Wednesday, October 16, 2013

‘ரஜினி ஜோக்ஸ்’ தலைவருக்கு சிறுமையா… பெருமையா?

ரஜினியைப் பற்றி வரும் துணுக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக வட இந்தியாவில்.

இந்த துணுக்குகள் குறித்து முன்பு அவரிடம் பாரதி எஸ் பிரதான் என்ற பெண் நிருபர் நேரில் கேட்டபோது, ரஜினி சற்றும் முகம் சுளிக்கவில்லை. மாறாக, இன்றைய இளைஞர்கள் அபார படைப்பாற்றல் மிக்கவர்கள். அதைக் கண்டு நான் வியக்கிறேன், என்றார்.

தன்னைப் பற்றி வந்த துணுக்குகள் அடங்கிய பிரிண்ட் அவுட்டில் தனது கையெழுத்தை ஆட்டோகிராபாகவும் போட்டுக் கொடுத்தார். அந்த அளவு, இன்றைய தலைமுறை இளைஞர்களோடு இணங்கிச் செல்லும் மனப்பான்மை கொண்டவர் ரஜினி. அதனால்தான் மாறும் சூழலுக்கேற்ப ஹைடெக் படங்கள் கொடுத்து அடுத்த தலைமுறையையும் தன் ரசிக மகா சமுத்திரத்துக்குள் ஐக்கியமாக வைக்கிறார்!

முன்பு அமிதாப் சொன்னதுபோல, இந்த துணுக்குகள் எவையும் ரஜினியை சிறுமைப்படுத்தும் நோக்கில் வரவில்லை. மாறாக அவரை மனிதர்களில் ஒரு சூப்பர் மனிதனாக, மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒருவராக சித்தரிக்கவே முயல்கின்றன. ஆனால் ஒன்று, எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அதுவே எரிச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது என்பதை இந்த துணுக்கு படைப்பாளிகள் புரிந்துகொண்டு எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணம்.

அப்படி சமீபத்தில் வந்த சில துணுக்குகள் உண்மையிலேயே ‘அட என்னமா யோசிக்கிறாங்கப்பா’, என வாய்விட்டு சொல்ல வைத்தன.

சாம்பிளுக்கு சில :

ரஜினி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது ‘ரஃப் நோட்’ காணாமல் போய்விட்டது.

அதைத்தான் இப்போது விக்கிபீடியா என்கிறார்கள், விஷயம் தெரியாதவர்கள்!ரஜினியை ஒரு புல்லட் சுட்டது…

அந்த புல்லட்டுக்கு இன்று இறுதிச் சடங்கு!


பறவைகளை விரட்ட ஒரு விவசாயி ரஜினி சிலையை வயலில் வைத்திருந்தார்

அடுத்த நாள், போன ஆண்டு திருடிய தானியங்களையும் திருப்பித் தந்துவிட்டன பறவைகள்!!


ரஜினி மட்டும் பிபிஓ தலைவராக இருந்தால்…

க்ளையண்டுகள் ஷிப்ட் முறையில் வருவார்கள், ஜாப் ஆர்டர் தர!


ஒரு மழைநாளில் ரஜினி கிரிக்கெட் விளையாடப் போனார். அவரது ஆட்டம் காரணமாக மழை நின்றுபோனது!


நாளை இரவு 9 மணிக்கு ரஜினியை விண்ணில் பார்க்கலாம்,

காரணம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்கிறார்!


உலகம் 2012-ல் அழியும் என்று சொன்னவன் முட்டாள்…

காரணம் ரஜினி இன்று 3 வருட வாரண்டியுடன் லேப்டாப் வாங்கியிருக்கிறார்!


ஒருமுறை ரஜினி பல்தேய்க்க பொடியைப் பயன்படுத்தினார்,

அதைத்தான் இன்று அம்புஜா சிமெண்ட் என்று பெயர் சூட்டி அமோகமாய் விற்கிறார்கள்!இந்த பத்தாண்டில் உலகம் தெரிந்து கொள்ளாத ஒரு உண்மை தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் அம்மாவின் பெயர் ரஜினி டெண்டுல்கர். பயிற்சியாளர் பெயர் ரமாகாந்த்!


ரஜினியின் அடுத்த படம் டைடானிக் (தமிழ்)

இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் யாரும் இறப்பதில்லை. காரணம் ரஜினி தனது ஒரு கையில் அட்லாண்டிக்கையும் மறுகையில் ஹீரோயினையும் பிடித்தபடி அட்லாண்டிக் கடலை நீந்திக் கரை சேர்க்கிறார்… 

இது எப்டி இருக்கு!!

No comments:

Post a Comment