Friday, August 30, 2013

பண்டைய தமிழ் எண் வடிவங்கள்

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156

மேலும் தொடர‌

* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

அளவைகள்
—————-
நீட்டலளவு
**********
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை

பொன் நிறுத்தல்
************
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி

உலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள்

பொன்னையும் பொருளையும் அல்ல, அலங்கரிக்கப்பட்ட அறைகளை அல்ல, வாளையும் ஈட்டியையும் அல்ல, கனி வகைகள் கொண்ட தோட்டங்களை அல்ல, அந்த மாளிகையில் அமைந்துள்ள ஜன்னலைத்தான் மிகவும் விரும்பினான் சிந்துபாத். நாள் முழுக்க ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தான். உண்மையான செல்வம் மாளிகைக்கு உள்ளே அல்ல, வெளியில்தான் கொட்டிக்கிடக்கிறது என்பது சிந்துபாத்தின் நம்பிக்கை.குறிப்பாக, கடலில். ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் பரந்து விரிந்திருக்கும் கடலை ஏக்கத்துடன் பார்த்தபடி முழு நாளையும் அவன் கழித்திருக்கிறான். ஆரவாரத்துடன் புறப்பட்டுச் செல்லும் மீனவப் படகுகளையும் ஆடி அசைந்து கரை ஒதுங்கும் பிரமாண்டமான பாய்மரக் கப்பல்களையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பான். இவை எங்கிருந்து வருகின்றன? எங்கே செல்கின்றன? ஆர்வத்தைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் ஒருநாள் கடற்கரைக்குச் சென்றான் சிந்துபாத். மீனவர்களும் மாலுமிகளும் கப்பல் பணியாளர்களும் வணிகர்களும் மும்முரமாக கப்பல்களில் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தனர். அவர்களிடம் பேசத் தொடங்கினான் சிந்துபாத். மன்னனின் மகன் என்பதால் ஆரம்பத்தில் சற்றே விலகி நின்றவர்கள் நாள்பட நாள்பட நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.

‘சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய சுறாமீனைப் பிடித்தேன். ஆஹா எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று நினைத்து அதன் வயிற்றைப் பிளந்து பார்த்தால்...’ சிந்துபாத் முன்னால் நகர்ந்து வந்தான். ‘என்ன இருந்தது?’ ‘எப்படிச் சொல்வேன், போ! ஒரு கண்ணாடி சீஸா. அதைத் திறந்தால் உள்ளே ஒரு காகிதம்.’ஆவென்று வாய் பிளந்தான் சிந்துபாத். ‘அதற்குள் வாயைத் திறந்துவிட்டாயே, சிந்துபாத். அந்தக் காகிதத்தில் என்ன இருந்தது தெரியுமா? ஒரு வரைபடம். சரி, வரைபடத்தில் உள்ள இடத்தைக் கண்டு பிடிப்போம் என்று நாங்கள் புறப்பட்டுப் போனோம். வெகு நாள்களுக்குப் பிறகு, நீண்ட தேடலுக்குப் பிறகு அந்த இடத்தைக் கண்டறிந்தோம். அடடா, இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது.’ சிந்துபாத்தின் உடலும்கூட சிலிர்த்தது. அந்த மாலுமி தொடர்ந்தான். ‘அள்ள அள்ளக் குறையாத வைரங்கள், வைடூரியங்கள், மாணிக்கங்கள்... இன்னொரு சமயம் என்ன ஆனது தெரியுமா? என் நண்பர்களும் நானும்...’சிந்துபாத் முடிவுசெய்து விட்டான். போதும் இந்த மாளிகை வாழ்க்கை. அப்பாவிடம் அனுமதி பெற்று கடலுக்குள் சென்றுவிட வேண்டியது தான்! இது வரை அவன் சேகரித்து வைத்த கதைகள், (அவை உண்மையா, கற்பனையா என்று சோதித்துப் பார்க்க விருப்பமில்லை) அவனுக்கு அசாத்தியமான துணிச்சலையும் அடக்கமுடியாத ஆர்வத்தையும் ஊட்டியிருந்தன.

சிந்துபாத்தின் ராஜா அப்பா கொஞ்சம் தயங்கினார். இருக்கும் செல்வங்களும் வசதிகளும் போதாதா? உயிரைப் பணயம் வைத்து எதற்கு ஒரு கடற்பயணம்? சிந்து பாத் விளக்கினான். அப்பா, என்னால் இங்கே சிறைபட்டுக் கிடக்கமுடியாது. இங்கிருந்து எதையும் கற்கவும் முடியாது. நம் மாளிகைகளைக் காட்டிலும் கடல் செழிப்பானது. நான் கடலில் வாழவே விரும்புகிறேன். அனுமதி தாருங்கள். அதற்கு மேல் மறுக்கமுடியாததால், ராஜா அந்த ஊரின் மிகச் சிறந்த பாய்மரக் கப்பலை வாங்கி சிந்துபாத்துக்குப் பரிசளித்தார்.கடல் நண்பர்கள் மூலமாக, மிகச் சிறந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் சிந்துபாத். பயணத்துக்குத் தேவையான நீர் உள்ளிட்ட உணவுப் பொருள்களைச் சேகரித்துக்கொண்டார்கள். துறைமுகத்தோடு பிணைக்கப்பட்ட கயிறுகள் விடுவிக்கப் பட்டபோது, சிந்துபாத் உற்சாகக் குரல் எழுப்பினான். மாலுமி சிந்துபாத்தின் முதல் கடல் பயணம் ஆரம்பமானது. சில்லென்று முகத்தில் வீசும் குளிர் காற்றை கண்கள் மூடி ரசித்தான் சிந்துபாத். இரவும் குளிரும் கருமை படர்ந்த கடலும் சூரிய விடியலும் அவனை உற்சாகப்படுத்தியது. கப்பல் பணியாளர்கள் ஒன்றுதிரண்டு பெருங்குரல் எடுத்து பாடல்கள் பாடியபோது, சிந்துபாத்தும் இணைந்துகொண்டான்.ஒருநாள், திடீரென்று வீசிய பெருங்காற்றால் கப்பல் நிலைதடுமாறியது. சிந்து பாத் கட்டுப்பாட்டு அறைக்கு ஓடோடிச் சென்று தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து பார்த்தான். கப்பலை அவனால் மீட்க முடியவில்லை. நடுஇரவில் கப்பல் கவிழ்ந்தது. ஒரு மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டான் சிந்துபாத். இரவு முழுவதும் மயக்கம் நீங்கவில்லை.

விடிந்தபோது எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. அடுத்த மூன்று தினங்களுக்கு மிதந்துகொண்டே இருந்தான் சிந்துபாத். உணவில்லை, நீரில்லை. மூன்று தினங்களுக்குப் பிறகு ஒரு சிறு நிலத்தைக் கண்டான். சிதறிப் போன சில பணியாளர்களையும் கண்டான். மகிழ்ச்சியுடன் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். அந்தப் புதிய நிலத்தில் கால் பதித்தார்கள். இது என்ன தீவா அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு நிலப்பிரதேசமா? தன் தந்தையின் பெயரை அதற்குச் சூட்டிவிடலாம் என்றுகூட சிந்துபாத் நினைத்துக்கொண்டான்.அப்போது அந்த நிலம் அசைந்தது. ஆ, இதென்ன அதிசயம்? நிலம் அசையுமா? சிந்துபாத் அதிர்ச்சியுடன் அங்கும் இங்கும் நகர, நிலம் அப்படியே மேலே எழும்பி, சடாரென்று நேராக நின்று பிறகு மீண்டும் சாய்ந்தபோதுதான் புரிந்தது. அது நிலமே அல்ல. ஒரு மிகப் பெரிய திமிங்கிலம். மீண்டும் கடலில் மூழ்கினான் சிந்து பாத். மீண்டும் மயக்கம். மீண்டும் விழிப்பு. மீண்டும் திண்டாட்டம். மீண்டும் பயணம். கடல் அலைகளைப் போல்தான் அமைந்து விட்டது சிந்துபாத்தின் வாழ்வும். ஒரு நொடி மேலே. அடுத்த விநாடி கீழே. பல வகைக் கனிகள் நிரம்பிய தோட்டத்தில் ஒய்யாரமாக படுத்தபடி ருசித்துக்கொண்டிருப்பான். அடுத்த நாள், புயல் தாக்கும். நாள்கணக்கில் பட்டினி கிடக்கவேண்டியிருக்கும். சிலசமயம் கொள்ளையர்கள் ஈட்டியுடன் பாய்ந்து வருவார்கள். புதிய கப்பல் கிடைக்கும். உள்ளே செல்வங்கள் இருக்கும். மறுநாள் கப்பல் கொள்ளையடிக்கப்படும்.அல்லது வழி தவறி ஏதேனும் ஓர் இடத்தில் கரை ஒதுங்கும். ஏதேனும் சாப்பிட அகப்படாதா என்று அலையும் போது தொலைவில் ஒரு வீடு தெரியும். ஓடோடிச் சென்று பார்த்தால், வந்தாயா வா மகனே என்று சொல்லி ஒரு பெரிய பூதம் வரவேற்கும். இன்றைக்கு என் இரவு உணவு நீதான் என்று அவனைப் பிடித்துக்கொள்ளும். பூதத்தை வீழ்த்திவிட்டு தப்ப வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அனுபவம். புதுப்புது தேடல்கள். புதிய ஆபத்துகள். புதிய சாகசங்கள். சிந்துபாத் கடலை விட்டு நீங்கவேயில்லை. வேண்டாம் இந்த வாழ்க்கை என்று அவன் மனம் வெறுக்கவில்லை. தன் கனவையும் லட்சியத்தையும் விட்டுக்கொடுக்க அவன் தயாராகயில்லை.

இறுதியில், ஒரு பயணத்தின் முடிவில் அதுவரை கண்டிராத செல்வங்களை சிந்துபாத் கண்டுகொண்டான். முன்னர் ஒரு மாலுமி நண்பர் விவரித்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிக வைரங்களையும் மரகதக் கற்களையும் நவரத்தினங்களையும் மலை மலையாக அவன் கண்டுபிடித்தான். பல கப்பல்களிலும் யானைகளிலும் மூட்டைகளை நிரப்பி, தன் ஊருக்கு எடுத்துச் சென்றான். அப்பா மகிழ்ந்தார். சிந்து பாத்தை அணைத்துக்கொண்டார். சேகரித்த செல்வத்தை சிந்துபாத் ஏழை மக்களிடம் பகிர்ந்துகொண்டான்.சிறிது காலத்துக்குத்தான் சிந்துபாத் அமைதியாக ஓய்வெடுத்தான். பிறகு மீண்டும் அந்த ஜன்னலை நெருங்கினான். மீன் பிடிக் கப்பல்களும் பாய்மரக் கப்பல்களும் மிதந்துகொண்டிருந்தன. கடல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. இதோ கிளம்பி விட்டேன் நண்பா. சிந்துபாத் அடுத்த பயணத்துக்குத் தயாரானான். ரிச்சர்ட் பர்ட்டன் மொழிபெயர்த்த அரபு இலக்கியத்தின் பொக்கிஷமான 1001 அரபிய இரவுகள் நூலின் ஆறாம் பாகத்தில் மாலுமி சிந்து பாத் பயணங்கள் இடம்பெறுகின்றன. ஷெகரஷாத் என்னும் இளம்பெண் சொன்ன கதைகளின் தொகுப்புதான் 1001 இரவுகள். பல்வேறு எழுத்தாளர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த நாடோடிக் கதைகளைத் தொகுத்திருக்கின்றனர். தெற்கு இராக் பகுதியைச் சேர்ந்த பஸ்ரா என்னும் இடத்தைச் சேர்ந்தவன் சிந்துபாத். கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் சிந்துபாத் மேற்கொண்ட சாகசக் கடல் பயணங்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. மொத்தம் ஏழு பயணங்களை சிந்துபாத் மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?

பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும். மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு.

ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்­பனை ஓவி­ய­மல்ல. உண்­மை­யாக வாழும் ஒரு­வரின் முகத்­தேற்­றமே அது. உலகின் முன்­னணி கூடைப்­பந்­தாட்ட வீரர் முகத்­தோற்­றத்தில் வரை­யப்­பட்­ட­துதான் அந்த ஓவியம்.

யோ மிங் (Yao Ming) எனும் இவ்­வீரர் சீனாவைச் சேர்ந்­தவர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அவ­ருக்கு 32 வயது. இதற்­கி­டையில் பெரும் பணமும் புகழும் சம்­பா­திதது விட்டு உபா­தைகள் கார­ண­மாக போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்­று­விட்டார். பொது­வாக சீனர்கள் குள்­ள­மா­ன­வர்கள் என்ற அபிப்­பி­ராயம் உள்­ளது. ஆனால், யோ மிங்கின் உயரம் 7 அடி 6 அங்­குலம் (2.29 மீற்றர்).

யோமிங்கின் தாய் தந்தை இரு­வரும் தொழிற்சார் கூடைப்­பந்­தாட்ட போட்­டி­யா­ளர்கள். தந்தை யோ ஸியு­வானின் உயரம் 6 அடி 7 அங்­குலம். தூய் பெங் பெங்­டியின் உயரம் 6 அடி 3 அங்­குலம். இத்­தம்­ப­தியின் ஒரே பிள்­ளை­யான யோ மிங் 9 வயதில் கூடைப்­பந்­தாட்டம் விளை­யாட ஆரம்­பித்தார். 10 வயதில் அவரின் உயரம் 5 அடி 5 அங்­கு­ல­மாக இருந்­தது. அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் 7 அடி 3 அங்­குலம் வரை வளர்வார் என எதிர்­வு­கூ­றினர். ஆனால் அதையும் தாண்டி வளர்ந்­து­கொண்­டி­ருந்தார் யோ மிங்.

fb-man3அவரின் உய­ரம்­போ­லவே அவரின் கூடைப்­பந்­தாட்ட ஆற்­றலும் உயர்ந்­தது. சீனாவின் சார்பில் சர்­வ­தேச போட்­டி­களில் பங்­கு­பற்றி பல பதக்­கங்­களை வென்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்ட சங்கத்தின் (என்.பி.ஏ.) போட்­டி­களில் ஹொஸ்டன் ரொக்கெட் அணி சார்பில் பங்­கு­பற்­றினார்.

காலில் ஏற்­பட்ட உபா­தைகள் கார­ண­மாக 2011 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அவர் அறி­வித்தார். அவர் ஓய்வு பெறும்­போது என்.பி.ஏ. போட்­டி­களில் விளை­யாடும் வீரர்­களில் மிக உய­ர­மா­ன­வ­ராக யோ மிங் விளங்­கினார்.

சீனாவின் மிகப் பிர­ப­ல­மான விளை­யாட்டு நட்­சத்­தி­ரங்­களில் ஒரு­வ­ரான யோ மிங் 2009 வரை­யான 6 வரு­ட­கா­லத்தில் 5 கோடி அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான வரு­மா­னத்தை பெற்­றவர். பல்­வேறு சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் அனு­ச­ர­ணையை அவர் கொண்­டி­ருக்­கிறார்.

fb-man2இதெல்லாம் இருக்­கட்டும் யோ மிங் எவ்­வாறு மேற்­படி சிரிப்பு மனி­த­ராக சமூக வலைத்­த­ளங்­களில் மாற்றம் பெற்றார் என்ற கேள்வி எழு­கி­றதா?

2009 ஆம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றின் பின்னர் சக வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங் பங்­கு­பற்­றினார். அப்­போது ரொன் அட்டெஸ்ட் பேசி­யதை கேட்டு, அடக்க முடி­யாமல் சிரித்தார். அந்த காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யா­னது.

2010.07.11 ஆம் திகதி ரெடிட் எனும் சமூக வலைத்­த­ளத்தில் டவுன்லோ கலைஞர் ஒருவர் பல்­வேறு வேடிக்கை ஓவி­யங்­களை வரைந்து வெளிட்டார். அதில் யோவ் மிங்கின் ஓவி­யமும் ஒன்­றாகும். மேற்­படி செய்­தி­யாளர் மாநாட்டு வீடி­யோவில் யோ மிங் சிரித்த காட்­சி­யொன்றின் “ஸ்கிறீன் ஷொட்டை” அடிப்­ப­டை­யாக வைத்தே அந்த ஓவி­யத்தை வரைந்­த­தாக டவு­டன்லோ ஒப்புக்கொண்டார்.

அந்த ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் ஈர்த்தது. பின்னர் அதன் சாயலில் வேறு ஓவியங்களும் வரையப்பட்டன. யோ மிங்குக்கும் இது. தெரியும். அவரின் பேஸ் பக்கத்தை 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு படைத்தோரின் குறிப்புகள் இளைஞர்களுக்காக

தன்னேரிலாத ஆங்கில நாடக வேந்தன் - பாவேந்தன் வில்லியம் சேக்ஸ்பியர், இப்பூவுலகில் வாழ்ந்த மாபெரும் எழுத்து வேந்தன் என்று பொதுவாகப் போற்றப்படுபவர். இவருடைய அடையாளம் குறித்து எவ்வளவோ வாக்கு வாதங்கள் (இது பற்றி பின்னர் விவாதிப்போம்) நடை பெறுகின்றன. எனினும், இந்த மேதையின் படைப்பாற்றலையும், சாதனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சேக்ஸ்பியர், குறைந்தது 36 நாடகங்கள் இயற்றினார். இவற்றில் ஹாம்லெட் (Hamlet), மாக்பெத் (Macbeth), லியர் மன்னன் (King Lear), ஜூலியஸ் சீசர் (Julius Caeser), ஒத்தல்லோ (Othello), போன்ற அழியாக் காவியங்களும் அடங்கும். இவை தவிர, அற்புதமான 154 ஈரேழ்வரிப் பாக்களையும் (Sonnets) சில நெடிய கவிதைகளையும் யாத்துள்ளார். இவருடைய நுண்மாண் நுழைபுலம், வித்தகம், ஏற்புடைய புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கால், இவருடைய பெயர் இந்தப் பட்டியலில் முதல் வரிசையில் இடம் பெறமாலிருப்பது விந்தையாகத் தோன்றலாம். சேக்ஸ்பியருக்கு நான் இத்துணை கீழ் வரிசையில் இடங்கொடுத்திருக்கிறேன் என்றால் அவருடைய கலைத் திறம்பாடுகளை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தினால் அன்று. மாறாக, பொதுவாக, இலக்கிய மற்றும் கலையுலகப் பிரமுகர்கள், மனித வரலாற்றில் குறைந்த அளவு செல்வாக்கினையே செலுத்தி வந்துள்ளார்கள் என்பதே காரணம்.

மானுட முயற்சியின் வேறு பல துறைகளில், நிகழ்வுகளில் பெரும்பாலும் செல்வாக்குச் செலுத்துவது ஒரு சமயத் தலைவரின், விஞ்ஞானியின், அரசியல்வாதியின், நாடாய்வாளரின் அல்லது தத்துவ அறிஞரின் நடவடிக்கைகள் தாம். எடுத்துக்காட்டாக, அறிவியல் முன்னேற்றங்களினால், பொருளாதார - அரசியல் விவகாரங்களில் மகத்தான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவை, சமய நம்பிக்கைகளையும், தத்துவ மனப்பான்மைகளையும், கலை வளர்ச்சிகளையுங் கூட வெகுவாகப் பாதித்திருக்கின்றன.

எனினும், புகழ் பெற்ற ஓவியர் ஒருவர், அவர் பிந்தி வரும் ஓவியர்களின் படைப்பில் எத்துணை பேரளவுச் செல்வாக்குப் பெற்றிருப்பினும், இசை மற்றும் இலக்கிய வளர்ச்சியில் மிகக் குறைந்த செல்வாக்கையே கொண்டிருக்க முடியும். அறிவியல், நாடாய்வு போன்ற மனித முயற்சியின் பிற துறைகளில் எந்தவிதச் செல்வாக்கையும் கொண்டிருக்க இயலாது. கவிஞர்கள், நாடகாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் பற்றியும் இதையே கூற முடியும். பொதுவாக, கலையுலகவாதிகள், கலையில் மட்டுமே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். அவர்கள் பணியாற்றும் குறிப்பிட்ட துறையில் மட்டுமே அவர்களின் செல்வாக்குச் செல்லுபடியாகும். இந்தக் காரணத்தினால் தான், இலக்கியம், இசை, ஓவியம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் எவரும் முதல் 20 இடங்களில் சேர்க்கப்படவில்லை. விரல் விட்டு எண்ணி விடக்கூடிய மிகச் சிலர் மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அப்படியானால், ஒருசில கலையுலகப் பிரமுகர்களுக்கு மட்டும் இப்பட்டியலில் இடங்கொடுத்திருப்பதேன்? நமது பொதுவான பண்பானது, சமூகவியல் அடிப்படையில் பார்த்தால் கலையினால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். சமுதாயத்தை இணைக்கும் பசை உருவாவதற்குக் கலை உதவுகிறது. வரலாற்றில் இதுவரை இருந்து வந்துள்ள மனித நாகரிகம் ஒவ்வொன்றிலும் கலை ஓர் அம்சமாக இருந்து வருவது வெறும் தற்செயல் நிகழ்ச்சி அன்று.

மேலும், கலைகளைத் துய்ப்பது, ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும் ஒரு நேரடியான பங்குப் பணியாற்றுகிறது. அதாவது, ஒரு தனி மனிதன், தனது நேரத்தில் ஒரு இசையைக் கேட்பதற்கு நாம் செலவிடும் நேரம் நமது மற்ற நடவடிக்கைகளில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையென்றாலும், அந்த நேரம் நமது வாழ்வில் முக்கியமற்ற நேரத்தின் ஒரு பகுதியேயாகும். ஆயினும், கலை நமது பிற நடவடிக்கைகளைப் பாதிக்கவே செய்கிறது. ஒரு வகையில், நமது வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிறது. கலை, நம்மை நமது ஆன்மாவுடன் இணைக்கிறது; நமது ஆழமான உணர்ச்சிகளை அது வெளிப்படுத்துகிறது; நமக்காக அந்த உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது.

சில நேர்வுகளில், கலைப்படைப்புகள், ஏறத்தாழ வெளிப்படையான தத்துவப் பொருளை உள்ளடக்கியிருக்கின்றன. இத்தத்துவம், மற்றத் துறைகளில் நமது மனப் போக்குகளில் தாக்கம் ஏற்படுத்தலாம். இசை, ஓவியம் போன்றவற்றை விட இலக்கியப் படைப்புகளில் இது அடிக்கடி நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, ரோமியோ ஜூலியத் நாடகத்தில் (அங்கம் III, காட்சி 1) இளவரசன் வாய்வழியாக, கொலையிற் கொடியரைக் கொல்லற்க; அவர் நாண நன்னயம் செய்திடுக என்று ஷேக்ஸ்பியர் கூறும் போது, ஒரு தத்துவக் கோட்பாட்டை அவர் தெரிவிக்கிறார். இந்தக் கோட்பாடு, மோனாலிசா ஓவியத்தைப் பார்ப்பதை விட அதிக அளவில் அரசியல் மனப்போக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இலக்கியவாதிகள் அனைவரிலும் தலைசிறந்தவராக சேக்ஸ்பியர் விளங்குகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சாசர், வர்ஜில், ஹோமர் ஆகியோரின் படைப்புகளை, அவை பள்ளிப் பாட நூல்களாக இருந்தால் மட்டுமே, ஒருசிலர் இன்று படிக்கின்றனர். ஆனால், சேக்ஸ்பியர் நாடகங்கள் இன்று நடந்தாலும், அரங்கம், நிரம்பி வழிகிறது. சேக்ஸ்பியரின் சொல்லாட்சித் திறன் ஈடு இணையற்றது. அவரது நாடகங்களைப் பார்க்காதவர்களும், படிக்காதவர்களுங்கூட அவரது நாடகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டுவதை அடிக்கடி காண்கிறோம். மேலும், அவரது செல்வாக்கு இன்றிருந்து நாளை மறையும் ஒரு போலி பகட்டு அன்று என்பது தெளிவு, அவரது படைப்புகள், நானூறாண்டுகள் வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மகிழ்வூட்டியிருக்கின்றன. அவை ஏற்கெனவே காலத்தை வென்று நிற்கின்றன. எனவே, சேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் இன்னும் பல நூற்றாண்டுகள் செல்வாக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று கருதலாம்.

சேக்ஸ்பியரின் முக்கியத்துவத்தைக் கணிக்கும் போது, அவர் வாழ்ந்திராவிட்டால், அவரது நாடகங்கள் ஒரு போதும் எழுதப்பட்டிருக்கமாட்டா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (ஒவ்வொரு கலையுலக அல்லது இலக்கியப் பிரமுகர் பற்றியும் இவ்வாறு கூறலாம். ஆனால், சிறிய கலைஞர்களின் செல்வாக்கினைக் கணிப்பதில் இது முக்கியத்துவம் பெறாது).

சேக்ஸ்பியர் ஆங்கில மொழியிலேயே எழுதினார். எனினும், அவர் உலகப் புகழ் பெற்றார். ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இல்லாவிட்டால், வேறெந்த மொழியையும் விட அது ஓர் உலகளாவிய மொழியின் நிலைக்கு மிக நெருக்கமாக இருந்தது என்பதில் ஐயமில்லை. மேலும், சேக்ஸ்பியரின் படைப்புகள் மிகப் பெருமளவில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. அவை ஏராளமான நாடுகளில் படிக்கப்பட்டன. மேடைகளில் நடிக்கப்பட்டன.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளை இலக்கியத் திறனாய்வாளர்கள் இகழ்ந்துரைப்பதுண்டு. சேக்ஸ்பியருக்கு அந்த நிலைமை ஏற்படவில்லை. அவருடைய படைப்புகள், இலக்கிய அறிஞர்களால் ஒரு மனதாகப் பாராட்டப் பெற்றன. பல தலைமுறை நாடகாசிரியர்கள் சேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்தார்கள்; ஆராய்ந்தார்கள். அவருடைய இலக்கிய மாண்புகளைத் தாங்களும் முன்மாதிரியாகக் கொள்ள முயன்றார்கள். மற்ற எழுத்தாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற செல்வாக்கும், உலகம் முழுவதும் அவருக்கிருந்த பெருஞ் செல்வாக்கும் ஒன்று சேர்ந்து, இந்த நூலில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு வில்லியம் சேக்ஸ்பியரைத் தகுதியுடையவராக்கியுள்ளன. எனினும், வில்லியம் சேக்ஸ்பியர் என்ற பெயரில் எழுதியவர் யார் என்பது பற்றிய ஒரு வாக்குவாதம் நெடுங்காலமாகவே நிலவி வருகிறது.

ஸ்டிராப்ஃபோர்ட்-ஆன்-ஆவோனில் 1564 இல் பிறந்து அங்கு 1616 இல் காலமான அதே வில்லியம் சேக்ஸ்பியர்தான் அவர் என்பதை பழைய மரபாளர்களின் கருத்து (இந்த நூலின் முதல் பதிப்பில் இந்தக் கருத்தையே ஆராயாமல் நானும் ஏற்றுக் கொண்டிருந்தேன்). எனினும், ஐயுறவுவாதிகளின் வாதங்களையும், பழைய மரபாளர்களின் எதிர்வாதங்களையும் கவனமாக ஆராய்ந்தபோது, ஐயுறவுவாதிகள் தங்கள் வாதங்களை அதிகத் திறம்பட எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் கருத்தை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார்கள் என்பைதயும் கண்டு கொண்டேன்.

வில்லியம் சேக்ஸ்பியர் என்பது 17 ஆம் ஆக்ஸ்ஃபோர்ட் கோமகன் எட்வர்ட்-டி-வேர் தமக்கு வைத்துக் கொண்ட ஒரு புனை பெயர் என்பதைப் பெரும்பாலான சான்றுகள் வலியுறுத்துகின்றன. வில்லியம் சேக்ஸ்பியர் என்பவர் ஒரு பணக்கார வணிகர். அவர் வணிகம் நிமித்தம் லண்டன் சென்றார். நாடகங்கள் எழுதுவதற்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

சேக்ஸ்பியர் தம் காலத்து நாடகங்களுக்காகப் பொது மக்களின் பெரும்போற்றுதலைப் பெற்றவர். சேக்ஸ்பியருக்காக ஒரு நிழல் எழுத்தாளாராக (Ghost-Writer) டி-வேர் இருந்தார் என்று நான் கூறவில்லை. சேக்ஸ்பியர், அவர் தம் வாழ்நாளில், ஓர் எழுத்தாளராகக் கருதப்படவில்லை. அவர், தம்மை ஓர் எழுத்தாளராக ஒரு போதும் கூறிக் கொள்ளவுமில்லை! தலைசிறந்த நாடகாசிரியர் வில்லியம் சேக்ஸ்பியராக இருந்தவர் சேக்ஸ்பியர்தான் என்னும் கோட்பாடு 1623 வரையில் - எழவில்லை! அந்த ஆண்டில் தான் சேக்ஸ்பியர் நாடகங்களின் முதலாவது இருமடிப்பதிப்பு (Folio Edition) வெளியானது. அதன் பதிப்பாசிரியர்கள், அதில் ஒரு முன்னுரையைச் சேர்த்திருந்தார்கள். அந்த முன்னுரையில் தான், அந்த நாடகங்களை எழுதிய ஆசிரியர் ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்- ஆவோனைச் சேர்ந்தவர் இல்லை என்பதற்கான வலுவான குறிப்புகள் (மறைமுகமாக) இடம் பெற்றிருந்தன.

நாடகாசிரியர், சேக்ஸ்பியராக இருக்க முடியாது என்பதற்பகான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு மரபுமுறைக் கூற்றினை முதலில் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கூற்று வருமாறு.

சேக்ஸ்பியரின் தந்தை ஜான் ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். அவர் நொடித்துப் போய் வறுமையில் வீழ்ந்தார். சிறுவன் வில்லியம் மிகுந்த வறுமைச் சூழலில் வளர்ந்தான். எனினும், அவன், ஸ்டிராட் ஃபோர்ட் இலக்கணப் பள்ளியில் சேர்ந்தான்; அங்கு அவன் லத்தீனும், இலக்கியமும் கற்றான்.

வில்லியம் தனது 18 ஆம் வயதில் ஆனிஹத்தாவே என்ற இளம் பெண்ணுடன் நட்புக் கொண்டான்; அவள் கருவுற்றாள். அவளையே முறைப்படி மணந்து கொண்டான். சில மாதங்களில், அவளுக்குக் குழந்தை பிறந்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்! ஆகவே, 21 வயதை எட்டுவதற்கு முன்பே, வில்லியம், மனைவியையும் மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியிருந்தது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் அவரது நடவடிக்கைகள் பற்றியோ, அவர் வாழ்ந்த இடங்கள் குறித்தோ, எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், 1590 களில், லண்டனில் ஒரு நடிகர் குழுவின் ஓர் உறுப்பினராக அவர் மீண்டும் தோன்றுகிறார். அவர் ஒரு வெற்றிகரமான நடிகராக விளங்கினார்! ஆனால், விரைவிலேயே நாடகங்களும், கவிதைகளும் எழுதுவதில் அவர் ஈடுபாடு கொண்டார். 1598-ம் வாக்கில் வாழ்கின்ற அல்லது இறந்துபோன ஆங்கில எழுத்தாளர்கள் அனைவரிலும் தலைசிறந்த எழுத்தாளர் என்று போற்றப்பட்டார். சேக்ஸ்பியர் லண்டனில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்தக் கால அளவின்போது அவர் குறைந்தது 36 நாடகங்களை எழுதினார். 154 ஈரேழ் வரிப் பாடல்களை இயற்றினார். ஒரு சில ஆண்டுகளில் அவர் பெரும் பணக்காரர் ஆனார். ஸ்டிராட்ஃபோர்டில் 1597 இல் புதிய மாளிகை (New Palace) என்னும் விலையுயர்ந்த இல்லத்தை வாங்கினார். அவருடைய குடும்பத்தினர் எப்போதும் ஸ்டிராட் ஃபோர்டிலேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.

அவர் எழுதிய சிறந்த நாடகங்களில் எதனையும் அவர் வெளியிடாமலிருந்தது விசித்திரமாக இருக்கிறது. ஆனால், இந்நாடகங்களின் வாணிகப் பெருமதியை நன்கறிந்திருந்த, பழி பாவங்களுக்கு அஞ்சாத அச்சக உரிமையாளர்கள், இந்நாடகங்களில் பாதியைத் திருட்டுத்தனமாக அச்சிட்டனர். இந்தத் திருட்டுப் பதிப்புகளை பெரும்பாலும் திரித்துரைப்பனவாக இருந்தபோதிலும், சேக்ஸ்பியர் அவற்றில் தலையிட முயலவில்லை.

சேக்ஸ்பியர் தமது 48 வயதில் (1612) எழுதுவதிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார். ஸ்டிராட் ஃபோர்ட் திரும்பி வந்து மனைவி மக்களுடன் வாழலானார். அவர் அங்கு 1616 ஏப்ரல் மாதம் இறந்தார். அவர் தேவாலய முற்றத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவருடையதெனக் கருதப்படும் கல்லறையின் மேலுள்ள கல்லில் இவருடைய பெயர் பொறிக்கப்படவில்லை. ஆயினும், சிறிது காலத்திற்குப் பிறகு, அருகிலிருந்த சுவரில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது; தாம் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் ஒரு விருப்புறுதி ஆவணம் (Will) எழுதினார். அதில் அவர் தமது சொத்துக்களைத் தம் மூத்த மகள் சூசன்னாவுக்கு (Susanna) உடைமையாக்கியிருந்தார். சூசன்னாவும், அவளது சந்ததியினரும், அவர்களில் கடைக் குட்டி, 1670இல் இறக்கும் வரையில், புதிய மாளிகையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.

மேற்சொன்ன வாழ்க்கை வரலாற்றில் பெரும் பகுதி பழைய மரபாளர்களின் கற்பனை என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஸ்டிராட்ஃபோர்ட் இலக்கணப் பள்ளியில் எப்போதேனும் சேக்ஸ்பியர் ஒரு மாணவனாக இருந்ததற்கு உண்மையான சான்று எதுவுமில்லை. இந்தப் புகழ்பெற்ற நாடகாசிரியரின் வகுப்புத் தோழனாகவோ ஆசிரியராகவோ தாம் இருந்ததாக எந்த ஒரு மாணவனும் அல்லது ஆசிரியரும் கூறிக் கொண்டதில்லை. அதேபோன்று, அவர் எந்தச் சமயத்திலும், ஒரு நடிகராக இருந்ததற்கான தெளிவான சான்றுகளும் ஏதுமில்லை.

இருப்பினும் இந்த அதிகாரப் பூர்வமான வரலாறு முதல் நோக்கில் உண்மையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும், இதனை, நுணுகி ஆராயும்போது பல இடர்பாடுகள் எழுகின்றன.

முதலாவது சிக்கல், சேக்ஸ்பியரின் வாழ்க்கை பற்றி அற்ப அளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகும். அவரைப் போன்ற பெரும் புகழ்பெற்ற ஒரு மனிதரைப் பற்றி நாம் எதிர்பார்ப்பதைவிட மிகமிகக் குறைவான செய்திகளே கிடைத்துள்ளன. இந்த விந்தையான செய்திப் பற்றாக்குறைக்குக் காரணங்கூறும் சிலர், அவர் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்; எனவே, அவர் எழுதிய மற்றும் அவர் பற்றிய ஆவணங்களில் பெரும்பாலானவை அழிந்து போயிருக்கலாம், என்கின்றனர். ஆனால், இந்தக் கூற்று, சேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தைப் பற்றி நமக்குக் கிடைத்ததுள்ள ஏராளமான தகவல்களைக் குறைத்து மதிப்பிடுகிறது என்றே கூற வேண்டும்.

அவர் ஒரு பின்தங்கிய நாட்டிலோ, ஒரு காட்டுமிராண்டிக் காலத்திலோ வாழ்ந்திருக்கவில்லை. அவர் வாழ்ந்தது இங்கிலாந்தில்; அதுவும் எலிசபெத் அரசியின் ஆட்சிக் காலத்தில். அது, அச்சகங்கள் இருந்த காலம்; எழுது பொருள்கள் மிகப் பெருமளவில் கிடைத்து வந்த காலம்; ஏராளமானோர் எழுதப்படிக்கத் தெரிந்திருந்த காலம். அந்தக் காலத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மூல ஆவணங்கள் காலத்தை வென்று இன்றும் வாழ்கின்றனவே!

வில்லியம் சேக்ஸ்பியரிடம் கொண்ட பேரார்வம் காரணமாக ஒரு பெரிய அறிஞர்கள் படை, அந்தத் தகவல்களை அலசி ஆராய்வதில் மூன்று தலைமுறைக் காலம் செலவிட்டு, உலகின் மிகப் பெரும் இலக்கிய மேதை பற்றிச் செய்திகளைத் தேடியது. அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பலனாக, அவர் காலத்திய மற்றப் பெருங்கவிஞர்கள் குறித்த இலட்சக் கணக்கான சான்றுகளைக் கண்டுபிடித்தனர். வேறு பல சிறு கவிஞர்கள் பற்றிய செய்திகளையும் கண்டறிந்தனர். ஆனால், சேக்ஸ்பியர் பற்றி அவர்கள் கண்டுபிடித்ததெல்லாம் அவர் குறித்த 36 அற்பக் குறிப்புகள் மட்டுமே. இவற்றில் ஒன்றுகூட இவரை ஒரு கவிஞராக அல்லது ஒரு நாடகாசிரியராக குறிப்பிடவில்லை!

சேக்ஸ்பியரின் வாழ்க்கையைவிட ஃபிரான்சிஸ் பேக்கன், எலிசபெத் அரசி, பென் ஜான்சன், எட்மண்ட் ஸ்பென்சர் ஆகியோரின் வாழ்க்கை குறித்து மிக அதிகமான தகவல்கள் நமக்குத் தெரிய வந்துள்ளன. ஜான் லைலி (John Lyly) போன்ற ஒரு சிறிய கவிஞரைப் பற்றிக்கூட சேக்ஸ்பியரைவிட அதிகமான செய்திகள் கிடைத்திருக்கின்றன.

இங்கு, வரலாற்றின் முன்னணி அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் (Isaac Newton) குறித்துக் குறிப்பிட வேண்டும். நியூட்டனும் சேக்ஸ்பியரைப்போல், இங்கிலாந்தின் நகரிலிருந்து வந்தவர்தான். இவரைப் பற்றிய பல்லாயிரக் கணக்கான மூல ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. உண்மையைக் கூறின், நியூட்டன், சேக்ஸ்பியருக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர். அதே சமயம், சேக்ஸ்பியர் பிறந்த அதே ஆண்டில் பிறந்த கலீலியோ (Galileo), சேக்ஸ்பியருக்கு 89 ஆண்டுகளுக்கு முன் (1313) பிறந்த பொக்காக்சியோ (Boccaccio) ஆகியோரைப் பற்றிக் கூட சேக்ஸ்பியரைவிட மிகுதியான, விவரமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இந்தச் சிக்கலுடன் தொடர்புடைய இன்னொரு உண்மையும் உண்டு. அதாவது, இந்த நாடக மேதை லண்டனில் வாழ்ந்த காலத்தில், யாருக்கும் தெரியாமலேயே வாழ்ந்தார். சேக்ஸ்பியர் லண்டனில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் (1592-1612) வசித்தார் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்த 20 ஆண்டு காலத்தில், பெரிய நடிகரும், நாடகாசிரியருமான இவரை எவரும் நேரில் பார்த்ததற்கான சான்று ஒன்றுகூட இல்லை. புகழ்பெற்ற நடிகர் ரிச்சர்ட் பர்பாஜையோ (Richard Burbage), நாடகாசிரியர் பென் ஜான்சனையோ (Ben Johnson), பார்த்தவர் அல்லது சந்தித்தவர்கள், அதனை ஒரு பெருமைக்குரிய நிகழ்ச்சியாகக் குறித்து வைத்துள்ளனர். ஆனால், சேக்ஸ்பியர் லண்டனில் புகழ் பெற்று விளங்கிய 20 ஆண்டுகளில் எவரேனும் அவரை மேடையில் பார்த்திருந்தால், அல்லது அவரோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தால், அல்லது அவரோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தால், அல்லது அவரை ஒரு விருந்திலோ, வீதியிலோ சந்தித்திருந்தால், அதனை அவர்கள் பெருமைக்குரிய நிகழ்ச்சியாகக் குறிப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மேற்சொன்ன உண்மைகளுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் காரணம் இதுதான்: வில்லியம் சேக்ஸ்பியர் என்பது இந்த எழுத்தாளர் சூடிக் கொண்ட புனைபெயரேயாகும். தன்னுடைய அடையாளத்தை இரகசியமாக வைத்துக் கொள்வதற்கு அவர் இந்தப் புனைபெயரை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவே, இந்த எழுத்தாளரைச் சந்தித்தவர்கள், தாங்கள் தலைசிறந்த நாடகாசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரைச் சந்திக்கிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை. (புகழ் பெற்ற ஓர் எழுத்தாளர், அதிக நாட்கள் ஒரு புனை பெயருக்குள் வெற்றிகரமாக ஒளிந்திருக்க முடிந்திருக்காது).

இந்த அதிகாரபூர்வமான வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் இன்னும் அதிகமான இடர்ப்பாட்டை உண்டாக்குவது, சேக்ஸ்பியர் பற்றி ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்-ஆவோனில் நிலவிய மனப்பான்மையாகும். இங்கிலாந்தில் தலைசிறந்த நாடகாசிரியராகவும், மிகச் சிறந்த நடிகராகவும் சேக்ஸ்பியர் கருதப்பட்டு வந்தபோதிலும், அவரது சொந்த நகரில் எவரும், அவரை ஒரு புகழ் வாய்ந்தவராக அறிந்திருக்கவில்லை. அவரை வியப்புக்குரியவராக எவரும் மதிக்கவில்லை! அவர் ஸ்டிராட்ஃபோர்டிலிருந்து ஏழையாகச் சென்று ஒரு பெரும் பணக்காரராகத் திரும்பி வந்தபோதுங் கூட அவரை யாரும் கண்டு கொள்ளாதிருந்தது வியப்பளிக்கிறது. இந்தப் பெரும் மாற்றம், இயல்பாக உற்றார் உறவினரிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். எனினும், அவருடைய வாழ்நாளில், ஸ்டிராட்ஃபோர்டிலிருந்து அவருடைய நண்பர்களின் அல்லது அண்டை அயலாரில் ஒருவர்கூட, ஏன் அவரது குடும்பத்தினர்கூட, அவரை ஒரு நடிகராக, ஒரு நாடகாசிரியராக, ஒரு கவிஞராக அல்லது ஏதோவொரு இலக்கியவாதியாகவேனும் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.

சேக்ஸ்பியர் தம் கைப்பட எழுதிய நாடகங்களின் எழுத்துப்படிகள் பற்றி என்ன கூறுவது? அவர்தான் எழுத்தாளர் என்று மெய்ப்பிப்பதற்கு இவை தக்க சான்றுகள் தாம். ஆனால், தீவினைப் பயனாக, அவர் தம் கைப்பட எழுதிய நாடகங்களின் எழுத்துப்படிகள் எதுவும் கிடைக்கவில்லை. முன் வரைவுகள், வரைவுத் துணுக்குகள், வெளியிடப்படாத அல்லது முடிவு பெறாத படைப்புகள் கூட கிடைக்கவில்லை. உண்மையில், சட்ட ஆவணங்களில் காணப்படும் ஆறு கையொப்பங்களைத் தவிர்த்து, அவர் கைப்பட எழுதிய வேறு எதுவும் கிடைக்கவில்லை. குறிப்புகள், குறிப்பேடுகள், விண்ணப்பங்கள், நாட்குறிப்புகள் எதுவுமே இல்லை. அவர் எழுதிய நேர்முகக் கடிதம் ஒன்றுகூட இல்லை. வாணிகமுறைக் கடிதம் எதுவுமில்லை. (இவர் தம் கைப்பட எழுதிய எழுத்து ஒரு வரியையாவது தாங்கள் பார்த்ததாக இவர் வரலாற்றை முதலில் எழுதிய எழுத்தாளர்களில் ஒருவர்கூடக் குறிப்பிடவில்லை). சான்றுகளிலிருந்து கணிக்கும்போது, சேக்ஸ்பியர் ஓர் எழுத்தாளராக இருந்ததில்லை என்பது மட்டுமின்றி, அவர் மிகக் குறைந்த கல்வியறியுடையவராக அல்லது அறவே எழுத்தறிவற்றவராகக்கூட இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சேக்ஸ்பியரின் பெற்றோர், மன€வி, குழந்தைகள் அனைவருமே எழுத்தறிவற்றவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதன் தன் பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண் படிக்கத் தெரிந்தவள் என்பதற்காக மட்டுமே அவளை ஒருவன் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால், எழுத்துலக மேதை எனப் போற்றப்பட்ட ஒருவர், தம் சொந்தப் புதல்வியை எழுதப் படிக்கத் கற்பிக்காமல் வளர்த்தார் என்பதை சிறிதும் நம்ப முடியவில்லை. சேக்ஸ்பியர், சேக்ஸ்பியராக இருந்திருந்தால், வரலாற்றில் தம் குழந்தைகளை எழுத்தறிவற்றவராக வளர்த்த உலகப் புகழ்பெற்ற ஒரே எழுத்தாளர் அவராகத்தான் இருப்பார்!

இங்கு சேக்ஸ்பியரின் விருப்புறுதி ஆவணம் (Will) பற்றிய சிக்கல் எழுகிறது. இந்த மூல ஆவணம் இன்றும் உயிர் வாழ்கிறது. இது மூன்று பக்கங்கள் நீளமுடையது. இதில் அவரது சொத்துக்கள் விவரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தச் சொத்துகளில் பல குறித்த நபர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் எந்த இடத்திலும் அவரது கவிதைகள், நாடகங்கள், எழுத்துப்படிகள், எழுதப்பட்டு வரும் நூல்கள், இலக்கிய உரிமைகள் எதனைப் பற்றியும் குறிப்பிடவில்லை. அவரது சொந்த நூல்கள் அல்லது ஆய்வுரைகள் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. அவரது நாடகங்களில் குறைந்தது 20 நாடகங்கள் அப்போது அச்சிடாமலிருந்த போதிலும் வெளியாகாமலிருக்கும் அவரது நாடகங்களை வெளியிடுவது குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லை. அவர் தம் வாழ்நாளில், ஒரு கவிதையை அல்லது நாடகத்தை எழுதியதற்கான குறிப்பு எதுவுமில்லை. பள்ளிக்குச் சென்றிராத, எழுத்தறிவற்ற ஒரு வணிகர் எழுதிய ஒரு விருப்புறுதி ஆவணமாகவே அது அமைந்துள்ளது.

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஒருவர் இறந்தால் அவருக்கு ஆடம்பரமான ஈமச் சடங்குகளை நடத்துவதும், கவிஞர்கள் நீண்ட கவிதைகள் இயற்றிப் புகழஞ்சலி செலுத்துவதும், பெரு வழக்கமாக இருந்து வந்த ஒரு காலத்தில், 1616 இல் சேக்ஸ்பியர் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தாமல் அறவே விட்டுவிட்டது வியப்புக்குரியது. பிற்காலத்தில் வில்லியம் சேக்ஸ்பியரை வியந்து போற்றுபவராகவும் அவருடைய நெருங்கிய நண்பராகவும் விளங்கிய தன்னைக் கூறிக்கொண்ட பென் ஜான்சன்கூட, சேக்ஸ்பியர் இறந்தபோது சிறிதும் இரங்கல் தெரிவிக்கவில்லை; அவர் மரணம் குறித்து குறிப்பிடவுமில்லை. ஸ்டிராட்ஃபோர்ட் மனிதருக்கும் புகழ் பெற்ற நாடகாசிரியருக்குமிடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மற்றக் கவிஞர்களும் வாளா இருந்தனர் போலும்.

மேற்சொன்ன வாதங்களே முடிவான சான்றுகள் என்று நான் கருதுகிறேன். சேக்ஸ்பியர் நாடகாசிரியர் அன்று என்பதற்கும், வில்லியம் சேக்ஸ்பியர் என்னும் பெயர் உண்மையான எழுத்தாளரை மறைப்பதற்குப் பயன்படுத்தப் பட்ட புனைபெயர் என்பதற்கும் இதற்குமேல் சான்றுகள் தேவையில்லை. எனினும், சேக்ஸ்பியர் எழுத்தாளர்தான் என்பதற்கு எதிரான வலுவான கூடுதல் வாதங்களும் உள்ளன.

எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நாடகாசிரியர்களும், நாவலாசிரியர்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளைத் தங்கள் படைப்புகளில் சேர்த்திருப்பார்கள். (பல சமயங்களில், இந்நிகழ்ச்சிகள் கதையின் முக்கியப் பகுதியாகவும் அமைந்திருக்கும்). ஆனால், சேக்ஸ்பியரின் நாடகங்களில், அவருடைய சொந்த அனுபவங்கள் எனக் கருதத்தக்க நிகழ்ச்சிகள் அல்லது சூழ்நிலைகள் எதுவும் காணப்படவில்லை.

இன்னொரு வாதமும் உண்டு. எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் நன்கு கற்றறிந்த மேதையாகத் தோன்றுகிறார். அவருடைய சொல்லாட்சித் திறன் இதற்குச் சாந்று; வேறெந்த நாடகாசிரியரையும்விட, மிக அதிகமான சொற்களை அவர் கையாண்டிருக்கிறார்; ஃபிரெஞ்சு, லத்தீன் இருமொழிகளிலுங்கூட அவர் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார்; சட்டச் சொற்களை மிகத் துல்லியமாகக் கையாண்டிருக்கிறார்; பண்டைய இலக்கியங்களில் அவர் நுண்மாண் நுழைபுலம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கிறார்; ஆயினும், அவர் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்ததில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். முன் கூறியது போல், அவர் இலக்கணப் பள்ளியில் படித்தாரா என்பதுகூட ஐயத்திற்கிடமாகவே உள்ளது.

மற்றொரு செய்தியும் உள்ளது. எழுத்தாளர் சேக்ஸ்பியர் மேட்டுக்குடி (Aristocratic) ஆதரவாளராகவும், உயர் குடிப் பின்னணியுடையவராகவும் தோன்றுகிறது. நரி வேட்டை, வல்லூறு வளர்ப்பு (Falconry) போன்ற உயர் குடியினர் விளையாட்டுகளில் நல்ல தேர்ச்சி இருந்தது. அரசவை வாழ்க்கையையும் அரசவை சூழ்ச்சிகளையும் அவர் நன்கறிந்திருந்தார். இதற்கு மாறாக, இந்த சேக்ஸ்பியர் ஒரு சிறிய நகரிலிருந்து வந்தவர்; ஒரு நடுத்தர வர்க்கப் பின்னணியைக் கொண்டிருந்தவர்.

இந்த சேக்ஸ்பியரின் வாழ்க்கை பற்றிய இன்னும் ஏராளமான அம்சங்களும் உண்டு. இவை, புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் இவர்தான் என்ற கருதுகோளுக்கும் பொருந்துவனவாக இல்லை. இந்தக் கருதுகோளை ஏற்றுக் கொள்வதற்குத் தடங்கலாக உள்ள இன்னும் எத்தனையோ இடர்ப்பாடுகள் குறித்து எழுதுவதற்கு என்னிடம் நிறையச் சான்றுகள் உள்ளன. (இது பற்றி இன்னும் அதிகமான விவரங்கள் அறிய விரும்பும் வாசர்கள் சார்ல்டன் ஆக்பர்ன் (Charlton Ogburn) எழுதிய மர்மான வில்லியம் சேக்ஸ்பியர் (Mysterious William Shakespeare) என்ற அரிய நூலைப் பார்க்க). இந்த இடர்ப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் மரபுமுறை வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள். கருதுகோள் விளக்கங்களில் சில ஏற்றுக் கொள்ள முடியாதவை; ஆனால், ஒவ்வொன்றையும் தனித் தனியே ஆராய்ந்தால் அது உண்மை என்றே சொல்லத் தோன்றும்.

எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற மனிதர்களிடமிருந்து வரும் கடிதங்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பது பொதுவாக மக்களின் மனப்போக்காக இருந்து வந்தபோதிலும், சேக்ஸ்பியர் எழுதிய நேர்முக அல்லது வாணிகக் கடிதம் ஒவ்வொன்றும் அவருடைய குறிப்புகள், குறிப்பேடுகள், எழுத்துப்படிகள் ஆகியவற்றுடன் அடியோடு மறைந்து போயின என்பதை ஏற்றுக் கொள்வோம். இந்தத் தலைசிறந்த ஆங்கிலக் கவிஞர், தமது கல்லறையில் காணப்படும் சிறுபிள்ளைத்தனமான நையாண்டிப் பாடல் வரிகளைத் தமது கல்லறை வாசகமாக எழுதினார் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். தமது நாடகங்களில், அறிவார்ந்த, கற்றறிந்த பெண்மணிகளைப் போற்றிச் சித்தரித்த ஒருவர், தம் புதல்வியரை எழுத்தறிவின்றி வளர்த்தார் என்பதையும் ஒப்புக் கொள்வோம். இங்கிலாந்தில் மிகவும் போற்றப்பட்ட எழுத்தாளராக சேக்ஸ்பியர் விளங்கியபோதிலும், ஸ்டிராட் ஃபோர்டிலிருந்த அவருடைய நண்பர்களில், குடும்பத்தினரில், அண்டை அயலாரில் ஒருவர் கூட அவரை ஒரு நடிகராகவோ, கவிஞராகவோ, நாடகாசிரியராகவோ குறிப்பிடவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்வோம். இவை நடந்திருக்க இயலாது; இருந்தாலும் நடந்ததாகக் கொள்வோம்!

எனினும், இந்த நேர்விலுங்கூட, பெரும்பாலான நேர்வுகளில் போலவே, ஒரு முழுமை, அதன் எந்தவொரு பகுதியையும் விட, பெரிது என்பதே எண்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் ஓரிரு இடர்ப்பாடுகள் மட்டுமே இருந்தால்கூட, அவற்றுக்காக வலிந்து கூறப்படும் விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த விளக்கங்களில் ஒன்றுகூட அதிகாரபூர்வ வரலாற்றுக்கு இயல்பாகப் பொருந்தவில்லை என்னும் போது, நாம் எதுவும் செய்வதற்கில்லை. இந்தக் கதையில் கண்டுள்ள ஒவ்வொரு செய்திக்கும் வலிந்து கூறும் விரிவான விளக்கங்கள் தேவைப்படுகின்றன. இதற்குக் காரணம் இதுதான். ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்-ஆவோனைச் சேர்ந்த வில்லியம் சேக்ஸ்பியர், ஒரு சிறிய நகரைச் சேர்ந்த ஒரு வணிகர்; மிகக் குறைந்த அளவே கல்வியறிவுடையவர். அவருடைய கல்வி, அவரைப் பற்றி அவர் குடும்பத்தினரும் அண்டை அயலாரும் கூறியவை. இவற்றில் எதுவும், அவர் புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் என்பதற்குப் பொருத்தமுடையனவாக இல்லை.

சரி, நாடகங்களை இயற்றிய எழுத்தாளர், சேக்ஸ்பியர் இல்லையென்றால், அவர் யார்? வேறு பலரின் பெயர்கள் கூறப்படுகின்றன. இவர்களில் குறிப்பிடத் தக்கவர் புகழ்பெற்ற தத்துவ அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) ஆவார். ஆனால், அண்மை ஆண்டுகளில், அவர் எட்வர்ட்-டி-வேர் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

எட்வர்ட்-டி-வேர் பற்றி நிறையச் செய்திகள் உள்ளன. அவர் தம் வாழ்வில் பல வீர சாகசங்களைப் புரிந்துள்ளார். அவருடைய வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள், நாடகங்களில் இடம் பெற்றுள்ளன. அவர் 1550இல் பிறந்தவர். 16ஆவது ஆக்ஸ்போர்ட் கோமகனின் (16th Earl of Oxford) மைந்தன்; செல்வம் கொழிக்கும் உயர் குடியைச் சேர்ந்தவர். நார்மானியர் வெற்றி பெற்ற (Norman Conquest) காலத்திலிருந்து இவருடைய குடும்பத்திற்குக் கோமகன் பட்டம் வழங்கப்பட்டு வந்தது. அந்தப் பட்டத்திற்குரிய வாரிசாக விளங்கிய இளம் எட்வர்ட், ஓர் இளம் கோமகனுக்குரிய தேர்ச்சித் திறன்கள் அனைத்திலும் பயிற்சி பெற்றார். குதிரையேற்றம், வேட்டையாடுதல், இராணுவக் கலை, இசை, நடனம் எல்லாம் முறையாக கற்றுத் தேர்ந்தார். உயர்கல்வியும் கற்றார். தனி ஆசிரியர்களிடம் ஃபிரெஞ்சு, லத்தீன் மொழிகளும் மற்றப் பாடங்களும் பயின்றார். இறுதியில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் (Bachelor"s Degree) ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் (Master"s Degree) பெற்றார். லண்டனிலுள்ள புகழ்பெற்ற வழக்கு.

இளையராஜாவா ,ஏஆர்ரஹ்மானா யார் பெரியவர்??

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் கொடுத்தாலும் கொடுத்தார்கள். குசும்பன் வருத்தப்பட்ட மாதிரியே ஆளாளுக்குத் தொடங்கிட்டாங்கப்பா. ஒரு ஆங்கிலப் படத்துக்கு இசை அமைச்சதால, அதை அமெரிக்காக்காரனுங்க விரும்புனதால 'ஆஸ்கார்' கொடுத்தாங்க ஏ.ஆர் ரஹ்மானுக்கு. நம்மாளுல்ல ஒருத்தர் வாங்கினார்ன்னு மகிழ்ச்சியா இருக்குறதை விட்டுட்டு..'அவரை விட இஅவரு உசத்தியா?'ன்னு கிளம்புனா என்னய்யா செய்ய முடியும்?

கர்நாடக் இசையை ரசிக்குறவங்க ஒருபக்கம்
நாட்டுப்புற இசையை ரசிக்குறவங்க வேற பக்கம்.
இதுல எது உசத்தின்னு யாரு தீர்மானிக்குறது?

எழுதுற வலைப்பதிவுலேயே எது நல்லதுன்னு இன்னமும் தமிழ்மணத்தால தீர்மானிக்க முடியாம நிலுவையில கெடக்கு :-))
அப்படியிருக்க இசையை எப்படி இதுதான் சரின்னு தீர்மானிக்க முடியும்.

அதனால, எது உங்களுக்கு பிடிச்சிருக்கோஅதை மனசைத் திறந்து ரசிங்க.சரி. இனி தலைப்புக்கு வருவோம்.
இளையராஜா 1943 ல பிறந்தவராம்.ஏ.ஆர்.ரஹ்மானோ 1967 இல் பிறந்தவர்
சந்தேகமேயில்லாமல் இளையராஜாதானே (வயசில்) பெரியவர்????!!!!!.

கணவன் -மனைவி …யார் பெரியவர் ?

ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். “ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார்; சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும்… ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம்…” என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார். அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போனாள். ஆனாலும்,

ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் “எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க! ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க… காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள்… அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு…
ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான் செஞ்சிப் பாருங்களேன்…” என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட, அவளது கணவனோ, “சரி அப்படியே செய்வோம்… இன்று நீ என் அலுவலகத்துக்கு போ… நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று போட்டிக்கு தயாரானான். அவன் மனைவியோ “ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களால முடியாது…” என்று சொல்லிப் பார்த்தாள்.
ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க, “சரி, நான் என்ன செய்ய முடியும்?” என்றவாறே வீட்டையும், பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள்.

அங்கே போய்ப் பார்த்தால் அலுவலகம் ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடந்தது. முதலாளியின் மனைவி என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவளே கூட்டிப் பெருக்கி அனைத்தையும் சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ… என்ற கவலை வேறு வந்து வந்து போனது.
ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணிபுரிபவரின், மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள். முறுக்கு அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் என அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள். வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான்.
இவளைப் பார்த்ததும் “பிள்ளையா பெத்து வச்சிருக்கே… அத்தனையும் குரங்குங்க… எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது… படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க… சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க… அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே…” என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாய…அவளோ “அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா…” என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள்.

விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே “ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே…?” என்று அவள் அலற… “அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்?” என அவளது கணவனும் அதிர்ச்சியுற அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்கிறார்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல.

ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும்; பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்; ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது.
அது போலவே, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது. இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் எதையும் சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான். உயர்வு-தாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான்.

நான் ரசித்த ஹாலிவுட்(பழைய) படம் !!!

ஓர் அனிமேஷன் படம். அடடா......ஒரே ஒரு வினாடி கூட கண்களை திரையில் இருந்து அகற்றவே முடியவில்லை. படப்பெயர் 'RATATOUILLE' 

என்ன அற்புதமான உழைப்பு ? ஒரு புத்திசாலி மூஞ்சூறு எலி, தன்னுடைய அதிசிறந்த மோப்பத் திறமையால் எலிகள் கூட்டத்தின் மத்தியில் பெரும் புகழ் பெறுகிறது. ஆனால், அந்த எலிக்கு தன்னுடைய கூட்டம் பரம்பரை பரம்பரையாக மனிதனிடம் திருடியே பிழைப்பு நடத்துகிறதே என்ற ஒரு வருத்தமுண்டு. எனவே உழைத்துச் சாப்பிட வேண்டும் என ஓர் ஆவல் அதன் மனதில் உருவாகிறது.

இருந்தாலும் வயிறு இருக்கிறதே......எனவே வழக்கமாய்த் திருடும் வீட்டுக்குச் செல்கிறது. டிவியில் வரும் ஒரு சமையல் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டே உணவுகளைத் திருடித் தின்கிறது. அந்த சமையல் நிகழ்ச்சியில் வரும்'Mr.குட்ஸ்வ்' எனும் சமையல் கலைஞரின் பேச்சில் மயங்குகிறது. அவர் சொல்கிறார், 'எவர் வேண்டுமானாலும் சுவையாகச் சமைக்கலாம்' , இதுபோக அருகில் அவருடைய சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பார்க்கிறது.

தினமும் சரியாய் அவர் நிகழ்ச்சி டிவியில் வரும் பார்த்து அந்த வீடு செல்கிறது. அவருடைய பல டிப்ஸ்களை உள்வாங்குகிறது. அந்த புத்தகத்தைப் படித்தும் (!) எப்படி சுவையாக, அனுபவித்துச் சாப்பிடுவது என்பது போன்ற நாகரீகங்களைக் கற்றுக் கொள்கிறது. அழுகிய பண்டங்களைத் குப்பையில் தேடித் தின்னும் தன் அண்ணனுக்கு, சீஸ் தடவிய காளானை சூட்டில் வேகவைத்து தின்னக் கொடுக்கிறது. அவுதி அவுதி என்று சாப்பிடாமல், ஆற, அமர ருசித்துச் சாப்பிட கற்றுக்கொடுத்து அந்த நாளை பொன்னாளாக்குகிறது.

அழகாகச் செல்லும் அந்த எலியின் வாழ்வில் வந்து விழுகிறது இடி. 'ஒரு பிரபல விமர்சகர் தம் உணவைப் பற்றி குறை சொல்லி நாளிதழில் கட்டூரை எழுதிவிட்டாரே' என்று அந்த சமையல் கலைஞர், நெஞ்சு வெடித்து இறந்து போகிறார் என செய்தி வருகிறது டிவியில். பட்ட காலிலேயே படும் என்பது போல இது திருடித் தின்னுவதை அந்த வீட்டு கிழவியும் பார்த்து விடுகிறாள். இனி இந்த வீடு வரமுடியாது என யூகித்த அந்த எலி, 'குட்ஸ்வ்வின்' புத்தகத்தை தலையில் தூக்கிக் கொண்டு ஓடுகிறது.

கிழவியோ விடாமல் அந்த மொத்த எலிக் கும்பலையே துரத்துகிறாள். இந்தக் கசமுசாவில் நம்ம எலி தம் குடும்பத்தை விட்டு பிரிகிறது. பொங்கி ஓடும் ஓர் ஆறில், அதன் போக்கில் அடித்துச் செல்லப்படுகிறது. கண்விழித்துப் பார்த்தால் அது பாரீஸ் நகரம், நம்ம குட்ஸ்வ்வின் ரெஸ்டாரன்ட் வாசல். நம்ம எலியாருக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போலக் குஷியாகிறார். அந்நேரம் பார்த்து 'குடியின்' ஆவி அங்கு பிரசன்னமாகிறது (உண்மையில் நம்ம எலியின் மனசாட்சி) தான் திடீரென இறந்துபோனதால் வாரிசில்லாத தம்முடைய ரெஸ்டாரென்ட் பாழ்படுகிறதே என ஆவி வருந்துகிறது, 'நீதான் என் சிஷ்யன் ஆயிற்றே, என் பெயரைக் காப்பாற்று' என்று கோரிக்கை வைக்கிறது (இதுவும் நம்ம எலியாரின் கற்பனையே)

அந்த நேரம் பார்த்து அந்த ஹோட்டலின் ஒரு துப்புரவுத் தொழிலாளி,கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு சூப்பில் தன்னுடைய கனவான 'சமையல் கலைஞன்' ஆசையை நிறைவேற்றிக் கொள்ள யாரும் அறியா வண்ணம் ஏதேதோ மசாலாப் பொடிகளைக் கொட்டுகிறான். இதைக் காணும் நம்ம எலியாரும், ஆவியாரும் பதறுகிறார்கள். ஏனென்றால் அவையெல்லாம் தப்பான பார்முலா.

இதுதான் சரியான சமயம், அவனுக்கு உதவி உன் திறமையைக் காட்டு என்று'குட்ஸ்வ்' ஆவி சொல்கிறது. இடையில் அந்த சூப்பைச் சுவைக்கும் அந்தப்பையன் உடனடியாக வாந்தி எடுக்கிறான். அவ்வளவு கேவலச்சுவையாம். துடப்பத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போகிறான். நம்மாளு களத்தில் குதித்து தாம் கேட்ட, படித்த உத்திகளைப் பயன்படுத்தி,சேர்க்க வேண்டிய மசாலா, புதினா, பனீர், சீஸ்களைச் சேர்த்து ஒரு புதிய சூப்பை அறிமுகப்படுத்தி, சுவையைக் கூட்டி வைத்துவிடுகிறது.

ஓடிப்போனவன் மனசு கேட்காமல், மீண்டும் தான் கெடுத்த சூப்பை பார்க்க ஹோட்டல் கிச்சனுக்குள் நுழைகிறான். அங்கு எலி சூப் பானை மேல் நின்று சமையல் செய்வதை கண்டுபிடித்து அதிர்ச்சியுறும் வேளையில், வில்லன் அதாவது அந்த ஹோட்டலின் தற்காலிக மேலதிகாரி, அல்லது தலைமை சமையல்காரர் உள்ளே வருகிறார். 'கிளின் பண்றவனுக்கு சமயக்கட்டுல என்னவே வேல' ? சூப் பான கிட்ட நின்னு என்ன பண்ணுற ?' என்று எகிறுகிறார். அவன் தான் செய்த குளறுபடியைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த சூப்பை கஸ்டமர்களுக்கு சர்வ் செய்து விடுகிறார்கள்.

'செத்தான்டா குட்ஸ்வ்' என அனைவரும் தலையில் கைவைத்து உட்கார, 'சூப் பிரமாதம்' என ஆர்டர் மேல் ஆர்டராக வந்து குவிகிறது. அதன் பிறகே சமையல்கட்டில் பிறரும் அந்த சூப்பைச் சுவைக்கின்றனர். செத்துப்போன குட்ஸ்வ் பண்ணும் சூப்பை விடவும் சுவையாக உள்ளதே என வியக்கின்றனர்.
தலைவருக்கு மட்டும் நம்பிக்கை வரவில்லை. பையன் ஏதோ தில்லுமுல்லு செய்கிறான் என நம்புகிறார். 'நீ நாளை, என் முன்னே தனியாக இதை செய்து காட்டு' எனக் கட்டளை இடுகிறார். அவருக்கு ஒரு பயம், இவன் குட்ஸ்வ்வின் வாரிசாக இருப்பானோ என்று. ஏனெனில் குட்ஸ்வ்வின் திடீர் மரணத்தால் எப்போதோ தொலைந்துப் போன அவர் வாரிசு குறிப்பிட்ட காலத்துக்குள் வராவிட்டால், இந்த ஹோட்டல் அந்த வில்லருக்குச் சொந்தமாகிவிடும். இது உயில் சாசன அறிவிப்பு. 


ஆனால், அது நடந்துவிடுகிறது.... எது ? எலி எல்லோர் முன்னாலும் சொடேர் என்று தரையில் விழுகிறது. அலறுகிறார்கள். ஏன் ? பாரிஸ் உணவகத்தில் எலியைக் கண்டதாக புகார் செய்தாலே போதும், அங்கு உணவகத்தை சீல் வைத்து விடுவார்கள். ஆனால், அந்தப் பையன் சாதுர்யமாக அந்த எலியைப் பிடித்து விடுகிறான். அதை வெளியே எடுத்துச் சென்று கொல்லுமாறு வில்லர் கட்டளை இடுகிறார்.

எலியைக் கொல்ல எடுத்துச் செல்லும் அந்தப் பணியாள் பையன், அந்த எலியின் சாமர்த்தியத்தால்தான் தான் பிழைத்ததாக, நம்பாமல் ஆனால் நம்புகிறான். அதனிடமே வேறு பேசுகிறான். அவன் பேசுவதைப் புரிந்த அது தலை வேறு ஆட்டுகிறது. அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, ‘என்ன நான் பேசுவது உனக்குப் புரிகிறதா ?’ பிறகு அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. மறுநாள் நம் வில்லர் முன்னால் செய்யப்போகும் சூப்புக்கு எலியார் நம்ம பையனுக்கு உதவுவதாய் வாக்கு கொடுக்கிறார்.

எலி, அவன் தொப்பிக்குள் ஒளிந்துக் கொண்டு, அவன் தலை முடியை பிடித்துக் கொண்டு, மோப்பசக்தி திறனுடன், அவனை இயக்குவதன் மூலம் அவன் சரியான கலவைகளைத் தேர்ந்தெடுத்து, இம்முறையும் வெற்றிகரமாக சூப் செய்து விடுகிறான். வில்லனுக்கு பெருத்த ஏமாற்றம், இதில் ஏதோ சதியுள்ளது என உணர்கிறார், ஆனால் யார் அந்த சதிக்கு உடந்தை என்பது தெரியவில்லை. கிச்சனில் அவனுக்கு சமையல் மாஸ்டராய் பதவி உயர்வு கிட்டுகிறது. அவனுக்கு பயிற்சிகள் கொடுக்க அந்த ஹோட்டலின் பிரபல் சமையல் பெண் மாஸ்டர் நியமிக்கப் படுகிறார். அந்தம்மா ரொம்போ ஸ்ட்ரிக்ட். வழிய எல்லாம் கூடாது. சுத்தமாகவும், பெர்பெக்ட் ஆகவும் இருக்க வேண்டும்.

இவன்தான் ஒரு வெத்துவேட்டாயிற்றே, ஒருகட்டத்தில் அந்தப் பெண் வெறுத்தேப் போகிறாள். இருந்தும் மறைவாய் இருந்து எலி செய்யும் உதவிகளால் சிறிது சிறிதாக அவள் மனத்தைக் கவர்கிறான். திடீரென கொள்ளைக் கூட்ட பாஸ் போல ஒருவரைக் காட்டுகிறார்கள். அவர், உதவியாளரிடம், “அதெப்படி இன்னும் இந்த குட்ஸ்வ் ரெஸ்டாரென்ட் விளம்பம் வருகிறது ? இன்னுமா அந்த ஹோட்டலுக்கு மக்கள் சாப்பிட வருகிறார்கள் ? நான் விமர்சித்து எழுதி கிழித்து தோரணம் கட்டிய பின் ஒரு நிறுவனம் இதுபோல் எழுந்ததே இல்லையே, என்ன கோல்மால் ?” என்று வினவுகிறார். பணியாள் ஒருவனின் மாயஜால ருசி அந்த ஹோட்டலின் புகழைக் கூட்டி விட்டதைச் சொல்கிறார் உதவியாளர். ‘வைக்கிறேண்டா ஒனக்கு டெஸ்ட்டு’ என்று களத்தில் குதிக்கிறார் அந்த விமர்சக எழுத்தாளர். இவர்தான் முன்பு கட்டூரை எழுதி, குட்ஸ்வ் சாவுக்குக் காரணமானவர்.

இப்போது அந்த எலி சுதந்திரமாக வாழுகிறது. பணியாள் பையனிடம் (இனி ஹீரோ) மறைமுக உதவியாளர் அல்லது ஆலோசகர் பதவியில் இருப்பதால் அவனுடைய வீட்டில் மற்றும் யாருமறியா வண்ணம் ஹோட்டலில் சொகுசு வாழ்க்கை கிட்டுகிறது. இது உழைப்பால் வரும் பலன் என்பதில் அந்த எலிக்கு பூரணத் திருப்தி. தன்னுடைய இனத்தின் பழிக் கறையை தாம் அழித்துவிட்டதாக பெருமிதம் கொள்கிறது. அதற்க்கும் வருகிறது ஆப்பு.

தற்செயலாக நம்ம எலியாரின் அண்ணன் பாரிஸ் நகர குப்பைத் தொட்டியில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்துவிடுகிறது. பிரிந்த அண்ணனைச் சந்தித்த சந்தோஷத்தில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தோடுகிறது. எப்போதும் போலவே தம் அண்ணன் குப்பைத் தொட்டி பொறுக்குகிறானே எனக் கடிந்து அண்ணனுக்கு சுவை மிகுந்த பலகாரங்களை ஹோட்டலில் இருந்து எடுத்துக் கொடுக்கிறது. பிரசன்னமாகும் ‘குட்ஸ்வ் ஆவி’ 'என்ன மீண்டும் திருடுகிறாய் ? நீ திருடினால் இனி நான் வரமாட்டேன்' எனப் பயம்காட்டுகிறது. எலியார்'ஒருமுறைதானே'......என்று அந்த ஆவியிடம் (மனசாட்சி) சமாளிக்கிறது.

பிறகு, அண்ணன்காரன் தம் தம்பியை பிரிந்த குடும்பத்தாரிடம் அழைத்துச் செல்கிறது. ‘ஹே, மூளக்காரன் திரும்ப வந்துட்டான்’ என்று அந்தக் கும்பல் உற்சாகமாகிறது. தந்தை தம்முடனேயே தங்கிவிடுமாறு பையனைக் கேட்கிறது. தாம் திருடி வாழ விரும்பவில்லை என்றும் ஒரு நல்ல வேலையில் இருப்பதாகவும், சம்பாதாதித்துதான் இனி வாழப் போவதாகவும்கூறிவிடுகிறது. நம்மை விதம்விதமாய்க் கொன்று குவிக்க தொடர்ந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் மனிதப் பதர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், அவர்களை முழுதாய் நம்பிவிட வேண்டாமென்றும் தந்தையார் எலி மகனுக்கு அறிவுரை கூறுகிறது. அதை புறக்கணித்து எலியார் மீண்டும் வேலைக்குத் திரும்புகிறார்.

சில காலங்களுக்குப் பின், எலி தம்மை முழுமையாக ஆள்கிறதே என்று பல சுவைகளுக்குப் பிரபலமான நம் ஹீரோவுக்கு சலிப்பு வருகிறது. இருக்காதே பின்னே ? சமையலில் உதவ பிரபலமான காதலி வேறு வந்துவிட்டாள். பழையதை அல்லது நன்றியை மறப்பதுதானே மனிதப் பயலுவள் காலம்காலமாய் செய்து வருவது ? இங்கும் அவ்வாறே சிற்சில பூசல்கள், மனக்கசப்புகள். நம்ம தலைமை சமையல் வில்லரை மறந்தேப் போனோம், சரியாய் இப்போது உள்ளே வருகிறார். எலியுடன் ஹீரோ பேசுவதை பார்த்துவிடுகிறார். ஆஹா, எல்லாவற்றுக்கும் காரணம் இந்த எலியா ? நம்ம கனவில் மண் போட்டது இந்த மூஞ்சூரா ? இது இல்லையென்றால் இவன் செல்லாக்காசா ? என்று பல உண்மைகளை கிரகிக்கிறார்.
நம்ம விமர்சக எழுத்தாளர் வில்லரும் வந்து, எனக்கு பிடித்தமான ஒரு புது டிஷ்ஷை செய்துக் காட்டி உன் சாமர்த்தியத்தை நிருபி என 'குட்ஸ்வ் ரெஸ்டாரென்ட்' வந்து நிற்கிறார். இந்தக் களேபரத்தில் குட்ஸ்வ்வின் குடும்ப வக்கீல் DNA டெஸ்ட்டில் நம்ம ஹீரோதான் குட்ஸ்வ்வின் காணாமல் போன வாரிசு என கண்டறிந்து ஹோட்டல் நிர்வாகி அதான் நம்ம சமையல் வில்லரிடம் உயிலைக் கொடுக்கிறார். இதை மறைத்து வைக்கும் வில்லர், ஒருவேளை, விமர்சகரின் டெஸ்டில் இவன் தோற்று விட்டால், ஹீரோவை வெளியேற்றி விட்டு, குட்ஸ்வ்வின் சொத்துக்களை முழுதாக ஆட்டையை போட்டுவிடலாம் என்று சதி புரிகிறார்.
எலியாரின் அண்ணன்காரனுக்கு ஹோட்டல் பண்டத்தைக் கொடுத்து ருசி காட்டிவிட்டாரல்லவா நம்ம ஆளு, அந்த லகுடபாண்டி அதை தன் நபர்களுக்கும், உறவினர்களுக்கும் பெருமையாய்ச் சொல்லித் தொலைக்க, தமக்கும் அதுபோல ‘உன் தம்பியை கொடுக்கச் சொல்லு’ என்று ஒரு பெரிய எலிக்கும்பல் ஹோட்டல் வாசலின் ரகசியமான இடத்திற்கு வந்து நின்றுக் கொண்டு கோரிக்கை விடுக்கின்றன. தலையில் அடித்துக் கொள்ளும் நம்மாளு ‘இதென்ன அசிங்கம்’ என்று அண்ணனைக் கடிந்துக் கொள்கிறது. ‘நான் வாக்குக் கொடுத்திட்டேம்பா’ என்று நாயக்கர் போல அண்ணன் சொல்ல, வேறு வழியின்றி மீண்டும் ஹோட்டல் பண்டங்களை எடுக்கிறது. இம்முறை தோன்றும் ஆவி 'உங்கள் இனத்தை திருத்தவே முடியாது என்று இழிவு படுத்திவிட்டு, இனி எப்போதும் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கூறிவிட்டு மறைந்து விடுகிறது.

என்ன கொடுமை என்றால் ஒவ்வொரு எலியும் இந்த ஹோட்டல் ருசியில் மயங்கி தினமும் ஒரு கூட்டத்தைத் கூட்டிக்கொண்டு வந்து வாசலில் நிற்பது வழக்கமாகிப் போனது. இது ஒருநாள் நம்ம ஹீரோவுக்கும் தெரியவருகிறது. அசிங்கப்படுத்தி நம்மாளை வெளியேற்றிவிடுகிறான் அந்த நன்றி கெட்ட ஹீரோ. வெந்து, நொந்து வெளியேறிய சமயம் பார்த்து குட்டி வில்லர், அந்த எலியை பொறி வைத்து பிடித்து விடுகிறார்.

பெரிய வில்லர் குறித்த நாள் வருகிறது. இன்று ஒரு வித்தியாசமான டிஷ்ஷை ஹீரோ செய்து காட்ட வேண்டும். அதை ருசி பார்த்துவிட்டு அவர் எழுதும் கட்டுரையை வாசிக்க பல லட்சம் மக்கள் காத்திருக்கிறார்கள். தவறாக அவர் எழுதிவிட்டால் போச்சு, அது லீ மெரிடியன் ஆனாலும் சரி, பார்க் ஷரட்டன் ஆனாலும் சரி இழுத்து மூட வேண்டியதுதான், அவ்ளோவ் பெரிய அப்பாடக்கராம் அவர். எலி வேறு இல்லை. அதாவது தாம் காட்டிய கோபத்தில் அது எங்கோ போய்விட்டதாய் ஹீரோ கருதுகிறான். ஆனால் அதுவோ வில்லன் வைத்த கூண்டில் இருந்தது.

அண்ணன் கண் முன்னர்தான் தம்பி பிடிபட்டிருந்தான், எனவே குடும்பமே தம்பிக்கு உதவ ஓடி வருகிறது. தந்தையின் அனுபவ உதவியில் விடுதலையும் கிட்டுகிறது. மீண்டும் யாருமறியா வண்ணம் ஹோட்டலுக்குத் திரும்புகிறது. தற்செயலாக ஹோட்டல் அலுவலக அறையிலுள்ள வில்லர் மேஜை ட்ராயரில் ஒளிந்து கொள்ள நேர்கிறது. அந்த ட்ராயரில்தான் வக்கீல் கொடுத்த ‘ஹீரோதான் வாரிசு’ என்ற உயில் உள்ளது. இதைப் படித்து புரிந்து கொண்ட நம்ம எலியார் அதைத் தூக்கிக் கொண்டு ஹீரோவிடம் ஒப்படைக்கிறது.

ஒருவழியாய் குட்டி வில்லர் தொந்தரவு இத்துடன் முடிகிறது. பெரிய வில்லர் ? ஹீரோ மனம் திருந்துகிறார். தன்னுடைய வெற்றிக்கு இந்த எலிதான் காரணம் என ஹீரோயினடமும், பிற ஊழியர்களிடமும் சொல்லி தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்கிறார். எலி என்றாலே வெறுக்கும் ஹோட்டல்காரர்கள் ‘இவன் லூசுப்பய போல’ என்று மைண்ட் வாய்சில் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்கள். இதெல்லாம் சமையல்கட்டுக்குள் நடக்கிறது. வெளியே சாப்பிட ஆர்டர் மேல் ஆர்டர் பண்ணிக்கொண்டு ஒரு கூட்டமே காத்துக் கிடக்கிறது. கூட்டத்தை குப்பையில் தள்ளுங்கள், நம்ம எழுத்தாளர் வேறு ‘என்னய்யா ஆச்சு ?’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாயகிக்கே புரியவில்லை. ஏன் இப்படி அவன் உளறுகிறான் ? எலியாவது சமையலுக்கு உதவுவாவது என்று குழம்புகிறாள். ஆயிரம்தான் கேனப்பயலா இருந்தாலும் அவன் நம்ம காதலன் ஆயிற்றே என்று மனம் மாறி பைக்கை திருப்ப ஆரம்பிக்கிறாள். இதற்கிடையே நிராயுதபாணியாய் தவிக்கும் தம் நண்பனைக் காப்பாற்ற எலியார் உதவிக்கு தம் கும்பலை அழைக்கிறார். ஆயிரக்கணக்கில் குவியும் எலிகளுக்கு சூடான ஷவர் பாத் கொடுத்து சுத்தமாக்கிவிட்டு, நம்மாள் மேற்பார்வையில் சமையல் நடைபெற ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஐட்டமாய் காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஹீரோவே எல்லோருக்கும் சப்ளை செய்கிறான். எழுத்தாளரும் சுவைக்கிறார். 'அய்யய்யோ.........என்ன ஒரு சுவை, என்ன ஒரு சுவை ? கொசுவத்தி சுழல்கிறது அவருடைய அம்மா கையால் சாப்பிட்ட ருசி.

நாயகியும் வந்து சேர்கிறாள். அவளுடைய கண்களை அவளால் நம்பவே முடியவில்லை. நாயகன் கண்களால் பேசுகிறான் ‘பாத்தேல்ல’ அவனும், அவளும் மட்டும் அறிந்த உண்மை எழுத்தாளருக்கு மட்டும் சொல்லப்படுகிறது. அவரும் சமையல்கட்டு வருகிறார். இந்த உண்மைகளைப் பார்க்கிறார். ஆப்டரால் ஒரு எலி, குட்ஸ்வ்வை மானசீக குருவாய் ஏற்றுக்கொண்டு தம்மை வீழ்த்த முடியுமெனில் விமர்சனம் எனும் சாக்கில் எத்தனை மனங்களைப் புண்படுத்திவிட்டோம் என வருந்துகிறார். மறுநாள் இப்படி கட்டூரை எழுதுகிறார். தாம் ஓர் அதிசயத்தை குட்ஸ்வ் ஹோட்டலில் கண்டதாக, அவர் எலியை எழுதவில்லை, சுவையைச் சொல்கிறார் !!!
எப்பவோ கொடுத்த புகாருக்கு தற்செயலாக வரும் உணவு இன்ஸ்பெக்டர் இந்த எலிக்கூட்டத்தை பார்த்து ஹோட்டலுக்கு சீல் வைக்கிறார். ஸோ வாட் ? ஹீரோ வேறு ஒரு ஹோட்டல் திறக்கிறார். நம்ம எலியாரின் பெயரையே அதற்க்கு சூட்டி, எலிக் குடும்பத்துக்கு யார் கண்ணும் படாமல் உயரத்தில் பாதுகாப்பாக தங்குமிடம் அமைத்து கொடுக்கிறார். ஹீரோ ஹோட்டலுக்கு நிரந்தர வாடிக்கையாளராக அந்த எழுத்தாளர் மாறிப் போகிறார். ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்களில் அவர் மட்டுமே அறிவார்....... சுவைக்கு யார் காரணமென. எனவே அவருக்கு மட்டும் பிரத்யோகமாக நம்ம எலியார் மட்டுமே சமைத்துக் கொடுப்பார். 

 இப்பல்லாம் நம்ம எழுத்தாளர் விமர்சனமே எழுதறத விட்டுட்டு, நாலுவேளையும் மூக்கு புடைக்கச் சாப்பிட மட்டும்தான் செய்றாரு :)))

Thursday, August 29, 2013

இணையம் மூலம் காதல் முத்தத்தை அனுபவிக்க அதிசய கருவி கண்டுபிடிப்பு !!

இணையம் மூலம் காதலை பரிமாறிக்கொள்ளும் காதலர்கள், காதலுக்கு உயிர்நாடியான முத்தத்தை பரிமாற முடிவதில்லை. அதற்கு தற்போது தீர்வு வந்துள்ளது.

உங்கள் அன்பு முத்தத்தை, நீங்கள் எப்படி கொடுக்கிறீர்களோ, அதே உணர்ச்சியுடன் உலகின் வேறொர் மூலையில் இருக்கும் உங்கள் காதலுக்குரியவர் அனுபவிக்கலாம்.

அதற்காக ஒரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் இணைய இணைப்புள்ள கணினியில் இணைக்கப்பட்டுள்ள உருண்டை பந்து போல் இருக்கும் அக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள உதட்டில் நீங்கள் முத்தத்தை கொடுக்க அதே நொடி அது போன்ற கருவியை தனது உதட்டுடன் ஸ்பரிசத்தில் வைத்திருக்கும் உங்கள் காதலுக்குரியவர் அவ் முத்தத்தை அனுபவித்துக் கொள்ளலாம்.

அதே போல் அவரால் கொடுக்கப்படும் முத்தம் உங்கள் உதடுகளை வந்தடையும்.

காதலனும், காதலியும் குறித்த கருவிகளில் இரண்டை வாங்கி ஆளுக்கொன்றாக வைத்திருந்தால் போதும், வேண்டிய நேரத்தில் முத்தத்தை பரிமாறிக்கொள்ளலாம்.

இக் கருவிக்கு Kiss Messenger என்ற பொருள் பட ”Kissenger” என்ற பெயர் வைத்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் காதலர் தின பரிசாக இக் கருவிதான் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

மைக்கேல் ஜாக்சன்: ஓர் இசையின் வரலாறு

கடந்த 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்த பிறந்தார் மைக்கேல் ஜாக்சன். அந்த குடும்பத்தில் மொத்தம் 9 குழந்தைகள். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த நிலையிலும், இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார் ஜாக்சன்.

பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து 'பாப்' என்ற புதிய உலகை அவர் படைத்தார்.

11வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் நடத்திய, 'தி ஜாக்சன் 5' என்ற இசை நிகழ்ச்சி, பாப் பிரியர்களை பரவசப்படுத்தியது. இதற்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை பார்த்து அதை ஆல்பமாகவும் வெளியிட்டார் ஜாக்சன்.

இதை தொடர்ந்து வெளியான 'ஐ வாண்ட் யூ பேக்' என்ற இசை ஆல்பமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்று, ஒட்டு மொத்த உலமும் ஜாக்சனை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. அதன் பிறகு ஜாக்சனின் இசைப்பயணம் வெற்றிக்கரமாக பயணிக்க தொடங்கியது.

இசையுலகில் கடந்த 1971 முதல் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்த ஜாக்சன், தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத் தந்தது.

1972ல் 'காட் டு தி தேர்', 1979ல் 'ஆப் தி வால்', 1982ல் 'திரில்லர்', 1987ல் 'பேட்', 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' போன்ற ஆல்பங்கள் உலகளவில் விற்பனையில் சக்கப்போடு போட்டன.

1980களில் பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நிலையில், மேற்கத்திய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் எம்.டி.வி. தனது ஒளிபரப்பை துவக்கியது. அந்த டிவியில் ஜாக்சன் நடத்திய 'பீட் இட்', 'பில்லி ஜூன்' மற்றும் 'திரில்லர்' போன்ற இசை நிகழ்ச்சிகள், அவரது புகழை உலகம் முழுவதும் பரப்பியதோடு, அந்த டிவியையும் குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தியது.

தொடர் வெற்றிகள் காரணமாக, 75 கோடி ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் பெற்று, ஈடு இணையற்ற பாப் பாடகராக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.

ஆனால், கடந்த 1990களின் கடைசியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க ஆரம்பித்தார் ஜாக்சன். பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் பலமுறை முகத்தை மாற்றியது மற்றும் பண விவகாரம் போன்றவற்றால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். தனது பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்ற படியேறினார். வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மைக்கேல் ஜாக்சனின் இல்லற வாழ்க்கையும் நீண்ட காலம் இனிமையானதாக நிலைத்திருக்கவில்லை. கடந்த 1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். எனினும், மைக்கேல் ஜாக்சனில் வினோத நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்த இரு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது.

மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார் மைக்கேல் ஜாக்சன். இரு மாதங்களுக்கு முன்பு, ஜாக்சனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். எனினும், உடல்நிலை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் 2010ம் ஆண்டு வரை லண்டனில் சுமார் 50 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரது பாப் இசையுலக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை.

திடீர் மாரடைப்பு காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன், நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவினார்.

ஜாக்சனின் மரணச் செய்தி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Wednesday, August 28, 2013

கிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க

3டி பாதுகாப்பு!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். மும்பையைச் சேர்ந்தவர் பிரதாப் காயன். இவர் பெட்ரோலிய கம்பெனி ஒன்றின் மூத்த அதிகாரி. இவர் மும்பையில் இருக்க, இவரது கிரெடிட் கார்டு மூலம் அமெரிக்காவில் 200 டாலருக்குப் பொருட்கள் வாங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல் எஸ்.எம்.எஸ். ஆக வந்தது ஓர் அதிகாலை நேரத்தில். எஸ்.எம்.எஸ்.ஸைக் கண்டு அதிர்ந்தார் பிரதாப் காயன். கிரெடிட் கார்டு தன் கையில் இருக்க, வேறு யார் அதை பயன்படுத்த முடியும் என்கிற யோசனை அவருக்கு.

வேகவேகமாக கார்டை பிளாக் செய்ததால் 200 டாலருடன் தப்பித்தார் அவர். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்காத பலர் லட்சக்கணக்கில் ரூபாயை இழந்திருக்கிறார்கள். ஒருவர், இருவரல்ல, இந்தியா முழுக்க பலரது கிரெடிட் கார்டுகளிலிருந்து கடந்த இரு மாதங்களாக 30 கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பணம் பறிபோயிருக்கிறது.

கிரெடிட் கார்டு விவரங்களை திருடுபவர்கள் எளிதில் அதனைக்கொண்டு ஏதாவது ஒரு பொருளை வாங்கிவிட முடியும். இதை தடுக்க ரகசிய பின் எண்ணை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கிரெடிட் கார்டு கம்பெனிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம், இந்த பின் எண் பல அயல்நாடுகளில் கட்டாயமாக்கப்படாததால் நம் கார்டு மோசடி பேர்வழிகளால் அயல்நாடுகளிலேயே அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பாதுகாப்பாகப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என கிரெடிட் கார்டு வழங்கிவரும் வங்கி அதிகாரிகளிடம் பேசினோம்.

”கிரெடிட் கார்டை இரண்டு விதமாகப் பயன்படுத்த முடியும். ஒன்று, ஷாப்பிங் மால், பல்பொருள் அங்காடி, ஓட்டல் போன்ற இடங்களில் கார்டை பயன்படுத்தும்போது. ஓட்டலில் சாப்பிட சென்றால் கார்டை தந்துவிட்டு, நாம் உட்கார்ந்திருப்போம். அந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு பற்றிய அடிப்படை தகவல்கள் அனைத்தும் திருடு போக வாய்ப்பு இருக்கிறது.

இன்னொன்று, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதும், பொருட்களை வாங்கும் போதும் நமது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடு போக வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருள் வாங்க நம் கிரெடிட் கார்டு நம்பர், சி.வி.வி. நம்பர் (card verification Value),பின் நம்பர் ஆகியவற்றை தந்தால்போதும். இப்போதுள்ள வேகமான வாழ்க்கைமுறையில் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க பலருக்கும் நேரம் இல்லை. இதனால்தான் ஆன்லைனில் பொருட்களை அதிகமாக வாங்குகிறார்கள். தவிர, கடைகளைவிட அதிகமான தள்ளுபடி, வீட்டிற்கே டெலிவரி ஆவது என பல கவர்ச்சி கரமான விஷயங்கள் அதில் இருக்கின்றன. விலை மலிவாகக் கிடைப்பதால் அதிகம் தெரியாத இணையதளங்கள் மூலமும் பலர் பொருட்களை வாங்குகிறார்கள். இந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் சி.வி.வி. எண் ஆகியவை திருடு போக வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.

நம்முடைய கிரெடிட் கார்டை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நம் பிரச்னைகள் தீரும். இதற்கு என்ன செய்யலாம் என கிரெடிட் கார்டு சேவை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுடன் பேசினோம். அவர்கள் பல டிப்ஸ்களைத் தந்தார்கள்.

”கிரெடிட் கார்டு பத்திரமாக இருப்பதற்காக, வங்கிகள் ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கிரெடிட் கார்டை தற்போது வழங்கி வருகிறது. இதன் மூலம் உங்கள் கார்டு தொலைந்தால் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இந்த கார்டு செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டிருக்கும். போலி கார்டுகளையும் உருவாக்குவது கடினம். ஏனெனில், இந்த சிப் கார்டு நான்கு துண்டுகளாக இருக்கும். நான்கையும் இணைத்தால் மட்டும்தான் கார்டு செயல்படும். ஒவ்வொரு சிப் கார்டும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கார்டை வாங்க கட்டணங்கள் உண்டு. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். குறைந்தபட்ச 500 ரூபாயிலிருந்து கட்டணங்கள் இருக்கும்.

ஆன்லைனில் அதிக பரிவர்த்தனை செய்பவர்களுக்காகவே 3டி முறையில் பாதுகாப்பு வசதியை இப்போது அறிமுகப் படுத்தியுள்ளன. இதில் வங்கி முதலில் ஒரு பாஸ்வேர்டை தரும். இந்த பாஸ்வேர்டை பயன்படுத்திய உடனே செயல் இழந்துவிடும். இதன்பிறகு உங்களின் பாஸ்வேர்டை நீங்களே உருவாக்கிக்கொள்ளவேண்டும். இதில் உங்களின் வழக்கமான கார்டு நம்பர், சி.வி.வி. எண், பின் நம்பர் ஆகிய தகவல்களை கொடுத்தபின் ஆறு கேள்விகளைக் கேட்கும். இது முழுவதும் உங்களின் தனிப்பட்ட தகவல்களாகவும், வித்தியாசமான கேள்வியாகவும் இருக்கும். அதாவது, உங்களின் அப்பாவுடன் பிறந்தவர் கள் எத்தனை பேர், உங்களின் அலுவலகம் எத்தனையாவது மாடியில் உள்ளது என்கிற மாதிரியான கேள்விகளை கேட்கும். இதற்கடுத்து ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் இதில் ஏதாவது இரண்டு கேள்விகள் வரும். அதற்கு பதிலளித்தால்தான் பரிவர்த்தனையைத் தொடர முடியும்.

மேலும், இந்தத் தகவல்களை யாரும் திருட முடியாது. இந்தத் தகவல் கோடிங் முறையில் மற்றவர்கள் படிக்க முடியாத முறையில் பதிவாகும். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணத்தைச் செலுத்தவேண்டும் எனில், அதை அந்த கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்றுதான் செலுத்த முடியும். தவிர, ஆர்.பி.ஐ.யின் அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியும்.

முறையான வங்கியின் இணையதளங்கள் அனைத்தும் Https என்றுதான் ஆரம்பிக்கும். ஆனால், போலியான இணையதளங்கள் http என ஆரம்பிக்கும். இதைக் கவனித்தாலே போதும் மோசடி நிறுவனங்களை நிமிட நேரத்தில் ஒதுக்கிவிடலாம்.

கிரெடிட் கார்டை வாங்கும்போதே அதை பின் நம்பருடன் வங்கிகளில் கேட்டு வாங்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் சிக்கல் என்னவென்றால், பின் நம்பரை தவறாகப் பதிவு செய்தால் கார்டை வங்கி பிளாக் செய்துவிடும். முதல்முறை என்றால் கார்டை ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி இப்படி நடந்தால் புது கார்டுதான் வாங்கவேண்டியிருக்கும். இதற்கு தனிக் கட்டணம் தரவேண்டும்” என்றார்கள்.

இனியாவது கிரெடிட் கார்டை பத்திரமாகப் பயன்படுத்துவீர்கள்தானே?

துள்ளி விளையாடுவதைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் ரிப்பு..!


விரைவில் திரைக்கு வரவிருக்கும் துள்ளி விளையாடு படத்தைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் பலராலும் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். அப்படியொரு கொமெடியாக வந்துள்ளதாம் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம். ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்ததோடு, படம் தங்களை ரொம்பவே மகிழ்வித்ததாகத் தெரிவித்தனர்.

தற்போது படத்தை திரையுலக பிரமுகர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர். படம் பார்த்த அத்தனைப் பேருமே விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

அத்தனை நகைச்சுவையாக வந்துள்ளதாம் படம். இது குறித்து இயக்குனர் செல்வா கூறுகையில், இது ஒரு சிங்கத்துக்கும், மூன்று எலிகளுக்குமிடையே நடக்கிற தமாஷ் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.


நம்ம பிரகாஷ் ராஜ் சார்தான் சிங்கம், யுவராஜ், சூரி, சென்றாயன் ஆகியோரும்தான் அந்த மூன்று எலிகள். இந்த விளையாட்டோடு தீப்தியின் காதல் விளையாட்டும் சேர கொமெடி ப்ளஸ் காதல் கதம்பமாக வந்துள்ளது என்றும் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

ரூபாய் வீழ்ச்சி, திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்!


எஸ்.குருமூர்த்தி - 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.

2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில “நடவடிக்கைகளை’ ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.


ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு – அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று “தி எகனாமிஸ்ட்’ (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!

சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் “தி எகனாமிஸ்ட்’ குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தக முடிவின்போது 64.55ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இந்த அளவுக்கு குறையவில்லை. இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள்தான் காரணம். இந்திய ரூபாயின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பை விடக் குறைவாக உள்ளது. இந்தியாவைப் போன்ற மற்ற வளரும் நாடுகளும் இதே பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

நமது நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடுகள், ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் கடன்கள் கட்டுக்குள் உள்ளது. உலக சந்தைகளில் இந்திய ரூபாய் மதிப்பு குறித்து தேவையற்ற அச்சங்கள் மக்களிடையே நிலவி வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து மக்கள் பெரிதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ரூபாய் மதிப்பு நிலையானதும், கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும்.

மக்கள் கருத்து

“ஊழல் செய்து சேர்த்த கோடி கோடி பணத்தை வெளிநாடு கொண்டு போய் பணத்தின் மதிப்பை குறைத்தது யார்? காங்கிரஸ்தான் இவர்களை ஆட்சியில் அமர்தியற்கு பொது மக்கள் ரொம்பவும் வருத்த படுகிறார்கள் நாங்க எல்லாம் முட்டாளுங்க சாமி”

“கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படி தான இப்படி பதில் சொல்றீங்களோ தெரில………….ச்விச்ஸ் பேங்க் ல ஒளிச்சு வச்ச பணத்தஎல்லாம் முதல வெளிய உருவுங்க……..இந்தியா அமைச்சர்களின் தேசம் அல்ல எங்களை போல் மனிதர்களும் இருக்கிறோம் என்பதை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு நான் நினைவில் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்…”

“அவர் கொடுத்த பதில் மக்களுக்கு என்று நாம் நினைத்தால் நாம்தான் மடையர்கள். அவரது பதில் தொழில் அதிபர்களுக்கும், மேட்டுக்குடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கருப்புப்பண முதலைகளுக்கும் தான். (கவனிக்க அவரது அறிக்கையின் கடைசி வரி) சுய சார்பு பொருளாதாரத்தைக் கைவிட்டுவிட்டு, இந்தியச் சந்தையை அந்நியனுக்கு அகலத் திறந்துவிட்டுவிட்டு இப்போது லபோ திபோ என்று கூவி என்ன பயன்? முதலிலேயே எங்கே போச்சி புத்தி?”

Tuesday, August 27, 2013

இருட்டுக்கடை அல்வா

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது .

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !

மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.

மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:

அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !

இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் - கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் - அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் - பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.

பலகைகளால் ஆன பழைய கால கதவை கவனியுங்கள் !

இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !

இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளி வந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள்.

இவர்களின் குழும கடையாக சற்று தள்ளி விசாகா சுவீட்ஸ் என்ற கடை இருக்கிறது. இங்கும் இருட்டு கடை அல்வா பகல் வேளைகளில் கிடைக்கிறது ( பிஜிலி சிங் படம் இங்கும் இருக்கும் !)

உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டி யுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! ( ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது !)இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது !

கடித்ததற்காக கத்தியால் குத்திய தாய்!

பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை- அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குழந்தைக்கு 100 தையல்கள் வரை போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்திலேயே அதிக தடவை குத்தப்பட்டுள்ளன.

மேலும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவளுக்கு ஐந்து கணவர்கள்!

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்.

அப்பெண்ணின் கணவர்கள் ஐவரும் சகோதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண்ணின் பெயர் ராஜோ வேர்மா. வயது 21. அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் குழந்தையின் தந்தை ஐவரில் யார் என்பது அப்பெண்ணுக்கு தெரியாது.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

ராஜோவேர்மாவை முதல்முறையாக திருமணம் செய்த கணவரின் பெயர் குட்டு (21) . அவரையே சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அவர் தனது கிராமத்து வழக்கப்படி கணவரின் சகோதர்களான பாஜு(32)- சாந்த் ராம்(28)- கோபால்(26)- தினேஷ் (19) ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார்.

தான் ஒவ்வொருவருடனும் உடலுறவு கொள்வதாக தெரிவிக்கும் ராஜா வேர்மா அனைவரையும் ஒன்று போல் கவனித்து வருவதாகவும் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சகோதரர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதாகவும் தனது தாயும் 3 கணவர்களுடன் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்து வாழும் முறை இக்காலத்தில் மிகக் குறைவான அளவிலேயே பின்பற்றப்படுகின்றது.

எனினும் இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் இன்னும் பல கணவர்களுடன் வாழும் முறைமை பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது தந்தை யார் என்பதை அறியாத சந்ததிகள் உருவாகும் சமூக சீர்கேடுக்கு இந்த கிராமத்து பழக்கம் வழியமைத்துள்ளது.

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத இரகசியங்கள்

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

எம்ஜிஆரின் “டெல்லிக்கு தலை வணங்கு”

திமுக வில் எம்ஜிஆர் இருந்தபோது அவர் புரட்சி நடிகர். இந்த பட்டத்தை அவருக்கு தந்தவர் கலைஞர் கருணாநிதி. இருவருமே திரையுலகிலிருந்து வந்தவர்கள். இவர்களால் திமுக வளர்ந்தது. திமுகவால் இவர்கள் வளர்ந்தனர். தொழில் முறையாலும், ஒரே கட்சிக் காரர்கள் என்பதாலும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் என்னவோ திமுகவாக இருந்தாலும் அப்போதைய பட அதிபர்கள் பலரும் காங்கிரஸ் காரர்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரனாக இருப்பதில் அவர்களுக்கு பல அனுகூலங்கள். படம் எப்படி எடுத்தால் காசு பார்க்கலாம் என்பது இவர்களுக்கு அத்துபடி. 

எனவே அவர்கள் இவர்கள் இருவரையும்வைத்து படம் பண்ணினார்கள். நஷ்டம் வராத வியாபாரம்தான் முக்கியம்.மேலும் அப்போது மக்களிடையே திமுக நல்ல ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ந்து இருந்தது. எனவே பல பட அதிபர்கள் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் எம்ஜிஆர் சொன்னபடி காட்சிகளை அமைத்தார்கள் பாடல்களைஅமைத்தார்கள். அதே போல் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களையும் படங்களில் அனுமதித்தார்கள். படங்கள் நல்ல வசூலைத் தந்தன.

1967 சட்ட மன்ற தேர்தல் தொடங்கி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலவில்லை.தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கேரளா,ஆந்திரா,கர்நாடக மாநிலங்களில் காங்கிரஸுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அமையவில்லை. தமிழ் நாட்டில் திமுக இருக்கும் வரை இது நடக்காது. மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் காங்கிரஸை யோசிக்க வைத்தது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, இல்லையேல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் ஆட்சி.. திமுகவை உடைத்தால் ஒழிய கதை ஒன்றும் ஆகப் போவது இல்லை. அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி .பாகிஸ்தானையே இரண்டாக உடைத்தெறிந்த அம்மையாருக்கு திமுக எம்மாத்திரம்?

எம்ஜிஆர் தனக்கென்று ஒரு பிம்பம் (image) திரைப் படங்களில் உருவாக்கி வைத்து இருந்தார். இவர் நடிக்கும் படங்களில் வெற்றிலை பாக்கு போட மாட்டார், மது அருந்த மாட்டார், நியாயத்திற்காக சண்டை போடுவார், அம்மாவை தெய்வமாக நினைப்பார்,பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் , எல்லாவற்றிலும் நியாயவானாக நடந்து கொள்வார். தனது சொந்த வாழ்க்கையிலும் அவர் இவைகளைக் கடைபிடிப்பதாக எம்ஜிஆரின் ரசிகர்கள் நினைத்தனர்.இதனால் கட்சியில் எம்ஜிஆருக்காக மிகப் பெரிய ஆதரவாளர்கள் கூட்டம் (Mass) இருந்தது.இந்தஆதரவாளர் களை குறி வைத்து டெல்லியில் காய் நகர்த்தினார்கள்.எம்ஜிஆருக்கு நெருக்கமான காங்கிரஸ்காரர்கள் மூலம் சில செய்திகள்சொல்லப்பட்டன. 

ஆரம்பத்தில் மறுத்த எம்ஜிஆர் தனது இமேஜ், மேல்மட்ட அரசியல் வாதிகளால், கெட்டுப் போவதை விரும்பவில்லை. மேலும் தனிப்பட்ட முறையில் வரும் மத்திய அரசாங்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தயங்கினார். என்வே தனிக் கட்சி (1972 இல்) தொடங்கினார். அரசியலில் வெற்றியும் பெற்றார்.

இதனால் அவர் மக்களின் பெரும் ஆதரவு பெற்ற முதலமைச்சர் (1977- 1987) ஆனபோதும் கூட மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியையே ஆதரித்தார். 1977-இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரித்தார். இந்திரா காந்தி பதவியிழக்கும் படியான சூழ் நிலையில் மத்தியில் ஜனதா கட்சி (1977) ஆட்சிக்கு வந்தது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய். எனவே ஆட்சி மாறியதும் காங்கிரஸின் எதிரியான மொரார்ஜியை ஆதரித்தார் எம்ஜிஆர்.

இதனிடையே தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட நினைத்த இந்திரா காந்தி அம்மையாருக்கு எம்ஜிஆர் மத்திய அரசு பயம் காரணமாக ஆதரவு தரவில்லை. மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் ஆட்சி (1979) வந்தபோது சரண்சிங்கின் கட்சிக்கு எம்ஜிஆர் ஆதரவு தந்தார். அந்த மந்திரிசபையில் பாலா பழனூர், சத்தியவாணிமுத்து ஆகியோர் அதிமுக சார்பாக மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.. கொஞ்ச நாள்தான். சரண்சிங்கும்கவிழ்ந்தார். காங்கிரஸ் மீண்டும் (1980) வந்தபோது திரும்ப காங்கிரஸை ஆதரித்தார்.

ஆக மத்தியில் எந்த கட்சிஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியோடு இணக்கமான உறவு என்பதே எம்ஜிஆரின் அரசியல் பார்முலா.
அதுதான் “டெல்லிக்கு தலை வணங்கு”