Tuesday, October 1, 2013

பல்வேறு அரசு நிறுவனங்களை மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பல்வேறு பொருளாதார பின்னடைவுகளை ஏற்படுத்துமென தெரிகிறது. 

அமெரிக்காவில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா கொண்டு வந்த சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரித்து விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்காலிக செலவின மசோதாவிற்கு, பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட குடியரசுக் கட்சி, ஒபாமாவின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக அமெரிக்கா திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையால், மொத்தமுள்ள சுமார் 21 லட்சம் அரசு ஊழியர்களில் 8 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும். மேலும் ஒய்வூதியம் மற்றும் முதியவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் பணிகளில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

விசா மற்றும் பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறைகள் முற்றிலும் பாதிக்கப்படும். தேசிய பூங்காக்கள், ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சிப்பிரிவுகளை மூட வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆனால் ராணுவத்தில் உள்ள சீருடைப் பணியாளர்கள் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபடுவர். அதுபோல், வானூர்தி போக்குவரத்து, உணவுத்துறை பணிகள் போன்ற அத்தியாவசியப் பணிகளில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment