Friday, August 23, 2013

தக்காளி கெச்சப்பில் எலிமுடி!

தக்காளி கெச்சப்பில் எலி முடி இருந்ததால் இதன் விற்பனையை நிறுத்துமாறு பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டின் ஹெய்ன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன.

பிரேசிலில் இறக்குமதி செய்யப்பட்ட இந்நிறுவனத்தின் தயாரிப்பான தக்காளி கெட்சப் பாட்டில்களில் எலியின் முடி இருந்ததாக அந்நாட்டு சுகாதார ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் அனுப்பபட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விற்பனையையும் நிறுத்தும்படி பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ஹெய்ன்ஸ் நிறுவனம் மீது மெக்சிகோ நாட்டின் சுகாதார நிறுவனமான கொபெப்ரிஸ் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளையும் கொபெப்ரிஸ் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆனால் சர்வதேச தர விதிமுறைகளின் படியே தங்களது உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள ஹெய்ன்ஸ் நிறுவனம், இது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளது

No comments:

Post a Comment