Friday, May 31, 2013

தெரிந்து கொள்ளலாம் வாங்க

சோடா, கார்பன், கால்சியம், கோபால்ட், கோல்ட், விதியம், வண்டியம், ஓசோன், பொட்டாஷ் ஆகிய ஊர்கள் அமெரிக்காவில் உள்ளன.

மனிதனுக்கு தினமும் சராசரியாக 100 கிராம் கொழுப்பு தேவை.

ஆட்டு இறைச்சியில் 13.3 சதவீதம் கொழுப்பு உள்ளது.

தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது ரத்தம்.

தூங்கும்போது பாடும் பறவை ராடின்.

ஒருவர் தும்முகிற போது உண்டாகும் நீர்த் திவலைகள், 100௦௦ மைல் வேகத்தில் செல்லும்.

சிரிக்கும்போது 130 தசைகளும், கோபப்படும்போது 50 தசைகளும் இயங்கும்.

Musk deer facts - கஸ்தூரி மானை பற்றி...


கஸ்தூரி மானை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். கஸ்தூரி மனுக்கு உண்மையில் கொம்புகள் கிடையாது.

கஸ்தூரி மான்களிடமிருந்து இருந்து நமக்குகிடைக்கக்கூடியது அதன் உடம்பிலிருந்து சுரக்கக்கூடிய ஒரு நறுமணப் பொருளே!

இந்த வகை மான் காஷ்மீர், நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. சாதரணப்பகுதிகளில் அதாவது சமவெளிகளில் இதை பார்க்கமுடியாது. பத்தாயிரம் அடிஉயரத்திற்கு மேல் உள்ள அடர்ந்த காடுகளில் இருக்கும்

இந்த மான் மற்ற மான்களை காட்டிலும் மின்னல் வேகத்தில் ஓடக்கூடியது. ஏனெனில் இதன் எடை 15 முதல் 20 கிலோ மட்டுமே இருப்பதுதான்.

கஸ்தூரி மான்கள் வேட்டையாடி கொல்லபடுவது அதன் அடிவயிற்றில் சேமித்து வைத்திருக்கும் வாசனை பொருளுக்காகவே.

இறக்கும் தறுவாயில், நம் உடலில் முதலில் செயல் இழக்கும் உறுப்பு

1. சுழற்றும் இராட்டினங்களில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு.

2. நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும்.

3. பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது.

4. ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும்.

5. நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

6. உலகில் 29 விழுக்காடு பெட்ரோல்; 33 விழுக்காடு மின்சாரத்தை அமெரிக்கர்களே பயன்படுத்துகின்றார்கள்.

7. காதுகளில் ஒலிபெருக்கிகளை மாட்டிக்கொண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் திரிபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக அணிந்து இருந்தால், உங்கள் காதுகளுக்குள் வழக்கத்தை விட 700 விழுக்காடு கூடுதலாக நோய்க்கிருமிகள் உட்புகுந்து விடும்.

8. உலக மாந்தர்களின் இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற விலங்குகளில் முதல் இடம் வகிப்பது கொசு.

9. இடது கை பழக்கம் உள்ளவர்களை விட, வலது கை பழக்கம் உள்ளவர்கள், சராசரியாக 9 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றார்கள்.

10. வீடுகளில் காற்று பதனப் பெட்டிகளைப் போல (AC) நமது உடலில் மூக்கு செயல்படுகிறது; சூடான காற்றையும், குளிர்ந்த காற்றையும் சமனப்படுத்தி ஒரே அளவு வெப்பத்தில் நமது நுரையீலுக்கு உள்ளே செலுத்துகிறது: காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி அனுப்புகின்றது.

11. இறக்கும் தறுவாயில், நம் உடலில் முதலில் செயல் இழக்கும் உறுப்பு - காது.

12. அமெரிக்காவின் வடமேற்குக் கரையில் உள்ள ஒரேகான் மாநிலத்தில், 2400 ஆண்டுகள் வயது உள்ள காளான் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது; 3.4 சதுர மைல்கள் பரப்பில் விரிந்து உள்ளது.மனைவியை மகிழ்விப்பது எப்படி

மனைவியை செல்லப் பெயர் வைத்து அழையுங்கள்.

வேலையிலிருந்து திரும்பும்போது மலர்ந்த முகத்துடன் அவளை சந்தியுங்கள்.

நேர்மறையான நல்ல வார்த்தைகளை உபயோகித்து பேசுங்கள்.

மனைவி பேசும்போது காது கொடுத்து கேளுங்கள். அவள் சொல்வதில் தவறு இருந்தால் அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் அல்லது குறிப்பால் உணர்த்துங்கள்.

மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இருவரும் ஆனந்தமாக கழித்த தருணங்களை அசைபோடுங்கள்.

நகைச்சுவையுடன் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

மனைவியுடன் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள். அவள் கடினமான வேலைகளை செய்யும்போது நன்றி தெரிவியுங்கள்.

குடும்ப விஷயங்களை மனைவியுடன் ஆலோசித்து முடிவெடுங்கள்.

மனைவிக்கு சங்கடம் தரக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள்/போகச் சொல்லாதீர்கள்.

குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுங்கள்.

நீங்கள் வெளியூர் சென்றிருக்கும்போது அடிக்கடி தொலைபேசியில் அன்புடன் பேசுங்கள்.

மனைவியை அடிக்கடி உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்குப் பிடித்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுங்கள்.

மனைவியை ஒருபோதும் கை நீட்டி அடிக்காதீர்கள்.
அவமரியாதையாக பேசாதீர்கள்.

அவள் தவறு செய்யும் நேரங்களில் அவள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். அவளின் பிற நற்குணங்களை நினைத்துப் பாருங்கள்.

மனைவி மீது கோபம் ஏற்பட்டால் கோபம் தணியும்வரை பேசாமல் பொறுமையாக இருங்கள்.

மனைவியை தவிர பிற பெண்களை சிந்தையினாலும் தீண்டாதீர்கள்.

மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் குடும்ப நலனுக்காக அதை கைவிடுங்கள்.

குழந்தைகளை வளர்ப்பதில் நீங்களும் அக்கறை காட்டுங்கள்.

மனைவியின் பெற்றோர்களுக்கு மரியாதை அளியுங்கள்.

"சயனைடின் சுவை" The taste of Cyanide

இதுவரை உலகில் உயிரோடிருப்பவர்கள் எவரும் அறியாதது "சயனைடின் சுவை"

1.சயனைடு சாப்பிட்டால் எவ்வளவு நேரத்தில் மரணம் வரும்?
பதில் - 10 வினாடிகளில்!

2. சயனைடின் நிறம்?- வெண்ணிறப் பொடியாக இருக்கும்.

3.சயனைடின் சுவை என்னவாக இருக்கும்?

***மில்லியன் டாலர் கொஸ்டியன்!!

சயனைடின் மணம் பாதாம் போல் இருக்கும். அதன் சுவையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பலரும் முயன்றும் முடியவில்லை. இதன் சுவையைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று முயன்ற ஒரு விஞ்ஞானி மிகவும் எச்சரிக்கையுடன் முன்னேற்பாடுகளைப் பட்டியலிட்டார். பேப்பர்,பேனா, சயனைடு அனைத்தையும் ஒரு மேசையில் வைத்தார். சயனைடை நாக்கில் வைத்தவுடன் பேனாவில் சுவையின் முதல் எழுத்தை பேப்பரில் எழுதிவிட வேண்டும் "S " என்றால் இனிப்பு ,"B" என்றால் கசப்பு, "T" என்றால் புளிப்பு என்பது போல் என்று முடிவு செய்தார். இதைக் கண்டுபிடித்துவிட்டால் உலகில் முதன்முதலில் சயனைடின் சுவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையும்,பெயரும் கிடைக்குமல்லவா! ஆனால் உயிர் போய்விடும். அதற்குத் துணிந்த அவர் மருத்துவர்களுக்கும், காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு ஒரு கையில் மிகக் குறைவான சயனைடு தூளையும் இன்னொரு கையில் பேனாவையும் வைத்துக்கொண்டு நாக்கில் சயனைடை வைத்தார். எல்லோரும் விரைந்து வந்து பார்த்தனர். விஞ்ஞானி தன் சோதனையை மு்டித்துவிட்டார். அவரும் உயிருடன் இல்லை. மேசையிலிருந்த தாளிலும் ஒன்றும் எழுதப்படவில்லை..
அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களே சயனைடின் சுவை ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக, இன்றும் புதிராகவே உள்ளது.

ஒரு P.Hd டாக்டர் பட்டம் தயாரா உள்ளது,எனிபடி?..

Thursday, May 30, 2013

அறியாப்பருவக் காதல்

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். 

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்

காதல்ன்னா என்ன? எப்படி காதலிக்கலாம்?

காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது பாஸ். காதல் என்பது...

காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் சொல்கிறார்.

ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம் மாறிவிடும். பண்பாடு கெட்டுவிடும். காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு. காதலை ஒழிக்க வேண்டும். காதல் திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க நடக்கும் நாடகத் திருமணங்கள் என்று ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், காதலர்தினமும் நெருங்கி வரும் வேளையில் காதலைப்பற்றிய விரிவான விவாதம் தேவை என்று கருத வேண்டியுள்ளது.

முதலில் காதல் என்பது வெளிநாட்டுப்பண்பாடா என்று பார்க்க வேண்டியுள்ளது.இப்படிப் பேசுபவர்கள் தமிழ்நாட்டின்அரிச்சுவடியே தெரியாதவர்கள் என்று தான்சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றில்காதல் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு.தமிழ் இலக்கியங்களில் காதலைப் பற்றிப்பேசப்படாத, காதலைப் போற்றாத ஒருஇலக்கியத்தைக் கூட பார்க்க முடியாது. தமிழ்இலக்கியங்களில் அகநானூறு என்ற இலக்கியம்தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றி,காதலைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது.

தமிழ் இலக்கியங்களில் உள்ளது அதனால் காதலிக்க வேண்டும் என்று பேசவரவில்லை. இலக்கியங்களில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவனின் உணர்விலும் காதல் தோன்றியே தீரும். காதலைஎதிர்ப்பவர்கள் வேண்டுமானால் அந்த உணர்வுக்கு காதல் என்ற பெயரைவைக்காமல் வேறு பெயரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல்காதல் என்ற உணர்வுக்கு யாராலும் எதிர்வினையாற்ற முடியாது.

இன்று புத்தகங்கள், திரைப்படம் மற்றும் இணையதளத்தில் காதல்கருத்துக்கள் பல வழிகளில் வெளிப்படுகின்றது. ஆனால் உண்மையான காதல்உள்ளுணர்வோடு நாம் வைத்து பழகும்போது தான் அதை உணரமுடியும்.சிலருக்கு காதல் செய்யும் போது, ஆரம்ப காலத்தைத் தவிர மற்றநாட்களில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இல்லாமல், ஃபோர்அடிப்பது போன்று உணர்வார்கள். சிலருக்கு அதனாலேயே காதல் தோல்விஅடைந்துவிடும்.

நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக்கிறீர்கள்...

இது காதல் தானா?

உங்கள் கிளாஸ்மேட், பேஃஸ்புக் நண்பர், பக்கத்து வீட்டு பையன், தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. ஆனால்! இந்த விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை முறை குழம்பி இருப்பீர்கள்?

கதை, கவிதை, திரைப்படம், ஓவியம், இன்டர்நெட் என்று எங்கு பார்த்தாலும் காதலைப் பற்றிய பேச்சு! இருந்தும் உங்கள் குழப்பத்தை தீர்க்க முடியவில்லையா? நோ பிராப்ளம்! கீழே உள்ள குறிப்புகள் நிச்சயம் அது காதலா அல்லது நட்பா என்று தெரிந்து கொள்ள உதவும்!

அந்த `ஸ்பெஷல் நபரை' நினைத்துக்கொண்டு படித்துப் பாருங்கள். இது காதல்தான் என்றால் :

முன்பைவிட மேக்கப்பில் அதிக நேரம் செலவாகும்.

உடைகள் வாங்கும் போது உங்கள் நினைவில் தோன்றுவது "இது `அவனுக்கு' பிடிக்குமா?" என்பது தான்!

பாடங்கள் படிக்கும் போது நினைவுக்கு வருவது `அவனோடு' என்ன பேசலாம் என்பது.

ஆசிரியர் பாடம் நடத்தும் போது காதில் விழுவது `அவன்' பேசியது மட்டுமே!

பர்ஃபியூம், சென்ட் என்று வாசனைப் பொருட்கள் வாங்குவதில் காசு கரைகிறது!

டெலிஃபோன் மணி அடித்தால் தாவிச் சென்று முதலில் எடுப்பது நீங்கள்!

`அவனை' நேரில் சந்தித்தது பத்தாமல் டெலிஃபோனிலும், இன்டர்நெட்டிலும் மணிக்கணக்காக அரட்டை தொடர்கிறது.

`அவனக்கு' விருப்பமான இசை, நடிகர்கள், (நடிகைகள் இந்த பட்டியலில் சேர முடியாது!) விளையாட்டில் திடீரென்று உங்களுக்கும் ஆர்வம் இருப்பதை கண்டுபிடிக்கிறீர்கள்!

நேத்து வரை நண்பிகளோடு வெளியே செல்ல அம்மாவிடம் சண்டைப் போட்டது போக, `அவன்' ஃபோன் செய்வார் என்ற காரணத்தால் அம்மாவே போகச் சொன்னாலும் வீட்டில் தங்கி விடுவது.

பீச், சினிமா, ஷாப்பிங் என்று எங்கு போனாலும் `அவன்' வந்திருக்கிறார் என்ற பிரமை ஏற்படுகிறது.

திருமணம், திருமணமான தோழிகள் திருமண வாழ்வு, எல்லாம் `போர்' என்று நினைத்த காலம் போய்விட்டது.

ஃபோன் செய்யும் போது உங்களை அறியாமலேயே விரல்கள் `அவன்' எண்ணை தட்டுகிறது.

(இரவு முழுதும் `அவன்' நினைவில் தூக்கமே வரவில்லை என்றாலும்) அம்மா எழுப்புவதற்கு முன்பே காலையில் சுறுசுறுப்பாக எழும்புவது.

என்ன? இப்போ புரியுதா....குழப்பம் தீர்ந்ததா....நீங்களே பாத்து ஏதோ நல்ல முடிவா எடுங்க...

இது காதல் தானா!

புலியே தாக்க பயப்படும் விலங்கு எது தெரியுமா ? - சுவையான தகவல்கள்

அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள்

புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு

எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்

மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ

மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு

எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்

இந்திய, ஆப்பிரிக்க நோயாளிகளின் வாழ்க்கையில் விளையாடும் ரான்பாக்ஸி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் நம்பர் ஒன் மருந்து உற்பத்தி நிறுவனமான ரான்பாக்சி நிறுவனம் மோசடியான தனது மருந்து உற்பத்தி நடைமுறைகளுக்காக அமெரிக்க மருந்து ஒழுங்கு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு 500மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்திய செய்தி மருத்குவ உலகை அதிர்ச்சிக்குள்ளக்கியது.

அமெரிக்காவிற்கு ஜானரிக் மருந்துகளை அனுப்ப ரான்பாக்ஸி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஜானரிக் என்றால் சிப்ரோபிளாக்சசின், அல்லது அமாக்சிசிலின் என்ற பெயரிலேயே இருக்கும். நிறுவனத்தின் பிராண்டட் பெயர் இருக்காது. அதாவது வணிகப்பெயர் இல்லாத அந்த பார்முலேஷன் பெயரிலேயே இருப்பதற்குப் பெயர்தான் ஜானரிக் என்று பெயர்.

இவ்வகையான ஜானரிக் மருந்துகள் 30-ஐ அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை செய்தது. இந்த ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகளை ரான்பாக்ஸி ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தியது!

ரான்பாக்ஸி நிறுவனத்தின் மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மருந்து உற்பத்தி நடைமுறைகள் மீது அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் 7 விதமான மோசடிகளை அம்பலப்படுத்தியது. இந்த அத்தனைப் புகார்களையும் ஏற்றுக் கொண்டுதான் ரன்பாக்ஸி அபராதம் செலுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கண்கொத்திப்பாம்பாக செயல்பட்டு வருவது உலகம் அறிந்ததே. ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா பொன்ற ஊழல் நாடுகளில் இந்தக் கண்காணிப்பு சாத்தியமா என்பதே நமது தலையாய பிரச்சனை!

2008ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனமான டாய்ச்சி சான்க்யோ நிறுவனத்திற்கு ரான்பாக்ஸி நிறுவனம் விற்கப்பட்டது. ரான்பாக்ஸி முதலாளிகளான மன்வீந்தர் சிங், மற்றும் ஷிவேந்தர் சிங் ஆகியோர் 2 பில்லியன் டாலர்கள் தொகை பெற்றனர்.

கம்பெனியை வாங்கிய டாய்ச்சி சான்க்யோ தொடர்ந்து மன்வீந்தர், ஷிவேந்தரையே வர்த்தகத்தை கவனிக்க விட்டதே இத்தகைய பெரிய மோசடிக்க்கு காரணம் என்று தற்போது கூறப்படுகிறது.

ரான்பாக்ஸி இயக்குனர் தினேஷ் தாக்கூர் என்பவர்தான் முதலில் மோசடியை அம்பலப்படுத்தினார். ரான்பாக்ஸி விஞ்ஞானிகள் மருந்து உற்பத்திக்குத் தேவையான இடுபொருட்களில் மலிவான ரகங்களை பயன்படுத்துவதை அம்பலப்படுத்தினார். ஆனால் டெஸ்டில் பாஸ் ஆக ரான் பாக்ஸி நிறுவனத்தின் பிராண்டட் மருந்துகளின் இடுபொருட்களை கொடுக்கவேண்டியது!

மேலும் தரவுகளில் மோசடி செய்துள்ளனர். இதனை யு.எஸ். எஃப்.டி.ஏ. துல்லியமாக கண்டுபிடித்தது. மேலும் இந்த விவகாரம் ரான்பாக்ஸியின் அனைத்து முன்னணி அதிகாரிகளுக்கும் தெரியும் என்று வினோத் தாக்கூர் மேலும் ஒரு குண்டை வீசினார்.

வெளியேறிய முன்னாள் ரான்பாக்ஸி அதிகாரியான கேத்தி ஸ்ப்ரீன் என்பவர் மேலும் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்பிரிக்க நாட்டிற்கு ரான்பாக்ஸி அனுப்பும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் தரமற்றவை என்றார். கறுப்பர்கள் செத்தால் யார் கவலைப்படப்போகிறார்கள்? என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

அடோர்வஸ்டாடின் என்ற மருந்தை நன்றாக விற்று வந்த ரான்பாக்ஸி நிறுவனம் நவம்பர் 2012ஆம் ஆண்டு மருந்தில் கண்ணாடித் துகள்கள் இருந்ததால் அனைத்து மருந்து மாதிரிகளையும் திரும்பி பெற்றதும் நடந்துள்ளது.

கைதிகளுடன் வரிசையில் நின்று உணவு வாங்கிய ஸ்ரீசாந்த்!

கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் ஜூன் 4ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட ஸ்ரீசாந்த் சிறையில் முதல் நாளை அனுபவித்தார், கைதிகளுடன் கைதியாக நின்று இரவு உணவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் கௌரவமான வேகப்பந்து வீச்சாளர் இன்று கைதி. விசாரணைக் கைதிகளுக்கான சிறிய செல்லில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். அவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

அவருக்கு மெத்தையும், போர்வையும் வழங்கப்பட்டது. மற்ற கைதிகளைப் போல, அவரும் வரிசையில் நின்று இரவு உணவை வாங்கி சாப்பிட்டார்.

இரவில், அவர் அவ்வளவாக தூங்கவில்லை. உட்கார்ந்தபடியும், நடந்தபடியும் பொழுதைக் கழித்தார். நேற்று காலையில், தேநீர் அருந்தி, பிஸ்கட்டுகள் சாப்பிட்டார். அவருடன் கைதான அஜித் சாண்டிலாவும், மற்றொரு எண் கொண்ட திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு வீரர் அங்கீத் சவான், ஏற்கனவே ஜெயிலில் இருந்து வருகிறார். மூவருமே, தலா 2 விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகவல்களை திகார் ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்

ஒரு விநாடியிலேயே முழு திரைப்படத்தையும் டவுன்லோடு செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட, ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங், இதுகுறித்து கூறியிருப்பதாவது:

தற்போதுள்ள அலைக்கற்றைகளில் 4ஜிதான் வேகமானதாக கருதப்படுகிறது. ஆனால், இதை விட பல நூறு மடங்கு வேகம் கொண்ட 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 கி.மீ. தூர இடைவெளிக்குள் அமைந்த கம்ப்யூட்டர்களுக்குள் ஒரு ஜிகாபைட் பைல் ஒரு விநாடியில் பரிமாறப்பட்டது.

வரும் 2020ம் ஆண்டுக்கு முன்னதாக இந்த தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும். இதன் மூலம் 3டி படங்கள், நேரடி அறுவை சிகிச்சை காட்சிகள், அல்ட்ரா ஹை டெபனேசன் பைல்கள் உள்ளிட்டவற்றை, அளவின்றி வெகு விரைவாக பெற முடியும்.

நேரடி காட்சிகளை, உடனுக்குடன் காண்பதும் சாத்தியமாகும். இதற்காக 64 டைட்டன் தொழில்நுட்பத்தில் அமைந்த 64 கோபுரங்கள் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இவ்வாறு சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே பூமிக்கு அடியில் வயர்களை பதித்து அதிகளவில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்துள்ள நாடுகளில் தென் கொரியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தங்க நகை சேதாரம்!?

அல்ஜிப்ரா கணக்கு என்ன, ஐன்ஸ்டீன் சொன்ன அணுப்பிளவு கொள்கையைக்கூட புரிந்துகொண்டுவிடலாம், ஆனால், தங்க நகைகளுக்குக் கடைக்காரர் சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உள்ளபடி சேதாரம் என்றால் என்ன, சேதாரம் என்கிற பெயரில் ஏன் இவ்வளவு பணத்தை நம்மிடம் வாங்குகிறார்கள், கடைக்காரர்கள் அந்தச் சேதாரத்தை என்ன செய்வார்கள் என்கிற மாதிரியான பல கேள்விகளை ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

”எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது.

இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது. தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும். ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும்.

கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும். அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும்

30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும். பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும்.

இறுதியாக, கட்டிங் இயந்திரத்தில் டைமண்ட்டூல் மூலமாக கட்டிங் செய்வார்கள். இதுதான் நகை தயாரிப்பின் கடைசி நிலை. இப்படி செய்யும்போது நகை மினுமினுப்பு ஏற்படும். அந்தச் சமயத்தில் தங்கம் மணல் தூள்போல் பறக்கும். இதை ஓரளவிற்கு சேகரித்துவிடுவார்கள். அந்தக் கட்டத்தில் 0.100 கிராம் முதல் 0.200 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். ஆக, கட்டித் தங்கம் செயினாக முழுமையடையும்போது சேதாரம் 0.600 கிராமிலிருந்து 0.800 கிராம் வரை இருக்கும். இது டிசைனைப் பொறுத்து எடை இழப்பு மாறுபடும். அதோடு கூடுதலாகக் கொடுத்த 6 கிராம் தங்கத்தில் சேதாரம்போக மீதமுள்ள 5.200 கிராம் தங்கத்தை திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.

இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். இதனுடைய தற்போதைய விலை 1,700 ரூபாய். பெரும்பாலான கடைகளில் சேதாரத்தை சதவிகிதத்தில்தான் கணக்கிடுகிறார்கள். ஒரு நகைக்கு 5 சதவிகிதம்தான் சேதாரம் என்றால் நகைக் கடைக்காரர்கள் சேதாரத்தை 3-லிருந்து 5 சதவிகிதம் வரை கூடுதலாக வைத்து விற்கிறார்கள்.

தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே பெரிய, சிறிய என அனைத்து கடையிலும் ஒரே விலைதான். ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு சில தங்க நகை வியாபாரிகள் தங்கத்தின் தரத்தைக் குறைத்து சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தந்தனர். ஆனால், தற்போது சரியான தரத்தைக் கொடுத்து சேதாரத்தில் லாபத்தை வசூல் செய்துவிடுகிறார்கள்.

சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.

“சேதாரம் கணக்கிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. ஏனெனில், பெரும்பாலான நகைகள் கையால் செய்யப்படுகின்றன. நகை செய்பவர்களின் கைப்பக்குவத்தை பொறுத்து சேதாரம் மாறுபடும். சிலர் சேதாரம் அதிகம் ஏற்படாமல் நகையை செய்வார்கள். சிலர் அதிக சேதாரத்தில் நகையை செய்வார்கள். தவிர, வாடிக்கையாளர்கள் எப்போதும் சொன்ன விலையை தருவதில்லை. பேரம் பேசி குறைத்துதான் வாங்குகிறார்கள். மேலும் விளம்பரம், பரிசுப்பொருட்கள், ஊழியர்களின் சம்பளம், மின்சார செலவு, பாதுகாப்பு செலவு என நிறைய செலவுகளுக்கான பணத்தை இந்த சேதாரத்தில் தான் சேர்க்க வேண்டியுள்ளது” என தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறுகிறார்.

ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான சேதாரம் அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் லேசில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. தங்கத்தின் தினசரி விலையை லண்டனில் ஐவர் கொண்ட குழு நிர்ணயிக்கிறது அதனை அடிப்படையாக வைத்துதான்

நகை வியாபாரிகள் சங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவிகிதத்தை லாபமாக கூடுதலாக வைத்து நகையின் விலையை அறிவிக்கிறது. இந்த லாபம் போகத்தான் இந்தச் சேதாரத்தின் மூலம் கிடைக்கும் லாபம்!” என்று முடித்தார் சுவாமிநாதன்.

தங்க நகையில் சேதாரம் என்பதெல்லாம் தென் மாநிலங்களில்தான். வட மாநிலங்களில் எல்லாம் தங்க நகைகளுக்கு தனியாகச் சேதாரம் கணக்கிடுவதில்லை. மற்ற பொருட்களை போலவே சேதாரத்தை நகையின் விலையில் சேர்த்து விற்கிறார்கள்.

தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழை இந்திய அரசு வழங்குகிற மாதிரி சேதாரத்திற்கு ஓர் அளவை நிர்ணயம் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, சேதாரம் என்கிற பெயரில் சாதாரண மக்களின் பணம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்!

ஓல்ட் இஸ் கோல்ட்!


பழைய பொருட்களுக்கு என்றும் உலகில் மதிப்பு அதிகம் என்பர் இதனையே ஓல்ட் இஸ் கோல்ட் எனக் கூறுகின்றோம்.

அதேபோல் தற்போது சற்று சறுக்கி இருந்தாலும் கூட அப்பிள் சாதனங்களுக்கு என்றுமே எதிர்ப்பார்ப்பும், மதிப்பும் சற்றும் அதிகம். அது அப்பிள் வர்த்தகச் சின்னத்துக்குரிய சிறப்பம்சமாகும், இதனை பிரேண்ட் இமேஜ் எனக் குறிப்பிடலாம்.

இது இன்று, நேற்று உருவாகியதொன்றல்ல, அப்பிளால் நீண்ட நாட்களாக கட்டியெழுப்பப்பட்டது.

தரம், விலை, விற்பனைக்கு பின்னரான சேவை என பல அம்சங்களை இது அடிப்படையாகக் கொண்டது.

இது ஒரு உற்பத்தியினை நுகர்வதானல் அதன் நுகர்வோருக்கு குறித்த பொருள் அல்லது சேவை மேல் ஏற்படும் நம்பக்கத்தன்மை சார்ந்ததாகும்.

இதனை கட்டியெழுப்புவது அவ்வளவு இலகுவனாதல்ல , ஆங்கிலத்தில் 'Consumer is king' அதாவது நுகர்வோனே அரசன் என்பதாகும், ஒரு பொருள் அல்லது சேவையின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பது அதன் நுகர்வோனேயாகும்.

எத்தைகைய பொருளை விற்பனை செய்தாலும் அதன் இறுதி முடிவு நுகர்வோரையே சாரும்.

அப்பிளுக்கு கிடைத்துல்ல மதிப்பு அனைத்து உற்பத்திகளுக்கும் கிடைக்கவில்லையென்பது மறக்கமுடியாத உண்மை.

அதேபோல் இத்தகைய மதிப்பைப் பெறும் அனைத்து நிறுவனங்களும் இதை தக்கவைத்துக்கொள்வதில்லை.

இந்நிலையில் பழையவைக்கும் அதுவும் அப்பிளுக்கு இருக்கும் மதிப்பை நிரூபிக்கும் வகையில் அந் நிறுவனத்தின் பழைய கணனியொன்று சுமார் 671,400 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது இலங்கை நாணயத்தின் படி 8 கோடிக்கும் அதிகமாகும். பலரது எதிர்ப்பார்ப்பையும் முறியடித்து இத்தகையதொரு தொகைக்கு ஏலம் போயுள்ளது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

ஜேர்மனின் பேர்லினில் உள்ள பிரீக்கர் என்ற ஏல நிறுவனம் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏலமொன்றிலேயே குறித்த கணனியை விற்பனைசெய்துள்ளது.

இதனை கொள்வனவு செய்தவர் யார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பிள் நிறுவனம் 1976 ஆம் ஆண்டே இக்கணனியை அறிமுகம் செய்தது.

அப்பிளின் ஆரம்பகால கணனியான A1 ஐ அந்நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் வொஸ்னியாக்கே வடிவமைத்து, உருவாக்கினார்.

ஸ்டீவ் வொஸ்னியாக் உருவாக்கிய போதிலும் இதனை விற்பனை செய்யும் எண்ணத்தைக் கொண்டிருந்தவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஆகும்.

இதனை தயாரித்து விற்பனை செய்வதற்கான நிதியை பெற்றுக்கொள்ளும் முகமாக ஸ்டீவ் ஜொப்ஸ் தனது வாகனத்தையும், வொஸ்னியாக் தனது கணிப்பானையும் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது 1976 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த வேளை இதன் விலை 666.66 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 200 A1 கணனிகளை அப்பிள் தயாரித்ததாகவும் அவற்றில் தற்போது 46 மட்டுமே உலகில் உள்ளதாகவும் அதிலும் 6 மட்டுமே செயற்படு நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் - ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) - 10 குறிப்புகள்


1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.

2. சுமார் 12-14 வயது காலகட்டத்திலேயே, ஆணும், பெண்ணும் இனவிருத்தி செய்யக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

3. சுமார் 13 - 14 வயதில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பே, பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதால், பருவத்தின் அறிகுறிகள் ஆரம்பமாகி விடுகின்றன. இந்த வளர்ச்சி 17 - 18 வயதில் முடிவடைகிறது,

4. பெண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்:

அ. முகத்தில் மினுமினுப்பு கூடுதல்.
ஆ. கண்களில் அழகும் கவர்ச்சியும் தோன்றல்.
இ. புன்னைகையில் பல அர்த்தங்கள் காணல்.
ஈ. இடுப்பு எலும்புகள் அகலமாதல்.
உ. புட்டப்பகுதியில் கொழுப்பு சேர்த்து அகலமாதல், மார்புகள் சிமிழ்போல் வளர்ச்சி அடைதல்.
ஊ. பெண்குறியின் உதடுகள் சற்று தடித்தல்.
எ. தலைமுடி அடர்ந்து வளருதல் போன்றவை ஏற்படும்.

5. ஆண்களுக்கு, சுமார் 12 வயதில் ஆரம்பமாகும் பருவ மாறுதல், 13 - 17 வயதில் உச்சத்தை அடைந்து, சுமார் 18 - 19 வயதில் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது.

6. ஆண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்.

அ. ஆண்குறியின் அடிப்பாகம் மற்றும் விதைப்பைகளின் மேல் பாகத்தில் மயிர் நன்றாக வளருதல்.
ஆ. விதைகளும், விதைப்பைகளும் பெருத்தல்.
இ. குறி விறைப்பு அடிக்கடி நிகழுதல்.
ஈ. உடல் உயரமும், எடையும் திடீரென்று கூடுதல்.
உ. தோள்கள் விரிவடைதல்.
ஊ. குரல் உடைந்து வெளிப்படுதல்.
எ. மேல் உதடு, மார்பு போன்றவற்றில் மயிர் வளருதல்.
ஏ. விந்து உற்பத்தியாகி, கனவுகள் மூலம் இன்ப அதிர்வுடன் வெளியேறுதல்.

7. அடிக்கடி பாலியல் உணர்வு உந்துதலால், கல்வியைவிட, கலவியில் நாட்டம் அதிகமாக இருக்கும்! மனதை, அதன்போக்கில் சற்றுவிட்டுத் திருப்ப வேண்டும். அடக்குதல் கூடாது. எதையும் விழிப்புணர்வோடு பார்க்கவும். அதே நினைப்பு வேண்டாம்.

8. சுய இண்பம் காண பெரும் விருப்பம் ஏற்படும். இதில் எந்தக்குற்ற உணர்வும் கொள்ள வேண்டாம். இது மிகவும் இயல்பானது. இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

9. இதுவரை இருந்து வந்த தன் இன மோகம், இப்பொழுது எதிர்ப்பால் இனத்திடம் தாவும்.

10. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத பருவம். ஆகவே, இதுபாலரும் மிகவும் விழிப்பாக, அறிவுபூர்வமாக எதையும் சிந்திக்க வேண்டும்.

19 முறை கருச்சிதைவுக்கு பின்னர் அழகான பெண் குழந்தை பிறந்த அதிசயம்

பிரிட்டனை சேர்ந்த பெண் 19 முறை கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் தற்போது அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பிரிட்டனின் நியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீவ்(வயது 38). இவரது மனைவி ஜோ ஷார்ட்(வயது 37).

இவர்கள் இருவருக்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் 19 முறை கரு கலைந்து கொண்டே இருந்தது.

இது குறித்து ஜோ கூறுகையில், அடிக்கடி காபி, டீ குடிப்பதால் கருச்சிதைவு ஏற்பட்டதாக கருதினேன். மேலும் ஆப்பிள் பழங்களை கழுவாமல் சாப்பிட்டதால் எனக்கு இது போன்று ஏற்படுவதாக எண்ணினேன்.

கடந்த 15 ஆண்டுகளில் 19 முறை கருச்சிதைவு ஏற்பட்டதால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன்.

எனக்கு எண்டோமெட்டிரியோசிஸ் என்ற பிரச்னை உள்ளதாக கூறிய மருத்துவர்கள், கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் தற்போது கரு கலையவில்லை. அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, May 29, 2013

Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிப்பதற்கான வழி

Facebook கணக்கு ஒன்றை நிரந்தரமாக அழிக்கலாமா? ஆம் அழிக்கலாம். அதுவும் இலகுவாக அழிக்கலாம். பலர் பல தேவைகளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை Facebook இல் வைத்திருப்பார்கள். ஒரு நேரத்தில் இந்த கணக்குகள் அவர்களுக்கு தேவைப்படாமல் போகலாம். அல்லது சிலர் ஆரம்பத்தில் ஒரு கணக்கை வைத்திருந்துவிட்டு பின்னர் வேறு ஒரு கணக்கை உபயோகிக்கலாம். இதன்போது அவர்கள் தமது ஆரம்ப கணக்கை அழித்துவிட நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் யாரும் தமது கணக்கை நிரந்தரமாக அழிப்பதில்லை. தற்காலிகமாக Deactivate செய்துவிடுகிறார்கள். இப்படிச்செய்யும்ப்போது அவர்களது தரவுகள் அந்த கணக்கில் பேணப்படுகின்றன.


நிரந்தரமாக அழிப்பது எப்படி?

இலகுவாக நிரந்தரமாக அகற்றிவிடலாம்


எச்சரிக்கை: நிரந்தரமாக அகற்றினால் உங்கள் புகைப்படங்கள், தரவுகள் யாவும் அழிக்கப்பட்டுவிடும். கணக்கை மீளப்பெறமுடியாது.

* உங்கள் Facebook கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள்

* இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
https://www.facebook.com/help/contact.php?show_form=delete_account


* அடுத்து வரும் விண்டோவில் Delete My Account என்பதை தெரிவு செய்யுங்கள்


* Delete My Account என்பதை தெரிவு செய்ததும் வரும் விண்டோவில் உங்கள் பாஸ்வேர்டையும், Captcha Code ஐயும் கொடுங்கள். கொடுத்தபின் okay என்பதை கொடுங்கள். உங்களுக்கு இரு எச்சரிக்கை செய்தி வரும். உங்கள் கணக்கு 14 நாட்களின் பின் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும். ஆனால் அடுத்த 14 நாட்களுக்குள் மீளவும் நீங்கள் login செய்தால் உங்கள் கணக்கு மீண்டும் Active ஆக்கப்படும். ஆகவே 14 நாட்கள் login பண்ணுவதை தவிர்த்தால் கணக்கு நிரந்தரமாகவே அழிக்கப்பட்டுவிடும்.

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி?

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ….

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’ல ன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…

2012ஆம் ஆண்டின் மிகமோசமான கடவுச்சொற்கள்

எங்களில் பலர் ”பாஸ்வேர்ட்” பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. ஒரு இணைய கணக்கையோ(Facebook, Twitter) , மின்னஞ்சல் கணக்கையோ ஆரம்பிக்கும் போது இலகுவில் நமக்கு ஞாபகம் நிற்கக்கூடியவாறாக கடவுச்சொல்லை கொடுப்போம்.

அதாவது பெயர், பிறந்ததிகதி, தொலைபேசி இல, 123456, abcdef போன்றவற்றில் ஏதாவதொன்றை பலரும் கடவுச்சொல்லாக பயன்படுத்துவர்.

இவ்வாறு இலகுவில் உய்த்தறியக்கூடிய,அல்லது பொதுவான வழக்கிலுள்ள கடவுச்சொற்களை பயன்படுத்தினால் உங்களுடைய இணையக் கணக்கின் பாதுகாப்பிற்கு யாராலும் உத்தரவாதம் வழங்க முடியாது.

Splash data இணையத்தளம் இந்த ஆண்டின் மிக மோசமான 25 கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றின் விபரம் கீழே

Top 25 Worst Passwords

01. password

02. 123456

03. 12345678

04. abc123

05. qwerty

06. monkey

07. letmein

08. dragon

09. 111111

10. baseball

11. iloveyou

12. trustno1

13. 1234567

14. sunshine

15. master

16. 123123

17. welcome

18. shadow

19. ashley

20. football

21. jesus

22. michael

23. ninja

24. mustang

25. password1

நண்பர்களே மேலே உள்ள பட்டியலில் உள்ளமாதிரியான பாஸ்வேர்ட்களில் ஒன்றையோ அல்லது அதேமாதிரி ஒத்த பாஸ்வேர்ட்களையோ நீங்கள் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிட்டு பாதுகாப்பான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள். உதவிக்கு இந்த பதிவைப் பாருங்கள்

திருமண நிகழ்வில் மின்தடை: காதலனுடன் மணப்பெண் தப்பி ஓட்டம்

திருமண விழாவில் மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மைசூர் மாவட்டம் உண்சூர் தாலுகா தட்டிகெரே கிராமத்தில் வசிக்கும் ராமய்யா என்பவரின் மகன் சிவராஜிக்கும், அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கர் காலனியில் வசிக்கும் மகாதேவா என்பவரின் மகள் அஞ்சலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இரு குடும்பத்தினரும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர். நெருங்கிய உறவினர்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் திருமணத்திற்கான பந்தக்கால் நடும் விழா, அம்பேத்கர் காலனியில் உள்ள அஞ்சலி வீட்டில் நடந்தது. அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது.

10 நிமிடம் கழித்து மின்சாரம் வந்துபோது, மணப்பெண் அஞ்சலி மாயமாகி இருந்தார். இதனால் குடும்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் தேடியும் அஞ்சலி கிடைக்கவில்லை.

இதுகுறித்து பொலிசில் அஞ்சலியின் தந்தை மகாதேவா புகார் கொடுத்தார். அஞ்சலியை பொலிசார் தேடி கொண்டிருந்தபோது, நேற்று பகல் 2 மணியளவில் அம்பேத்கர் காலனியில் வசிக்கும் தாசய்யாவின் மகன் ராமுவை திருமணம் செய்து கொண்டு, கணவருடன் பொலிஸ் நிலையத்திற்கு அஞ்சலி வந்தார். இது குறித்து மகாதேவப்பாவுக்கு பொலிசார் தகவல் கொடுத்தனர்.

அவருடன் குடும்பத்தினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராமுவை 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவருடன் மட்டுமே வாழ்வேன் என்று அஞ்சலி உறுதியாக கூறிவிட்டார்.

இதை ஏற்று கொண்ட மணமகன், விருப்பமில்லாத பெண்ணுடன் வாழ விரும்பவில்லை என்று கூறிவிட்டார். வேறு வழியில்லாமல் ராமுவுடன், அஞ்சலியை பொலிசார் அனுப்பி வைத்தனர்.

பிணமான கர்பிணி தாய் குழந்தை பெற்ற அதிசயம்

அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசிக்கும் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார். கண்கள் இரண்டும் மேல்நோக்கி நிலைகுத்தியபடி, வாயில் இருந்து நுரை தள்ளிய நிலையில் இருந்த எரிக்காவை அவரது கணவரும் சக ஆசிரியைகளும் ஆஸ்பத்திரிக்கு அள்ளிச் சென்றனர். ஆஸ்பத்திரியை சென்றடைவதற்குள் எரிக்காவின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது.

அவர் இறந்துவிட்டதாக அறிவித்த டாக்டர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக ‘சிசேரியன்’ ஆபரேஷன் மூலம் வெளியே எடுத்தனர். இது, ஏறக்குறைய பிணத்துக்கு பிரசவம் பார்த்த கதை போன்றதுதான் என்றாலும், அதிர்ஷ்டவசமாக குழந்தையின் நாடி மற்றும் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்தது. குழந்தையை வெளியே எடுத்த பின்னர், எரிக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த டாக்டர்கள், அவரது இதயம் துடிப்பதை அறிந்து திகைத்து போனார்கள். இதனையடுத்து, அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி இயல்பு நிலைக்கு வரவழைத்தனர். இந்த அரிய சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய டாக்டர்கள் ‘பத்தில் ஒன்பது பேர், முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது’ என்றனர்.

காரணம் தெரியாமல் தேநீர் குடிக்கலாமா?


காஃபி மற்றும் தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவதுமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கிறோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர். ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வுகள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ்வொன்றாக நமக்கு தெரிவிக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது தேநீர். அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பல் சொத்தை

தேநீரில் இயற்கையான ஃபுளோரைடு என்ற ரசாயனம் சிறிதளவில் இருப்பதால், பல் சொத்தையாவதை அது தடுக்கும். எப்படியெனில் ஃபுளோரைடு எச்சிலோடு கலக்கும் போது, சொத்தைகளை உண்டாக்கும் துணை உற்பத்திப் பொருட்களை பாக்டீரியாவால் உற்பத்தி செய்ய முடியாது. மேலும் ஃபுளோரைடு, பல் சொத்தையாகும் ஆரம்ப நிலையில் அதை சரி செய்ய உதவும்.

எடை குறைவு

க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல் எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது. இது உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து கொழுப்பினை குறைப்பதால் (முக்கியமாக வயிற்று பகுதியில்), உடல் எடை குறையும்.

புற்றுநோய்

தேநீரில் உள்ள மற்றொரு ஆக்சிஜெனேற்றத் தடுப்பானான பாலிஃபீனால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். எனவே இதற்கு நன்றியை முதலில் நாம் தெரிவிக்க வேண்டும். இதற்காக செய்யப்படும் ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளும் இதனை இன்னும் உறுதியாக சொல்லாவிட்டாலும், தேநீரில் உள்ள பாலிஃபீனால் மற்றும் கேட்சின்ஸில் உள்ள உயிரிய செயல்பாடு புற்றுநோயை தடுக்கும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்

தினசரி எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி முழுவதும் சரியில்லை என்று விஞ்ஞானிகள் ஒத்துக் கொண்டுள்ளனர். பதிலாக தண்ணீருடன் சேர்த்து, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களும் உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் என்று சொல்கின்றனர். எனவே சிறிதளவு காப்ஃபைன் சேர்ப்பது தவறில்லை; ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் பருகலாம்.

தமனித் தடிப்பை குறைக்கும்

தமனித் தடிப்பு என்பது தமனி இறுகி குறுகுவது. ஒரு ஆய்வின்படி, தினசரி 1-2 கப் தேநீர் பருகும் பெண்களுக்கு 50 சதவீதம் வரை தீவிர தமனித் தடிப்பு குறைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாதத்திற்கும் நிவாரணி

பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர் பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.

நரம்பியல் நோய்களைத் தடுக்கும்

பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக அல்சைமர் போன்ற சிதைகின்ற நோய்கள். மேலும் க்ரீன் டீ-யில் உள்ள பாலிஃபீனால், மூளை செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் டோபமைன் மற்றும் எஃபிநெஃப்ரின் போன்ற நரம்பியத்தூண்டுவிப்பிகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும். மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால், படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய்

இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன் டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்து நிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்

க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும் அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்பு அதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயது பெண்மணிகளுக்கு இருப்பதில்லை.

அழிந்து வருகின்றது ஆண்கள் இனம்: ஓர் அதிர்ச்சித் தகவல்

உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள். அதாவது உலகிலிருந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியாக இருக்க முடியாது.

ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தத் தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற பெண் விஞ்ஞானியே கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், உலகின் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பை அடைந்துள்ளன. அதில் ஒன்றாக ஆண் இனமும் சேர்ந்திருப்பது அதிர்ச்சியான தகவலாகும்.

பொதுவாக பெண் பாலினத்தை நிர்ணயிப்பது எக்ஸ் குரோமோசம்கள் ஆகும். இதில் ஒரு குரோமோசோமில் 1000 ஜீன்கள் இருக்கும். அதேபோல ஆண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோமிலும், ஆரம்பத்தில் ஒரு குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய ஆண்களின் குரோமோசோமில் ஏறத்தாழ 100 ஜீன்கள் வரை குறைந்துள்ளது. அதில் முக்கியமான ஜீன் எஸ்ஆர்ஒய் ஜீனும் அடக்கம். Male master switch என்று அழைக்கப்படும் இந்த ஜீன்தான் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஜீன் ஆகும். தற்போதைய பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரு ஒய் குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதை அறியலாம்.

இருப்பினும் ஆண் இனம் முழுமையாக அழிவதற்கு 50 லட்சம் ஆண்டுகள் பிடிக்குமாம். அதுவரை பிரச்சனை இல்லை என்கிறார் ஜென்னி கிரேவ்ஸ். தற்போது சேகரிக்கும் டைனோசரஸ் முட்டை மாதிரி, ஆண் விந்தணுவை சேகரித்து வைக்கும் வங்கிகள் அதிகமாகலாம். இல்லையென்றால் அறிவியல் இன்னும் பல நினைத்துப் பார்க்க இயலாத கண்டுபிடிப்புகளைத் தரலாம். எனவே இது கவலைத் தரவேண்டிய விடயமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

சுயமாகவே பேஸ்புக்கில் கொமண்ட் எழுதும் வைரஸ் உருவாக்கம்: அதற்கு அச்சுறுத்தலாக அமையுமா?

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது.

இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது. இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது. தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் ...

"முகங்கள்" - சகாயம் ஐ.ஏ.எஸ்.

ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் ...

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!''

இந்த நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.

உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்

முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.இவற்றின் வரிசையில் தற்போது Visual Youtube Downloader எனும் ஒரு புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.

இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் விரைவான செயற்பாட்டினைக் கொண்ட இம்மென்பொருளானது உயர் தரம் வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதனால் ஏனைய மென்பொருட்களிளை விடவும் சிறந்ததாக இருக்கின்றது.

8வது பிறந்த தினத்தில் YouTube தளம்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமாகவும், முன்னணியிலுள்ள தளமாகவும் காணப்படும் YouTube தளமானது 8வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.

2005ம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்தளமானது முதன் முதலாக 20 செக்கன்கள் ஓடக்கூடிய வீடியோவினை தரவேற்றம் செய்து தனது பயணத்தை ஆரம்பித்தது. தற்போது மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் 1 பில்லியன் வரையான பயனர்களையும் கொண்டுள்ளது.

அத்துடன் தற்போது நிமிடம் ஒன்றிற்கு 100 மணித்தியாலங்கள் வரை நீளம் கொண்ட வீடியோ கோப்புக்கள் உலகெங்கிலுமிருந்து பகிரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஒபாமா சட்டை காலரில் லிப்ஸ்டிக்.... வாயை வச்சது யாரோ...?


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சட்டைக் காலரில் காணப்பட்ட லிப்ஸ்டிக் அடையாளத்தால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் ஒபாமாவே அதற்குக் காரணமானவர்களை கொண்டு வந்து நிறுத்தி விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் இந்தக் களேபரம் நடந்தது. வெள்ளை மாளிகையில், ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒபாமா கலந்து கொண்டார். அந்த விருந்து நிகழச்சியில் ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 300 பேருக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர். பலரிடம் ஒபாம் நெருங்கிச் சென்றும் கட்டிப்பிடித்தும் கை குலுக்கியும் அளவளாவினார். பின்னர் அவர் பேசுகையில் இவர்களின் அன்பில் நனைந்ததன் விளைவாக எனக்குக் கிடைத்த பரிசு இந்த லிப்ஸ்டிக் என்று தனது சட்டைக் காலரைக் காட்டி குறிப்பிட்டார். அப்போதுதான் பலரும் சட்டைக் காலரில் லிப்ஸ்டிக் அடையாளம் இருந்ததைப் பார்த்தனர். பின்னர் லிப்ஸ்டிக் கரைக்குக் காரணம் யார் என்பதையும் அவரே விளக்கினார். அவர் கூறுகையில், இதற்குக் காரணமானவர் யார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஜெஸ்ஸிகா சான்செஸ். ஜெஸ்ஸிகா அல்ல, அவரது அத்தை.எங்கே அவர்....இதோ இங்கே இருக்கிறார். இவர்தான், இவர்தான் இதற்குக் காரணம் என்று ஒபாமா ஜெஸ்ஸிகாவின் அத்தையைக் காட்டி கூறியபோது கூட்டத்தில் சிரிப்பு வெடித்தது. இதை நான் ஆளைக் காட்டி சொல்கிறேன் என்றால், எனக்கும் மிஷலுக்கும் இதனால் சண்டை வந்து விடக் கூடாதே.. அதற்காகத்தான் என்று கூறி ஒபாமா நிறுத்தியபோது கூட்டத்தில் மேலும் சிரிப்பலை பரவியது. ஜெஸ்ஸிகா, அமெரிக்கன் ஐடல் சீசன் 11ல் 2வது இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல வேளையாப் போச்சு போங்க.. இல்லாட்டி இன்னொரு 'கிளிண்டன் கதையை'அமெரிக்கக் குழந்தைகள் கேட்க நேரிட்டிருக்கும்..!!!!

ஒசாமாவை அமெரிக்கப்படை கொல்லவில்லை, ஒபாமா ரீல் விடுகிறார்: மாஜி பாடிகார்டு

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப்படைகள் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அவராக தற்கொலைப்படை பெல்ட் அணிந்து அதை வெடிக்கச் செய்து இறந்ததாகவும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அப்போத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் கடலில் வீசப்பட்டது. இந்நிலையில் ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ்(57) கூறுகையில், ஒசாமாவை அமெரிக்கப்படைகள் ஒன்றும் கொல்லவில்லை. அமெரிக்கப் படைகள் காம்பவுண்டுக்குள் புகுந்து அவரின் காவலர்கள் இருவரை சுட்டுக் கொன்றன. மேலும் ஒசாமாவின் தொடையில் சுட்டனர். உடனே ஒசாமா தன் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார். இந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கு இல்லை. அவரின் உறவினர்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். அமெரிக்க படைகள் அவரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் இறந்தபிறகு அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டது. ஒசாமா உடலை கடலில் புதைத்தாகக் கூறுவதில் உண்மையில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா பொய் சொல்லியுள்ளார். அமெரிக்கப்படைகள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒசாமா 10 ஆண்டுகளாக தனது இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்டை கட்டிக் கொண்டு திரிந்தார் என்றார்.

கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் இந்திய ரூபாய்!!!!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அதாவது இன்று காலை 9.05 மணி அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு 56 புள்ளிகள் குறைந்து, ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 56.13 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் 17 பைசா வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

ஜூன் 2012க்குப் பிறகு, டாலருக்கு எதிரான இந்த வீழ்ச்சி மிகப் பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாகவே டாலருக்கு எதிரான மதிப்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதினால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யும் போது அதற்கான பணத்தை டாலரில் செலுத்த வேண்டும். போதுமான டாலர் கையிருப்பு இல்லை என்றால், அவற்றை இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் போது இந்தியாவின் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைகிறது.

தற்போது டாலரின் தேவை அதிகமாக இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தொடரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் உலக அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது.

Tuesday, May 28, 2013

குரங்குகள் அழிந்தால் மானிட இனம் அழியும் - தடுக்க முயற்சிக்கும் மனிதர்!

வித்தியாச மனிதர்களும், மனிதநேய உள்ளத்தினரும் சுற்றி உள்ளதால் தான் உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது போல... மனிதர்களின் மீதான கரிசனங்களே குறைந்துபோன எந்திரமயமான காலத்தில் மிருகங்களின் மீதான நேயத்தோடு அவைகளுக்கு உதவி வருகிறார் சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த எம்.ஆறுமுகம்.

இவர் அப்படி என்ன நேயத்தோடு உதவுகிறார்? நமது முன்னோர்கள் என சொல்லப்படும் குரங்குகளுக்கு உணவிட்டு வருகிறார்.

ஏற்காட்டில் குரங்குகள் அதிகம். வரலாறு காணாத கோடை வெப்பத்தால் வறண்டு வருகிறது மலை. பசுமை போர்த்திய மலை மொட்டை அடிக்கப்பட்டதாக மாறி வருகிறது. மலைகளையே ஜீவாதாரமாக வாழ்ந்து வரும் குரங்கினம் உணவும், தண்ணீரும் இன்றி தவித்து வருகிறது.

இந்த தவிப்பை தீர்க்க தன்னால் முடிந்ததை செய்கிறார் 40 வயது எம்.ஆறுமுகம்.

அவரே பேசுகிறார்...

'நான் சின்னதா ஒரு மளிகை கடை நடத்தி வர்றேங்க. பெருசா வருமானம் கிடையாது. இருந்தாலும் பொழப்ப ஓட்ட முடியுது. சின்ன வயசுல இருந்தே மிருகங்கள்னா பிடிக்கும். நம்ம ஊருலயே இருப்பதால அடிக்கடி ஏற்காடு போவேன். அப்போ குரங்குகளுக்கு ஏதாவது வாங்கிட்டு போயி கொடுப்பேன்.

ஆனா இந்த முறை போகும்போது வெயில் தாக்கத்தை தாங்க முடியாம குரங்குங்க அவதிப்பட்டது. எங்கயும் தண்ணி இல்லை. என் குழந்தைக்கு ஒண்ணுன்னா நான் தானே பாத்துக்குறேன் குரங்குகளுக்கு யார் இருக்கா? குரங்குகளும் நம்ம குழந்தைங்க தான். குரங்குகள் இல்லைனா மலைகள் இல்லை. மலை இல்லைனா மானிட இனம் காலப்போக்கில் அழிந்திடும். இந்த சுழற்சியை பலர் புரிஞ்சுக்குறது இல்ல. அதனால தான் இப்போ மூணு மாசமா தினம் வீட்ல இருந்து தண்ணி புடிச்சுட்டு வந்து அங்கங்க வச்சுருக்குற தண்ணி தொட்டில ஊத்துவேன். அப்புறம் தினம் மாம்பழம் உட்பட்ட பழங்களை ஊட்டுவேன்.

புள்ளத்தாச்சியா இருக்குற குரங்குகளுக்கு சோலை கறுதும், மூக்கு கடலையும் கொஞ்சம் உப்பும் போடுவேன். அப்ப தான் பால் நல்லா ஊறும். இங்க பல குழந்தை குரங்குகளுக்கு போதிய தாய் பால் கிடைக்கிறது இல்லை. உணவு இருந்தாதானே தாய் பால் ஊறும்? தாயின் மார்பு காம்புகளை உரிந்தும் பாலில்லாம அந்த குழந்தை குரங்குகள் தவிப்பதை பார்த்தால் நமக்கு கண்ணில் ரத்தம் வரும். அவ்ளோ கஷ்டம். அதான் என்னால் முடிந்ததை இங்க செய்றேன்.

தினம் மார்கெட்டுல மீதமான பழங்கள், தின்பண்டங்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து குரங்குகளுக்கு போடுகிறேன் என்றார் உருக்கத்துடன்.

அதேசமயம் ஒரு சின்ன கோரிக்கை என்றார். இங்க மலைக்கு வர்றவங்க பிளாஸ்டிக் கவரோட தின்பண்டங்கள், தண்ணி பாக்கெட் வீசுறாங்க. இது ரொம்ப ஆபத்தானது. பசி நேரத்துல குரங்குகள் அந்த ப்ளாஸ்டிக்கையே தின்கிறது. இதனால் மிக பெரிய விளைவு ஏற்படும். எனவே யாரும் பிளாஸ்டிக் பொருட்களை மலையில் வீச வேண்டாம் என்றார் அக்கறையோடு.

பேசிக்கொண்டே குரங்குகளுக்கு மாம்பழத்தை ஊட்டியபடி இருந்தார். அவைகளும் அதை உண்டு விட்டு தங்கள் சேட்டைகளை காட்ட, இவர் கொஞ்ச அந்த காட்சி தாயும் சேயும் அன்பை பரிமாறும் அழகிய காதலாய் தென்பட்டது.

நன்றி : நக்கீரன்

சேற்றில் சிக்கிய யானை மரணம்! கண்ணீர் சிந்திய பொதுமக்கள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் அங்குள்ள பவளக்குட்டை என்ற இடத்தில் தண்ணீர் குடிக்க கூட்டமாக வந்தன. அப்போது 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை தண்ணீர் குடிக்கும்போது சேற்றில் சிக்கிக்கொண்டது.

குட்டையின் வெளியே நின்றுகொண்டு இருந்த மற்ற யானைகள், சேற்றில் சிக்கிய யானையை துதிக்கையால் பற்றி இழுத்தது. ஆனால் அவைகளால் மீட்க முடியவில்லை. அப்போது இதனைப் பார்த்த அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஊருக்குள் ஓடிச்சென்று இதுபற்றி கூறினார்கள்.

உடனே கிராம மக்கள் பவளக்குட்டைக்கு ஓடிவந்தனர். ஆனால் குட்டையை சுற்றி யானைகள் நின்றதால், அவர்கள் அருகே செல்லவில்லை. இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்தார்கள்.

வன ஊழியர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து முதலில் பட்டாசு வெடித்து மற்ற யானைகளை அங்கிருந்து விரட்டினார்கள். பிறகு கயிற்றால் கட்டி யானையை மீட்க முயன்றும் முடியவில்லை. அப்போது இருட்டி விட்டதால் வனத்துறை ஊழியர்கள் அதிகாலை வரை அங்கேயே இருந்தனர்.

பின்னர் நேற்று காலை பெரிய கயிற்றால் யானையில் கால்களை கட்டி அதை பொக்லைன் இயந்திரத்தில் இணைத்து மெதுவாக இழுத்தார்கள். நேற்று காலை 9 மணி அளவில் யானை குட்டையில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால் ஒன்றரை நாட்களாக தண்ணீர், உணவு இல்லாததால், மிகவும் சோர்வுடன் காணப்பட்டது.

இதனால் யானையால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. ஒரு பக்கமாக சாய்ந்தவாறு யானை படுத்து கிடந்தது. இதனால் யானை உயிருக்கு போராடி வருகிறது.

சம்பவ இடத்துக்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, அவர் யானைக்கு குளுக்கோஸ் கரைசலை கொடுத்தார். ஆனால் அதனை துதிக்கையால் உறிஞ்சக்கூட முடியாமல் யானை சிரமப்பட்டது. வாழைப்பழங்களும் கொடுக்கப்பட்டது. குட்டையில் இருந்து மீட்கப்பட்ட யானையை வனப்பகுதி எல்லையில் மற்ற யானைகள் பார்த்தபடியே நின்றன.

நேற்று மாலை 4 மணி அளவில், யானை தள்ளாடியபடி எழுந்து நின்றது, 50 அடி தூரம் நடந்த பிறகு மீண்டும் விழுந்தது. இதேபோல் எழுந்து நிற்பதும், விழுவதுமாக இருந்தது. தொடர்ந்து கால்நடை டாக்டரும், வனத்துறை அதிகாரிகளும் யானையை காப்பாற்ற போராடினார்கள். இந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.

குட்டி யானை உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்தனர். கண்ணீருடன் மலரஞ்சலி செலுத்தினர்.நன்றி : நக்கீரன்

இளம் பெண்ணின் பிணம் சூட்கேசில் வைத்து எரித்துள்ளனர்...!?

சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது புத்திரகவுண்டன் பாளையம். இங்குள்ள சந்தை பேட்டை எதிரில் உள்ள இஸ்லாமியர்கள் மயானம் அருகே சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண்ணின் பிணம் சூட்கேசில் வைத்து கொண்டுவரப்பட்டு அப்படியே சூடகேஸ் மூடப்பட்ட நிலையிலேயே அதன் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர் மர்ம நபர்கள்.

ஊரை விட்டு சற்று ஒதுங்கியுள்ள இந்தப்பகுதியில் 28.05.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை, நான்கு மணிவரை அந்தப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று வந்துள்ளனர். அப்போது, எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. அதற்கு பிறகுதான் யாரோ இந்த வேலையை செய்துள்ளனர்.

வேறு ஊரில் கொலை செய்து அந்த பெண்ணின் உடலை சூட்கேசில் வைத்து கார் அல்லது வேறு ஏதாவது ஒரு வாகனத்தில் இந்த இடத்துக்கு கொண்டு வந்து இங்கே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது 20 முதல் 25க்குள் என்றும், அந்த பெண்ணின் காலில் புதிதாக மெட்டி போட்டிருப்பதை பார்த்தல், அந்த பெண் புதிதாக மணமானவராக இருக்கலாம் என்றும் போலீசார் கருத்தது தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து ஏத்தாப்பூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி : நக்கீரன்

வந்தாச்சு நானோ ஊசிகள் : இனி நேரடியா செல்லுலயே ஊசி போடலாமாம்

தம்மத்தூண்டு ஊசி... 

இதை வைத்து நார்வே ஆய்வாளர்கள் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளனர். அதாவது மிக மிக நுண்ணிய நீடில்கள் மூலம் மருந்துகளை நேரடியாக செல்களுக்குள் செலுத்தும் முறை இது. இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஊசியால் அவர்கள் செய்துள்ள அற்புதம் மருத்துவ உலகுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்துள்ளது. இந்த ஆய்வானது மருத்துவ உலகில் மிகப் பெரிய மைல் கல்லாக அமையும் என்றும் நார்வே ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

குட்டி குட்டி நீடில்கள் 

மிக மிகச் சிறிய சைஸ் நீடில்களை உருவாக்கியுள்ளனர் நார்வே ஆய்வாளர்கள். இந்த நீடில்கள் மூலம் செலுத்தப்படும் மருந்துகள், செல்களுக்குள் எளிதில் புகும்.

மறுத்தாலும் விடாது 

அந்த செல்கள், ஒரு வேளை மருந்துகளை ஏற்க மறுத்தாலும் கூட இந்த நீடில்கள் மிக மிக நுணுக்கமாக மருந்துகளை செல்களுக்குள் செலுத்தி விடும் சாமர்த்தியம் நிரம்பியது என்பதுதான் இதில் விசேஷம்.

மருந்து செலுத்துவது ஈசி 

செல்களுக்குள் மருந்துகளை செலுத்துவதில் உள்ள சிரமங்களைப் போக்கும் வகையில் இந்த நீடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நார்வே குழு 

நார்வேயைச் சேர்ந்த இயற்பியலாளர் பாவல் சிகோர்ஸ்கியும் அவரது குழுவினரும்தான் இந்த நீடில்களை உருவாக்கியுள்ளனர். இவர்கள் நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் .

நானோ நீடில்கள் 

இவர்கள் உருவாக்கியுள்ள இந்த நானோ - நீடில்கள் மூலம் மருந்துகளை செல்களுக்குள் முழுமையாக செலுத்த முடியுமாம். இது மிகவும் கடினமான வேலையாச்சே என்று கூறலாம். ஆனால் இவர்களது நீடில்களுக்கு வேலை மிகவும் எளிதாக உள்ளது.

எந்த செல்லாக இருந்தாலும் சரி 

அதாவது எந்த மாதிரியான செல்களாக இருந்தாலும், மருந்துகளையே ஏற்காமல் நிராகரிக்கும் தன்மையுடன் கூடிய செல்களாக இருந்தாலும் சரி, இந்த நானோ நீடில்கள் மிகவும் எளிதாக செல்களுக்குள் கொண்டு போய் மருந்துகளை விட்டு விடக்கூடிய திறமையானவை.

அடுத்த கட்ட ஆய்வு 

நுண்ணோக்கி மூலம் இதைச் செய்து காட்டியுள்ளனர் நார்வே விஞ்ஞானிகள். தற்போது அடுத்த கட்ட மேம்பாட்டு ஆய்வில் இந்த ஆய்வுக் குழு முனைப்பு காட்டி வருகிறது.

சாதாரண ஊசி போடுவது போல 

இதுகுறித்து பாவல் கூறுகையில், மருத்துவ ஆய்வில் இது மிகவும் மேம்பட்ட ஒரு விஷயம். இந்த நீடில்கள் பெரும் வரப் பிரசாதமாக அமையும் வாய்ப்புள்ளது. இந்த நீடில்கள் மூலம் மருந்து செலுத்துவது என்பது மிகவும் எளிதானதும் கூட. அதாவது நானோ நீடில்களின் நுனியில் மருந்தை வைத்து விட்டு, சாதாரணமாக ஊசி போடுவது போலவே இதை செலுத்தலாம்.அதாவது சாதாரண சிரிஞ்சுகள் மூலம் நமது உடலில் இந்த மருந்துகளை செலுத்த வேண்டும். செலுத்தப்படும் மருந்தை இந்த நானோ நீடிலானது, நமது செல்களுக்குள் செலுத்தி விடும் வேலையைச் செய்து விடுகிறது என்றார் பாவல்.

பீலா விட்றோமோ, புருடா விட்றோமோ! எது செஞ்சாலும் இந்த ஊர் நம்மால நம்பனும்

நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த விஷயங்களில் ஒன்று வடிவேலு டயலாக். அரசியல் காரணத்தால் வடிவேலு ஒதுங்கிக்கிடந்தாலும், அவரது காமெடி அட்ராசிட்டி டயலாக்குகள் இப்போதும் உலகத் தமிழர்களுக்குத் திருவாசகம். ஊரப்பாக்கம் ஓ.எம்.ஆர். பக்கத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரும் சாஃப்ட்வேர் மக்களுக்கு வடிவேலுதான் இப்போதைக்கு எவர்க்ரீன் என்டர்டெய்னர். இதோ ஒரு நாளில் நம் இன்ஜினீயர் நண்பரின் மைண்ட் வாய்ஸில் வடிவேலு எத்தனை இடங்களில் ஒளிந்திருக்கிறார் என சின்னதாய் அலசிப் பார்ப்போமா?

காலையில எழுந்திருக்கும்போதே ‘துரை இன்னிக்கு சீக்கிரமாக் கௌம்பிட்டாரு போல’ என ரூம் மேட்ஸ் தங்களுக்குள் கிசுகிசுப்பார்கள். ‘ஆஹா, கௌம்பிட்டாய்ங்கய்யா கௌம்பிட்டாய்ங்கய்யா… ஒண்ணு கூடிட்டாய்ங்களே… இன்னிக்கு நாமதான் சமையல் செய்யணும்கிறதை ஞாபகப்படுத்தி ஃபிகரைப் பார்க்கவிடாமப் பண்ணிடுவாய்ங்களோ?’ என டர்ராகிவிடுவீர்கள்.

‘ டே நாறப் பயலே… வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கெல்லாம் இன்ஃபோசிஸ் பொண்ணுக்காகப் போய் பஸ் ஸ்டாப்புல‌ தேவுடு காக்குறியே… அந்த நேரத்துல நாலு லாங்வேஜ் கத்துக்கிட்டு இருக்கலாம். வேற நல்ல கம்பெனிக்காச்சும் ஷிஃப்ட் ஆகி இருக்கலாம். பொறம்போக்கு பொறம்போக்கு’ என்று திட்டித் தீர்ப்பார்கள். ‘யூ மீன் வேஸ்ட் லேண்ட்… மணி கம் டுடே. டுமாரோ கோஸ்யா… பட் லவ் எவர் லாஸ்ட்டிங். ஸிங் இன் தி ரெயின்… ஐ அம் சொய்ங் இன் தி ரெய்ன்’ எனப் பாட்டுப் பாடி அங்கிருந்து எஸ்கேப் ஆகப் பார்ப்பீர்கள். ஆனால், பாத்ரூமில் இருந்து வந்த ஒருவன் புதுசாய் விட்ட இடத்திலிருந்து கன்டினியூ பண்ணுவான். ‘ஆஹா… ஒரு மார்க்கமாத்தான்யா போய்க்கிட்டு இருக்காய்ங்கே’ என நினைப்பீர்கள். உங்கள் காதலுக்கு ஜால்ரா அடிக்கும் சீனியர் ஒருவரைத் தட்டி எழுப்பி சப்போர்ட்டுக்கு அழைப்பீர்கள். அவரோ, ‘போன மாசம்தானடா லவ்வு கிவ்வெல்லாம் விட்டுட்டுப் படிக்கப்போறேனு தலையில அடிச்சு சத்தியம் பண்ணினே… அதெல்லாம் பொய்யா?’ என கேட்பார். ‘அது போன மாசம்… இது இந்த மாசம்’ என்று டபாய்ப்பீர்கள்.

புதுசா ஒரு புரொஜக்ட் ஆரம்பிச்சு சிஸ்டத்தில் பிள்ளையார் சுழி போட்டால் ரொம்ப நேரமா சிஸ்டம் ஆஃப்லைன்ல சைலன்ட்டா இருக்குன்னு வையுங்க. நீங்க என்ன நினைப்பீங்க? ‘என்ன இவ்வளவு யோசிக்குது.. எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா..?’னுதானே?

‘டே, நீதான் அத்தனை டாஸ்க்கையும் ஒரே நாள்ல முடிக்கிற ஆளாச்சே. நீயே ஆன்ஸைட் ஒர்க்கை எல்லாம் பாருடா’ என எந்தப் பக்கியாச்சும் உங்களை பெரிய டார்கெட்டில் கோர்த்துவிடப் பார்க்கும். ‘என்னா வில்லத்தனம்’ என்பதைப் புரிந்துகொண்டு, ‘ டே என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திவிட்டுத்தான்டா பூரா வேலையவும் என் தலையில கட்டிவிட்டுட்டு ஜோடிஜோடியா மாயாஜால்ல போய் உட்கார்ந்துக்கிறீங்க’ என்பீர்கள்.

எப்படியோ சமாளித்துத் தப்பித்தாலும் டார்ச்சருக்குப் பிறந்த டார்ச்சர்… மேனேஜரிடம் ஒரு நாள் எக்குத்தப்பாய் மாட்டிக்கொள்வீர்கள். அவர் ரூமுக்கு அன்பாக அழைத்து பவர்பாயின்ட்டில் படம் காட்டி ஃப்ளோ சார்ட், கிராஃப் அது இதுன்னு விளக்க வெங்காயம் உரித்து, கடைசியில் உங்கள் கண்ணில் நீர் வரவழைத்து லெக்சர் கொடுப்பார். ‘சார் நான் பண்ணுற ஒர்க்ல என்ன தப்பு?’ என அப்பாவியாய்க் கேட்பீர்கள். ‘ஆமா, நீ புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான். எப்போதான்யா ஒழுங்கா டீமை லீட் பண்ணப்போறே? உன்னை எல்லாம் எவன்யா ரெக்ரூட் பண்ணினான்?” எனச் சொல்லிக் காயப்படுத்துவார். அப்போது, ‘இப்பவே கண்ணைக் கட்டுதே… ஆத்தி இம்புட்டு கோவக்காரன்னு நினைச்சுக்கூட பார்க்கலையே. ஷேவிங் பண்ண குரங்காட்டம் இருக்கானே… கடிச்சுவெச்சிருவானோ?’ என்று அப்பாவியாய் மைண்ட் வாய்ஸ், மைலாப்பூர் வரை போகும். ஒரு கட்டத்தில் உஷ்ணமாகி, ‘கட்டத்துரைக்குக் கட்டம் சரியில்லை… நம்மகூட வெளாடுறதே வேலையாப்போச்சு’ என மனசுக்குள் மணியாட்டியபடி, ‘எங்க அம்மா சத்தியமா நான் நல்லா வேலை செய்வேன் சார்… இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்’ என வான்ட்டடாக வண்டியில் ஏறிக்கொள்வீர்கள். ஒருவழியாகச் சமாளித்து சீட்டுக்கு வந்து உட்கார்ந்தால், ‘ உள்ளே அவருக்கே லெக்சர் கொடுத்த போல இருக்கு. சூப்பர்டா. உன் டேலன்ட் வருமா?’ என கைப்புள்ளயாக்குவான் ஒரு டோங்கிரி மண்டையன். ஆனால், உள்ளே நடந்ததை ஒருத்தி ஒட்டுக்கேட்டிருப்பாள். ‘என்னடா அவரு இந்த வாங்கு வாங்குறாரு. சைலன்ட்டா நின்னுட்டு இருந்தே. கம்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சவன்தானே நீயி… அப்புறம் ஏன்டா பேஸிக் விஷயத்துலகூட அவர் கேட்ட கொஸ்டீனுக்கு முழிச்சே?’ என அலப்புவாள்.

பார்டரில் பாஸாகி டிகிரி வாங்கிய நீங்களோ ரொம்ப நல்லவனாய் மாறி, ‘’பில்டிங்கு ஸ்ட்ராங்கு… பேஸ்மென்ட் வீக்கு’ என வெள்ளந்தியாய் சிரித்து சமாளிப்பீர்கள்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ”இப்படி ஒரே மொக்கைத்தனமாவே எழுதிட்டு இருக்கீங்களே பாஸ்… வேற ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணுங்களேன்’ என்றார் எடிட்டர். அவருக்கு நான் சொன்ன பதில்… ‘ஆங்… அப்படின்னா ஒரு பேங்க் வெச்சுக் குடுங்க நடத்துறோம்’

அவரோட ரியாக்ஷன்… ”அவ்வ்வ்வ்வ்வ்வ்!’

வேற்றுக்கிரக உயிர்கள் பற்றிய தடயம் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகில் முதல் தடவையாக வேற்றுக்கிரக உயிர்கள் பற்றிய உறுதியான தடயம் ஒன்றை விஞ்ஞானிகள் இலங்கையில் இருந்து கண்டுபிடித்துள்ளார்கள்.அரலகன்வில பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எரிகல் துண்டுகளில் இருந்து விசேட அல்கா வகையொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பிரித்தானிய – இலங்கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

பக்ஹின்காம் பல்கலைக்கழகத்தின் வானசாஸ்திரவியல் பேராசிரியர் சந்திரா விக்கரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர்.பிரபல ரஷ்யா ருடே இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வேற்றுக்கிரக உயிரின் இருப்பு தொடர்பான கோட்பாட்டை உறுதி செய்வதற்குரிய தடயம் இலங்கையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்னல் ஒவ் கொஸ்மொலொஜி என்ற சஞ்சிகை ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி தெரிவித்திருக்கின்றது.நாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவாவதற்கு வேற்றுக்கிரக மற்றும் எரிகல் தொகுதிகளே அடிப்படையாக அமைந்துள்ளன என்று அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.புதிய கண்டுபிடிப்புகளுக்கமைய பிரபஞ்சத்தில் ஏனைய கிரகங்களில் உள்ள உயிர் பூமிக்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நானூறு வருடம் உறைந்திருந்த தாவரங்கள் உயிர்ப்பெற்றன

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் உலகில் 'லிட்டில் ஐஸ் ஏஜ்' என்று சொல்லப்படும் பனிப்பருவம் ஏற்பட்ட சமயத்தில் உறைந்துபோன தாவரங்கள் சில தற்போது மீண்டும் உயிர்ப்பித்து துளிர்க்கத் துவங்கியுள்ளன.

கனடாவின் வட துருவ நிலப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் அண்மையில் பனிப் படலங்கள் கரைந்த இடங்களில் இருந்துபல கலமாக செத்துக் கிடப்பதாகத் தெரிந்த சில பாசி வகைகளை எடுத்து வந்து பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆராய்ந்துகொண்டிருந்த நேரத்தில், அவை மீண்டும் உயிர்ப்பெற்று துளிர்த்தன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செத்த நிலையில் இருந்து உயிர்ப்பெரும் தாவரங்களின் இந்த வித்தையைப் அவதானிப்பது, ஆயிரக்கணக்கான வருடங்களில் ஒரு முறை நமது பூமி பனிப் பருவத்துக்குள் சென்று திரும்பும்போது, அதன் பாதிப்பிலிருந்து இயற்கை எவ்வாறு மீள்கிறது என்பதைப் நாம் புரிந்துகொள்ள உதவுமமென நம்புவதாக என அல்பர்ட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புரொசீடிங்க்ஸ் ஆஃப் த நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் என்ற பிரசுரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.முதன் முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் முகமும் தானம் : போலந்து டாக்டர்கள் உலக சாதனை

வார்சா:  கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முக மாற்று ஆபரேஷனை செய்து போலந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அழகான முகம் வேண்டும் என்பதற்காக முக மாற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால் முதல் முறையாக உயிர் காக்கும் சிகிச்சையாக நடைபெற்ற முக மாற்று ஆபரேஷனைப் பற்றித் தெரியுமா? போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்த கிரஸ்கோர்ஸ் (33) எனும் கல் உடைக்கும் தொழிலாளி, ஆலையில் வேலை செய்யும் போது விபத்தில் சிக்கி முகத்தை இழந்தார். அவருக்கு ஆபரேஷன் மூலம் மீண்டும் முகத்தை உருவாக்கி தந்துள்ளனர் போலந்து டாக்டர்கள்.

விபத்தில் சிக்கிய கிரஸ்...

கடந்த ஏப்ரல் 23&ம் தேதி மெஷின் உதவியுடன் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் கிரஸ். அப்போது எதிர்பாராதவிதமாக கை நழுவியதில் மெஷின் அவரை நோக்கி பாய்ந்து, டிரில்லிங் செய்துகொண்டிருந்த கூரிய முனைகள் அவரது முகத்தை குத்தி கிழித்தன. இதில் மூக்கு, பல், தாடை பகுதி நொறுங்கி, சின்னாபின்னமானது கிரிஸ் முகம்.

முகத்தை இழந்தார்...

 
உடனடியாக ரஸ்லாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கிரிஸ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தின் தோல் பகுதிகள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்ததால், முதலில் டாக்டர்களால் பார்வையை மட்டுமே காப்பாற்றித் தர முடிந்தது.

சதை அழுக ஆரம்பித்தது...

முகத்தில் உள்ள சதை அழுகத் தொடங்கியதால்,நோய்த் தொற்று அதிகமானது. இது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த டாக்டர்கள், உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கிரஸ்ஸை கொண்டு சென்றனர்.

முகமாற்று ஆபரேஷன்...

அங்கு,வேறொருவரின் முக தோலை பொருத்தி முக மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது. அந்த நேரத்தில், விபத்தில் சிக்கிய 30 வயது வாலிபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

தானம் கிடைத்த ‘முகம்’...

அவரது இதயம், கல்லீரலை போலவே ‘முகம்' தானம் அளிக்கவும் உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். கடந்த 15&ம் தேதி தொடங்கிய ஆபரேஷனில், முதலில் எலும்புகளை சீரமைத்த பிறகு, ‘புதிய முகத்தை' ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்கள் பொருத்தி தையல் போட்டனர். 27 மணி நேரம் இந்த ஆபரேஷன் நடை பெற்றது.

சாதனை முயற்சி...

ஆபரேஷன் டீம் தலைவர் ஆடம் மேசிஜெஸ்கி ஆபரேஷன் வெற்றி பற்றி கூறும்போழுது, "பிரான்சில்தான் முதல்முறையாக முகம் மாற்று ஆபரேஷன் 2005&ல் செய்யப்பட்டது. அதன் பிறகு பெல்ஜியம், ஸ்பெயின், துருக்கி, அமெரிக்கா என பல நாடுகளிலும் 20 ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருவரது முகத்தை மாற்ற முடிவு செய்த பிறகு, பல வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் காத்திருந்தே இந்த ஆபரேஷன் செய்யப்படுவது வழக்கம்.

வெற்றி.... வெற்றி.... 

ஆனால் உயிர் காக்கும் சிகிச்சையாக, விபத்து நடந்த மூன்றே வாரத்தில் முகத்தை மாற்றியது உலக சாதனை. அதிலும் போலந்தில் முகம் மாற்று ஆபரேஷன் இது முதல்முறை. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.தற்போது வென்டிலேட்டர் உதவியில்லாமல் தானாக மூச்சு விடுகிறார். தலை, கையை அசைக்கிறார். 8 மாதத்தில் அவரது புதிய முகம் முழு இயக்கமும் பெற்றுவிடும்."என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

டாய்லெட்டில் பிளஷ் செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது

சீனாவில் கழிவறையில் ஃபிளஷ் செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பணக்கார மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஜின்ஹுவாவில் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்றில் கடந்த சனிக்கிழமை மதியம் 4வது மாடியில் உள்ள கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அந்த அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கழிவறையில் குழந்தை பிளஷ் செய்யப்பட்டு பைப்பில் சிக்கித் தவித்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் குழந்தையை எடுக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் கழிவறை பைப்புடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் குழந்தையை பைப்பில் இருந்து வெளியே எடுத்தனர். அது பிறந்து 2 நாட்களே ஆன தொப்புள் கொடி கூட வெட்டப்படாத குழந்தை. பைப்பில் சிக்கியதில் அதன் முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்குப் பின் குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்... JUST FOR FUN...


ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தைக் கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கிவந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு"ஆமாம்" என்று தலை அசைத்தார்.

ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது"இல்லை" என்று தலை அசைத்தார்.
அது தொடர்ந்து கொண்டே இருந்தது.

எனவே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து,"பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள ­்.

ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்கள ­ே, ஏன்..?! என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து என் மனைவியைப் பற்றி நல்லவிதமாகச் சொன்னார்கள்."எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம்" என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைத்தேன்.

சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ­ ஏன்..?!

ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்குத் தர முடியுமா?" என்று கேட்டார்கள்.

நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

இந்தியாவில் மின்னல் வேக ப்ராட் பேண்ட் சேவை வருகிறது

இந்தியாவி்ல் இணைய தளத்தின் பயன்பாடு தற்போது அதிகரித்திருக்கிறது. அதனால் அதற்கேற்ற வேகமான இணைய தள தொடர்பும் தேவையாக இருக்கிறது.

இந்தியாவில் தற்போது ப்ராட் பேண்ட் வசதியை வைத்திருப்போர் வரும் 2013ல் மிக வேகமான சேவையைப் பெறமுடியும். அதாவது ப்ராட் பேண்டை இணைப்பை வைத்திருப்போர் இந்தியாவில் உள்ள 9 முக்கிய மாநகரங்களில் வரும் 2013ன் மத்தியில் ஒரு வினாடிக்கு ஒரு ஜிகாபிட் வீதம் பதிவிறக்கும் செய்யும் அல்ட்ரா பாஸ்ட் சேவையைப் பெற முடியும்.

இதனை ரேடியஸ் இன்ப்ராடெல் என்று தொலைத் தொடர்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த சேவை இன்னும் 6 முதல் 9 மாதங்களுக்குள் இந்தியாவிற்கு வந்துவிடும் என்று தெரிகிறது. இதன் மூலம் 2 மணி நேரம் ஓடக்கூடிய எச்டி திரைப்படத்தை 30 வினாடிகளில் பதிவிறக்கும் செய்ய முடியும் என்று ரேடியசின் தலைமை மேலாளர் ரஜ்னிஸ் வைய் கூறியிருக்கிறார்.

ஆனால் சாதரண இணைப்பில் இந்த பதிவிறக்கத்தைச் செய்ய ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால் இந்த புதிய சேவை இந்தியாவை தகவல் தொடர்புத் துறையில் இன்னும் ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பலாம்.

உங்கள் பிள்ளைகளை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி?

உங்கள் பிள்ளைகளை கடத்தல் கும்பலிடம் இருந்து காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் உங்கள் பிள்ளைகளை உங்களது கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது.

இதன் மூலம் உங்கள் பிள்ளைகளை கடத்தல் கும்பலிடம் இருந்து இலகுவாக காப்பாறமுடியும்..