Saturday, August 24, 2013

வாழு… வாழவிடு - தல "அஜித்"


உங்க வேலையை நூறு சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்க ளைக் கத்துக்கிட்டேன். ஆனா அந்த ரூட் ரொம்பக் கஷ்டம் . படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படி ங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்… வாழு… வாழவிடு!
"நடிகர் - அஜித்குமார்"

அஜித் குமார், ஹைதராபாத் நகரில் அவரது பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பாலக்காடு பி.சுப்ரமணியம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவை சேர்ந்த, அவரது மனைவி மோகினிக்கும் மே 1 ,1971 -ல் அஜித் குமார் பிறந்தார். அஜித்திற்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. அனுப் குமார் என்பவர் சென்னையில் வர்த்தகம் செய்து வருகிறார். மற்றொருவர் அனில் குமார் சென்னை ஐ.ஐ.டியில் பட்டம் பெற்று சியாட்டில் வேலை செய்து வருகிறார். மேலும், அஜித்திற்கு இரட்டை சகோதரிகள் இருந்தார்கள், இருவரும் குழந்தை பருவத்திலேயே இறந்து விட்டார்கள்.

மிக துரு துரு வென, குழந்தை பருவத்தில் இருப்பார். படிப்பில் சுமார் ராகம் தான். 1986-ல் அசன் மெமோரியல் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடிக்காமலே படிப்பை நிறுத்திக்கிட்டார்.அதன் பிறகு அஜித் இரண்டு சக்கர ஆட்டோ மெக்கானிக் ஆக வேலை பார்த்தார். பிடித்தமான வேலையாக அது இருந்தது. வேலையில் ரொம்ப கவனத்தோடு இருந்தார். அப்போது தான் சாமானிய மக்களோடு அதிகம் பழகி அவர்களின் கஷ்ட,நஷ்டங்களை அதிகம் உணர்ந்து கொண்டார்.

வேலையோடு மட்டும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் ஏதாவது சாதிக்க வேண்டும், பேரு சொல்ற மாதிரி வாழ்ந்து காட்டனும்-னு ரொம்ப ஆசைப்படுவார். முடிஞ்ச வரை எல்லாருக்கும் உதவி செய்யணும், அப்படி உதவி செய்ற அளவு வசதி இல்லாட்டி அட்லீஸ்ட் யாருக்கும் தொந்தரவா இல்லாமயாச்சும் இருக்கணும் என்று நினைப்பார். ரொம்ப கஷ்டம்னு சொல்ல முடியாட்டியும் சொந்த கால்ல நிக்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டார்.

அஜித்க்கு ஓட்டுனர் உரிமம் கிடைத்தவுடன் அவரது ஆசைமுழுக்க கார் மற்றும் பைக் பந்தயதில்தான் இருந்தது. சென்னை மந்தைவெளி நார்டன் தெருவில் தான் வசித்து வந்தார். எடுத்துகிட்ட வேலையில் ரொம்ப நேர்மையா இருப்பார். அப்போ பைக் ரிப்பேர் வேலையானாலும் சரி இப்போ கோடிகள் கொட்டுற சினிமா ஆனாலும் சரி, யாருக்கும் கஷ்டம் தரக்கூடாது, தனக்கு சில கஷ்டம் என்றாலும் அடுத்தவருக்கு தன்னால அது கூடாது என்று மனசார நினைப்பார்.

கொஞ்ச நாள்ல மெக்கானிக் வேலைய விட்டு துணிகள் ஏற்றுமதி கம்பனியில் மெர்சண்டசைர் ஆக சேர்ந்து வேலை பார்த்தார். கிடைக்கிற டைம் கேப்-ல எப்போதாவது சிறிய பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். அது அப்போ அவருக்கு ரொம்ப சந்தோசமான விசயமா இருந்துச்சி. சினிமாவுல வாய்ப்பு தேட ஆரம்பிச்சார். எந்த சினிமா பெக்ரௌண்டும் இல்லாம தன்னோட தன்னம்பிக்கை, திறமை மேல மட்டுமே அடிப்படையா வச்சி வாய்ப்பு கேட்க தொடங்கினார்.

அப்போது எல்லாம் சினிமாவில் நுழைவது ரொம்ப சிரமமான காரியம். நிறைய அலட்சியங்கள், அவமானங்கள், அலைக்கழிப்புகள். எல்லாத்தையும் சகிச்சிகிட்டார். ஜெயிக்கணும், அதுக்கு இந்த விசயங்கள கடந்தாதான் ஜெயிக்க முடியும்னு நம்பினார். இப்போ ஜெயிச்சி பெருசா வந்துட்ட பிறகு, இன்னமும் யாராவது இவர எந்த வாய்ப்பு கேட்டு வந்தாலும் இவர் அலட்சியபடுத்துவதே இல்லை. தான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களை இவர் மறக்கவே இல்லை. நிஜமாகவே மனிதர்களை நேசிக்கும் கலைஞர்களில் ஐவரும் ஒருவர்.

இவரின் உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைத்தது. அமாம், தெலுங்கில் ஒரு படம் இவருக்கு கிடைத்தது. தன்னுடைய 20 ஆம் வயதில் கிடைத்த அந்த படத்தில் ஆர்வத்துடன் நடிக்கத்தொடங்கினார். விதி வலியது, அந்த தெலுங்கு படம் முடியாமலே அதன் இயக்குனர் அகால மரணம் அடைந்ததால் படம் பாதியில் நின்றது. கலங்கி போனார். முதல் படம் ஓடாவிட்டாலே எப்படி பட்ட திறமையான நடிகருக்கும் அடுத்த வாய்ப்பு வராது. அதிலும் படம் இப்படி நின்று போய் விட்டால், அபசகுனமாக, அமங்கலமாக ராசி இல்லாதவன் என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்கள், அது தான் சினிமா!

சற்றே கலங்கிய அஜித், துவண்டு விடவில்லை, தோல்வி என புலம்பவில்லை, இன்னும் வேகமாக புறப்பட்டார். எதிர்ப்பு, கேலிகளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. வேகமானார் வெற்றியை நோக்கி...

1 comment: