Monday, September 2, 2013

‘மிகச்சிறந்த இந்தியர்’ : ரஜினிகாந்த்துக்கு 1 இடம்!

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்து வரும் மனிதர்களில் மிகச்சிறந்த 25 பேர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘முதல் இடம்’ கிடைத்துள்ளது.

பிரபல ஆங்கில செய்திச் சேனலான என்டிடிவி நிறுவனம் தனது 25-வது வருட வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார்? யார்? என்ற ஒரு கருத்துக் கணிப்பை நாடு தழுவிய அளவில் நடத்தி வருகிறது.

தனது இணைய தளம் மூலம் நடத்தும் இந்த கருத்துக்கணிப்பில் யார் வேண்டுமானாலும் பங்குபெற்று தங்கள் அபிமான இந்திய பிரபலங்களை தேர்ந்தெடுக்கலாம்.

இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று மாலை நிலவரப்படி அவருக்கு 7.16 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் வருகிறார் 7.05 சதவீத வாக்குகளுடன். அப்துல் கலாமுக்கு 6.81 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடமும், 5.41 சதவீத வாக்குகளுடன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட் வீரர் தோனிக்கு 7வது இடமும் அமிதாப் பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13 வது இடமும் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment