Tuesday, October 1, 2013

நாய் கடி காயங்களுடன் நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுமி

டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வேலைசெய்துவந்த சிறுமி உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு, நாய்களால் கடிக்கப்பட்டு, நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி வசந்த் குன்ஜ் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு ஜர்கண்டை சேர்ந்த சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்காக வந்திருக்கிறார். அச்சிறுமி வீட்டு வேலை சரியாக செய்யாததால் கோபமடையும் அவ்வீட்டினர், தினமும் சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

தற்போது 15 வயதாகும் அச்சிறுமிக்கு டெல்லியில் ஆதரவாக யாருமில்லாததால் அத்துமீறி நடந்த அவ்வீட்டினர், அவர்கள் வளத்துவரும் நாய்களை விட்டு சிறுமியை கடிக்கவும் செய்துள்ளனர்.

தினமும் இந்த வீட்டிலிருந்து சிறுமி அலறுவதை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அந்த வீட்டில் தனது தாய், மற்றும் பல நாய்களுடன் வசித்துவரும் வந்தனா என்னும் 50 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டிற்குள் மறைவான இருந்த ஒரு அறையில் இருந்த சிறுமி மிகவும் கொடூரமான நிலையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மீட்க்கபட்டார்.

No comments:

Post a Comment