Sunday, June 30, 2013

இந்தியா அதிரடி!

பொதுவாக புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளோ, அழகு சாதனப் பொருட்களோ முதலில் விலங்குகள் மீதே பரிசோதித்துப் பார்க்கப்டுகின்றன. இந்த பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற பின்னரே, அவை விற்பனை சந்தைக்கு வெளிவரும். மிருகங்கள் வதை தடுப்பு ஆர்வலர்கள் இந்த முறையைத் தடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மதிப்பீட்டு செயலகம் அழகுசாதனப் பொருட்களைப் பரிசோதிக்க விலங்குகளை உபயோகிப்பதைத் தடை செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகில் சுமார் முப்பது லட்சம் பொருட்கள், வேதியியல் கலவைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. உணவு, அழகு சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான புதுப் புது வேதியியல் கலவைப் பொருட்கள் சந்தைக்கு வந்து கொண்டே இருக்கின்றன். அந்த முப்பது லட்சம் வேதியியல் கலப்புப் பொருட்களில் சுமார் ஏழாயிரம் பொருட்களுக்கு மட்டுமே சர்வதேசப் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்த தயாரிப்பில் எதிர்மறையான எந்தவிதப் பின் விளைவும் இருக்காது என்றும், அந்தப் பொருள் எந்த வேதியியல் கூட்டுக் கலவை யில் தயாரிக்கப்பட்டது போன்ற அதிகாரப் பூர்வத் தகவல்கள் பொருளின் உறை மீது அச்சிடப்பட்டிருக்கும்.

மேலும் சர்வதேசப் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்படாத அனுமதி அல்லாத பல ஆயிரம் வகை வேதியியல் அழகு சாதனங்கள், கலப்பு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் சந்தைப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து விதமான தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பின் விளைவுகளைச் சோதிக்க வேண்டும் என்றால் அதற்கு கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாகும். ஒரு வேதியியல் கலப்புப் பொருளை நிலம், நெருப்பு, காற்று, தண்ணீர், மனிதன், விலங்குகள், காடுகள் உள்ளிட்ட சகல விஷயங்களின் மீதும் பிரயோகித்து சோதித்து முடிவுகளை அறிவிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் தேவை.அத்துடன் ஐந்து லட்சம் டாலர் செலவு பிடிக்கும் நடைமுறை. அதனால்தான் பெரும் பான்மையான பொருட்கள் மேற்கண்ட சோதனைகளைத் தவிர்த்து சந்தைக்குள் ஊடுருவிவிட்டன. சொல்லப் போனால், அந்த அனுமதி அல்லாத பொருட்களின் சோதனைச் சுண்டெலிகளே… மூன்றாம் உலக நாட்டு மக்கள்தான்!.

இந்நிலையில்தான் இந்திய மதிப்பீட்டு செயலகம் ’அழகுசாதனப் பொருட்களைப் பரிசோதிக்க விலங்குகளை உபயோகிப்பதைத் தடை’ செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் இதற்கு மாற்றாக உருவாகியுள்ள நவீன செயற்கை முறைப் பரிசோதனைகளையும் அது கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவு அறிக்கையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் மேலாளர் டாக்டர் ஜி.என். சிங் வெளியிட்டுள்ளார்.

இந்த அதிரடி முடிவை ஹியுமன் சொசைட்டி இன்டர்நேஷனல், பீப்பிள் பார் எதிகல் டிரீட்மெண்ட் ஆப் அனிமல்ஸ், பீப்பிள் பார் அனிமல்ஸ் போன்ற மிருகங்கள் வதை தடுப்புக் குழுவின் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் இதற்காக தனது முழு ஒத்துழைப்பையும் அளித்த மேனகா காந்திக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அழகுசாதனப் பொருட்கள் பரிசோதனையில் மிருகங்களைத் தடை செய்தது மிகப்பெரிய வெற்றியாகும். இதன்மூலம் தெற்கு ஆசிய நாடுகளிலேயே இத்தகைய சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகின்றது. இதனால் ஏராளமான விலங்குகள் பாதுகாக்கப்படும். இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்று அலோக்பர்ணா சென்குப்தா என்ற மிருகங்கள் வதை தடுப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் இதுவரை உலகளவில் 1,200 தயாரிப்பு நிறுவனங்கள் இத்தகைய விலங்கு பரிசோதனையை தடை செய்துள்ளன. ஆயினும், சில இடங்களில் இன்னும் இத்தகைய பரிசோதனைகள் நடைபெறுவதால் மிருகங்கள் துன்புறுத்தப்படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அதே சமயம் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உடலியல் முறையில் அதிக மாறுபாடுகள் உள்ளதால் பெரும்பாலும் இந்த சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றாலும், விற்பனை சந்தைக்கு வரும்போது அவை தோல்வியடையவும் செய்கின்றன என்றும் விலங்குகளை விட மனிதர்களுக்கே பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறதாம்!

பங்குசந்தையின் மற்றொரு ஆபத்து.

நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டாளர். உங்கள் கையில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு பல நல்ல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளீர்கள். உதாரணத்துக்கு உங்களுடைய DEMAT ACCOUNT ல் ஒரு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிற்கு பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இது தவிர உங்கள் கையில் ஒரு லட்சத்தை வைத்து தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள உங்கள் பங்குகள் எவ்வித தொந்தரவும் இல்லாமல் உங்களது DEMAT ACCOUNT-ல் இருக்கும் போது உங்களது பங்கு தரகர் உங்களிடம் சார் நீங்கள் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதை அறிகிறோம் என்று ஆரம்பித்து நீங்கள் அருமையாக வர்த்தகம் செய்து வருகிறீர்கள். அதனால் உங்கள் DEMAT ACCOUNT ல் இருக்கும் பங்குகளை ஈடாக வைத்து (அடமானம் போல) நீங்கள் கூடுதலாக மூன்றில் இருந்து நான்கு லட்சம் வரை கடன் தருகிறோம். அதை பயன் படுத்தி INDRADAY TRADING (தினசரி வர்த்தகம்) அல்லது FUTURES ல் வர்த்தகம் செய்ய அனுமதி கொடுக்கிறோம். அவ்வாறு நீங்கள் கூடுதலாக வர்த்தகம் செய்யும் தொகைக்கு குறைந்த வட்டி மட்டுமே வசூலிப்போம் என்று கூறுவார்கள். இதை MARGIN TRADING என்று சொல்கிறார்கள்.

ஒரு லட்ச ரூபாய் கையில் வைத்து நிம்மதியாக நீங்கள் வர்த்தகம் செய்து வரும் போது இந்த தூண்டில் உங்கள் மனதில் மிகப் பெரிய சலனத்தை நிச்சயம் எற்படுத்தும். இதற்கு நீங்கள் இசைவு தெரிவித்தால் நிச்சயமாக உங்களுக்கு தொடர் மன உளைச்சல்களும், சீரழிவுகளும் ஏற்பட 90 சதவீதம் வாய்ப்புக்கள் உள்ளது. எப்படி?

தினசரி வர்த்தகத்தில் ஈடுபடும் போது பொதுவாக கையில் இருக்கும் பணத்தை போல பத்து மடங்கு, பதினைந்து மடங்கு வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் தரகு நிறுவனங்கள் உங்கள் DEMAT ACCOUNT ல் இருக்கும் பங்குகளுக்கு எதிராக வழங்கும் மூன்று லட்சம் முதல் நான்கு லட்ச ரூபாய் வரை கொடுக்கும் கடன் வசதியை பயன்படுத்தி அதன் மீதும் பத்து அல்லது பதினைந்து மடங்கு வர்த்தகம் செய்ய அனுமதிப்பார்கள்.

அதாவது கையில் இருக்கும் தொகை ஒரு லட்சத்திற்கும் கடனாக அனுமதிக்கும் நான்கு லட்சத்திற்கும் சேர்த்து சில நிறுவனங்கள் கிட்டத்தட்ட எழுபத்தைந்து லட்ச ரூபாய் வரை INTRADAY (தினசரி வர்த்தகம்) செய்ய அனுமதிப்பார்கள். மாலைக்குள் உங்கள் தினசரி வர்த்தகத்தை முடித்தே ஆக வேண்டும் என்கிற பட்சத்தில் லாபம் வந்தால் சரி. நட்டம் ஏற்பட்டால்? ஒரு உதாரணத்துக்கு எழுபத்தி ஐந்து லட்சம் வர்த்தகத்தில் ஒரு சதவீதம் நட்டம் ஏற்பட்டால் கூட கையில் இருக்கும் ஒரு லட்சதில் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் காலி. கூடவே தரகு மற்றும் வரிகள் வேறு.

சரி FUTURES வர்த்தகத்தில் என்ன ஆபத்து வரும்? கையில் இருக்கும் பணத்தை பயன் படுத்தி FUTURES வர்த்தகத்தில் ஈடுபடும் போது நட்டம் ஏற்பட்டாலும் கூட அதற்கான தொகையை செலுத்தி விட முடியும். முடியாவிட்டாலும் கூட சிறு நட்டத்துடன் வெளியேற முடியும். அளவுக்கு அதிகமாக MARGIN வாங்கி வர்த்தம் செய்யும் போது உங்களுக்கு கடன் அனுமதி அளித்த நல்லவர்கள். சார் பணத்தை கட்டுங்கள் அல்லது நாங்கள் உங்கள் SHARES ஐ விற்று விடுவோம் என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். இப்படி நீங்கள் சந்தையில் சேர்த்த பங்குகளும் காலியாகி விடும்.

மிகப்பெரிய சரிவை சந்தைகள் சந்திக்கும் போது (உதாரணமாக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடி, அமெரிக்க பொருளாதார சிக்கல் போன்ற சமயங்களில்) நீங்கள் MARGIN வர்த்தகத்தை பயன் படுத்தி FUTURES ல் ஏதேனும் POSITION வைத்திருந்தால் அதுவும் விலை குறையும். உங்கள் DEMAT ACCOUNT ல் இருக்கும் பங்குகளும் விலை வீழ்ச்சியில் இருந்து தப்பாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் தரகர்கள் என்ன செய்வார்கள் என்றால் உங்களை கேட்காமலேயே உங்கள் DEMAT ACCOUNT ல் உள்ள பங்குகளை விற்று விடுவார்கள். இப்படியான சமயங்களில் பெரும்பாலும் எல்லா தரகர்களும் தாறுமாறாக பங்குகளை விற்பதால் SUPPLY அதிகமாகி BUYING குறைந்து பங்குகள் விலையில் பெருத்த அடி விழும். இதை MARGIN CALL என்று கூறுவார்கள்.

அதே சமயம் இதில் குறைந்த நட்டத்துடன் தப்ப வழி உண்டா என்றால் உண்டு. அடமானம் வைத்து வர்த்தகம் செய்யும் உங்கள் POSITION ஐ மறுநாள் வரை கொண்டு செல்லக்கூடாது. அதனால் சாதாரண CASH MARKET ல் INTRADAY TRADING ல் (தினசரி வர்த்தகம்) ஈடுபடுபவர்களானாலும் FUTURES வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களானாலும் பெரிய நட்டமின்றி தப்புவதற்கு STOP LOSS என்ற ஒன்றை எப்போதுமே பயன் படுத்த வேண்டும். அப்படி ஒரு ஒழுங்கை கடைப்பிடித்து வர்த்தகம் செய்பவர்களுக்கு நட்டம் வந்தாலும் பிறிதொரு வர்த்தகத்தில் ஈடு கட்ட முடியும். சந்தையில் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்தவர்கள் பெரும்பாலும் கடனுக்கு வர்த்தகம் செய்பவர்களும், STOP LOSS ஐ கடை பிடிக்காதவர்களாகவுமே இருக்கிறார்கள்.

கூகுளின் அறிவியல் கண்காட்சி - இந்திய மாணவி டாப் -15ல்!


கூகுள் நிறுவனம் நடத்திய அறிவியல் போட்டியின் இறுதி சுற்றில் தேர்தெடுகப்பட்ட 15 பேரில் இந்தியாவின் பள்ளி மாணவி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.13லிருந்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் அறிவியல் போட்டியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இயற்கை முறையில் படியிறக்கம் செய்து சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாமல் பயன்படுத்தும் முறையை கண்டறிந்து டாப் – 15 பட்டியலில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி சிரிஷ்டி ஆஸ்தனா இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம், கடந்த 2011-ஆம் ஆண்டு இணையதளத்தில் அறிவியல் கண்காட்சி போட்டி ஒன்றைத் தொடங்கியது.13 வதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்தது.

இதில் இந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகள், அறிவியல் சோதனைகள், ஆய்வு அறிக்கைகள் போன்றவை திறமை வாய்ந்த நீதிபதிகளின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு செய்யப் படுபவருக்கு முதல் பரிசாக 50,000 டாலர் உதவித்தொகையாக வழங்கப்படும். அதைத்தவிர, சிறப்புப் பரிசுகளும் உண்டு. மேலும், தேசிய புவியியல் ஆய்வுக்குழுவினருடன், 10 நாட்கள் பயணமாக ஈக்வடாரில் உள்ள எரிமலைத் தீவுகளான கலப்பாகோஸ் தீவுகளுக்குச் சென்று வரும் வாய்ப்பும் கிட்டும்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிருஷ்டி அஸ்தனா(15) என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாணவி மொஹாலியில் உள்ள மில்லினியம் பள்ளியில் பதினோராவது வகுப்பு படித்து வருகின்றார். தொழிற்சாலைக் கழிவுகளை, சூரிய ஒளி கொண்டு பசுமைத் தொழில்நுட்பத் தீர்வாக மாற்றும் வண்ணம் ஒரு ஆய்வினை சிருஷ்டி சமர்ப்பித்துள்ளார். 120 நாடுகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களிடையே அவர் தேர்வு பெறுவதற்கு இந்த ஆய்வு முக்கிய காரணமாக இருந்தது.

மேலும் இந்த அறிவியல் கண்காட்சியின் இறுதிப் போட்டிக்கு உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர் என்றும் இவர்கள் அனைவரின் படைப்புகளும், வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில், சர்வதேச விஞ்ஞானிகளால் மதிப்பிடப்பட்டு தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 29, 2013

பெயர்களும் - விளக்கங்களும்


ICICI-ன் விரிவாக்கம் ரொம்ப பேருக்கு தெரிவதில்லை.

What about YAHOO?

கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.
சில சுவாரஸ்யமானவை.

Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.

Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.

ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).

STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV.

ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India.

Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.

COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research.

VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.

Wipro- ன் விரிவாக்கம் Western India Products.

googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.

MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.

IBM-ன் விரிவாக்கம் International Business Machines.

Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.

HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.

HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.

MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.

TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited.

Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்.

Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது.

Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது.

KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for  Peat, M stands for Marwick,G is for Goerdeler.

Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.

இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம்  Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.

நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.

Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது

பாரதி! யார்?

இதில் தொகுக்கப் படும் தகவல்கள் பாரதியார் பற்றி நான் படித்தவைகளை ஒரு  குறிப்பாக சேமிப்பதற்கும் அத்தகவல்கள் பற்றி ஏற்கனவே படிக்காதவர்களுக்கு சுவையும் ஆர்வமும் ஊட்டவே.தகவல் பிழை ஏதேனும் இருந்தாலோ அல்லது மேலும்  சுவையான சம்பவங்கள் இருந்தாலோ குறிப்பிடுங்களேன். 

இளமையில் புலமையின் சான்று

ஒரு சமயம் தமிழில் பண்டித்தியம் பெற்ற திரு . சோணாசலம் பிள்ளை அவர்களது மகன் திரு. காந்திமதி நாத பிள்ளை அவர்கள் தன்னை விட வயதில் இளையவரான பாரதியை மடக்க எண்ணி " பாரதி சின்னப் பயல் " என்ற ஈற்றடியைக் கொடுத்து  அதற்கு பாட்டெழுதச் சொன்னாராம்.
உடனே பாரதி சாதுர்யமாய் காந்திமதி நாதப் பிள்ளையே வெட்கும் படி பின்
வரும் பாடலை பாடினாராம்.


ஆண்டில் இளையவனென் றந்தோ, அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்

என்று பாடி, பிரித்துப் படித்தால் " காந்திமதிநாதனைப் பார்-அதி சின்னப்பயல் " என்று பொருள் வரும்படி பாடினாராம்.

ஆனால் , என்னதான் இருந்தாலும் வயதில் பெரியவரான காந்திமதி நாதப் பிள்ளையை  ஏளனம் செய்வது தவறு என்று, சில வார்த்தைகளையே மாற்றி பாடலை அர்த்தம் அடியோடு மாறிப் போகும் படி பாடினாராம். அந்தப் பாடல் கீழே.

ஆண்டில் இளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்

இந்தப் பாடலை இயற்றும் போது பாரதியாருக்கு 15 அல்லது 16 வயதுதான்!!!!

இதே காந்திமதிநாதப் பிள்ளை பாரதியார் "இளசை ஒருபா வொருபஃது" என்ற
பெயரிட்டு எழுதிய 11 பாடல்களடங்கிய பிரபந்தத்திற்கு புகழ்ந்து சிறப்புப்
பாயிரம் எழுதியுள்ளார் பின்வருமாறு

பாலாகற் கண்டா பழம் பொருந்து மின்னமு
தாலாகும் பாகா தமிழுருவா - ஏலாதி
இட்ட சருக்கரையா ஏரிளசைப் பாரதியார்
தொட்ட வொருவொருபஃது.

சிறு வயதிலேயே பாரதியாருக்கு வாய்க்கப்பெற்றிருந்த புலமைக்கு இது ஒரு
சான்று என்றால் மிகையில்லைதானே.

நீச்சல் என்பது தற்காப்புக் கலை!


ஒரே வரியில் சொவதானால் -எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.

அதிலும் நீச்சல் என்பது வெறும் பொழுதுபோக்கோ, விளையாட்டோ அல்ல; ஆபத்து காலங்களில் உயிரைக் காக்கும் தற்காப்புக் கலை. ஆனால் அதற்குரிய முக்கியத்துவம் தரும் நிலையில் தமிழ்நாட்டவர்களில் பெரும்பாலோர் இப்போது இல்லை.

இந்த நீச்சல் என்பது சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது. உடல் எடையைக் குறைக்கவும், மூச்சுப் பயிற்சியை சீராக மேற்கொள்ளவும், தேவையற்ற உடல் கொழுப்பைக் கரைக்கவும், சுவாச உறுப்புகளைப் பலப்படுத்தவும் உதவக்கூடியது. ஆறுகள், ஏரிகள், கடல் போன்றவற்றில் சிக்கித் தவிப்போரை மீட்க நீச்சல் பயிற்சி மிகவும் உதவும். நீச்சல் நன்றாகத் தெரிந்தால் தீயணைப்புப் படை, காவல்துறை, ராணுவம் அதிலும் குறிப்பாகக் கடற்படை போன்றவற்றில் பணிபுரிய வசதியாக இருக்கும். நீச்சலடிப்பதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்மை ஏற்படும்

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் ஏராளமான நீர் நிலைகள் இருந்தன, அவற்றில் ஆண்டின் பெரும்பாலான நாள்களில் தண்ணீர் நிரம்பியிருந்தது. எனவே வீடுகளில் குளிப்பதைவிட ஆறு, குளம், ஏரி, ஊருணி – ஏன் சில சமயங்களில் குட்டைகளில்கூட குளிப்பதுண்டு.

நடப்பது, ஓடுவது போல நீச்சலடிப்பதும் எல்லோருக்கும் பழக்கமாக இருந்தது. சிறு வயதில் குழந்தைகளுக்குப் பெரியவர்கள் நீச்சல் கற்றுத்தந்ததைவிட சம வயதுத் தோழர்கள் கற்றுத் தந்ததே அதிகம்.பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களாக இருந்தால், நீச்சல் ஓரளவுக்குத் தெரிந்ததும் “பம்புசெட்’ கிணற்றின் மீதிருந்தும் ஏரி மதகிலிருந்தும் குதித்து “டைவ்’ அடிக்கவும் கற்றுத் தருவார்கள்.

நவீன காலத்தில் சொல்லப்படும் ‘ப்ரீ-ஸ்டைல்’, “பட்டர்-பிளை’, “பேக் ஸ்டிரோக்’, “பிரெஸ்ட் ஸ்ட்ரோக்’ என்றெல்லாம் பெயர் சூட்டாவிட்டாலும் எல்லாவகை நீச்சல்களையும் கற்றுத் தேர்ந்தார்கள். நீச்சல் தெரியாதவர்களிடம் உனக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்டால், “தெரியும் – கடப்பாரை நீச்சல்’ என்று குறும்பாக பதில் அளிப்பார்கள்.

வீடுகளில் குளிக்கத் தொடங்கிய பிறகு நீச்சல் படிப்படியாக குறைந்து இப்போது அறவே 2 தலைமுறைகளுக்கு மறந்துவிட்டது. இப்போது நீச்சல் பழக விரும்பினாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதற்கு ஏற்றபடி நீர்நிலைகள் இல்லை. நீருள்ள இடங்களிலும் பாதுகாப்பான படித்துறைகளோ, சுகாதாரமான தண்ணீரோ கிடையாது. எனவே கரையோரம் பத்திரமாக குளித்து மீள்வதே சாதனையாகிவிட்டது.

பெரிய நகரங்களில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் இப்போது நீச்சல் குளங்கள் கட்டப்படுகின்றன. அங்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மார்போடு அணியும் லைஃப் பெல்டுகள், ரப்பர் டயர்கள் என்று சாதனங்களும் நவீனமாக இருக்கின்றன.

வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை:

தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த

10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

ஆரோக்கியமான நீச்சல் பயிற்சிக்கு…

* நீச்சல் பயிற்சி செய்ய விரும்புவோர் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களையும் திடீரென்று கடலில் ஏற்படும் பெரிய அலைகள் கவிழ்த்து விடும்.

* நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்தின் தண்ணீர் அடிக்கடி மாற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

* நீச்சல் குளத்திற்கு விடப்படும் நீர் சுத்தமான நீர்நிலையிலிருந்து வருகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

* நீச்சல் குளத்தின் சுற்றுப்புறமும் சுத்தமாக இருத்தல் அவசியம்.

* நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசித் தொடர்பு அவசியம் இருத்தல் வேண்டும்.

* வலிப்பு நோய், இழுப்புநோய், ஆஸ்துமா மற்றும் தோல்வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்களும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.

சில எளிய நீச்சல் பயிற்சிகள்:

மூன்று வகை எளிய நீச்சல் பயிற்சிகள் இதோ!
1. இடுப்பளவு ஆழமுள்ள நீரில் உங்கள் கால்களை நீரில் அழுத்தி பிறகு பின்பக்கமாக நீரில் உதைத்து கால்களை மாற்றி மாற்றி நீந்துவது. இவ்வாறு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கால் தொடைகளுக்கு நல்ல வலிமை தரும்.

2. கழுத்தளவு நீரில் மல்லாந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகளை நீரில் பரப்பி விரித்தும் சுருக்கியும் நீரைத்தள்ளிவிட்டு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கை புஜங்களுக்கும், மார்பு தசைகளுக்கும் நல்ல வலிமை தரும். பெண்களுக்கு மார்புகள் எடுப்பாகி அழகாகும்.

3. கழுத்தளவு நீரில் தரையில் நிற்பதைப்போல செங்குத்தாக நின்று கொண்டு கைகளையும் கால்களையும் தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து உடல் எடையை சமநிலைப் படுத்தி நீச்சல் அடித்தால் ஒட்டு மொத்த உடலும் பலமாகும்.

‘அன்னக்கொடி’ வெற்றிக்கொடி நாட்டுமா?…!


பாரதிராஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ‘அன்னக்கொடி’…

புதுமுகத்தை ஹீரோவாக போட்டு ராதாமகள் கார்த்திகாவை ஹீரோயினாக வைத்து ‘அன்னக்கொடி’யை உருவாக்கியிருக்கிறார் பாரதிராஜா. மொத்த படத்தையும் மதுரையையும், அதை சுற்றிள்ள பகுதிகளிலுமே படமாக்கி முடித்திருக்கிறார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆடு மேய்க்கும் லஷ்மண். இவனுக்கும் சாராயம் காய்ச்சுபவரின் மகளான ஆடு மேய்க்கும் கார்த்திகாவுக்கும் காதல். ஊருக்குள் வட்டிக்கு பணம் கொடுத்து நாட்டாமை செய்து வரும் மனோஜ்குமார் மகன் மனோஜூக்கு கார்த்திகா மேல் ஒரு ஈர்ப்பு… ஆடுமேய்க்கும் ஹீரோவின் காதல் ஜெயித்ததா… வில்லனான மனோஜ் நினைத்தது நடந்ததா என்பதுதான் ‘அன்னக்கொடி’ கதை.

இதற்கு மேல் கதையை விவரிக்க முடியாது… ஏன்னா படம் தொடங்கினதில் இருந்து முடியிற வரைக்கும் கதையை தேடித் தேடி புடிச்ச வரிகள்தான் மேல நீங்க படிச்சது…

மார்டன் பெண் கார்த்திகாவை ஜாக்கெட் இல்லாமல் நடிக்க வைத்து பெறாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைக்கும் அளவுக்கு நடிப்பில் வேலை(?) வாங்கியிருக்கிறார்… இயக்குனர். ஒரு சூழலில் கார்த்திகாவை முக்கால் நிர்வாணமாக ஓடவிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்த நினைத்திருக்கிறார்…. கிராமத்து மைனர்களை வளைத்து காசு பார்க்கும் மீனாளுக்கும் ஜாக்கெட் இல்லா கெட்டப்தான்… மீனாள் தொடர்புடைய சில காட்சிகளை சென்சார் கத்திரி எப்படி வெட்டாமல் விட்டது என்பது இயக்குனருக்கே வெளிச்சம்…

இயக்குனர், தயாரிப்பாளர் அவதாரங்களில் வலம் வந்து கொண்டிருந்த மனோஜ்குமாரை இந்த படத்தில் மருமகளையே மடக்க நினைக்கும் மாமனாராக நடிக்க வைத்து ஆபாசத்தின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர்… இயக்குனர் பாரதிராஜா தனது மகன் மனோஜ் கே.பாரதியை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது… அந்தளவுக்கு படத்தில் மிக கேவலமான கேரக்டரை கொடுத்திருக்கிறார்…

லஷ்மணன் தேனியை சேர்ந்த இவருக்கு இதுதான் அறிமுகபடம்… முதல் படத்திலேயே இயக்குனர் இமயத்தின் பின்னணியில் அறிமுகம் ஆகியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் ஒரு பாடலும் மனசில் நிற்கவில்லை. படத்தின் பின்னணி இசை பல இடங்களில் கேட்கவே இல்லை… டப்பிங் பேசியவர்களை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை போலும்… பேசியவர்கள் பலரும் கடமைக்கு பேசியதால் பல வசனங்கள் கேலிக்கூத்தாக மாறுகிறது…

சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு மட்டுமே பேசப்படும் அளவுக்கு இருக்கிறது. மொத்தத்தில் ‘அன்னக்கொடி’ வெற்றிக்கொடி நாட்டுவது கஷ்டம்…!

ரயிலில் எஸ் எம் எஸ் - டிக்கெட் முன்பதிவு திட்டம்

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் 10 சதவீதம்தான். ஆனால் 45 சதவீத ரயில் டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும் நிலையில் இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டத்தை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அரசு வளர்ச்சி அடைந்து வரும் செல்போன் சந்தையை கருத்தில் கொண்டு, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது அமலுக்கு வந்து விட்ட. இதற்கான பிரத்யேகமாக 139, 5676714 ஆகிய இரு எண்களை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிவித்துள்ளது..

இந்த வசதியை பயன்படுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், தங்களது செல்போன் எண்ணையும், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரையும் ஐ.ஆர்.சி.டி.சி.யில் பதிவு செய்து கொள்ள வேண்டும். டிக்கெட் கட்டணத்தை கழித்து கொள்வதற்காக, வங்கிகள், சம்பந்தப்பட்ட பயணிக்கு ‘மொபைல் மணி ஐடென்டிபயர்’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அது முன்பதிவு செய்வது எப்படி என்பதை விரிவாகச் சொல்லுங்கள் என்கிறீர்களா?

எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்ய 139, 5676714 ஆகிய ஒதுக்கப்பட்டுள்ள எண்களில் முன்பதிவு செய்ய விரும்புவோர் முன்னதாக தங்கள் செல்போன் எண்ணை ஐஆர்சிடிசி-யிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதே போல “மொபைல் மணி ஐடென்டிஃபயர் (எம்எம்ஐடி)’ சேவை அளிக்கும் வங்கியிடமும் செல்போன் எண்ணை பதிவு செய்து, “பாஸ்வேர்ட்’ உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் செல்போனில் “புக்’ என ஆங்கிலத்தில் டைப் செய்து, ஒவ்வொரு இடைவெளி விட்டு ரயில் எண், புறப்படும் இடம், சேரும் இடம், பயண தேதி, வகுப்பு, பயணிகள் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரத்தை “டைப்’ செய்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு எண்களில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்ப வேண்டும்.

பின்னர் பணப்பரிமாற்றத்துக்கான “ஐடி’ செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் வரும். அடுத்து “பே’ என ஆங்கிலத்தில் டைப் செய்து பணப்பரிமாற்ற “ஐடி’, எம்எம்ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை இடைவெளி விட்டு டைப் செய்து மீண்டும் அனுப்ப வேண்டும். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.

அதிகபட்சமாக ஒரு எஸ்எம்எஸ்-ஸில் 6 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒரு எஸ்எம்எஸ்-ஸýக்கு ரூ.3 கட்டணம். டிக்கெட் கட்டணம் ரூ.5000 ஆயிரம் வரை இருந்தால் ரூ.5 கூடுதல் கட்டணம். ரூ.5000-க்கு மேல் டிக்கெட் கட்டணம் இருந்தால் 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்..

அதிர்ந்து போய் ஆராயும் டாக்டர்கள்!

சிலி நாட்டின் லாஸ் லாகோஸ் மாகாணம் புராங்க் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் ஒலிவா, கார்பென்டர். இவரது மகள் யாரிட்ஷா ஒலிவா (20). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். யாரிட்ஷா ஒலிவா இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் அழுத போது கண்ணில் இருந்து ரத்தம் வந்தது. ஒரு மாதமாக தினமும் 3 முறை கண்களில் இருந்து கண்ணீருக்கு பதில் ரத்தம் வருகிறது. இதனால் ஒலிவாவுக்கு பயங்கர வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள கண் டாக்டரிடம் மகளை அழைத்து சென்றனர்.அங்கு என்ன சிகிச்சை அளித்தாலும் ரத்தம் நிற்காததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதலில் ஒலிவாவுக்கு முதலில் கண்ணில் போடுவதற்காக சொட்டு மருந்து கொடுத்தனர். ஆனால், மருந்து போட்டும் ஒலிவாவுக்கு வலியும் குறையவில்லை, ரத்த கண்ணீர் வருவதும் நிற்கவில்லை. அதன்பிறகு பல கண் டாக்டர்களிடம் ஒலிவாவை பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால், டாக்டர்களால் ஒலிவாவின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. ஹெமோலாக்ரியா என்ற அரிய நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து யாரிட்ஷா கூறுகையில், எனக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்படி நடக்கிறது, நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லைÕ என்று பீதியுடன் கூறுகிறார். மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். நல்ல மனம் படைத்தவர்கள் உதவி செய்யுங்கள் என்று ஜோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு வந்த ஒரு செய்தி இது -ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா. இவரது ஒரே மகன் பிரம்மையா வயது 12.சிறுவன் பிரம்மையாவுக்கு 5 வயது இருக்கும்போது அவனது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. முதலில் இதனை பத்மா சாதாரணமாக நினைத்தார். பின்னர் அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததால் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அதன் பிறகு குணம் அடைந்தார். ஆனால் பத்மாவின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவன் பிரம்மையாவுக்கு கண்ணில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியது. தினமும் 4 அல்லது 5 முறை கண்ணில் இருந்து கண்ணீர் போல் ரத்தம் வடிந்ததால் பத்மா கவலை கொண்டார்.இதையடுத்து கிராம மக்கள் அளித்த உதவியை பெற்ற பத்மா தன் மகன் பிரம்மையாவை அழைத்துக் கொண்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரம்மையாவுக்கு பிளட் பிலேடு லெட் டிசாடர் என்ற நோய் தாக்கி இருப்பதாகவும், கோடியில் ஒருவருக்கு இந்த நோய் வரும் என்றும் கண் பார்வையை பாதிக்கும் இந்த நோயை குணப்படுத்த ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறினர்.

ஆனால் இந்த சிகிச்சைக்கு அவ்வளவு பணம் இன்றி பத்மா மகனுடன் சொந்த ஊர் திரும்பிய நிலையில் தனது மகன் சிகிச்சைக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா? என ஏக்கத்தில் வாழ்க்கையை ஒட்டுகிறார் என்று வெளியான செய்தி நினைவு கூறத்தக்கது.

’கருத்தடை’க்கு ஒரு பேட்ஜ்

உலகமெங்கும் ஆண்கள் பயன்படுத்தக்கூடிய காண்டம் (Condoms) வகைகள் நிறைய இருக்கிறது. அதே சமயம் பெண்களுக்கான காண்டமும் இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அது நடைமுறையில் இல்லை. ஆனால் அவசர கால கருத்தடை மாத்திரைகள் (Emergency Contraceptive Pills), கருப்பைக்குள் வைக்கிற கருத்தடை சாதனங்களான லூப், காப்பர்-டி மற்றும் கருப்பையில் வைக்கக் கூடிய “லெவொநர்ஜெஸ்ட்ரல்” (Levonorgestrel) சாதனம்…. என தற்போது நிறைய கருத்தடை சாதனங்கள் இருக்கின்றன.

இதில் லூப்-ஐ மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.மேலும் கருப்பையில் வைக்கக்கூடிய லெவொநர்ஜெஸ்ட்ரல் சாதனமும் காப்பர்-டி போன்ற அமைப்போடுதான் இருக்கும். ஆனால், இதில் காப்பருக்கு பதிலாக கருத்தடை மாத்திரையை வைத்திருப்பார்கள். காப்பர் சிலருக்கு அலர்ஜி ஆகும். இதைப் பொருத்திக் கொள்வதால் மாதவிலக்கின்போது மட்டும் அதிக ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

இதையடுத்து காப்பர்-டி பொருத்திக் கொண்டவர்கள் மூன்று வருடங்களுக்குப் பிறகும், லெவொநர்ஜெஸ்ட்ரல் மாத்திரை பொருத்திக் கொண்டவர்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று மாற்று சாதனத்தை பொருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்த சாதனத்தை கருப்பைக்குள் இருந்து நீக்கி விட வேண்டும்.
இப்படிச் செய்யாமல் விட்டால், நீண்ட நாட்கள் சாதனம் ஒரே இடத்தில் இருந்து இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. அதோடு, சாதனம் தன் சக்தியை இழந்து விடுவதால் மீண்டும் கருத்தரிக்கவும் வாய்ப்புண்டு.

இப்படி கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய பல்வேறு பிரச்னைகளும் அதை தீர்க்கும் முயற்சிகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன. இதில் ஒன்றை விட ஒன்று எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் தற்போதைய இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் இந்த பேட்ஜ்.

‘ஹார்மோன் பேட்ஜ்’ என அழைக்கப்படுகின்ற இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ உலகம். இந்த பேட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்ளங்கை, காலிலோ அழுத்திப் பொருத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹார்மோன்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில் செலுத்தும்போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது.

இந்த ஹார்மோன் களைத்தான் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகள் தருகின்றன. அதே ஹார்மோன்களை சருமத்தின் வழியே மெல்ல மெல்லச் செலுத்துவதுதான் இந்த பேட்ஜ்களின் வேலை. இது தற்போதுதான் இங்கே அறிமுகம் ஆகியுள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, எந்த அளவுக்கு உறுதியாக கர்ப்பத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் தெரியாததால் இன்னும் டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை.

அதிலும் 90 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு இந்த பேட்ஜ்கள் வேலை செய்யாது என்று ஒரு பொதுக்கருத்து உண்டு. எனவே நேரில் ஒரு மருத்துவரை சந்தித்து, உங்கள் உடல்வாகுக்கு அது சரிப்படுமா என்று பரிசோதித்துவிட்டு பயன்படுத்துவது நல்லது!

‘நாய் மனிதன்’ நிஜம் அல்ல!!

‘பிளாஸ்டிக்’ என்றால் ‘செதுக்கி உருவாக்குவது’ to give shape என்றுதான் அர்த்தம். இது கிரேக்க வார்த்தை. பிளாஸ்டிக் சர்ஜரியில் அதைத்தான் செய்கிறார்கள். சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரபலம். கி.மு ஒன்பதாம் நூற்றாண்டில் சாரகா, சுஸ்ருதா என்ற இரண்டு பெரும் வைத்தியர்கள் மருத்துவம்பற்றி பெரும் புத்தகங்களை எழுதினார்கள். சாரகா எழுதியது எட்டு வால்யூம்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா!

சுஸ்ருதா பிளாஸ்டிக் சர்ஜரியில் கில்லாடி. குறிப்பாக, ரைனோபிளாஸ்டி என்கிற (மூக்கை உருவாக்குவது!) சர்ஜரியில் அவர் பிரமாதப்படுத்தினார். மூக்கு ‘ஷேப்’புக்கு இலையைக் கத்தரித்து, அதில் தொடைப் பகுதியில் இருந்து சதையை வெட்டிப் பொருத்திவைத்துச் செதுக்கி, மூக்கு இருந்த பகுதியில்வைத்துத் தைப்பது அவர் ஸ்பெஷாலிட்டி. அப்போது திருமணமான பிறகு கள்ளக் காதலில் ஈடுபட்டவர்களின் மூக்கு வெட்டப்பட்டது. அவர்களுக்கு எல்லாம் ‘மூக்கு’ தந்து அருளியவர் சுஸ்ருதாவே.

இதற்கிடையில் சிலர் மோப்பம் பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களை பார்த்து நீ, நாயா பிறந்திருக்க வேண்டியவன், தப்பி மனிதனா பிறந்துட்ட என்று வேடிக்கையாக கூறுவதுண்டு. அதேமாதிரி, நகைச்சுவை துணுக்குகளில் கூட, “நான் அடுத்த ஜென்மத்திலையாவது நாயா பிறக்கணும், ஏன்னா என் மனைவி நாய்க்கு தான் பயப்பிடுறான்னு” சொல்வதுண்டு. என்ன தான் வேடிக்கையாக மனிதனை நாயோடு ஒப்பிட்டு பேசினாலும் சிலருக்கு நாயின் மீது அளவு கடந்த அன்பும்,பாசமும் இருக்கதான் செய்கிறது. அதன் வெளிப்பாடாக அவர்கள் நாய்களை தங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பார்கள். ஆனால் தற்போது பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டி அறுவை சிகிச்சை மூலம், தன் முகத்தையே நாய் வடிவில் மாற்றி கொண்டதாக வந்த ஒரு செய்தி‘வலை’களில் பரவுகிறது .

தென் அமெரிக்க நாடான பிரேசிலை சேர்ந்த பேர் சொல்ல விரும்பாத செல்வந்தர் ஒருவர் தன் வாழ்நாளில் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாராம். இந்நிலையில் தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொள்ள விரும்பிய அவர் ஏராளமான பணத்தை செலவு செய்து நாயின் முக வடிவை பெற்றுள்ளதாகவும்.இதற்காக இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள் என்றும் நியூஸ் பரவியது

மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் அசல் நாயின் முக உருவை பெற்றுள்ள அவர் இதனால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உலகிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயின் உருவத்தை பெற்ற முதல் மனிதர் என்பதால் பொதுமக்கள் இவரை “டாக் மேன்’ என செல்லமாக அழைக்கின்றனர் என்று தகவல் வெளியான நிலையில். இப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை. பிரேசியலைச் சேர்ந்த வெட்னரி சர்ஜன் ஒருவர் கிளப்பிய புரளி இது என்றும் செய்தி வருகிறது.அதிலும் இது 2004- ல் எடுக்கப்பட்ட புகைப்படமாம் இது. ஹும்.. மீடியாகள் எப்படியெல்லாம் ஏமாந்து/ ஏமாத்தறாங்க!

Thursday, June 27, 2013

வயிற்றைக் குப்பையாக்கும் தீனிப் பழக்கம் !

முன்பெல்லாம் சாதாரணக் கடைகளில்கூட சரம் சரமாய் தொங்கும் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், குட்கா போன்றவற்றைக் காண முடியும். இப்போது இதில் உணவுப் பொருள்களும் அடக்கம் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயிலிருந்து தின்பண்டங்கள் சிறு பொட்டலங்களாய் பெட்டிக் கடைகளில் தொங்குகின்றன. சிறார்களின் உணவு ஆசை சட்சட்டென்று நிறைவேறிப் போகிறது. அவர்களின் வயிறும் சுலபமாக குப்பைக் கிடங்காகிறது. குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வயிற்றைக் கழிவுகளின் இருப்பிடமாக்கிக் கொள்கிறார்கள்.

பெரியவர்கள் தெரிந்துகொண்டே இதைச் செய்கிறார்கள். அவசர உணவுத் தேவைக்கு இதுபோல் எதையாவது வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள். அவற்றில் பிஸ்ஸா, பர்கர், ஹாட்-டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் வகை உணவுகளும் அடங்கியிருக்கின்றன.

அலுவலகம் போகும் ஆண்கள் கையில் சாப்பாட்டுப் பொட்டலம் கொண்டு போவதைத் தேவையில்லாததாக்கி இவற்றையே நாடுகின்றனர். வார இறுதிகளில் உணவு விடுதிகளை நாடுவது சாதாரணமாகிவிட்டது. அல்லது விதவிதமான சாப்பாடு சாப்பிடுவதற்காக வெளியூர் போகிறார்கள். வெளிநாடு சுற்றுலா போகிற பலர் அந்தந்த நாட்டு உணவை ருசிக்கவும் அதிகப் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கிறார்கள். உணவுத் திருவிழாக்கள் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகளில் அவை நடைபெற்று வந்தன. இப்போது தெருக்களிலும், சாதாரணத் திருமண மண்டபங்களிலும் நடைபெறுகின்றன. அன்னிய வகை உணவுகள் சுலபமாக மேசைக்கு வந்துவிடும்போது யாருக்கும் சாப்பிடுவதற்கு ஆசை ஏற்படத்தான் செய்யும். உணவு, கேளிக்கை இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது.

இவ்வகை துரித, “ஜங்க்’ உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன.

மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவைத் தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்ச்சத்து, ரசாயனக் கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்துவிட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருள்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும், குறைத்தும் விளையாட்டுக் காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கு உடல் உபாதைகளை மீறிக் கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்றவற்றுக்கு ஆளாகிறார்.

பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவுப் பரிமாறலில் பல நூற்றாண்டுத் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதைக் காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய், ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம், ஆடு, கோழி இறைச்சி, பதநீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு, இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால், நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.

தொழிலுக்குத் தகுந்தபடியும், வருமானம், பருவ காலத்திற்கு ஏற்பவும் உணவு முறைகளைத் தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். வேனில் காலத்தில் தண்ணீர் கஞ்சி, குளிர் காலத்தில் சுடுசோறு கம்பு, களி உணவுகள் என்றும் வழக்கத்திலிருந்தது. தங்களுக்குக் கிடைக்கும் இளநீர், நுங்கு, மாம்பழம், கொய்யா ஆகியவற்றை சுலபமாக எடுத்துக் கொண்டனர். சமைக்காத சத்துள்ள உணவுகள் தொடர்ந்து கிடைக்க வழி இருந்தது. உணவைச் சமைக்க ஆரம்பித்த பின் அவை வெகு சுவையாகவும், எளிதில் செரிக்கும் தன்மையும் கொண்டிருந்ததால் சமையல் கலை வளர்ந்தது.

சமையல் கலை இன்று ஒருவகைப் படிப்பாகவும் வளர்ந்துவிட்டது. சிறு நகரங்களின் உணவு விடுதிகள், பள்ளி மாணவர் விடுதிகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவுக் கூடங்களில்கூட இவ்வகை படிப்புப் படித்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமையல் கலை சார்ந்த படிப்புகளும், கல்வி நிறுவனங்களும் வளர்ந்து அத்துறையிலும் வேலையில்லாத பட்டதாரிகளை உருவாக்கிவிட்டது. பரோட்டா, பிரியாணி, குஸ்கா, பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் என்று தமிழ்ப் பெயர்களற்று உணவுப் பண்டங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.

தினசரி சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட மாற்று உணவுகளை தேடிப் போனான் தமிழன். ஆனால் இன்று நமது பாரம்பரிய உணவுகளை மாற்று உணவு என்று மீண்டும் தேடி வர வேண்டியுள்ளது. நம்மிடம் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் இருந்தன. இன்று நோய் கொண்டு வரும் உணவுப் பொருளைத் தேடுவதில் சுகம் கண்டு கொண்டான். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் பணி நேரம் தவிர சமையலில் அதிக நேரம் செலுத்த இயலாமல் துரித வகை உணவுப் பழக்கங்களில் முடங்கிப் போய்விடுகிறவர்களாக இருக்கிறார்கள்.

நோய்களுக்கும் வகை வகையான மருந்துகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, சுடுக்காய், சித்தரத்தை, மதுரம், கிராம்பு, வெட்டி வேர், வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள், மணத்

தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று வெவ்வேறு கீரை வகைகளும் சாதாரண உணவில் சேர்க்கப்படும்பொழுது நோய்க்கு மருந்தாகும். இன்று மருந்தைத் தனியாகத் தேடி நிறையச் செலவு செய்து உடம்பை மோசமான இயந்திரமாக்க வேண்டியிருக்கிறது.

வயிற்றைக் குப்பையாக்கும் குப்பைத் தீனிப் பழக்கம் இன்றைய இயந்திர வாழ்க்கையின் நெருக்கடியால் தவிர்க்க இயலாமல் வந்து சேர்ந்து விட்டாலும் நுகர்வுக் கலாசார உணவுப் பண்பாய் ரத்தத்தில் கலந்துவிட்டதை அறுவை சிகிச்சை மூலமே தவிர்க்க இயலும் நிலைக்கு வந்தாகிவிட்டது!.

விலை போகும் விவசாய நிலங்களும் நிலை குலையும் பொருளாதாரமும்!

ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடன் சுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க தீவிர நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வழக்கமான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 2001 முதல் 2011 வரையிலான காலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் 8.7 லட்சம் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை விற்றுவிட்டதாகவும் விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 9.7 லட்சம் மேலும் கூடியிருப்பதாகவும் சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.அனைத்திந்திய அளவிலும் சொந்தமாக நிலம் வைத்திருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டில் 41 சதவீதமாக இருந்தது 2011-ஆம் ஆண்டில் 36.2 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகத் தெரியவருகிறது.

விளைநிலங்களை வீட்டுமனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றுவதாலும் சுரங்கத் தொழிலுக்குப் பயன்படுத்துவதாலும் விளைநிலங்களின் பரப்பும் சுமார் 2 சதவீதம்வரை குறைந்துவிட்டதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 1988-89-ஆம் ஆண்டில் 185.142 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்த விவசாய நிலம், 2008-09-ஆம் ஆண்டு 182.385 மில்லியன் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டதாக மத்திய உணவு அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதாவது 2.757 மில்லியன் அளவுக்கு விவசாய நிலம் வேறு பயன்பாட்டுக்குத் திருப்பிவிடப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு, ஸ்ரீரங்கம் அருகே காகிதத் தொழிற்சாலைக்காக 935 ஏக்கரையும் தொழிற் பூங்காவுக்காக 1,077 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. தொழிற்பூங்காவால் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசு தெரிவிக்கிறது. இருப்பினும் விவசாயிகளுக்கு விளைநில இழப்பும் ஏற்படும்.

பாசன நீர் பற்றாக்குறை, கடுமையான மின்சார வெட்டு, இடுபொருள்களின் விலை உயர்வு, விவசாயத்துக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்காத நிலை, விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, விவசாயக் கூலி உயர்வு, நன்கு விளைந்த காலங்களில் கொள்முதலில் தொய்வு, கட்டுப்படியாகும் விலை கிடைக்காமை என்று விவசாயிகளுக்குப் பல பிரச்னைகள் நீடிக்கின்றன. கிராமங்களில்கூட இப்போது வாழ்க்கைச் செலவு மிகுந்துவிட்டது.

வருவாய் இல்லாத ஒரு தொழிலில் ஆண்டு முழுவதும் உழைப்பைச் செலுத்தினாலும் வாழ்க்கைச் செலவுகளுக்குக் கூட போதாமல் கடன்காரனாக வேண்டியிருக்கிறதே என்ற உளைச்சலிலேயே ஏராளமான சிறு, குறு விவசாயிகள் நிலங்களை விற்று வருகின்றனர். விவசாயம் தவிர வேறெதுவும் தெரியாத விவசாயிகள் கூலி வேலைக்குத்தான் செல்கிறார்கள்.

விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறுவதை மத்திய, மாநில அரசுகள் அக்கறையுடன் கவனிக்கவில்லை. அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை.வேளாண்துறையைவிட தொழில்துறைதான் முக்கியமானது, அதை முன்னேற்றுவதில்தான் அக்கறை செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. சொந்த முதலீட்டைவிட அன்னிய நேரடி முதலீடுதான் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் என்றும் நம்புகிறது.

கிராமங்களிலிருந்து விவசாயிகள் நிலங்களை விற்று வெளியேறி நகரங்களுக்குக் குடிபெயர்ந்தால், கிராமம், நகரம் இரண்டிலும் அமைதி குலையும். நம்முடைய பொருளாதாரம் செழிப்பதற்குப் பதிலாக நிலைகுலையும். இதை மத்திய,மாநில அரசுகள் முதலில் உணரவேண்டும்.

பூமிவெப்பமாவதால் மாறிபோகும் பூப்பெய்தலும், மாதவிடாய் நிற்கும் காலமும்!

ஒரு பெண் குழந்தையாக பிறந்து, பூப்பெய்தி, திருமணம் முடிந்து குழந்தைப் பேறு அடைந்து, மாதவிடாய் நிற்பது வரை ஒவ்வொரு கால கட்டமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெண்ணின் வாழ்வில் இவை அனைத்துமே மிக முக்கியத் தருணங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கால வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூப்பெய்துதல் என்பது 12 முதல் 15 வயதுக்குள்ளும், திருமணம் என்பது 25 வயதுக்குள்ளும், குழந்தைப் பேறு 30 வயதுக்குள்ளும் நிகழ்ந்து விடுவது நல்லது. மேலும், மாதவிடாய் நிற்பது என்பது 40 வயதுக்கு மேல் நடக்கும் இயற்கையான விஷயமாகும்.

இவை அனைத்தும் ஒரு பெண்ணுக்கு ஆக வேண்டிய கால கட்டத்தில் நடந்துவிட்டால், உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தற்போது மாறி வரும் உணவு பழக்க வழக்கமும், உலக வெப்பமயமாகலும், பணிச் சூழலும், பெண்களின் இந்த வளர்ச்சிகளில் பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு 15 வயதில் பெண்கள் பூப்படைந்தனர். பிறகு, உணவு மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக பெண்கள் 12 முதல் 13 வயதுக்குள் பூப்பெய்தி வந்தனர். ஆனால் அதிலும் தற்போது மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதாவது, தற்போது பெண்கள் 10 வயதிலேயே பூப்பெய்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உலக அளவில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பூமி வெப்பமாவதும் இதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதேப்போல, பெண்கள் அதிகம் படித்து, பணிக்குச் செல்வதால் திருமணத்தை தள்ளிப்போட்டு, அதன் காரணமாக குழந்தைப் பேறும் தள்ளிப் போடப்படுகிறது. பெண்களின் கருப்பை மற்றும் குழந்தைப் பேறுக்கு காரணமாகும் ஹார்மோன்களின் பணி 30 வயது வரை தான் சீராக இருக்கும் என்பதால் அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தும் அளவுக்கு வந்துவிட்டது. தற்போது பெரும்பாலான பெண்களுக்கு கருப்பை நீர்கட்டிகள் பெரும் பிரச்னையாக உள்ளது. பூப்பெய்துதல், மாதவிடாய் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாக்கும் இந்த நீர்கட்டிகள், குழந்தைப் பேறு ஏற்படுவதை தடுக்கவும் செய்கின்றன. குழந்தைப் பேறு தள்ளிப் போகும் பெண்களில் பெரும்பாலானோருக்கு இப்பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இது ஏற்பட என்ன மருத்துவக் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது.

மேலும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் மற்றொரு பிரச்னை தலைதூக்கி உள்ளது. அதுதான் மாதவிடாய் நிற்கும் காலம். பொதுவாக 40 வயதில் இருந்து 45 வயதுக்குள் இது நிகழும். ஆனால், எவ்வாறு பூப்பெய்தும் வயது குறைந்து வருகிறதோ, அதேப் போல, மாதவிடாய் நிற்கும் காலமும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதில் மிகவும் அச்சப்பட வேண்டிய விஷயமும் ஒன்று உள்ளது. அதாவது, எந்நேரமும் கணினி முன் உட்கார்ந்து பணியாற்றும் பெண்கள் சிலருக்கு 30 வயதுக்குள்ளாகவே மாதவிடாய் நிற்கும் காலம் துவங்கி விடுவதுதான். இது நூறில் ஒன்று என்ற அளவுக்கு நடந்தாலும், உடனடியாக சிகிச்சையும், முறையான உடற்பயிற்சியும் செய்தால் மாதவிடாயை மீண்டும் தொடர வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனினும், பல பெண்கள், திருமணத்தையே 30 வயது வரை தள்ளிப் போடும் நேரத்தில், மாதவிடாய் நிற்கும் காலம், 30 வயதை நோக்கி முன்னேறுவது சற்று கவலை அளிப்பதாக உள்ளது. திருமணம் முடிந்து குழந்தைப் பேற்றை எதிர்நோக்கும் போது, மாதவிடாய் நின்றுவிட்டால், அந்த பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக வாய்ப்பிருக்கிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில், பெண்களின் மனநிலையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதிக கோபம், மன அழுத்ததம் போன்றவை காரணமாக, பெண்களின் பணியும், வாழ்க்கையும் பாதிக்கப்பட நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மருத்துவமனை ஒன்றில் மகளிர் நல பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில் 20 வயதுக்கு மேல், 30 வயதுக்குள் மாதவிடாய் நிற்கும் காலம் ஏற்படுவது அதிகம் இல்லை என்றாலும், ஒரு ஆண்டில் 2 அல்லது 3 பேருக்கு இவ்வாறு ஏற்படுகிறது. நகர வாழ்க்கையும், செயற்கையான, மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் பயன்பாடு, அதிக மன அழுத்தம் மற்றும் பல காரணங்களால் இது ஏற்படுகிறது. ஆனால், வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தின் காரணமாக, ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டாலும் கூட, சிகிச்சையின் மூலமாக எளிதாக சரி செய்து விடலாம் என்கிறார் நம்பிக்கையோடு.

விண்டோஸ் குறைபாடுகளை கண்டுபிடிப்போருக்கு 30 லட்சம் பரிசு! - மைக்ரோசாப்ட் அறிவிப்பு


விண்டோஸ் சாப்ட்வேர் பாதுகாப்பானது அல்ல என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது. இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது.இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ்,8 சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு நவீன வரிசையை வெளி யிடும் நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் இறங்கி உள்ளது.

இந்நிலையில், விண்டோஸ் சாப்ட்வேரில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை பயன்படுத்தி கொண்டு, ஹாக்கர்கள் எனப்படும் இணையதளத் தில் வைரசை பரப்பி குறிப்பிட்ட சாப்ட்வேர்களை முடக்குதல் அல்லது அதில் இருந்து தகவல்களை திருடுதல் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் சிடாடெல் நகரத்தில் வங்கியின் சாப்ட்வேரில் புகுந்து வாடிக்கையா ளர்களின் ரூ.2,950 கோடியை சத்தமில்லாமல் மர்ம நபர்கள் சுருட்டினர். இதேபோல், ஈரானின் அணு திட்டத்தையும் 2010ம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து குளறுபடிகளை செய்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்த சம்பவங்களிலும் இருந்த கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் சாப்ட்வேர்தான் இருந்தது.

இதனால் விண்டோஸ் சாப்ட்வேர் பாதுகாப்பானது அல்ல என்பதுபோன்ற தோற்றம் உருவாகி வருகிறது. இதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கி உள்ளது.இதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் வரிசையில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதற்கு தகுந்த வழி கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மேலும், மோசடிகளை தடுக்கும் வழிமுறைகளை சொல்பவர்களுக்கு தனியாக ரூ.6.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ.59 லட்சமாகும். இனி வரும் காலங்களில் விண்டோஸ் சாப்ட்வேர்கள் அனைத்தும் இதுபோன்ற வழிமுறைகளின் மூலம் பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியிடவும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு....

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்) 

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். 

திராட்சை (Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

தங்கம் வாங்க போறீங்களா..? எச்சரிக்கை அவசியம்...

Shoppers Beware - இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் அக்க்ஷையை திருத்திகை அன்று பொட்டு தங்கமாய் வாங்க வேன்டும் என்று நம்பும் மக்களுக்கு - இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது. இரண்டு ரூவாய்க்கு வெத்திலை வாங்கினால் நம்மளுங்க பார்த்து இளம் வெத்தலை வேனும்னு கில்லி கில்லி பார்த்து மற்றூம் இருபது ரூபாய்க்கு வாங்கும் வெண்டைக்காயை இளசா வேனும்னு நுனியை ஒடிச்சு ஒடிச்சு வாங்கும் நாம், அந்த அன்றாடகாச்சியை உண்டு இல்லை என ஆக்கி ஒரு வெற்றி சிரிப்புடன் வீட்டுக்கு வந்து அந்த புரானத்தை எபிஸொடு எபிஸொடாக ஸ்பான்ஸ்ர்ஸிப் இல்லாமல் எல்லொரிடம் சொல்லி பீத்திப்போம் ஆனால் கிடைக்கும் இந்த அல்ப வெள்ளி தங்க வெள்ளி காயினுக்கு அடிமை ஆகி முதலுக்கே மோசமாகி லட்சகணக்கில் ஏமாறுகிறோம். சரி கிடைத்த காயினாவது நல்லதா என டெஸ்ட் செய்யுங்கள் 50 - 60% டூப்ளிகேட் காயின்கள் தான். முக்கால் வாசி வெள்ளி காயினள் - அலுமினியத்தில செய்ய பட்டு வெள்ளி முலாம் பூசபடுகிறது. அதே மாதிரி தங்க காயின்களும் லஷ்மி படம் போட்டு அம்பாள் பூசாரி கனக்கா சாமி படத்தில் ஒத்தி எடுத்து கொடுத்த உடன் நாம் மதி மயங்கி அப்படியே பூஜை ரூமில் அல்ல்து லாக்க்ரில பதுக்கி வைப்போம். அரை கிராம், ஒரு கிராம் இரண்டு கிராம் வரை நாம் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்றாவது அந்த காயினை எடுத்து நகை கடையில் கொடுத்தால் தான் நமக்கு சொல்லுவார்கள் சார் இது உண்மையான வெள்ளி தங்கமில்லை என்று. இவர்களின் மெயின் டார்கெட் புதிதாக முளைத்து இருக்கும் நவீன ஃபிராடு கல்ச்சர் - "அக்ஷய திருதி" இது நகை கடைக்காரகளின் நவின பிராட் ஆகும். அந்த ஒரு நாள் மட்டும் நம் வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடாதா என தங்கம் வாங்க வழியில்லாதவர்கள் கூட எப்படியாவது ஒரு கிராம் இரண்டு கிராம் என அவர்களின் சுளையாக பணத்தை கொடுத்து இந்த மாதிரி காயினை வாங்கி பூஜை அறையில் வைத்து என்றாவ்து அதை மாற்ற நினைக்கும் போது அந்த குட்டு வெளிப்படும். த்ங்க காயின் பிராடுகள் நான் கீழே இனைத்துள்ள தங்க காயின் டிசைந்தான் ஒரிஜினில் டூப்ளிகேட் - இந்த சாமி படம் தவிர வேறு எந்த டீடெய்லும் இருக்காது. இது இவர்கள் மட்டுமல்ல ஐ சி ஐ சி ஐ, ரிலயன்ஸ் மற்றும் பெரிய தங்க வியாபரிகளும் இந்த ஏமாற்று வேலையில் பங்குண்டு. உங்களூக்கு ஒருத்தர் வெள்ளீ அல்லது கோல்டு காயின் கிஃப்டாக கொடுத்தால் தயவு செய்து நீங்கும் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் அன்றைய தங்க வெள்ளி விலையில தயங்காமல் தள்ளூபடி செய்து பாக்கி பணம் பெற்று கொண்டால் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஆனால் 90 % வெள்ளீ மற்றும் கோல்டு காயின் கிப்டாக கொடுப்பவர்கள் வேண்டுமென்றால் கிப்ட் வாங்கி கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் விலையில் குறைக்க முடியாது என்று சொன்னால் தயவு செய்து அந்த பக்கம் கூட தலை வைத்து படுக்கதீர்கள் இந்த அரை, ஒன்னு, இரண்டு கிராமுக்கு கூட உண்மை இல்லாத இவர்கள் எப்ப்டி உங்கள் லட்ச கனக்காம பர்சேஸ்க்கு உண்மையாக இருப்பார்கள். சரி இப்படியே இந்த தங்க ப்ர்சேஸ் பற்றியும் பார்த்து விடலாம்

கோல்ட் காயின் எவ்வளவு இருந்தாலும் ஆத்திர அவசரத்திற்க்கு வங்கியில் அடகு வைக்கமுடியாது

இதற்க்கு மூனு காரணம்,1.வருமானம் அதிகம், 2. அடுத்தவரை பார்த்து கொண்டாடும் ஸ்டையில் 3. தவறாக சம்பாதித்த பணம் இது மூன்றும் இந்த அக்க்ஷையை திருத்திகை பண்டிகையை டோட்டலாக மாற்றியது. மேல் கூறிய பர்சேஸ் போக புது அப்ளையன்ஸஸ் மற்றூம் புது நகை ப்ர்சேஸ் இன்றியமையானது. நகை வாங்கும் கலை ஏனோ சில பரம்பரை ஷாப்பிங் ஜித்தர்களுக்கு மட்டுமே எளிதாகிறது, மற்றவர்களுக்கு மைக்ரேன் வந்தவனை ரோல கோஸ்டரில் ஏற்றி விட்ட கதை தான் - இதை ஏன் கூறுகிறேன் என்றால் நூற்றில் மூன்று சதவிகித பேர்தான் ரோலகோஸ்டரில் ஏறி இறங்கும் வரை சுற்றி என்ன நடக்கிறது என கண் இமைக்காமல் பார்ப்பார்கள், மீது உள்ள 97% சதவிகித மக்கள் ஏறியது தான் தெரியும், அது சுற்றி நிற்கும் வரை கண்ணை திறக்கவே மாட்டார்கள். அந்த கதை தான் நகை விற்கும் கடைகளின் அலிபாபா குகை எக்ஸ்பீரியன்ஸ். தங்கம் என்னை பொறுத்த வரை நிறைய பேர் டிசைனுக்கு கொடுக்கும் இம்பார்டன்ஸ் அதன் தரம், அதன் உண்மையான வேல்யு பற்றி கவலை படாமல் குருட்டாம் போக்கில் வாங்குகின்றனர். கடைக்குள் போன உடனேயே உலகத்தில் எங்கு பவர் கட் இருந்தாலும் இந்த தி நகர் திருட்டு அண்ணாச்சிகள், பாரிமுனை பஜன்லால்கள், புரசை பெர்னான்டோக்கல் ஒரு வசிய சக்தியை நம் மீது தெளித்து பக்ரீத்துக்கு ரெடியாகும் பலி ஆடுகளை போல் நடத்துவார்கள்.

Please CONSIDER THIS FACTS before you purchase.

1. தங்கம் 16 கேரட் / 18 கேரட் / 20 கேரட் / 22 கேரட் / 24 கேரட் தரம் பற்றீ நன்கு விசாரித்து வாங்குங்கள். Hall Mark is MUST

2. மெஷின் கட் வாங்கவே வாங்கதிர்கள் சீக்கிரம் உடைந்து விடும்.

3. குறைந்த வெயிட்டில் பெரிதாக தோன்றும் நகைகள், மற்றூம் தோடு, வளையல்கள் வாங்கவே வாங்காதிர்கள். அத்ற்க்கு உள்ளே மெழுகு, செம்பு,மற்றூம் வெள்ளீ ஃபில்லிங்க் இருக்கும்.

4. கண்டிப்பாக கல் வைத்த நகைகளை வாங்க வேண்டாம், வாங்கினால் 30 - 45% உங்கள் பணம் பச்சா.

5.தயவு செய்து ஒயிட் மெட்டல் நகைகளை தெரியாத கடைகளிடம் வாங்கவே வேண்டாம். பாதி ஒயிட் மெட்டல் நகைகள் ஒரிஜினல் அல்ல.

6. சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றூம் நிறைய நாடுகளில் தங்கத்தின் விலையை வெளியே போர்ட்டு போட்டிருப்பார்கள். அந்த விலை மற்றும் எவ்வளவி கிராமோ அவ்வளுவுதான் விலை, நம்மூர் கொள்ளை ஃபார்முலா கிடையாது, இங்குதான் செய்கூலி / சேதாரம் / கல் சார்ஜ் அப்புறம் லொட்டு லொசுக்கு இத்யதி இத்யாதி போட்டு தங்கத்தின் விலையில் 30 - 45% எக்ஸ்ட்ரா போட்டு ஒரு ஜெர்க் கொடுத்து உங்களுக்கு ஆபத்பாந்தவர் போல சரி பில் போட்டா இன்னும் காஸ்ட்லி என்று புருடா விட்டு 70% நகைகள் பில் இல்லாமல் தான் விற்பனை ஆகிறது.இதனால் விற்க அல்லது மாற்ற செல்லும் போது இன்னுமொரு 30 - 40% லாஸ். 916, கேடி எம், கடை சீல் எனும் அல்வாவை கண்டிப்பாக நம்பவேண்டாம், ஆக மொத்தம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பத்தாயிர ரூபாய்க்கு மூனாயிரம் தான் ஹேன்ட் இன் வேல்யு. சோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆனாலும் பராவயில்லை தயவு செய்து பிராப்பர் பில்லை வாங்குங்கள் அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நகை தரம் குறைந்தால், இல்லை உடந்தாலோ அல்லது கலப்படம் இருந்தாலோ அவர்கள் உங்களுக்கும் அன்றைய தேதிக்கு முழு பணமோ அல்லது தங்கமோ தர வேண்டும் இல்லையென்றால் நீங்கள் கன்ஸுமர் கோர்ட்டுக்கு சென்றால் அவர்கள் நஷ்ட ஈடு தந்தே ஆகவேன்டும். வெள்ளை பேப்பரில் அல்லது ரப்பர் ஸ்டாம்பில் பில் போட்டு கொடுத்தால் கண்டிப்பக வாங்க வேண்டாம். ஆஸ் இஸ் (AS IS) என போட்டு கொடுத்தாலும் வாங்க வேண்டாம்.தங்கம் வாங்குவது ஒரு நல்ல சேமிப்பு ஆனால் பார்த்து வாங்கி உங்கள் முழு வேல்யு இருக்குமாரு பார்த்து கொள்ளுங்கள்.

TDS-ஐ கழித்தப்பின்...

வருமான வரியை மூலாதாரத்தில் இருந்து கழிக்கும் பொறுப்பில் உள்ளவரே TDS சான்றிதழ்களை வெளியிடுவார். TDS-ஐ கழித்தப்பின் அதற்கான சான்றிதழை வெளியிடுவது மிகவும் முக்கியம். அப்படி வெளியிட்டால் வரி கட்டியவருக்கு எவ்வளவு கட்டியிருக்கிறோம் என்று தெரியும். பல நிறுவனங்கள் நீங்கள் கேட்கும் வரை இந்த சான்றிதழை தர மாட்டார்கள். அதனால் உங்கள் TDS சான்றிதழ்களை கேட்டு வாங்குவது மிகவும் அவசியம். நீங்கள் கட்டிய வரி எவ்வளவு அரசாங்கத்திடம் வைப்பு நிதியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் TDS இல்லாத வைப்புகள் மற்றும் பரிவர்த்தனைகள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். (Govt banks that offer highest interest rates on FDs) ஒரு உதாரணம்: உங்களின் வைப்பு நிதி உங்களுக்கு வட்டியாக 11,000 ரூபாய் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் வங்கி அந்த வட்டியில் இருந்து 1100 ரூபாயை பிடித்துக் கொள்ளும். அதனால் மூலாதாரத்தில் இருந்து 1100 ரூபாய் வட்டி கழிக்கப்படும். அந்த வங்கி உங்களுக்கு 1100 ரூபாய்க்கான TDS சான்றிதழைத் தர வேண்டும். உங்கள் வைப்பு நிதியில் இருந்து வருமான வரி கழிக்கப்பட்டது என்றும், அதனை அரசாங்கத்திடம் கட்டப்பட்டது என்றும் இந்த சான்றிதழ் குறிப்பிடும். சரி, உங்கள் வருமானம் வருடத்திற்கு 2 லட்ச ரூபாயை தாண்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நீங்கள் வருமான வரி கட்டும் வேளையில், இந்த 1100 ரூபாயை திரும்பி பெற்றுக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் எவ்வளவு TDS பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. இருப்பினும் பல பேருக்கு இணையதளத்தை உபயோகிக்க தெரியாது. அவர்கள் TDS சான்றிதழ் பெற்று அவர்களுடைய வரி கணக்கை கணக்கிட்டு பார்த்துக் கொள்வது நல்லது. உங்கள் வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறையாக இருந்தால், உங்களுக்கு TDS-ஐ கழிக்க விருப்பம் இருக்காது. அப்படி இருந்தால் படிவம் 15G அல்லது 15 H-ஐ சமர்ப்பித்தால், வங்கியோ அலுவலகமோ TDS-ஐ கழிக்க மாட்டார்கள். இந்த ஆண்டின் பட்ஜெட்டில் TDS கழிதல் கண்டிப்பாக ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களுக்கும் தேவை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதன்படி நீங்கள் 20 லட்ச ரூபாய்க்கு அதிகமாக ஒரு சொத்தை விற்றால் அதற்கு கண்டிப்பாக TDS கட்ட வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும், TDS சான்றிதழை வாங்குவது மிகவும் முக்கியம். அதே போல் நீங்கள் கழிப்பவராக இருந்தால், TDS சான்றிதழை கொடுப்பதும் மிகவும் முக்கியம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்குபவரா? அப்படியானால் அவசியம் படியுங்கள் .

இணையம் வழியாக பொருள்கள் அல்லது சாதனங்களை வாங்குவதையே ஆன்லைன் ஷாப்பிங் என்கிறார்கள். இந்த இணைய வர்த்தகத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது எனலாம். பணம் விளையாடும் இந்த துறையில் நமது பணத்தையும் தகவல்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதைப்பற்றி விவரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்! தகவல் தரவுகள் பின்வருமாறு!

இணைய வழி விற்பனைக்கென 100 கணக்கில் தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதும் நமது கடமையே. சில தளங்கள் போலியாக நடத்தப்படும். அம்மாதிரி தளங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்!

கடவுச்சொற்களை வலுவானதாக வைக்கவேண்டும். எண்கள் மற்றும் எழுத்துக்கள் கொண்டு குறைந்தது 8 உருக்களைக்கொண்ட கடவுச்சொள் பயன்படுத்துவது சிறந்தது. அடிக்கடி பாஸ்வர்ட் மாற்றுவதும் நல்லதே!

ஆன்லைன் ஷாப்பிங் பாதுகாப்பானதாக மாற்ற அதிகப்படியான பாதுகாப்பு முறைமைகளைக் கொண்ட தளங்களை பயன்படுத்தவேண்டும். அதாவது https:// போன்ற URL கூறுகளை கொண்டிருத்தல் அவசியம்.

சமூக வலைத்தளங்கள் வழியாகவும் பல்வேறு வைரஸ் மென்பொருட்கள் உங்களுடைய கணினிகளில் பதியப்படுகிறது. எனவே ஜாக்கிரதை தேவை.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவைகளை பாதுகாப்பாக பயன்படுத்தவேண்டும். ஏதாவது தவறு நடந்ததாக தெரிந்தால் உடனே உங்களுடைய வங்கியை தொடர்புகொள்ளவும்.

இதில் டெலிவரி டேட் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. சேவை வழங்கும் தளமானது சொன்ன தேதியில் பொருட்களை வாடிக்கயாளர்களுக்கு வழங்குகிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.

குறிப்பிட்ட தளத்தில் பொருள் வாங்குகிறீர்கள் என்பதுடன் உங்களது கடமை முடிவதில்லை சரியான முகவரியை தருவதே உத்தமம். இல்லையென்றால் அந்நிறுவனத்தால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களிடம் சேர்க்கமுடியாத சூழலும் ஏற்படும்

வெளியிடங்களில் அல்லது வீடுகளில் கூட இம்மாதிரி ஷாப்பிங் தளங்களை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் 'லாக்அவுட்' செய்யவேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் வைரஸ்கள் வராமல் தடுப்பதற்கான மென்பொருள்களை அவசியம் பயன்படுத்தவேண்டும். அதை அப்டேட் செய்தலும் அவசியம். நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்குபவரா? அப்படியானால் அவசியம் படியுங்கள் .

திருமணத்திற்குப் பின் ...

Add caption
திருமணத்திற்குப் பின் புது வாழ்க்கை அமைத்துக் கொள் ளும் தம்பதிகளுக்கு வேறு மாதிரி யான சமூக, குடும்பக் கடமைகள் உண்டு. அது அவர்களின் திருமண வாழ்க்கை சிறக்க காரணமானது. 

அவற்றில் 5 முக்கிய அம்சங்கள் இங்கே:

சமூக பொறுப்பு:

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமோ எது வென்றாலும் அதற்கேற்ப சமூகம் உங் களை கண்காணிக்கத் தொடங்கி விடுகிறது. நீங்கள் ஒரு குடும்பத்தினருக்கும் மட்டும் உரியவர் அல்ல. இரண்டு குடும்பத்திற்கும் இணைப்பு பாலமாக எவ்வாறு செயல்படப் போகிறீர்கள் என்பதை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆவலோடு எதிர் பார்ப்பார்கள். உங்களின் நிறை, குறைகள் அலசப்படும். அது உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமையலாம்.

உங்கள் குடும்பம் மட்டுமின்றி அக்கம் பக்கம் வசிப்பவர்கள், உங்களது நண்பர்கள், தோழிகள் என்று உங்களுக்குத் தெரிந்த அனைவருமே உங்களை கண்காணிக்கக் கூடியவர் களாகவும் எடைபோடக் கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்.
இவ்வளவு ஏன், அன்றாடம் தெருவில் வரும் காய்கறிக்காரர் முதற்கொண்டு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் வரை உங்களைப் பற்றிய குணாதி சயங்கள் பேசப்படும். இதனால் உங்களுக்கு சமூகத்தில் பொறுப்புகள் நிறைய இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

கல்யாணமாகி சில மாதங்கள் வரை உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இரண்டு வீட்டாரும் தருவார்கள்.அதன் பின் உங்களுக்கு மதிப்பு குறைவதும் கூடுவதும் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தினைப் பொறுத்துத்தான் அமையும்.

தாம்பத்ய உறவு:

திருமணத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கற்பனை செய்து வைத்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. சினிமாவில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் பிடித்து ஓடியாடி மரங்களுக்குப் பின் டூயட் பாடுவது, படுக்கை அறையில் சந்தோஷமாக இருப்பது போன்ற காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் இருபாலரின் உடலிலும் ஒரு வித ரசாயன மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும்.

இதனால் முதல் நாள் இரவின்போதே தான் பார்த்தையெல்லாம் நிஜமாக்கிவிட நினைக்கும் துடிப்பும் முழுமையான தாம்பத்ய சுகம் கிடைத்திடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இன்றைய மணமகன்களுக்கு நிறையவே இருக்கிறது. மணப்பெண்ணுக்கோ இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு. முதல் இரவு எவ்வாறு இருக்குமோ என்று ஓர் பதற்றம்.

ஆனால் இவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடு கிறார்கள்.கல்யாணம் ஆன அன்றே தங்களது முழு விருப்பமும் நிறை வேறிடவேண்டும் என்று நினைப்பது தவறு. ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் மனரீதியாக மட்டுமே தயாராகி இருப்பார்கள். அவர்களை தாம்பத்ய பந்தம்தான் உடல் ரீதியாகவும் இணைக்கிறது.

அதனால் கூடியவரை புதுமணத் தம்பதிகள் உடனடி வேகம் காட்ட வேண்டிய அவசியமில்லை. தங்களது உணர்வுகளை மெல்ல மெல்ல பக்குவமாக வெளிப்படுத்தி அரங் கேற்றிக் கொண்டால் இருவருக்குமே இல்லற சுகம் இனிக்கும்.
முடிவெடுத்தல்: திருமணம் செய்து கொண்ட அடுத்த வினாடியே நீங்கள் பல விஷயங்களுக்கு அதிபதியாகி விடுகிறீர்கள். பணம்,நகை,உடை, சொந்த பந்தங்கள் இவற்றில் முக்கியமானவை. இதை விட மிகவும் முக்கியமானது, உங்களது வாழ்க்கைத் துணை என்பதை மறந்து விட வேண் டாம்.

ஆம், இனி உங்களுடன் ஆயுள் முழுக்க இன்ப துன்பங்களில் பங்கேற்பவர் அவர்தானே?… இதனால் ஒரு நல்ல தாயாக, ஒரு சிறந்த தந்தையாக அல்லது உங்களது குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக என்று பல விஷயங்களில் நீங்கள் பிரகாசிக்க வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம் தேவை.

எனவே தினமும் காலையில் எழுந் ததும் இருவரில் யாராவது ஒருவர் நெற்றியில் முத்தம் கொடுப்பதன் மூலம் அன்றைய பொழுதினை நல்லவிதமாக தொடங்கலாம். இன்னும் ஆழமான அன்பைக் காட்டவேண்டும் என்றால் மார்பிலோ அல்லது உதட்டிலோ முத்தம் கொடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணைவர் நல்ல குஷி மூடில் இருந்தால் செல்லமாக காதைப் பிடித்து திருகக் கூடச் செய்யலாம்.

உங்களின் கனவுகள், வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் ஆகியவற்றை மனம் விட்டு பேசுங்கள். அப்போதுதான் மனச் சுமை பாதியாக குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

நல்ல விஷயமோ, கெட்டதோ எந்தவொரு பிரச்சினைக்கும் தன்னிச்சையாக முடிவை எடுக்க வேண்டாம். உங்களின் துணைவரோடு கலந்து ஆலோசியுங்கள். அவர் சொல்வதில் உள்ள நன்மை, தீமைகளை அமைதியாக அலசுங்கள். பின்னர் முடி வெடுங்கள். பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய முடிவுகள் என்றால் சற்று தாமதமாக நிதானமாக யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை.

குழந்தைகளை திட்டமிடல்:

உங்களுக்கு ஒரு குழந்தை போதுமா, இரண்டு குழந்தைகள் வேண்டுமா? என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இதில் நீங்கள் தீர்மானமாக இருக்கவேண்டும்.

இரண்டு குழந்தைகளைப் பெற்றால் எதிர்காலத்தில் அவர்களது கல்விச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை உங்களது வருமானத்தின் மூலம் ஈடுகட்ட முடியுமா? என்பதை நன்கு ஆலோசித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலானவர்கள் முதல் குழந்தையை வேகமாக பெற்றெடுத்து விடுவார்கள்.அவர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குள் இரண்டாவது குழந்தையும் பிறந்து விடும்.

இது மாதிரியான நிலைமை ஏற்படாமல் தடுக்க முதல் குழந்தை பெறுவதற்கு முன்பாகவே புதுமணத் தம்பதிகள் இதைப் பற்றி ஒரு தெளிவான முடிவை எடுப்பது அவசியம்.

இதற்காக இருவரும் வெட்கமோ, சங்கடமோ படத்தேவையில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் மட்டும் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்காமல் நீங்கள் இருவரும் ஒருமித்ததொரு முடிவிற்கு வாருங்கள்.
பணம்,சொத்துசேமிப்பு: ஆடம்பரமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைத் தொடங்கும் பெரும்பாலான தம்பதிகள் கடைசிவரை தங்களது வாழ்க்கை சொகுசாகவும் பகட்டாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் குடும்பத்தை நடத்து வதற்கு முதல் காரணியாக இருப்பது பணம் தான் என்பதை தம்பதிகள் உணரவேண்டும். பணத்தை சரியான முறையில் கையாண்டால் மட்டுமே உங்களால் சொத்து சேர்ப்பது பற்றி சிந்திக்க முடியும். குறுகிய காலம் ஆடம்பரமாக வாழ்ந்து பணத்தை இழப்பதை விட சிக்கனமாக வாழ்ந்து ஆயுள் காலம் வரை நிம்மதியாக வாழ்வது எவ்வளவோ மேல்.
வங்கி கணக்கு, இன்சூரன்ஸ் பாலிசிகள்,ஆபரணச் சேர்க்கை, நிலம்-வீடு வாங்குதல் எல்லாமே உங்களின் சேமிப்பைப் பொறுத்த விஷயம்.

குடும்ப நிர்வாகத்தில் பணத்தை செலவிடும்போதும், சேமிக்கும்போதும் ஒருவரே தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். அன்றாடம் எவ்வளவு செலவு குடும்பத்திற்கு எற்படுகிறது, இன்னும் என்னென்ன மாதிரியான செலவுகள் வரலாம் அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதையெல்லாம் புதுமணத் தம்பதிகள் மனம் விட்டுப் பேசிடவேண்டும்.

வங்கியில் பணத்தைச் சேமிக்கும்போது வாழ்க் கைத்துணைவரது பெயரையும் இணைத்துக் கொள்ளும் பழக்கம் இன்று வேகமாக பரவிவருகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான்.

இந்த 5 முக்கிய அம்சங்களையும் புதுமணத் தம்பதிகள் புறக்கணிக்காமல் நடந்தால் அவர்களின் வாழ்க்கை முறை மற்ற வர்களால் போற்றப்படுவது நிச்சயம்.

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.

அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.

துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.

என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.

இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.

தடை செய்யப்பட்ட சில பொருள்கள்:

1. கஸகஸா

2. பான்

3. சுபாரி (beetal nuts), பான் பராக்

அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.
இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை.

தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும் பொருட்களிலும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்...!

Tuesday, June 25, 2013

உத்தர்காண்டில் உயிருக்கு போராடியவர்களிடம் நகை பறிப்பு:

கேதார்நாத் மழை – வெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

வரலாறு காணாத மழை-வெள்ளத்தினால், ‘இமாலய சுனாமி’ என்று அழைக்கும் அளவுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. புனித தலமான கேதார்நாத் மிகவும் அதிக அளவுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பலியானார்கள்.

அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, கேதார்நாத் கோவிலில் வழிபாடு தொடங்கியது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார்நாத்தில் பலியானவர்களிடமும், உயிருக்கு போராடிய பக்தர்களிடமும் சாமியார் போர்வையில் சிலர் கொள்ளையடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் சுமக்க முடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்த பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என்று அவர்கள் அடம் பிடித்ததால் மீட்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடமைகளை சோதனையிட்டபோது, அந்த பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகளும் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அந்த கொள்ளையர்களை பிடித்த அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 14 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒருவன் வைத்திருந்த டோலக்கில் (டிரம்) ரூ.62 ஆயிரம் இருந்தது. மற்றொருவன் வைத்திருந்த பிரசாத பொட்டலத்தில் ரூ.10 ஆயிரமும், இன்னொருவனின் ஆடைகளுக்குள் ரூ.1.2 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக வரிசையில் காத்து நின்ற சில கயவர்களிடம், பயன்படுத்தப்படாத புத்தம் புது கரன்சி நோட்டுகள் தொடர் நம்பர் வரிசையுடன் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவை கேதார்நாத்தில் உள்ள ஒரே வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குப்தகாசியில் நேற்று ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் பெண் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நகைகள் கைப்பற்றப்பட்டன. வெள்ளத்தில் பலியான பக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. சில உடல்களின் கை விரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.கேதார்நாத்தில் உள்ள பிரதான கோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதே நேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

பங்குச் சந்தையில் செய்யக் கூடாதது என்ன?

பங்குசந்தையில் பெருத்த நட்டம் ஏற்பட்டுவிட்டது. லட்சக்கணக்கில் இழந்துவிட்டேன் என்று பங்குசந்தையினை விட்டு பலரும் சொல்லி வருவதை பார்த்திருப்பீர்கள். ஏன் இப்படி நஷ்டமாகிறது? இதை எப்படி தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பங்கு மார்க்கெட் தொழிலில் என்ன செய்யலாம் என்பதை விட என்னென்ன என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1. அத்தியாவசிய தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை கொண்டு இங்கே முதலீடு செய்யாதீர்கள்.

2. நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் பணம் சில பல நாட்களுக்கு உங்களிடம் சும்மாவேதான் இருக்கிறது (surplus fund) என்றால் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம்.

3. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஓரளவுக்கு நியாயமான லாபத்தை (resonable returns) எதிர்பாருங்கள். சந்தைக்குள் வரும் போதே குறுகிய காலத்தில் வாரன் பஃப்பட்டையும், ராகேஷ் ஜூன் ஜூன்வாலவையும் போல ஆகிவிடலாம் என்று கற்பனை கட்டுவதை மூட்டை கட்டி வைத்து விட்டு வாருங்கள்.

4. முதலீடு செய்யப்படும் பணத்தில் இருந்து மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகை வரும் என்று வங்கியில் வட்டி எதிர்பார்ப்பது போல பார்க்காதீர்கள் (Fixed Income at Regular intervals). இந்த சந்தையில் ஒரே மாதத்தில் கொழுத்த லாபம் வரும்…..ஒரு மாதம் வரவே வராது…..சில மாதங்கள் நட்டமும் வரும். ஆக பொறுமை மிக அவசியம்….வீட்டு கடனுக்கான தவணை, கார் கடனுக்கான தவணை. போன்றவற்றை இதில் இருந்து மாதா மாதம் வரும் லாபத்தை எடுத்து கட்ட வேண்டும் என்று பிரஷர் ஏற்படுத்தி கொண்டு வரக்கூடாது. நிர்பந்தத்தின் அடிப்படையில் வர்த்தகத்தில் ஈடுபடும் போது தவறுகள் நிறைய நடக்க வாய்ப்புண்டு.

5. முதலீடு எவ்வளவு என்பதை முடிவு செய்து விட்டு சந்தைக்குள் வாருங்கள். முதலீடு மீது நீங்கள் எதிர் பார்க்கும் லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து (profit booking) வெளியில் எடுங்கள்.

6. .கிடைக்கின்ற லாபத்தை மீண்டும் மீண்டும் முதலீடாக (reinvestment of profits) மாற்றி பண சுழற்சியில் ஈடுபடாதீர்கள்.

7. உங்கள் ஷேர் trading அக்கௌன்ட் வைத்திருக்கும் பங்கு தரகு நிறுவனம் தரும் கடன் வசதிகளை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள். (Avoid getting Credit Exposure) உங்கள் முதலீட்டை வைத்து நீங்கள் வர்த்தகம் செய்யுங்கள்….வர்த்தகத்தில் ஈடுபடும் போது மொத்த முதலீட்டில் ஒரு குறிப்பிட அளவு பணத்தை கையிருப்பில் (Reserve) வைத்து வர்த்தகம் செய்யுங்கள்.

8. துவக்கத்தில் யாருடைய உதவியுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் உங்களுடைய ஆர்வமும் மற்றும் முடிவுகளுமே இறுதியாக இருக்க வேண்டும் (Decision should be your own). அதற்கு சந்தையின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள பாருங்கள்.

9. சந்தையின் நடவடிக்கைகள், சர்வதேச சந்தையின் போக்குகள், அரசின் பொருளாதார கொள்கைகள், சர்வதேச பொருளாதார பிரச்சனை நமது சந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை அறிந்து கொண்டிருக்க வேண்டும் தொலைகாட்சியில் பிசினஸ் சேனல் பாருங்கள். ஆங்கில வர்த்தக தினசரி செய்தி தாள், தமிழ் வர்த்தக புத்தகங்கள் போன்றவற்றை படியுங்கள். இருந்தாலும் அவற்றில் வரும் பங்கு பரிந்துரைகள் பற்றிய முடிவுகளை நீங்களே சுயமாக தெளிவுபடுத்தி வாங்கவோ விற்கவோ செய்யுங்கள்.

நீண்டகால முதலீட்டாளர்கள் (LONG TERM INVESTORS) செய்யும் தவறுகள்.

1. ஒரு பெரிய தொகை கிடைக்கும் போது மொத்தமாக கொண்டு வந்து ஒரே நாளில் சந்தையில் முதலீடு (BULK INVESTMENT) செய்வதும், பெரிய சரிவுகள் (MARKET CRASH) வரும் போது மேற்கொண்டு வாங்க பணம் (ADDITIONAL INVESTMENT) இல்லாமல் முழியோ முழி என்று முழித்து மன உளைச்சலுக்கு ஆளாவதும் தவிர்க்கப்பட வேண்டியவை. முதலீடு செய்வதென்று முடிவு செய்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யப்பழகுங்கள். 100 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பங்கு 20 ரூபாய் குறைந்து வர்த்தகமாகும் போது மேற்கொண்டும் வாங்க பணம் (AVERAGE) இருக்க வேண்டும். அதுவரை கையில் பணம் சும்மா இருக்கிறதே என்றால் உங்கள் வங்கி கணக்கில் போட்டு வையுங்கள்.

2. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்பட்ட பிறகு தினந்தோறும் விலை ஏற்றத்தையும், இறக்கத்தையும் (Volatility) பார்த்தபடியே இருப்பது அவசியமில்லாதது அவ்வப்போது பாருங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் தங்கம் என்பது பல்வேறு விதத்தில் காலம்காலமாக இருந்து வருகிறது. ஆனால் தினசரி தங்கத்தின் விலை ஏறும்போதும் ,இறங்கும் போதும் என் வளையல் மதிப்பு இவ்வளவு கூடியுள்ளது…என் சங்கிலி விலை இவ்வளவு கூடியுள்ளது என்று கணக்கு பார்க்கிறோமா? இல்லையே…அதுபோல நீண்ட கால முதலீட்டார்கள் முதலீடு செய்து வாங்கும் பங்குகள் சரியானதுதானா என்பதை நிறுவன நிதிநிலை அறிக்கைகளை பார்த்து (Financial Reports (Profit & Loss Account with Balance Sheet), நிறுவனத்தின் கடந்தகால செயல்ப்பாடுகளை பார்த்து (previous track record), நிர்வாகம் செய்பவர்களின் தகுதி (Promoters and Board of Directors)பின்னணியை பார்த்து ஆராய்ந்து தெளிந்து முதலீடு செய்ய வேண்டும்…அவ்வாறு ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கில் செய்யப்படும் முதலீடு ஒருபோதும் வீணாக போகாது.

உதாரணமாக 2001 ஆம் ஆண்டு குறைந்த விலையாக 108 க்கும் அதிக விலையாக
168 க்கும் வர்த்தகமாகி வந்த டாட்டா ஸ்டீல் நிறுவன பங்கு சந்தைகள் உச்சத்தில் இருந்த 2007 ஆம் ஆண்டு 1048 ரூபாய்க்கு சென்றது……அதன் பிறகு 2008 இறுதியில் இருந்து 2009 ஆரம்பம் வரை வெறும் 148 ரூபாய்க்கும் கூட வர்த்தகமானது. மீண்டும் 2010 ஆம் ஆண்டு துவக்கத்தில் 737 ரூபாய் வரை வர்த்தகமானது. தற்போது மீண்டும் 25/06/2013 அன்று தேசிய பங்கு சந்தையில் குறைந்த பட்ச விலையாக 262.30 என்ற விலைக்கு சரிந்தது.

3. சந்தைகள் பெரிய சரிவை சந்திக்கும் காலம் புதியவர்களுக்கு பொன்னான வாய்ப்புகளை வழங்கும் காலம். நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக குறைந்த விலையில் பங்குகள் வர்த்தகமாகும்….ஆனால் தொலைக்காட்சிகளையும், செய்திபத்திரிகைகளையும் பார்த்து விட்டு சந்தை மோசமாக இருக்கிறதாமே இப்போது வரச்சொல்றீங்களே என்று கூறி விட்டு அமைதியாகி விடுவர்.

மாறாக சந்தை மிகப்பெரிய உச்சச்சதை தொட்டு விலைகள் எல்லாம் உப்பி போய் இருக்கும் நேரத்தில் சந்தை நன்றாக உள்ளதே இப்போது முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன் என்று தடுத்தாலும் கேட்காமல் தானாக முன்வந்து மொத்தமாக ஒரு பெரிய தொகையை போட்டு விட்டு சந்தை சரிய தொடங்கியதும். இது ஒரு சூது என்று கூறிவிட்டு சென்று விடுபவர்களும் உண்டு.

4. நல்ல அடிமாட்டு விலையில் சந்தைகள் சரிந்திருக்கும் போது சந்தையில் முதலீடு செய்தவர்கள் சந்தை நல்ல ஏற்றத்தை சந்தித்து முதலீடு பல மடங்கு பெருகி இருக்கும் போது இன்னும் விலை உயருமாமே. இருக்கட்டும் பார்க்கலாம் என்று கண்ணில் தென்படும் லாபத்தை உறுதி (PROFIT BOOKING) செய்ய மறுப்பார்கள். இதுவும் ஒரு பெரிய தவறு.

5. முதலீடு மொத்தத்தையும் ஒரே துறையில் (Investing in single Industries). அல்லது ஒரே நிறுவனத்தில் கொண்டு போய் முடக்குவது மிகப்பெரிய தவறு. இதனால் என்னவாகும் என்றால் அந்த துறை மீது அரசு கெடுபிடிகள் அதிகமானாலும் (சமீபத்திய உதாரணம் தனியார் தொலைபேசி துறை), அந்த நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஏதேனும் சர்ச்சையில் சிக்கினாலும் (உதாரணம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்) பெருத்த அடி வாங்க வாய்ப்புள்ளது..ஆக ஒவ்வொரு துறையிலும் முதலீடு இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. (வங்கித்துறை, ஸ்டீல், சிமெண்ட், ரியல் எஸ்டேட், உணவுபொருட்கள், உரம், கட்டுமானம், ஷிப்பிங், கச்சாஎண்ணெய். இப்படி பலதுறைகள் உள்ளது உங்களுக்கு தெரியும்)

முதன் முதலில் நாம் விரும்பும் நபரிடம் என்ன பேசுவது?


இது உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்களுக்கான குழப்பமாகும். இதற்காகவும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


நாம் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக நாடகப் பாணியில் அல்லது கவித்துவமாக பேச பலர் முயற்சி செய்வதுண்டு.

ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் நகைச்சுவையில் வீழ்ந்துவிடும்.

கம்பீரமான இமேஜை உருவாக்குவதற்குப் பதில் ஒரு கோமாளி இமேஜை பதியவைத்துவிடலாம். என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படிப்பட்டவர்களின் பேச்சு கிளர்ச்சியினை ஊட்டுவதில்லை. இயல்பான மிக எளிமையான பேச்சுக்களே போதுமானது.

இவைதான் வாழ்வோடு ஒத்துப்போக்க்கூடியவை என்கிறது ஆய்வு.

'இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு'

'நல்லவேளை, பஸ்ல கூட்டம் அதிகமா இல்லே'

'மழை வரும் போல இருக்குதுல்ல'

'இன்னைக்கு உங்க பிரெண்ட் வரலையா?'

'ஹலோ நல்லாயிருக்கீங்களா?'

இது போன்ற மிகச் சாதாரண வார்த்தைகளே ஆரம்பத்தில் போதுமானவை.

என்ன சொல்றீங்க...? நான் சொல்றது சரிதானே?

அப்படியே உங்க கருத்துக்களையும் சொல்லுங்களேன்..!

சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை

தொழில் முனைவதன் மேலாண்மைபற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (institute for entrepreneurship and career development). 

''சுய தொழில் தொடங்க முடிவு செய்பவர்கள், இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில்,சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். அடுத்து, அந்தத் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள், அதை மேலாண்மை செய்வதில் தான் திணறி, நடைமுறைப்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்து, தெளிவு பெற்ற பின்னரே,திட்டமிட்ட தொழிலில் இறங்க வேண்டும். இவ்வாறு சிறப்பான திட்டமிடுதலுடன் முழுத் தெளிவு உள்ள ஒருவருக்கு வங்கிக் கடனுதவி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.

இன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவு, அவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள்.'முதலீடு வேண்டுமோ? தன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ?’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்து, நமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போல, பள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாக, நமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, மற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள், தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.

தொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல், படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம், தன்னம்பிக்கை,நேர்மறை எண்ணம், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவு, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்!'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்!

இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால்... அப்புறம்என்ன... அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க!

புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்!

தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்

வர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்

திட்ட அறிக்கை

தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரித்தல்

சந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை தயாரித்தல்

நேரடி கணினி வழி குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பதிவுகள்

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் குறித்த தகவல்கள்

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

உங்களுக்காக இவை...

நாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால், புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சத்தியமங்கலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்கு www.nstedb.com என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்!

அரசு கடனுதவித் திட்டங்கள்
மத்திய அரசு

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!

மாநில அரசு

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC),தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும், இது பற்றி தகவல் அறிய, விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்!

இந்திய நாணயங்கள் பழையதும், புதியதும்


இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பலர் இந்த நாணயங்களை பார்த்து கூட இருக்க மாட்டார்கள் இவர்களுக்குகாகவே இவை இங்கே. இதோ உங்கள் பார்வைக்கு. இந்திய நாணயங்கள் பழையதும், புதியதும்,

நடிக்க வந்திராவிட்டால்

தமிழ் திரையுலகில் 1964களில் தனது பாதத்தை பதித்த நடிகை ஜெயலலிதா தமிழக அரசியல் வானில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். ஜெயலலிதா திரையுலகில் மட்டுமல்ல, அரசியல் அரிச்சுவடியையும் கற்றுத் தேர்ந்து வருவதற்கு முன், அவர் நடந்து வந்த கரடு முரடான பாதைகள் ஏராளம், ஏராளம்! நான் நடிகையாக வந்திராவிட்டால், ஒரு ஆங்கில இலக்கியவாதியாக மாறியிருப்பேன் என்று ஜெலலிதாவே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ஜெயராம்-சந்தியா (என்ற) வேதா தம்பதியரின் இரண்டாவது மகள் ஜெயலலிதா. 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதாவின் அண்ணன் பெயரும் ஜெயராம். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த ஜெயலலிதாவின் தந்தை மைசூர் அரண்மனையில் வேலை பார்த்து வந்தார். மைசூரில் ஜெயலலிதா பிறந்தார். சிறுவயதிலேயே அவரது தந்தை மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து சென்னை பட்டணத்தில் அடியெடுத்து வைத்த வேதா (ஜெயலலிதாவின் தாயார்) திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஜெயலலிதா சென்னை சர்ச்பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தார். நடிப்பில் தனக்கு ஆர்வம் இருந்ததில்லை என்று ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டிருக்கிறார். தன் தாயார் சந்தியா நடிக்கும் பட ஷ§ட்டிங்கைப் பார்க்க கூடசெல்வதில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஜெயலலிதா நடித்த முதல் படம் வெண்ணிற ஆடை. அப்போது அவருக்கு பதினெட்டு வயது கூட ஆகவில்லை. சித்ராலயாவின் இரண்டாவது படமான வெண்ணிற ஆடை படத்தின் கதை, வசனங்களை டைரக்டர் ஸ்ரீதரே எழுதியிருக்கிறார். படத்தின் கதாநாயகி ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, ஆஷா ஆகியோரும் புதுமுகங்கள்தான். பாடல்கள்- கண்ணதாசன், இசை- விஸ்வநாதன் ராமமூர்த்தி.

1964-ல் ஜெயலலிதா நடித்த முதல் தமிழ் படமான வெண்ணிற ஆடை 1965-ல் போட்டோலீசானது. ஆனால் வெண்ணிற ஆடை வெளிவருவதற்கு முன்பே 1964 நவம்பர், டிசம்பரில் சின்னதே கொம்பே, மானே அலியா ஆகிய இரண்டு கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார் ஜெயலலிதா. 1966 களில் ஜெயலலிதா 23 திரைப்படங்கள் நடித்து முடித்திருந்தார். முன்னனி நட்சத்திரங்கள் பட்டியலில் ஜெயலலிதாவுக்கு முக்கிய இடம். 1966 பொம்மை இதழில் ஜெயலலிதா தனது சுயசரிதையை அழகுற விவரித்திருந்தார். அப்போது தீபாவளி முடிந்து இருபது நாட்கள் கடந்திருந்தது. வணக்கம். இது சாதாரண வணக்கமல்ல. தீபாவளி வாழ்த்துடன் கூடிய வணக்கம்! கல்யாணம் கழிந்த பின் மேளம் எதற்கு? தீபாவளி கழிந்து இருபது நாட்களுக்கு பின் ஏன் இந்த வாழ்த்து? என்று உங்களில் சிலராவது நிச்சயம் கேட்பீர்கள். பள்ளிக்கூடத்தில் நான் ஆங்கிலத்திலும், சரித்திர பாடத்திலும் புலி. புலி என்றால் சாதாரண புலி அல்ல. பதினாறு அடி வேங்கைதான். எங்கள் பள்ளி இருக்கிறதே, அது பாடம் சொல்லி தருவதில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. நடனங்கள், நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் தனிப் பெயர் உண்டு. நாட்டிய நிகழ்ச்சியில் என் ஆட்டமும் இருக்கும். ஜெயா, இன்றைக்கு உன் நாட்டியம் பிரமாதம் என்ற நற்சான்றிதழோடுதான் வீட்டுக்கு திரும்புவேன். என் தாயார் என்னை கட்டி அணைத்து கொள்வார். கன்னத்தில் ஒரு இச் விழுந்துவிடும். சர்ச் பார்க்கில் நான் படித்து வந்தபோது என் தயார் பல படங்களில் நடித்து வந்தார். காலையில் நான் எழுந்திருப்பதற்காக முன்பே அவர் போய் விடுவார். சில நாட்களில் நான் படுத்து தூங்கிய பின்பே படபிடிப்பு முடிந்து வீட்டுக்கு வருவார். அவர் சினிமாவில் நடிப்பதற்காக ஷ§ட்டிங் செல்கிறார் என்று தெரிந்தும் அம்மா இன்று என்ன படப்பிடிப்பு? என்ன காட்சி? நானும் ஒரு நாள் உன்கூட ஷ§ட்டிங் பார்க்க வரட்டுமா? என்றெல்லாம் ஒரு நாளாது நான் கேட்டதில்லை. எனக்கென்னவோ சினிமா பிடிப்போ ஏற்படவேயில்லை. பள்ளிக்கு போவேன். வருவேன். அல்லது வீட்டில் இருக்கும்போது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பக்க ஆரம்பித்து விடுவேன் இல்லாவிட்டால் எதையாவது எழுத ஆரம்பித்து விடுவேன். இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் சுமாராகவே எழுதுவேன். ஒரு சமயம் என் ஆங்கிலக் கட்டுரை ஒன்று பம்பாயிலிருந்து வெளியாகும் இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி என்ற ஆங்கில பத்திரிகையில் சிறுவர், சிறுமியர் பகுதியில் பிரசுரமாகி பாராட்டு கடிதமும் வந்தது

அந்த கடிதம் வந்த அன்றைய தினம் பூராவும் நான் என் மனதில் பெர்ல் பெக் மாதிரி என்னை ஒரு பெரிய கதாசிரியராகவே நினைத்துக் கொண்டேன். அனால் ஒன்று மட்டும் சொல்வேன். நான் மட்டும் சினிமாவில் நடிக்க வராமலிருந்திருந்தால், இலக்கியத்தில் ஒரு டாக்டர் பட்டம் பெறவே முயற்சித்திருப்பேன். இலக்கியத்தில் எனக்கு அத்தனை ஈடுபாடு உண்டு. ஆனால் இப்போது படிப்பதற்கு நேரமில்லாமல் தவிக்கிறேன். எப்போதும் பட ஷ§ட்டிங் என்று போய் விடுகிறேன். எனக்கு பதிலாக என் தாயார் வீட்டில் புத்தகங்களை படித்து வருகிறார். ஏற்கனவே பள்ளியில் நான் படிக்கும்போதே பரத நாட்டியமும் ஓரியன்டல் நடனங்களையும் பயின்று வந்தேன். என்னுடைய பரத நாட்டிய ஆசிரியை கே.ஜே.சரசா, ஓரியன்டல் நடன மாஸ்டர் திரு.சோப்ரா. என் பரதநாட்டிய அரங்கேற்றம் மயிலையில் நடைப்பெற்றது. அரங்கேற்றத்திற்கு தலைமை வகித்து தங்கச் சிலை ஜெயலலிதா என்று என்னை அழைத்து ஆசி வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். ஒருநாள் என் குடும்பத்திற்கு வேண்டிய நெருங்கிய நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஐரோப்பிய படக் கம்பெனி ஒன்றின் கூட்டுறவோடு, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், டாக்குமென்டரி படம் ஒன்று எடுக்க திட்டமிட்டிருக்கிறார் இவர், ஆங்கில படமான இதில் ஜெயலலிதாவும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்று சொல்லி தன்னுடன் அழைத்து வந்திருந்த நண்பரையும் அறிமுகப்படுத்தினார்.

அவர்தான் திரு.வி.வி.கிரி அவர்களின் குமாரர் திரு.சங்கர் கிரி. அவர்கள் அப்போது கேரளா கவர்னராக இருந்தார். என் தாயாருக்கோ என்னை சினிமாவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ துளிக்கூட கிடையாது. பள்ளிக்கூடம் போகிறாளே படிப்பு கெட்டுவிடுமே என்று சொல்லி பார்த்தார். ஆனால் நாங்கள் சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் படம் எடுத்துக் கொள்கிறோம் படிப்புக்கு ஒன்றும் தடை ஏற்படாது என்று உறுதி அளித்தார்கள்.அந்த படம் தான் எபிசிங் என்ற ஆங்கில படம். போகபோகத்தான் இதன் உண்மைகளும் எங்களுக்கு தெரிய வந்தன. டாக்குமென்டரி என்ற பெயரில் ஒரு முழு நீளப் படத்தையே அவர்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சில நாட்கள் கலந்து கொண்டால் போதும் என்ற நிபந்தனைக்கு அர்த்தமே இல்லாமல் பல நாட்கள் நான் சென்று நடிக்க வேண்டியதாயிற்று. ஒரு சமயம் பரீட்சை சமயத்தில் கூட இதில் போய் நடித்து விட்டு வந்தேன் தவிர எங்கள் கைச் செலவிலேயே நாங்கள் படப்பிடிப்புக்கு போகும்படி ஆகிவிட்டதுடன், அதில் அணிய வேண்டிய உடைகள், அணிகள் எல்லாவற்றையும் நானே என் சொந்த செலவில் வாங்கிக் கொள்ளும்படியாகிவிட்டது. எனக்கு ஒரே கோபம், ஆத்திரம். ஆனால் பாதியில் நிற்பானேன் என்று என் தாயார் என்னை சமாதானப்படுத்தி விட்டார்.


ஒருநாள் நடன மாஸ்டர் சோப்ராஜி எங்களிடம் வந்தார். தனக்கு மிகவும் வேண்டிய தயாரிப்பாளர் படம் எடுத்து வருவதாகவும், என் பெயரையே சிபாரிசு செய்ய நினைத்திருப்பதாகவும் சொன்னார். என் தாயார் வழக்கம்போல் தட்டி கழித்தார். நடனம்தானே. ஒரே ஒரு நடனம் என்று சோப்ராஜி சொன்னார். அவர் எனக்கு மாஸ்டர். நான் மாணவி. அந்தப் படம்- லாரி டிரைவர். அது நீண்ட நாட்கள் கழித்து வெளிவந்தது வேறு விஷயம். என் தாயார் கன்னட படங்களில் நடித்து வந்தவர். அவருக்கு பல கன்னட படத் தயாரிப்பாளர்களை நன்கு தெரியும். நடன உலகில் எனக்கு கிடைத்து வரும் வரவேற்பைக் கேள்விப்பட்டு, பல கன்னட படத் தயாரிப்பாளர்கள் என் தாயாரிடம் வந்து, என்னை அவர்களது படங்களில் நடிக்க அனுமதிக்கும்படி கேட்டார்கள். அவர்களில் பள்ளிக்கூடம் போகட்டும், சனி, ஞாயிறு கிழமைகளில் நான் படத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று நாகேந்திரராவ் சொன்னார்.என் தாயாருக்கு சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டுமென்று பலர் முயற்சித்து வருவதும், பலருக்கு அம்முயற்சியில் வெற்றி கிடைக்காமல் போனதும் என் தாயாருக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். இந்நிலையில் நாமே வலிய போகாமல், சினிமாவே நம்மைத்தேடி வந்திருக்கும்போது இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடுவதா? சந்தர்ப்பம் எப்போதும் இரண்டாவது தடவையாக ஒருவரது வீட்டு கதவை தட்டுவதில்லை என்று

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு. அதுவும் ஞாபகத்திற்க்கு வந்தது. பள்ளிக்கூடமா? படவுலகமா? அம்மு நீ படிச்சது போதும் என்று என் தாயார் சந்தியா சொல்லிவிட்டார். பள்ளிக்கூடத்தை விட்டுவிடப் போகிறோமே என்ற எண்ணும்போது எனக்கு அழுகையே வந்தவிட்டது. கூடவே, கலை உலகில் பணியாற்றப்போகிறோம் என்ற நினைப்பு வந்தபோது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்பம்-துன்பம் இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை? கன்னட படவுலகம் என்னை கை நீட்டி வரவேற்றது. அதே சமயம் தமிழ் படவுலகமும் என்னை வரவேற்க தன் நேசக் கரங்களை நீட்டியது. வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகியாக என்னை ஒப்பந்தம் செய்து கொண்டார், தயாரிப்பாளர்-டைரக்டர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் படங்களைப் பார்த்து, அவரது ரசிகைகளில் ஒருத்தியாக மாறியிருந்தவள் நான். அவரது படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்போது என் தாயாருக்கு வேறு முக்கியமான வேலை இருந்ததால், என் சிறிய தாயார் வித்தியாவுடன் படப்பிடிப்புக்கு போனேன்.அங்கு மேக்கப்புடன் நுழைந்த பின்புதான் ஸ்ரீதர் என்னிடம் வந்தார். இந்த படத்தில் சித்த சுவாதீனம் இழந்த பெண்ணாக நீ வருகிறாய் என்று சொன்னார். அதாவது நான் பைத்தியமாக நடிக்க வேண்டும். அதுவும் முதல் நாள் அன்றே முதல்காட்சி, நான் யோசிக்கவும் இல்லை. சரி என்றேன்.

முதல்நாள் படப்பிடிப்பே குறைவில்லாமல் அமைந்தது என் மனதில் நிறைவை ஏற்படுத்தியது. என் தாயாரிடம் சொன்னேன், உனக்கு குறை இருக்காது. விக்னமில்லாமல் தமிழ் படவுலக வாழ்க்கை அமைந்துவிட்டது என்றார். என் தாயை வணங்கி எழுந்தேன். என் தெய்வம் அவர்தானே. வெண்ணிற ஆடை படத்தில் நான் விதவைக் கோலத்தில் வரும் காட்சியை பார்த்து ரசிகர்கள், இனி விதவைக் கோலத்தில் தோன்றாதீர்கள், எங்களால் தாங்க முடியாது என்று எழுதியிருந்தார்கள். பீனாராய் நடித்த தாஜ்மஹால், பத்மினி நடித்த மகாபாரதம் படங்களை தயாரித்த போட்டோதியாவாலா இந்தப் படத்தை தயாரிக்கிறார். டி.பிரகாஷ் ராவ் இதை டைரக்டு செய்து வருகிறார். நான் நடித்த வெண்ணிற ஆடை, முகராசி படங்களை பார்த்த பிரகாஷ்ராவ் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அந்த படத்தில் நான் தர்மேந்திராவுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பள்ளியில் படிக்கம்போதே ஹிந்தி எழுதவும், படிக்கவும் தெரியும்- என்று ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். ஜெயலலிதாவின் சின்ன...... சின்ன ஆசை!

ஆனந்தவிகடன் 10.8.1969கேள்வி: திரைப்படங்களில் நீங்கள் நடிக்க வராமல் இருந்திருந்தால் வேறு என்ன செய்திருப்பீர்கள்?
ஜெயலலிதா: எனக்கு ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் வாங்க வேண்டுமென்று ஆசை. ஒருவேளை படித்து பட்டம் வாங்கி ஆங்கில இலக்கியத்தை கரைத்துக் குடித்துக் கொண்டிருப்பேன். ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படம் போட கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசை. ஒருவேளை அப்படியிருந்தால் இன்று பல நல்ல ஓவியங்களை தீட்டித் தள்ளிக் கொண்டிருப்பேன். பிரபல சரஸ்வதி-யாமினி கிருஷ்ணமூர்த்தி இவர்களைப் போல கிளாசிகல் நடனத்தில் உலகப் புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அரசியலில் தீவிரமாக இறங்கி பெரிய அரிசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமலிருந்திருந்தால், இன்று தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பேன். ஆனால் ஒன்று இப்படி சினிமாவிற்கு வந்து நடிப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. தலைவிதிதான். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டமான தலைவிதி.

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்

1964
1.சின்னத கொம்பே (கன்னடம்)
2.மனே அலியா (கன்னடம்)

1965
3.வெண்ணிற ஆடை
4.நன்ன கர்த்தவர்யா(க)
5.ஆயிரத்தில் ஒருவன்
6.நீ
7.மனசு மமதாலு(தெ)
8.கன்னித்தாய்
9.மாவன மகளு(க)

1966
10.மோட்டார் சுந்தரம்பிள்ளை
11.முகராசி
12.யார் நீ
13.குமரிப்பெண்
14.சந்திரோதயம்
15.தனிப்பிறவி
16.மேஜர் சந்திரகாந்த்
17.கௌரி கல்யாணம்
18.மணி மகுடம்
19.பதுருவதாரி(க)
20.கூடாச்சாரி 116(தெ)
21.ஆமெ எவரு(தெ)
22.ஆஸ்தி பருலு(தெ)
23.எபிசில்(ஆங்கிலம்)

1967
24.தாய்க்குத் தலைமகன்
25.கந்தன் கருணை
26.மகராசி
27.அரச கட்டளை
28.மாடி வீட்டு மாப்பிள்ளை
29.ராஜா வீட்டுப்பிள்ளை
30.காவல்காரன்
31.நான்
32.கோபாலுடு பூபாலுடு(தெ)
33.சிக்கடு தொரகடு(தெ)

1968
34.ரகசிய போலீஸ் 115
35.அன்று கண்ட முகம்
36.தேர்த்திருவிழா
37.குடியிருந்த கோவில்
38.கலாட்டா கல்யாணம்
39.பணக்காரப்பிள்ளை
40.கண்ணன் என் காதலன்
41.மூன்றெழுத்து
42.பொம்மலாட்டம்
43.புதிய பூமி
44.கணவன்
45.முத்துச்சிப்பி
46.எங்க ஊர் ராஜா
47.ஒளி விளக்கு
48.காதல் வாகனம்
49.சுக துக்காலு(தெ)
50.நிலுவு தோபிடி(தெ)
51.பிரமச்சாரி(தெ)
52.திக்க சங்கரய்யா(தெ)
53.பாக்தாத் கஜ தொங்கா(தெ)

1969
54.அடிமைப்பெண்
55.குருதட்சனை
56.தெய்வமகன்
57.நம் நாடு
58.ஸ்ரீராம் கதா(தெ)
59.அதிர்ஷ்ட வந்துலு(தெ)
60.காதநாயகுரு(தெ)
61.கண்டி கோட்ட ரகசியம்(தெ)
62.ஆதர்ச குடும்பம்(தெ)
63.கதலடு ஒதலுடு(தெ)

1970
64.இஸ்ஸத்(ஹிந்தி)
65.எங்க மாமா
66.மாட்டுக்கார வேலன்
67.என் அண்ணன்
68.தேடி வந்த மாப்பிள்ளை
69.எங்கள் தங்கம்
70.எங்கிருந்தோ வந்தாள்
71.அனாதை ஆனந்தன்
72.பாதுகாப்பு
73.அலிபாபா நலபை தொங்கலு(தெ)

1971
74.குமரிக்கோட்டம்
75.சுமதி என் சுந்தரி
76.சவாலே சமாளி
77.தங்க கோபுரம்
78.அன்னை வேளாங்கன்னி
79.ஆதி பராசக்தி
80.நீரும் நெருப்பும்
81.ஒரு தாய் மக்கள்

1972
82.ஸ்ரீ கிருஷ்ண விஜயமு(தெ)
83.ராஜா
84.திக்கு தெரியாத காட்டில்
85.ராமன் தேடிய சீதை
86.பட்டிக்காடா பட்டணமா
87.தர்மம் எங்கே
88.அன்னமிட்டகை
89.சக்தி லீலை
90.ஸ்ரீ கிருஷ்ண சத்யா(தெ)
91.பார்யா பிட்டலு(தெ)

1973
92.நீதி
93.கங்கா கௌரி
94.வந்தாளே மகராசி
95.பட்டிக்காட்டு பொன்னையா
96.சூரியகாந்தி
97.பாக்தாத் பேரழகி

1974
98.தேவுடு சேசின மனிசுலு(தெ)
99.டாக்டர் பாபு(தெ)
100.திருமாங்கல்யம்
101.தேவுடு அம்மாயி(தெ)
102.தாய்
103.வைரம்
104.அன்புத் தங்கை

1975
105.அன்பைத் தேடி
106.அவன் தான் மனிதன்

1976
107.யாருக்கும் வெட்கமில்லை
108.பாட்டும் பரதமும்

1977
109.கணவன் மனைவி
110.சித்ரா பௌர்ணமி
111.உன்னைச் சுற்றும் உலகம்

1980
112.ஸ்ரீகிருஷ்ண லீலா

1992
113.நதியைத் தேடி வந்த கடல்
114.நீங்க நல்லா இருக்கணும்

கௌரவ வேடம்
1.ஸ்ரீ சைல மகாத்மியம்(க)-1961
2.மன்மொளஜ்(ஹிந்தி)-1962
3.கான்ஸ்டபிள் கூத்ரு(தெ)-1963
4.மஞ்சி ரோஜீலு ஒஸ்தாயி(தெ)-1963
5.அமர் சில்பி ஜக்கண்ணா(தெ)-1964
6.அமர் சில்பி அக்கண்ணாச்சாரி(க)-1964
7.தாயே உனக்காக-1966
8.லாரி டிரைவர்-1966
9.ஜீசஸ் (மலையாளம்)-1977
10.நாடோடி மன்னன்-1995

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்-115

வண்ணப்படங்கள்-14
மொழி மாற்று படங்கள்-48
25 வாரங்கள் ஓடிய படஙகள்-5
100 நாட்கள் ஓடிய படங்கள்-30
தமிழ் படங்கள் -83
தெலுங்கு படங்கள்-25
கன்னட படங்கள்-5
இந்தி படம்-1
ஆங்கிலம்-1 (படம்- எபிசிங்)

ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த பாடல்

அரசிளங்குமரி என்ற படத்தில் அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்னப் பயலே...... சின்ன பயலே.... சேதி கேளடா என்பதுதான் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்த முதல் பாடல். தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பு நவம்பர் 3-ஆம் தேதியன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை நாட்டுடமையாக்கினார். அன்றைய தினம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் துணைவியார் கவுரவாம்பாள், மகன் குமாரவேலு ஆகிய இருவரையும் சென்னை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து ரூபாய் பத்து லட்சம் வழங்கினார்.