Friday, August 16, 2013

உலக வரலாற்றில் ஓர் மாவீரன் - சதாம்

உலக வரலாற்றில் ஓர் அத்தியாயம். அவ் அத்தியாயத்தை படித்து முடித்த பின் நிச்சயமாய் அநேக கண்கள் கண்ணீர் மழை பொழியும். 

பிறப்பிலேயே கஷ்டத்தை அனுபவித்த பாலகன்.தனது சிறு பராயத்தை, சிறு சிறு கூலி வேலை செய்து கடத்திச் சென்றார். கஷ்டப்பட்டு படித்ததாலோ என்னமோ அவர் ஓர் சட்டவாதி ஆனார். சட்டவாதி என்பது உங்களுக்கு விளங்காமல் இருக்கலாம், சட்டத்தை உயிர் மூச்சாக நினைத்து படித்து, அத் துறையில் புலமை பெற்றார். பல எண்ணங்கள், இலட்சியங்கள் அவர் மனதில் ஊற்றாய் வடிவெடுத்தன. அப்துல் கலாம் சொன்னது போல பல கனவுகளை கண்டார்...அத்தனையும் போராட்டமாய் மறுவுருவம் எடுத்தது.ஒரு விதத்தில் பார்க்க போனால் அவர் செய்தது சரியே என்று நீங்கள் கூறுவீர்கள்..! தொடர்ந்து வாசியுங்கள்.

இப்போது ஒரு அழகிய,கம்பீரமான வாலிபன்.அரசியல் நுணுக்கங்கள் தெரிந்திருந்தமையினால் அத் துறையையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கட்சியில் சேர்ந்து(கட்சியின் பெயர் தெரியவில்லை) அரசியல் காய் நகர்த்தினார். வளர்ந்தார் வளர்ந்தார் கட்சி தலைமை பீடம் வரை வளர்ந்தார். அத்தோடு நின்று விடாது, முதலாவது கனவை வென்றார் அல்லது நனவாக்கினார். என்ன அந்த கனவு? அதுதான் ஈராக் எனும் நாட்டின் ஜனாதிபதி பதவி.

ஒரு மாவீரனின் கதை என்பதால் சில சில மறைமுக கருத்துகளை கூறுவது நல்லது. சிலருக்கே இது புரியும். சரி அது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு கனவுடன் நின்றுவிடவில்லை. அடுத்த கனவு காண்கிறார்(அபிசேக் பச்சனின் குரு படம் நினைவுக்கு வருகிறது). ஒட்டு மொத்த அரபு நாடுகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற மிக பெரிய கனவு. கனவு காண்பது ஒன்றும் தவறல்லவே..!

நாட்டை பலப்படுத்த தொடங்கினார். மிகப்பெரிய போர் ஆயுதங்களையும், நுணுக்கங்களையும் நாட்டில் சேகரித்தார். மற்றைய நாடுகள் பார்த்து வியக்கும் அளவுக்கு தன் நாட்டை ஸ்திரமாக,ராஜாவாக சிம்மாசனத்தில் அமர்த்தினார். முழு அதிகாரத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆகவே இவர் தான் கடவுள் என்ற அகந்தை இருந்ததில் பிழையில்லை. இத்தனைக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இவரை ஒரு மாவீரன் என்றே கருதியது. போராட்ட வடிவத்தை கண்டு(பல நாடுகளை தன் வசம் கொண்டு வந்தமை) அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் சற்றே பின் வாங்கியது அல்லது பயந்தது.

தன் நாட்டில், ஷியாக்கள்,குர்துக்கள் புரட்சியை மேலான அதிகாரத்தை கையிலெடுத்து காலில் போட்டு மிதித்தார்.இவரின் பழக்கம் என்னவென்றால், தன்னுடைய கொள்கைக்கு யாராவது எதிராய் நிற்பார்களேயானால் அவர்கள் உலகில் வாழ அருகதையற்றவர்கள்.( புரிகிறதா? தன்னை யாராவது சீண்டினால், அவர்களை கொலை செய்வது). சர்வாதிகாரி என்ற பதம் இவருக்கும் பொருந்தும்.) இதுவும் இவரது அழிவுக்கு ஓர் காரணம்(காரணமாக்கப்பட்டது).

அமெரிக்கா ஓர் வல்லரசு. வேறு நாடு தன்னை விட பலமாவதை என்றுமே விரும்பியதில்லை,விரும்பாது. ஈராக்கின் வளர்ச்சியை கண்டு செய்வதறியாது திகைத்தது. அப்போது நாட்டின்(அமெரிக்காவின்) ஜனாதிபதி ஜோர்ச்.புஷ். (ஆரம்பத்திலிருந்தே ஈராக்கை தன் எதிரியாக தான் பார்த்தார்)

இனிதான் கிளைமாக்ஸ்...

ஈராக்கின் வளர்ச்சியை பார்த்து திகைத்த அமெரிக்கா, ஈராக்கை கைப்பற்ற நினைத்தது. அன்றைய நிலைமையில் ஈராக்கை கைப்பற்றுவது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றது. எல்லா திசைகளிலும் சதாம் தனது வீரத்தை வெளிப்படுத்தினார். நடுங்கியது அமெரிக்கா. உலக வல்லரசு என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க ஈராக்/சதாம் படையெடுப்பு/கைது முக்கியமானது.(இதை எழுதும் வேளையில் ஒசாமாவும் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்,ஒசாமாவை கொலை செய்த விதமும்,திட்டங்கள் தீட்டபட்ட விதமும் உண்மையிலேயே திகிலூட்டத்தக்க ஒன்று)

உலக வல்லரசு முடிவெடுத்தது. நவீன ஆயுதங்களை குவித்தது. தரை, வான், கடல் என மூன்று படையையும் உசாராக்கியது. பல நாடுகளை தன பக்கம் ஈர்த்து கொண்டது.நிச்சயமாக இது ஓர் மிகப்பெரிய உலக யுத்தமே.

சதாமும் சும்மா இருக்க வில்லை. உளவுத்துறையினர் மூலம் இதனை அறிந்த சதாம். தானும் பல நாடுகளை தன் வசம் ஈர்த்தார். பல பல நவீன ஆயுதங்களை வாங்கினார். ஆக மொத்தத்தில் பெம்பாலான உலக நாடுகள் இருபுறம் பிரிந்தன. ஒன்று அமெரிக்காவிற்கு சார்பாக. மற்றையது ஈராக்கிற்கு சார்பாக.

இப்போது எல்லாம் தயார். இருபுறமும் சம நிலையில். சண்டை என்றால் இதுதான் சண்டை. யார் வெல்லுவார்கள் என்று எவராலுமே அடித்து கூற முடியாது. ஆனால் சண்டைக்குரிய காரணம் ??? ஹா ஹா ஹா அமெரிக்காவே சண்டையை தொடுக்க ஆர்வமாய் இருந்தது.உயர் மட்ட இராஜ தந்திரிகள், கல்விமான்கள், அரசியல் வாதிகள் ஒன்று கூடி காரணம் தேடினார்கள். ஆம் ஒருமனதாய், காரணம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. " காரணம் - உலக அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய, அணுவாயுதங்களை ஈராக் தயாரித்து வருகிறது.இதை தடுத்து நிறுத்தாவிடில் உலகமே அழியும்"

போர் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது. உலகமே ஒன்று திரண்டது. ஈராக் மக்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.

இந்நிலையில் ஒரு ஊடகம், இரு பக்கங்களிலும் உள்ள போர் ஆயுதங்கள், அவற்றின் செயற்றிறனை, படை பலத்தை,ஆட் பலத்தை, விமான பலத்தை கணக்கிட்டு தொகுத்து வெளியிட்டது. அதில் சதாம் உசைனே உச்சத்தில் நின்றார் என்பதையும் கூற வேண்டும்.

இதோ யுத்தம் தொடங்குகிறது... (யுத்தம்,யுத்தத்தால் ஏற்படும் அழிவுகள்,வேதனைகள்,தாக்கங்கள்,விளைவுகள் போன்றவற்றை வர்ணனைகள் கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அண்மையில் எமது பூமியும் யுத்த பூமியாகியது,ஆக்கப்பட்டது.)

ஈராக்கை அமெரிக்கா படைகள் சூழ்ந்து கொள்கின்றன.இனி சொல்லவா வேணும்? தாக்குதல் ஆரம்பம். பதிலடியும் தொடங்கியது.

நாலா புறமும் குண்டு மழை பொழிந்தது.(இடையிடையே அமெரிக்கா தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விட்டது)

அமெரிக்காவின் செல்வாக்கு காரணமாக, ஐக்கியநாடுகளால் ஈராக் மீது பொருளாதார தடை கொண்டுவரப்பட்டது. ஐயோ பாவம். ஈராக் மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர் நோக்கினர்.( ஈழத்து போரில் முள்ளிவாய்காலில் இருந்த சாதாரண மக்கள் அனுபவித்ததில், பல மடங்கு அவ் நாட்டு மக்கள் அனுபவித்தனர்.)

அதி நவீன போர் விமானங்கள் குண்டு மழை பொழிய, தரை படையினர் குவைத்திலிருந்து ஈராக்கிற்கு முன்னேற சண்டை தீவிர மானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். தொடர்ந்து போரை பற்றி விபரிக்க விரும்பவில்லை. ( ஈராக் நாட்டில் அத்தனை வளங்களையும் பெறுவதையே குறிக்கோளாய் கொண்டிருந்தனர் அமெரிக்கா இராணுவத்தினர். அதற்கு அந் நாட்டு பெண்களும் விதி விலக்கல்ல)

ஆம், யுத்தத்தில் சதாம் தரப்பு தோல்வியை சந்தித்தது. ஓர் பதுங்கு குழிக்குள் இருந்து சதாம் வெளிவந்தார்.அக் குழியினுள் அவர் மட்டும் தான் இருக்கலாம்.அவ்வளவு சிறிது.அமெரிக்க இராணுவம் அவரை சிறை பிடித்தது.

தனது வீரத்திலிருந்து சற்றும் பின்வாங்காத அல்லது தளராத சதாம், தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஏற்க தயாராக இல்லை. அமெரிக்கா ஒரு விசேட நீதிமன்றத்தை தயாரித்து நீதி வழங்குவதாக கூறி, சதாமை குற்றவாளியென அறிவித்து தூக்கு தண்டனை விதித்தது. குற்றவாளிக்கூட்டில் நின்று கொண்டிருந்த போதும், "என்னை தண்டிக்க நீ யார்? " என கம்பீரமாக கேட்டார். ஆம், நானும் கேக்கிறேன், ஒரு ஜனாதிபதியை தண்டிக்க அமெரிக்கா யார்?

2006-12-30 திகதி உலக வரலாற்றில் கறை ஏற்பட்ட நாள். ஆம், சதாம் உசேன் எனும் மாவீரன் தூக்கு கயிறுக்கு ஏற்றப்பட்டார். ( ஒரு மாவீரனை இப்படி தான் சாகடிப்பார்களா? அமெரிக்காவுக்கு வெக்கக்கேடு)

இன்று அந்த மாவீரனுக்கு என் வணக்கங்கள்.

No comments:

Post a Comment