Monday, August 26, 2013

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன‍?



சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.

1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக் கலாம். குறையுள்ள குழந்தையை பிரச விப்பதைவிட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாது காப்பு விதியாகும். குரோமோசோம்களி ல் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பல னளிக்கும்.

2. ஹார்மோன்களின் சமநிலையில் பா திப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப் பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோ னின் அளவு குறைந்துவிடுவது ஒரு கார ணம். கருவானது கருப்பையினுள் ஊன் றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டி ரான் சுரப்பு அவசியமாகும். இதை கருப்பையின் உட்சுவரை திசுப் பரி சோதனை செய்வதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

3. சில பெண்களுக்குகீழ் கண்ட நோயின் பாதிப்பினால் கருச்சிதைவு ஏற்படலாம். அவை

*- சாக்லேட் இரத்தக்கட்டிகள்

*-கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு குறை பாடு

*-கட்டுப்படுத்த முடியாத தைராய்டு சுரப்பி நோய்கள்

*-மோசமாக பாதிப்படைந்த இதயம், கல் லீரல் அல்லது சிறுநீரகங்க ள்

*-உடல் திசுக்களுக்கு எதிராக எதிர்ப்புச் சக்தி உருவாதல் -தொற்று நோய்கள்

4.சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவது ஒரு காரணமாகலாம். சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதால் எல் எச் ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் கருமுட்டையின் வளர்ச்சி பாதிக்கப்படு கிறது.

5.நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற் படுவதால் கருச்சிதைவு உண்டாகலாம் .

பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும் போது தாயின் நோய் எதிர்ப்புச் சக்தி சரிவர வேலை செய்யாவிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம்,

கருத்தரிக்கும் போது, கருவிலுள்ள தந்தையின் ஜீன்கள், தாயின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு மாறாக இருந்தாலும் கருச்சிதைவு ஏற்பட லாம்.

6. தாயின் உடல் எதிர்மியங்கள் காரணமாக வும் கருச்சிதைவு ஏற்படலாம். சில பெண்களு க்கு இரத்தம் உறைவதற்குக் காரணமாக இரு க்கும் அணுக்களுக்கு எதிராக, உடல் எதிர் மியங்கள் தோன்றக் கூடும், இதன் காரணமா க தாய்க்கும் கருவிலுள்ள சிசுவிற்கும் இடை யே உள்ள இரத்த ஓட்டத்தில் இரத்த உறைவு க்கட்டிகள் உரு வாகி, சிசுவிற்கு வேண்டிய இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதை இரத் தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலா ம்.

7.கருப்பையில் ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாக கருச் சிதைவு ஏற்படும்.

*கருப்பையில் நார்த்திசுக் கட்டிகளின் காரண மாக கருச்சிதைவு ஏற் படும்.

* பிறவியிலேயே ஏற்படும் கருப்பை பிரச்சினைகள். கருப்பை பிறவி யிலேயே இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கலாம்.

* கருப்பை உட்சுவர் சதைகள் மற்று ம் கருப்பையின் உட்பாகத்தில் ஏதே னும் புண் ஏற்பட்டு அதன் சதை கெட் டியாக வளர்ந்திருந்தால், கருப்பை யில் கரு ஊன்றுவதில் சிக்கல் ஏற் படலாம். இதை உள்நோக்கிக்கருவி மூலமோ அல்லது கதிர் வீச்சுப்படம் மூலமோ கண்டு பிடுக்கலாம்.

* பலவீனமான கருப்பை வாய்; இப் பிரச்சினை உள்ள நோயாளர்களின் வாய் எப்போதும் தளர்ந்தே இரு க்கும். கருப்பையில் சிசு வளர்ந் து கருப்பை வாயினை அழுத்தும்போது பலவீனமான கருப்பையின் வாய் திறந்து கருச்சிதைவு ஏற்படு கிறது. இதை உள் நோக்கிக் கருவி அல்லது கதிரவீச்சுப் படம் அல்ல து கேளா ஒலி பரிசோதனை மூலமோ அறிந்துக் கொள்ளலா ம்.

8. சுற்றுப் புற சூழலில் உள்ள நச்சுக்களின் தாக்கம் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். பெண்க ள் தொடர்ந்து நச்சு வாய்ந்த இரசாயனங்கள் மற் றும் வாயுக்களுடன் வேலை செய்யும் பொழுது கருவுற்றால்,இந்த நச்சுத் தாக்கம் சிசுவை பாதித்து கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆண்களும் இம் மாதிரி சூழலில் வேலை செய்யும் பொழுது, அவர்களுடை ய விந்தணுக்கள் பாதிக்கப்படுகி றது. புகை பிடித்தல், மது அருந்துத ல், போதை மருந்துக்கு அடிமை போன்றவைகளும் இதற்கு விதிவி லக்கல்ல.

9. உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப் புகளின் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். தாயானவள் துக் கம்,வேதனை, தனிமை, மனச் சோர்வு போன்ற பல்வேறு உணர்ச்சி களால் பாதிக்கப்படும்போது பாதிப்பின் தன்மைக்கேற்ப கருச்சிதை வு ஏற்படுகிறது.

கருச்சிதைவை தடுக்கும் சில ஹோமியோ மருந்துகள்.

அகோனைட், அபிஸ் மெல், ஆரம் மெட்., பெல்லடோனா, போரக்ஸ், பிரையோனியா, கல்கேரியா கார்ப், காந்தாரிஸ், சைக்ள மென், டிஜிடா லிஸ், டல்கமரா, யுபடோரியம் பர்ப லேட், பெர்ரம் மெட், ஜெலு சிமியம், காலோ பைலம், காஸ்டிகம், சிமிசிப் யுகா ,சாமோ மில்லா, கோனியம், ஹாமாமெலிஸ், இக்னேசியா, அயோடம், அயிரிஸ் வெர் சிகுலர், காலிகார்ப், லாச்சஸிஸ், மெர்க் சொல், நக்ஸமோ, ஒபியம், பிளாட் டினா,போடோபைலம், பல்சடில்லா, ரூட்டா, சபினா, சீகேல் கார் னோட்டம்,செபியா, சைலீஷியா, ஸ்ட்ராமோனியம், சிபிலினம், தூஜா , உஸ்டிலாகோ மற்றும் ஜிங்கம் மெட்டாலிகம்.

No comments:

Post a Comment