Tuesday, August 20, 2013

காப்பி பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி!

தினமும் அதிகளவு காபி குடித்தால் ஆபத்து என அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த ஆய்வாளர்கள், 40 ஆயிரம் பேரிடம் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுமார் 17 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகம் பேர் காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அதிகளவு காபி குடிப்பதால் உடல் சார்ந்த அளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக அவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைந்து விடுகிறது. இந்த ஆய்வில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டோர் காபி குடிக்கும் பழக்கத்தால் உயிரிழந்து உள்ளனர். 55 வயதிற்கு உட்பட்டவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு வாரத்திற்கு 28 கோப்பை காபி குடிப்பவர்களின் இதயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களில் 32 சதவீதம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு காபி குடிப்பதை தவிர்ப்பது நலம் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment