Tuesday, October 29, 2013

பாலினால் தயாரிக்கப்பட்ட ஆடைகள்

பெண்­களின் உடைகள் பருத்தி, பொலிஜெஸ்டர், செயற்கை இழைகள், மற்றும் பல­வித பொருட்­களில் செய்­ததை பார்த்­தி­ருப்போம். ஆனால் தூய்­மை­யான பாலினால் செய்த

உடையை இது­வரை யாரா­வது பார்த்­த­துண்டா. லண்­டனில் உள்ள ஒரு போட்­டோ­கி­ராபர் ஒரு இளம்­பெண்­ணுக்கு பாலினால் தயாரிக்கப்பட்ட உடையை அணி­யச்­செய்து வித­வி­த­மாக போட்டோ எடுத்­துள்ளார்.


இந்த புகைப்­ப­டங்கள் ஒரு மிகப்­பெ­ரிய நிறு­வ­னத்தின் கலண்­ட­ருக்­காக (நாட்காட்டி) எடுத்­த­தாக கூறும் புகைப்­பட கலைஞர் இதற்­காக பல நாட்கள் யோசித்­த­தாக கூறினார்.

ஜரோஸ்லாவ் வீஷொர்கீவிஷ் என்ற அந்த லண்டன் படப்பிடிப்பாளர் புகைப்­ப­டத்­திற்­காக பல­வித விரு­து­களை பெற்­றவர். கவர்ச்­சி­யாக உள்ள இந்த புகைப்­ப­டங்கள் கலண்­ட­ராக வெளி­வ­ரும்­போது பெரும் பர­பரப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

காதலியின் காற்சட்டைக்கு 'கற்பு பூட்டு'ப் போட்ட காதலன்

காத­லியின் நடத்­தையில் கொண்ட சந்­தேகம் கார­ண­மாக கிட்­டத்­தட்ட 12 வரு­டங்­க­ளாக காத­லியின் காற்­சட்­டைக்கு பூட்டு போட்ட காத­லனை மெக்­ஸிகோ பொலிஸார் கைது செய்­தனர்.

மெக்­ஸி­கோவில் உள்ள விரா­குருஷ் பகு­தியில் வசித்து வரும் ஜகாட்­லாமே என்ற 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 12 வரு­டங்­க­ளாக பேண்­டிற்கு பூட்டுப் போட்டு கொடுமைப் படுத்தப்பட்­டுள்ளார்.

இதனால் இயற்கை உபா­தை­க­ளுக்குச் செல்­வ­தற்குக் கூட மிகவும் அவஸ்தைப் பட்ட அப்பெண், காத­ல­ருக்கு பயந்து வாழ்ந்­துள்ளார்.

தனது 13 வயதில் தனது காதலன் ஆண்­டோ­னி­யா­வுடன் சேர்ந்து வாழத் தொடங்­கி­யி­ருக்­கிறார் இப்பெண். தற்­போது 40 வய­தாகும் இவ­ரது காதலர், எங்கே தனது காதலி தன்னைத் தவிர வேறு ஆண்கள் யாரு­ட­னா­வது தகாத உறவில் ஈடு­பட்டு விடு­வாரோ என்ற அச்­சத்தில் அவ­ரது காற்­சட்­டைக்கு 'கற்பு பெல்ட்' போட்­டுள்ளார்.

இது குறித்து தக­வ­ல­றிந்த பொலிஸார் விரைந்து சென்று ஆண்­டோ­னி­யாவைக் கைது செய்­துள்­ளனர்.

அவர் தனது காத­லியின் காற்­சட்­டைக்கு அணி­வித்­தி­ருந்த பூட்டைப் பார்த்து அதிர்ந்து விட்­ட­னராம் பொலிஸார் பின்னர், ஆண்­டோ­னி­யா­விடம் சாவியைப் பிடுங்கி அவ­ரது பெல்ட் பூட்டைக் கழற்றி அவரை சுதந்­திரப் படுத்­தி­யுள்­ளனர்.

மீட்­கப்­பட்ட போது அப்பெண் மிகவும் பயந்து போய் காணப்பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும், அப்­பெண்­ணிற்கு அணி­விக்கப்பட்ட பெல்ட் நாய்­களின் கழுத்தில் மாட்­டப்­படும் பெல்ட் வகையைச் சேர்ந்­ததாம்.

காட்­டு­மி­ராண்டித்தன­மாக காத­லியின் காற்­சட்­டைக்கு பெல்ட் பூட்டு போட்டு விட்ட காதலர் மீது புகா­ர­ளிக்க சம்­பந்­தப்­பட்ட பெண் மறுத்து விட்­டாராம்.

இது­கு­றித்து ஈகு­பி­யோ­னியா பெண்கள் உரிமைக் குழுவைச் சேர்ந்த செயல் இயக்­குநர் அர­செலி கோன்­சாலஸ் கூறு­கையில், அந்த நபரைக் கைது செய்த பின்னர், அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை அப்பெண் வலி­யு­றுத்­த­வில்லை.

இது அதி­கா­ரி­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்தை அளித்­தது என்றார். இதனைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட ஆண்­டோ­னியா சில மணி நேரங்­க­ளி­லேயே விடு­தலை செய்­யப்­பட்டான். மீண்டும் இது போன்ற அநா­க­ரிக­மான செயல்­களில் ஈடு­ப­டக்­கூ­டாது என அவனை பொலிஸார் எச்­ச­ரித்து அனுப்­பி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மறைக்கப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள்

43 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் கால் பதித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி நிலவில் இறங்கினார்கள். முதலாவது விண்வெளிப் பயணம் பற்றி பரபரப்பாக பேசப்படும் ‘ராக்கெட் மேன்’ புத்தகத்தில் வெளியிடப்பட்டிருந்த சுவாரசியமான விஷயங்கள் இதோ.....

* விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல் போனது. 3 1/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.

*அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை.

* குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.

* அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது. நீல் ஆம்ஸ்ரோங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும் போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல் சென்றது.

* நிலவில் காலடி வைத்ததை ‘மனிதனின் சிறிய அடி’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது சிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார்.

* ஆம்ஸ்ரோங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

* நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப் படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது. மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.

* நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது.

* நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ்செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.

‘அஞ்சு பத்து’ காமெடி சீனுக்கு நாங்க அனுமதியே தரல

‘என்றென்றும் புன்னகை’ படத்தில் பெண்களை கேவலமாக சித்தரித்து சந்தானம் பேசியிருக்கும் காமெடி காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதியே தரவில்லை என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.

எங்களிடம் காட்டிய ட்ரெய்லரில் அந்தக் காட்சியே இல்லை என்று சென்சார் போர்டின் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் ஆடியோ பங்ஷனில் அந்தப் படத்தின் ட்ரெய்லர் காண்பிக்கப்பட்டது.

ட்ரெய்லரை பார்த்த எல்லோருக்குமே அதிர்ச்சி. காரணம் அதில் வரும் ஒரு காட்சியில் வேலைக்குப் போகும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்து ஒரு காமெடி டயலாக் பேசியிருந்தார் சந்தானம்.

ஆனால் அந்த மேடையில் இருந்த கமல் உள்ளிட்ட எந்த பிரபலமும் அந்தக் காட்சியை கண்டிக்கவில்லை. மாறாக ட்ரெய்லர் சூப்பர் என்று பாராட்டி விட்டுச் சென்றார்கள்.

இதற்கிடையே பத்திரிகையாளர் விக்னேஷ்ராஜா அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை நாமும் வெளியிட்டிருந்தோம். அதோடு விட்டுவிடாமல் அந்தக்காட்சியை எப்படி அனுமதியளித்தீர்கள்? என்றும் விளக்கம் கேட்டு சென்சார் போர்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் விக்னேஷ்ராஜா.

அதற்கு முறையான விளக்கத்தை கொடுத்திருக்கும் அதிகாரிகள், சத்யம் தியேட்டரில் காண்பிக்கப்பட்ட ‘என்றென்றும் புன்னகை’ ட்ரெய்லரில் விதி மீறப்பட்டுள்ளதாக உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.


அந்தப் படத்தில் அப்படியொரு காட்சி இருப்பதே எங்கள் கவனத்திற்கு வரவில்லை. நீங்கள் சொல்வது போல அவர்கள் எங்களிடம் அனுமதி கேட்டு கொடுத்திருக்கும் ட்ரெய்லரிலும் சம்பந்தப்பட்ட அந்த காட்சி இல்லை என்று கூறியிருக்கும் அவர்கள் இது சம்பந்தமாக அந்தப்படத்தின் தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம் என்று பதில் கூறியிருக்கிறார்கள்.

இதனால் திட்டமிட்ட தேதியில் ‘என்றென்றும் புன்னகை’ படம் ரிலீஸ் ஆகுமா என்று திரையுலகினர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த ட்ரெய்லரை பார்த்த யாரும் கோர்ட்டில் வழக்கு போடாத வரை பிரச்சனை இல்லை, மீறி யாராவது போட்டால் அதுவே மாசக்கணக்கில் இழுத்தடிக்குமே? என்றும் கோடம்பாக்கத்தினர் ‘உச்’ கொட்டுக்கிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர்… சில சுவாரஸ்ய செய்திகள்!

சச்சின்… 

இந்திய கிரிக்கெட் அணியின் அஸ்திவாரம். சாதனைகளின் சிகரம்! இந்திய நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினர். முக்கியமாக, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அடையாளம். அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200வது டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். 

அந்தப் போட்டியோடு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். அவரது ஓய்வு அறிவிப்பு, பல கிரிக்கெட் ரசிகர்களைக் கலங்க வைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சச்சின் குறித்த சில சுவாரஸ்யமான செய்திகள் இங்கே…

இந்திய இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் நினைவாக, சச்சினின் தந்தை அந்தப் பெயரைச் சூட்டினார்.

டென்னிஸ் விளையாட்டு வீரர் ‘ஜான் மெக்என்ரோ’தான் சச்சினுக்கு ஆதர்சம். ஆரம்ப காலத்தில் அவரைப் போலவே நீளமாக முடிவளர்த்து, அதன் நுனியில் ரப்பர் பேண்ட் ஒன்றைப் போட்டிருப்பார் சச்சின். அவருடைய நண்பர்கள், அவரை ‘மெக்என்ரோ’ என்றுதான் அழைப்பார்கள். 

டென்னிஸ் விளையாட்டு வீரார்களான போரிஸ் பெக்கர், பீட் சாம்ப்ராஸ், ரோஜர் ஃபெடரர் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர் டீகோ மாரடோனா ஆகியோரை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஃபாஸ்ட் பவுலராக விரும்பினார். அதற்காக ‘எம்.ஆர்.எஃப். பேஸ் அகாடமி’யில் சேர்ந்தார். ஆனால், தலைமை பயிற்சியாளர் (Coach) அவரை பேட்டிங்கில் கவனம் செலுத்தச் சொன்னதன் பேரில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

கோகுலாஷ்டமி, ரக்‌ஷ பந்தனா, ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் மிக அதிக ரன்களைக் குவித்திருக்கிறார்.

வினோத் காம்ப்ளி, சலீல் அங்கோலா போன்ற சக கிரிக்கெட் தோழர்களுடன் ‘உங்களைவிட என்னால் அதிகம் வடா-பாவ் சாப்பிட முடியும்’ (I-can-eat-more-Vada-pavs-than-you) போட்டியில் பங்கேற்பது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
கடல் உணவுகள் சச்சினுக்கு மிகவும் பிடித்தவை. சொந்தமாக ஒரு ரெஸ்டாரன்ட் வைத்திருக்கிறார்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவதை மிகவும் விரும்புவார்.
இந்திப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரையும் இங்கிலாந்து ராக் இசைக்குழு ‘டைர் ஸ்ட்ரெயிட்ஸ்’ம் பிடித்தவர்கள். சச்சினின் பெர்சனல் இசைத் தொகுப்புகளில் இவற்றுக்கு நிரந்தர இடம் உண்டு.

பிள்ளையாரின் தீவிர பக்தர். அதிகாலை நேரங்களில் அடிக்கடி சித்திவிநாயகர் கோயிலுக்குப் போகும் பழக்கமும் உண்டு.

விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார்.

குளூகோஸ் பிஸ்கெட்டை டீயில் போட்டு ஸ்பூனால் ருசித்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு.

இருகைப் பழக்கம் உடையவர். பேட்டிங் செய்வது வலது கையில். ஆட்டோகிராப் போடுவதும் சாப்பிடுவதும் இடது கையில்.

ஆரம்ப நாட்களில் தன் கிரிக்கெட் பொருட்களுடன் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒவ்வொருமுறை அவுட்டாகி வெளியேறும் தருணங்களையும் சரியாக நினைவில் வைத்திருப்பவர். எந்த பவுலரால் அவுட் ஆக்கப்பட்டோம் என்பதையும் துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பவர்.

கொசு, ஈ போன்ற பூச்சிகளை அடிக்கும் சாதனத்தால் கிரிக்கெட் பந்தை சச்சின் அடித்து நொறுக்குவது போல ஒரு குளிர்பான விளம்பரம் வந்தது. 

அதற்காகவே பள்ளிக்குப் போக மறுத்தார். படத்தை உருவாக்கிய பிரகலாத் காக்கரிடம், ‘இந்த விளம்பரம் விளையாட்டைவிட என்னைப் பெரிய ஆளாகக் காட்டுகிறது’ என்று முறையிட்டார். பிறகு, அந்த விளம்பரம் மாற்றி அமைக்கப்பட்டது, கிரிக்கெட் ஸ்டம்பால் அவர் பந்தை அடிப்பது போல. 

கிடைக்கிற மிகக் குறைந்த ஓய்வு நேரங்களில் தன்னுடைய பகட்டான காரில் மும்பையை வலம் வருவது அவருடைய பொழுதுபோக்கு.

கோடைவிடுமுறையில், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் மரத்தில் இருந்து விழுந்துவிட்டார் சச்சின். அப்போது ‘கெய்டு’ என்ற இந்திப்படம் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கோபமடைந்த சச்சினின் 

சகோதரரும் வழிகாட்டியுமான அஜீத், கிரிக்கெட் கோச்சிங் கிளாஸுக்கு அவர் போகக்கூடாது என்று பனிஷ்மென்ட் கொடுத்தார்.

1992. நான்கு மாதங்கள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி, பல சாதனைகளை செய்துவிட்டு திரும்பியவர் மும்பை, கீர்த்தி காலேஜுக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

மிக அதிகமான ரன்களை குவித்திருந்தாலும் 1996ம் ஆண்டு வரை அவருக்கும் பேட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை. அதற்குப் பிறகுதான் ஒரு புகழ்பெற்ற டயர் தயாரிக்கும் நிறுவனம் அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

அவரை அவுட்டாக்கும் பவுலருக்கு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை பரிசாகக் கொடுப்பதை அவருடைய பயிற்சியாளர்கள் சர்தாஷ்ரமும் ராமாகாந்த் ஆச்ரேக்கரும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். சச்சின் அவுட் ஆகவில்லை என்றால் அது அவருக்கே உரித்தாகிவிடும். அந்த வகையில் பல நாணயங்களை சேகரித்து வைத்திருக்கிறார் சச்சின்.

1988ல் பிராபோர்னேவில் நடந்த போட்டியில், பாகிஸ்தானுக்காக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் ஃபீல்டிங் செய்திருக்கிறார்.
1987ல் வாங்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ஆக பணியாற்றியிருக்கிறார்.
அவர் தோன்றிய முதல் விளம்பரப்படம், ‘பிளாஸ்டர்’(Plaster) க்காக.

பள்ளியில் படிக்கும் நாளில், அவருடைய சுருள் சுருளான நீளமான முடியைப் பார்த்து, நண்பர் அதுல் ரானடே கூட அவரைப் பெண் என்று தவறாக நினைத்த சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.

‘தீவார்’, ‘ஜாஞ்சீர்’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, அமிதாப்பச்சனின் தீவிர ரசிகராகிப் போனார் சச்சின்.

மழைக்கால ஓய்வு நாட்களில் டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடுவது சச்சினுக்கு ரொம்பப் பிடிக்கும்.

1988. ஹாரிஸ் ஷீல்டு போட்டி. சச்சினும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்த போட்டி. கோச்சின் உதவியாளர் ‘டிக்ளேர்’ செய்ய முயற்சிக்க, அதைத் தவிர்த்து, தொடர்ந்து விளையாடுவதற்காக, பாட்டுப் பாடி, விசிலடித்தார் சச்சின்.

சச்சினுக்கு சர்வதேச தரத்திலான முதல் ஜோடி கிரிக்கெட் ஷூவை வாங்கிக் கொடுத்தவர், சக கிரிக்கெட் தோழர் ப்ரவீன் ஆம்ரே.

பள்ளி நாட்களில் கொஞ்சம் அடாவடியான ஆளாக இருந்தாலும், சச்சினுக்கு பூனைகளையும் நாய்களையும் ரொம்பப் பிடிக்கும். அவருடைய முதல் கேப்டனான சுனில் ஹார்ஷே, அவருக்கு சண்டை பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். அதன் காரணமாகவே, யாரையாவது அறிமுகப்படுத்தும்போது சச்சினின் முதல் ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்… ‘‘நான் இவரை தோற்கடிச்சிடுவேனா?’’.

கிழக்கு பாந்தராவில், அவருடைய சாஹித்ய சாஹ்வாஸ் அபார்ட்மெண்ட்டுக்கு அருகே ஓடும் சிறிய ஓடையில், தவளைக் குட்டிகளையும் மீன் குஞ்சுகளையும் பிடிப்பது அவர் வழக்கம்.
அம்மாவுக்காக ஒருமுறை ‘பாஜி’ உணவு வகையைச் செய்து கொடுத்திருக்கிறார்.

அவரை வளர்த்த செவிலித்தாய் இப்போது, ‘சச்சுச்சி பாய்’ என்று சச்சினின் உலக அளவிலான ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அவருடைய விளையாட்டுத் தோழன் ரமேஷ் பார்தே. அவர் இருந்த காலனி வாட்ச்மேனின் மகன். சச்சின் அவரிடம், தண்ணீரில் நனைத்து ஒரு ரப்பர் பந்தை வீசச் சொல்வாராம். சச்சினின் பேட்டின் நடுவில் பட்டிருக்கும் ஈர அடையாளத்தை வைத்து, அவர் சரியாக பந்தை அடித்திருக்கிறாரா என்று அறிந்து கொள்வாராம் ரமேஷ்.

சச்சின் கொஞ்சம் வேடிக்கையான ஆள். ஒருமுறை சவுரவ் கங்குலியின் அறையில் ஒரு ஹோஸ் பைப்பை வைத்து, குழாயைத் திறந்து விட்டுவிட்டார். எழுந்து கொண்ட கங்குலி, அறை தண்ணீரில் மிதப்பதைப் பார்த்தார். அதிலிருந்து, சச்சின், கங்குலியை ‘பாபு மோஷல்’ என்று அழைப்பார். கங்குலி, சச்சினை ‘சோட்டா பாபு’ என்று அழைப்பார்.

ஆல்ரவுண்டர் கபில் தேவின் 100வது டெஸ்ட் போட்டியில்தான் சச்சினின் முதல் டெஸ்ட் அரங்கேற்றமானது.

சச்சின் தன்னுடைய டெஸ்ட் போட்டியின் முதல் பந்தை பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸிடம் இருந்து எதிர்கொண்டார். அதுதான் வாக்கர் யூனுஸுக்கும் முதல் அரங்கேற்றம்.

ஒருநாள் போட்டி விளையாட்டுகளில், தன்னுடைய முதல் 200 ரன்களை சச்சின் குவித்தது பிப்ரவரி 24, 2010 அன்று. அவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்களைக் குவித்து 22 வருடங்கள் கழித்து நிகழ்ந்த நிகழ்வு அது.

சுனில் கவாஸ்கரின் சாதனையை, அவர் நிகழ்த்திய அதே டிசம்பர் 10ம் தேதி சமன் செய்தார் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டியில் 34வது சதம். 2004ம் ஆண்டு டாக்காவில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் சதம். 2005ம் ஆண்டு, கோட்லாவில் நடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக சதம்!

இந்தோரில் 15 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டி. நட்ட நடு ராத்திரி. சச்சினால் தூங்க முடியவில்லை. எழுந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்தத் தளம் முழுக்க மரப்பலகையால் ஆனது. 

அவருடைய பேட்டில் இருந்து எழுந்த சத்தம் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தது. ஹோட்டல் மேனேஜர், பயிற்சியாளர் வாசு பரஞ்பேயிடம் புகார் கொடுத்தார். பயிற்சியாளர், ‘போ! அவர் மேலே பந்து வீசு!’ என்று சொன்னார்.

மசாஜ ஏன்? யார்?எப்போ?எப்படி?

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ்.மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால் ஒரு சில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும்.

அதிலும் இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போமா?.

மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், “லாக்டிக் ஆசிட்’ சேரும். மசாஜ், தசைகளில் சேரும், “லாக்டிக் ஆசிட்’களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.

ரத்த ஓட்டம்: மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம்: வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.

இதயம்: முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது.

பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:

* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

Sunday, October 27, 2013

கடவுள் Vs அறிவியல்

ஒரு நாத்திக ஆசிரியர் அறிவியல் ஏன் கடவுளை ஏற்கமறுக்கிறது என்பதை பற்றி விளக்கமளித்தார். ஒரு மாணவனை எழுப்பி கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

ஆசிரியர் : நீ கடவுளை நம்புகிறாயா ?

மாணவர் : ஆம்

ஆசிரியர் :உனது கடவுள் நல்லவரா?

மாணவர் :ஆம்

ஆசிரியர் :உனது கடவுள் சக்தியுள்ளவரா?

மாணவர் : ஆம்

ஆசிரியர் :எனது அண்ணன் கடவுளை வணங்கியபோதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடவுள் அவரை காப்பாற்றவில்லை. பிறகு எப்படி கடவுள் நல்லவராக முடியும்?

மாணவர் :(பதிலேதும் பேசவில்லை)

ஆசிரியர் :உன்னால் விடையளிக்க முடியாது. சரி வேறொரு கேள்வி கேட்கிறேன் அதற்கு பதில் சொல். சாத்தான் நல்லவனா?

மாணவர் : இல்லை

ஆசிரியர் :சாத்தான் எங்கிருந்து வந்தான்?

மாணவர் : கடவுளின் படைப்பு

ஆசிரியர் : இவ்வுலகில் தீயசக்தி உள்ளதா?

மாணவர் : ஆம்

ஆசிரியர் :அந்த தீயசக்தியை படைத்ததும் உனது கடவுள் தானே?

மாணவர் : (பதிலேதும் பேசவில்லை)

ஆசிரியர் : இவ்வுலகத்தில் வியாதி, ஒழுக்கக்கேடு, பொறாமை, வெறுப்பு ஆகிய அனைத்தும் இருக்கத்தானே செய்கின்றன? இவை அனைத்தையும் உருவாக்கியது யார்?

மாணவர் : (பதிலேதும் பேசவில்லை)

ஆசிரியர் :அறிவியல் உன்னுடைய அறிவினைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறது. சரி சொல் நீ கடவுளை பார்த்திருகிறாயா?

மாணவர் : இல்லை

ஆசிரியர் : கடவுளைப் பற்றி கேள்விபட்டிருக்கிறாயா?

மாணவர் : இல்லை

ஆசிரியர் : கடவுளை உணர்ந்திருக்கின்றாயா? ருசித்திருக்கின்றாயா? நுகர்ந்திருக்கின்றாயா? எதுவும் செய்திருக்கமாட்டாய். சொல் இன்னமும் நீ கடவுளை நம்புகிறாயா?

மாணவர் : ஆம்

ஆசிரியர் : அறிவியல் கூறுகிறது கடவுளை நீ அனுபவத்தால், சோதனையால், நிரூபிக்கத்தக்க நெறிமுறையால் உண்டு என்ரு கூறமுடியாது. ஆகவே கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. இப்பொழுது என்ன சொல்வாய்?

மாணவர் : நான் என் நம்பிக்கையை மட்டுமே கொண்டிருக்கிறேன்

ஆசிரியர் : ஆம். நம்பிக்கை. இதைதான் அறிவியல் ஏற்றுக்கொள்வதில்லை.

மாணவர் : வெப்பம் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம்

மாணவர் :குளிர் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம்

மாணவர் : இல்லை. குளிர் என்ற ஒரு விஷயம் இல்லை. வெப்பம் , அதிக வெப்பம் , சிறிதளவு வெப்பம் அல்லது வெப்பமேயில்லை என்பதே சரி. குளிர் என்ற ஒன்று கிடையவே கிடையாது. வெப்பம் பூஜ்யம் டிகிரீயை (Zero degree) தொடுமானால் வெப்பம் இல்லை (No heat) என்பதே பொருள். அது குளிர் அல்ல. குளிர் என்னும் சொல் வெப்பம் இல்லாததையே குறிக்கிறது.

ஆசிரியர் : (பதிலேதும் பேசவில்லை)

மாணவர் : குளிரை நம்மால் அளவிட முடியாது. வெப்பம் என்பது ஒரு சக்தி. ஆனால் குளிர் வெப்பத்தின் எதிர்மறை கிடையாது. குளிர் வெப்பம் இல்லாததை குறிக்கிறது அவ்வளவே.

ஆசிரியர் : (பதிலேதும் பேசவில்லை)

மாணவர் : இருட்டு, இரவு என்ற ஒன்று உண்டா?

ஆசிரியர் : ஆம்

மாணவர் : தவறு. இருட்டு என்பது வெளிச்சம் இல்லாததையே குறிக்கிறது. வெளிச்சம், அதிக வெளிச்சம், வெளிச்சமில்லை என்பதே உண்மை.இருட்டு என்பது உண்டு என்றால் உங்களால் அந்த இருட்டை மேலும் இருட்டாக்க முடியுமா?

ஆசிரியர் : என்ன சொல்ல வருகிறாய்?

மாணவர் : உங்களுடைய கடவுள் பற்றிய தத்துவம் தவறு.

ஆசிரியர் : தவறா? எப்படி ?

மாணவர் : அறிவியல் மின்சாரம் மற்றும் காந்த சக்தியை பயன்படுத்துகிறது. ஆனால் அதை பார்க்க முடியாது. அதை முழுவதுமாக அறிவியலால் இதுவரை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. மரணம் என்பது வாழ்வின் எதிர்மறை அல்ல. நமது வாழ்வு முடிவுற்றது என்பதையே குறிக்கிறது.

மாணவர் : நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பரிணாமவியல் தத்துவத்தை நடத்துவீர்களா?

ஆசிரியர் : ஆம். நடத்துவேன்.

மாணவர் : பரினாமவியல் கோட்பாட்டை நீங்கள் உங்கள் கண்களால் கண்டதுண்டா?

ஆசிரியர் : இல்லை

மாணவர் : ஆக நீங்கள் சொன்னது போலவே அறிவியலால் பரிணாமவியல் கொள்கையை நிரூபிக்க முடியவில்லை. ஆனாலும் நீங்கல் அதை கற்றுக்கொடுக்கிறீர்கள். ஆக நீங்கள் அறிவியல் பாடம் எடுக்கவில்லை என்பது தானே உண்மை.

மாணவர் : இந்த வகுப்பில் நமது ஆசிரியரின் மூளையை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அல்லது உணர்ந்திருக்கின்றீர்களா? ருசித்திருக்கின்றீர்களா? நுகர்ந்திருக்கின்றீர்களா? ஆக அறிவியல் கூற்றுபடி நமது ஆசிரியருக்கு மூளையேயில்லை. மூளையில்லாதவர் நமக்கு எப்படி பாடம் எடுக்க முடியும்?

ஆசிரியர் : ஆனால் இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்.

மாணவர் : இது போலவே மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவும் நம்பிகையே.

இது ஒரு உண்மை சம்பவம். அந்த மாணவர் வேறு யாருமல்ல. நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களே.

கோபத்தை அடக்க 10 வழி

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும், இனிமையையும் தொலைத்து விடுகிறோம் பல வேளைகளில்.

கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன. பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும் தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. இன்றைய நாகரீக வாழ்வில் அதிகரித்து வரும் மண முறிவுகளுக்கு கோபத்தின் பங்கு பெரும்பாலானது.

கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன்,உடலளவிலும் மன அளவிலும் நம்மை பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

கோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்குள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம். மேலதிகாரியின் மீதான கோபம் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது.

எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும்,இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பாடும். பலர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி பல விதமாகப் பேசியிருக்கிறார்கள்.

அவற்றில் என்னைக் கவர்ந்த பத்து தகவல்களை இங்கே தருகிறேன்.

1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.

2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ?வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.
3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும்.
4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும்.

5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்.
6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.
8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.

9. பேசுங்கள். உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.

10. மன்னியுங்கள்! இந்த பண்பு இருந்தால் கோபமற்ற சூழலை உங்களால் எளிதில் உருவாக்க முடியும். புன்னகையுடன் கூடிய மன்னிப்பை வழங்கவும், மன்னிப்பு கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும் பழகுங்கள்.
இந்த பத்து தகவல்களும் கோபத்தை அடக்க, அல்லது கோபத்தை மிதப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கை நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதை கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல், மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம்.

வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.

எந்திரனை விஞ்சிய ஆரம்பம் டீசர்!

வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது என்றாலும் சமீபகாலமாக அங்கும் மார்க்கெட் கொஞ்சம் எகிறிக் கொண்டுதான் வருகிறது.ஆனாலும் அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20 முதல் 30 ஆகத்தான் இருக்கும். அதுவும் டாப் ஹீரோகக்ளின் படம் மட்டுமே ரிலீஸாகும். மேலும் தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்துதான் ரிலீஸ் செய்வார்கள்.இந்நிலையில் தீபாவளியையொட்டி ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இதற்கு முந்தைய சாதனை எந்திரன் படம் தமிழ் – இந்தி இரண்டு மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 85 திரையரங்குகளில் ரிலீஸானாலும் தமிழில் மட்டும் 63 இடங்களில் ரிலீஸாகியிருந்தது. விஜய் நடித்த தலைவா படம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 54 இடங்களில் ரிலீஸானது.அதை எல்லாம் தாண்டி இப்போது ஆரம்பம் தமிழில் மடடும் 75 இடங்களில் ரிலீஸாகவிருக்கிறது என்பதை சிலாகித்து பேசுகிறார்கள்

அதே சமயம் அஜீத்தின் “ஆரம்பம்” படத்தில் “ஆரம்பமே” பாடலின் டீசறை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த பாடலின் லிங்க் உங்களுக்காக.https://www.youtube.com/watch?v=SQbWJHeKWu0

Friday, October 25, 2013

வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள்!


நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.js)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும்

இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென் பொருளின் சிறப்பாக சொல்லலாம்.

கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்த வித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் சென்டி மீட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செ.மீ.

மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம்.

லிங்க் ::http://www.sweethome3d.com/index.jsp

எஸ்.வி. சேகர் தகவல்கள்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.

தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.

ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள்(inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது. பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் உண்டு.

மேலும் மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்றும இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

அத்துடன் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

#கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். #வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக்#கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் #குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

‘யூ டியூபால் பிசியான பாடகி யாகி விட்ட இல்லத்தரசி!

இப்போதெல்லாம் யூ டியூப்-பில் குறும்படம் எடுத்தவர்கள் டாப் டைரக்டர்களாக வருவது அதிகரித்துக் கொண்டே போவது தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையில் கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் ‘யூடியூபில்’ வெளியானதைத் தொடர்ந்து பிசியான சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளாராம்.இப்படி ‘யூடியூபால்,’ பிரபலமடைந்துள்ள அம்மணிக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை என்பதுடன் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்பது விசேஷ தகவல்.

கேரளாவைச் சேர்ந்தவ சந்திரலேகா.இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக உயர் கல்வி எல்லாம் கற்க முடியவில்லை. ஆயினும் இவருக்கு இளம் வயதிலேயே நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும் முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு இவருக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் மடடும் பங்கேற்று பல முறை பரிசுகளை பெற்றார்.

இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு தன் கைக் குழந்தையை தூங்க வைப்பதற்காக பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். அப்படி குழந்தையை கையில் தூக்கி வைத்தபடி அவர் பாடியதை குடும்ப நண்பர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோ கடந்த மாதம் ‘யூடியூபில்’ வெளியானது. அடந்த வீடியோ லிங்க் இதுதான்::http://www.youtube.com/watch?v=ZvMwyrD4EyU

ஒரே மாதத்தில் ஏழு லட்சம் பேர் பாக்கும் அளவுக்கு இந்த வீடியோ பிரபலமானது. இப்படி சந்திரலேகா இனிமையான குரலில் பாடுவதை பார்த்த- கேட்ட மலையாள சினிமா இயக்குனர்கள் இப்போது தங்கள் படத்தில் அவரை பாட வைப்பதற்கு அவரின் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றார்களாம்.

பிரபல் மலையாள இசையமைப்பாளர் டேவிட் ஜான் தான் இசையமைக்கும் புதிய படத்துக்கு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாட வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் சந்திரலேகாவின் பாடலை ‘யூடியூபில்’ பார்த்த பின் தன் முடிவை மாற்றி அவரையே தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று பார்த்துக் கொள்ளுங்களேன். மேலும் சில இசையமைப்பாளர்களும், சந்திரலேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதற்கிடையே பிரபல பின்னணி பாடகி சித்ரா போனில் தொடர்பு கொண்டு சந்திரலேகாவை பாராட்டியுள்ளார். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பாராட்டியுள்ளார். இத்தனைக்கும் ‘யூடியூபால்,’ இவ்வளவு பிரபலமடைந்துள்ள சந்திரலேகாவுக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை; மின்னஞ்சல் முகவரியும் இல்லை என்பது விசேஷ தகவலாக்கும்!.

Tuesday, October 22, 2013

சென்னைக்கு 2௦மிடம்!

இந்தியாவில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு சிறந்த நகரம் பட்டியலில் பெங்களூர் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களை சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், தலைநகரின் பிராந்தியத்தில் அமைந்துள்ள நொய்டா, குர்கான் ஆகிய நகரங்கள் முறையே 17, 19 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.

உள்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம், நகர கலாச்சாரம், அடிப்படை வாழ்க்கைத் தரம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் பெங்களூர்தான் தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் உகந்த இடமாக உள்ளது. மேலும் இங்கு மின்சாரம், மற்றும் குடிநீர் சப்ளை, போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி, அலுவலக இடங்கள், மருத்துவ சேவை தாராளமாக கிடைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் பெங்களூரின் தட்பவெப்பநிலை மேலை நாட்டினரும் விரும்பும் வகையில் இதமாக உள்ளது.

இந்த வகையில் சென்னை, மும்பை, பூனா ஆகிய நகரங்கள் பெங்களூருக்கு அடுத்த சிறந்த தொழில் மையங்களாக உள்ளன என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. இந்த ஆய்வறிக்கையில் நாட்டிலுள்ள 21 தொழில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக நாட்டின் தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும் நொய்டா 17–வது இடத்திலும், கூர்கான் 19–வது இடத்திலும்தான் உள்ளன.

முக்கிய நகரங்களை பின்னுக்கு தள்ளி சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் தொழில் வளர்ச்சியில் நன்கு முன்னேறி வருவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நடுத்தர நகரங்களான இந்தூர் மற்றும் புவனேஸ்வர் முறையே 5 மற்றும் 6–வது இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டின் கோயம்முத்தூர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அகமதாபாத் எட்டாவது இடத்திலும், நாக்பூர் ஒன்பதாவது இடத்திலும், கொச்சி 10–வது இடத்திலும் உள்ளன.மறுசீரமைப்பு சூழலை உருவாக்கும் சர்வதேச முயற்சிகள், மேலாண்மை (ஜிஐஆர்இஎம்) மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் டி.டி.இஜட் ஆகியவை நடத்திய ஆய்வின் முடிவில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி – பொறுப்பில்லாத கோணங்கித்தனம்

ஒளி விளக்கு திரைப்பட்த்தில் ஒரே நேரத்தில் ஐந்து எம்.ஜி.ஆர் வந்து ஆடிப் பாடும் ஒரு அசத்தல் தத்துவ பாடல்.

ஒரு எம்.ஜி.ஆர். திரையில் வந்தாலே தாங்காத நம் ரசிகன், செய்வதறியாது திகைத்த தருணம்.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை நீதான் ஒரு மிருகம்”

பாடல் சிச்சுவேசன், நிறைய பேருக்குத் தெரியும், தெரியாதவருக்கு. இது டாஸ்மாக் மேட்டர். குடிக்கு அடிமையானவனை அவனது மனசாட்சி அதன் பாதகங்களை சொல்லுவதாய் அமைந்த பாடல்.

சிக்கென்று பளிர் உடையில், துறு துறு வென நடிப்பில், நறுவிசான நாகரிக உடல் அசைவில் (பாடி லேங்குவேஜ்- சூப்பர்) தூள் கிளப்பும் காட்சி அமைப்பு. ஆழ்ந்த அர்த்தம், எளிமை வார்த்தைகள், இனிய துள்ளலான இசை, திரையில் தூள் பரத்தும் காட்சி அமைப்பு என்று எல்லாம் நல்லதாய் அமைந்த பாடல். என் பேவரிட் என்றும் சொல்ல்லாம்.

அழுது வடிந்து கொண்டுதான் தத்துவம் சொல்லணும்னு இல்லை என புது டிரெண்ட் செட்டர்.

சரி இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். தலைப்பு பயங்கர கோபத்தில எழுதின மாதிரி இருக்கே என நினைப்பருக்கு, இதனுடன் தொடர்புடைய இன்னொரு நிகழ்வு இதோ.

ஒரு நகைச்சுவை மேடை நாடகத்தில், கதா நாயகனுக்கு வால் முளைத்து விடுவதாய் கதை. தனிமையில் புலம்பிக் கொண்டி இருக்கும் அவன் சென்று ரேடியோ ஆன் செய்கிறான். பாடல் ஒலிக்கிறது.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை.....
(இல்லையா!!! என அதிர்ச்சியில் டிராமா நாயகன் கவுண்டர் வசனம் தர.... அரங்கமே சிரிப்பில் அதிருகிறது)

நீதான் ஒரு மிருகம்”
சரியாக இந்த இடத்தில் ஒட்டை விழுந்த ரெக்கார்ட், இந்த ஒரு பத்த்தையே திரும்ப திரும்ப சொல்ல சலிப்போடு ரேடியோ ஆப் செய்கிறான்.

நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்து ரொம்ப காலம் ஆனது. மீண்டுமொறு நேரத்தில் ஒளிவிளக்கு பாடல் மறுபடி ஒலிக்க, எனக்கு ஆச்சர்யம். பாடல் வரி காதில் விழுந்து மனதில் எம்.ஜி.ஆருக்கு பதில் காமெடி கிங். தத்துவம் போயி காமெடி.

இது என்ன கலாட்டா. இத்தனை வருடங்களாய் ஆக்கிரமித்து இருந்த ரெபரன்ஸ் பாயிண்ட், மாறி விட்ட்தே. என்னைப் போல் ரசிகனுக்கும் இதே உணர்வு வருமே என்றவுடன் சட சட வென சில கேள்விகள்.

நமக்கு சொந்தம் இல்லாத அடுத்தவர் கற்பனையை அல்லது சிந்தனையை அவரின் அனுமதி இல்லாம, நாம் எடுத்துக் கொண்டு, முன்னவர் சொன்னதை அர்த்தம் திரித்து, அவரது நோக்கம் சிதிலமடைந்தால் நாம் அவருக்கு செய்யும் துரோகம் ஆகுமோ...

நிச்சயமாய் எந்த உள் நோக்கமும் இல்லாமல், சும்மா காமெடி தான் பண்ணியிருக்கிறார் என புரிகிறது. சும்மா.... காமெடிக்கு தான பாஸ், என்றாலும், சிரிப்பு வரும் என்பதால் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா.
காமெடி செய்யும் போது கவனமாய் இருக்க வேண்டுமோ.

மனதை லேசாக்கும் சிரிப்பு அவசியம் ஆனாலும், வலுக்கட்டாயமாய் தினிக்கும் நகைச்சுவை வன்முறையோ.

நாட்டுக்கு தேவை நல்ல சிந்தனையா, சிரிக்க வைக்கும் காமெடியா..

கலைஞர்களுக்கு சமூக மாற்றும் சக்தி இருப்பதால், நமது ஒவ்வொரு நடையும் கவனமாய் இருக்க வேண்டுமோ.

கலைஞர்களுக்கு சமூக பிரங்ஞை மிக மிக அவசியமோ...

“இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி?”

பாத்திமா தாகிரா…

சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் ‘இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை’ எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார்.

“மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்’ என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்தது” என்று நிதானமாகத் தன் பார்வையை முன்வைக்கிறார் ஃபாத்திமா.

“சிறு வயதிலேயே அரபு மொழி கற்றுக்கொண்டேன். அதனால் இஸ்லாத்தின் வேத நூல்களை மூல மொழியிலேயே படிக்க முடிந்தது. அவற்றை ஆழ்ந்து கற்கும்போது மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவும் கிடைத்தது.‘மரணித்த எந்த உயிரும் எவ்வகையிலும் (பேயாகவோ, ஆவியாகவோ) இந்த உலக வாழ்வைத் திரும்பப் பெற இயலாது’ என்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்ளாமல் பேய் என்றும் ஆவி என்றும் சொல்லி, உறவினர்கள் இறந்துவிட்டால்கூட அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தாங்களே முன்வந்து நடத்தாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி சடங்குகளைச் செய்கிறார்கள். இது தவறு.

இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே, பெண்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். முதலில் நான் கற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக ‘ஜனாசா’ எனும் இறுதிச் சடங்கு செய்யும் முறையை பல பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன்.

தாய் இறந்துவிட்டால் மகள்கூட இறுதிச் சடங்கு செய்ய முன் வர மாட்டார். அப்படி இருந்த பலர் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பழகி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 5,000 பெண்களுக்கு மேல் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள்.

எங்களது இந்தப் பணியை எங்கள் சமூகத்தினரே சிலர் எதிர்க்கிறார்கள். காரணம், இறுதிச் சடங்கில் நடைபெறும் ஒவ்வொரு சடங்குமே இவர்களுக்கு வருமானம்தான். நாங்கள் இலவசமாக இறுதிச் சடங்கு நடத்துவதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைபடுகிறது. அதனால் எதிர்ப்புகள். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு.

பெண்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே உள்ள பல தவறான கற்பிதங்களை, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் எங்களின் முதல் பணியாகக் கொண்டுள்ளோம். என்னுடைய இந்தப் பணிக்கு என் கணவர் ஆதரவாக இருக்கிறார்.

இறுதிச் சடங்கு செய்வதால் எந்தப் பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் கிடைக்கும் பூரண மன நிறைவு போதுமே என்று புன்னகைக்கிறார் ஃபாத்திமா.

தகவல்:http://tamil.thehindu.com/o

ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு

1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.கவுண்டமணிக்கு பிறகு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவராகவும் இருந்த வடிவேலு அரசியல் பிரச்சினைகளால் கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ திரைப்படத்தின் மூலம் ஆரம்பிக்கிறார்.

இதில் வடிவேலு நாயகனாக நடிக்கிறார்.அதிலும் தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயர் என இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். யுவராஜ் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து வடிவேலு விடம் கேட்டபோது “இப்போது ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் மடடும் நடித்து வருகிறேன். இப்படத்தின் ஷூட்டிங் 65 சதவீதம் முடிந்து விட்டது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையில் நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்புகிறேன்” என்றார்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?


இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

Sunday, October 20, 2013

தெரிந்ததும்... தெரியாததும்...

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது"

இந்தியா தீவிரவாத்ததை ஊக்குவிப்பதை போல் சித்தரிக்கும் திரைப்படம்!


பாகிஸ்தானில் பட்டையை கிளப்பும் ‘வார்’


பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத வெறியாட்டங்களின் பின்பலமாக இந்தியா உள்ளது போல் சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட ‘வார்’ என்ற திரைப்படம் பாகிஸ்தானில் தயாராகி, திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரிப்பதிலும், கதைக்கு வடிவம் தந்ததிலும் பாகிஸ்தான் ராணுவம் பக்கபலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிலால் லஷாரி என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பாகிஸ்தானில் உள்ள 42 தியேட்டர்களில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இந்த படம் கடந்த வெள்ளிக் கிழமை இரவு காட்சி வரை மட்டும் 42 1/2 கோடி ரூபாயை குவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் பக்ரீத் அன்று வெறும் 90 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும் வார் திரைப்படம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாரி குவித்துள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான்களை கூட இந்திய உளவுத்துறையான ‘ரா’ தான் வழிநடத்தி வருகிறது என்பது போன்ற காட்சியமைப்புகள் ‘வார்’ படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள போலீஸ் குடியிருப்பு ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, இந்தியாவை சேர்ந்த பெண் உளவாளி ஒருவர் ஆனந்த நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் இப்படத்தில் வருவதாக பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்தனர்.

கூகுளில் தேடலின் சுவடே இல்லாமல் தேடிக்கொள்ள

கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் இது நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுள் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முன வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுள் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.

ஸ்டார்ட்பேஜ் என்ன செய்கிறது என்றால் கூகுளில் நேரடியாக தேடாமல் தன் மூலமாக கூகுளுக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு ஸ்டார்ட்பேஜ் மூலம் கூகுளுக்கு செல்லும் போது வழக்கமாக கூகுளில் தேடும் போது நிகழும், ஐபி முகவரி சேகரித்தல், தேடல் முகவரி சேமிப்பு போன்றவை இல்லாமல் தேடிவிட்டு திரும்பலாம் என்கிறது. அதாவது தேடலில் சுவடு இல்லாமல் நிம்மதியாக தேடிக் கொள்ளலாம் என்கிறது.

அத்துடன் கூகுள் உள்ளிட்ட தளங்கள் இணையவ்ச்சிகள் கம்யூட்டருக்குள் அனுப்பும் குகுகீஸ் சாப்ட்வேரையிம் தடுப்பதாக ஸ்டார்ட்பேஜ் சொல்கிறது. கூகுள் சார்ந்த தேடிய‌ந்திரங்கள் பல‌ உண்டு. அவற்றில் இது சற்றே வித்தியாசமானது.

ஆனால் எந்த அளவு பயனுள்ளது என்று தெரியவில்லை,அதே சமயம் இணைய யுகத்தின் இப்போதைய மிகப்பெரிய பிரச்ச‌னையான இணையவாசிகள் பற்றிய தகவல் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியது.தேடியந்திர முகவரி:https://startpage.com/

Saturday, October 19, 2013

சிரிப்பதா?, அழுவதா ? வாஜ்பேயின் மூட நம்பிக்கை.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல்பிகாரி வாஜ்பேயின் மூட நம்பிக்கைபற்றிய செய்தி ஒன்று அவரைப்பற்றிய மதிப்பீட்டை மிகவும் கீழிறங்கச் செய்து விட்டது.

முன்னாள் பிரதமரான அவருக்குக் குடியிருப்புக்கு டில்லியில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.

அந்த வீட்டின் இலக்கம் எட்டு. எட்டு என்பது ராசியில்லாத எண் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் நம்பிக்கையாம். அதை மாற்றவேண்டும் என்று அவர் விரும்பினாராம். முன்னாள் பிரதமர் அல்லவா - கோப்புகள் மிகவேகமாகப் பறந்து பறந்து சென்றன.எட்டு என்பதற்குப் பதிலாக 6-ஏ என்று அந்த வீட்டின் இலக்கம் மாற்றப்பட்டு விட்டதாம்.

இதை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரிய வில்லை. மெத்த படித்தவர் - உலகம் சுற்றியவர் - நாள்தோறும் நிகழ்த்தப்படும் அறிவியல் வித்தைகளை நேரில் கண்டும், ஏடுகளில் படித்தும் அறியக்கூடிய நிலையில் இருக்கக் கூடியவர். அவருக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான மூட நம் பிக்கை இருக்கிறது என்றால், நம் நாட்டின் படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று யாராவது நம்ப முடியுமா?

ஒன்று, இரண்டு சொல்லும்போது எட்டு என்று எண்ணும் வருகிறது; அவ்வளவுதானே - அதற்குமேல் என்ன இருக்கிறது?

8 ஆம் எண் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நோய் வருமா? மற்ற வீட்டுக்காரர்களுக்கு நோயே வராதா? இந்த எட்டாம் எண் வீட்டுக்கு வருவதற்கு முன் அவருக்குச் சங்கடங்கள் ஏற்பட்டது இல்லையா?
அப்பொழுது ஏன் முழங்கால் வலிக்கு மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்?

எட்டாம் எண் வீட்டில் வசித்தவர்கள் மட்டும்தான் மரணத்தைத் தழுவினார்களா? மற்ற வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு சாவே நிகழவில்லையா?

இதில் மிகவும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என்னவென்றால், வீடு மாறவில்லை. அதே வீடுதான்; அந்த வீட்டின் எண்ணை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். எண்ணை மாற்றினால் அந்த வீடு மாறிவிடுமா?
தலைப்பாகையை மாற்றினால் தலைவலி போய்விடுமா?
குடிமக்களின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது? மக்களிடம் அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளதே!

அந்த அரசமைப்புச் சட்டத்துக்குச் சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டவர் குடிமகனின் அடிப் படைக் கடமைக்கு மாறாக மூட நம்பிக்கைச் சகதியில் புரளுகிறார்கள் அதுவும் முன்னாள் பிரதமர் ஒருவரே புரள்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்கத்தான் முடியுமா?
எட்டு என்பதுபோல 13 என்ற எண் ராசியில்லாத எண் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்கூட இருக்கிறார்கள்.

குரோவர் என்ற நீதிபதி டில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்தார். அவரைக் குற்றவாளி ஒருவன் கத்தியால் குத்திவிட்டான். உடனே, நீதிபதியை டில்லி மருத்துவமனையில் சேர்த்தனர். நீதிபதி கண்விழித்துப் பார்த்தபோது அந்த அறை எண் 13 என்று இருந்தது. அவ்வளவுதான் பெருங்கூச்சல் போட்டார்.

இந்த 13 என்ற எண் எனக்கு இராசி இல்லாத எண்! நான் கத்தியால் குத்தப்பட்ட தேதி 13, நான் விசாரித்த அந்த வழக்கின் எண் 13 - எனவே, அது எனக்கு இராசியில்லாத எண் - உடனே என்னை இந்த அறையிலிருந்து மாற்றுங்கள் என்று குய்யோ முறையோ என்று சத்தம் போட்டார்.

நீதிபதியாயிற்றே - மதிப்புக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்; என்ன செய்தது மருத்துவ மனையின் நிருவாகம்? அந்த அறையில் இருந்த பழைய 13 என்ற எண் பலகையை எடுத்துவிட்டு, 12-ஏ என்று புதிய பல கையை மாட்டிவிட்டனர்; அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்.

நீதிபதிகளும், பிரதமர்களும்கூட மூட நம்பிக்கைவாதிகளாக இருந்தால், இந்த நாடு உருப்படுமா? வழிகாட்ட வேண்டிய வர்கள் வழிதவறிச் செல்லுகின்றனரே - அதுவும் வாஜ்பேயி போன்ற மூட நம்பிக்கைவாதிகள் ஒரு நாட்டை ஆண்டது எவ்வளவுப் பெரிய கெட்ட வாய்ப்பு!

இந்து மதத்தையும், மூட நம்பிக்கையையும் பிரிக்க முடியாதுதான். அது வாஜ்பேயியாக இருந்தாலும் சரி, அடுத்த பிரதமர் என்று அவர்கள் அறிவிக்கும் அத்வானியும் சரி எல்லாம் ஒரே குட்டையில் (மூட) ஊறிய மட்டைகள்தான். இவர்களை ஒதுக்கி வைப்பதில் மக்கள் கவனம் செலுத்தவேண்டும்; அப்பொழுதுதான் நாடு உருப்படும் - எச்சரிக்கை!

13, 8அய் கண்டால் நடுக்கமா?
மூட நம்பிக்கைகளில் எத்தனையோ வகை உண்டு. ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; மூடநம்பிக்கைகளின் வகைகளை மட்டும் கணக்கிடவே முடியாது.

நேரம், காலம், நல்ல நாள், கெட்ட நாள், சகுனம், வாஸ்து, எண் ஜோதிடம், இராசிபலன் என்று ஒரு நீண்ட தூரம் மூடத்தனம் பயணித்துக் கொண்டேயிருக்கும்.

எல்லாம் கடவுள் படைப்பு என்றால், இந்த மூடத்தனங்கள் யார் படைப்பு?
அதற்கும் அவன்தான் காரணம் என்றால், அவனைவிட அயோக்கியன், பொறுப்-பில்லாதவன் வேறு ஒருவன் இருக்க முடியுமா?

சிலருக்கு 8 இராசி இல்லாத எண்ணாம்; இன்னும் சிலருக்கு 13 பீடை எண்ணாம். எட்டாம் எண்ணைப் பிடிக்காதவர்கள் 13 அய் ஏற்றுக் கொள்கிறார்கள்; 13 அய் பிடிக்காதவர்கள் எட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில், எந்த எண் யாரைப் பாதிக்கும்?

எட்டும், பதிமூன்றும் கெட்ட சகுனங்கள் என்று யாரும் சேர்த்துச் சொல்லுவதில்லையே!

ஏதோ கண்மூடித்தனமாக எதையோ கிறுக்குத்தனமாக கோணங்கித்தனமாக, மது குடித்தவன் மதி மயங்கி உளறுவதுபோல இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.சரி, இங்கு மட்டும்தான் முட்டாள்கள் இருக்கிறார்களா? முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தம் என்று கூற முடியாதுதான்.

13 அய் கெட்ட நாள் என்று கருதக் கூடிய முட்டாள்கள் உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். விஞ்ஞான பூர்வமான நிரூபணம் இதற்கு உண்டா என்று கேள்வி கேட்டால், இது போன்ற பிரச்சினைகளில் எல்லாம் விஞ்ஞானம், பகுத்தறிவு என்ற அளவுகோல்கள் எல்லாம் கூடாது - நம்பிக்கை - அய்தீகம் என்று கூறி ஓட்டமாக ஓடிவிடுவார்கள்.

இலண்டனில் அரசி குடும்பத்தில்கூட இந்த 13 மூட நம்பிக்கை இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 1930 ஆகஸ்ட் 21 இல் பிறந்தார்.ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் காத்திருந்தனராம். ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13 ஆம் எண் வரிசையில் இடம்பெற நேரிட்டிருக்குமாம்.

அய்ரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் விஞ்ஞானத்தில் விண்ணை முட்ட வளர்ந்திருந்தாலும், அங்கும் படித்த மூடர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்குப் பிறகு 13 என்று குறிப்பிட மாட்டார்களாம். மாறாக 12-ஏ என்றோ 14 என்றேதான் குறிப்பிடுவார்களாம். அறைக்குக்கூட இந்த முறையைத்தான் கடைபிடிப்பார்களாம்.

1965 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசி எலிசபெத் ஜெர்மனி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் இரயில் பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது; டூயிஸ்பெர்க் என்பது அந்த ரயில் நிலையத்தின் பெயர்.

ராணியார் பயணம் செய்யவேண்டிய அந்த இரயில் 13 ஆவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாரானது! அவ்வளவுதான் பதிமூன்றா? அய்யோ வேண்டாம் என்று அலறினார்கள். இங்கிலாந்து நாட்டு அரசியாயிற்றே - என்ன செய்தார்கள்? அந்த இரயிலை வேறு பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்படிச் செய்தனர்.

கிறித்தவ மதமும் இந்த மூட நம்பிக்கைக்குத் துணை போகக் கூடியதாகும்.
12 சீடர்களுடன் 13 ஆவது நபராக ஏசு, இரவு உணவைச் சாப்பிட்டார். அப்போதுதான் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் - சிலுவையிலும் அறையப்பட்டார் - எனவே 13 என்பது மரண எண்ணாம்.

அப்படி என்றால், அவர் மீண்டும் எப்படி உயிர்த்தெழுந்தாராம்?

மத விவகாரங்களில் இதுபோன்ற அறிவார்ந்த வினாக்களுக்கு இடம் கிடையாதே!

மாவீரன் நெப்போலியனுக்குக்கூட 13 ஆம் எண் பயம் இருந்ததுண்டாம். குறிப்பிட்ட விஷயத்தில் வீரனாக இருப்பவன். இன்னொரு விஷயத்தில் கோழையாக, மூடனாக இருக்கக் கூடாதா என்ன?இந்த மூட நம்பிக்கை குளிர் ஜூரத்தை ஓட்டிய பகுத்தறிவுவாதிகளும் அமெரிக்காவில் இருந்திருக்கிறார்கள்.

1882 சனவரி 13 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 13 துணிவான பகுத்தறிவுவாதிகள் கூடினார்கள். 1882 சனவரி 13 இல் ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13 ஆவது சங்கம்(Thirteenth Club) என்பதாகும்.ஓர் உணவு விடுதியில் 13 ஆவது அறையில் 8.13 பணிக்குத் தொடக்க விழா நடத்தி 13 மணிக்கு (அதாவது 1 மணிக்கு) விழாவினை முடித்தனர்.சங்கத்தில் சேர நுழைவுக் கட்டம் 1.13 டாலர். ஆயுள் சந்தா 13 டாலர்.

ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி 13 பேரும் கூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. நாளடைவில் கிளைச் சங்கங்களும் உற்பத்தியாகின. இணையும் சங்கத்திடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மூடத்தனத்தை இப்படி சவுக்குக் கொண்டு அடித்தனர்.

சென்னை மாநகராட்சிகூட வீடுகளுக்குக் கதவு இலக்கம் குறிப்பிடும்போது 13 அய் தவிர்ப்பது உண்டு.

அதற்கு விதிவிலக்காக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அடையாறு இல்லத்தின் பழைய எண் 13 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட இல்லத்தின் எண் எட்டாக இருந்தது. அவருக்கு எட்டாம் எண் இராசியில்லாத ஒன்றாம். அந்த எண்ணை மாற்றச் சொல்லி கோரிக்கை வைத்தாராம். உடனே 6-ஏ என்று மாற்றப்பட்டதாம். வீடு மாற்றப்படவில்லை; எண் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

மனிதனிடம் இருக்கக் கூடிய விலை மதிக்க முடியாத பகுத்தறிவைப் பயன்படுத்த அஞ்சுவதும், தன்னம்பிக்கையைத் தூக்கி எறிவதும், மரணத்தைக் கண்டு மிரளுவதுமான குணங்கள் ஒருவரிடம் இருக்குமேயானால், அந்த மனிதன் எவ்வளவு படித்திருந்தாலும் பயனற்ற பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவரே ஆவார்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி ஒவ்வொரு ஊரின் நுழைவு வாயிலிலும் கல்வெட்டாகப் பொறித்து வைக்கவேண்டும்.

ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்!

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பலப்’ மூல்ம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.

வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்கலாமாக்கும்!

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த இந்தியாவின் முதல் 3-டி படமான மை டியர் குட்டிச் சாத்தான் மக்களை பெரிதும் கவர்ந்தது அதன் தயாரிப்பாளர் அப்பச்சன் அந்த படத்தின் அபரிமிதமான் லாபத்தை வைத்து சென்னையில் கிஷகிந்தா என்ற் தீம்பார்க்கே கட்டினார். அதற்கு பிறகும அவ்வப்போது 3டி படங்கள் வரத்தான் செய்தது,ஆனால் அவையெல்லாம் வெற்றி பெறவே இல்லை. இந்நிலையில் சமீபகாலமாக ஹாலிவுட்டில் பெரும்பாலான படங்கள் அனைத்தும் 3டி பார்மெட்டிலும் வர ஆரம்பித்தது. அப்படி வந்தவைகளில் டின் டின் உள்ளிட்ட சில அனிமேஷன் படங்கள், அவதார் உள்ளிட்ட சில கமர்ஷியல் படங்கள் பெரிய ஹிட் ஆனது.

இது போன்ற முப்பரிமாணத்துடன் கூடிய ‘3டி’ படங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளுடன்தான் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்ணால் பார்த்தால் அதற்குரிய ஸ்பெஷல் எபெக்ட் கிடைக்காது.

இந்நிலையில் தற்போது, இதையெல்லாம் மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான சினிமா படம் லேட்டஸ்ட் எபெக்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக வெறுங்கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சினிமாவை 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். ‘ஸ்கிரீன் எக்ஸ்’ தொழில்நுட்பத்தில் இந்த சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே காட்சியை ஒரே நேரத்தில் 3 காமிராக்களில் பலவித கோணங்களில் படம் பிடித்து அதை ஒருங்கிணைத்துள்ளனர்.

சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சினிமா படத்தை தென்கொரிய டைரக்டர் கிம்ஜிவூன் உருவாக்கியுள்ளார். இதற்கு ‘தி எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய உளவாளி, ‘திரில்லர்’ கதை அம்சத்துடன் கூடிய படமாகும். கடந்த வாரம் தென்கொரியாவின் புசானில் நடந்த சர்வதேச படவிழாவில் ‘பிரீமியர் ஷோ’ ஆக இப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

http://www.youtube.com/watch?v=ktDzAKdE18I

இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் உள்ள 31 சினிமா தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. அதற்காக கூடுதல் திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இச்சினிமா படம் உருவாக்கியது குறித்து டைரக்டர் கிம் ஜி வூன் கூறும் போது, ‘இந்த புதிய தொழில்நுட்பம் சினிமாவுக்கு மிகப்பெரிய பிரமாண்டத்தை கொடுத்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

Thursday, October 17, 2013

உணர்ச்சிகளில் இருந்து விடுபட எளிய வழிகள்

டெல்லி மருத்துவ மாணவி தொட்டு, எல்.கே.ஜி. மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? இதுதான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப்படும் கேள்வி. அவர்கள் மனதளவில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகிறது. ஆனால் அதை அடக்குவதற்கான வழமுறைகள் தெரிந்ததுதான் அதற்குக் காரணம்.
-
சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா?
-
நாம் சந்திக்கும்… உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிதான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் இப்படி உணர்ச்சிகளின் பட்டியலுக்கு எல்லையே இல்லை.
-
இவை எல்லாமே இருந்தால் தான் முழு மனிதன். எந்த நேரத்தில் இந்த குணங்களை வெளிப்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்றாற்போல்தான் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள்.
-
காம உணர்வுகளை அடக்கலாமா?
-
ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. தக்க துணையுடன் இணைவதுதான் அதற்கு ஒரே வடிகால்.
-
செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்லதுதான். பெரிய பெரிய குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகள் காம உணர்வுகளை அடக்க முடியாதவர்களால்தான் நிகழ்ந்தேறியுள்ளன.
-
காம உணர்ச்சிகளை அடக்குவதால் என்ன நடக்கும்?
-
காம உணர்ச்சிகளை அடக்கினால் மன நோய் வரும். தலைவலி வரும், திடீர் ஜூரம், மூட்டுகளில் வீக்கம், இடுப்பு வலி, உடல்பலவீனம், உடல் இளைப்பு, மயக்கம், நடுக்கம், மார்புவலி, இறுதியில் இதயநோய் வந்தாலும், ஆச்சரியப் படுவதற்கில்லை.
ஆனால் காமம் என்பது நிலையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் காம உணர்ச்சிகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.
-
உணவும் காமமும்!
-
முருங்கைக்கீரை, முருங்கைகாய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உண்டால் காம உணர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆய்விலும் அதை நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றிற்கு செக்ஸ் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாக சொல்கிறார்கள்.
-
நம் நாட்டில் துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் உப்பு, காரம் இல்லாத உணவுகளை உண்பது காம உணர்வை அடக்கத்தான் என்கிறார்கள். ஆனாலும் அவர்கள் காம வயப்படாமலா இருக்கிறார்கள்?
எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாமல் விதவிதமான உணவுகளை வகை தொகை இல்லாமல் உண்பவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாவது உறுதி.
-
உணர்ச்சிகளில் இருந்து விடுபட எளிய வழிகள்:
-
பொதுநலத் தொண்டு: வாரத்தில் ஓரிரு நாட்களில் சில மணி நேரங்களை ஒதுக்கி, பொது மருத்துவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு பணிவிடை செய்து பாருங்கள். நோயாளிகளின் நிலையை கவனித்த எவருக்கும் காம இச்சை தலைதூக்காது. மாறாக, ஒரு மகத்தான சேவை செய்த மனநிறைவு கிட்டும்.
-
உடற்பயிற்சி:
காமத்தை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை அடக்கி, உடலை இலகுவாக்கும் வேலையை உடற்பயிற்சி மூலமே செய்ய முடியும்.
வீட்டுத் தோட்டம் அமையுங்கள்: நிலத்தைத் தோண்டுவது, பாத்தி போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள். செடிகள் வளர வளர உங்கள் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
-
இசை:
இசையைக் கேப்டதை விட, அதை இசைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் காமத்திற்கா பெரும் வடிகாலாக அது அமையும்.
புத்தகம் படித்தல்: ஆன்மிகம் உட்பட நல்ல தரமான எந்த நூலையும் வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் காமம் கரைந்து போகும்.
நண்பர்களிடம் பகிருங்கள்: அடிக்கடி காம வயப்படுபவர்கள் கூச்சப்படாமல் நண்பர்கள், உறவினர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேளுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு இதில்தான் கிடைக்கும்.
-
மதுவுக்கு அடிமையாகாதீர்கள்: மது மயக்கம் காம உணர்வாக இருந்தாலும் சரி, எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை அதிகப்படுத்தும். அவர்கள் மதுவை அறவே நீக்குவதுதான் இதிலிருந்து விடுபட ஒரே வழி.

எனக்கு பிடித்த குறள் – அப்துல் கலாம்

சிறு வயதில், இளம் மனதில் விதைக்கும் விதை எப்படிப்பட்ட பலனைத் தருகிறது என்பதற்கு நம்மில் அனேக உதாரணங்கள் உள்ளன. எனவேதான் நாம் நமது இளைஞர்களைப் பக்குவப்படுத்தி, தயார் பண்ணினால்தான் நமது லட்சியமான, வளமான இந்தியாவை 2020க்குள் மாற்ற முடியும்.

அறிவு அற்றம் காக்கும்

எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்தது ஒரு குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்குவளம் கொடுத்தது. அது இது தான்…

அறிவற்றங் காக்குங் கருவி; செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்

அதாவது, அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல்,

அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும்.

பூமிக்குக் கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன்தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களைப் பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. எனவே மக்கள் தொகை ஒரு வகையில் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு.

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே கனவு காண்பது என்பது ஒவ்வொரு குழந்தையின், இளைஞரின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும்.

அந்த லட்சியம் நிறைவேறக் கடுமையாக உழைக்க வேண்டும், தொடர்ந்து அறிவைப் பெற, அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

நீங்கள் எல்லாம் வெற்றியடைவீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடகநாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத்தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்துகொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம்செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் எனஎண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விடவேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள்சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான்தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான்.மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா,வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடையதிறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத்தருகிறேன்” என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில்சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதேஎன்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற்காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனைஉள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம்சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசுகிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய்உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடிகோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்துமேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனைகழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலிபொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண்வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் “ஏன்இவ்வாறு செய்தாய்” என வினவினார். அதற்குத் தெனாலிராமன்“கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான்இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்டமன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்கவேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதிபாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்துவிட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக்கொடுங்கள் ” என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்துவரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர்பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டிஅவனுக்குப் பரிசு வழங்கினார்.

புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :

ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.

இதோ சில பழமொழிகள் (118)

1. ‘பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’

2. ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே’

3. அடியாத மாடு படியாது

4. ஆசைஅறுபது நாள்
மோகம் முப்பது நாள்

5. நாய் விற்ற காசு குறைக்காது
பூ விற்ற காசு மணக்காது

6. தை பிறந்தால் வழி பிறக்கும்

7. காலத்தே பயிர் செய்

8. பாத்திரம் அறிந்து பிச்சை இடு

9. உரலில் தலையை கொடுத்துவிட்டு
உலக்கைக்கு பயந்தா ஆகுமா?

10. ஆசையிருக்கு தாசில் பண்ண
அம்சம் இருக்கு கழுதை மேய்க்க

11. அதிஷ்டம் தபாலில் வந்தா
தரித்திரம் தந்தியில் வருது.

12. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல மணிதனுக்கு ஒரு சொல்

13. ஆலை இல்லாத ஊருக்கு இளுப்பை பூ சர்க்கரை

14. ‘’இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்’’

15. யானைக்கும் அடி சறுக்கும்.

16. அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

17. உயிர் காப்பான் தோழன்

18. யானையானய நண்பரைக் கழிக்கொளல் வேண்டும்
நாயனைய நண்பரைத் தழிக்கொளல் வேண்டும்.

19. தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா

20. குப்பையிலே கிடந்தாலும்
ண்டு மணி நிறம் மாறாது.

21. தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்?

22. அரைக்காசுக்கு மொட்டை போட்டாளாம் அடுத்த வீட்டம்மா.

23. ’தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’’

24. வாத்தியார் பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு

25. பந்திலேயே இடமில்லை இவன் இலை கிழிசல் என்றானாம்.

26. இலவு காத்த கிளி

27. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

28. தீரா கோபம் போராய் முடியும்.

29. பொருமை கடலைன் பொறியது

30. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே

31. காலைச் சுத்தின பாம்பு கடிக்காமல் விடாது.

32. பாப்பாத்தியம்மா! மாடு வந்தது
கட்டுனா கட்டு கட்டாட்டிப் போ!

33. ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடிக்கறக்கிற மாட்டை பாடித்தான் கறக்கனும்

34. கொலையும் செய்வாள் பத்தினி

35. துள்ளுகிற மாடு பொதி சுமக்குமா

36. வாயாலயே வானத்தை அளப்பான்,

37. குலைக்கிற நாய் கடிக்காது,

38. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்

39. எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றிணால் போல

40. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்

41. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது

42. பாக்கை மடியில் கட்டலாம் தோப்பை கட்ட முடியுமா?

43. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்
மரம் ஏறிக் கைவிட்டவனும் ஓண்ணு

44. கிளி மாதிரி பொண்டாட்டி இருத்தூம்
கொரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி இவனுக்கு.

45. விடிஞ்சா கல்யாணம்
புடிடா பாக்கு வெத்திலை

46. நக்குற நாய்க்கு
செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?

47. ‘’சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’’

48. ஆடமாட்டாத தேவடியா
கூடம் போதாதுன்னாளாம்

49. ஆடத் தெரியாத தேவடியா
முத்தம் கோணல் என்றாளாம்

50. ‘வந்துதடியக்கா சண்டை
வையடி கட்டுச் சோத்தை

51. குதிரை குப்புறவும் தள்ளி
குழியும் பறிச்சுதாம்!

52. ஆறுவயசுல அண்ணன்-தம்பி
பத்து வயசிலே பங்காளி.

53. தாயும் பிள்ளையும் என்றாலும்
வாயும் வயிறும் வேறு வேறு

பேதுமென்ற மனமே
பொன் செய்யும் மருத்து’’

54. தினை விதைத்தான் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்

55. எண்ணெயை தடவிகிட்டு குப்பர விழுந்து புரண்டாலும்
ஒட்டற மண்தான் ஒட்டும்

56. பாம்பின்கால் பாம்பறியும்

57. நாய்க்கு வேலையில்லையாம், ஆனால் நிற்பதற்கு நேரமில்லையாம்

58. வச்சா குடுமி
செரச்சா மொட்டை

59. அரக்கப்பறக்க சம்பாதிச்சாலும்
படுக்க பாய் இல்லே

60. உழுதவன் கணக்குப் பாத்தா
ஒழக்கும் மிஞ்சாது

61. அரைப்படி அரிசி அன்னதானம்
விடிய விடிய மோள தாளம்

62. எறியிற வீட்டில்
புடுங்கினது லாபம்

63. சும்மா இருந்த சங்கை
ஊதிக் கெடுத்தாணாம் ஆண்டி

64. சும்மா இருந்த சிட்டுக்குருவியின் முதுகில் குத்துவானேன் அது கொண்டையை கொண்டையை லாத்திக்கிட்டு கொத்த வருவானேன்?

65. உழிகிறநாளில் ஊருக்குப் போய்யிட்டு
அறுக்கிறநாளில் அரிவாள் எடுத்துட்டுப்

66. தினை விதைத்தான் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்

67. சாணி சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றா?

68. துடைக் முடியாவற்றை தட்ட வேண்டும்

69. அக்கரைக்கு இக்கரை பச்சை

70. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

71. அரசனை நம்பி புருஷனை கைவிட்டார்

72. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

73. அரண்மனையை பகைத்தாலும் அண்டை வீட்டை பகைக்காதே.

74. அகப்பையில் குறைந்தால் கொழுப்பும் குறையும்

75. அவசரம் ஆபத்தில் முடியும்

76. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’

77. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

78. ஆபத்திற்க்கு பாவம் இல்லை

79. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

80. ஆழமறியாமல் காலை விடாதே

81. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

82. இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

83. இருந்து கொடுத்ததை நடந்து வாங்கு

84. இரவல் சோறு பஞ்சம் தீர்க்குமா?

85. மாமியார் ஓடச்சா மண்குடம்
மருமகள் ஓடச்சா பொன்குடம்

86. ஊரான்வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன்பிள்ளை தானே வளரும்

87. ஆடையில்லாத ஊர்ல
கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

88. சாகாமல் கற்பதே கல்வி
பிறரிடம் ஏகாமல் உண்பதே ஊன்.

89. சிந்தின வீட்டில் சேராது மங்கின வீட்டில் வராது.

90. அரண்மனையைப் பகைத்தாலும் அண்டைவீட்டை பகைக்காதே

91. அகப்பையில் குறைந்தால் கொழுப்பும் குறையும்

92. அடிக்கிற கைதான் அணைக்கும்

93. அருகங்கட்டையும் ஆபத்தில் உதவும்

94. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

95. ‘உழுகிற நாளில் ஊருக்கு போனால்
அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை’

96. உறவு போகாமல் கெட்டது

97. கடன் கேட்காமல் கெட்டது

98. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா ?

99. உரலுக்கேத்த உலக்கைதான் பலன் தரும்

100. உலை வாயை முடினாலும்
ஊர் வாயை முட முடியாது

101. ஊரார் பண்டம் உமிபோல
தன் பண்டம் தங்கம் போல

102. ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து,மனுசனையா கடிக்கத் தொடங்கி விட்டான்

103. ஆண்டியின் சொல் அம்பலம் ஏறாது.

104. ஆற்றில் குளிக்கப் போய் சேற்றை பூசிக் கொண்டான்

105. ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை

106. ஆடு மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா
பொண்டாட்டி பிள்ளை இல்லாதவன் பஞ்சத்திற்கு ராஜா

107. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு.

108. இருக்கை தட்டினால்தான் ஓசை வரும்

109. இளமையில் குற்றம் கண்ணுக்கு தெரியாது.

110. இல்லை என்கிற விட்டில் பல்லி கூட சேராது

111. இட்டதெல்லாம் பயிராகுமா.

112. இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்

113. ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கினான்

114. ஈனர் சகவாசம் இறுதியில் தெரியும்.

115. ஊரோடு ஒத்து வாழ்.

116. ஊர்கூடித்தான் தேர் இழுக்க முடியும்

117. ஏரி உடைவதற்கு முன் அனை போட வேண்டும்

118. ஒருவனாய் பிறந்தால் தனிமை
இருவராய் பிறந்தால் பகைமை

Wednesday, October 16, 2013

360 டிகிரி கோணத்தில் உங்கள் தெருவை ஆன் லைனில் காண...

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தெருக்களை ‘லைவ்’வாக பார்க்க கூகுள் வசதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள தெருக்களையும் துல்லியமாக ‘லைவ்’ வாக காட்ட முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை அதை செய்ய முடியவில்லை. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் கூகுள் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், ஜெனிசிஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை இப்போது செய்துள்ளது. அதிலும் உங்கள் தெருவை அல்லது நீங்கள் போக வேண்டிய தெருவை 360 டிகிரி கோணத்தில் முபபரிமாணத்தில் பார்த்து, எந்த முகவரிக்கு போக வேண்டுமோ அதை அறிந்து கொள்ளலாம். அவ்வசதியை ‘வோனோபா’ (www.wonobo.com)-க்குள் நுழைய வேண்டுமாக்கும்..

இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ள ஜெனிசிஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய நகரங்களில் , பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட இடங்களில் ‘மேப்’பிங் செய்யும் பணிகளில் இறங்கி உள்ளது.தற்போது பெங்களூர், மும்பை, சென்னை உட்பட 54 நகரங்களில் இந்த நிறுவனம் ஒவ்வொரு தெருவையும் துல்லியமாக ஆன்லைனில் காட்டுவதற்கான ‘மேப்’பிங் ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் 42 நகரங்களில் உள்ள தெருக்களை ஆன்லைனில் துல்லியமாக பார்க்கும் வசதியை செய்ய உள்ளது.

அதிலும் ஒவ்வொரு தெருக்களை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பதுடன், அங்குள்ள ஓட்டல், தபால் அலுவலகம், வங்கி என்று மக்களுக்கு தேவையான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை தேடி பார்க்கலாம். குறிப்பிட்ட தெருவை ஆன்லைனில் கண்டுபிடித்து அதை பெரிதாக்கி, அங்குள்ள குறிப்பிட்ட ஓட்டல், அலுவலகம் போன்றவற்றை துல்லியமாக பார்க்கலாம். தகவல்களுக்கு wonobo.com வெப்சைட்டுக்கு போய் பார்க்கலாம்.

பெண்களுக்கான சாதனம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிரித்து வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தனியாக செல்லும் போதோ, அலுவலகத்திலோ அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் காரணமாக அச்சம் இருக்குமானால் அதை பதிவு செய்யும் கருவி ஒன்றை தெற்கு தில்லியை சேர்ந்த யாஷ்பாட்டியா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்துள்ள இக்கருவி புளூடூத் தொழில் நுட்பத்தைக்க்கொண்டது. ஏழு கிராம் எடையுள்ள சதுர வடிவில் இருக்கும் இச்சாதனம் ரீச்சார்ஜபள் பேட்டரிகளை கொண்டது என தெரிவித்துள்ள்ளார். மேலும் இக்கருவியானது ரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாச விகிதம் போன்றவற்றையும் கண்டறிய உதவுகிறது.

அதோடு இக்கருவியை பொருத்திக் கொண்ட பெண்களுக்கு வாழ்க்கையில் அச்சுறுத்தும் தருணங்கள் வரும் போது பயம் மற்றும் நடுக்கத்தை நீக்கி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் உடலியல் மாற்றங்களை கொடுக்கிறத. என்று பாட்டியா தெரிவித்தார்.

பொது இடங்களில் திடீரென ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளும் பெண்கள் ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் இது உதவும். அதாவது பெண்கள் இந்த கருவியை பொருத்தியிருந்தால், அவர்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது இக்கருவியானது அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் செல் போனுக்கு மின் அணு மூலம் குறுந்தகவல் அனுப்பும் ஆற்றல் கொண்டது என பாட்டியா தெரிவித்துள்ளார்.