Monday, December 30, 2013

திருப்பரங்குன்றத்தில் செத்து-செத்து விளையாடிய நண்பர்கள்!

திருப்பரங்குன்றம் மலைலேர்ந்து விழுந்து, விழுந்து...செத்து செத்து விளையாடுவோமா...’ என்று வடிவேலுவிடம் முத்துக்காளை ஒரு படத்தில் பேசும் வசனம் , பார்க்கும் போது என்னவோ காமெடியாக தோன்றும். ஆனால், அப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தால்...? ஆம், இப்படி ஒரு விசித்திர சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் ஷீஜியாங் மாகாணத்தில் வசிப்பவர் லியாவோ. வயது 54 இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் நெருங்கிய நண்பர். அவரும் தனியாகத்தான் வசித்து வந்தார்.

இருவரும் தூங்கும் நேரம் போக எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பர். அவர்களின் சோகத்தை போக்குவது செஸ் விளையாட்டு தான்.

எப்போது பார்த்தாலும் செஸ் போர் டை எடுத்து வைத்து உட்கார்ந்து விடுவார். லியாவோ தான் செஸ் ஆட்டத்தில் வெறியாக இருப்பார். நண்பரும் , பாவம் ஆறுதலாக இருக்கட்டுமே என்று விட்டுக்கொடுத்து விடுவார். லியாவோ, சாதாரண மனிதர் போல இருக்க மாட்டார். யாருடனும் ஒத்துப்போக மாட்டார்; யாரை பார்த்தாலும் கெட்டப் பயலுங்க...என்று தான் சபிப்பார். அவரை நண்பர் தான் சமாதானப்படுத்துவார். எதை எடுத்தாலும் குதர்க்கமாக தான் பேசுவார் லியாவோ. எப்போது பார்த்தாலும் ‘நண்பா, நாம இங்க இந்த பூமியில் மட்டுமில்ல...சொர்க்கத்துலேயும் ஒன்றாக இருக்கணும். இப்ப போலவே செஸ் விளையாடணும்’ என்பார்.

இது விளையாட்டாக பேசப்போய் ஒரு நாள் அது நடந்தே விட்டது. கடந்த செவ்வாய் இரவு நண்பரை பார்க்கப் போன லியாவோ, அவரிடம், நான் சொர்க்கத்துக்கு போக தயராகி விட்டேன். நீ இன்னும் கிளம்பலையா...’ என்று கேட்டார். இதை கேட்ட நண்பருக்கு வியர்த்துவிட்டது. 57 வயதான அவருக்கு உடல் வெடவெடத்தது. சில நொடிகளில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நண்பரை கீழே தள்ளி, அவர் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டார். அடுத்த அறைக்கு சென்ற லியாவோ, தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் வீட்டுக்கார பெண், வாடகை வசூலிக்க கதவை தட்டினார். நண்பர் திறக்கவில்லை என்றதும் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்தார்.

நண்பர் உடல் தரையில் கிடந்தது. பக்கத்து அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார் லியாவோ. போலீஸ் வந்து அறையை ஆராய்ந்தனர். போதை மருந்து காலி பாட்டில்களும், இரு கடிதமும் இருந்தது. இவை லியாவோ எழுதியது. ஒன்றில், ‘எனக்கு சொர்க்கத்தில் செஸ் விளையாட என் நண்பர் வேணும். அதனால் அவரை கொன்று விட்டு, நானும் தற்கொலை செய்து கொண்டேன். இனி அவருடன் சொர்க்கத்தில் செஸ் விளையாடுவேன்’ என்று எழுதியிருந்தார்.

இன்னொரு கடிதத்தில், எனக்கு பயமாக இருக்கிறது. நான் இறந்து நண்பர் தனியாக இருப்பாரே என்று அவரை கொன்று விட்டேன்’ என்று எழுதியிருந்தார் லியாவோ. போலீசார் கூறுகையில், ‘லியாவோ விசித்திரமான மனிதர். அவர் நடவடிக்கைகள் பலருக்கும் இடைஞ்சலாகவே இருந்தது. அவர் எழுதியிருப்பதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை’ என்றனர்

Saturday, December 21, 2013

மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டும் கேட்கிறது …!!!

காஷ்மீர் மக்களின் கண்ணீர்…..

ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான். அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான்.ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.

புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.

”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர். அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.
தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.

நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். “காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அந்த சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.

Halal என்றால் என்ன ??

பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!

சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்

ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B. மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.

இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?

அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.

இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது .

கணவரின் உயிரைக் காக்க மாரத்தானில் ஓடிய பாட்டி!

இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காக வெறும் காலில் கட்டிய சேலையுடன் மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்ற பாட்டியின் செயல் பலரையும் நெகிழ் வைத்துள்ளது.

அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டியான லதா பகல்வான்காரே என்பவர் வெறும் காலில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்தையடுத்து அவரை சந்தித்து பேசிய மீடியாக்களிடம் சொன்ன செய்தியை கேட்டு பலரும் நெகிழ்ந்து விட்டார்கள்

அதாவது இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின் ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காகவே அந்த முதிய பெண்மணி முதல் முறையாக இப்போட்டியில் ஓடி வெற்றி பெற்றுள்ளாராம்.

இது குறித்து அந்த லதா காரே”என் கணவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்லி என்ற இடத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனையில் தான் ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு கிட்டத்தட்ட 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. ஆனால் விவசாய கூலி வேலை பார்த்து தினம் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் என்னிடம் என் கணவரின் ஸ்கேனுக்கு பணம் இல்லை. அப்போதுதான் இந்த மராத்தான் போட்டி பற்றி கேள்விப்பட்டேன். இதற்கு முன்பு நான் வேகமாகக் கூட நடந்ததில்லை ஆனால் கணவருக்காக பந்தயத்தில் ஓடி எப்படியும் பரிசை வெல்ல ஆசைப்பட்டேதேன். இத்தனைக்கும் காலில் செருப்பு கிடையாது; வழக்கமாக 9 முழ சேலையை வரிந்து கட்டி கொண்டு பந்தயத்தில் ஓடி வந்து வெற்றி பெற்று விட்டேன். இனியும் கணவரை காப்பாற்ற இதற்கு மேல் கூட எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.”என்று அவர் கூறினார்.

இதையடுத்து அவரின் மகன் சுனில் ”அம்மாவின் உடல் நிலை ஏற்கனவே மோசம்; எப்படியோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இந்த போட்டியில் ஓடி அவருக்கு ஏதேனும் ஆகி விடக் கூடாதே என்று பயந்து நான் அவரை தடுத்துப் பார்த்தேன்; அவர் கேட்கவில்லை,” என்ரு தெரிவித்தார். இதற்கிடையில் அவரின் சாதனை குறித்தும் அவரின் சூழ்நிலை குறித்தும் மீடியாக்களில் செய்திகள் வெளியானதை அடுத்து பலர் அவருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து உதவி வருகின்ற்னர்.

பிரியாணி

ஒரு சினிமா ரசிகனை கவர பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுகிறது. கதை, திரைக்கதை, இசை, வடிவமைப்பு, புதுமை என எதையாவது வித்தியாசப்படுத்தினால்தான் இந்த மண்ணில் அந்த சினிமா நிலைக்கமுடியும்… இன்று வரை அப்படிப்பட்ட சினிமாக்களைதான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்..இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் அல்லது புதுமை ஏதும் இல்லாத எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்கள் கூட குப்பைக்குச் சென்றிருக்கிறது. படம் எடுக்கும் அத்தனை இயக்குனர்களும் இதை மனதில் நிறுத்துவது மட்டுமின்றி அதை செயலிலும் காட்டினால் நல்ல படைப்பாளியாக இங்கு வெற்றி கொடி நாட்டலாம்…

பிரியாணி....

ஒரு படத்தின் தலைப்பு அந்த படத்தின் கதை அல்லது கதாநாயகன் அல்லது கதாநாயகி பெயரிலோ அல்லது ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது கேட்டவுடன் கவரும் வகையிலோதான் அமைக்கப்படுகிறது… இந்தபடத்தின் தலைப்பு ரசிகர்களை கவரவே…!

படத்தின் கதை…

ஒரு செல்வந்தரின் மகளை காதலித்து அந்த சொத்தை அடைய நினைக்கிறது ஒரு கும்பல். அந்த செல்வந்தர் மறுக்கவே அவரை கொலைசெய்து அந்த சொத்துக்களை அடைய நினைக்கிறது…

இப்படி கொலைச்செய்யப்படும் செல்வந்தரின் கொலையில் அப்பாவிக்கள் இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள்… மாட்டிய இவர்கள் இந்த கொலையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை…

கதை‌யொன்றும் புதிதில்லை.. அதலபழசுதான்.. ஆனால் திரைக்கதை சபாஷ் போடவைக்கிறது.. யூகிக்கமுடியாத காட்சி நகர்வு… விருவிருப்பான திரைக்கதை… என படத்தின் முடிவுவரை ஒரு ரசிகனை பொறுமையாக அமரவைத்ததில் கைதட்டல் வாங்கிறார்.. வெங்கட் பிரபு…

கதைப்படி கார்த்தியும் பிரேமும் நெருங்கிய நண்பர்கள்… இருவருக்கும் வேலை பெண்களை சுற்றிவருவதுதான்… ஒரு டிராக்டர் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் வேலை செய்யும் இவர்கள் தங்கள் இடத்தில் பிளேபாயாக வலம்வருகிறார்கள்…

கார்த்தியும் பிரேம்ஜியும் ஆம்பூரில் நடக்கும் நிறுவனத்தின் ஷோரூம் கிளை திறப்புவிழாவுக்கு வருகிறார்கள். அந்த நி‌கழ்வில் தன்னுடைய துடிப்பான நடவடிக்கையால் அந்த நிறுவனத்தை துவக்கிவைக்க வரும் நெம்பர் ஒன் செல்வந்தர் நாசருக்கு கார்த்திகை பிடித்துவிடுகிறது… (தன் பெண்ணை மணமுடிக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு)

இதற்கிடையில் ஆம்பூரில் இருந்து சென்னை கிளம்பு வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தேடி அலைந்து ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார்கள்… அங்கு பிரியாணி சாப்பிட வரும் மாண்டி தாக்கா-வின் (மாயா) அழகில் மயங்கி அவ‌ரை பின்தொடர்ந்து அவருக்கு உதவிசெய்து அவருடைய ரூமுக்கே சென்று குடித்து கும்மாளமடிக்கிறார்கள்…

விடிந்து தெளிந்து பார்த்தபின்தான் தெரிகிறது… அங்கு ஒரு கொலை நடந்திருப்பது.. அதுவும் கொலைசெய்யப்பட்டிருப்பது நாசர் தான்… இந்த கொலையில் கார்த்தியும் பிரேமும் தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிறார்கள்…

இந்த கொலையில் இருந்து எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறார்.. இந்த கொலையில் உண்மையான பிண்ணனி என்ன… அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்… என்பதுதான் பிரியாணியின் மீதிக்கதை…

கார்த்தி….

கார்த்தி இந்த படத்தில் ப்ளேபாய் வேடம்… இதற்கு முன்னால் படங்களில் பார்த்தமாதிரியே இருக்கிறது. முதல்பாதில் பெண்களிடம் வழியும் இவர்… இடைவேளைக்குபிறகு ஓரளவுக்கு தன்னுடைய திறைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்…

சிறுவயதுமுதல் தற்போது வரை தான் செய்யும் தவறுகளுக்கு பிரேம்ஜியை மாட்டிவிடுவது இவருடைய வேலையாக இருக்கிறது… பெண்களை நம்பவைக்க இவர் செய்யும் சேட்டைகள் ‌கொஞ்சம் ரசிக்க வைத்து கொஞ்சம் முகம்சுழிக்க வைக்கிறது..

கார் சேசிங்… வில்லன்களை விரட்டுவது… தன்னுடைய அக்கா கடத்தப்படும்போது துடிப்பது.. தன்மீது விழுந்த கொலை பழியை தீர்க்க குற்றவாளிகளை கண்டுபிடிக்க முனைவது… சண்டைகாட்சிகள் என ஒரு சில இடங்களில் தன் திறமையை காட்டி அசத்துகிறார்… (ஆனால் பழைய படத்தின் சாயல் அங்கங்கு வருகிறது).

ஹன்சிகா மேத்வானி… ஒரு டிவி தொகுப்பாளர்.. நேரடிக்காட்சிகளை தொகுத்து வழங்குபவர்… கார்த்தியின் காதலி… இவருக்கு படத்தின் அதிக வேலையில்லை… கார்த்தியிடம் கோபித்துகொள்வது மீண்டும் இணைவது தான் இவருடைய வேலை…

பிரேம் ஜி… என்ன கொடுமை இது… படம் முழுக்க வந்தாலும் ஏதோ ஒருசில சீன்களில்தால் சிரிக்க வைக்கிறார்… அண்ணன் இயக்குனர் என்பதால் ஒட்டிக்கொண்டாரா.. என்னவோ தெரியவில்லை… தனக்கு ஒரு பெண்ணுகூட கிடைக்கமாட்டேங்குது என்று ஏங்கும்போதம் தனக்கு கிடைக்கும் பெண்களை கார்த்தி கவர்ந்துவிடுவதும்… கார்த்தி செயும் தவறுகளுக்கு தான் பலியாடாகுவதும் ரசிக்க வைக்கிறது…

நாசர்… ஒரு பெரிய செல்வந்தராக நடித்திருக்கிறார்… தனக்கு எந்த கதாப்பாத்திரம் கெர்டுத்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் திறன்மிகுந்த நடிகர்களில் இவரும் ஒருவர்… இவர்தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்…

ராம்கி.. நாசரின் மருமகன்… சபாஷ்… வில்லன்போல் ‌தெரிந்தாலும் வில்லனில்லாத கேரட்டர்… இப்படம் கண்டிப்பாக அவருக்கு நிறைய வாய்ப்புளை பெற்றுதரும் என்பதில் சந்தேகமில்லை.. நல்லதொரு நடிப்பு.. கார்த்தியுடன் வரும் ஒரு சண்டைகாட்சி நன்றாகவே வந்திருக்கிறது.

மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை உமா ரியாஸ்கான்… கடைசி அரைமணிநேர படத்தை தனதாக்கிவிட்டார்… வில்லி கேரட்டர்… கார்த்தியுடன் ஒரு சண்டைக்காட்சியில் அசத்தல்.. நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்…

மேலும் படத்தில் கார்த்தியின் மாமாவாக சுப்பு பஞ்சு.. போலீஸ் ஆபிராக ஜெயபிரகாஷ், சிபிஐ-யாக சம்பத், என நிறைய நடிகர் பட்டாளம் படத்தில் இருக்கிறது…

யுவன்சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசை… அவ்வளவு ஒன்றும் பிரமாதம் இல்லை… ஓரளவுக்கு பரவாயில்லை…. 100-வது படம் என்ற பெருமையை தக்கவைக்க பாடலுக்கு அதிக சிரமப்பட்டிருக்கிறார்… பிண்ணனி இசை பராயில்லை… புரியும்படியான பாடல்கள் இல்லாதது தோய்வுதான்…

பாடல்கள் சுமார்… இரண்டு பாடல்கள் செம கிளாமர்… மாண்டி தாக்கா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.. அரைமணிநேரம் மக்களை கவர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கிறார்… படம் முழுக்க தண்ணியடிக்கும் காட்சி நிறைந்திருக்கிறது.. இவைளை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வெங்கட்பிரபு… புதுசாக ஏதோ சொல்லவந்து கொஞ்சம் சொதப்பி சில இடங்களில் இவரின் பழைய படங்களை ஞாபகப்படுத்தி பின் தன்னுடைய திறமையான திரைக்கதையினால் பிற்பாதியில் சபாஷ் பெறுகிறார்… ஒரு சில குறைகளை தவிர்த்து இன்னும் மெருகேற்றியிருந்தால் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக வந்திருக்கும்…

படத்தை குழப்பத்தோடு முடிக்கிறார் என்று எழுந்தால் இன்னும் கொஞ்சுநேரம் உட்கார வைத்து குழப்பங்களை தீர்த்துவிடுகிறார்… இரண்டாவது கிளைமேக்ஸ் போல…

நாசர் கொலை எப்படி நடக்கிறது.. உண்மையில் குற்றவாளி யார்… ராம்கி நல்லவரா கெட்டவரா… கார்த்தி-ஹன்சிகா காதல் என்னவாயிற்று போன்ற விஷயங்களை வெள்ளித்திரையில் காண்க…

பிரியாணி….

இதுதான் நடந்தது! அமெரிக்கா ஸ்டேட்மென்ட்!

அமெரிக்க பெண் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதற்கிடையே ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானியை, நியூயார்க் துணை தூதரகத்தில் இருந்து விடுவிக்க எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹார்ப் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்டவிதம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்திய பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளை பறிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவயானிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறவகையில் அவரை ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்தியத்தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேரி காம்”வெளியுறவுத்துறை அமைச்சக வழக்குகளை தொடுக்கவோ அதனை மீட்கும் அமைப்போ கிடையாது என்றும் இந்த சூழ்நிலையில் நாங்கள் எப்படி தேவையானி மீதான வழக்குகளை திரும்பப் பெற முடியும்” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே பொது இடத்தில் வைத்து கைவிலங்கிட்டு தேவயானியை அமெரிக்க போலீஸார் கைது செய்தததாக கூறப்படும் புகாரை அந்நாட்டின் அட்டினி ஜெனரல் பிரதீப் பராரா மறுத்துள்ளார். அமெரிக்கர்களுக்கு கூட வழங்கப்படாத சலுகைகள், தேவயானிக்கு கைது செய்வதற்கு முன்னால் வழங்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டதற்கு முன்னதாக தொலைபேசி யில் பேசிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் அவரது இந்த கருத்தில் உடன்பாடு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னதாக தேவயானி நடத்தப்பட்டவிதம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி, விரிவான விளக்கம் அளித்து 3 பக்க அறிக்கை ஒன்றை அமெரிக்க அரசு வக்கீல் பிரித் பராரா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,”தேவயானி கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வெளியான தவறான தகவல்கள் குறித்து, நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தூதர்கள், தூதரக அதிகாரிகளின் வேலைக்காரர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க சட்டங்களை தேவயானி பின்பற்ற தவறி உள்ளார்.

தேவயானி அவரது குழந்தைகள் முன்னிலையில் கைது செய்யப்பட்டதாக தவறாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை மற்றவர்களைப்போல அல்லாமல், முடிந்த அளவு மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன் கைது செய்துள்ளனர். அவருக்கு அப்போது கை விலங்கிடப்படவில்லை. கட்டுக்குள் வைக்கப்பட்டு விடவும் இல்லை.

உண்மையைச் சொல்வதானால், கைது செய்த அதிகாரிகள் வழக்கமாக மற்றவர்களிடம் இருந்து செல்போனை பறித்து விடுவதைக்கூட செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர் யாரையெல்லாம் தொடர்பு கொள்ள விரும்பினாரோ அதற்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேவயானி கைது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஏறத்தாழ 2 மணி நேரத்தில் முடிந்து விட்டது. கடும் குளிர் காரணமாக அவரை தங்களது காரில் வைத்து போன் செய்யவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அவருக்கு காபி கூட வரவழைத்து கொடுக்கப்பட்டது. அவருக்கு உணவு தரவும் முன்வந்தனர்.

அவர் போலீசாரின் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கொண்டு அந்தரங்கமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இது ஒவ்வொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்கிற சோதனைதான். அவர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அமெரிக்கராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் பாதிப்புக்குள்ளாகிவிடும் விதத்தில் அல்லது தன்னைத்தானே எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் எதையும் வைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த சோதனை செய்யப்படுகிறது.

கொழுந்து விட்டு எரியச்செய்கிற சூழலை உருவாக்கும் அளவுக்கு தேவயானி விவகாரத்தில் தவறான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டியது முக்கியமாகி உள்ளது. ஏனெனில் அவை மக்களை தவறாக வழி நடத்திவிடும்.

தேவயானி, சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பொய்யான ஆவணங்களை அளித்துள்ளார். அவர் பொய்யான தகவல்களையும் அமெரிக்க அரசிடம் அளித்துள்ளார்.

எந்த அரசாங்கமாவது, தனது நாட்டுக்குள் ஒருவரை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஒருவர் பொய்யான தகவல்களை அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுமா? த்தை மீறுகிற வகையில், பணிப்பெண்ணை சரிவர நடத்தாமல் இருந்தால் எந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுமா?

இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய பிரஜை நடத்தப்பட்டவிதம் குறித்து வரம்பு கடந்து நடந்துகொள்கிறார்களே, ஆனால் இந்திய பணிப்பெண்ணோ, அவரது கணவரோ மோசமாக நடத்தப்பட்டது குறித்து கொஞ்சமாவது கொந்தளித்தார்களா?

எங்கள் அலுவலகத்தை பொறுத்தமட்டில் அது, வழக்கினை நடத்துகிற அலுவலகத்தின் பொறுப்பை கொண்டுள்ளது. கைது செய்தல், காவலில் வைத்தல் தொடர்பானது அல்ல. எனவே அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்த தகவல்களை தொடர்புடைய அமைப்புகளிடம்தான் கேட்க வேண்டும்.இந்த விவகாரத்தில் தேவயானி நடந்துகொண்ட விதம், நியாயம் என கூறுகிற வகையில் இல்லை என்பது தெளிவு. “என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Sunday, December 15, 2013

50 படங்களில் ஒரே ஆண்டில் நடித்த சுருளிராஜன்!

சுருளிராஜன் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். 14-1-1938-ல் பிறந்தார்.

தந்தை பெயர் பொன்னையா பிள்ளை. பெரியகுளத்தில் "கணக்குப்பிள்ளை வீடு'' என்றால், அது சுருளிராஜன் வீட்டைக் குறிக்கும்.

எம்.ஆர்.ராதாவின் குரல் எப்படி வித்தியாசமானதோ, அதுபோல் மாறுபட்ட குரல் வளம் கொண்டவர் சுருளிராஜன். ஒரு காலக்கட்டத்தில், நகைச்சுவை நடிப்பில் பெரும் புகழ் பெற்று விளங்கினார். ஒரே ஆண்டில் (1980) 50 படங்களில் நடித்தார்.

சுருளிராஜன் சிறுவனாக இருந்தபோதே, அவர் தாயும், தந்தையும் இறந்து விட்டனர். பண வசதி இல்லாத காரணத்தால் சுருளிராஜனின் படிப்பு 5-ம் வகுப்புடன் நின்றுவிட்டது. அதனால் சுருளிராஜன் மதுரையில் அவர் அண்ணன் வீட்டில் வளர்ந்தார்.

அங்கு ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக் வேலை பார்த்தார். இதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் சினிமா பார்ப்பதில் செலவிட்டார்.

சினிமா, நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. மதுரை பகுதியில் நடந்து கொண்டிருந்த நாடகங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடித்தார். 1959-ம் ஆண்டு சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார்.

பல கம்பெனிகளில் ஏறி இறங்கி சினிமா சான்ஸ் கேட்டார். அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கையில் பணமும் இல்லை. பல நாட்கள் பட்டினி கிடந்தார்.

அதனால் மூட்டைப்பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள அவர் முயற்சி செய்தார். அப்போது ஒருவர் நாடகத்தில் நடிக்க அவரை அழைத்ததால் தற்கொலை முடிவை கைவிட்டார்.

பின்னர் "அய்யா தெரியாதய்யா'' ராமராவ், எம்.என்.திரவுபதி ஆகியோரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. சி.ஏ.கே.தேவர், டி.என்.பாலு நாடகக் குழுவில் அப்பா வேடங்களில் நடித்தார்.

1962-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தி.மு.கழக தேர்தல் நிதிக்காக கருணாநிதி "காகிதப்பூ'' என்ற நாடகத்தை நடத்தினார். இதில் சுருளிராஜன் நடித்தார்.

"ஞான சவுந்தரி'', "விஜயபுரி வீரன்'' முதலிய படங்களைத் தயாரித்த ஜோசப் தளியத், சுருளிராஜன் நடித்த ஒரு நாடகத்தைப் பார்த்தார். சுருளிராஜனின் நடிப்பும், வித்தியாசமான குரலும், வசனம் பேசும் முறையும் அவரைக் கவர்ந்தன.

தான் தயாரிக்க இருந்த "காதல் படுத்தும் பாடு'' படத்தில், நகைச்சுவை வேடத்தில் நடிக்க சுருளிராஜனை ஒப்பந்தம் செய்தார்.

கலைஞானம் கதை - வசனம் எழுதிய முதல் படம் இது. வாணிஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் அறிமுகமான படமும் இதுதான். படத்தின் கதாநாயகன் ஜெய்சங்கர்.

1966-ல் வெளிவந்த "காதல் படுத்தும் பாடு'' வெற்றிப்படமாக அமைந்தது. சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன்பின் "நான்'', "மூன்றெழுத்து'', "பால்மனம்'', "குழந்தை உள்ளம்'', "அஞ்சல் பெட்டி'' முதலான படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த "எங்க வீட்டு பிள்ளை'' படத்தில், "நான் ஆணையிட்டால்...'' பாடல் காட்சியில் இடம் பெற்றவர்களில் சுருளிராஜனும் ஒருவர்.

ஏ.பி.நாகராஜன் தயாரித்த "திருமலை தென்குமரி'' படத்தில், மனோரமாவுடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.

திருமலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் காட்சியில் சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

தரையில் உருண்டு கொண்டே வரும் சுருளிராஜன், திடீரென்று எழுந்து, "வத்திப் பொட்டியையும் பதினைந்து பைசா துட்டையும் மறந்துவிட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வர்றேன்'' என்று ஓடுவார்.

நினைத்தாலே, சிரிக்க வைக்கும் காட்சி. தொடர்ந்து "தேன்கிண்ணம்'', "யாரைத்தான் நம்புவது'', "அக்காவுக்கு கல்யாணம்'' என்று பல படங்களில் நடித்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "ஆதிபராசக்தி'' மூலம் பெரும் புகழ் பெற்றார்.

ரஜினி பற்றிய முக்கிய தகவல்கள்

கே.பாலசந்தர் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் தெலுங்கில் ‘அந்துலேனி கதா’ என்ற பெயரில் தயாரானபோது, தமிழில் ஜெய்கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ரஜினி நடித்தார். இந்தப் படத்தில் ரஜினியின் சகோதரியாக நடித்தவர் யார் தெரியுமா? அவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஸ்ரீப்ரியாதான்! 

தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கச் சொன்ன பாலசந்தரிடம் முதன்முதலில் நடித்துக்காட்டியது கன்னட நாடகத்தில் இருந்து ஒரு பகுதியைத்தான். நன்றாக தமிழ்பேச கற்றுக்கொள் என்று சொன்ன பாலசந்தர் ரஜினியை ஒப்பந்தம் செய்தது ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கு மட்டுமல்ல.. ‘மூன்று முடிச்சு’, ‘அவள் ஒரு தொடர்கதை’ (தெலுங்கு) என மூன்று படங்களுக்கும் சேர்த்து தான். ஒரு நடிகனாக இவர் தேறிவிடுவார் என மூன்று படங்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்தது பாலசந்தரின் தீர்க்கதரிசனம்.

ரஜினியும் சிவகுமாரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோதும்கூட இருவரும் இணைந்து ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘கவிக்குயில்’ என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். இதில் ‘கவிக்குயில்’ படத்தில் சிவகுமாரின் காதலியாகவும், ரஜினியின் தங்கையாகவும் நடித்திருந்தவர் ஸ்ரீதேவி! .

1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் பதினைந்து வருடம் கழித்து கன்னடத்தில் ரீமேக் செய்யப்படபோது அதில் ஹீரோவாக நடித்தார் ரஜினி. இதில் ரஜினிக்கு ஜோடி மஞ்சுளா. இந்தப்படம் பின்னர் தமிழில் ‘குறிஞ்சி மலர்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது.

முத்துராமன் நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது தமிழில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு கன்னடத்தில் நடித்தவர் நம்ம சூப்பர் ஸ்டார்தான். இதில் நடித்தபோது ரீடேக் இல்லாமல் எல்லா ஷாட்டுகளையும் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கினாராம் ரஜினி!

மலையாளத்தில் ‘அலாவுதீனும் அல்புத விளக்கும்’, ‘கர்ஜனம்’ என இரண்டு படங்களில் நேரடியாக நடித்துள்ளார் ரஜினி. ஒருபக்கம் பார்த்தால் இவை இரண்டுமே தமிழ், மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இரு மொழிப் படங்கள்தானே தவிர, மலையாளத்திற்கென்றே தனியாக எடுக்கப்படவில்லை. .

தென்னிந்தியாவில் முதன் முதலில் கறுப்பு வெள்ளையில் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்ட படம் ‘ஒந்து பிரேமட கதே’ என்கிற கன்னடப்படம். இதில் கதாநாயகனாக நடித்தவர் ரஜினி!

தெலுங்கில் முதன் முதலில் ரஜினி ஹீரோவாக நடித்த படம் ‘சிலகம்மா செப்பிண்டி’. இந்தப்படம் பின்னர் பாலசந்தர் டைரக்ஷனில் தமிழில் ‘நிழல் நிஜமாகிறது’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் ஹீரோவாக நடித்தவர் கமல்.

‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் ‘‘மண வினைகள் யாருடனோ? மாயவனின் விதிவலைகள்...’’ பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப் பாடல். ரஜினியின் முதல் திரைப்படமான ‘அபூர்வராகங்கள்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தான் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர். .

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் திலகத்துடன் சேர்ந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘நட்சத்திரம்’, ‘படிக்காதவன்’, ‘உருவங்கள் மாறலாம்’, ‘விடுதலை’, ‘படையப்பா’ என ஆறு படங்களில் நடித்துள்ளார்.

‘காதல்மன்னன்’ ஜெமினியுடன் இணைந்து ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் மட்டுமே நடித்துள்ளார் ரஜினி.

ஆந்திர சூப்பர்ஸ்டாரும் மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுடன் இணைந்து ரஜினி நடித்த ஒரே படம் ‘டைகர்’. இது ரஜினியின் ஐம்பதாவது படம் என்பது இன்னுமொரு சிறப்பு.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘அக்னி சாட்சி’, ‘நட்சத்திரம்’, ‘நன்றி மீண்டும் வருக’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘யார்’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினியாகவே நடித்திருக்கிறார் ரஜினி. .

1984ல் தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படம் ஹிந்தியில் ‘கங்குவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. தியாகராஜன் வேடத்தில் ரஜினி நடிக்க இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் இயக்கினார். தமிழிலும் இவர்தான் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கமலின் மனைவி சரிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1982ல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘மூன்று முகம்’, 1984ல் ஹிந்தியில் ‘ஜான் ஜானி ஜனார்தன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயும் ரஜினிதான் ஹீரோவாக நடித்தார்.

29 வருடங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் ரஜினி நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் சிறுவனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இளைய தளபதி விஜய். .

ஜாம்பவான்களான ரஜினி, கமல், அமிதாப் மூன்றுபேரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு ஹிந்திப்படத்தில் தான். படத்தின் பெயர் ‘கிராஃப்தார்’. இதில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அமிதாப்பும் ரஜினியும் நடித்திருந்தனர். அமிதாப்பின் சகோதரராக நடித்திருந்தார் கமல்.

1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த ஹிந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப் படத்தில் ரஜினியின் (வளர்ப்பு) மகனாக நடித்த சிறுவன்தான் இன்று 300கோடிகளுக்கு மேல் வசூலித்து கலக்கிக் கொண்டிருக்கும் ‘க்ரிஷ் -3’ படத்தின் ஹீரோவான ரித்திக் ரோஷன்.

ரித்திக் ரோஷனின் தந்தையும் ‘க்ரிஷ்’ படங்களை இயக்கியவருமான ராகேஷ் ரோஷன் எண்பதுகளில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினி ஹிந்தியில் தொடர்ந்து நடித்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து அதிகப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை ராகேஷ் ரோஷனுக்கு உண்டு.

தமிழ் சினிமாவில் அகன்றதிரை எனப்படும் 70 எம்.எம்-ல் திரையிடப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த ‘மாவீரன்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிதான். ஒருவகையில் இதுதான் அவரது முதல் தயாரிப்பும்கூட. கமலின் ‘புன்னகை மன்னனும்’ இந்தப் படமும் ஒரே தேதியில் தீபாவளி தினத்தன்று வெளியாகின. .

1988ல் ரஜினி ‘பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்தார். பாலிவுட் நடிகர்களுக்குக் கூட கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு ரஜினியை தேடி வந்தது. அவரது ஸ்டைலுக்காகத்தான். இந்தப் படத்தில் அவர் பேசிய ‘மணி மணி மணி’ என்ற வசனத்தை அஜீத், தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பேசியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்!

‘எந்திரன்’ வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியின் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் 1977 முதல் 1979 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினி. குறிப்பாக 1980ல் 20 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்கள்.

1988-ல் ஒவ்வொரு மாத இடைவெளியில் ரஜினியின் படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. ‘தர்மத்தின் தலைவன்’ (24.9.88), ‘பிளட் ஸ்டோன்’ (7.10.88), ‘கொடி பறக்குது’ (8.11.88) ஆகிய படங்கள் இதற்கு உதாராணம். .

‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு சவால் விடுகிற மாதிரியான ஒரு வில்லனை பாரதிராஜா தேடிக்கொண்டிருந்தபோது “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே... அவரையே வில்லன் ஆக்கிடுங்க”ன்னு சொல்லி, அவரை ஒரு நடிகனாக அரிதாரம் பூச வைத்தது ரஜினிதான்.

மணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு அவரது குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர் ரஜினிதான். இத்தனைக்கும் மணிவண்ணனின் திருமணத்தை நடத்தி வைத்தது பாரதிராஜாதான். ஆனாலும் தன் குருநாதரைவிட ஒருபடி மேலாக ரஜினியை மரியாதையான ஸ்தானத்தில் வைத்து நட்பு பாராட்டினார் மணிவண்ணன்.

இந்தியாவில் முதன்முதலில் அனிமேஷன் கேரக்டர்களை பயன்படுத்திய படத்திலும் ரஜினிதான் ஹீரோ. அந்தப்படம் ‘ராஜா சின்ன ரோஜா’. .

50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள நகைச்சுவை நடிகர் மனோபாலா ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கியிருக்கிறார். அது ‘ஊர்க்காவலன்’. அதேபோல் குடும்பப்பாங்கான படங்களை இயக்கிவந்த, அதிலும் குறிப்பாக மோகன், விஜயகாந்த் ஆகியோரின் ஃபேவரைட் இயக்குனரான ஆர்.சுந்தர்ராஜனும் ரஜினியை வைத்து ‘ராஜாதிராஜா’ படத்தை இயக்கியுள்ளார்.

2003ல் வெளியான ‘பாபா’ படத்தில் ரஜினியுடன் (ஜோடியாக) நடித்தார் மனிஷா கொய்ராலா. ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மனிஷா, 1993லேயே ‘இன்சானியத் கே தேவதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

1986ல் ‘பகவான் தாதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்த டேனி டென்சொங்போ தான் 25 வருடம் கழித்து ‘எந்திரன்’ படத்தில் புரஃபெஸர் போராவாக மீண்டும் ரஜினியுடன் நடித்தார். .

பாலிவுட்டின் ‘எவர்கிரீன் ஸ்டார்’ ஆமீர்கான் ரஜினியுடன் ஹிந்தியில் இணைந்து நடித்த ஒரே படம் ‘ஆட்டன்க் ஹி ஆட்டன்க்’.

‘பாக்ய தேவதா’ என்ற வங்காள மொழிப் படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினி. மிதுன் சக்கரவர்த்தி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை இயக்கிவர் நம் தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர் ரகுராம்தான்.

ரஜினி வளர்ந்து ‘சூப்பர்ஸ்டார்’ ஆன காலகட்டத்தில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அதற்கு காரணமாக மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தினார். முதலாவது தயாரிப்பு நிறுவனத்தின் தரம், இரண்டாவதாக கதை, மூன்றாவது (தான்) பணம். அளவான படங்களில் நடித்ததுபோக மீதம் இருந்த நேரத்தைத்தான் ஹிந்திப்படங்களுக்கு ஒதுக்கினார்.

ரஜினி நடித்த ஹிந்திப் படங்களில் பெரும்பாலானவை இரண்டு அல்லது மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்துதான். தமிழில் சூப்பர்ஸ்டாராக நடித்துக்கொண்டே ஹிந்தியில் ஏன் இப்படி இரண்டு, மூன்று பேரில் ஒருவராக நடிக்கிறீர்கள் என கேட்டபோது, “ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஒருவருக்குத்தான் (அந்த சமயத்தில்) தனி ஹீரோவா நடிச்சா டிஸ்ட்ரிபியூட்டர் வர்றாங்க. மத்தவங்க படம்னா கூட நடிக்கிறது யாருன்னு கேட்குறாங்க.. இதுதான் காரணம்” என்றாராம்.

கழகத்தை விலை பேசி விடாதீர்கள்

“நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்தத் தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். உங்களைத் தாள் பணிந்து கேட்கிறேன். உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களையெல்லாம், இந்தத் தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி, இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். ஏனென்றால் இது ஆயிரங்காலத்துப் பயிர்” என்று கருணாநிதி குறிப்பிட்டார்.

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையின் போது,”திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்துகின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற் கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று நம்முடைய தம்பி ராஜாவை, சிறையிலே வைத்து – இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறது. ஆனால் வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடுபவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.ஐ. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.ஐ. யாருடைய கைவாள்? அந்தச் சி.பி.ஐ. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.ஐ. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?

அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதை யெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சியிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை.

ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா?

எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன். நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், நம்முடைய பேராசிரியரும், நம்முடைய கழகத்தின் தளபதி, அத்தனை பேரும் இவைகளையெல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள் என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறைபட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும். ஆனால் ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.

இதையெல்லாம் விட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டோம் என்பதும், தொடர்ந்து தாக்கப்படுகின்ற இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம் என்பதும் மறந்து விடக் கூடிய ஒன்றா என்ன?

ஆகவே இந்தப் பொதுக்குழுவிலே கலந்து கொண்டிருக்கின்ற என்னுடைய உடன் பிறப்புகளே, என்னுடைய அருமைத் தம்பிகளே, கழகத்தின் காவலர்களே, உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இவைகளையெல்லாம் மறந்து விட்டு நாங்கள் மீண்டும் காங்கிரசுடன் சேருவோம் என்று தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்.

நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலுங்கூட, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. நீ இருக்க, தம்பீ, நான் எதற்காக கவலைப்பட வேண்டும்?

யாருக்காக நாங்கள் அஞ்சப் போகிறோம்? 75 இலட்சம் பேர் கழகத்தின் உறுப்பினர்கள் என்று பேராசிரியர் அவர்கள் பெருமிதத்தோடு இங்கே சொன்னார்களே, அந்த 75 லட்சம் உடன்பிறப்புகளும், அவருடைய வீட்டார், குடும்பத்தார், உற்றார் உறவினர்களை யெல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த எண்ணிக்கை கோடிக் கணக்கிலே வரும். அவைகளை யெல்லாம் நாங்கள் கணக்குப் பார்த்து, யாரும் அணி சேர வரா விட்டாலும் கூட, தனியாக நிற்போம்.

வந்தால், வந்தவரையிலே இலாபம் என்று வட்டிக் கணக்குப் பார்க்காமல், அவர்களுடைய தோழமை உணர்வுக்கு, எங்களோடு இருந்தால் நாட்டுக்கு நன்மை என்று கருதுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு நாங்கள் தருகின்ற மதிப்பாக, அணி சேருவோம். ஆனால் யாரோடு அணி சேர்ந்தாலும், யாரோடு என்பதிலும் – இரண்டு பேரும் இரண்டு கட்சிகள் – நான் பேசும்போதே விடப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிச் சேரும்போது, கட்சிகளோடு அணி சேருவது பற்றி அல்ல. தனித்து நிற்போம் என்று நான் சொன்னேன்” என்று குறிப்பிட்டார்

Facebook-ல் நடிகை என்று ஏமாற்றி பல லடசம் மோசடி செய்த பெண்

பேஸ்புக் உள்ளிட்ட இணைய தளத்தில் தன்னை ஒரு மலையாள நடிகை என்று அறிமுகத்துடன் ஏமாற்றி சாட்டிங்கில் சிக்கும் தொழிலதிபர்களை மயக்கி மணமும் புரிந்து பல லட்ச ரூபாய் சுருட்டிய மோசடி ராணி ஒருவரை போலீசார் தேடி வரும நிலையில் அவர் கேரளாவில் அமைச்சர் ஒருவரின் உதவியாளரையும ஏமாற்றி பல லட்சம் பறித்து விட்டு தலை மறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக சென்னையில் இணையதளம் மூலம் வயதான தொழிலதிபர்களுக்கு காதல் வலைவிரித்து அவர்களை சட்டபடி திருமணம செய்து கொண்டு லட்சக்கணக்கான பணத்தையும் சுருட்டிக் கொண்டு அவர்களை மோசம் செய்துவிட்டு தப்பியோடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது போன்ற கிரிமினல் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் பட்டதாரி பெண் ஒருவர் இதுபோன்ற காதல் மற்றும் திருமண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

தற்போது இது போன்ற ஒரு மோசடி ராணி சென்னை மற்றும் பெங்களூரைத் தொடர்ந்து கேரளாவிலும் வலம் வருவதாக திடுக்கிடும் புகார்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. தற்போது கேரளா அமைச்சர் ஒருவரின் உதவியாளரையும் ஏமாற்றியதாகக் கூறப்படும் அந்த மோசடி ராணி இணையதளத்தில் தனது பெயர்களை லீனா, ரீனா, ஷீனா மற்றும் மீனா என்று பலவாறு தெரிவித்துள்ளார்.

இவர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளத்தில் தன்னை ஒரு மலையாள நடிகை என்று அறிமுகம் செய்து கொண்டு தன்னிடம் சிக்குபவர்களிடம் காதல் பேச்சை தொடங்குவார். அடுத்து சாட்டிங்கில் இனிக்கும் காதல் தூது அனுப்புவார்.இதையடுத்து செல்போன் நம்பரை கேட்டு தெரிந்து கொண்டு பேசுவார். இவரது வலையில் விழும் தொழிலதிபர்களை உங்கள் குரலில் ஸ்பெஷல் ஆண்மை இருக்கிறது. உங்களை போன்ற ஒருவரைதான் திருமணம் செய்து கொண்டு எனது வாழ்நாளை ரொம்ப சுகமாக கழிக்க விரும்புகிறேன் என்று காதல் மொழிகளை அள்ளி வீசுவார்.

இந்த மோசடி ராணியின் காதல் வலையில் சிக்கி அவரை பதிவு திருமணம் செய்து கொண்டு ஒரு வருடம் இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டு தற்போது ரூ.31 லட்சம் பணத்தையும் பறி கொடுத்துவிட்டு சென்னை நகர வீதிகளில் அந்த மோசடி ராணியை இலங்கை தொழிலதிபர் ஒருவர் தேடி அலைகிறார்.

அவரது பெயர் இலங்கேஸ்வரன் (வயது 53). அவர் கடந்த வாரம் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து தான் மோசம் போன காதல் திருமண கதையை சொல்லி கண்ணீர்விட்டு அழுது கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில்,”நான் இலங்கையைச் சேர்ந்தவன். இலங்கையில் நல்ல வசதியோடு வாழ்ந்தேன். எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2004–ம் ஆண்டு நடந்த சுனாமி தாக்குதலில் என் குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. சுனாமியில் எனது மனைவி இறந்து போனார். சொத்து, சுகங்களை இழந்த நான் கனடா நாட்டிற்கு எனது குழந்தைகளோடு சென்றேன். அங்கு புதிய தொழில் தொடங்கினேன். நல்லபடியாகவும் வாழ்ந்து வந்தேன்.

அப்போதுதான் இந்த மோசடி பெண் இணையதளம் வாயிலாக எனது வாழ்க்கையில் குறுக்கிட்டாள். உங்களைப்போல நானும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். மலையாள சினிமாவில் நடித்துள்ளேன். அது எனக்கு கைகொடுக்கவில்லை. தற்போது ஒரு கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறேன். எனது தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் கஷ்டத்தோடு வாழ்கிறேன் என்றார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என்னை சென்னைக்கு வரச்சொன்னார்.

கடந்த 2009–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், சென்னை ஜெ.ஜெ. நகரில் ஒரு கோவிலில் எனக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை பதிவு செய்து கொண்டோம். அவரோடு ஒரு சில மாதங்கள் இங்கு குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் நான் கனடா சென்றுவிட்டேன். அந்த பெண் எனக்கு மனைவிக்கு ஆகிவிட்டதால் அவள் கேட்டபோதெல்லாம் வங்கி வாயிலாக பணம் அனுப்பினேன். ரூ.15 லட்சம் வரை கொடுத்தேன்.

அதன் பிறகு ஐந்து முறை சென்னை வந்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கெல்லாம் சுற்றினோம். அதிலும் ரூ.14 லட்சம் வரை செலவானது. அந்தபெண்மணியால் ரூ.31 லட்சம் வரை இழந்துள்ளேன். தற்போது அந்த பெண் என்னை ஏமாற்றி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

நான் தற்போது சென்னையில் தங்கியுள்ளேன். அந்த பெண் பெங்களூரில் இருப்பதாக தெரியவந்தது. என்னைப் போல இன்னொரு தொழிலதிபரிடம் இணையதளம் வாயிலாக பல லட்சங்களை பறித்துள்ளார். அவர் இதை ஒரு தொழிலாக செய்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண்ணை கண்டு பிடித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மீது கமிஷனர் உத்தரவின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் விசாரணை மேற்கொண்டு புகார் கூறப்பட்டுள்ள மோசடிராணியை தேடிவருகிறார்.இதற்கிடையில் இந்த மோசடி ராணி கேரளாவில் முகாமிட்டு அமைச்சர் உதவியாளர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு எஸ்கேப்பாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Saturday, December 14, 2013

செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக 2,02,586 பேர் தயார்!
செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.இதில் இந்தியர்கள் 20,000 பேர்.மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன் பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்பட்டது.இதை யொட்டி 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரிட்டன், கனடா, ரஷியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.

இத்தனை இலட்சததில் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வுக் குழு முதல்கட்டமாக தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ஆம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர் என்றும் அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் என்றும் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன்
பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது

Friday, December 13, 2013

காதலை நிரூபிக்க காலை உடைத்துக் கொண்ட காதலி

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலன் மீதுள்ள காதலை நிரூபிக்க பாலத்தில் இருந்து குதித்து காலை உடைத்துக் கொண்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் காசிபூர் பகுதியில் கைப்பேசி கடையில் பணிபுரியும் வாசிம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அனிதா டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு இடம் பெயர்ந்தார். இதனால் அனிதாவை மறந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார் வாசிம்.

அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அறிந்த அனிதாவின் தோழி அவருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அதோடு திருமண நிச்சயதார்த்த படத்தை கைப்பேசியிலும் அனுப்பி வைத்துள்ளார்.

அதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அனிதா டெல்லிக்கு அவசரமாக சென்று காதலன் வாசிமை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வாசிம் தன் மீது காதல் இருப்பது உண்மையானால் பாலத்தில் இருந்து குதிக்க முடியுமா? என்று கேட்டார். தனது காதல் உண்மையானது என்பதை நிரூபணம் செய்ய அனிதா பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வாசிமை கைது செய்தனர். காதலை நிரூபிக்க இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்தது கிழக்கு டெல்லி மதுவிகார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் மன்னர் பரம்பரை : 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில்

மைசூர் மன்னர் பரம்பரை 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

1612ம் ஆண்டு ராஜா உடையார் மைசூரை விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த திருமலராஜாவிடம் இருந்து கைப்பற்றினார்.

அப்போது திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா ராஜ நகைகளை எடுத்துக் கொண்டு தலக்காட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். தனது கணவரிடம் இருந்து ராஜ்ஜியம் பறிக்கப்பட்டதால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார்.

நகைகளை வாங்க உடையாரின் வீரர்கள் அலமேலம்மாவை கண்டுபிடித்தபோது கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்யும் முன்பு அவர் உடையார் பரம்பரைக்கு சாபம் அளித்தார். அதாவது தலக்காடு மண்ணாக போகட்டும், காவிரி கரையில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும், மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும் என்று சாபமிட்டார்.

அலமேலம்மா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த உடையார் மைசூர் அரண்மனையில் அவரது சிலையை வைத்து தெய்வமாக வணங்கினார். அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.

அவர் சாபமிட்டதுபோன்றே தலக்காடு மண்ணாக போனது. மலங்கியில் காவிரியில் உயிரைக் குடிக்கும் நீர்சுழிகளாக உள்ளது. உடையார் மன்னர்களுக்கு ஒரு தலைமுறை விட்டு மறு தலைமுறையில் தான் வாரிசுகள் பிறந்தார்கள்.

ஒரு மன்னருக்கு வாரிசு இல்லை என்றால் அவர் தனது தம்பியின் மகனை வாரிசாக அறிவித்தார். உடையார் மன்னர்களில் கொண்டாடப்பட்டவரான நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் வாரிசு இல்லாததால் தனது உடன் பிறப்பின் மகனான ஜெயசாம்ராஜாவை வாரிசாக அறிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இறந்த ஸ்ரீகண்டதத்தா உடையார் ஜெயசாம்ராஜாவின் மகன் ஆவார். ஸ்ரீகண்டதத்தா வாரிசு இன்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகண்டதத்தாவுக்கு அவரது அக்கா ராணி காயத்ரி தேவியின் மகன் கந்தராஜே அர்ஸ் இறுதிச் சடங்குகளை செய்தார். கந்தராஜே அடுத்த வாரிசாக அறிவிக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Wednesday, December 11, 2013

காதலிப்பவர்களுக்கும் மட்டும்!

பொதுவாக ஜோதிடம் காதலுக்கு எதிரியாக பார்க்கிறார்கள் , இது உண்மை அல்ல , ஜோதிடம் உண்மையை தான் சொல்லும் , உங்கள் உண்மையான காதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், உங்கள் தாய் , தந்தை சம்மதத்துடன் உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

காதலிப்பவர்கள் முதலில் சரியானவரை காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும் வரும். 3 வருட காதல் முடிந்து போவதும் உண்டு. 30 வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக ஏழரை சனி வரும்போதுதான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி வரும்போது காதலிக்கிறார்கள்.

பொதுவாக தசா புக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில்தான் காதலிக்கிறார்கள். சரி இல்லாத தசா புக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது. சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும். அதன்பிறகு ஒரு தெளிவு வரும். மோசமான தசா புக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும். அந்தக் காதல் தான் கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் கணவன் – மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசி வரை அதே காதலோடு வாழ்ந்து காட்டுகிறார்கள். இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியாக கனியாது.

அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து காதல் நீடிக்குமா? நீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும். காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு, கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கக் கூடப் பிடிக்காமல் விலகிப் போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம். எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப் பார்த்து அந்தக் காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?.

மேஷம்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் !

செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.

அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.

இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.

இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.

10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.

11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !

12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.

எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆண் - பெண் தெரிந்துகொள்ள வேண்டிய பெண்கள் பற்றிய விஷயங்கள்!

பெண், என்னதான் குடும்பத்தின் ஆணிவேராக,மரமாக இருந்தாலும், பிடிமானமாய் அன்பை வேண்டி நிற்பவளாகவே இருக்கிறாள் வாழ்நாள்முழுதும்.. கடக்கும் ஒவ்வொரு நிலையிலும் உடல், மனம் இரண்டிலும் வாதையை சுமந்தவளாக...

பெண்களில் மூன்று வகை

1. வேகமாய் காற்று அடித்தால் கசங்கி விடும் காகிதம் போல் மிக சென்ஸிட்டிவ் வகை பெண்கள்.
2. கொஞ்சம் ஒரு மாதிரி சமாளித்து அடுத்ததை பார்க்கபோகும் பக்குவ நிலை பெண்கள் .
3. அழுத்தமாக எதையும் வெளியே காட்டிகொள்ளாமல் அதே சமயம் உள்ளுக்குள் போட்டு குமைந்து தன்னை தானே வருத்தி கொள்ளும் பெண்கள்.
*இதில் முதல் மற்றும் மூன்றாம் வகை பெண்கள்... சுலபத்தில் மனசோர்வுக்கு ஆளாகிறார்கள். சிறுமி என சுற்றி திரிந்த நிலை திரிந்து, பதின் பருவ பூப்பெய்தும் காலத்தில் இரண்டு முக்கிய காரணங்களால் முதல் முறையாக பெண் மன அழுத்தம் காண்பாள் என்பது மனோத்தத்துவ கூற்று.
1. உதிரபெருக்கு..தன்னில் இருந்து தடுக்க முடியாத, தாங்கி கொள்ளமுடியாத சங்கடமாய் அதை அந்த வயது பெண் உணர்வாள். (கருப்பை விரிந்து வளரும் நிலை காண்பதால் வயிற்றை சுருட்டி சுருட்டி படுபயங்கர வலியை தன்னுள் உணரும் திகைப்பின் பிரதிபலிப்பாக வரக்கூடிய மன அழுத்தம்)
2. தன் சொந்த உடம்பில் அதுவரை கண்டிராத வளர்சிதை மாற்றம்.. மார்பகம் வளரும் நிலையில் நூறில் 60 பெண்கள், பதிமூன்று வயதில் இருந்து பதினாறு வயது-க்குள் (கவனம் சிதறுதல், விரக்தி, பயம், வெறுப்பு, சுயக்கட்டுபாட்டை இழத்தல், அழுது புலம்புதல், அதிதீதமான கோவம் கொள்ளுதல்) போன்ற மன அழுத்தம் காண்பதாகவும் உளவியல் கூற்று. தற்கொலை எண்ணம் முதல் முதலில் தலைதூக்குவதும் இந்த வயதில் தான்.
எனவே தான், வயது வந்த பருவத்தில் தாயன்பும், தக்க வழிகாட்டுதலும், அரவணைப்பும் கட்டாயம் வேண்டும்.. அந்நிலையில் ஒரு பெண் தாயற்று போவது பெருங்கொடுமை..அந்த வயதில் ஏற்படும் மன அழுத்தத்தை கடக்க அம்மாதான் சிறந்த மருந்து.
பதினாறு வயதில் இருந்து திருமணம் ஆகும் வரை மாதவிடாய் உதிரபோக்கை பெண்ணின் மனம் இயல்பாக ஏற்றுகொள்ளும்.. திருமணம், உடலுறவு கண்ட நிலை இதில் மீண்டும் மாதவிடாய் நேரத்தில் மனசோர்வு விழித்துக்கொள்ளும். (அதுவரை தூங்கிகொண்டு இருந்த கருப்பை விழிப்போடு தனக்கான செயல்பாட்டை தொடங்கிவிடுவதாலும், ஹார்மோன் சுரப்பிகள் உள்ளுக்குள் பல்வேறு மாற்றங்களை எற்ப்படுத்தி விடுவதாலும்.)
இங்கே இந்த இடத்தில முன்பு அம்மாவிடம் தேடிய ஆறுதலை கணவனிடம் தேடதொடங்குவாள் பெண். அந்த அளவு நெருக்கத்தை அம்மாவுக்கு பிறகு கணவனிடத்தில் வைப்பவள்.மாதவிடாய் சங்கடங்களை புரிந்து கொள்ளாமல் மேலும் முட்டி மோதி மடை திறப்பு செய்வது போல் கணவன் நடந்து கொண்டால் அங்கே தான் சங்கடம் பிறக்கிறது.
பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு
பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு இதுதான். உதிரபோக்கு என்பது பெண் உடல் சார்ந்த, அவள் மட்டுமே படக்கூடிய விஷயம்.. தனக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது போல பாவிப்பது.
பொதுவாகவே ஆண் தனியானவன் இல்லை, ஏதோ ஒரு கோட்டின்கீழ் உதிரபோக்கு காணும் பெண்ணோடு சார்பு உள்ளவனாகவே இருக்கிறான்.
1. மெனோபாஸ் நிலையை கடக்கும் அன்னையின் மகனாக
2. மாதவிடாய் காணும் மனைவியின் கணவனாக
3. பூப்பெய்திய பெண்ணின் தகப்பனாக
இது குறித்து சரியான புரிதலும், அணுகுமுறையும் ஆண் கொண்டிருத்தல் அவசியம்..இயல்பாய் இருக்கும் பெண்கள் உதிரபோக்கு நேரத்தில் தளர்ந்த மனநிலையில் இருப்பார்கள் என்பது மருத்துவ அறிவியல் உண்மை.
1. தளர்ந்த மனநிலையில் நூறுசதவீத பெண்களும்
2. மன சோர்வில் அறுபத்தைந்து சதவீத பெண்களும்
3. அதையும் தாண்டிய மன அழுத்தத்தில் முப்பது சதவீத பெண்களும்
4. வரம்பு உடைந்த மனபிறழ்வில் பதினைத்து சதவீத பெண்களும் பாதிக்கபடுகிறார்கள்..
மனைவி ஹிஸ்டீரியா நோயாளி போல் நடந்து கொள்கிறாள், கோவத்தில் கத்தி வெடிக்கிறாள், ஓயாமல் சண்டை இடுகிறாள், எரிந்து விழுகிறாள் என்று ஒரு கணவன் நினைப்பானேயானால் முழு தவறும் அவன் பக்கம் இருக்கிறது,மனைவியை ஆறுதல் தோளோடு அணையவில்லை என்பதே பொருள்.
உடலும் மனமும் சோர்ந்து இருக்கும் போது, உறங்கியும் உறங்காத நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது .. ஆழ்மனது விழித்துக்கொண்டு பார்த்தது, நடந்தது, செய்தது என பலவாறு உண்மை போல் ஒரு கற்பனை நிலையை உருவாக்கும். ... உடலும் மனதும் அதீதமாக சோர்ந்து இருக்கும் போது காண்பது இது.
பயங்கரமான கற்பனைகளை அந்த நேரத்தில், மூளை செய்து கொண்டு இருக்கும்... உதாரணம், ஒருவன் அல்லது ஒருத்தி ஆழ்ந்து உறங்கி கொண்டு இருக்கும் போது.. உருவம் இல்லாத எதோ ஒன்று தன்னை தூக்க நிலையில் அழுத்தி, அமிழ்த்தி துன்புறுத்துவதாக தோன்றும், கண்களை விழித்து பார்த்து, பயந்து, அபய குரலுக்காய் வாயை திறந்தால் குரல்வளையை தாண்டி பேச்சு வராதது போலவும்,பக்கத்தில் படுத்து இருபவர்களை எழுப்ப முடியாதது போலவும் தோன்றும்.. அது கனவோ கற்பனையோ அல்ல...முற்றிலும் நிஜம் என்று ஆழ்மனது நம்பும்.. இப்படி தான் பேய், பிசாசு கதைகள் கூட உருவாகியது என்பது உளவியல் கூற்று.
• உதிரபோக்கு நேரங்களில், மனசோர்வு காணும் பெண்கள் இதுமாதிரியான அழ்மனதின் கற்பனைகளால் தானும் துன்புற்று தன்னை சேர்ந்தவர்களையும் குழப்பம் அடைய செய்ய கூடும்.
மாதவிடாய் கால தளர்வுநிலை குறித்து சரியான புரிந்துணர்வுடன் அடுத்து அருமருந்தாக அமைவது கணவனின் நெருக்கம். கணவன் மனைவிக்கிடையே தொடு உணர்தலில் புரிந்துணர்வை சொல்வது அவசியம்.பெரும்பாலும்..பெரும்பான்மை, பெண்களின் கருத்து யாதெனில் பாலுறவு தேவை இருந்தால் ஒழிய கணவன், மனைவியை சாதரணமாக தொடுவதில்லை என்பது.
• மனசோர்வை இயல்பாக கடக்க கணவனின் ஒரு பார்வை, ஒரு செயல் அன்பில் கலந்தது போதும் பெண்ணுக்கு..பொத்தானை அழுத்தி மின்விசிறியை முடுக்குவதில் பொத்தானுக்கும், மின்விசிறிக்கும் இடையில் ஆன செயல்விசை போன்றது தொடுமொழி...
மெனோபாஸ்:
இது பொதுவாக 45-55 வயதுக்குள் வருவது. கருப்பை வழக்கமாக சுரக்கும் ஹர்மோனாகிய ஈஸ்ட்ரோஜன்..படி படியாக குறைந்து சுரப்பது தொடங்கும் நிலை இந்த கட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு அதீதமான உடல் உபாதைகளையும், மூப்பின் இயலாமையையும் சேர்ந்தே சுமக்க வேண்டயவள் ஆகிறாள்... 

ஓடி ஓடி செய்வதற்கு 45 லிருந்து 55 வரையிலான பெண்களுக்கு நிறையவே இருந்திடும். பிள்ளைகள் திருமணம் மற்றும் பல படிநிலைகளை வாதைகளோடு சுமக்க வேண்டிய கட்டத்தில், இருமடங்கு சோர்வு கொள்ளுதல் இயல்பே!
சிறுவயதில் தனக்கென நேரம் ஒதுக்கி தன் உடல்நலம் பேணாத பெண்கள் இந்த வயதை கடக்கும் போது அறுந்து விழுந்த கயிற்று பாலத்தில், பிடிமானம் இல்லாமல் தொக்கி கொண்டு கடப்பதை போல கடினமானது..
நம் பாட்டி மற்றும் அம்மா செய்த வேளையில் பாதியை கூட நம் காலத்தில் செய்ய முடியாத உபாதைகளுக்கு ஆளாவதற்கு முறையற்ற, ஊட்டம்ற்ற அவசரகதி உணவுகலாச்சாரமும் ஒரு காரணி மனரீதியாக மெனோபாஸ் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சல் கூடி எரிந்து விழுந்து பேசுதல், பொருமையின்னமை,காரணமற்று அழத்தொடங்குவது,நிலையான பிடிப்பு தன்மை இல்லாமல் அடிக்கடி மாற்றி கொள்வது,மறதி இன்னும் பொதுவான சொற்களில் அடக்கமுடியாத பலவும் இருக்கலாம்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தரும் இணக்கமும், புரிதலும் மெல்ல மெல்ல தளர்வுநிலை கடந்து தன்னிலை அடைய உந்துசக்தியாக இருக்கும்.. தவிர தியானமும், மூச்சு பயிற்சியும் சிறந்த மருந்து.

Thursday, December 5, 2013

அன்றைய மன்னர்களின் அஞ்சாநெஞ்சம் நமக்குத் தேவை

சென்னை-பிப்ரவரி-10, கோகலே மண்டபத்தில், மணவழகர் மன்றச் சார்பில் நடைபெற்ற முத்தமிழ்க் கலைவிழாவின் முதள் நாள் விழாவில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதிகள் இங்குத் தரப்படுகின்றன.

மணவழகர் (திரு.வி.க) பெயராலே மன்றம் அமைத்து அந்த மன்றத்தின் மூலமாக நல்ல பணிகள் ஆற்றி வருவதைச்சென்னை நகர் மட்டுமன்றித் தமிழகத்திலேயும் அறிவார்கள். இப்படி நல்ல பல பணிகள் ஆற்றிவரும் நண்பர்களை நான் பாராட்டுகிறேன்.

பாராட்டுதல் என்று நான் சொன்னால் அந்தப் பாராட்டுதல் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதற்கல்ல. இப்படி நாம் பாராட்டி விடுவதால் அவர்கள் வாழ்கிறார்கள் வளர்ந்து வருகிறார்கள் என்பது அல்ல. நாம் இவர்களை வாழ்த்துவதன் மூலம், மேலும் இப்படிப்பட்ட மன்றங்கள் பலவற்றைத் துவக்கி நடத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தைத் தூண்டவேயாகும்.

“நண்பர் நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ என்ற பட்டம் அ‘த்தேன். ‘அப்படிப் பட்டம் அளிப்பதே தவறு’ என்றனர் சிலர். அந்தப் பட்டம் பொருந்துமா? என்றவர்களும் உண்டு. நான் அவருக்கு அளித்த பட்டம் பொருந்தும் என்று அறிந்திருக்கிறேன். இப்பொழுதும் அறிவேன். நான் சொன்னது சரியென்று நிமிர்ந்து நின்றேன்.

இவ்வளவு சிறப்பாக இலக்கிய வளங்களை எடுத்துப் பேசும் நெடுங்செழியன், அரசியல் இலட்சியங்களை அதிக நேரம் பேசிவருவதால், இப்படிப்பட்ட அரிய இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றமுடியவில்லை. இடையிடையே இப்படிப்பட்ட சொற்பொழிவுகளை ஆற்றவேண்டும் என்று உங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

நெடுஞ்செழியன் அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிக் கூறும்போது நானும் காவிரிப்பூம்பட்டினத்தில் உலாவினேன். மன்னர்களைப் புலவர்கள் இடித்துக் கூறிய காட்சிகளை அவர் எடுத்து இயம்பியபோது எனக்கும் புலவனைப்போல் ‘பிரமை’ ஏற்பட்டது.

வளர்க்கப்பட்ட இடமும் வாழ்க்கைப்பட்ட இடமும்
எனக்குத் தலைப்பு எதுவும் இங்குப் பேசுவதற்கு அளிக்கவில்லை. நான் தலைப்புக்களுக்குக் கட்டுப்பட மாட்டேன் என்றோ அல்லது அந்தத் தலைப்பு அளித்தாலும் அதில் நான் சொல்வதைச் சொல்லியே தீருவேன் என்று கருதியோ என்னவோ எனக்குத் தலைப்பு தரவில்லை. இது இன்று மட்டும் அல்ல என்றும் நான் வளர்க்கப்பட்ட இடமும், வாழ்ந்து வருகிற இடமும் இப்படிப்பட்டது தான். பழந்தமிழகக் காட்சிகளை நாவலர் இங்கு எடுத்துக்கூறினார். மற்ற நாடுகள் கழனிகளைக் காணாத நாட்களில், தமிழர்கள் கழனிகள் கண்டு வரப்பமைத்து வாழ்ந்தார்கள். மற்ற நாடுகள் சமுதாயமாக அமையாத காலத்தில் இங்குச் சமுதாயத்திற்குச் சட்டம் அமைத்து, சட்டமன்றத்திற்கும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய தொடர்புகளை வரையறுத்துக் கூறினார்கள். போர் முறைகளை மற்றவர்கள் அறியாத நாட்களில் போர் முறைகளை வகுத்து அவற்றை நல்ல நூல்களாக்கி வைத்திருக்கிறார்கள்.

நல்ல பல இலக்கியச் செல்வங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைத்து வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நூல்களைப் படிப்பதில் பயன் என்ன? இதைப்பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்பதால் நாம் செய்யப் போவது என்ன? செய்வது என்ன? இப்படிப்பட்ட காட்சிகளைப் படிக்கும் போதும“ கேட்கும் போதும் அத்தனையும் உண்மை என்றுதான் நாம் அறிகிறோம். இதைக்கேட்டு அடையவேண்டிய பயன் என்ன?

பேரனிடமுள்ள கோலியைத் தாத்தா வாங்கி, அதை அடிக்கும்போது, பேரன் ‘தாத்தா உனக்குக் கோலி அடிக்கத் தெரியவில்லை’ என்று சொன்னால், உடனே தாத்தா “நான் அந்தக் காலத்தில் இதைவிடப் பெரிய கோலியை அதோ அங்கே இருக்கிற மாந்தோப்பு அருகே பெரிய குழிகளை வைத்து ஆடியிருக்கிறேன் உனக்குத் தெரியாது” என்று அந்தப் பாட்டனாரைப்போல் பேசிவிட்டுப் போவதற்குத்தானா நாம் இருக்கிறோம்?

நெஞ்சார சிந்திக்க வேண்டும்
மாலை நேர வகுப்புக்காகச் சுவைமிக்க காட்சிகளை ரசிப்பது மட்டும் பயன் இல்லை. நெஞ்சார சிந்தித்து, ‘இப்படி இருந்த நாம் இன்று ஏன் இந்தக் கீழ் நிலைக்குத் தள்ளப் பட்டோம்?’ என்பதையும் ‘அந்த நாளிலே அரசோச்சிய நாம் இன்று ஏன் இவ்விழிநிலைக்கு வந“தோம்? என்பதையும் உணரவேண்டும்.

புலவர்கள் அன்றுபோல் இன்றும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய திறமை பயன்படுத்தப்படவில்லை. திறமை திருத்தி அமைக்கப்பட்டால் நாட்டிற்கு வழி பிறக்கும்.
பண்டைத் தமிழகத்தில் போட்டி உணர்ச்சி இருந்தது; பொறாமை இல்லை. திறமையை அறிந்து பாராட்டினார்கள். சாதிகளும் இல்லை பிளவுகளும் இல்லை. இப்படிப்பட்ட நிலையை நாம் என்றென்றும் மேற்கொள்ளலாம். இன்றும் கொள்ளலாம். அவரவர்கள் ஆற்றலைத் திறமைக்குத் தக்கபடி வளர்த்துக் கொண்டு போவோமானால் நம்முடைய நாடும் முன்னேறும் நாமும் முன்னேறுவோம்.

அக்கால மன்னர்கள் நால்வகையாகப் படையைப் பிரித்து வைத்து இருந்தனர். நான், மன்னர்கள் என்று குறிப்பிட்டவுடன் நான் ஏதோ மன்னர்களை ஆதரிக்க கிளம்பிவிட்டேன் என்று நீங்கள் எண்ணமாட்டீர்கள். நான் காப்பாற்ற வேண்டிய அளவுக்கு எந்த ராஜ்யமும் எனக்குக் கிடையாது. என்னுடைய தலையில் முடியும் நிற்காது. நான் அக்காலத்தில் இருந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.

நால்வகைப் படைப் பயிற்சி
நால்வகைப் படைப்பயிற்சி அந்நாளில் இருந்தது. அதிலே கரிப்படை ஒன்று. வெறும் கரிப்படை மட்டும் இருந்தால், அதைக் கொண்டு எதிரிகளை விரைந்து தாக்க முடியாது. விரைந்து தப்பி ஓடவும் முடியாது. அடர்ந்து நிற்கிற எதிரிகளைத் தாக்க கரிப்படையும் விரைந்து சென்று தாக்கி மீள குதிரைப்படையும் சுற்றி வளைத்துத் தாக்கக் காலாட்படையும் என்று பிரித்து வைத்திருந்தார்கள். இவற்றைப் பிரித்து வைத்துத் தனித் தனியாக எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்தவில்லை. எல்லாப் படைகளையும் ஒன்று திரட்டி அனுப்பியே போர் புரிந்தார்கள் வெற்றியும் பெற்றார்கள்.

தமிழ்மொழியை மூன்றாகப் பிரித்ததாக நாவலர் குறிப்பிட்டார். இயல், இசை, நாடகம் என்று மூன்றாகப் பிரித்தது மொழி என்பதற்கல்ல; தமிழ் என்பதற்குச் சுவை என்ற பொருளும் உண்டு. இதை மனத்தில் கொண்டுதானோ என்னவோ இயற்சுவை, இசைச்சுவை, நாடகச்சுவை என்று பிரித்திருக்கக்கூடும். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நம்முடைய முன்னோர்கள் பலவற்றிற்குக் குறிப்பெழுதித் தரவில்லை.

சமீபத்தில், நான் ஓர் ஆங்கிலப் புத்தகம் படித்தேன். அதில் ஒரு மன்னன் போருக்குச் சென்றபோது, வெற்றி விருந்தில் எத்தனை கோழிகள் பயன்படுத்தப்பட்டன. என்ன உணவு சமைக்கப்பட்டது எத்தனை பேர் உண்டனர் என்பது முதல் எல்லா விஷயங்களையும் தொகுத்துக் குறிப்பெழுதி வைத்துள்ளதைப் படித்தேன். நான்கூடப் புத்தகங்களைப் படிக்கிறேன் என்பதைக் கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்; நூல்களைப் படிக்கிறேன் அப்பொழுது பயன்படுத்திய பொருள்கள்-அவற்றின் அப்பொழுதைய விலை இன்றைய தினம் உள்ள விலைப்படி உள்ள மாறுபாடு அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது.

வரலாறும் குறிப்பும் நம்மிடம் இல்லாத நிலை ஏன்?
நான் சிறையிலே இருக்கும்போது, மற்றோர் ஆங்கில நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது 18-19 ஆம் நூறறாண்டின் லண்டன் நகர அமைப்பைப் பற்றி விளக்குகின்ற நூலாகும். அதில் லண்டன் நகர அமைப்பு. தெருக்களின் பெயர், தெருக்களில் அமைந்திருந்த கட்டடங்களின் அமைப்பு முறை, டீக்கடைகள் யார் யார் இல்லங்கள் எந்தெந்தத்தெருக்களில் இருந்தன. கடன்காரனைக் கண்டு கோல்ட்ஸ்மித் ஓடி ஒளிந்து கொண்ட இடம் ஆகிய இத்தனையும் தொகுத்து எழுதப்பட்டிருப்பதைப் படித்தேன்.

நம்முடைய இயக்கத்தின் முதல்வரான தியாகராயரின் வரலாறு இன்று நம்மிடம் இல்லை. நீதிக்கட்சியைக் கட்டிக் காத்த டாக்டர் நாயர் வரலாறு இன்று இல்லை. நீதிக்கட்சி இந்நாட்டை ஆண்டபொழுது, அவர்கள் இயற்றிய சட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி அறிவதற்குக் குறிப்பு இல்லை.

நல்லவேளையாகத் திரு.வி.க.அவர்கள் தமது வாழ்க்கையைத் தாமே குறிப்பெழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அதை அவர் செய்த விட்டுச் செல்லாமலிருந்தால், நாமும் திரு.வி.க. அவர்களைப் பற்றி ‘நடமாடும் தமிழ்ப் பண்பாடு’ என்று பேசிக்கொண்டிருக்கக்கூடும்.
இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கே நாம் குறிப்புகளைச் சரிவரச் சேர்த்து எழுதி வைக்கவில்லை என்றால் பண்டைக்கால வரலாற்று நிலையைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. எழுதி வைத்திருக்கிற நூல்களில் தமிழ்ப் புலவர்கள் இரண்டு வரிகளுக்கிடையே கெல்லி எடுக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது.

மாற்றார்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள்
நம்முடைய வலிவை அறிவது மட்டும் முக்கியம் அல்ல; பண்டைத் தமிழர்கள் தம் வலிவை மட்டுமன்றி மற்றார் வலிமை என்ன என்பதையும் ஆராய்வது மிக முக்கியம் என்று கருதினார்கள். குறள்கூட இதை வற்புறுத்தியிருக்கிறது. நாமும் மாற்றார் வலிவைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் நமது வலிமையை மதிப்பிட வேண்டும். மாற்றார் என்று குறிக்கும்பொழுது நாம் அவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ‘தமிழுக்கு மாற்றார்கள்’ மற்றொன்று ‘தமிழர் ஆட்சிக்கு மாற்றார்கள்.’

தமிழுக்கு மாற்றார்கள் மலைமலை அடிகள் காலத்திற்குப் பின் நாளடைவில் குறைந்து தேய்ந்து வருகிறார்கள். சமீபத்திலே நான் பத்திரிகையிலே படித்தேன். அரியக்குடி இராமானுஜ (ஐயர்) தமிழிசை மாநாட்டில் பேசியதாக ஒரு பேச்சு. அதில் அவர் தமிழிசைக்கும் மற்ற இசைக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதே அரியக்குடியார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செட்டிநாட்டு வேந்தர் ஆதரவில் நடைபெற்ற தமிழிசை விழா மாநாட்டில் ‘தமிழில் ஏது இசை? தமிழில் இசை என்பதே கிடையாது. தெலுங்கில் அல்லவா இசை இருக்கிறது?’ என்று வாதாடினார். அவரேதான் இன்று இப்படிப் பேசுகிறார். ஆகவே தமிழில் மாற்றார்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள். குறைந்து கொண்டு வருகிறார்கள்.

தமிழர் அரசியல் முறையைக் குறை கூறுபவர்கள் யார்?

தமிழர் ஆட்சிக்கு மாற்றார்களைக் கவனிப்போம். அன்றைய தமிழர்களின் ஆட்சி முறையைப் பற்றி நாம் பேசும் பொழுது சிலர், அன்றைய தினம் தமிழகத்தின் மக்கள் தொகை சில லட்சங்கள். இன்றைய தமிழர்கள் எண்ணிக்கை சில கோடிகள் என்று கூறி, மக்கள் எண்ணிக்கையை எடுத்துக்காட்டி, தமிழர் அரசியல் முறையைக் குறை கூறுகிறார்கள்.

இப்படிப் பேசுபவர்கள் இருவகைப்படுவர். ஒருவகையினர் தெரிந்திருந்தும் பேசுபவர்கள்; மற்றொரு வகையினர் பிறரால் தெரிவிக்கப்பட்டுப் பேசுபவர்கள். தெரிந்திருந்தும் வேண்டுமென்றே பேசுபவர்களைப் பற்றி நாம் கவலைப்படவில்லை; தெரிவிக்கப்பட்டுப் பேசுகிறார்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அதுபோல் தமிழன் ஆட்சி நிலை அமைய வேண்டுமென்று நாம் கூறினால், உடனே அவர்கள் கண்களுக்குத் தெரிவதெல்லாம் மன்னர், மன்னனுடைய ஆடை, மீசை, கோட்டை, கொத்தளம், படை, குடவோலை ஆகியவைகள் தான். இவைகள்தான் வேண்டும் என்று நாம் சொல்வதாக எண்ணுகிறார்கள்.

ஆற்றிய வீரம்-அஞ்சா நெஞ்சம்
‘முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொள்’ என்று நாம் எட்டு வயதுச் சிறுமியைக் கூறுகிறோம். பதினாறு வயதுப் பெண்ணையும் ‘முகத்தை கழுவி பொட்டு வைத்துக்கொள்’ என்றுதான் சொல்கிறோம். எண்பது வயது பாட்டியைப் பார்த்தும் சொல்கிறோம். அவர்கள் சுமங்கலியாக் இருந்தால்- ‘முகத்தைக் கழுவி பொட்டு வைத்துக்கொள்’ என்று. மூவரும் பருவத்திலே வித்தியாசம் கொண்டவர்களாக இருந்தாலும் கழுவ வேண்டியது முகத்தை வைக்க வேண்டியது பொட்டைத்தான். ஆனால் வயதுக் கேற்ப இடமும் அளவும் மாறலாம்.

அதைப்போல, மன்னர்கள் கையாண்ட வில்லும், வாளும், ஈட்டியும், கேடயமும் அல்ல; கவனிக்கப்பட வேண்டியவை-அதைக்கொண்டு அவர்கள் ‘ஆற்றிய வீரம்’ ‘அஞ்சா நெஞ்சம்’ ஆகியவைதான்.

அக்கால மன்னர்கள் பிறவுயிரைக் காத்தார்கள். ‘அப்படிக் காக்கின்ற பண்பு வேண்டும்’ என்றுதான் பொருள். அக்கால மக்கள் அறநெறியில் செல்வம் ஈட்டினார்கள். ஈட்டிய செல்வத்தைச் சமூகத்திற்காகப் பயன்படச் செய்தார்கள். அக்காலத்தில் சந்தனக் கட்டைகள், முத்து, தங்கம் என்று இப்படிப் பல வகையான செல்வங்கள் இருந்திருக்கலாம். இக்காலத்தில் செல்வம் என்பது வேறாக இருக்கலாம். ஆனால் அதை ஈட்டும் முறை மாறவில்லை. அப்படியே அது, பயன்பட வேண்டிய விதத்திலும் பயன்படுத்த வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் மிகப்பெரிய எழுச்சியை எனக்கு ஊட்டுவது இலக்கியங்களில் அமைந்திருக்கிற உவமைகள் தான். நம்முடைய தமிழ்ப்புலவர்கள் இவ்வுவமைகளைக் கையாண்டிருக்கிற முறை நாம் படிக்கும் போதும், கேட்கும் போதும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும். அவர்கள் காட்சிப் பொருளுக்குக் கையாண்டிருக்கும் உவமை மிகமிகச் சிறப்புக்குரிய ஒன்றாகும். விளக்கத் தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை விளக்குவதுதான் உவமையாகும். யானையைப் பார்த்தறியாத ஒருவனுக்கு அவன் குன்றைப் பார்த்திருப்பான். விளக்கிக் கூறக் ‘குன்றுபோல் இருக்கும்’ என்று கூறுவார்கள். இதுதான் உவமை!
இப்படிப்பட்ட உவமை நயங்களை நாவலர் எடுத்துக்கூற நான் கேட்கவேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு. இந்தத்தொடர்க் கூட்டங்களில் ஒன்றில் அவர் அப்படிப்பட்ட சிறந்த சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்த வேண்டுமென்று என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

பொறுமைசாலி நமக்குக் கிடைத்திருப்பாரா?
நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய அன்பு வலையை வீசினேன். அப்பொழுது அங்கு அன்பழகனும் படித்துக்கொண்டு இருந்தார். நெடுஞ்செழியனும் படித்துக்கொண்டிருந்தார். என்னை அங்குக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்து வரவேற்றுப் பேசியவர் நெடுஞ்செழியன் தான் என்றாலும் என் அன்பு வலையில் சிக்கியவர் முதலில் இவரல்ல! அப்பொழுது அங்கு படிக்கும் பொழுதே அவர் நல்ல புலமையோடு விளங்கினார். படித்துவிட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ந்து கொண்டு இருக்க வேண்டியவர்-பலர் பார்த்து மெச்சத்தக்க வாழ்க்கை நிலையில் இருக்க வேண்டியவர்- ‘அதோ போகிறாரே அவர்தான் இன்னார்’ என்று அவர் புகழைப் பற்றிப் பேச வேண்டிய நிலைமையில் இருக்க வேண்டியவரை நான் தான் இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டேன். அவர் இந்நிலையில் வாழ்வில் அல்லல்படுவாரானால், அருள் கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

அன்று அவர் தமிழகப் புலவர்களைப்போல, தாடியுடன் காட்சியளித்தார். அந்தத் தாடியை எடுக்க வைக்க நான் மெத்தவும் சிரமப்பட்டேன். சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. கடைசியாக மதுரைக்கு அழைத்துச் சென்று தாடியை எடுக்க வைத்தேன்.

நான் அவரை இங்குக் கொண்டு வந்து சேர்த்திருக்காவிட்டால் தமிழகப் புலவர் வரிசையில் ஒரு சிறந்தவர் கிடைத்திருப்பார். ஆனால் நம்முடைய இயக்கத்துக்கு இவ்வளவு பெரிய பொறுமைசாலி கிடைத்திருக்க மாட்டார்.

பயன்படாத உவமை!
ஓர் அழகிய மங்கையைப் பார்த்து ‘இவள் எப்படி இருக்கிறான்? என்று மற்றொருவரைக் கேட்டால் அவர், ‘இவள் மேனகையைப் போல் இருக்கிறாள்’ என்றுகூற, ‘மேனகை எப்படி இருப்பாள்?’ என்று கேட்டால், ‘தேவலோக மங்கையைப்போல் இருப்பாள்’ என்று சொல்ல, ‘அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நான் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று கேட்டால், ‘செத்த பிறகு பார்க்கலாம்’ என்று கூறினால், செத்தவர் போவதும் உறுதியில்லை செத்த பின் மீண்டும் திரும்புவதும் முடியாது? இது பயன்படா உவமையாகும்.

சுவையும், பயனும் இணைந்திருக்கிற தனித்தன்மையை உவமை எடுத்துக்காட்டுகிறது. ‘அன்று வாழ்ந்த புலவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட உவமைகளை அமைத்துக் காட்ட முடியும்’ என்று கருதுவது தவறு. இன்றுள்ள புலவர்களாலும் அமைத்துக்காட்ட முடியும். தற்காலப் புலவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் அளிக்கப்பட்டால் இயற்கைக் காட்சிகளை எழிலுற எடுத்துக் காட்டியிருக்க முடியும். அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது மலைகளை, அருவிகளை, இயற்கைக் காட்சிகளை எங்கு சென்று பார்க்க முடியும்?

அவர் புலமைக்கும் நஷ்டம்
வாய்ப்பும் வசதியும் அளிக்கப்பட்டால் திறமை துவங்கும். திறமை தட்டுப்படாத காரணத்தாலேயே இல்லையென்று பொருளில்லை.

நான் நண்பர் பாரதிதாசன் அவர்களுக்கு ரூ.25,000 பண முடிப்பு அளித்தபொழுது அவர் என்னிடம் கேட்டார் ‘இந்தப் பெருந்தொகையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? என்று நான் அவருக்குச் சொன்ன தெல்லாம் இத்தொகையை எடுத்துக்கொண்டு இமய முதல் குமரி வரை சுற்றி வாருங்கள். ‘நல்ல நல்ல இயற்கைக் காட்சிகளைப் பாருங்கள். நீங்கள் கண்ட காட்சிகளை நல்ல கவிதைகளாக ஆக்கித்தாருங்கள். அதுவே, நீங்கள் தமிழகத்துக்குச் செய்யும் சிறப்பு’ என்றேன். அவர் அதைச் செய்யவில்லை. அதனால் நமக்கும் நஷ்டம் நாட்டுக்கும் நஷ்டம் அவருடைய புலமைக்கும் நஷ்டம்.

வாங்கக் காசுக்கு எங்கே போவது?
நான் எழுதிய ‘ரொட்டித் துண்டு’ என்ற கதையை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். அக்கதையில் பணக்கார வாலிபன் ஒருவன் ‘ரொட்டித் துண்டு’ என்ற கவிதையை எழுதினான். அவனை ஊரெல்லாம் பாராட்டியது. அவனைப் பாராட்ட விழா ஒன்று நடைபெற்றது. விழாவிற்கு அவருடைய தமிழாசிரியப் புலவர் தலைமை வகித்தார். கூட்டத்தில் அகவற்பாபாடினார். பாராட்டினார். கூட்டம் முடிந்து வாலிபன் காரில் ஏறச்சென்ற பொழுது அந்தப்புலவர், வாலிபனை நெருங்கி ‘தயவு செய்து நீ எழுதிய நூலின் பிரதியொன்று தரவேண்டும்’ என்று கேட்டார். வாலிபன் அவரை நோக்கி ‘என்னுடைய நூலைப் படிக்காமலேயா என்னைப பாராட்டினீர்கள்?’ என்று கேட்டான் ஆசிரியர் சொன்னார்: ‘மற்றவர்கள் கூறியதைக் கேட்டு நான் பாராட்டினேன். அந்நூலை விலைகொடுத்து வாங்கக் காசுக்கு நான் எங்கே போவேன்?’ என்றார்.

தமிழ்ப் புலவர்களுடைய வாழ்க்கை வசதிகள் பெருக்கித் தரப்பட வேண்டும். பிறமொழி கற்றவர்களுக்கு அளிக்கப்படும் அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழ்ப் புலவர்கள் தான் கல்லூரி முதல்வராக இருக்க வேண்டும். இந“நிலை இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.

மரபு காத்தனர்
அக்காலத்தில் புலவர்கள்-கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள், வகுப்பு அறைக்குள் குனிந்து குன்றி, இப்புறம் அப்புறம் பார்த்துக்கொண்டு வகுப்புக்குள் நுழைவார்கள். இன்று நிலை அப்படி அல்ல; நான் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற பொழுது நான் தமிழ் கற்றது திரு.மணி திருநாவுக்கரசு, மோசூர் கந்தசாமி ஆகியவர்களிடம்தான். இவர்கள் இருவருமே நிமிர்ந்து நின்றவர்கள். இவர்களிடம் பாடம் கேட்ட காரணத்தாலேயே நானும் நிமிர்ந்து நின்று சமாளிக்கிறேன். மணி திருநாவுக்கரசு அவர்களிடம் நான் கேட்ட முதல் பாடமே ‘உங்களை நான்’ சுடர் என்றுதான் அழைப்பேன். அதற்காக நீங்கள் வருந்தக்கூடாது; ‘அவர்’, ‘இவர்’ என்று அழைத்தால் பேதமை உணர்ச்சியை ஊட்டும். ‘அது’, ‘இது’ என்று அழைத்தால் அஃறிணைப் பொருளை உணர்த்தும். ஆகவே அன்பின் சின்னமாக உங்களையெல்லாம் நான் ‘சுடர்’ என்றுதான் அழைப்பேன் என்றார். அவருக்குப் பின் மோசூர் கந்தசாமி அவர்கள் வகுப்பில் ஆங்கிலப் பாடங்களை தமிழ் இலக்கியத்தோடு ஒப்புநோக்கிக் காட்டி எங்களுக்குப் பாடம் போதிப்பார். இப்படித் தமிழ் புலவர்கள் வழிவழியாக மரபு காத்து வருகிறார்கள்.

மொழிப்பற்று வளருவதன் மூலம் நாட்டுப்பற்று வளரும். நாட்டுப்பற்று வளருவதன் மூலம் நம்மிடமே நமக்கு நம்பிக்கை வளரும்.

பலசாலி என்று பொருளல்ல!
ஒரு பழைய டப்பாவை எடுத்துத் திறக்க முயன்று திறக்க முடியாமல் அடுத்தவரிடம் கொடுத்துத் திறக்கச் சொல்லி அதைத் திறக்க முடியாமல் மூன்றாவது ஒருவரிடம் தந்து அவர் அதைத் திறப்பதாக வைத்துக் கொள்வோம். இப்படி அவர் அதைத் திறந்துவிட்ட காரணத்தினாலேயே மற்ற மூவரையும்விட இவர் பலசாலி என்று பொருள் அல்ல. அவர் பலசாலியாகக்கூட இருக்கலாம். இது மட்டும் உண்மையாகிவிடாது. அந்த டப்பாவின் மூடியை மூன்று பேர் இழுத்து இழுத்து செலுத்திய வலிவுதான் நான்காம் நபரை திறக்க வைத்தது.

இந்நிலையில்தான் மூடப்பட்டிருந்த தமிழனுடைய மனதை இந்தி எதிர்ப்புக் காலத்திலிருந்து பலர் கொஞ்சம் கொஞ்சமாகத் திறக்க முயன்றனர். கொஞ்சம் கொஞ்சமாகத் திறக்கப்பட்டது.

முதலில் மறைமலையடிகள் முயன்றார். பின்னர் திரு.வி.க. அவர்கள் இந“தப்பக்கம் நின்று திறப்பதைவிட சற்று அந்தப்பக்கமாக நின்று திறந்தால் சுலபம் என்று கருதினார். கடைசியாகப் பெரியார் அவர்கள், ‘டப்பாவை எதன் மேலாவது அடித்துத் திறக்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது பக்கத்திலிருந்த நான் இப்படி மோதுவதால் டப்பாவுக்கும் மோதுகின்ற பொருளால் சேதம் ஏற்படும். ஆகவே, சேதமில்லாமல் அதை தட்டித் திறக்க வேண“டும் என்று கூறினேன்.

மூன்றாம் மாதம் இல்லாமல் பத்தாம் மாதம் இல்லை
இப்படி நான் கூறியதால் ‘இவன் மூடியையே திறக்க மாட்டான்’ என்றும் சிலர் எண்ணலாம். விரைவில் மூடியைத் திறக்கும் ஆளாக நீங்களே ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர் திறக்கவும் செய்யலாம். ஆனால் ஒன்றை மட்டும் கூறுவேன். ‘மூன்றாம் மாதம் இல்லாமல் பத்தாம் மாதம் இல்லை.’

திரு.வி.க. அவர்கள் முதலில் தமிழ் அழகை உணர்ந்தார். பிறகே தமிழர்கள் அவரை உணர்ந்தனர். முதன்முதல் தமிழில் சிறுசிறு வாக்கியங்களை அமைத்துக்காட்ட முடியும் என்று அமைத்துக் காட்டியவர். தனித்தமிழ் நடையில் தேன் சொட்டச் சொட்ட எழுதியும் பேசியும் காட்டினார்கள். இவ்வளவு அழகிய நடையைக் கையாண்டவர்கள் திரு.வி.க அவர்களுக்கு முன்னால் யாரும் இல்லை. அவருக்குப் பின்னும் அதிகம் பேர் இல்லை. தமிழில் உள்ள ‘ழ’கரத்தை சொற்களில் அமைத்துக்காட்டி நெஞ்சை நெகிழச் செய்தவர்.

கண்ணீரைக் காணிக்கையாக்க முடியவில்லை
இப்படிப்பட்டவர் இறக்கும் காலத்தில், உடனிருந்து கண்ணீரைக் காணிக்கையாக்க என்னால் முடியாமல் போய் விட்டது. அப்பொழுது நான் சிறையில் இருந்தேன். சிறைக்காவலாளி எனக்குத் தகவல் சொன்னார். அப்பொழுது சிறையில் நான் சிட்னிலெப் என்பவர் எழுதியிருந்த ‘தொழிலாளர் இயக்க வரலாறு’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். சிறைக்காவலாளி கூறியதைக் கேட்டதும் அதை, ‘திரு.வி.க. அவர்கள் இன்று காலமானார்’ என்று அந்த நூலிலேயே குறித்து வைத்தேன். திரு.வி.க.அவர்கள் தனக்காக வாழாது தமிழுக்காக வாழ்ந்து தமிழருக்காக அளித்துச் சென்றார்.

சிரிக்க மற்றும் சிந்திக்க தெனாலி ராமன் கதைகள்

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது” என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் “மாம்பழம் தான் வேண்டும்” என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம் வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.

மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.

அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் “மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்” என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.

புரோகிதர்களைச் சந்தித்தான். “என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்” என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் “ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்” என்று கேட்டார்.

“மன்னாதி மன்னா….. என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு” என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு “என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே” என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்” என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே…… அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே………………….”

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.