Monday, August 12, 2013

ஆண்ட்ராய்டில் ஆடியோ,விடியோ அப்ளிகேஷனுடன் மால்வேர் -உங்கள் கணக்கை ஸ்வாகா செய்கிறதாம்

புகழ் பெற்ற கூகிள் கம்பெனியின் ஆப்ஸ்டோர் கூகிள்ப்ளே.ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான அப்ளிகேஷன்களை இந்த தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளமுடியும். இந்த ஸ்டோருக்கு அப்ப்ளிகேஷன் டெவெலப் செய்து கொடுக்கும் ஒரு சில மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மென்பொருளுடன் மறைமுகமாக மால்வேர் ப்ரோக்ராம்களை அனுப்பி பயனீட்டாளர்களின் கணக்கு விபரங்களை திருடி விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வயது முதிர்ந்தவர்களுக்கான ஆடியோ மற்றும் வீடியோக்களை உள்ளடக்கியுள்ள பிளேயர்களாக மொபைலில் இந்த ஆப் நிறுவப்படும்.இந்த ஆப்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் தோன்றினாலும் இதனுடன் சேர்ந்து Android.Sms-Send என்ற மற்றொரு ட்ரோஜான் கோப்பையும் அத்துடன் அனுப்பிவிடுகிறது.

இந்த Android .MulDrop, Android.MulDrop .1 மற்றும் Android.MulDrop.2 அப்ப்ளிகேஷன்களை நிறுவி பின் ரன் செய்யும்போது அவை யூசர்கள் தங்களுக்கு வேண்டிய கன்டென்ட்களை டவுன்லோட் செய்துகொள்ள சொல்லி அறிவிக்கும் .ஆனால் யூசர்கள் தங்கள் சம்மதத்தை தெரிவித்தவுடன் யூசர் பற்றிய தகவலை அனுப்பும் மேலும் அவர்கள் கேட்ட கோப்புக்கு பதிலாக வேறு அப்ளிகேஷன் ஒன்றை அனுப்பும்.அதே நேரத்தில் Android.Sms-Send என்ற இந்த ட்ரோஜான் பல மொபைல் எண்களுக்கு sms அனுப்பி யூசர் அக்கவுண்ட்களை கபளீகரம் செய்துவிடுகிறது.

ரஷ்யாவை சேர்ந்த Dr Web என்ற பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் இந்த மால்வேரை கண்டுபிடித்து அதை கூகுள் நிர்வாகத்திடமும் தெரியப்படுத்தியுள்ளது.

ஏறக்குறைய 25000 மொபைல்களில் ஏற்கனேவே இந்த மால்வேர் நிறுவப்பட்டுள்ளது என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான செய்தி.

No comments:

Post a Comment