Sunday, August 25, 2013

நான் விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையான நாயகன்.....?

சிங்கம் சினிமா சார்பில் வி.சி.வடிவுடையான் தயாரித்து, இயக்கும் படம், ‘கன்னியும் காளையும் செம காதல்’.

இதில் கரண் நாயகனாகவும், திருப்தா என்ற மும்பை மாடல் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் தருண்கோபி, விவேக், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பில் கதாநாயகன் கரண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–‘‘விஜய், அஜீத், சூர்யா வயதுக்கு இணையான கதாநாயகன் நான். அவர்கள் படங்களில் நான் தோன்றும்போது, திரையரங்கமே அதிரும் வகையில் ரசிகர்களிடம் எனக்கென்று தனி கைதட்டல் பெற்றேன்.

என் வளர்ச்சிக்கு எந்த பின்னணி உதவியும் இல்லை. சொந்தமுயற்சியில் வளர்ந்தவன் நான். பல கதாநாயகர்கள் என்னை முன்நிறுத்தி வெற்றிப்பட நாயகன் ஆகியிருக்கிறார்கள். உண்மையில் நான் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டேன். கதாநாயகனாக மாறியபின் ‘மாஸ்’ படங்களை பண்ண தவறி விட்டேன். நல்ல டைரக்டர்களின் கூட்டணியை தவற விட்டேன்.

சினிமாவில் சின்ன கதாநாயகன், பெரிய கதாநாயகன் கிடையாது. கதைதான் கதாநாயகன். ‘கன்னியும் காளையும் செம காதல்' நான் நடிக்கும் 75–வது படம். இந்த படம் வெளிவந்த பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதாநாயகனாக நான் இருப்பேன். என்றார்’’

No comments:

Post a Comment