இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’. இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் வழிதவறி தாய்லாந்துக்கு சென்றதும். அந்த நாடு அவர்களை உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலில் தவித்த அவர்கள் கொத்து கொத்தாக செத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார்களாம்.

அஜெய் என்பவர் டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்துள்ளார். ஜெனிபர் என்பவர் ஹீரோயின். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே சினிமாவுக்கு புதுமுகங்கள்.”அகதியாக கடலில் திகில் பயணம் மேற்கொண்டு ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. “லைப் ஆப் பை” போல பெரும்பகுதி படம் நடுக்கடலில் நடக்கிறது. நிஜமாகவே கடலில் படமாக்கி இருக்கிறோம். உலகம் அறிந்திராத இலங்கை அகதிகளின் இன்னொரு வலியை பதிவு செய்திருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் அஜெய்.
டிரைலர் லிங்க்:http://www.youtube.com/watch?v=YciD-pHfeCE

Tuesday, November 12, 2013

பெண்கள் ஆண்களிடம் மயங்குவதற்கான 7 விஷயங்கள்!!!

பெண்களை ஆண்கள் விரும்புவது இயல்பே. அப்படி விரும்பும் பெண்கள் தங்களால் ஈர்க்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் ஒவ்வொரு ஆணின் நினைவாகும். பெண்களை எப்படி ஈர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது ஒவ்வொரு ஆணின் கனவாகும். ஆனால் இந்த சந்தோஷம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

அனைவருக்குமே பெண்களை ஈர்க்கும் உடல் தோற்றம் இருப்பதில்லை அல்லவா? ஆனால் ஒருசில குணாதிசயங்களை சேர்த்துக் கொண்டால் போதும், பெண்களை உங்கள் பக்கம் பைத்தியமாக அலைய விடலாம். ஆகவே ஒரு பெண்ணின் மூளையில் உங்களை பதிய வைத்து, கடைசியாக அவள் இதயத்தில் உங்களுக்கு இடம் கிடைக்க என்ன வழி என்பதை தமிழ் போல்ட் ஸ்கை ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி பெண்களை உங்கள் பின்னால் அலைய விடுங்கள்.


உங்களின் தனித்திறன்
நீங்கள் கிட்டார் வாசிப்பதில் வல்லவரா? சமைப்பதில் சிறந்தவரா? அல்லது புகைப்படம் எடுப்பதில் கில்லாடியா? இப்படி எந்த ஒரு தனித்திறன் உங்களிடம் இருந்தாலும் சரி, அதன் மேல் நீங்கள் வைத்திருக்கும் ஈடுபாடு மற்றும் உங்கள் ஆற்றலை கண்டு பெண்கள் கண்டிப்பாக உங்களை விரும்புவார்கள்.

ஆகவே உங்கள் தனித்திறனை நல்ல விதமாக பயன்படுத்துங்கள். அதிலும் அவர்களுக்காக கிட்டார் வாசியுங்கள், சமையுங்கள் அல்லது உங்கள் திறமையை வெளிப்படுத்தும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதை அவர்களுக்காக திறம்பட செய்யுங்கள். அதற்கு காரணம் என்னவோ தெரியவில்லை, தனித்திறன் உடைய ஆண்களிடம் பெண்கள் கவரப்படுகின்றனர்.


சிந்தனை 

பரிசுகளோ, அக்கறையோ, பெண்களுக்கு ஏன் அதில் நாட்டம் இருக்கிறது? நீங்கள் 24 மணி நேரமும் அவர்களை பற்றி தான் சிந்தித்து கொண்டே இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அது வெளிக்காட்டும். அந்த உணர்வு தான் அவர்கள் எதிர்பார்ப்பது. அதற்காக கண்ணை கவரும் பரிசுகளோ, விலை உயர்ந்த பரிசுகளோ வாங்க வேண்டிய அவசியமில்லை.
மாறாக ‘உன்னை பற்றி தான் இன்று முழுவதும் நினைத்து கொண்டே இருந்தேன்’ அல்லது ‘இன்று நீ பூசியுள்ள லிப்ஸ்டிக் வண்ணம் உன் அழகை இன்னும் அதிகரித்துள்ளது’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் நினைவில் அவர்கள் இருக்கிறார்கள், அவர்களை பற்றிய சிறு விஷயத்தை கூட நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு போதுமானது. இது போதும் அவர்கள் இதயம் உங்களுக்காக துடிப்பதற்கு.



அவர்களை சிரிக்க வையுங்கள்

நகைச்சுவையாக பேசுவது என்பது ஒரு அறிய குணமாகும். அது அனைவருக்கும் வந்து விடாது. அது உங்களின் அறிவாற்றலையும், சமயோசித புத்தியையும் வெளிக்காட்டும். வளமையான நகைச்சுவை உணர்வு கொண்டவர், தன்னை பார்த்து சிரித்து, கஷ்ட காலத்தில் கூட அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு கொண்டவரை பார்த்தால், பெண்கள் விரைவிலேயே ஈர்க்கப்பட்டு விடுவார்கள்.



அழகிய புன்னகை 

நம் அனைவரின் ரசனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உடல் அமைப்பு மற்றும் அளவை கொண்ட எதிர்பாலினத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் பொதுவான ஒரு விஷயத்தை ஒரு ஆணிடம் ஒரு பெண் எதிர்பார்க்கிறாள் என்றால், அது அவளை மயக்கும் அவனது புன்னகை தான். அதிலும் நீங்கள் சந்தோஷமாக மற்றும் குதூகலமாக இருப்பதை உங்கள் புன்னகை மூலமாக தெரிந்து கொள்ளலாம். உங்கள் புன்னகை பெண்களின் மன கதவையும் திறக்கும். அழகிய பற்கள் இருந்தால், அது கூடுதல் பலனை அளிக்கும். மேலும் இது உங்களை நீங்கள் நல்லபடியாக பராமரிக்கிறீர்கள் என்பதை பெண்களுக்கு எடுத்துரைக்கும்..


ரொமான்டிக் உணர்வுடன் இருங்கள் 

காதல் உணர்வு என்பது உடலுறவை விட மேலான ஒன்று. அதிலும் பூக்கள் வாங்குவதை விட, மெழுகுவர்த்தி ஏற்றுவதை விட மேலான ஒன்றாகும். மேலும் இது ஒரு பெண்ணை மென்மையாக கையாண்டு, அவள் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக அமையும். ஒருவேளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட, அவர்களை பாராட்ட மறந்து விடாதீர்கள். மேலும் ஒரு குழந்தையை போல அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். அது அவர்களை ஈர்க்கும்.


தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்
ஒரு பெண்ணிடம் ஆண் கவர்ச்சியாக காட்சி அளிக்க எது உதவுகிறது என்று தெரியுமா? அது அவர்களின் தன்னம்பிக்கை தான். தனக்கு வேண்டியதை அடைய எந்த ஆண் பயம் இல்லாமல் துணிவுடன் அணுகுகிறானோ, அவனிடம் பெண் காந்தம் போல் ஈர்க்கப்படுவாள். அப்படிப்பட்ட ஆணால், சந்தேகமே இல்லாமல் ஒரு பெண் ஈர்க்கப்படுவது நிச்சயம். அது அவளுக்கு பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும். ஆனால் தன்னம்பிக்கையை முரட்டுதனத்தோடு குழப்பி கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கை அவர்களை ஈர்க்கும் என்றால், முரட்டுத்தனம் அவர்களிடம் வெறுப்பை உண்டாக்கும்.


ஆளுமையுடன் இருங்கள்
உங்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும். தன்னை அறியாமலேயே ஆளுமை நிறைந்த ஆண்களால் பெண் ஈர்க்கப்படுகிறாள். அதற்காக முரட்டுத்தனத்துடன் அடக்குமுறையை கையாளக்கூடாது. அது நீங்கள் நினைத்ததற்கு மாறாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே இதனை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். குறிப்பாக உங்கள் ஆளுமையில் ஒரு பண்பு இருக்க வேண்டும். அதை பக்குவமாக கையாண்டால் நீங்கள் தான் ராஜா!

தாய் மகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்..!

தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?

பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?

சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.

* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?

மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?

மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

ஏமாறாமல் இருக்க!!!

வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?’ என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? என்கிற கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்தபோதுதான் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கே.இளங்கோவனைச் சந்தித்தோம். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.

''தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதற்கான முக்கிய நோக்கம், அதிக சம்பளம் கிடைக்கும்; புது கலாசார சூழலில் வேலை செய்ய முடியும் என்பதால்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யும் நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்றவை. இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் காரணம் கிடையாது; அங்கு செல்வதற்கான விதிமுறைகளும் குறைவு'' என்றவர், ஏஜென்ட்கள் மூலம் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.

சரியான முகவரா?

''வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்தபின்பு முதல் நடவடிக்கையாக, சரியான முகவரைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான முகவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எம்.ஓ.ஐ.ஏ. (Ministry Of Overseas Indian Affairs) தரும் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் நம்பர் இருக்கும். இந்த நிறுவனத்திடம் அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அயல்நாட்டுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகவராகப் பணியாற்ற முடியும்.

சரியான முகவர் யார் என்கிற விவரங்கள் www.poechennai.in என்ற வலைதளத்தில் நமது இந்திய அரசால் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரங்கள், அவர்களின் பணி அனுபவம், முகவர்களின் தரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியானவர்கள் யார் என்ற விவரம் இருப்பதுபோலவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்கள் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருப்பார்கள். இதை முன்னதாகவே பார்ப்பதன் மூலம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்களை அணுகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.

சில முகவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வேலை வாங்கித் தருபவர்களாக இருப்பார்கள். எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ, அந்த நாட்டு முகவர்களை அணுகும்போது வேலை இன்னும் எளிமையானதாக முடியும். இப்போதெல்லாம் முகவர்கள் அவர்களின் விவரங்களுடன், எம்.ஓ.ஐ.இ.-ன் அங்கீகார எண்களுடன் செய்தித்தாள்களில் விளம்பரங்களை தருகிறார்கள். இதைக் கவனிப்பதன் மூலம் சரியான முகவர்களை எளிமையாக நம்மால் அடையாளம் காணமுடியும்.

நேர்முகத் தேர்வின்போது..!

நேர்முகத் தேர்வின்போது எலெக்ட்ரீஷியன், பிளம்பர் என ஒவ்வொரு வேலைக்கும் டிரேடு டெஸ்ட் இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமான அல்லது தனியார் டிரேடு டெஸ்ட் சென்டர்கள் இருக்கின்றன. அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுப்பவர்களின் வேலை தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக டெஸ்ட்கள் நடத்தப்படும். நமது வளாகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக நேர்முகத் தேர்வை நடத்தும்போது இங்கேயே டிரேடு டெஸ்ட்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இந்த நேர்முகத் தேர்வின்போது வேலைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, பணி நேரம், வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, அதிக நேரம் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் தரப்படுமா, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமா, மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியை நிறுவனம் செய்து தருமா, விமானப் போக்குவரத்திற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறதா என்பனவற்றை நன்கு கவனித்த பின்னரே ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்தப் படிவத்தின் நகல் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

இ.சி.ஆர் (Emigration clearance required)

வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அவருக்கு தரப்படும் மதிப்பெண் சான்றிதழிலேயே இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று தரப்பட்டுவிடும். ஆனால், பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பி.ஓ.இ. (Protecter of Emigration) அமைப்பிடமிருந்து கண்டிப்பாக இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று வாங்கி முகவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும். அயல்நாட்டிற்கு செல்லும் சான்றுகள் அத்தனையையும் முகவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் இந்த இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்றையும் அவர்களே வாங்கி தந்துவிடுவார்கள். இந்த இ.சி.ஆர். என்பது 18 நாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

சமர்ப்பிக்க வேண்டியவை!

பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்னனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும். அதுதவிர, தங்களது உடல் முழுவதையும் பரிசோதனை செய்து குறை எதுவும் இல்லாதபடி மருத்துவச் சான்றிதழ் ஒன்றையும் முகவரிடம் சமர்ப்பிக்கவேண்டும். இந்த நடைமுறை விஷயங்கள் முடிவுக்கு வந்ததும் விசா எடுப்பதற்கான விஷயங்கள் ஆயத்தமாகிவிடும்.

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், எம்ப்ளாய்மென்ட் விசாவில்தான் செல்ல வேண்டும். டூர் விசாவில் சென்றுவிட்டு அங்கு உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தால் பிரச்னைதான் ஏற்படும். எம்ப்ளாய்மென்ட் விசாவை கையில் வாங்கியதும், அதில் வேலை செய்வதற்கான விவரங்கள் போடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்'' என்று உஷார் டிப்ஸ்களைத் தந்தார் அவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்குச் செல்ல விரும்பும் துறைகளில் இரண்டு வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது. விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் கட்டணம் 450 ரூபாயில் இருந்து 1,015 ரூபாய் வரை (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) வசூலிக்கப்படுகின்றன. இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.

சேவைக் கட்டணம்!

ஒன்றரை மாதச் சம்பளம் அல்லது அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கும் சேவை கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை முகவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் கட்டணமாக கொடுத்தால் போதுமானது.

ஆக, இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து, வெளிநாட்டில் வேலைக்குப் போனால், எந்த வகையிலும் ஏமாறாமல் பொன்னும் பொருளும் சேர்த்துகொண்டு தாயகம் திரும்பலாமே!

செய்யவேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்!

அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும்.

அயல்நாடு வேலை வாய்ப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, பண பரிவர்த்தனைகளாக இருந்தாலும் சரி, அதற்கான ரசீதுகளை உடனுக்குடன் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

மெயின் முகவர்களின் உதவியுடன்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் அது இவர்களின் மூலம் நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். துணை முகவர்களை நம்பி எந்தவொரு டாக்குமென்ட்களையும், பண பரிவர்த்தனைகளையும் செய்யக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் கூடுதல் செலவு ஆவதுடன் வேலை கிடைக்க காலதாமதம் ஆகலாம்.

வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரோ அல்லது வேலை தேடும் சமயங்களிலோ பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

வெளிநாட்டில் எந்த நிறுவனத்தாருக்காக நீங்கள் வேலை பார்க்கச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மற்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது.

வேலை ஒப்பந்த காலத்திற்குள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்திடமோ அல்லது எந்த முகவரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்றீர்களோ அவர்களிடமோ தெரியப்படுத்தலாம்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் காலத்தில் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் ஐ.டி. கார்டுடன்தான் செல்லவேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்கவேண்டுமே தவிர்த்து, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

எந்த நாட்டில் வேலை செய்து வருகிறீர்களோ, அந்த நாட்டின் வேலைக்கான சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

உதவிக்கு அணுகுங்கள் !

வெளிநாட்டு வேலை தொடர்பான விளக்கங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Overseas Manpower Corporation Limited, Government Industrial Training Institute Campus for Women, No.42, Alandur Road, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai-32.

மேலும், விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 2250 2267, 2250 1538 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணலாம்.

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்துக் கூடுதல் தகவல்களைப் பெறலாம். தாங்கள் அணுகும் ஏஜென்சி நிறுவனம் உண்மையானதா என்று அறிய மேலே சொன்னபடி

www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள

www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணுங்கள்.