Wednesday, August 28, 2013

ரூபாய் வீழ்ச்சி, திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்!


எஸ்.குருமூர்த்தி - 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.

2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில “நடவடிக்கைகளை’ ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.


ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு – அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று “தி எகனாமிஸ்ட்’ (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!

சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் “தி எகனாமிஸ்ட்’ குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தக முடிவின்போது 64.55ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இந்த அளவுக்கு குறையவில்லை. இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள்தான் காரணம். இந்திய ரூபாயின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பை விடக் குறைவாக உள்ளது. இந்தியாவைப் போன்ற மற்ற வளரும் நாடுகளும் இதே பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

நமது நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடுகள், ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் கடன்கள் கட்டுக்குள் உள்ளது. உலக சந்தைகளில் இந்திய ரூபாய் மதிப்பு குறித்து தேவையற்ற அச்சங்கள் மக்களிடையே நிலவி வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து மக்கள் பெரிதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ரூபாய் மதிப்பு நிலையானதும், கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும்.

மக்கள் கருத்து

“ஊழல் செய்து சேர்த்த கோடி கோடி பணத்தை வெளிநாடு கொண்டு போய் பணத்தின் மதிப்பை குறைத்தது யார்? காங்கிரஸ்தான் இவர்களை ஆட்சியில் அமர்தியற்கு பொது மக்கள் ரொம்பவும் வருத்த படுகிறார்கள் நாங்க எல்லாம் முட்டாளுங்க சாமி”

“கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படி தான இப்படி பதில் சொல்றீங்களோ தெரில………….ச்விச்ஸ் பேங்க் ல ஒளிச்சு வச்ச பணத்தஎல்லாம் முதல வெளிய உருவுங்க……..இந்தியா அமைச்சர்களின் தேசம் அல்ல எங்களை போல் மனிதர்களும் இருக்கிறோம் என்பதை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு நான் நினைவில் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்…”

“அவர் கொடுத்த பதில் மக்களுக்கு என்று நாம் நினைத்தால் நாம்தான் மடையர்கள். அவரது பதில் தொழில் அதிபர்களுக்கும், மேட்டுக்குடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கருப்புப்பண முதலைகளுக்கும் தான். (கவனிக்க அவரது அறிக்கையின் கடைசி வரி) சுய சார்பு பொருளாதாரத்தைக் கைவிட்டுவிட்டு, இந்தியச் சந்தையை அந்நியனுக்கு அகலத் திறந்துவிட்டுவிட்டு இப்போது லபோ திபோ என்று கூவி என்ன பயன்? முதலிலேயே எங்கே போச்சி புத்தி?”

No comments:

Post a Comment