Saturday, August 24, 2013

நம்ம ஏரியா பையன் ப்ரோகிராம் செய்யுறான்

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் தங்களை வருத்திக்கொண்டு இலக்கண தமிழ் பேசுவது , அபத்த ஜோக்குகள், அடுக்கு மொழி வசனங்கள், துல்லியமான குரல்வளம், நல்ல உச்சரிப்பு, என்பது இலக்கணம். இதனையெல்லாம் உடைத்து உடப்பில் போட்டு விட்டு வந்தவர் சிவகார்த்திகேயன். சும்மா சில்லுனு அருவி கொட்ற மாதிரி நான்-ஸ்டாப்-பா காமெடி பண்ணி இவர் வந்தபோது எல்லோரும் யார்ரா இவன் நம்ம ஏரியா பையன் ப்ரோகிராம் செய்யுறான் என எல்லாரும் பார்க்க ஆரம்பிச்ச அளவு சாமானிய நடிகன்.

இயல்பான நடிப்பும், குறும்பான பேசும், மிமிக்ரி ஸ்டைலும், டைம் கிடைக்கும்போதெல்லாம் எல்லாரையும் வெறுப்பேத்தி கலாயிக்கும் திறமையும் என எல்லா திறமையாலும், இன்றைய பசங்களின் சிம்பிள் ஹீரோ - நம்ம சிவகார்த்திகேயன் தான்.

ரொம்ப பெரிய லுக் இல்லாவிட்டாலும், அசால்டான நடிப்பில் இவர் எல்லாரையும் அசத்தி விடுகிறார். நடித்து வெளி வந்த படம் நாலு தான். நடிப்புல இருக்கிற படம் ரெண்டு. அதுக்குள்ளே ரொம்ப பேர கவர் பண்ணிட்டார்.

பிப்ரவரி 17 1985-ல பிறந்து வளர்ந்த சிவாவுக்கு திருவாரூர் பூர்வீகம். அப்பா ஜி.தாஸ் காவல்துறை அதிகாரி. தாத்தா நாதஸ்வர காலையில் பத்மஸ்ரீ விருது வாங்கின மாமேதை. திருவாரூர் அருகே உள்ள திருவீழிமிழலை தான் சொந்த ஊரு. திருச்சில தான் படிப்பு எல்லாம், ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி ஸ்கூல்-ல படிப்பு, பிறகு ஜே.ஜே என்ஜினீரிங் காலேஜ் ல மேல்படிப்பு. அப்புறம் எம்.பி.ஏ சென்னை ஐ.ஐ.பி.எம். ல. இவர் சகோதரி திருச்சியில் பிரபல டாக்டர். இவருக்கு 16 மே 2010-லையே கல்யாணம் ஆயிடுச்சி (கல்யாணம் ஆகியும் இவ்ளோ ஜாலி-ஆ இருக்கிற மனுஷன் இவர் தான் போல..) இவர் சொந்தத்துல தான் கல்யாணம் பண்ணிகிட்டார். மனைவி பெயர் ஆர்த்தி.

இவர் விஜய் டி.வி.யில் நுழைந்து, விஜய் ஜோடி நம்பர் 1 and 5, பாய்ஸ் vs கேர்ல்ஸ் சீசன் 1 - 2, அது இது எது என பல நிகழ்சிகளில் பங்கேற்றும் நடத்தியும், தனக்கான ரசிகர் வட்டத்தையும் உருவாக்கி கொண்டார். இந்த நிகழ்சிகளில் பல விருதுகளையும் வென்றார். நடிகை திரிஷாவுடன் விவேல் விளம்பர படத்திலும் நடித்தார். நிகழ்ச்சியின் போது பல பிரபலங்களை செல்லமாக வெறுப்பேற்றி கிண்டல் செய்தவை மக்களிடம் இவருக்கு நல்ல செல்வாக்கை ஏற்படுத்தியது. பல திரை விழாக்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் பிரபலமாக உயர்ந்தார். இவர் தனது நண்பர்களோடு செய்த முகபுத்தகம், 360° குறும்படங்களும் இவருக்கு நல்ல பெயரை தந்தது.

சிவகார்த்திகேயன் ஒரு பலகுரல் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது அதிலயும் ரஜினி குரல் செம்ம ஹிட். அது மாதிரியே தமிழ் நாட்டின் எல்லா மாவட்ட தமிழும் நல்லாவே பேசுவார். திடீர் என்று ஒரு நிகழ்ச்சியை அல்லது நடனத்தை மிமிக்ரி செய்யுமாறு கூறினால் உடனே செய்து கை தட்டு வாங்கிடுவார் சிவா.

ஆடுவதிலும் பயங்கர காமெடி பண்ணிடுவார் சிவகார்த்திகேயன், எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த் போன்றவர்கள் போல ஆடியுள்ளார். அதுவும் ...ரொம்ப நல்லா ரசிக்கும்படியே இருக்கும்.

திடீர் என இவர் அடிக்கும் கிண்டல் கவுன்ட் பலரை சிரிக்க வைத்தது. இவர் வளர்ச்சி தொலைக்காட்சியில் மேலும் மேலும் வளர்ந்த போது திரை உலகமும் இவரை சும்மா விட்டுவிடுமா? பசங்க இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தில் அறிமுகப்படுத்தினார். படம் வெற்றி, பின்னர் 3 படத்தில் தனுஷுடன் நண்பராக, பிறகு மனம்கொத்தி பறவை படம், இப்போது கேடி பில்லா கில்லாடி ரங்கா என தொடர்கிறது இவர் பயணம். தற்போது எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இரு படங்களில் நடித்தும் வருகிறார். கலகலப்பான மனிதர் என்றாலும் மரியாதையான நடிகர் தான் இவர். கவிதை, துணுக்குகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். சினிமா பாடலாசிரியர் ஆகவும் இவருக்கு விருப்பம் உள்ளதாம்.

முன்பு விஜய் டி.வியில் மெரினா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது, வழக்கமா தொகுப்பாளர் இடத்தில இருந்து பிரபல நடிகர்களை பேட்டி எடுக்கும் போது இப்படி என்னையும் பெரிய நடிகரா பெட்டி எடுப்பாங்க, எப்படா அந்த சீட்டுக்கு நாமும் போவம்நு ,நம்மளயும் பேட்டி எடுப்பாங்கனு ஆசையா இருக்கும்..இப்போ அந்த கனவும் நிறைவேறிடுச்சுனு, கண் கலங்கினார் சிவா நிஜமாகவே....

No comments:

Post a Comment