Wednesday, August 14, 2013

திமுக எம்.பி.க்களுக்கு தலைவராகிறார் கனிமொழி!

ராஜ்யசபையில் தி.மு.க. சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்திஸ்டான்லி, கே.பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளனர். இதற்கிடையில் மேல் சபை தி.மு.க. தலைவராக இருந்த திருச்சி சிவா பதவி ஜூன் மாதம் முடிவடைந்ததால் மாநிலங்களவை தி.மு.க. தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனையடுத்து சீனியர் எம்.பி.யான கனிமொழிக்கு இந்த அவை தி.மு.க. எம்.பி.க்களுக்கான தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், மைத்ரேயன் உட்பட, நான்கு எம்.பி.,க்களும், தி.மு.க., சார்பில் கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவும் பதவி ஏற்றனர்.மேலும் பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கியதும் அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து, கனிமொழி பதவி ஏற்காமல் தனியாக பதவி ஏற்றதும் அதிலும் அவர் தமிழில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ராஜ்யசபா தி.மு.க. தலைவராக திருச்சி சிவா பணியாற்றி வந்தார். அவரது பதவி ஜூன் மாதம் காலியானதால் அப்பதவி காலியாக இருந்தது. இதையடுத்து தற்போது தி.மு.க.,வில் உள்ள எம்.பி.,க்களில் சீனியர் என்ற அடிப்படையில் கனிமொழிக்கு இந்த ராஜ்யசபா தி.மு.க. தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரிக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் எழுதிய கடிதத்தில், “ராஜ்யசபா தி.மு.க. தலைவர் பதவியில் இருந்த சிவாவின் எம்.பி. பதவி காலம் முடிவடைந்து விட்டதால் அவருக்கு பதிலாக கனிமொழியை நியமிக்க தி.மு.க., சார்பில் பரிந்துரை செய்யப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது..

No comments:

Post a Comment