Tuesday, October 1, 2013

ஜெயில் சீருடையில் லல்லு, வெஸ்டர்ன் டாய்லெட் கேட்டார்

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லுபிரசாத்திற்கு சிறையில் கைதி எண் 3312 அளிக்கப்பட்டுள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறையில் அடைக்கபட்டிருக்கும் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லுபிரசாத் சிறையில் தூக்கமில்லாமல் தவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டதும் லல்லுபிரசாத் யாதவை போலீசார் கைது செய்து, ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறைக்கு அழைத்துசென்றனர்.

நேற்று இரவை சிறையில் கழித்த லல்லு, வெகுநேரம் தூக்கமில்லாமல் தவித்ததாக தெரிகிறது. லல்லு அடைக்கப்பட்டுள்ள அறையில், மெத்தை, நாற்காலி, டேபிள், சோபா, மற்றும் அட்டாச்டு கழிவறை ஆகியவை உள்ளன.

லல்லுவிற்கு சிறையில் டீ, காபி, ஸ்நாக்ஸ் போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த வழக்கில் லல்லுவிற்கு என்ன தண்டனை வழங்கப்படுமென்பது வரும் 3ஆம் தேதி தெரியவரும்.

ஜெயில் சீருடை அணிந்திருக்கும் லல்லு தனக்கு வெஸ்டர்ன் வகை கழிவறை வேண்டுமென கேட்டதும், உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment