Monday, August 19, 2013

பழங்கஞ்சி

பொதுவாகவே நமது வீடுகளில் முந்தைய காலத்தில் தினமும் மீதம் வரும் சோற்றை இரவு மண் பானையில் வைத்து அதில் தண்ணீர் விட்டு வைத்துவிடுவோம். காலையில் இதனை எடுத்து தயிரோ, பச்சைமிளகவோ சின்ன உள்ளியோ வைத்து உப்பும் போட்டு ஜம ஜமாண்ணு வயிறு முட்ட அடிப்பதுண்டு. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றும் காலையில் வேலைக்கு போகும் முன் சாப்பிட்டு செல்லும்போது சுறு சுறுப்பாக இருக்கும் என்றும் நாம் அதனையே தொடர்ந்து காலை உணவாக உண்டுவந்ததும் உண்டு. ஒரு பக்கம் சுறுசுறுப்போடு பழங்கஞ்சியை ஒப்பிட்டாலும் இதனை உண்டால் சுறு சுறுப்பு போய் சரியாக இயங்க முடியாமல் தூக்கக்கலக்கத்தில் இருப்போம் என்கின்றது இன்னொரு பகுதி.

ஆனால் பழஙகஞ்சி பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ,

முந்தைய தினமே தண்ணீரில் இட்டுவைக்கும் சோறானது மிகவும் உப்பி குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும் ஆகையால் இது வயிற்றில் அப்படியே கொஞ்சம் ஸ்தம்பித்துவிடும், இது உடனே செரிமானம் ஆவதில்லையாம்.
பழங்கஞ்சியில் விட்டமின் B அதி்கமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரை நாலாவது தண்ணீரிலேயே இருப்பதால் கொஞ்சம் புளிப்பும் அதில் ஈஸ்ட்டும் உருவாகும். ஈஸ்ட் உருவானால் அதில் இன்னும் அதிகம் போஷாக்கு உண்டாகும். இதில் தயிர் விட்டு சாப்பிடுவதால் தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட்டும் உடலில் சேரும்.

இப்படி உடலுக்கு ஆற்றலும் ஆரோக்கியமும் தந்தாலும் ஒரு மப்பாகவே இருக்கும் என்பதும் உண்மை...

No comments:

Post a Comment