Monday, April 24, 2017

`நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’

`கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர்,நாராயணன்.

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய்,அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை,கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து,பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா...,ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...

மெட்ராஸ் பாஷை அறிவோம் !


பேச்சு தமிழ் மெட்ராஸ் பாஷைஅர்த்தம் 
appuram (அப்புறம்)Appālikā,appāllē (அப்பாலிகா, அப்பாலே)Afterwards
anñkē (அங்கே)Annanṇṭa (அந்நாண்ட)There
kōpam (கோபம்)Gaandu (காண்டு)Anger
Mosamana (மோசமான)Attu (அட்டு)Worst (Derived from Burmese word "attu" - meaning duplicate)
bayam (பயம்), achham (அச்சம்)mersu (மெர்சு)Fear
nandraga Illai (நன்றாக இல்லை)mokka (மொக்கை/மொக்க)Derived from Burmese word "macaunbu" meaning not good
dhaṭavai (தடவை)Dhabā (தபா)times- Derived from Hindustani - Dafa (number of times)
ēmatṟukiṟatu (ஏமாற்றுகிறது)Dabaikirathu (டபாய்க்கிறது)Fooling
kiṇṭal seivathu (கிண்டல் செய்வது)Kalāikirathu (கலாய்க்கிறது)To tease- Derived from Malayalam - Kali aakunnu.
makizhchi (மகிழ்ச்சி)Gūjjāallu (குஜ்ஜால்லு)Happy
kaal saṭṭai (கால் சட்டை)Nijāru (நிஜாரு)Trouser
viraivil viṭṭu(விரைவில் விட்டு)Apeetu (அபீட்டு)To exit quickly/Vanish from the spot. Derived from English word abate
Nalla irukku (நல்லா இருக்கு)Sokkha irukeethu(ஸோக்கா இருகீது )Looking good - Derived from Urdu- Shauq- Passionate
மற்ற மொழிகளில் இருந்து வாங்கியது 

Dūbaakoor (டுபாக்கூர்)  - Fraudster  - From the English word dubash which, itself, is a derivative of the Hindusthani word "Do bhasha", usually, used to refer to interpreters and middlemen who worked for the British East India Company. As in the early 19thcentury, dubashes such as Avadhanum Paupiah were notorious for their corrupt practices, the term "dubash" gradually got to mean "fraud"

Nainā (நைனா)  - Father  - From the Telugu word Nāyanāh

Bēmānī (பேமானி)  - Swearword; meaning unclear - Derived from the Urdu word Bē Imān meaning "a dishonest person"

Gabbu (கப்பு)  - Bad Smell  - Derived from colloquial Telugu Gobbu

Gammu (கம்மு)  - Silent, peaceful - Derived from colloquial Telugu gommuni

Bīscōthū  - Sub-standard  - Derived from the English word "biscuit"

Kūchū (குச்சு,குந்து)  - Sit down - Derived from Telugu & Kannada

Dhūddū (துட்டு), Dabbū (டப்பு)  - Money  - Derived from Telugu

Galeeju (கலீஜு)  - Yucky  - Derived from the Urdu word, Galeez

Kasmalam (கஸ்மாலம்)  - Dirty - Derived from the Sanskrit word "Kasmalam" meaning dirty, discardable

Yegīrī (யெகிரி)  - To jump  - Derived from Telugu

Bējār (பேஜாறு) - Problem  - Derived from Hindusthani

Figure (பிகர்)  - A beautiful girl  - From English. Used by youngsters

Virching (விற்சிங்) - Thing to be done after searching(Opener)

Correct (கரெக்ட்) (as a verb) - To Impress A Girl. - From English. Used by youngsters

O. C. (ஓ.ஸி) - Free-of-cost  - From English. During East India Company rule, official communication was stamped "Os or stamps. The word "O. C." gradually got to mean something which was offered free-of-cost

Friday, April 21, 2017

கோஹினூர் வைரத்தை மீட்க முடியுமா?

புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் தற்போது உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான கோஹினுார் வைரத்தை மீட்க வேண்டும் என்ற வழக்கில், 'வெளிநாட்டில் உள்ள சொத்தை மீட்கும்படி உத்தரவிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மீட்க கோரிக்கை: உலகப் புகழ்பெற்ற, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கோஹினுார் வைரம், தற்போது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ளது. தென்மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட, 108 காரட் எடையுள்ள இந்த வைரம், இந்திய மன்னர்கள் பலருடைய கை மாறி, தற்போது லண்டனில் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. கேள்வி: இந்த வைரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வைரத்தை மீட்பது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று, சுப்ரீம் கோர்ட், முன்பு கேள்வி எழுப்பியிருந்தது. 'வைரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு தள்ளுபடி: இந்த நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: வெளிநாட்டில் உள்ள சொத்தை மீட்கும்படி கோர்ட்டால் உத்தரவிட முடியாது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் உள்ள சொத்துக்களை மீட்கக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதில் கோர்ட் தலையிட முடியாது என்று தெரிந்தும், இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோஹினுார் வைரத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

ஜெயலலிதா மரணத்தின் 14 ரகசியங்கள்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் எதுவும் முடிவுக்கு வரவில்லை. அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டையாக உள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானது, 'ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கோர வேண்டும்' என்பது. இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தடையாக உள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். "ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன ஆனது என்ற உண்மையைக்கூட பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதன்பின்னணியில் உள்ள மர்மங்களும் படிப்படியாக விலகி வருகின்றன. எங்கள் ஆய்வில் ஏராளமான உண்மைகளைக் கண்டறிந்துள்ளோம்" என்கிறார் மருத்துவர் புகழேந்தி. 

'தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மரணம் நிகழ்ந்து 60 நாட்களுக்குப் பிறகே பத்திரிகையாளர்களை சந்தித்தனர் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர். மக்களின் சந்தேகத்தைப் போக்குவதற்காக கூட்டப்பட்ட இந்த சந்திப்பின் நோக்கம் நிறைவேறவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களை வைத்தே, சில உண்மைகளை வெளி உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர் மருத்துவர்கள் புகழேந்தி மற்றும் ரமேஷ் ஆகியோர். இந்நிலையில், கடந்த மார்ச் 6-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையை வெளியிட்டார். " இதுவரையில் வெளிவராத முதல்வரின் நோய் மற்றும் சிகிச்சை குறித்தான பல புதிய தகவல்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கை அமைந்தது. சில தகவல்கள் முழுமை இல்லாமல் முரண்டுபாடுகளுடன் இருந்தாலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதை வரவேற்க வேண்டும். முதல்வர் மரணம் தொடர்பான எங்களது சந்தேகங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது" என விவரிக்க ஆரம்பித்தனர் மருத்துவர் புகழேந்தி மற்றும் ரமேஷ் ஆகியோர். இதுகுறித்து விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

" முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு தைராய்டு சுரப்பி செயல்பாட்டுக் குறைவு (Hypo thyroidism), சிருசிடு குடல் உபாதை (Irritable Bowel syndrome), தோல் ஒவ்வாமை நோய் (Atopic Dermatitis) அதற்காக அவர் வாய்வழியாக ஸ்டீராயிடு (Steroid) மாத்திரை உட்கொண்டு வந்தது, மைட்ரல் வால்வில் ஏற்பட்ட ஓட்டை, அதில் ஏற்பட்ட படிமம் (Vegetation), சுருங்கும் தன்மையில் மாற்றம் ஏற்படாத இருதய செயல்பாட்டுக் குறைவு (Heart failure with preserved systolic function) எனப் பல விஷயங்கள் தற்போது வெளியில் வந்துள்ளன. டிசம்பர் 3-ம் தேதி முதல்வருக்கு தொண்டையில் சளி அதிகம் சுரந்ததால், இருமல் அதிகமானது. இதனால் அவருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது என அப்போலா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவோ, பாபு ஆப்ரஹாம் மற்றும் பாலாஜி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலோ எதுவும் பேசவில்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு 5-7 நாட்கள் முன்னரே, 'விட்டுவிட்டு காய்ச்சல் இருந்தது' என்றும் 'அதிகமான குடல் ஓட்டம் கூடவே இருந்தது' என்றும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருடைய சர்க்கரையின் அளவு 560 mg/Dl. ஏன் இந்த அளவு சென்றது? போயஸ் இல்லத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன? ஏன் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது? சிறுநீர் தொற்றுக்காக வாய்வழியே கிருமிக்கொல்லி மருந்து எடுத்து வந்துள்ள நிலையில் சிறுநீர் தொற்றுக்கும் சர்க்கரை வியாதிக்கும் ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்தால் அவருடைய மருத்துவ பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற மருத்துவரீதியான கேள்விகளுக்கும் இவர்களிடம் பதில் இல்லை" என ஆதங்கப்பட்டார் மருத்துவர் ரமேஷ்.

இதையடுத்து நம்மிடம் பேசிய மருத்துவர் புகழேந்தி, " அப்போலோ மருத்துவமனையின் முதலுதவி மருத்துவர்கள் ஆம்புலன்சில் வந்து அவரைப் பார்த்தபோது இருந்த ஆக்சிஜன் அளவு 48 சதவீதமாக இருந்தது. அனுமதிக்கப்படும்போது அவர் அரைத் தூக்க நிலையில் இருந்தார் என்றும் மூச்சுத்திணறல் அதிகம் இருந்தது என்றும் மருத்துவ அறிக்கையில் தெளிவாக உள்ளது. அனுமதியின்போது முதல்வரின் ஆக்சிஜன் அளவு ஏன் 48 சதவீதமாகக் குறைந்தது? போயஸ் இல்ல மருத்துவமனையில் ஆக்சிஜனை அளக்கும் கருவியோ, ஆக்சிஜன் செலுத்தும் கருவியோ இல்லையா? முதல்வரின் உடல் நலன் குறித்து அவரது மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் (Protocols) உண்டுதானே? அவை முறையாக பின்பற்றப்பட்டதா? அந்த குறிப்புகள் பொது மக்கள் பார்வைக்கு வந்தால் சந்தேகங்கள் உடனடியாகத் தீரும் அல்லவா? போயஸ் இல்லத்தில் அவர் இருக்கும்போதே சிறுநீர் தொற்று பிரச்னை இருந்துள்ளபோது கடைபிடிக்கப்பட்டு வந்த மருத்துவ பரிசோதனைகள், மருந்து விபரங்கள், மருத்துவ சிகிச்சை குறிப்புகள், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும்நிலையில், இதுபற்றி அப்போலோ மருத்துவர்களும் கேட்டுப் பெற்றார்களா? எவையெல்லாம் போயஸ் இல்ல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டது? முறையாக கட்டுப்படுத்தப்படாத சிறுநீர் தொற்றின் காரணமாகவும் கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை அளவின் காரணமாகவே அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்குக் காரணம் எனும் வாதத்திற்கான பதிலை எப்படி அடைவது? போயஸ் இல்ல மருத்துவ குறிப்புகளையும், அனுமதியின்போது அப்போலோவில் பதிவான குறிப்புகளையும் ஒளிவு மறைவின்றி ஒப்பிடும்போதே உண்மை வெளிச்சத்துக்கு வரும்" என்றவர், ஜெயலலிதா மரணம் தொடர்பான புதிய தகவல்களைப் பட்டியலிட்டார்.

1. மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் என்டெரெக்காக்கஸ்(Enterococcus) கிருமி ரத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஒருவாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல்வருக்கு ரத்த கல்ச்சர் (Blood Culture) அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே செய்தார்களா? ஒருவேளை அப்படி செய்திருக்கும்பட்சத்தில் முன்கூட்டியே உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பை அது கொடுத்திருக்கும்.

2. சிகிச்சைக்காக அனுமதித்த நேரத்தில், முதல்வரின் ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததென்று எய்ம்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ அறிக்கையில் அது கூடுதலாக இருந்ததென்றும் (போயஸ் இல்லத்தில் 140/70, தீவிர சிகிச்சை அறையில் 140/100) முரண்பட்ட தகவல்கள் பதிவாகியுள்ளன. ஏன் இந்த வேறுபாடு?

3. எய்ம்ஸ் மருத்துவர்கள் முதன்முதலில் முதலமைச்சரை பரிசோதித்தது 05.10.2016 எனும்போது, அப்போல்லோ மருத்துவர்கள்தான் மேற்படி இரத்த அழுத்தம் குறித்தான தகவலைக் கொடுத்திருக்க வேண்டும். எய்ம்ஸ் அறிக்கையில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது எனப் பதிவானது? இதன் நீட்சியாக எய்ம்ஸ் அறிக்கையில் ரத்த அழுத்தத்தை கூட்டுவதற்கான மருந்துகள் (Inotropic agents) மருத்துவமனைக்குள் அனுமதித்தபோதே கொடுக்கப்பட்டது என இருப்பதும் அப்போலோ அறிக்கையில் அது விடுபட்டிருப்பதும் ஏன்?

4. அப்போலோ அறிக்கையின் முதல் பக்கத்தில் அவருக்கு ஃபர்ஸ்ட் டிகிரி ஏவி பிளாக்(first degree AV block) இருந்ததென்றும் நான்காம் பக்கத்தில் 'செகண்ட் டிகிரி ஏவி பிளாக், விட்டுவிட்டு இருந்தது' என்றும் (AV block என்பது இ.சி.ஜி.யில் இருதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றம்) முரண்பட்ட தகவல் உள்ளது. அப்போலோ அறிக்கையில் முதல் பக்கத்தில் ஏன் Second degree AV block பதிவாகவில்லை?

5. 'இருதயத்துடிப்பு நின்றபின் முதல்வருக்கு உடனடியாக அவசர இருதய, நுரையீரல் மீட்கும் பணி (CPR) 20 நிமிடம் கொடுக்கப்பட்டது' என அப்போலோ மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், எய்ம்ஸ் அறிக்கையில் 'அது 45 நிமிடம்' என பதிவாகியுள்ளது. அதே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், எக்மோ கருவி (ECMO) முதல்வரின் அறையிலேயே இருந்ததாகவும் அங்கேயே அது பொருத்தப்பட்டதென்றும் மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், எய்ம்ஸ் அறிக்கையில், 'அவரது உடலை குறைவெப்ப நிலைக்கு (hypothermia) கொண்டுசென்றனர்' என்றும் 'அவருக்கு தொடர் ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதென்றும் (Continous haemo dialysis), திறந்த இருதய மசாஜ் (Open cardiac massage) அளிக்கப்பட்டதென்றும், செயற்கை துடிப்பான்(பேஸ்மேக்கர்) இருதயத்தின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டதென்றும் (External Pacemaker) அன்றைக்கு முதல்வர் இரவு 09:30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

6. டிசம்பர் 4-ம் தேதி மாலை 04.20 மணிக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை முதல்வர் பார்த்துக்கொண்டிருக்கும்போது, பணி மருத்துவரும் சசிகலாவும் அந்த அறையில்தான் இருந்துள்ளனர். அவருக்கு திடீரென்று இருதயத் துடிப்பு நின்றுபோய்விட்டதாக, பிப்ரவரி 6-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், சமீபத்திய அப்போலோ அறிக்கை பக்கம் 11-ல் அவருக்கு இருதயத் துடிப்பில் சிறு மாற்றம் நிகழ்ந்ததாகவும் (Unsustained Ventricular Tachycardia) அதன் காரணமாக அவருக்கு ஊசி மூலம் மெக்னீசியம் சல்பேட் ரெண்டு கிராம் செலுத்தப்பட்டதாகவும் அதன்பிறகு சிறு இடைவேளைக்குப்பின், (நேரம் குறிப்பிடப்படவில்லை) மீண்டும் அவருக்கு இருதயத் துடிப்பில் சிறு மாற்றம் ஏற்பட்டு, பின்னர் அது மோசமான பாதிப்பிற்கு (Ventricular fibrillation) அவரை இட்டுச்சென்றது என்றும் மேற்படி அறிக்கையில் உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் (Venous Blood Gas Analysis) பொட்டாசியத்தின் அளவு 6.2 meq/Dl இருந்தது தெரிய வந்துள்ளது. (வழக்கமாக இருக்கவேண்டிய அளவு 3.5 லிருந்து 5.5 meq/Dl வரை) ஆக பொட்டாசியம் அளவு கூடியதன் காரணமாக ஏன் இருதயத் துடிப்பு செயலிழந்து போனது (Cardiac arrest) காரணமாக இருக்கக்கூடாது? இருதயத்துடிப்பில் ஏற்பட்ட மாற்றம் அவருக்கு முன்னரே நிகழ்ந்துள்ள நிலையில், (அப்போலோ அறிக்கை பக்கம் 9,10) உரிய மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் ஜெயலலிதா இருந்தாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

7. முதல்வருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுத்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சர்க்கரை வியாதிக்கு 20 வருடகாலம் அவர் மாத்திரை உட்கொண்டு வந்தார் என்கிறார். அந்த மாத்திரையின் பெயரை அவர் குறிப்பிடாதது ஏன்? உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அவருக்கு பீட்டா பிளாக்கர்ஸ் (Beta Blockers) மற்றும் பிற மாத்திரைகள் கொடுக்கப்பட்டது எனக் குறிப்பிடும் அறிக்கை, 'எவ்வளவு காலம் அவர் அதை சாப்பிட்டார்?' எனக் கூறவில்லை. மாத்திரை உட்கொண்ட காலத்தை குறிப்பிடத் தெரிந்த இவர்களுக்கு மாத்திரை பெயரைக் குறிப்பிடவேண்டும் எனத் தெரியாதா? தைராய்டு பாதிப்புக்கும் தோல் ஒவ்வாமைக்கும் சிடுசிடு குடல் உபாதைக்கும் கூட எவ்வளவு காலம் மாத்திரை உட்கொண்டார் என்ற தகவல் இல்லை.

8. முதல்வரது எடை 106 கிலோ, உயரம் 5 அடி என எய்ம்ஸ் அறிக்கையில் உள்ளது. இந்த அடிப்படை மருத்துவ பதிவுகள் கூட அப்போலோ அறிக்கையில் இல்லை. ஏன்?

9. முன்னால் முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் உள்ள பி.எச்.பாண்டியன் பேசும்போது, ' முதல்வரின் சர்க்கரை நோய் சிகிச்சைக்கான மருத்துவர் சந்தாராம், முதல்வர் உட்கொள்ளும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தால் (Pioglitazone, Rosiglitazone?) அவருக்குப் பக்கவாதம் ஏற்படவாய்ப்புள்ளது என்பதை தெரியப்படுத்தியதன் காரணமாகவே 2016 மே மாதத்துக்குப்பின், சிகிச்சை பெறுவதற்கு மறுக்கப்பட்டார்' என்ற குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், முதல்வர் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த 20 வருட காலம் அவர் என்னென்ன மாத்திரைகள் உட்கொண்டு வந்தார் எனத் தெளிவுபடுத்துவதுதான் தவறான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடையைக் கொடுக்கும். எயிம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையிலும் கூட சர்க்கரை வியாதிக்கு 20 வருட காலம் அவர் என்னென்ன மாத்திரைகள் உட்கொண்டு வந்தார் எனக் குறிப்பிடவில்லை. Pioglitazone, Rosiglitazone மாத்திரைகள்கூட பின்விளைவாக இருதயத் துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக இருந்தும், அது தொடர்பாக கேள்வி எழுப்பாமல் இருந்தது எதனால்?

10. முதல்வருக்கான சிகிச்சையில் இரண்டு விஷயங்களை பார்க்கும்போது அது உண்மை அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. மைட்ரல் வால்வில் ஏற்பட்ட பிரச்சினையை எப்படி கையாள்வது என்பதில் வேறுபாடு இருந்துள்ளது. அப்போலோ மருத்துவர்களிடம், அறுவை சிகிச்சை மூலம் கையாளவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. எயிம்ஸ் மருத்துவர்களோ, முந்தைய / தற்போதைய எக்கோ கார்டியோ கிராம் முடிவுகளை வைத்து கசிவில் பெருமளவு மாற்றம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை உடனடித் தேவையில்லை என்பதை வலியுறுத்தியுள்ளனர். மைட்ரல் வால்வில் ஏன் ஓட்டை (Perforation) ஏற்பட்டது? இரண்டாவது, நுரையீரலின் வெளி அடுக்கில் இருக்கும் நீர்கோர்ப்பை (Pleural effusion) எப்படி சரி செய்வது என்பதிலும் வேறுபாடு இருந்துள்ளதாகத் தெரிகிறது. அதை விரைந்து வெளியில் எடுக்கவேண்டும் என்பது அப்போலோ மருத்துவர்களின் நிலைப்பாடாக இருக்க, எய்ம்ஸ் மருத்துவர்களோ, 'உள்வரும் நீர்க்கோர்ப்பின் அளவைக் காட்டிலும் வெளியேரும் நீரின் அளவு சற்று அதிகமாக இருந்தாலே போதுமானது' என உறுதியாக இருந்தனர்.

11. 'செப்டம்பர் 24 அன்று அவரது மூச்சுத் திணறல் பெரிதளவு குறையவில்லை. வேகமான மூச்சிரைப்பும் ஆக்சிஜன் தேவையும் சற்று குறைந்திருந்தன' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நாளில் குறைந்துபோன இருதயத்துடிப்பைக் கூட்ட டோப்பமின் ஊசி மருந்தும் குறைந்துபோன ரத்த அழுத்தத்தைக் கூட்ட நார் அட்ரினலின் ஊசி மருந்தும் கொடுக்கப்பட்டது என இருக்கையில், செப்டம்பர் 23 அன்று எடுக்கப்பட்ட நெஞ்சு எக்ஸ்ரேயில் இருபுற நுரையீரல்களின் நடு மற்றும் அடிப்பகுதிகளில் நீர் கோர்த்திருந்தது என இருக்கும்போது, 'வழக்கமான உணவை அவர் உட்கொண்டார்' என அப்போலோ அறிக்கை கூறுவதில் சந்தேகம் எழுகிறது. எய்ம்ஸ் அறிக்கையில் அவருக்கு மூச்சுக்குழாய் சுருங்கியதன் விளைவாக திரும்பத் திரும்ப மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது எனக் குறுப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நுரையீரல்களின் வெளி அடுக்கில் நீர் சுரந்திருந்தது (Bilateral Pleural Effusion) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சூழலில் அவர் வழக்கமான உணவை உட்கொண்டதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

12. முதலமைச்சருக்கே இரத்த சோகை இருந்தது என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டபோது, '10 என்ற அளவில் இருந்த ஹீமோகுளோபின் அளவு, படிப்படியாக குறைந்து 6.8 grams/Dl ஆக குறைந்தது' என்று மருத்துவ அறிக்கை பக்கம்7-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது இருதய செயல்பாட்டுக் குறைவுக்கு இரத்த சோகையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். பத்து கிராம் என்பது சற்றுக் குறைவுதான் என இருக்கையில் போயஸ் இல்லத்தில் அவருக்கு அப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? அதன் முடிவு என்ன? இரத்த சோகைக்குக் கூட பரிசோதித்து, அதற்கான சிகிச்சையை போயஸ் இல்லத்தில் அளித்திருக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது.

13. முதல்வருடைய இருதயத் துடிப்பில் மாற்றம் என்பது பலதடவை அவருக்கு வந்து போயுள்ள நிலையில், அது மோசமான நிலைக்கு இட்டுச்செல்ல வாய்ப்பில்லை என்பதை எப்படி உறுதி செய்தார்கள்? 04.12.2016 அன்று ஏற்பட்ட இதய முடக்கத்தின் முன்னோட்டமாக ஏன் அது இருந்திருக்கக் கூடாது? 29.11.2016 அன்று அவருக்கு பலமுறை (PVC) வந்து போனது பதிவாகியுள்ள நிலையில், அவரை மீண்டும் தீவிர சிகிச்சை அறைக்கு ஏன் மாற்றவில்லை?

14. இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவின் மாற்றம், குறிப்பாக உயர் அளவு இருதயத் துடிப்பை செயலிழக்கும் தன்மை (Cardiac arrest) கொண்டது. அவருக்கு இருதயத் துடிப்பில் மாற்றம் அடிக்கடி வந்து போயுள்ள நிலையில், குறிப்பாக இரத்தத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பிற தேவையான விஷயங்கள் அளக்கப்பட்டு, தேவைக்கேற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அறிகையில் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி காலையில் அது உயர் விளிம்பிற்கு சென்றுள்ளது. அதற்காக மருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் மறுநாள் காலை அது வழக்கமான அளவை எட்டியது. அன்று மாலை 04:20 மணிக்கு அவருக்கு இருதயத் துடிப்பு செயலிழந்த பாதிப்பு, (Cardiac arrest) ஏற்பட்டபின் செய்த இரத்தப் பரிசோதனையில் (Venous Blood Gas Analysis)-ல் பொட்டாசியத்தின் அளவு 6.2 என இருந்ததால் அதைக் குறைப்பதற்காக, கால்சியம் குளூக்கோனெட், இன்சுலின்/டெக்ஸ்ட்ரோஸ், பை கார்பனேட் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவையனைத்தும் இரத்தத்தில் உள்ள பொட்டாஷியத்தின் அளவை குறைக்க கொடுக்கப்பட்ட சிகிச்சைகள். எனவே, இருதயத் துடிப்பு செயலிழந்து போனதற்கு உயர் பொட்டாசிய அளவு ஏன் காரணமாக இருக்கக்கூடாது? டிசம்பர் 3-ம் தேதி காலையில் அவருக்கு பொட்டாஷியத்தின் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், அவரை ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றவில்லை. இதில், மருத்துவமனையின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. பிப்ரவரி 6 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இருதயத்துடிப்பு செயலிழந்து போனதற்கு பொட்டாஷிய அளவு காரணமா? என்று கேள்வி எழுப்பியபோது, அன்று காலை செய்த பரிசோதனையில் இரத்தத்தில் பொட்டாசிய அளவு வழக்கமானதாக இருந்தது என்று பாபு ஆபிரகாம் பதிலளித்தார். ஆனால், முந்தைய நாளில் வழக்கமான அளவின் உச்சத்தை அது எட்டியிருந்தது என்பதையும், இதய முடக்கம் வந்தபின் அதன் அளவு அதிகரித்தது (6.2 meq/Dl) என்பதையும் ஏன் மறைக்க வேண்டும்? - எனப் பட்டியலிட்டவர், " ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி இறந்தார் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் தீவிர சந்தேகம் வலுத்தநிலையில்தான், அறிக்கை வடிவில் பல்வேறு உண்மைகள் வெளிவந்தன. ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. முதல்வரின் மரணத்துக்குக் காரணமான திடீரென இதயத் துடிப்பு நின்றுபோனதற்கான காரணத்தை அறிவியல் மற்றும் சட்டரீதியாக அணுகுவதுதான் பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தை தீர்க்கும் ஒரே வழி" என்றார் வேதனை கலந்த முகத்துடன்.  #VikatanExclusive

Saturday, December 31, 2016

புற்றுநோய்.. நாதியற்று செத்துப் போன..காந்திமதி..!!

நாதியற்று செத்துப் போன..காந்திமதி..!!

மனோரமா ஆட்சி திரையுலகில் அசத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நடிகை காந்திமதியும் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். இருவருமே நாடக மேடையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்.

மனோரமா ஆட்சி, சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி என்று பரபரப்பாக இருந்தபோது, முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் போன்ற ஹீரோக்கள் படத்தில் திகு திகுவென நடித்து கொண்டிருந்தார் காந்திமதி.

1980 காலகட்டத்தில் சுருளிராஜன் எனும் நகைச்சுவை பிரளயம் ஒன்று வந்து திரை ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தது. கதாநாயகன் ரேஞ்சுக்கு உயர்ந்தார் சுருளிராஜன். அவருக்கு ஜோடியாக காந்திமதி வெளுத்து கட்டினார்.

மாந்தோப்புக் கிளியே படம் சுருளி, காந்திமதி ஜோடிக்காகவே வெள்ளிவிழா ஓடிய படம். தொடர்ந்து சுருளி&காந்திமதி ஜோடி பட்டையை கிளப்பியது. சுருளிராஜன் காந்திமதி இல்லாத படங்களே இல்லை.

காந்திமதி பணம், புகழ் கொட்டியது. இங்குதான் அவரது சோக வாழ்க்கையும் துவங்கியது. திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவினர்களை நம்பினார்.

அவர்கள் கடைசிவரை துணை இருப்பார்கள் என்று நம்பிவிட்டார் காந்திமதி. இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி, வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை காலமானார்.

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் மயிலின் அம்மாவாக தோன்றி.. எப்படி பொசுக்கென்று செத்துப் போவாரோ, அப்படித்தான் இவரது வாழ்க்கையும் ஆனது.

வயது ஆக… நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார். உதவிக்கு உறவினர்கள் சிலர் வந்து போய் இருந்தாலும்… உரிமையுடன் பார்த்து கொள்ள ஒரு பிள்ளை வேண்டுமல்லவா?

இங்கு தான் சிக்கல். நிறைய நடிகைகள் தனக்கென்று ஒரு குடும்பம், வாழ்க்கை என்றும் அமைத்துக் கொள்ளாமல், உறவினர் வீட்டு குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்து அவர்கள் வளர்ந்து.. சொந்த தாய் தகப்பனோடு தனி வாழ்க்கையோடு போய் விடுகிறார்கள்.

நம்பிய நடிகைகள் இறுதி காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் தர ஆள் இல்லாமல், பணவசதியும் இல்லாமல் அனாதையாக செத்து போய் விடுகிறார்கள்.

காந்திமதி அம்மாவுக்கும் அதுதான் நிலைமை… வாழ்க்கை பூராவும் சிரிக்க வைத்த காந்திமதி அம்மா.. அழுது அழுது செத்துப் போனது கொடுமையிலும் கொடுமை…!

Wednesday, December 28, 2016

உங்கள் 'பிறந்த தேதி'க்கு இதுதான் சரியான 'தொழில்'..!

உங்கள் 'பிறந்த தேதி'க்கு இதுதான் சரியான 'தொழில்'..!

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம்.


நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம். இந்த எண் கணிதத்தை பின்பற்றி உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம்.

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் 1 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு உரிய கோள் சூரியன். இவர்கள் பிறவியிலேயே ஆளப் பிறந்தவர்கள். ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள் அதே நேரத்தில் சரியான முடிவு எடுப்பதிலும் தேர்ந்த நபர்கள். திருபாய் அம்பானி, ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் ஆகியோர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிசினஸ் தான் சரியான தொழில். இவர்கள் எந்த பிசினஸை செய்தாலும் வெற்றி பெறுவார்கள்

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் சந்திரன். படைப்புகளிலும், புதியதாக உருவாக்குவதிலும் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த ராஜதந்திரிகளாகவும் இருப்பார்கள். கலை, நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் தொழில் செய்தால் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் பெரிய ஆளாக வருவார்கள். ஷாருக்கான், அமிதாப் பச்ச்சன், லியார்னடா டி கேப்ரியோ ஆகியோர் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் வியாழன். இயற்கையிலேயே வலிமை உள்ளவர்களாக இருக்கும் இவர்கள் நல்ல மனதுடன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வங்கி, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் இவர்கள் இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மேலும் இவர்களுக்குச் சில்லறை வணிகம் செய்யும் தொழிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இவ்வகை தொழிலை இவர்கள் தேர்வு செய்வது நலம்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் வழக்கத்திற்குச் சற்று வேறுபட்டவர்களாகவும், தனிப்பட்ட தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள். ஆனால் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுத்து ஆபத்தையோ பிரச்சனையையோ விலை கொடுத்து வாங்கும் தன்மை உடையவர்கள் ஊக வணிகம் என்று கூறப்படும் பங்கு வர்த்தகம் மற்றும் சூதாட்டம் ஆகியவை இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்குச் சரியான தொழிலாக இருக்கும். மேலும் கலை, நடிப்பு ஆகிய துறைகளிலும் இவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உண்டு.

5,14,23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த முடிவைச் சரியான நேரத்தில் எடுக்கும் தன்மை கொண்டவர்கள். தகவல் தொடர்பு திறன் அதிகம் உள்ள இவர்களுக்குப் பங்கு வர்த்தம் மிகச் சரியான தொழிலாக இருக்கும். மற்றவர்களைத் தனது வழிக்குக் கொண்டு வருவதில் வல்லவர்கள். ஒரே விதமான வேலை இவர்களுக்குச் சலிப்பை தரும். ரிஸ்க் எடுத்து தினந்தோறும் பரபரப்பாக இருப்பது இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. டெக்னாலஜி, விளையாட்டு, மார்க்கெட்டிங், சேல்ஸ் ஆகிய துறைகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் வீனஸ் கிரகத்தைச் சார்ந்த இந்த எண் உடையவர்கள் இயற்கையாகவே பெர்சனாலிட்டியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஓட்டல், ரெஸ்டாரெண்ட், ஆடம்பரமான அல்லது பொழுதுபோக்கு துறைகளில் நாட்டம் அதிகம் இருக்கும். புகழ் இவர்களுக்குத் தானாகவே வந்து குவியும்.

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் ஆவதற்கு வாய்ப்பு அதிகம். புதியதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்களுடைய கண்டுபிடிப்புக்கு உலகமே தலை வணங்கும் அளவுக்கு இவர்களுக்குப் புகழ், பணம் பெருகும். ஆராய்ச்சி, விஞ்ஞானம்தான் இவர்களுக்குரிய சரியான தொழில்.

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் சனி கிரகத்திற்குரிய இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்படுவார்கள் அதாவது சுமார் 35 வயது வரை இவர்களுக்குச் சொல்லி கொள்ளும் வகையில் முன்னேற்றம் இருக்காது. எளிமையாகவும் அதே நேரத்தில் கண்டிப்பு உடையவர்களாகவும் இருப்பார்கள். கடின உழைப்பு இருக்கும் இவர்களுக்குச் சற்று தாமதமாகத்தான் வெற்றி கிடைக்கும். அரசியல், இரும்பு, உலோகங்கள், ரியல் எஸ்டேட், ஃபைனாஸ் ஆகிய தொழில்கள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

9,18,27
ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் செவ்வாய் கிரகத்திற்கு உரிய இந்த நபர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவார்கள். உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத் துறை, கெமிக்கல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளும் இந்த எண்களுக்கு உரியவர்களின் துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 

டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டோனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். ஆம், இது உன்மை தான், இதைப் பார்க்கும் போது உலக தலைவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். சம்பளம் மட்டும் இல்லாமல் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர். இங்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் 2015 ஆம் ஆண்டின் தரவின் படு வழங்கப்படிகிறது. இந்திய பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? பராக் ஒபாமா 2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தன்னுடைய சம்பளமாக 4,00,000 டாலர்களைப் பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 2.72 கோடியாகும்.
ஜஸ்டின் ட்ரூடியோ கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ 2015 ஆம் ஆண்டு வரை 2,60,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.77 கோடி ரூபாய் ஆகும்.


அங்கேலா மேர்க்கெல் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 2,34,400 டாலர்கள் சம்பளமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பில் 1.59 கோடி ரூபாய் ஆகும். 


ஜேக்கப் ஜுமா தென் ஆப்ரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா 2015 ஆம் ஆண்டு வரை 2,23,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார் அதாவது இந்திய மதிப்பில் 1.51 கோடி ரூபாயாகும். ஷின்சோ அபே ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே 2,03,000 டாலர்களை சம்பளமாக 2015 ஆண்டு வரை பெற்றுவந்துள்ளார் அதாவது இந்தியமதிப்பில் 1.38 கோடி ரூபாயாகும். 


ரிசிப் தயிப் எர்டோகன் துருக்கியின் ஜனாதிபதி ரிசிப் தயிப் எர்டோகன் 2015 ஆம் ஆண்டு வரை 1,97,000 கோடி சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய பதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும். 
பிரான்சுவா ஹாலண்ட் பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் 2015 ஆம் ஆண்டு வரை 1,94,000 டாலர் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும்.


தெரேசா மே பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மேவின் சம்பளம் 1,78,250 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.2 கோடி ரூபாய். விளாடிமிர் புட்டின் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 1,36,000 டாலர் சம்பளமாக பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 92 லட்சம் ரூபாய் ஆகும். 

மடியோ ரென்சியும் இத்தாலியின் பிரதம மந்திரி மடியோ ரென்சியும் 1,24,600 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 லட்சம் சம்பளமாக பெறுகிறார். 

நரேந்திர மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 30,300 டாலர் சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில் 20.63 லட்சம் ஆகும். 


ஜி ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 22,000 டாலர் சம்பளம் பெற்று வருகிறார் அதாவது இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாயாகும்.

Friday, September 16, 2016

கடல் எப்படி உருவானது - ஏன் உப்பு கரிக்கிறது?

கடல் எப்படி உருவானது?

ஆதி காலத்தில் பூமி உருவான போது, நிலப்பரப்புகள் மிகுந்த வெப்பத்தால் சூடாக காணப்பட்டது. அந்த நேரத்தில் நீராவிப்படலமானது பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சூழ்ந்திருந்தது.

பூமியானது எப்போது குளிர்ச்சி தன்மை அடைகிறதோ அப்பொழுதெல்லம் அங்குள்ள நீராவியும் குளிர்ந்து, பெரும் மழை பொழிவுகள் பூமியில் உண்டானது. இந்த மழைப் பொழிவுகள் காரணமாக பெரிய பள்ளங்கள் மற்றும் நீர்கள் நிறைந்தது. நாளடைவில் இது பெரிய அளவில் உருவாகி கடலாக தோற்றமளித்தது.

கடல் நீர் ஏன் உப்பு கரிக்கிறது?

நீர் சுழற்சி காரணமாக நதிகளில் உள்ள நீர்கள் கடலில் வந்து மோதுவதால், பாறைகள் நொறுங்கப்பட்டு அதிலுள்ள உப்புகள் கடல் நீரில் கலக்கின்றன. பல வருடங்களாக இதே போன்றான நீர் சுழற்சி நடப்பதால், கடலில் உப்பின் தன்மை அதிகமாக காணப்படுகிறது.

மேலும் கடலில் இருந்து நீர் வெளியில் செல்வதற்கான ஒரே வழி, சூரிய வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் தான். இவ்வாறு நடைபெறும் போது கடலில் உள்ள நீர்கள் மட்டும் தான் ஆவியாகி மேலே செல்கின்றன. நீரில் உள்ள உப்புகள் மட்டும் கடலிலே தங்கி விடுகின்றன. எனவே கடலில் உப்பின் தன்மை மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. உலகின் அனைத்து கடல்களிலும் உப்பின் தன்மை ஒரே அளவில் இருக்காது.

Tuesday, July 5, 2016

மூன்று பதிலை வைத்து, காதலா? காமமா என அறியலாம்!

இன்றைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் உடல் உரசிக்கொள்ள மட்டுமே பழகுகின்றனர். காமம் தான் அவர்களது வேட்கை என சந்து பொந்துகளில் இருந்து, மேடைகள் வரை பல பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம். முக்கியமாக திரைப்படங்களில். இதை முழுமையாக மறுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது. ஏனெனில், 50:50 என சரிபாதி அளவிற்கு நமது சமூகத்தில் நாம் இதை கண்கூட பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். உண்மை என்னவெனில், தாங்கள் உண்மையாகவே காதலிக்கிறோமா? இல்லையா? என்று தெரியாமலேயே பதின் பருவத்தில் பலரும் ஒன்றாக சுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், பள்ளி பருவத்தில் இருந்து உண்மையாக காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். உண்மையில், இருவர் மத்தியில் இருப்பது காதலா? காமமா? என்பதை இந்த மூன்று கேள்விக்கான பதில்களை வைத்து அறிந்துக் கொள்ளலாம்..

கேள்வி #1

தொடர்பு! காதல்! உங்கள் வாழ்க்கையை பற்றி முழுவதுமாக, வெளிப்படையாக பேசுவீர்கள் பகிர்ந்துக் கொள்வீர்கள். அவர்களுடன் உங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது. எப்படிப்பட்ட சண்டை வந்தாலும், அதை மீண்டும் பேசி கடைசியில் ஓர் தீர்வுக்கு வந்துவிடுவீர்கள். சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் எந்தவிதத்திலும், உங்களது உறவை பாதிக்காது. உங்கள் இருவருக்குள்ளும் ஓர் நேர்மை இருக்கும்.

காமம்! மேம்போக்கான கருத்துக்கள் மட்டுமே பகிர்ந்துக் கொள்வீர்கள். பெருமை, தம்பட்டம் அடிக்கும் விஷயங்கள் மட்டுமே அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படும். தங்களை உயர்வாக மட்டுமே எடுத்துக் கூறுவார்கள். ஆழ்மனத்தில் இருக்கும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள விருப்பம் இருக்காது. சண்டை, சச்சரவுகள் வந்தால், உடனே பிரிந்துவிடலாம் என்ற தான் முதலில் பிறக்கும்.

கேள்வி #2
அன்பு! காதல்! பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் கூட அது உறவில் இருக்கும் அன்பு குறைய காரணியாக இருக்காது. ஒருவரின் மகிழ்ச்சிக்காக மற்றொருவர் விட்டுக்கொடுத்து போவது சர்வசாதாரணமாக நிகழும். ஒருவர் பற்றிய இரகசியத்தை எக்காரணம் கொண்டும் மற்றவரிடம் கூற மாட்டார்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் குரியது.

காமம்! மன ரீதியான நெருக்கம் பெரிதாக தான் இருக்கும். கண்களை பார்த்து பேசுவது குறைவாக தான் இருக்கும். உண்மையை மறைக்க, பொய்களை கடத்தி செல்ல மேலும் மேலும், பொய்களை அடுக்கிக்கொண்டே போவார்கள். மன ரீதியான நெருக்கத்தை காட்டிலும், உடல் ரீதியான நெருக்கம் தான் அதிகமாக இருக்கும். உங்கள் அந்தரங்கள் விஷயங்களை நண்பர்களுடன் கேலியாக பேசி பகிர்ந்துக் கொள்வார்கள்.

கேள்வி #3
மதிப்பு! காதல்! உங்கள் துணையின் குறைகள் தெரிந்தும் கூட அவரை நேசிப்பீர்கள். அவர் மேலும், வெற்றியடைய, அடுத்த கட்டத்திற்கு செல்ல ஊக்கமளிப்பார்கள். ஒருவர் மற்றொருவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு அளிப்பார்கள். கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

காமம்! ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். ஒருவர் மற்றவரது சுதந்திரத்தை தட்டி பறிக்க, தன்னிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள நினைப்பார்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதே கடினமாக இருக்கும். மன்னிக்க மனம் வராது.

திருமணமாக போகும் பெண்களிடம் அச்ச உணர்வுகள்!

திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிரைக் கண்டால் சிலர் பாசக்கயிற் வீசுவது போல எகிறிக் குதித்து ஓடுவார்கள். இதற்கு காரணம் கல்யாணம் மட்டும் பண்ணிடாத மச்சி, உன் சந்தோஷமே போயிடும் என்பார்கள். ஆனால், இப்படி கூறும் அனைவருமே திருமணம் ஆனவர்கள் தான். நம்மிடம் எப்போதுமே ஒரு தீய குணம் இருக்கிறது. நம் வாழ்க்கையில் 90% சந்தோசமாக இருந்தாலும், மீதமுள்ள 10% துன்பத்தை எண்ணியே மகிழ்ச்சியை இழந்துவிடுவோம். திருமண வாழ்விலும் அப்படி தான். பொண்டாட்டி பற்றி குற்றங்குறை கூறியே அவர்கள் பற்றிய நல்ல விஷயங்களை மரித்துவிடுவோம். இப்படி ஒருப்பக்கம் இருக்கையில், திருமணம் நெருங்க, நெருங்க பெண்கள் மத்தியில் ஏற்படும் அச்சங்கள் ஒருபுறம் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்...

கணவன் வீட்டு உறவுகள்!
மாமனார். மாமியார், நாத்தனார் என கணவன் வீட்டு உறவுகள் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் எல்லா பெண்களுக்குமே திருமணத்திற்கு முன்பு ஏற்படுகிறது.

கணவன், மனைவி உறவு!
இதுநாள் வரை தான், தன் வாழ்க்கை என்று இருந்த ஓர் சுழற்சியில் இன்று நாம், நம் வாழ்க்கை என்ற மாற்றம் நிகழ போகிறது. தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

சுதந்திரம் இருக்குமா?
தோழிகள், நண்பர்கள், வேலை, உடன் பணிபுரிவோர் என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற பயம் பெண்களுக்குள் வலுவாக இருக்கிறது. ஏனெனில், கணவனுக்கு பணிமாற்றம் ஆனால், தானும் பனி மாற்றம் வாங்கி செல்ல வேண்டும், அல்லது வேலையே விட்டு செல்ல வேண்டும் என்ற ஒருதலைப்பட்சமான நிபந்தனை நமது சமூகத்தில் நிகழந்து வருகிறது.

நினைத்தது எல்லாம் கூற முடியுமா?

நாம் நினைத்த காரியங்களை செய்ய, கூற முடியுமா? குறைந்தபட்சம் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் கூறிய பிறகு தான் செய்ய முடியும். ஒருவேளை அவர்கள் மறுப்பு கூறினால்? என்ற பல கேள்விகள் பெண்களின் மனதில் ஓடுகிறது.

குடும்ப பொறுப்புகள்!
இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றியும் பெண்கள் மத்தியில் ஓர் அச்சம் நிலவுகிறது.

நேரம் மற்றும் வேலை மேலாண்மை!
எல்லா வேலைகளையும் உடனக்குடன் செய்ய வேண்டும். காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, தான் வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என நேரம் மற்றும் வேலை மேலாண்மை தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கிறது.

எதிர்காலம்!
வீடு, நிலம், வாகனம் வாகுவது, சேமிப்பு, என எதிர்கால திட்டங்கள் அவர்களின் மனதில் குழப்பமாக எழும். ஆரம்பத்தில் எல்லா பெண்கள் மத்தியிலும் இதுபோன்ற சில தடுமாற்றங்கள் எழுவது இயல்பு தான்.

குழந்தைகள்!
தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொல்வதுண்டு. இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என பொதுவாக அவர்கள் கருதுவது தான்.

இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?
திருமணம், நெருங்க, நெருங்க, "இப்பவே கல்யாணம் பண்ணி ஆகணுமா?" என்ற கேள்வியும் சில பெண்கள் மத்தியில் அச்சம் காரணமாக எழுகிறது. இவை எல்லாம் திருமணம் ஆகும் வரை தான்.

Wednesday, June 8, 2016

ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது?

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!!
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்....
நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
அதனால் ' fair & lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை.

[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!] ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து.

மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.

சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட்.

இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம்.

சிகை அலங்காரம்:

லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை.
அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும்.

உடல் தோற்றம்;

ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை.
மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.

ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ perosnal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!

முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??]

மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

ஆறும் அது ஆழமில்ல

அது சேரும் கடலும் ஆழமில்ல

ஆழம் எது ஐயா ?- அது

பொம்பள மனசுதான்யா!!!

Thursday, May 12, 2016

மலாலாஇங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கடந்த 30-ம் தேதி பெண் கல்வி போராளி மலாலாவுக்கு மனிதநேய பணிகளுக்கான இந்த (2013) ஆண்டின் பீட்டர் ஜே கோம்ஸ் விருதை வழங்கி கவுரவித்தது.இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.இது தவிர, ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கும் சிறப்பு மிக்க ‘சகாரோவ் மனித உரிமை பரிசு’க்கு தேர்வு செய்யப்பட்ட இறுதிபட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.இதற்கிடையில் நோபல் பரிசுக்கான தேர்வாளர்களின் பெயர்கள் வரும் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு மலாலாவுக்கே கிடைக்கலாம் என 80 சதவீதம் மக்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (16) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது.

இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 5 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.

உடல்நலம் தேறிய மலாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.மேலும் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார். அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள ‘வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்’ என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.அன்னா பொலிட்கோவ்ஸ்கியாவை போல் தீரமாக செயல்பட்டதற்காக மலாலாவுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக தேர்வு கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.வரும் திங்கட்கிழமை நடைபெறும் விழாவில் இந்த விருதை மலாலா பெற்றுக் கொள்கிறார்.