Monday, September 2, 2013

அஜீத் பற்றிய சில சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்ளுங்களேன்

திருமணத்திற்கு முன்பு அஜீத் சிகரெட்டை சும்மா ஸ்டாலாக ஊதித் தள்ளுவாராம். ஷாலினியை காதலித்து திருமணம் செய்த பின்னர் மனைவிக்காக சிகரெட்டை தியாகம் செய்தாராம். 

 சாய்பாபா பக்தர் தீவிரமான சாய்பாபா பக்தர். 

கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவின் முன்பு வைத்து கும்பிட்டு விட்டுத்தான் பயன்படுத்துவார்! 

 இடது கைப் பழக்கம் வெளி இடங்களில் தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை குடிக்க வேண்டி வந்தால் இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை! 

சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர். 

பிரியாணி எக்ஸ்பர்ட் உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். நண்பர்களுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து கொடுப்பார். புது உணவுக்கு பாராட்டு எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் கூப்பிட்டு பாராட்டுவார். 

கிரிக்கெட் பிரியர் கிரிக்கெட், கேமரா காதலர். படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். பைக் ரேஸ் போல கேமரா மீதும் அஜீத்துக்கு காதல் அதிகம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்! 

No comments:

Post a Comment