Sunday, September 29, 2013

இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் த்ரிஷா

நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணையதள பாதுகாப்பு நிறுவனமான மெக்காபி சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளான 80–க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இந்த ஆய்வை நடத்தியது.

இண்டர்நெட்டில் த்ரிஷா பெயர்தான் அதிகம் நடமாடுகிறது. பத்து ஆண்டுகளாக சினிமாவில் ஒரு நடிகை கதாநாயகியாக நடிப்பது என்பது அபூர்வ நிகழ்வுதான். ஸ்ரீதேவி, சிம்ரனுக்கு பிறகு அதிக ஆண்டுகள் தாக்குப்பிடித்தது த்ரிஷாதான். எனவே அவருடைய பெயரே இண்டர்நெட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் கம்ப்யூட்டர் வைரஸ்களுக்கு த்ரிஷாவின் பெயரை வைத்து புகுந்து விளையாடியுள்ளனர் விஷமிகள்.

திரிஷா பெயரை சிபாரிசு செய்ததும், கம்ப்யூட்டர்கள் சேதம் அடைந்துள்ளன. இதுபோல் ரஜினி, கமலஹாசன், சூர்யா, ஆர்யா, விஜய், தனுஷ், ஸ்ரேயா, சமந்தா, ஸ்ருதிஹாசன் பெயர்களிலும் வைரஸ் பரப்பப்பட்டு உள்ளன. இவர்களைவிட திரிஷா பெயரில்தான் விஷமிகள் ‘வைரஸ்’ பரப்பி உள்ளனர்

உறவுகொள்ள சுற்றுலா செல்லும் 80,000 இத்தாலியர்கள்

ஆண்டுதோறும் சுமார் 80,000 இத்தாலியர்கள் சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள உலகம் முழுவதும், சுற்றுலா மேற்கொள்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமிகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து 'எக்பட் இட்டாலியா' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறுமிகளிடம் உடல் உறவுகொள்ளும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு ‘செக்ஸ் சுற்றுலா' செல்வதாக தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலி, சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் 'செக்ஸ் சுற்றுலா' செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் 'எக்பட் இட்டாலியா' தொண்டு நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே செடியில் தக்காளி, உருளை: 'டொம்டாட்டொ'

இங்கிலாந்தில் ஒரே செடியில் தக்காளி மற்றும் உருளை கிழங்கு ஆகியவை வளர்க்கப்படுகின்றது.

ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.

மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.

இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.

இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.

இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட பெண்

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்பத்தாரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பொறியாளரின் மனைவி அவரது கணவரின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில், அவர்களது புகைப்படங்களை பேஸ்புக்கில் ஆபாசமாக வெளியிட்டுள்ளார். இதற்கு அப்பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இதனால் பாதிப்படைந்த அந்த பொறியாளர், அவரது மனைவி மீதும், மாமனார் மீதும் போலீசில் புகார்

இதனை தொடர்ந்து போலீசில் மன்னிப்பு கேட்ட அப்பெண்ணும் அவரது தந்தையும், இதுபோல் இனி நடந்துக்கொள்ளமாட்டோமென தெரிவித்துள்ளனர். ஆனால் சில நாட்களில் மீண்டும் இவர்கள் பொறியாளரின் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொறியாளர் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அவரது மனைவியையும், மாமனாரையும் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

ரஜினியுடன் நடிக்க பாதி சம்பளம் போதும்: சன்னி லியோன் பேட்டி

அமெரிக்காவில் கொடிகட்டி பறந்த கனடிய நடிகை சன்னிலியோன் JISM 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது 555 பரத்துடன் ஒரு பாலிவுட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து அவர் அமீர்கானுடனும், ரஜினியுடனும் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் பாதி சம்பளம் கொடுத்தாலும் சம்மதிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் நிம்மதியாகத் தூங்கும் மனிதர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அமெரிக்காவில் யாரும் நிம்மதியாக தூங்கவிட மாட்டார்கள். இங்கு தான் எல்லோரும் தொழில்பக்தியுடன் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுகிறார்கள்.

தமிழ் நடிகர் பரத்துடன் ஜாக்பாட் படத்தில் நடித்தது எனக்கு ஒரு இனிமையான அனுபவம். அவருடைய நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எப்போதுமே ஜோக் சொல்லி கலகலப்பூட்டுவார் பரத்.

‘சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அதை ஒரு நாளாவது நேரில் பார்த்து விட வேண்டும். அமீர்கானோட அங்க அசைவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால அவரோட ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்கணும். அதேபோல், தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினியுடனும் நடிக்க ஆசையா இருக்கு என்று ஏக்கங்களை லிஸ்ட் போடுகிறார் சன்னி.

எங்கே போகுது உலகம்.

Saturday, September 28, 2013

ஓடிப்போன குரங்கு கதை !!!!

மூணு பேரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்றவங்க ஒரு ஜூவுல மீட் பண்ணாங்க, மூணு பேரும் க்ளாஸ் மேட்ஸ்……. 

அப்ப ஒருத்தன் நம்மள்ல யாரு பெஸ்ட்னு ஒரு சின்ன போட்டி வெச்சுப்பார்க்கலாம்னான். மூணு பேரும் அங்க இருந்த ஒரு குரங்க சிரிக்க வெக்கிறதுன்னு முடிவாகுச்சு.

மொதல்ல என்போர்ஸ் கம்பெனி ஆள் அவன் கம்பெனி கல்ச்சரான “பேசியே சரிக்கட்டுற டெக்னிக்க “ஃபாலோ பண்ணி ஜோக்சா சொன்னான்…….. 

குரங்கு அசையவே இல்ல…….

அடுத்து ப்ரோவிப் .கம்பெனி ஆள் .. அவங்க “ப்ராக்டிகல் ஒரியண்டட். கோமாளி “மாதிரி சேட்டை பண்ணி காட்டுனான். சைகை காட்டுனான். ம்ஹூம்.. குரங்கு கொஞ்சம் கூட ரியாக்சன் காட்டல.

அடுத்து என்சீஎஸ் ஆள் . குரங்கு பக்கத்துல போய் காதுல என்னமோ சொன்னான். உடனே குரங்கு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிருச்சு.

மத்த ரெண்டு பேருக்கும் ஆச்சர்யம், இருந்தாலும் தோல்விய ஒத்துக்காம, சரி இன்னொரு ரவுண்டு வெச்சுக்கலாம். பட் இந்த வாட்டி குரங்கை அழ வைக்கனும் அப்படின்னாங்க.

மறுபடியும் மொதல்ல என்போர்ஸ் ஆள் வந்து சோகமான உருக்கமான விஷயங்களா சொன்னான். குரங்கு கண்டுக்கவே இல்லை.

அடுத்து ப்ரோவிப் ஆள்….அழுகுற மாதிரி ஆக்ட் பண்ணி காட்டுனான். அதையும் குரங்கு சட்டை பண்ணலை

என்சீஎஸ் ஆள் , வந்து மறுபடியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். உடனே குரங்கு ஓன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு.

ரெண்டு பேருக்கும் அதிர்ச்சியா போச்சு, இதையும் ஒத்துக்காம இன்னொரு டெஸ்ட் வெக்கனும்னு முடிவு பண்ணாங்க. இந்த வாட்டி குரங்கை ஓடவைக்கனும்னு சொல்லிட்டாங்க.

வழக்கம் போல என்போர்ஸ் ஆள் முதல்ல வந்தான். குரங்க பார்த்து குரைச்சான். பயமுறுத்துனான். எந்திரிச்சி ஓடுன்னு கெஞ்சிப்பாத்தான். வழக்கம் போல குரங்குபாட்டுக்கு பேசாம உக்காந்திருச்சு.

ப்ரோவிப் ஆள் வந்து குரங்கை புடிச்சி தள்ளிவிட்டான். வெரட்டி பார்த்தான். குரங்கு அசரவே இல்ல.

என்சீஎஸ் ஆள் இந்தவாட்டியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். அதைக் கேட்டதும் உடனே குரங்கு தலைதெறிக்க ஓடி போயிருச்சு….

கடைசியா வேறவழியில்லாம ரெண்டு பேரும் தோல்விய ஒப்புக்கிட்டாங்க. என்சீஎஸ் ஆள் கிட்ட ,அப்படி குரங்கு காதுல என்னதான் சொன்னேன்னு கேட்டானுங்க.

அவன் சொன்னான்…..

ஃபர்ஸ்ட் குரங்குகிட்ட நான் என்சீஎஸ்ல் வேல செய்றேன்னு சொன்னேன், உடனே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு, அடுத்து என்னோட சம்பளத்த சொன்னேன், அது அழுதுடுச்சு. கடைசியா என் கம்பெனிக்கு வேலைக்கு ஆள் எடுக்கதான் இங்க வந்திருக்கேன்னு சொன்னேன்…….. 

அது ஓடியே போய்டுச்சி……!!!!!!

Thursday, September 26, 2013

உடலுக்கு ஒன்பது வாசல்

"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது வாசல்"

மனிதன் உடல் ஒரு மிக பெரிய கூட்டு வேதிப்பொருள். மனித உடல் என்பது சதை, எலும்பு, நரம்பு ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளதாக அறிவியல் சொல்லுகின்றது. ஆனால் சித்தர்களும் ஞானிகளும் உடல் என்பது நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார்கள்.

உடலுக்கு 9 வாசல் என்பன இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், வாய், மலவாய், சிறுநீர்பாதை. இப்படியாக சொல்லப்படுகின்றது. இப்படி சொல்லப்படும் கணக்கு சரிதானா? பெண்களுக்கும் இந்த கணக்கு ஒன்றுதானா? கண், காது, மூக்கு என்பது ஏன் இரண்டாக இருக்கின்றது? அப்படி இரண்டாக இருப்பதால் பாதகம் மற்றும் சாதகம் என்ன? என்பதுதான் இன்றைய ஏன்? எதற்கு? எப்படி?....

மனிதன் தன்னுடைய தாய் வயிற்றில் கருவாக உருவானதும் தாய்க்கும் கருவிற்கும் பாலமாக இருப்பதுதான் தொப்புள் கொடி. இந்த கொடியின் வழியாகதான் தாயிடமிருந்து உணவு சக்தி கருவிற்கு செல்கின்றது. ஆக கருவிலேயே உருவாகிய தொப்புள் கொடி வயிலை ஏன் கணக்கில் ஏற்றுக்கொள்ளவில்லை? அப்படி பார்த்தால் 10 வாசல் என்பது சரிதானே! மேலும் பெண்ணிற்கு இன்னும் கூடுதலாக மூன்று வாசல்கள் இருப்பதும் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அதாவது பெண்ணிற்கு சிறுநீர் பாதையும், கருப்பை பாதையும் வேறு வேறாக இருப்பதும் மேலும் ஒரு வாசல் பெண்ணிற்கு உண்டும் என்பதும் உண்மைதானே!..... ஆக பெண்ணிற்கு 11 வாசல்லவா இருக்கின்றது. அதே போல் பிறந்த குழந்தைக்கு உணவாக பால் சுரக்கப்பட்டு ஊட்டுகின்றாளே பாற்காம்புகள் அதுவும் உடலிருந்து வெளிப்படும் வாசல்தானே! ஆக இந்த வாசல்களையும் பார்த்தால் பெண்ணிற்கு 13 வாசல்கள் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். ஓ... இப்படியே போனால் உடலில் இருக்கும் ஒவ்வொரு வேர்வை துளைகளும் உடலிருந்து வரும் வாசல்கள்தானே! இப்படிப்பட்ட கேள்விகள் உங்களை போல எனக்கும் இருக்கின்றது.

ம்ம்ம்ம்.... அது இருக்கட்டும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், இரண்டு பாற்காம்புகள் என ஏன் இரண்டு இரண்டுடாக இருக்கின்றது? அதனால் என்ன பயன்? ஒரு கண்களால் பார்க்க முடியாதா? ஒரு காதால் கேட்க முடியாதா? ஒரு மூக்குதுளையால் சுவாசிக்க முடியாதா? ஒரு பாற்காம்பால் பாலூட்ட முடியாதா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னையும் துளைத்தது.....

கண்களில் இரண்டால் மட்டுமே ஒரு பொருளின் முப்பரிமாணத்தை உணரமுடியும். ஒரு கண்ணால் அந்த பொருளின் முப்பரிமாணத்தை உணர்வது மிகவும் கடினமாக இருக்கும். அதே போல் ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் எவ்வளவு அளவில் இருக்கின்றது? என்பதையும் கணிக்க இரண்டு கண்கள் தேவையாகின்றது. அதனால் இயற்கையே உயிர்களுக்கு இரண்டு கண்கள் கொடுத்துள்ளது. மனிதனுக்கு இரண்டு கண்களும் முகத்தில் நேராக வைக்கப்பட்டுள்ளது. மற்ற விலங்களுக்கு பக்கதிற்கு ஒன்றாக இருக்கும். எனவேதான் மற்ற விலங்குகள் ஒரு பொருளை பார்க்க தலையை ஆட்டி ஆட்டி பார்க்கும். மனிதன் கண்களில் நிறமி செல்கள் உள்ளது. ஆகவேதான் பொருளின் நிறத்தையும் உணர முடிகின்றது. மற்ற விலங்குகளுக்கு நிறமி செல்கள் இல்லை ஆகவே கருப்பு வெள்ளையாகவே அவைகளுக்கு தெரியும். ( என் காளை மாடுக்கு சிகப்பு கலர் புடிக்காது சிகப்பில் உடையணிந்தால் முட்டும் என்பதேல்லாம் கட்டுகதையே! ) ஆரோக்கியமான பார்வை என்பது இரண்டு கண்களும் சரியாக இருக்க வேண்டும்.

இரண்டு காதுகள் நம்முடைய உடலை சமசீராக வைத்துகொள்ள உதவுவதாக அறிவியல் சொல்லுகின்றது. காதின் சமச்சீர் குறைந்தால் வயிற்று போக்கு, வாந்தி ஆகையவை ஏற்படும். ஒரு காதில் அலைபேசி தொடர்ந்து பேசுவதாலும், ஒரு காதில் பாடல் கேட்பதும் இப்படிப்பட்ட குறைகள் வர வாய்புள்ளது. விமான ஓட்டுனர், பாராசூட்டில் குதிப்பவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு காதின் சமச்சீர் மிக முக்கியம். நாம் நேராக நடந்து செல்லவும் இந்த சமசீர் காதுகள் தேவையாகின்றது. இரண்டு காதுகள் இருப்பதினால் ஒலி வரும் திசை மற்றும் துரத்தை உணரமுடிகின்றது.

மூக்கு என்பது மனிதனின் சுவாசத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. மேலும் வாசனை அறியவும் பயனாகின்றது. இந்த மூக்கு முகத்தின் முன்பக்கம் நீட்சியாக இருக்கும். இதன் துவாரம் இரண்டாக பிரிந்து செல்லும்..... இதனால் மூச்சு காற்று சத்தமிடாமல் உள்சென்று வெளியாகின்றது. மேலும் மூச்சுக்காற்றை உள்ளிழித்து வெளியேற்ற மிக வசதியாக இருக்கின்றது. ஒரே துளையில் அப்படிப்பட்ட நிகழ்வு மிக கடினமாக இருக்கும். மூச்சு தினறல் இல்லாமல் காற்றுழுக்க இந்த இரண்டு துளைகள் பயனாகின்றது.

குழந்தைகளுக்கு பாலுட்டதான் முலைகாம்புகள் பயனாகின்றது. ஒரு பகுதியில் பாலுட்டும் பொழுது மறுபகுதியில் பால் சேகரிக்கபடுகின்றது. அதனால் தொடர்ச்சியாக குழந்தைக்கு பாலுட்ட முடிகின்றது.

Wednesday, September 25, 2013

இருபதிலேயே அறுபதின் சாதனை

திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த பெண் பேச்சாளரும் மேடைக்கு வந்தார். பதினைந்து நிமிடம் பேச நினைத்து வந்தவர் மாணவர்களின் ஆர்வத்தையும்,அமைதியையும் பார்த்துவிட்டு 45 நிமிடங்கள் பேசினார்.

எதுகை, மோனையுடனோ, இலக்கிய இலக்கணத்துடனோ, சவால் விடும் சரித்திர சான்றுகளுடனோ அவர் பேசவில்லை. சாதாரணமாக , ஆணித்தரமாக, மென்மையாக ஆனால் அழுத்தமாக சகோதர, சகோதரிகளிடம் பேசுவது போல பரிவுடன், பாசத்துடன் பேசினார்.

அவர் பேசினார் என்பதை விட கொஞ்சம், கொஞ்சமாய் கேட்பவர் மனதில் தன்னம்பிக்கை எனும் விதையை ஆழமாக விதைத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவர் பேசப்பேச யார் இவர்? என்றறியும் ஆர்வம் இப்போது அரங்கில் இருந்த ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.

யார் இவர்?

காம்கேர் கே.புவனேஸ்வரி, எந்தவித பெரிய பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக முளைத்தவர், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உரமாக்கி வளர்ந்தவர், தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் எண்ணுபவர், இந்த எண்ணத்தினால் தனித்துவம் பெற்றவர்.

சென்னையில் உள்ள காம்கேர் சாப்ட் வேர் நிறுவனத்தின் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர்.

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியா தொடர்பான திட்டங்களை மட்டுமே தன் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து வெளியிட்டு வருபவர்.

சாப்ட்வேர் துறை வல்லுநர், கல்வியாளர், தொழில் ஆலோசகர், கிரியேடிவ் டைரக்டர், டாக்குமெண்டரி பிலிம் தயாரிப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளர் என்று இவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இருபதிலேயே அறுபதின் சாதனையை தொட்டவர்.

தன் நிறுவனத்தின் மூலமாகவும், தனது வாடிக்கையாள நிறுவனங்களின் மூலமாகவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியவர்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் பிரபலமாவதற்கு முன்பே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்கள் எழுதியவர். தமிழ் ஆர்வாலரான இவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக கம்ப்யூட்டர் தொடர்பான பல புத்தகங்களை எழுதியவர், எழுதிக்கொண்டிருப்பவர்.

இவர் எழுதிய பல புத்தகங்கள் பல பல்கலைகழகங்களில் பாடபுத்தகங்களாக உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பாக எழுபதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர பக்தி, இலக்கியம், சமூகம், கல்வி, குழந்தை இலக்கியம் ஆகிய தலைப்புகளிலும் எழுதி வருபவர்.

இவரது நிறுவனத்தின் மல்டி மீடியா தயாரிப்புகள் மற்றும் ஆவணபடங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் இவரே. அனிமேஷனில் உருவாக்கிய கந்தர் சஷ்டியும், அனைத்து பதிகங்களையும் கொண்ட திருவாசக மல்டி மீடியா சி.டி.,யும் மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டவையாகும்.

தனது பெற்றோர் பெயரிலான பத்ம கிருஷ் அறக்கட்டளை மூலமாக தொண்டு செய்து வருபவர். , தனது கொண்டாட்டங்கள் அனைத்தையும் ஆதரவில்லாத குழந்தைகளுடனும், மாற்றுத் திறனாளிகளுடனும் பகிர்ந்து கொள்பவர். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதாது என்று இருக்கக் கூடியவர், வளரும் சமுதாயம் இனிதாக மாறவேண்டும் என்ற அக்கறையுடன் கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருபவர்.

இவரைப்பற்றிய அறிமுகம்தான் இதுதான். அன்று அவர் பேசியதில் இருந்து சுருக்கமாய் சில குறிப்புகள். இந்த குறிப்புகள் அவர் மீது இன்னும் நேசம் கொள்ளச் செய்யும்.

திறமை என்பது பாட்டுப் பாடுவதும், படம் வரைவதும் மட்டுமல்ல எப்பொழுதும் சிரித்த முகத்தைக் கொண்டிருப்பது, தைரியமாக வாழ்வது, கடமை தவறாமல் இருப்பது , நட்பாய் பழகுவது, எந்த வேலையையும் நேசித்து செய்வது… இவை எல்லாம் கூட திறமைகள்தான். திறமை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது, நம்மிடம் உள்ள திறமைகளை நம் அனுபவத்தில் வெளிக்கொண்டு வருவதில்தான் வெற்றி இருக்கிறது. படிப்பு என்பது வேலைக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே என்கின்ற எண்ணத்தை மாற்றுங்கள், பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதை முதலீடாக நினைக்காதீர்கள், ஐடி பீல்டு மட்டுமே வாழ்க்கையில்லை.

உங்கள் திறமையால் இந்த உலகை ஆள ஆயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, உங்கள் கோபம், சிடுசிடுப்பு,ஆவேசம், படபடப்பு போன்ற குணங்களை தூக்கிஎறிந்து பாருங்கள் பெரிய மாற்றம் ஏற்படும். டி.வி.,சீரியல்களில் பொழுதைக் கழிக்காமல் உண்மையான உலகத்தைக் காணவும், அனுபவம் பெறவும் வீட்டைத் தாண்டி வெளியே வாருங்கள்.

வெறும் படிப்பு மட்டும் போதாது உங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உலகம் வசப்படும். கனவு, கற்பனை, உழைப்போடு உங்கள் தொழிலை, வேலையை, படிப்பை நேசித்து செய்யுங்கள் வெற்றி நிச்சயம் இது என் ஆசிமட்டுமல்ல அனுபவ பூர்வமான உண்மையும் கூட. மேற்கண்டவாறு காம்கேர் கே.புவனேஸ்வரி பேசி முடித்த போது மீண்டும் அரங்கம் நிறைந்தது- இந்த முறை கைதட்டலால்.

காம்கேர் கே.புவனேஸ்வரியுடன் தொடர்பு கொள்ள எண்: 98842 80265.

கேளுங்கள் தமிழர்களே; கேழ்வரகில் நெய் வடிகிறதாம்!

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,:”டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை. வழக்கம் போல் மத்திய அரசை தாக்கி தயாரிக்கப்பட்ட அவரது உரையை ஒரு அமைச்சர் அங்கே வாசித்திருக்கிறார். அந்த உரையில் ‘தமிழ் நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அதனால்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக தேசிய அளவில் பேசப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறதா? முந்தாநாள் மாலையிலும் நேற்று காலையிலும் சட்டம் & ஒழுங்கு தொடர்பாக நாளேடுகளில் என்னென்ன செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை பார்ப்போம்.

நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்த டாக்டர் சுப்பையா, பில்ராத் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்ல காரில் ஏறும்போது அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொன் றது.செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஆட்டோவின் பின்னிருக்கையில் ரத்தக் காயங்க ளோடு வாலிபர் மயங்கிக் கிடந்திருக்கிறார். மருத்துவமனையில் இறந்த அவர் ஆட்டோ டிரைவர் சசிபாலன் என்று தெரிகிறது.

அதே செம்மஞ்சேரியில் கட்டிடத் தொழிலாளி வேல்முருகன் கொலை செய்யப்பட்டு முட்புதரில் சடலமாக கிடக்கிறார்.மாங்காடு அருகே தொழிலதிபரும், அதிமுக கிளை துணை செயலாளராகவுமான னு குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சேலத்தில் மூதாட்டி சரஸ்வதியை கொன்று 50 பவுன் கொள்ளை.

மதுரையில் வெங்காய வியாபாரி பாண்டி என்பவர், மாநகராட்சி திமுக கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே. குருசாமி தங்கை கணவர், வெட்டிக் கொலை.

பாரிமுனையில் பார்வையற்றவர்கள் 150 பேர் கைது.
ஜெயலலிதா சார்பில் ராமதாஸ் மீது 3 அவதூறு வழக்குகள்.
இதுவரை என் மீது 12 அவதூறு வழக்குகள்.
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்கு. அவர் துணைவி யாரையும் அவதூறு வழக்குகள் துரத்துகின்றன.
ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாம்.

திருவள்ளூரில் நடராஜ் என்பவரின் ஜவுளி கடை யை உடைத்து னீ9 லட்சம் கொள்ளை.ஈஞ்சம்பாக்கம் பகுதி யில் 5 கடைகளை உடைத்து னீ1.5 லட்சம் கொள்ளை.தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தொடர் மறியல் போராட்டம்.மணல் திருட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் சி.பி.ஐ. விசாரணைக்குஉத்தரவிட்டு, அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.

திருச்சியில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பா.ஜ மாநாடு பேனர்கள் 50க்கு மேற்பட்ட இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளன.

கும்மிடிப்பூண்டி அருகே னீ50 லட்சம் நில மோசடி.

மத்திய அமைச்சர் பெயரை சொல்லி வேலை வாங்கித் தருவதாக னீ33 லட்சம் மோசடி.

துரைப்பாக்கத்தில் பன்சேகர் என்ற ரவுடி மது அருந்தி ரகளை செய்ததால் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அவரது உறவினரான தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் விருகை ரவி ஆதரவாளர்களுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பன்சேகரை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

இதுதான் காவல் துறையினருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட லட்சணம்.

சேலம் சிறையில் சுகுமார் என்ற கைதி இறந்த விவகாரத்தில்
அமைச்சர்கள் மீது கொலை வழக்கு மனு விசாரணை தள்ளிவைப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு.

காட்பாடி அருகே வீடு மீது குண்டு வீச்சு 3 பேர் தலைமறைவு.
பேனர் கிழிப்பால் மோதல் கடலூரில் கடைகள் அடைப்பு.

திருப்பரங்குன்றம் தேமுதிக எம்எல்ஏ கைது, மனைவி தலைமறைவு.
பொன்னேரி காவல் நிலையத்தில் ஆர்த்தி என்ற பெண் தீக்குளிக்க முயற்சி.

எர்ணாவூரில் கழுத்தை நெரித்து மனைவி நதியா கொலை.
& ஒரே நாளில் ஏடுகள் சிலவற்றில் வெளிவந்த தலைப்பு செய்திகள்தான் இவை. ஒவ்வொரு நாளும் இதே நிலைதான். இதெல்லாம் நாட்டின் தலைநகரத்தில் யாருக்கு தெரியப்போகிறது என்ற எண்ணத்தோடுதான் ‘தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது; அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ என்று முதல்வர் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் உரையில் சிறுபான்மையினர் நல இயக்ககம் பற்றியும் பெரிதாகக் கூறியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியாக ஓர் இயக்குனரகம் முதலில் 1969ல் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியே ஓர் அமைச்சரை நியமித்ததும், அதற்கென மானியக் கோரிக்கை அறிமுகப்படுத்தியதும் 1971ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான்.

அதைப்போலவே சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்கு அரசின் தனிக்கவனம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்கென ஒரு தனி இயக்குனரகம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு அறிவித்த தற்கிணங்க, சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்திட அனுமதித்து 2007ல் ஆணையிடப் பட்டது.

இவ்வளவையும் மறைத்துவிட்டு, முதல்வர் உரையில், சிறுபான்மையினரின் நலன்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறியிருப்பது எவ்வளவு தவறானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

செடிகொடிகள் சாய்ந்து, காய்ந்து, மரங்களனைத்தும் பட்டுப் போய், வேலி உடைந்து, கொலைகாரர்களும், கூலிப்படையினரும், கொள்ளைக்காரர்களும் குடியேறி, பாம்புகளும், பூரான்களும், தேள்களும் நெளிந்திடும் பூங்காவை, அமைதிப் பூங்கா என்றால், நம்புவதற்கு நாமென்ன நனவிழந்து விட்டோமா? கேழ்வரகில் நெய் வடிகிறதாம் கேளுங்கள் தமிழர்களே.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

"ஆப்பிள்"ன் கதை

அமெரிக்காவில் ஆரேகான் மாநிலத்தில் உள்ள ரீட்ஸ் பல்கலை கழகத்தில் (ரிட்ஸ் College – Portland, Oregon) பெற்றோரின் விருப்பத்திற்காக கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவனுக்கு படிப்பில் நாட்டமில்லை. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், கம்யூட்டர்கள் பற்றிய அபார ஞானமும், நல்ல திட்டமிடும் திறனும் இருந்தாலும், கல்லூரி படிப்பு ஏனோ பிடிக்கவில்லை. வெளியேறி வேலைகள் தேடிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு தீடிரென எழுந்த எண்ணம் ஆன்மீகத்தின் உலக தலைநகரான இந்தியாவிற்கு போக வேண்டும் என்பது.

அந்த இளைஞனுக்கு வார இறுதி நாட்களில் இலவச உணவு வழங்கி வந்தது ஹரே கிருஷ்ணா கோவில். அங்கு ஒரு நண்பர் குறிப்பிட்டுச் சொன்ன மகத்தான இந்தியபாபாவை சந்தித்து ஆன்மீக வாழக்கைக்கு வழி கேட்டு தீட்சை பெற வேண்டும் என்பது அந்த இளைஞனுக்கு திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது. தனக்கு பகுதி நேரவேலை தந்த கம்யூட்டர் நிறுவனத்திடம் தன் இந்திய பயணத்திற்கு உதவி செய்யும்படி கேட்கிறான். மறுத்த நிறுவன அதிபர் ஜெர்மனிக்கு போய் ஒருவேலை செய்வதானால் இந்தியா அனுப்புவதாகச் சொல்லுகிறார். அந்த வாய்ப்பை ஏற்று, ஜெர்மனியில் கொடுத்த வேலையை முடித்துவிட்டு, இந்திய பயணத்தில் நாட்டமும் ஆன்மீகத்தில் ஆர்வமும் இருந்த உடன் வந்த அமெரிக்க நண்பருடன் குருவைத் தேடி, தனது 19 வயதில் 1974ம் ஆண்டு இந்தியா வருகிறான். குருவின் ஆஸ்ரமம் எங்கே இருக்கிறது எனறு தெரியாமல் பல இடங்களை சுற்றிப் பார்த்தபின் நைனிடால் அருகே உள்ள நீம்கரோலி பாபாவின் கைநச்சி ஆஸ்ரமத்தை அடைகிறான். அங்கு அவன் அறிந்த, அதிர்ந்த, அதிர்ச்சியான விஷயம் அவன் தேடி வந்த பாபா, சில வருடங்களுக்கு முன் கடவுளுடன் கலந்துவிட்டார் என்ற செய்தி. ஏமாற்றமடைந்தாலும் அந்த சூழ் நிலை பிடித்திருந்ததால் அங்கு சில நாள் பாபாவுடன் வாழ்ந்த துறவிகளுடன் தங்கி பலரிடன் பேசுகிறான். அந்த காலகட்டத்தில் ஆன்மீக தேடல் என்ற பெயரில் ஹிப்பிக்களின் புதிய கலாசாரம் பரவிக் கொண்டிருந்தது. அழுக்கான உடை, சீராக இல்லாத நீண்ட முடி, கிடைப்பதை சாப்பிடுவது, போதைப் பொருட்கள் என்று உலகின் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்த இவர்களில் பலர் இந்தியாவிற்கு வந்து ஏதாவது ஒரு மடத்தில் சாமியார்களுடன் வாழ்வதும் பின்னர் தீட்சை பெற்று திரும்புவதும் நடந்து கொண்டிருந்தது. பலஇடங்களில் இவர்களை ஏமாற்றி நம் ஆட்கள் பணம் பறிப்பதும் நடந்து கொண்டிருந்தது. தானும் தன் நண்பரும் அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றும், உண்மையில் பாபாவை தேடி வந்ததையும், ஆன்மிக வாழக்கைக்காக அவரின் ஆசி வேண்டி வந்ததையும் ஆஸ்ரம வாழ்க்கையின் போது நெருக்கமான ஒரு துறவியிடம் பேசுகிறான். தந்தை யாரென்று சொல்லப்படாமல், தாயால் தத்து கொடுக்க பட்டதையும், அன்பாக வளர்த்த அவர்களின் ஆசைக்காக கல்லூரி போனதையும், படிக்க முடியாமல் போனதையும், தனக்கு சாதாரண மனித வாழக்கை பிடிக்காமல்தான் அங்கு வந்திருப்பதையும் சொல்லுகிறான்

பொறுமையாகக் கேட்ட அந்தத் துறவி மறு நாள் தன்னை சந்திக்குமாறு சொல்லி அனுப்புகிறார். மறுநாள் காலையில் “ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார். அந்த ஆஸ்ரமத்தில் பாபா இருக்கும்போது பார்க்க வருபவர்களுக்கு அவர் தருவது ஆப்பிள்தான். ஏமாற்றமடைந்த அந்த இளைஞன், 1974ல் அமெரிக்கா திரும்புகிறான். அந்த இளைஞன் தான் பின்னாளில் கணினித் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் (1955-2011).

தமது முதல் கனவான புதிய வகையிலான கணினியை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல், இசை, தொலைபேசி, கணினி என்று மூன்று தொழில் நுட்பங்களையும் கையடக்க அளவில் உலகெங்கும் கொண்டு சென்ற ஐபாட், ஐபோன், ஐபேட் ஆகியவற்றையும் வடிவமைத்தது அவர் உருவாக்கி வழி நடத்திய நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். “இந்தியாவிற்கு ஸ்டீவ் செய்த ஆன்மீகப்பயணம் அவர் ஆப்பிளை துவங்க ஊக்கமளித்த முக்கிய காரணம்” என்கிறார் அவரது வாழக்கை சரிதத்தை அவர் அனுமதியுடன் எழுதிக் கொண்டிருக்கும் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்ட்டர் ஐசக்சன்.

2011 அக்டோபர் 5ம் தேதி, இவர் மரணமடைந்த போது, உலகின் அத்தனை பெரிய தினசரிகளும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக இவரது மரணச் செய்தியை வெளியிட்டு, தலையங்கள் எழுதி கெளரவித்திருந்தன. பல நாட்டு தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செய்தி அனுப்பியிருந்தனர். கைநச்சிமடத்தின் நிர்வாகி ஜோஷியும் அதில் அடக்கம். பாபாவை தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்த போது மடத்திலிருந்தவர் இவர். 1974ல் இந்தியாவில் இருந்து மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம் இருந்தது. இது அவரது பல செயல்களில் தெரிந்தது. உலகின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே. படித்த புத்தகங்களில் பெரும்பாலானவை இந்து, பௌத்த ஞானம் தொடர்பானவை. கடைசி 7 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி தோற்றவரின் இறுதி நாட்கள் பற்றி வரும் செய்திகள் மனதைத் தொடுகின்றன. குடும்பத்தினருடன் கழித்த அந்த நாட்களில் வீட்டின் பிராத்தனை அறையில் நீண்ட நேரம் செலவிட்டிருக்கிறார்.பொதுவாக அமெரிக்கர்கள் வீட்டில் பிரார்த்தனை அறையிருக்காது. இவரது பிரார்த்தனை அறையில் கிருஷ்ணர் போன்ற இந்து கடவுள்களின் படங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஸ்டீவ் ஜாப்ஸின் மரண இரங்கல் செய்தியில், “மாற்றி யோசிப்பதற்கான தைரியத்தையும், அதை செயல்படுத்தும் துணிவையும், உலகை மாற்ற் முடியும் என்ற தன்னம்பிக்கையையும், சாதிக்கும் திறமையையும் ஒருங்கே கொண்ட மிகப் பெரிய அமெரிக்க சாதனையாளர்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார். இந்த அமெரிக்கருக்கு, அதை சாதிக்க இந்த இந்திய மண்ணும், இங்கு பிறந்த இந்து, பௌத்த மத தத்துவங்களும் உதவியிருக்கின்றன என்பதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை.

Tuesday, September 24, 2013

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. 
சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்க வில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவை தொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா இப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத் தொழிலாளி, கழுதை சும்மா கத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்து பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது எனப் புரிந்து கொண்டான். அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக் கண்டு கொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக் கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான். நாய் செய்துக கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல் சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப் போன கழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன் போட்டா இப்படியும் நடக்கலாம்.

சுமைதாங்கி மரம்

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். 

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார்முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.

"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான்தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நண்பர்களே! நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்...

தமிழ் சினிமாவின் அபூர்வ ராகம்

சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975இல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36 முக்கிய திருப்பங்கள் பின்வருமாறு,

ரஜினி நடித்த முதல் திரைப்படம் 'அபூர்வ ராகங்கள்'. அதில் அவர் பேசிய முதல் வசனம் 'பைரவி வீடு இதுதானே...'என்பது தான். அதில் அவர் நடித்த காட்சிகள் 6. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அது அறிமுகமான திரைப்படம் மூன்று முடிச்சு. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் 'பைரவி'. இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. 'நான் போட்ட சவால்' திரைப்படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் முதல்முதலில் பதியப்பட்டது.

ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலொக் 'இது எப்படி இருக்கு?'. அவ்வசனம் அமைந்த திரைப்படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே 'ஹவ் இஸ் இட்?' என்று ஆங்கிலத்திலும், 'இப்புடு சூடு' என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்த பன்ஞ் டயலொக்கை தலைப்பாக வைத்து ஒரு திரைப்படமும் வெளிவந்தது. 'மூன்று முடிச்சு' தொடங்கி 'எந்திரன்' வரை பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது 'ஆடுபுலி ஆட்டம்' திரைப்படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு 'இது ரஜினி ஸ்டைல்' என்பார். ரஜினி நடித்த முதல் திகில் திரைப்படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த திகில் திரைப்படம் 'சந்திரமுகி'. ரஜினி நடிக்க மறுத்த திரைப்படம் 'நீயா?'. ஸ்ரீPப்ரியாவின் சொந்த திரைப்படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் கமல்.

பிராமண மொழி பேசி ரஜினி நடித்த திரைப்படம் 'சதுரங்கம்', சென்னைத் தமிழ் பேசி நடித்த திரைப்படம் 'தப்புத் தாளங்கள்'. 'வணக்கத்துக்குரிய காதலியே' ரஜினியின் முதல் தோல்விப் படம். ரஜினிக்கு பிடித்த திரைப்படம் 'முள்ளும் மலரும்'. பிடித்த இயக்குனர் 'மகேந்திரன்'. பிடித்த நடிகர் 'கமல்', பிடித்த நடிகை 'ஷோபா'. சிவாஜியுடன் நடித்த முதல் திரைப்படம் 'ஜஸ்டிஸ் கோபிநாத்'. இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன் நடித்த கடைசிப் திரைப்படம் 'படையப்பா'. முதல் பேண்டசி திரைப்படம் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்'. இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். உண்மைக் கதையில் இல்லாத கமருதீன் என்ற கதாபாத்திரம் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது.

முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் 'பில்ல'. மூன்று வேடங்களில் நடித்த படம் 'மூன்று முகம்'. குறுகிய காலத்தில் நடித்த திரைப்படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்'. 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த திரைப்படம் 'மாங்குடி மைனர்'. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினி, அதிலிருந்து குணமான பிறகு நடித்த திரைப்படம் 'தர்மயுத்தம்'. அந்த திரைப்படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார். ரஜினியின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் 'பொல்லாதவன்'. முதல் 70 எம்.எம். திரைப்படம் 'மாவீரன்'. முதல் 3டி திரைப்படம் 'சிவாஜி'. முதல் அனிமேஷன் படம் 'கோச்சடையான்'.

ரஜினி தயாரித்த முதல் திரைப்படம் 'மாவீரன்'. திரைக்கதை வசனம் எழுதிய படம் 'வள்ளி'. பாடல் பாடிய திரைப்படம் 'மன்னன்' (அடிக்குது குளிரு). எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார். இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பது அவரது கருத்து. 'பாண்டியன்', 'அருணாசலம்' போன்ற திரைப்படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்தவையாகும்.  ரஜினியின் அதிக திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

ரஜினியின் 50ஆவது திரைப்படம் 'டைகர்' (தெலுங்கு). 100ஆவது திரைப்படம் 'ஸ்ரீராகவேந்திரர்'. 'ரங்கா' திரைப்படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரா திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார். எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த திரைப்படம் 'ராணுவ வீரன்'. அவர் முதல்வரானதால் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார். ரஜினி நடித்த சில திரைப்படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. 'நானே ராஜா நீயே மந்திரி' என்ற தலைப்பு 'தம்பிக்கு எந்த ஊரு' என்று மாறியது. 'நான் காந்தி அல்ல' என்ற தலைப்பு 'நான் மகான் அல்ல' என மாறியது. 'காலம் மாறிப்போச்சு' என்ற தலைப்பு 'தர்மதுரை' ஆனது.

முதன் முதலாக ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்திய திரைப்படம் 'முத்து'. ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி. ரஜினி எடிட் செய்த திரைப்படம் 'படையப்பா'. படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2 இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர் சொன்ன கருத்து 'ரசிகர்களை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது' என்பது. அதிக நாள் ஓடிய திரைப்படம் 'சந்திரமுகி'. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'எந்திரன்'. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்'.

'மூன்று முடிச்சு', 'மாப்பிள்ளை', 'மன்னன்', 'படையப்பா' போன்ற திரைப்படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள். 'முள்ளும் மலரும்', 'மூன்று முகம்', 'முத்து', 'படையப்பா', 'சந்திரமுகி', 'சிவாஜி போன்ற திரைப்படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள். மீசையில்லாமல் நடித்த முதல் திரைப்படம் 'தில்லு முல்லு', முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படமும் அதுதான். ரஜினியின் பிரபல பாம்பு சீன் முதலில் இடம்பெற்றது பைரவியில். ஆனால் புகழ் பெற்றது அண்ணாமலையில். இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் '6லிருந்து 60 வரை'. ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.

கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து. நிஜ வாழ்க்கையில் பஸ் நடத்துனராக இருந்த ரஜினி எந்த திரைப்படத்திலும் நடத்துனராக நடிக்கவில்லை. 'ஆறு புஷ்பங்கள்' திரைப்படத்தில் விஜயகுமார் பஸ் நடத்துனராக நடிக்க ரஜினி சாரதியாக நடித்திருந்தார். பாட்ஷா திரைப்படத்தில் ஒரே ஒரு பாட்டில் நடத்துனராக வருவார். ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த திரைப்படம் 'முரட்டுக்காளை', 'சந்திரமுகி'. எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த திரைப்படம் 'ஸ்ரீராகவேந்திரர்' மற்றும் 'பாபா'. ரஜினி நடித்த ஹொலிவுட் திரைப்படம் 'பிளட் ஸ்டோன்'. ரஜினின் பல திரைப்படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. நேரடியாக நடித்த இந்தி திரைப்படம் '16'.

தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் 'சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்' என்பார்.

டெக்னாலஜியை தகர்பபவர்களுக்கு 8 லட்ச ரூபாய் பரிசு!


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு சாதனங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜியை கொண்டுள்ளது. நீங்கள் கைரேகை போனை அன்லாக் செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி இருப்பதால் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த டெக்னாலஜி பற்றி தொழில்நுட்ப பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் செக்கியூரிட்டியை ஹாக் செய்ய முடியுமா இல்லை முடியாதா என்று கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

இதனால் செக்கியூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் சிலர் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு ஒரு போட்டியை அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி செக்கியூரிட்டியையை தகர்பவர்களுக்கு 13,000 டாலர் அதாவது கிட்டதிட்ட 8 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் இது தான் அறிவித்துள்ள போட்டி.இதை கேள்விபட்ட ஹாக்கர்கள் ஆப்பிள் ஐபோன் 5Sன் விற்பனைக்காக காத்திருக்கின்றனர். இந்த போட்டிக்காக ஆர்டுராஸ் ரோஸன்பேக்கர் என்பவர் 10,000 டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த போட்டி ஆப்பிளின் அந்த டெக்னாலஜியில் இருந்தால் அதை சரி செய்ய உதவும் (This is to fix a problem before it becomes a problem) என்று அவர் தெரிவித்தார். forbes.com அண்மையாக ஸ்பெயினை சேர்ந்த 36 வயது ராணுவ அதிகாரி ஒருவர் ஆப்பிள் ஐஓஎஸ்7 மொபைல் ஓஎஸ்ல் செக்கியூரிட்டி பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது அது இங்கு குறிப்பிடதக்கது.

Sunday, September 22, 2013

பாய்சனை (யும்) கொடுக்கும் தண்ணீர் பாட்டில்கள்!

நாமெல்லாம் குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்தோ அல்லது அதன் விலையை பார்த்து யோசித்து வாங்குவோம்,ஆனால் அதே சமயம் அந்த பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை யாருமே எப்போதுமே கவனிப்பதில்லை. எல்லா குடிநீர் பாட்டில்களிலும்ம் ல் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ”1” இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ”2” இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ”3” என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ”4” எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ”5” பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ”6” இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ”7” இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ”மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ”ஒன்ஸ் யூஸ்” பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ”மெல்லக் கொல்லும் விஷமாகி” நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்” என்கிறார்.

ஆரம்பமாகி விட்டது சூதாட்டம்!

அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக, தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே, தேர்தல் சூதாட்டம் தொடங்கும். ஆனால் இந்த முறை பா.ஜ. காங்கிரஸ் இடையேயான போட்டி பற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதால் சூதாட்டம் இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது. இந்த சூதாட்டம் காங்கிரசுக்கு ஆதரவாக இல்லை.பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்குதான் நிலைமை சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூதாட்டத்தில் அவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரூ1.30 நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மோடி பிரதமர் ஆவார் என்று கட்டப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ1.30 கிடைக்கும். இதற்கு மாறாக ராகுல் காந்தி மீது நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ3. மோடியை விட ராகுல் மிகவும் பின்தங்கி இருப்பதையே இது காட்டுகிறது. எனினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஏற்படும் அரசியல் மாற்றங்களை பொருத்து இதில் மாற்றம் ஏற்படும்.

தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அவர் மீது நிர்ணயிக்கப்பட்ட சூதாட்ட தொகை ரூ12. இதேபோல சோனியா காந்தி மீதான தொகை ரூ13. மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், இந்தூர், கராச்சி மற்றும் துபாய் சூதாட்ட மார்க்கெட்டுகளில் இந்த தேர்தலுக்கு ரூ90 கோடி வரை சூதாட்டம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் இந்த தொகை மேலும் அதிகரிக்கும்.

சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் முக்கிய தரகர் (புக்கி) ஒருவர் இது குறித்து கூறுகையில், “பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படும் வரையில், சூதாட்டக்காரர்களின் மனதில் ஒருவிதமான குழப்ப நிலைமை காணப்பட்டது. எல்.கே.அத்வானியின் எதிர்ப்பு காரணமாக சில மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே சூதாட்டம் களைகட்ட தொடங்கிவிட்டது. அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் சூதாட்ட மார்க்கெட் சூடுபிடித்து விட்டதுÓ என்றார்.

குடிமகன்களை கவரும் டாஸ்மாக் யுக்தி!

டாஸ்மாக் கடைகளில் பிராந்தி சுவை, மணத்துடன் புதியரக வெளிநாட்டு விஸ்கியும், எக்ஸ்ட்ரா லார்ஜ் தர முத்திரையுடன் பிராந்தியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் தற்போது லீராய் என்ற பெயரில் பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்ற தரப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றால் கொடுக்கும் பணத்திற்கு மிச்சமாக போதையும், தரமும் இருக்கும் என்பது பொருளாம். பிராந்திக்கு பெயர் பெற்ற பிரான்ஸ் கோனியாக் நகரிலிருந்து பிராந்திக்கான மூலப்பொருளை வரவழைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி கொண்ட பாட்டில் 130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் இந்தியன் சேலஞ்ச் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விஸ்கியில் பிராந்தியின் சுவை, மணம், கலருடன் (மஞ்சளுக்கு பதில் பிஸ்கட் கலர்) விற்பனை செய்யப்படுகிறது. இது விஸ்கிக்கு பெயர் பெற்ற ஸ்காட்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி மூலப்பொருள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஸ்காட்சுக்கு நிகரான மது என்றாலும் இந்தியாவில் தயார் ஆவதால் இம்மது 180 மில்லி பாட்டில் ரூ140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அது மட்டுமின்றி வோட்காவில் ஆப்பிள், ஆரஞ்ச், ஸ்ட்ராபெர்ரி ஆகிய நறுமணங்களை தொடர்ந்து சாக்லெட் மணத்துடன் கூடிய வோட்காவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் மூமென்ட் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் இது 180 மில்லி ரூ140க்கு விற்பனையாகிறது. இது குடிமகன்களை குதூகலப்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. அனால் சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் “இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார்.

Saturday, September 21, 2013

முகமது அலியை வீழ்த்திய கென் நார்ட்டன் மரணம்

உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை பட்டத்தை வென்ற முன்னாள் சாம்பியன் கென் நார்ட்டன் தமது 70 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

தொடர்ச்சியாக ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதல்கள் காரணமாக அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. சிகிச்சை பலனளிக்காமல் லாஸ் வீகாஸ் நகரில் அவர் மரணமடைந்தார்.

கலிஃபோர்னியா மாகாணம் சான் டியோகோவில் 1973 ஆம் ஆண்டு முகமது அலியுடன் மோதிய போது, நார்ட்டனின் தாக்குதல் காரணமாக முகமது அலியின் தாடை முறிந்தது.

அந்தப் போட்டியில் கென் நார்ட்டன் வென்றார்.

எனினும் 1976 ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் யான்கி அரங்கில் இடம்பெற்ற உலக குத்துச் சண்டைப் போட்டியில், சர்ச்சைக்குரிய முடிவால், மிகக் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் முகமது அலி வென்று பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அவர் தற்போது சொர்க்கத்தில் பல பிரபல வீரர்களுடன் இருப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாக, முகமது அலியின் முன்னாள் வர்த்தக மேலாளர் ஜீன் கில்ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்கப் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிய போது குத்துச் சண்டைப் போட்டிகளில் ஈடுபட ஆரம்பித்தார், பின்னர் 1967 ஆம் ஆண்டு தொழில் ரீதியிலான போட்டியாளராக மாறினார்.

1977 ஆம் ஆண்டு உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டைப் பட்டத்தை அவர் வென்றாலும், அடுத்த ஆண்டு லானி ஹோல்ம்ஸுடன் நடைபெற்ற 15 சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்தார்.

தனது குத்துச் சண்டை வாழ்க்கை முடிந்த பிறகு, பல திரைப்படங்களில் நடித்த அவர், விளையாட்டு வர்ணனையாளராகவும் திகழ்ந்தார்.

Friday, September 20, 2013

‘யா யா’

சிவாவுக்கு ஜோடி தன்ஷிகா. சந்தானம் ஜோடி காதல் சந்தியா, கூடவே இளவரசு, ரேகா, சித்ராலட்சுமணன் நடித்திருக்கிறார்கள். டாக்டர் சீனிவாசன் தனி ஆவர்த்தனம் பண்ணுகிறார். அவருக்கு ஜோடி தேவதர்ஷினி.

வழக்கமாகவே சிவா படத்தில் மருந்துக்குக்கூட கதையோ, லாஜிக்கோ, சென்டிமென்ட் விஷயங்களோ எதுவும் இருக்காது. அதைப் போல இந்த படத்திலும் மேலே சொன்ன எதுவும் இல்லை. சந்தானம் படங்களில் கதையை விட சந்தானம் காமெடி என்ற பெயரில் பேசுகிற வசனங்கள்தான் காதை ரணமாக்கும். இதிலும் சந்தானம் பேச்சுக்கு குறைவில்லை.

சிவாவுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை. அப்படியே வேலைக்கு போனாலும் அரசாங்க வேலைக்குத்தான் போவேன்னு அடம் புடிக்கும் கேரக்டர். சிவா அப்பா இளவரசு கட்சியில வட்டசெயலாளர் அதை பயன்படுத்தி சிவாவுக்கு வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார். அதுக்காக பெண் கவுன்சிலரை பார்க்கப்போகும் சிவா மீது அந்த கவுன்சிலருக்கு காதல் பிறக்கிறது. அப்படி வேலைக்கு போகும் வழியில் பஸ்சில் தன்ஷிகாவை பார்க்கிற சிவாவுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்காக பல தகிடுதத்தங்கள் செய்கிறார்.

தன்னை விட்டு விட்டு தன்ஷிகாவை காதலிக்கும் சிவாவிடம் இருந்து தன்ஷிகாவை பிரிக்க பெண் கவுன்சிலர் திட்டமிடுகிறார். இதற்காக சிவாவின் நண்பன் சந்தானத்தை பணம் கொடுத்து கவுன்சிலர் விலைக்கு வாங்குகிறார். பணத்தை வாங்கிக் கொண்டு நண்பன் சிவாவின் காதலை பிரிக்க சதி செய்கிறார் சந்தானம்.

ஒரு கட்டத்தில் சந்தானம் எல்லா உண்மைகளையும் சிவாவிடம் சொல்லிவிட அது பெண் கவுன்சிலருக்கு தெரிவருகிறது. தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார். அதேபோல, தன்ஷிகாவால் பாதிக்கப்பட்ட சீனிவாசனும் தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார். இதற்கிடையில், காதல் சந்தியாவுக்கும் சந்தானத்துக்கும் திடீரென கல்யாண ஏற்பாடு நடக்கிறது. கல்யாண மண்டபத்தில் பெண்ணை கடத்த வரும் சீனிவாசனும், பெண் கவுன்சிலரும் தன்ஷிகாவை பார்க்கிறார்கள். தன்ஷிகா கடத்தப்பட்டாரா? சிவாவின் காதல் கைகூடியதா? சந்தானம் கல்யாணம் நடந்ததா? பவர்ஸ்டார் சீனிவாசன் என்ன ஆனார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.

அப்பாடா…. இந்த படத்தோட இயக்குனர் கூட இவ்ளோ தூரம் யோசிச்சி கதை எழுதியிருக்க மாட்டார்னு நெனைக்கிறேன்… அந்தளவுக்கு யா யா கதையை சொல்லிட்டேன்… எம்எஸ் முருகராஜ் தயாரிப்பில் வெளிவந்திருக்கிற ‘யா யா’ படத்தோட பேர் போலவே யாருக்கும் புரியாது…

ரெயில்வே கழிவறையில் காதல் ஜோடி

டெல்லி மெட்ரோ ரெயிலில் காலியாக செல்லும் பெட்டிகளில் பயணம் செய்யும் காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபடுவது மற்றும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையதளத்தில் பரவி வந்தன.இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை காதல் ஜோடிகளுக்கு உல்லாசமாக இருக்க வாடகைக்கு விட்டுவருவதாக தகவல்கள் வெளியானது. இதை கண்டுபிடிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செயலில் இறங்கியது.

அதன்படி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் ரெயில் நிலைய கழிவறையை பராமரிக்கும் ஊழியரை தொடர்பு கொண்டு தனது காதலியுடன் நேரத்தை செலவிடுவதற்காக கழிவறையை வாடகைக்கு கேட்டார்.இதற்கு ஒப்புக்கொண்ட அந்த ஊழியர், அதற்கு வாடகையாக ரூ.500 தர வேண்டும் என்று நிருபரிடம் கேட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த டெல்லி மெட்ரோ ரெயில்வே நிர்வாகம், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது.இது குறித்து மெட்ரோ ரெயில்வே கார்ப்பரேஷன் இயக்குனர் அனுஜ் தயால் கூறுகையில், “இந்த சி.டி. ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாநகராட்சி விளம்பர தூதராகிறார் ரஜினி?

பெங்களூர் நகர மக்களிடம் சுத்தம் பற்றியும், கழிவுகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடிகர் ரஜினிகாந்தை தூதராக பொறுப்பு ஏற்க கேட்கப்போவதாக மாநகர மேயர் அறிவித்துள்ளார். மேலும் இதில் இணைந்து பணியாற்ற கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் நகர மக்களிடம் கழிவு குப்பைகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்தி சுத்தத்தை பேணுவதற்கான பணியில் பெங்களூர் நகர மேயர் சத்யநாராயணா தீவிரம் காட்டி வருகிறார். இவர் ரஜினியின் பள்ளி தோழராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெங்களூரை குப்பையில்லா நகரமாக மாற்றுவதே தனது குறிக்கோள். நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர். அவரை பெங்களூர் மாநகராட்சி விளம்பர தூதராக நியமிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.இது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். மேலும் கவுன்சிலர்களுடன் சென்னைக்கு சென்று அவரை சந்திக்க முடிவு செய்துள்ளேன்.

எனது இந்த திட்டத்தை அவர் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் எப்போதும் எனது முடிவை நிராகரிக்க மாட்டார். அவர் மூலம் பெங்களூரில் குப்பை பிரச்னை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.மேலும், இந்த திட்டத்தில் கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் அழைப்பு விடுக்கப்படும். குப்பை கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மாணவர்களிடம் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் வியாபாரிகளிடமும் இதுபற்றி எடுத்துக் கூறப்படும்” என்றார்.

‘டீ’ ஒரு கப் ரூ.925

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.இதன் விலை ஒரு கப் ரூ.925 (55 தினார்) மட்டும்.

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கேரட் தங்க பிளேட்டுகளாக தயாரிக்கப்படுகிறது. பின்னர் மொராக்கோ அனுப்பப்பட்டு டீயின் சுவை அளிக்கப்படுகிறது.இந்த டீ அரபு நாட்டினர், மேற்கத்தியர்கள் என அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது உடல் நலத்துக்கும் நல்லது.

பெண்களின் தலையாய பிரச்னை

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவையோ அல்லது நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையோ இருந்தாலும் மேலும் உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையில் ஏதாவது இருக்கிறதா?

இதையெல்லாம் தாண்டி எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. என்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் கூட நீங்கள் உடனடியாக தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

இது குறித்து நம்மிடம் விவரித்த டாக்டர்கள்,”இப்போதெல்லாம் இந்த தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.” 

Thursday, September 19, 2013

ரோஜாவின் ’’ஆப்பிள்பெண்ணே’’


கே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆப்பிள்பெண்ணே’

இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.மற்றும் ரோஜா, தம்பிராமைய்யா ,கே.ஜி.பாண்டியன்,தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர் நடிக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணியிடம் கேட்டபோது,”ஆப்பிள் பெண்ணே ஒரு தாய்க்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை ரோஜா – ஐஸ்வர்யா மேனனை வைத்து சொல்லுகிறோம்.படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை உருவாக்கியுள்ளோம். தம்பி ராமையா அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில் நடிக்கிறார் எந்த பிரச்சனையையும் ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுமையாக முடித்து விடும் கதாபாத்திரம்.தயாரிப்பாளர் கே.ஜி.பாண்டியன் திரைக்கதையில் ட்விஸ்ட் ஏற்படுத்தும் தாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார்.படத்தில் ரோஜா பாடும் பாடலில் உணவே மருந்து ….மருந்தே உணவு என்ற கருத்தை சொல்லும் விதமாக ஒவ்வெரு காய்கறி ,பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்களை உள்ளடக்கியது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறோம்.இது பாட்டா மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும்” என்றார் இயக்குனர் ஆர்.கே.கலைமணி .

நடுரோட்டில் நிர்வாண தியானம்

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நேற்று போக்குவரத்து நெரிசல் மிக்க ஹைகோவ் நகரத்தில் ஹைதியான் ஆறாவது நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னலுக்கு கீழே திடீரென மாணவர் ஒருவர் அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினார். அவரது இந்த செயலைக் கண்டு வாகன ஓட்டிகள் முதலில் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். ஆனால் படிப்படியாக அந்த மாணவர் தனது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து முழு நிர்வாணமாக அமர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தார். இதனைக் கண்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் முகத்தை சுளித்துக் கொண்டு சென்றனர். பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர்.

எனது தியானத்தை கலைக்கிறாயா என ஆபாசமாக பேசி, தன்னை தொந்தரவு செய்தவர்களுடன் அந்த மாணவர் சண்டையிடத் தொடங்கினார். இதனையடுத்து சாலையில் செல் பவர்களிடம் ஆபாச சைகைக்காட்டி ரகளை யில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை ஆடையை அணிய வலியுறுத்தினர்.

சீனாவில் பொது இடத்தில் நிர்வாணமாக இருப்பது சட்ட விரோத செயலாகும் என்று அறிவுறுத்தினர். ஆனால் மாணவர் மறுக்கவே அவரை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வாகனத்தில் அடைத்தனர். விசாரணையில் ரஷ்யாவைச் சேர்ந்த லிமாக் என்பதும் பல்கலை கழகத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரசு சின்னத்தில் கோபுரத்தை அகற்றக் கோரி மனு!

“தமிழக் அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை.”எனக் கூறி தமிழக அரசின் சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் ஆர்.கண்ணன் கோவிந்தராஜூலு. ஓய்வுப்பெறற ராணுவ வீரர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் “தமிழ்நாடு அரசின் சின்னத்தில் (லட்சினை) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மேலும், அரசு சின்னத்தில் இடம் பெற்றுள்ள தேசிய கொடியின் அளவு தவறாக உள்ளது.எனவே தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கோவில் கோபுரம் உருவத்தை அகற்றவேண்டும். தேசிய கொடியின் அளவை சரியாக அமைக்கவேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோவில் கோபுரத்தை அகற்றி, சரியான தேசிய கொடியின் அளவை அரசு சின்னத்தில் பொறிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.”இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில்”ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுவரை எழுந்தது இல்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகையின்போது, அரசியல் தலைவர்கள் அதில் பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வழக்கும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

எனவே அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை. எனவே இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறேன்.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, September 17, 2013

ஏமாற்றுக் காதலை எப்படி அறிவது ?

காதல் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துக்காகவே சிலர் காதலல் விழுவதுண்டு. பணம், செல்வாக்கு, ஆள் வலிமை உள்ள ஆண்கள் காதலில் தங்கள் பலத்தினை காட்டவேண்டும் என்பதற்காக, யாராவது ஒரு பெண் மீது குறி வைத்து காதல் காட்டுவார்கள்.

அந்தக் காதலை ஜெயிப்பதற்காக பணம், பலம் அனைத்தையும் காட்டுவார்கள். திருமணம் என்ற சூழல் ஏற்படும்போது மிக நல்ல பிள்ளையாக மாறி, “அம்மா, அப்பா சொல்படிதான் நடப்பேன்” என்பார்கள். ஏனென்றால் இவர்களது பெற்றோரின் சொத்து அவசியம் தேவை என்பதுதான் உண்மை.

இதேபோல் சில பெண்களும் தங்கள் இளமை மற்றும் அழகினை மற்றவர் முன் பறைசாற்றுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு எல்லை வைத்துக்கொண்டு, அதற்குப் பின் அந்தக் காதலர்களை அவமரியாதை செய்து அனுப்பிவிடுவார்கள்.

அதாவது இப்படிப்பட்டவர்கள் காதல் என்பதை ஒரு பொழுதுபோக்காக ஜாலியாக எடுப்பவர்கள். இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி ஏமாந்து போகும் ஆண், பெண்தான் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற மோசமான முடிவினை எடுப்பதுண்டு.
இப்படிப்பட்ட காதலைக் கண்டுகொள்வதும், விலக்குவதும் மிக எளிது. அதாவது ஆரம்பமே மிக அவசரமாக இருக்கும்.

“காதலிக்கிறேன்” என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சகஜமாகப் பேசுவார்கள். எல்லா முடிவுகளும் அவர்கள் எடுப்பதாகவே இருக்கும். நாளை ஒரு இடத்திற்குப் போகலாம் என முடிவெடுத்தால் எங்கே போவது, என்ன செய்வது, எப்பொழுது திரும்புவது என எல்லாவற்றையும் அவர்களே முடிவெடுப்பார்கள்.

இந்த வகையான ஆண், பெண் இருவரும் திருமணம் பற்றி பேசமாட்டார்கள். நம்பு என்று சந்திப்பார்கள். இவர்களை நல்ல காதலர்களாக மாற்றுவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போன்று கடினமானது.

எனவே, இப்படிப்பட்ட நபர்கள் என்று அறியவரும் பொழுது இது காதல் இல்லை என்று தெளிவடைவது நல்லது. மேலும், அவர்களுடன் நட்பினை தொடர்வதும் ஆபத்தானதே. ஏதாவது ஒரு கடினமான இக்கட்டான சூழலில் யாராவது ஒருவருடன் வாழ முடிவெடுத்துவிடுவார்கள். அவர்களுடன் கடைசி வரை ஓர் அடிமை நிலையில் வாழ வேண்டுமே தவிர அந்நியோன்யமாக வாழ முடியாது.

ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.

இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. இரண்டுமே அவர்களது பலகீனமே.

அதாவது, பொய் மற்றும் நண்பர்கள்.

இந்த இரண்டில் தெளிவாக இருந்தால் இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து தவிர்த்துவிடலாம்.

இவர்கள் கூசாமல் நிறைய பொய் சொல்வார்கள். முன்னர் சொன்ன பொய்யை, அப்படிச் சொல்லவே இல்லை என்று சாதிப்பார்கள்.

அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவார்கள். கண்டுபிடித்துக் கேட்டால், அதை ஒரு குற்றம் மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது பரிசு கொடுத்து அல்லது மீண்டும் சில பொய்கள் சொல்லி சமாளிப்பார்கள். பொய்கள் எண்ணிக்கை உயரும் பொழுது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் இவர்களது நோக்கத்தினை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

அடுத்ததாக நண்பர்கள்.

அதாவது நட்பு என எவரையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள். நீங்கள் யாரையாவது அறிமுகப்படுத்த விரும்பினாலும் சாமர்த்தியமாக தட்டிக் கழிப்பார்கள்.

மிக புத்திசாலித்தனமாக நடப்பவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை மட்டும் நாடகத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்துவார்கள். இவர்கள் ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் நேரங்களில் மட்டும் ஆஜராகி மிக அற்புதமாக அவற்றைத் தீர்த்துவிட்டு விலகுவார்கள்.

தற்செயலாக உறவுகள், நட்புகளை சந்திப்பது இருக்காது. அம்மாவிடம் இந்த வாரம் கூட்டிப் போகிறேன் என மிக உறுதியாக வாக்குறுதி கொடுப்பார்கள். கடைசி சில நிமிடங்களில் உடல் நலம் சரியில்லை, ஊருக்குப் போய்விட்டார்கள் என நடிப்பார்கள்.

அவர்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் என்றால், அதனை அனுபவித்த பின்னர் விலகுவாக்ரள். அல்லது சுய ரூபத்தைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்கள். பணம் அல்லது சொத்து என்றால் அவசரக் கல்யாணம் வரை போவார்கள்.

பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கவில்லை என்று நாடகமாடுவார்கள். திருமணத்திற்குப் பின் தேவையானதை சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள். அல்லது காதல் வேண்டாம் காசு வேண்டும் என சுய ரூபத்தைக் காட்டுவார்கள்.

இப்படிப்பட்ட நபர்களும் நம் சமூகத்தில் கலந்து இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு விலக வேண்டியது மிக முக்கியம்.

"இப்படியும் படத்தலைப்புகள்" வரலாம்.....

சென்னையில் கல்லூரி இளசுகளிடையே ஒரு எஸ்.எம்.எஸ். ரொம்ப பிரபலமாகி வருகிறது சமீப காலமாக...! அது கோலிவுட் நாயகர்களின் பட டைட்டில்களைப் பற்றிய நக்கலும் நையாண்டியும்தான் என்பது ஹைலைட். 

சுறாவை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படங்களின் தலைப்பு நெத்திலி, கருவாடு, வஞ்சிரம், திமிக்கலம் என்பதாக இருக்குமாம்.

மங்காத்தாவில் நடித்து வரும் அஜித்தின் அடுத்தடுத்த படத் தலைப்புகள்... மாரியாத்தா, செல்லாத்தா என்பதாக இருக்குமாம்.

தனுஷ் படிக்காதவனைத் தொடர்ந்து எழுதாததவன், விளங்காதவன் உள்ளிட்ட படங்களிலும்,

ஜீவா எஸ்.எம்.எஸ் படத்தை தொடர்ந்து எம்.எம்.எஸ், மிஸ்ட்கால், டயல்ட் கால் உள்ளிட்ட படங்களிலும்,

விஷால் சத்யம் படத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ பெயரை உ‌டைய படங்களிலும்,

சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களிலும்,

மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்கிறது அந்த இளசுகளின் எஸ்.எம்.எஸ்.!

‌கோடம்பாக்கத்தின் டைட்டில் பஞ்சம் இப்படியும் தலைப்புகளை சூட்ட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் வேதனையுடன் ஒரு ரிட்டயர்டு கோலிவுட் டைரக்டர்!

Monday, September 16, 2013

வாகனங்களை ஓட்டத் தெரிந்த உங்களுக்கு இது தெரியுமா

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை, இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ. நரசிம்மமணி கூறியதாவது... 

1) பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

2) சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு, அபாயகரமான அல்லது
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

3) சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

4) ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

5) ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

6) ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

7) கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

9) வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

10) கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

11) நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் அப்சர்வ் செய்கிறது, விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

12) நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் மொபைலின் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும், ஏன் சிம்கார்டு இல்லாத நிலையிலும் கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம், மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

வரலாற்றை இழந்துவரும் சென்னை


பழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம். தவறில்லை. ஆனால் பேச்சில் உள்ள ஆர்வம் அந்தப் பெருமைக்குக் காரணமான வரலாற்றுத் தடங்களை அழியாமல் பாதுகாக்கும் செயல் என்று வருகிறபோது எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் மனசு சோர்ந்துதான் போகிறது.

கால ஓட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி அவசியம்தான். ஆனால் ஒவ்வொரு சாதாரண ஊருக்குமேகூட ஒரு பின்னணியும் அதற்கென்றே ஒரு பிரத்தியேக வரலாறும் வடிவழகும் உண்டு. அது சிதைந்துவிடாமல் வளர்ச்சி அமைவதுதான் முறையாக இருக்கும். அதிலும் சென்னை மாதிரி ஒரு மாநகருக்கென்று இருக்கிற பிரத்தியேக அமைப்பும், தனித் தன்மையும் வரலாற்றுப் பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டியவை. இந்தச் சிறப்பு அம்சம் நகரின் நிதானமற்ற அசுர வளர்ச்சியாலும் பொறுப்பற்ற உள்நோக்கங்களாலும் பாதிக்கப்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை எந்த அளவுக்கு இருக்கிறது?

இன்றைய சென்னை நானூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. 1639இல் ஆங்கிலேயக் கிழக்கு இந்திய கம்பெனி தனது பண்டகசாலைக்காகத் தமிழ்நாட்டின் வடகிழக்கில் வங்கக் கடலோரம் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டதிலிருந்து, மதராசப் பட்டினமாக அது உருவாகத் தொடங்கியது. முதலில் கறுப்பு ஊர் என்று இழிவாகவும் பிறகு பிரிட்டிஷ் பேரரசர் ஜார்ஜின் முடி சூட்டு விழாவை யொட்டி ஜார்ஜ் டவுன் என்று கௌரவ மாகவும் அழைக்கப்பட்ட பகுதி, நேட்டிவ்ஸ் என்று துச்சமாகப் பேசப்பட்ட மண்ணின் மைந்தர்களது வசிப்பிடமாக இருந்தது. இன்றைக்கும் அந்தப் பகுதியில் சாதிப் பெயர் நீக்கத்தின் விளைவாக தம்புத் தெரு லிங்கித் தெரு என்றெல்லாம் சுருங்கிப் போனதன் காரணவான்களான தம்புச் செட்டியும் லிங்கிச் செட்டியும் அன்று கும்பினியாருடன் வரவு செலவு செய்து கொடி கட்டிப் பறந்த வணிகப் பெருமக்கள். அவர்கள் தங்களைத் தம்புச் செட்டி, லிங்கிச் செட்டி என்றுதான் அழைத்துக்கொண்டார்கள். அதைப் பொருட்படுத்தாமல் சாதி மறுப்பு என்ற பெயரில் அவர்களின் பெயரை நம்மிஷ்டத்துக்குச் சுருக்கிவிடுவதும் நகரின் வரலாற்றுக்குச் சேதாரந்தான்.

அன்றைய மதராசப் பட்டினத்தில் ஆர்க்காடு நவாபுகளின் மேலாதிக்கம் செல்லாக் காசாகிவிட்ட போதிலும், கும்பினி கவர்னர்மார்களது விசேஷங்களின் போதெல்லாம் அவர்களது பிரசன்னமும் மக்கள் மத்தியில் பெருங்காயம் வைத்த டப்பாவாகச் செல்வாக்கும் ராஜ மரியாதைகளும் அவர்களுக்குச் சாத்தியமாகவே இருந்தன. இதற்கு அடையாளமாக நல்ல வேளையாய் இன்றளவும் பெயர் மாற்றப்படாமல் நீடிக்கும் வாலாஜா சாலையும், மெரீனா கடற்கரை ஓரம் இந்தோ ஸார்ஸெனிக் கட்டிடக் கலை பாணியில் நீலக் கடலை நிமிர்ந்து நோக்கியவாறு எடுப்பாக விளங்கும் சிவப்பு நிறக் கட்டிடங்களும் இருந்து கொண்டிருக்கின்றன.

எனினும், சென்னையின் பாரம்பரியமான கட்டிடங்கள் ஒவ்வொன்றாக மறைந்துவருகின்றன. சென்னைக்கே அடையாலிளம்போல் இருந்த மூர் மார்க்கெட் கட்டிடமும் மவுண்ட் ரோடில் இருந்த ஸ்பென்ஸர் கட்டிடமும் இப்போது இல்லை. இக்கட்டிடங்கள் அவை இருந்த பகுதிக்கே ஓர் அழகும் கம்பீரமும் சேர்த்தவை. அவற்றுக்குப் பதிலாக இன்று எழுப்பப்பட்டுள்ள மாற்றுக் கட்டிடங்கள் வெறும் வணிகக் கண்ணோட்டத்தில் உருவானவை.

சென்னையின் பாரம்பரியப் பெருமை பேசும் எஞ்சியுள்ள ஒரு சில கட்டிடங்களில் கடைசியாக அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பது, சேப்பாக்கம் அரண்மனையென்றும் கலாஸ்மஹால் என்றும் மதராசப்பட்டினத்தில் அறியப்பட்டு இன்று தமிழ்நாடு மாநில அரசின் பொதுப் பணித்துறை அலுவலக வளாகமாக மாறிப்போன சிவப்பு நிற இந்தோ ஸார்ஸெனிக் பாணிக் கட்டிடம். ஏறத்தாழ 225 ஆண்டுகளுக்கு முன் வாலாஜா நவாபால் கட்டப்பட்ட கட்டிடம் இது. சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் எல்லாம் சொல்லிவைத்தாற்போல் மின்சாரக் கசிவினால் விளையும் தீ விபத்தால் சேதமடைந்து அந்தச் சாக்கில் இடித்துத் தரைமட்டமாகி, அந்த இடத்தில் இரும்பும் கான்கிரீட்டுமாக ஒரு பிரமாண்ட அடுக்கு மாடிக் கட்டிடம் எழும்பிவிடுவதுபோல் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி மின் கசிவால் தீ விபத்துக்குள்ளான சேப்பாக்கம் அரண்மனையின் தலைவிதியும் அமைந்துவிடக்கூடும். ஆனால் தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரம்பரியப் பெருமைக்குரிய கட்டிடங்களை அவற்றின் அசலான வடிவத்திலேயே புனர் நிர்மாணம் செய்வது குறித்துக் கட்டிடக் கலை நிபுணர்களை அழைத்துப் பேசியிருப்பதாகச் செய்தி வந்திருப்பது ஒரு நல்ல சகுனமாக நம்பிக்கை தருகிறது.

இது இப்படியிருந்தாலும், திடீர் திடீரெனப் பழைய சாலைகளுக் கெல்லாம் முன்யோசனையின்றிப் பெயர் மாற்றம் செய்து, சென்னையின் வரலாற்று அடையாளங்களைத் துடைத்து எறியும் சோகமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சுதந்திரம் வந்த புதிதில் கரைபுரண்டு ஓடிய உற்சாகத்தில் சில முக்கியமான சாலைகளின் பெயர்கள் தலைவர்களின் பெயர்களாக மாறின. ஆனால் அவையும் பேச்சு வழக்கில் எம்.ஜி. சாலை என்.எஸ்.ஸி.போஸ் சாலை என்றெல்லாம் சுருக்கப்பட்டு நோக்கம் மறைந்து ஒழிந்தன. மக்கள் மனதில் பதிவு பெறாத அவை, பழைய பெயர்களாலேயே நிலைமையும் நீடித்துக்கொண்டு தானிருக்கிறது.

இந்தப் போக்கில்தான் அண்மையில், சாந்தோம் எம்.ஸி. நகரில் தொடங்கி ஆந்திர மஹிள சபா மருத்துவமனை நாற்சந்தி வரையிலான ஒரு பாதி கிரீன்வேஸ் சாலை டி.ஜி.எஸ். தினகரன் சாலை என மாற்றப்பட்டுள்ளது.

முதலில் தூய தமிழ்ப் பெயர் சூட்டும் ஆர்வத்தில் வரலாற்றுக் கண்ணோட்டம் சிறிதுமின்றி நேர் மொழிபெயர்ப்பாகப் பசுமை வழிச் சாலை என்று அதன் பெயரை மாற்றினார்கள். கிரீன்வேஸ் சாலையின் மறு பாதி இன்றும் பசுமைவழிச் சாலையாகவே தொடர்கிறது. வாட்டர் ஃபால்ஸ் என்பதை நீர் வீழ்ச்சி என்று சொல்லுக்குச் சொல் மொழி மாற்றம் செய்தது போலத்தான் இதுவும்!

ஆனால் உண்மையில் கிரீன்வேஸ் என்பது 1800களில் அங்கு வாழ்ந்த எட்வர்டு க்ராஃப்ட் கிரீன்வே என்ற ஆங்கிலேய நீதிபதி ஒருவரின் பின்னொட்டைக் குறிப்பதுதானே தவிர, தனித் தமிழ் ஆர்வலர் நினைத்ததுபோலப் பசுமை வழியை அல்ல!

வரலாற்றுப் பிரக்ஞை இல்லாததால்தான் இப்படிப்பட்ட அபத்தங்கள் நேர்ந்துவிடுகின்றன. பெயர் மாற்றத்திற்குள்ளான கிரீன்வேஸ் சாலையில்தான் தமிழ் இசை இயக்கத்தை முன்னின்று நடத்தியவரும், முதல் முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக் கழகம் ஒன்று தமிழ் நாட்டில் உருவாகக் காரணமாயிருந்தவருமான செட்டிநாட்டு அரசர் ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் வாழ்ந்த மாளிகை உள்ளது. அவரது நினைவாகப் பெயர் மாற்றம் செய்திருந்தாலாவது அதிலும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருப்பதாக ஆறுதல் கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு என எந்தவொரு கோணத்திலும் பங்களிப்பு எதுவும் இல்லாத ஒருவரின் பெயரை சென்னை மாநகராட்சி 2009இல் அதற்குச் சூட்டி, அப்போதைய மாநில அரசும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது! இ.டி.ஜி. எஸ். தினகரன் என்பவர் கிறிஸ்தவ மதப் பிரசாரகராக வாழ்க்கை நடத்தியவர் என்பதற்குமேல் தமிழர் வாழ்வியலுடன் தொடர்பு எதுவும் பெற்றிருந்தவர் அல்லர். கல்வி என்பது வணிகமயமாகிக் கற்பித்தலுக்குப் பதிலாகக் காசு பறிப்பதே குறி என்றாகிவிட்ட கால கட்டத்தில் அவர் தொடங்கிய கல்லூரிகளும் தமிழ் நாட்டின் கல்வித் துறையிலோ பொது வாழ்விலோ நினைவுகூரத்தக்க பணி எதையும் செய்துவிடவில்லை. பிறகு எதற்கு சாதனைகள் பல செய்த அண்ணாமலை அரசரின் பெயரைக்கூட வைக்காமல், தமிழகத்தின் பொது வாழ்வில் எவ்வித முத்திரையும் பொறிக்காத ஒரு பெயரால் கிரீன்வேஸ் சாலை அழைக்கப்பட வேண்டும்?

இந்தியாவின் முதல் நவீன மாநகரம் என்கிற பெருமைக்குரிய சென்னையின் வரலாற்றுத் தடம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டேவரும் துன்பியலின் மௌன சாட்சிகளாய் நாம் நிற்கிறோம்.

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர்

திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன.

ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எனது வாசிப்பு மேசைக்கு மேல் இரண்டு பெண்களின் கண்களை மட்டும் போஸ்டர் வடிவில் ஒட்டி வைத்திருந்தேன். அந்தக் கண்களுக்கு உரிய ஒருவர் தமது பிரசவத்தின் போது அகால மரணமுற்ற இந்திய மாற்றுச் சினிமாவின் அபூர்வ நடிகையான ஸ்மிதா பாடீல். பிறிதொருவர் ஸ்ரீவித்யா.

சமூக மாற்றம் தொடர்பான புரட்சிகர உணர்வென்பதும், தார்மீகக் கோபம் என்பதும் அந்த வயதில் மனோரதியமானதும் கனவு மயமானதும்தான். மோகமும் துயருமாக இந்த இரு பெண்களதும் கண்கள் எனக்குள் ஏற்படுத்திய கனவுமயமான, மங்கலான மனோரதிய உணர்வைத்தான், எனக்குக் கறுப்பு வெள்ளை வடிவத்தில் வந்த, பிடரிமயிர் சிலிர்த்தபடியிலான சே குவேராவின் தொப்பியில் ஜொலித்த நட்சத்திர பிம்பமும் உருவாக்கியது.


ஆபூர்வராகங்களின் கோபம் கொண்ட, வன்முறையில் நம்பிக்கை கொண்ட இளைஞனான கமல்ஹாஸன், தி.ஜானகிராமனின் மோகமுள் நாயகி யமுனா, 1978 ஆம் ஆண்டு வெளியாகின மலையாள இயக்குனர் பரதனின் ரதிநிர்வேதம் படநாயகி ஜெயபாரதி என இவர்கள் அனைவரின் பாலும் ஈரக்கப்படவனாகவே அந்தத் தலைமுறை இளைஞன் இருந்தான். மத்தியதர வர்க்க இளைஞன் இருந்தான் என வேண்டுமானால் இதனைத் துல்லியப்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் புற்று நோயினால் தமது 53 ஆம் வயதில் ஸ்ரீவித்யா மரணமுற்றபோது மனதுக்குள் மௌனமாக அழுகை வந்தது. ஸ்ரீவித்யா முதல் முதலாக முக்கியப் பாத்திரமேற்று, துடுக்குத்தனம் மிக்க கல்லூரி மாணவியாக நடித்த நூற்றுக்கு நூறு, காதலை மனதுக்குள் வைத்து உருகும் மத்தியதர வர்க்க குடும்பப் பெண்ணாக நடித்த சொல்லத்தான் நினைக்கிறேன், எழுபதுகளின் எந்த இளைஞனும் கடந்து போகமுடியாத, தன்னை விடவும் வயது குறைந்த இளைஞனால் காதலிக்கப்பட்ட அவனிலும் வயதுகூடிய மத்தியதரவயதுப் பெண்ணாக ஸ்ரீவித்யா தோன்றிய அபூர்வ ராகங்கள், இந்தப் பாத்திரங்களின் மறுப்பும், துடுக்கும், கடுமையும் மறைந்து, மனக்கனிவின் வடிவமாக, தாய்மையின் உன்னதமாக அவர் ஆகிய தளபதி, காதலுக்கு மரியாதை என அவரது திரைவாழ்வின் சுவடுகள் எனது நினைவில் புரண்டன

ஓரு போது மோகத்தினதும் தாபத்தினதும் வடிவம் அவர். பிறிதொரு போது தாய்மையின் வடிவம் அவர். புன்னகையை அவர் வேறு வேறு விதங்களில் பயன்படுத்தினார். சொல்லத்தான் நினைக்கிறேனில் கைத்த மனநிலையாக, அபூர்வராகங்களில் கறாரும் கண்டிப்புமாக, நூற்றுக்கு நூறில் வஞ்சக எண்ணமாக, தளபதியில் விரக்தியாக, காதலுக்கு மரியாதையில் தாயின் கனிவாக, மாப்பிள்ளையில் ஒரு போதும் தலைகுனியா பெருமித அலட்சியமாக அவர் புன்னகையை வெளிப்படுத்தினார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி சென்னையில் பிறந்த ஸ்ரீவித்யாவின் தாயார் அன்று புகழ் பெற்ற பாடகியாக இருந்த எம்.எல். வசந்தகுமாரி. தந்தை திரைப்பட நகைச்சுவை நடிகரான விகடம் கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு, பாட்டு எனும் சூழலில் பிறந்த ஸ்ரீவித்யா தமது அண்டை வீட்டில் வாழ்ந்த திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்ட நடன நட்சத்திரங்களான பத்மினி, ராகினி, லலிதாங்கினி சகோதரியரில் ஆதர்ஷம்பெற்று நடனம் கற்றுக் கொண்டார். பாடுவதிலும் நடனத்திலும் முறைப்படியான பயிற்சி பெற்றார். என்றாலும், அவரது அடிப்படையான இந்த நடன, இசை ஆற்றல் வாழ்வில் வேறுவிதான பரிமாணமே எடுத்தது.

தமிழ் வெகுஜன உலகத்திற்கு ஸ்ரீவித்யாவை நடிகையாகவே தெரியும். பெரும்பாலுமானவர்கள் அவரது முதல் படம் என, 19 57 ஆம் ஆண்டில், அவரது 14 வது வயதில் நடித்த, ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருட்செல்வர் எனவே கருதுகிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே நடிகை பத்மினியின் ஏற்பாட்டில், எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்துக் கொண்டிருந்த ரகசியப் போலீஸ் 115 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீவித்யா பரிந்துரைக்கப்பட்டார். 14 வயதில் சேலை கட்டிக் கொண்டு தம்முன் தோன்றிய அந்தப் பள்ளி மாணவி இயல்பில் சிரமப்பட்டதால், ரொம்பவும் சின்னப் பெண்ணாக இருக்கிறாள் என எம்.ஜி.ஆர். அந்தப் படத்தில் ஜெயலலிதாவையும் வெண்ணிற ஆடை நிர்மலாவையும் தனது கதாநாயகிகளாகத் தேர்ந்து கொண்டார்.

திருவருட் செல்வர் படத்தினையடுத்து, மூன்றெழுத்து, டெல்லி டு மெட்ராஸ், அன்னை வேளாங்கன்னி, காரைக்கால் அம்மைiயார் போன்று அவர் நடித்த படங்கள் அவரது ஆளுமையை வெளிக்கொண்டு வந்த படங்கள் எனச் சொல்ல முடியாது. பாலச்சந்தரின் நான்கு படங்கள், நூற்றுக்கு நூறு, வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்றவைகள்தான் ஸ்ரீவித்யாவை ஒரு முழுமையான பன்முக ஆற்றல் கொண்ட நடிகையாக முன்னிறுத்தியது.

ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் அந்தத் தலைமுறை இளைஞர்களின் தேவதையாக ஸ்ரீவித்யாவைக் கொண்டு நிறுத்தியது. ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் 1975 ஆம் ஆண்டு வெளியாகியது. இளம்பெண் ஒருவருக்குத் தாயாக, மத்தியதர வயதுப் பெண்ணாக அப்படத்தில் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்கு அப்போது 22 வயதே நிரம்பியிருந்தது.

ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் இளம் பெண்ணாக அவரது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இருபத்திரண்டு வயதுக்கு முன்பான அவரது வாழ்வு தாத்தாவினதும் பாட்டியினதும் பராமரிப்பிலேயெ பெரும்பாலும் கழிந்தது. அவரது தந்தை கடுமையான தசைநரம்புத்தளர்வு நோயுற்றதன் பின்னால், அவரது குடும்பத்தின் பொருhளாதார நிலை என்பது அவரது தாயின் பாடலில் வரும் வருமானத்தில் மட்டுமே தங்கியிருந்தது. அவரது பொருளாதார நிலைமையினால் அவருக்கும் அமெரிக்காவில் வாழும் மருத்துவர் ஒருவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் இடையில் நின்று போனது. வளர் இளம்பெண்ணாக அவரது வாழ்வு என்பது தனிமையினால் சபிக்கப்பட்டதாக இருந்தது.

ஸ்ரீவித்யாவின் 22 வது வயதில், அபூர்வராகங்கள் திரைப்பட உருவாக்கத்தின் போது கமல்ஹாஸனும் ஸ்ரீவித்யாவும் காதலில் வீழ்ந்தார்கள். இதனை வாணியுடனான கமல்ஹாஸனின் காதல் முறிவின் பின்பும், ஜோர்ஜ் உடனான ஸ்ரீவித்யாவின் காதல் முறிவின் பின்பும், தனது நேர்காணல் ஒன்றிலும், தினமணிக் கதிரில் ஸ்ரீவித்யா எழுதிய வாழ்க்கைக் குறிப்புக்களிலும் அவர் பதிவு செய்தார்.

இவர்களது வாழ்க்கைக் கதை மலையாளத்தில் 2008 ஆம் ஆண்டு திரக்கதா எனும் திரைப்படமாகவும் வெளியானது. ரஞ்ஜித் இயக்கிய அப்படத்தில் அனுப் மேனன் கமல்ஹாஸனாகவும், பிரியாமணி ஸ்ரீவித்யாவாகவும் பாத்திரமேற்று நடித்திருந்தார்கள். அந்தப்படத்தின் திரைக்கதையின்படி ஸ்ரீவித்யா கமல்ஹாஸனைச் சந்திக்கும்போதே திரைப்பட உலகில் தனது பெயரை நிறுவியிருந்தார். கமல்ஹாஸன் அப்போது வளரும் நிலையிலேயே இருந்தார். நடிகரெனும் அளவில் கமல்ஹாஸனுக்கு அழுத்தமான அடையாளம் தந்த திரைப்படமாக அபூர்வ ராகங்கள் திரைப்படமே இருந்தது.

திரக்கதா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி புற்றுநோயினால் இறந்து கொண்டிருக்கும் கதாநாயகியின் இறுதி ஆசை தனது முன்னாள் காதலனான கதாநாயகனைச் சந்திப்பதாகவே அமைந்திருந்தது. அவரைச் சந்தித்த பின்னால் அவரது மரணம் அமைதியாக முழுமையடைவதாக அப்படத்தின் இறுதிக் காட்சி இருந்தது.

வாணி கணபதியுடனான கமல்ஹாஸனின் திருமணம் 1978 ஆம் ஆண்டு அவரது 24 ஆம் வயதில் நடந்தது. 1954 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த கமல்ஹாஸன் ஸ்ரீவித்யாவை விடவும் 16 மாதங்கள் மூத்தவர். ஸ்ரீவித்யா-கமல்ஹாஸன் காதல் வெளிப்படையான செய்தியாக ஆன அளவில் அவர்களது காதல் முறிவிற்கான காரணம் வெளிப்படையாக ஆகவில்லை. ஜோர்ஜூடனான ஸ்ரீவித்யாவின் திருமணம் ஜனவரி 7, 1978 ஆம் ஆண்டு கிறித்தவ முறைப்படி நடந்தது. அதற்காக அவர் கிறித்தவராகவும் மாறினார். அதே ஆண்டில் கமல்ஹாஸன்- வாணி திருமணமும் நடந்தது.

கமல்ஹாஸன் மீது கொண்ட கோபத்தினாலும், வாணியை கமல்ஹாஸன் மணந்துகொண்டதால் ஏற்பட்ட உடனடி உணர்ச்சிவசத்தினாலும், தமது பெற்றோரினதும் விருப்பமின்மையை மீறி, அவசரமாக நடந்த, தன் வாழ்வில் செய்த மிகப்பெரும் தவறு ஜோர்ஜூடனான தனது திருமணம் எனது தனது திருமணம் குறித்துப் பின்னாளில் பேசினார் ஸ்ரீவித்யா.

குடும்ப வாழ்வையும், குழந்தைகளையும், திருமண பந்தத்தையும் நேசித்த ஸ்ரீவித்யாவின் குடும்பவாழ்வு நரகமாக ஆனது. வன்முறை கொண்டதாகவும், சம்பாதிக்கும் இயந்திரமாகத் தனது வாழ்வு ஆனதாகவும் ஸ்ரீவித்யாவின் குடும்பவாழ்வு ஆகியது. திருமணத்தின் பின்பு தான் நடிப்பிலிருந்து விலக நினைத்தபோதும் கணவர் தமகு பெரும்செலவினத்தினால் உருவாக்கி வைத்த கடன்சுமைக்காக அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரது கணவர் வற்புறுத்தினார். அவரது கணவர் திருமணம் மீறிய பெண்ணுறவொன்றினையும் கொண்டிருந்தார். வன்முறையும், காதலற்ற, அன்பற்ற வாழ்விலிருந்து அவர் வெளியேற நினைத்தார்.

அவரது பொருளாதாரக் கஷ்டங்களிலிருந்து சக கலைஞர்களான இயக்குனர் சக்தியும், நடிகர் செந்தாமரையும் பிணை நின்று அவரை மீட்டார்கள்.

ஸ்ரீவித்யாவிடம் இறுதியில் எஞ்சிய சென்னை வீட்டை தன் பெயருக்கு உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார் கணவர் ஜோர்ஜ். இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைப் பருவம், அவரது காதல், அவரது திருமணம், சொத்து வழக்கு போன்றவை குறித்து தினமணிக் கதிரில் எழுதத் துவங்கினார். வழக்கில் வென்று தனது வீட்டை மீட்ட அவர், சென்னையிலிருந்து கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தார்.

ஸ்ரீவித்யா கேரளத்துக்கு நகர்ந்ததற்கான உளவியல் காரணமாக அவரது நொறுங்கிய திருமண வாழவின் நினைவுகளிலிருந்து அவர் நிரந்தரமாக தன்னை விலக்கிக் கொள்ள விரும்பியதாக இருந்திருக்கும். பிறிதொரு முக்கியமான காரணம் கேரளத்திரையுலகு அவருக்கு அளித்த பாத்திரங்களும் கௌரவங்களும் என்பதாக இருக்கிறது.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஸ்ரீவித்யா நடித்த தெய்வத்திண்ட விக்ருதிகள், இடைவெளிகள், பவித்ரம் போன்ற திரைப்படங்கள் ஸ்ரீவித்யாவின் பண்பட்ட நடிப்பிற்குக் களம் அமைத்துக் கொடுத்தன. மம்முட்டி ஸ்ரீவித்யாவின் மரண அஞ்சலியில் அதனை இவ்வாறு குறிப்பிட்டார் : ஸ்ரீவித்யாவுக்கு நான் காதலனாக, சகோதரனாக, கணவனாக நடித்திருக்கிறேன். தந்தையாக மட்டும்தான் என்னால் நடிக்க முடியவில்லை.

கேரளம் ஸ்ரீவித்யாவின் மிது கொண்ட அன்பை கேரள முதல்வர் அச்சதானந்தன் வேறு வார்த்தைகளில் முன்வைத்தார் : தமிழகத்தில் பிறந்திருந்தாலும் ஸ்ரீவித்யாவை கேரளம் தனது மகளாகத் தத்து எடுத்துக் கொண்டது.

மரணமுறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னல் தனது இறுதி உயிலை எழுதிய ஸ்ரீவித்யா, தனது சகோதர்களின் குழந்தைகளுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய்களும், தனக்கு உதவிபுரிந்த தனது பணியாட்களுக்குத் தலா 1 இலட்ச ரூபாயும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தனது மிஞ்சிய சொத்துக்களை விற்றுவரும் பணத்தில் இசை-நடனம் கற்பிக்கும் பள்ளி ஒன்றினைத் துவங்குமாறும் அதில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற, வாயப்புக்கள் கிடைக்காத மாணவர்களுக்குக் கற்பிக்குமாறும், வறிய மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகை வழங்குமாறும். நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதி வழங்குமாறும், அதற்கென ஒரு கலைநிறுவனத்தை நிறுவுமாறும் எழுதி வைத்தார்.

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி மாலை 07.55 மணிக்கு திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஸ்ரீவித்யா மரணமுற்றார். தமிழ், மலையாள, தெலுங்கு மொழிகளில் 800 படங்களில் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்கு மரணமுறும்போது, 53 வயதே ஆகியிருந்தது.

ஸ்ரீவித்யாவை நினைக்கும் தோறும் லேசாக உதடு பிரிந்த அவரது புன்னகையே எவருக்கும் முதலில் ஞாபகம் வரும். ஆழந்து நோக்கும் போது அதன் பின் நிரவமுடியாத நிரந்தர சோகம் அவருக்குள் இருந்ததை எவரும் அறிய முடியும். அவரது வாழ்வை அறிந்தவருக்கு, அவரது மாளாத துயரை மறைத்துக் கிளரந்த கனிந்த இதயமே அவரது மாறாத புன்னகையாகப் பொலிந்தது எனவும் புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீவித்யா நிரந்தரத்தில் புன்னைகைக்கும் கண்ணீர்.