Monday, August 26, 2013

காதலிக்க வயசு தேவையா…?

காதலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்த ஒரே நாகரிகம் நமது தமிழ் நாகரிகமே ஆகும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அந்த இலக்கணத்தின் படியே பெருந்திணை என்ற ஒன்று பொருந்தாக் காமம் பற்றி கூறுவது என்பது எல்லாரும் ஏற்றுக் கொண்ட செய்தி (ஆனால் அதுமிகு காமம் குறித்தது என்பது வ. சுப. மாணிக்கனார் சொல்கிறார்). அந்த பொருந்தா காமம் குறித்த சமீபத்திய படம் குறித்த ஒரு சின்ன அலசல்.

‘சீனி கம்’ பிரபல விளமபர இயக்குநர் பால்கியின் புதிய இந்தி படம்தான். இளையராஜாவின் பழைய பொன்னுக்கு புது முலாம் பூசி தமிழகத்திற்கு வெளியே உள்ள மக்களை அவருடைய இசை மழையில் நனைக்க வைத்த படம். இளையராஜா மட்டும்தான் இதில் நாயகனா என்றால் இல்லை. அமிதாப், தபுவுக்கென்றே எழுதப் பட்டக் கதையாம், அவர்களை மறக்க முடியுமா?

லண்டனில் ஒரு பெரிய இந்திய உணவகம் வைத்து மிகவும் பெருமையாக வாழ்ந்து வரும் 64 வயது இளைஞன் புத்தா (அமிதாப்). தனது மடையர்களிடம் சுயபுராணத்தையும் சமியல்காரனுக்குத் தேவையான கட்டுப்பாடையும் பேசிக் கொண்டிருக்கையில் அவருடைய உண்வக்த்தில் இருந்து வெளியே சென்ற ஜாஃப்ரானி புலாவ் இனிப்பாக இருக்கிறதென்று திருப்பி அனுப்பப் படுகிறது. போலி இந்திய உணவகத்தில் இதுவும் ஒன்று என்று பேசப்பட்டுவிட்டதாம். கோபம் கொண்டு அறுவது வயதுக்குறிய பொறுமையோடு புத்தா சென்று வாழ்க்கையில் என்றாவது அடுப்படி பக்கம் சென்று இருந்தால், எங்களுக்கும் ஜாஃப்ரானி புலாவ் செய்யக் கற்றுக் கொடுங்கள் என்று நீமாவிடம் கேட்க பதற்றமுடன் அங்கிருந்து வெளியேறுகிறாள். வீட்டிற்கு வந்தால் (94 வயது இளைஞி அவனுடைய அம்மா)் அவனுக்காக காத்திருக்கிறாள். அவளுக்குத் தேவையானது sex under the city, wwf என்ற தொலைக்காட்சி பொழுதுபோக்குதான்.

மறுநாள் அதே ஜாஃப்ரானி புலாவ் அடுப்படிக்கு வர இவ்வளவு அருமையாக உலகத்திலேயே இதுதான் இருக்க முடியும் இதைப் போய் குறைவிட்டாளே என்று புலம்பித்தீர்க்க இது நீமா இவருக்காக செய்து அனுப்பியது என்று தெரிய வருகிறது. உடன் இளையராஜா ‘சீனி கம் சீனி கம்…’ என்று நமது ‘மன்ற வந்த தென்றலுக்கு ‘ மெட்டி ஷ்ரேயா கோசலைப் பாட விட்டதும் அன்று எப்படி அந்த புலாவ் இனிப்பானது என்ற ஆரய்ச்சி தொடங்கி தனது தவற்றை உணருகிறார்.

சாரி எப்படி சொல்லுவது என்று பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும்போது கதை நாயகி sexy நுழைகிறார். ‘எனக்கு சொல்வதற்கா..? இப்போ எல்லாம் என்னை பார்க்கவே வருவதில்லை ஏன் interest போயிடுச்சா? ‘ துடுக்காக பேசிக்கொண்டே இரத்த புற்றுநோய் கொண்ட அந்த 8 வயது பக்கத்து வீட்டுப் பெண் பேசுகிறாள். ‘சரி வா கவலையை மறக்க குடிப்போம்’ என்று புத்தா அவளைக் கூட்டிக் கொண்டு போய் குடித்துகொண்டே வாழ்க்கையைப் பற்றி கேட்கும்போதுதான் அவளுக்குள் இருக்கும் கவலை தெரிய வருகிறது. ஆம் அந்தச் சின்ன உடம்பில் எவ்வளவு கவலை. அவளுடைய அப்பா அவளை A படம் பார்க்கவே விடறது இல்லையாம். கேட்டால் அவளுக்கு அது புரியாதாம். அதைப் பார்க்கிற வயசு அவளுக்கு வருவதற்குள் அவள் இறந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அதைப் பார்க்கமுடியாமலேயே போய் விடும் இல்லையா. அப்புறம் புத்தா கவலை வேண்டாம் நான் காட்டுகிறேன் என்று சத்தியம் செய்கிறார். அப்புறம் குழந்தைகள் பார்க்கிற மாதிரியான் A படம் வாங்கி வந்து தந்து அவளும் அதைப் பார்த்து கார்டூன் விக்கிறவன் கிட்ட இதைப் போய் வாங்கி வந்தால் இப்படிதான் படம் இருக்கும் என்று அவரைத்திட்டுவது இன்னொரு தனி கதை.

ஒரு முதியவனின் அகம் பாதிக்கப் பட்டு இவர்களது காதல் துவங்குகிறது. 34:64 நல்ல பொருத்தம் தான் மனசு பொருந்தினால். ஆனால் கல்யாண்த்திற்கு தன்னைவிட 6 வயது சிறியவனான தனது மாமனாரிடம் சம்மதம் வாங்குவது பாதிக்கு மேல் வரும் காதல் கதை. 58 வயது முதியவனையும், 64 வயது இளைஞனையும் கச்சிதமாகக் காட்டி இருக்கிறார் பால்கி. மெல்லிய நகைச்சுவை நிரம்பிய காதல் கதையும், கதா பாத்திரங்களும் பால்கியின் புதிய கண்டுபிடிப்பு. வாழ்த்துகள். துல்லியமாக கவனித்தால் பல வாழ்க்கை தத்துவங்கள் மிக சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. ‘முதல் மரியாதை’ காலத்தில் இருந்தே பொருந்தாக்காதல் பேசப் பட்டிருந்தாலும் அந்தக் காதல் அமைய கற்பனையாக ஒரு சோகத்தைத் தினிக்காமல், தேவையில்லாத பயம் நிரம்பாமல் மிக லேசாகக் கதையை எடுத்துச் சென்ற விதம் புதிது. இதன் தாக்கத்தில் ராம்கோபால் வர்மா ்ல் அமிதாபை வைத்தே நிஷ்ப்த் என்று படம் எடுத்து இதற்கு முன்பே வெளியிட்டு இதன் தாக்கம் தான் அது என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டது பால்கிக்கு பெருமை தரக் கூடிய விஷயம் தான். ஒவ்வொரு காட்சியும் வசனமும் விளம்பர இயக்குநர்க்கே உரிய நேர்த்தியோடு செதுக்கியது அருமை. இப்படியெல்லாம் கதை சொல்லி போரடிக்க விரும்பலங்க. அமைதியாக ஆனந்தமாக பொழுதுபோக்க நினைத்து பொழுது போக்கினிங்கன்னா நான் கம்மியாதான் பாராட்டியிருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். ஓ.கே.யா

No comments:

Post a Comment