Wednesday, October 9, 2013

“நய்யாண்டி” நாயகியின் “தொப்புள்” விவகாரம்!!

இந்நிலையில் நஸ்ரியா, இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் ‘நய்யாண்டி’ படத்தில் பாடல் காட்சி ஒன்றில் கவர்ச்சியாக நடிக்கும்படி இயக்குனர் சற்குணம் கேட்டார். நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால் படத்தின் டிரெய்லர் காட்சியை பார்த்தேன். அதில் நான் நடிக்காத கவர்ச்சி கதாபாத்திரத்தில் எனக்கு பதில் ஒரு டூப் நடிகையை பயன்படுத்தி பாடல் காட்சி எடுத்துள்ளனர். இதை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த காட்சியை நீக்க வேண்டும். நான் நடிக்காத காட்சியை எடுத்த இயக்குனர் சற்குணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். இந்த புகார் மனுவை உங்களிடமும் (கமிஷனரிடம்) கொடுத்துள்ளேன். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர் இதுபற்றி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்து இயக்குனர் சற்குணம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர்”நஸ்ரியா பத்திரிகைகளுக்கு அளித்து வரும் பேட்டிகளில் ‘நய்யாண்டி’ படத்தில் வரும் ‘இனிக்க இனிக்க’ பாடல் காட்சியில் நஸ்ரியாவிற்கு பதில் வேறு பெண்ணை வைத்து முழுப்பாடலையும் எடுத்திருப்பதாகவும், டிரைலரில் ஒரு க்ளோஸ் அப் ஷாட்டில் டூப்பை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

‘இனிக்க இனிக்க’ பாடலில் ஒரு இடத்தில் கூட நான் டூப்பை பயன்படுத்தவில்லை. இதில் நடித்திருப்பது நஸ்ரியாவை தவிர வேறு யாரும் இல்லை.படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் உள்நோக்கம் பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது.

நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று சொன்னேன். இதற்காக நான் கேரளாவில் இருந்து வர முடியாது. வேறு யாரையாவது வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன நஸ்ரியாவிற்கு இப்போ என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஒரு வேளை தன்னுடைய பப்ளிசிட்டிக்காக கூட செய்திருக்கலாம்.

ஒருவேளை நஸ்ரியாவிற்கு டிரைலரில் வரும் அந்த ஒரு க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நான் நீக்கவும் தயார். ஆனால் ‘இனிக்க இனிக்க’ பாடல் காட்சியில் நடிக்கவில்லை என்று சொன்ன மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல நஸ்ரியா தயாரா?.

இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment